Wednesday, 6 April 2022

SHANKAR ...SALEEM ....SIMON

 


SHANKAR ...SALEEM ....SIMON



சைமன்....

 சாலமன், சைமன், மைக்கேல் டிசோசா, அலெக்ஸ் பாண்டியன், ஜான் மென்டிஸ் வரிசையில் சைமன் கதாபாத்திரத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.

'சங்கர் சலீம் சைமன்' படத்தில்  மூன்று ஹீரோக்கள். ஆறு புஷ்பங்கள், காயத்ரி படத்துக்கு பிறகு வருகிறது சங்கர் சலீம் சைமன். ஹீரோ விஜயகுமார் பீக்ல இருக்கும்போது ரஜினி நடிச்ச படம் இது. 

செக்யூலரிஸம் என்கிற வார்த்தையை நடப்பிலாக்க அன்று (இன்று போலல்ல)மன்மோகன் தேசாய் அமர், அக்பர், ஆண்டனி என மூன்று மதப்பெயர்களில் படம் எடுத்தார். பாரதி(பாரத மாதா) என்கிற பெண்ணுக்கு பிறந்த மூன்று குழந்தைகளும் பிரிந்து மூன்று மதப்பிரிவில் வளர்ந்து பின் ஒறு சேர்வதாக கதை. அந்த மூன்று பெயர் கொண்ட செக்யூலரிஸ டைட்டில் வைத்து தமிழில் வேறு கதையை தந்தார் மாதவன்.  அதுவே சங்கர், சலீம், சைமன்.

மாதவனின் ஆஸ்தான ஹீரோ விஜயகுமார் ஹீரோ என்றாலும் கதை என்னவோ ரஜினியை சுற்றியே இருக்கிறது. விஜயகுமார் மஞ்சுளாவை லவ் பண்ணி கடைசியில் திருமணம் செய்கிறார். எந்த டென்ஷனும் படத்தில் அவருக்கில்லை. அவர் தான் சங்கர். 

சலீமாக ஜெய்கணேஷ். ஒரு ஏழையான அவர் மும்தாஜ் என்கிற பெண்ணை காதலிக்கிறார். அவளை அடைய ஊர் பெரிய மனுஷன் பீலிசிவம் ட்ரை பண்றார். கடைசியில் திருமணமும் செய்கிறார். 

கடைசியில் நம்ம சைமன். கதை தொடக்கம் முதல் கடைசி வரை சைமனை சுற்றியே அமைத்திருக்கிறார் இயக்குனர் மாதவன். சைமனாக ரஜினி. முதல் காட்சியிலேயே வில்லன் ராமதாஸிடம் "நான் ரௌடிக்கு ரௌடி. நல்லவனுக்கு நல்லவன்" என பஞ்சோடு தான் தொடங்குகிறார். அடுத்த பஞ்ச் படம் முழுக்க. யாரையாவது அடிக்கிறதுக்கு முன்னே கழுத்தில் கிடக்கும் சிலுவையை எடுத்து கண்களருகே வைத்து "பரமண்டலத்திலிருக்கும் எங்கள் பிதாவே. என்னை மன்னிப்பீராக..." என சொல்லும் டயலாக் செம.




சைமன் ரஜினி அயோத்யா குப்பத்தில் வொர்க்ஷாப் வைத்திருக்கும் மெக்கானிக். சைமனின் அக்காவை கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டு போய் விடுவார் வில்லன் வி.எஸ்.ராகவன். அவருடைய மகன் விஜயகுமார், மகள் லதா. வி.எஸ்.ராகவனை பழி வாங்க சைமன் ரஜினி காதலிக்கத்தொடங்குகிறார்.

ஊரில் எந்த பிரச்சினைக்கும் சைமன் தான் முன்னே நிற்கிறார். சலீம்-மும்தாஜ் திருமணத்தில் அவர்களுக்காக பரிந்து பேசி ரகளை கூட செய்வது சைமன் தான். விஜயகுமார் மஞ்சுளாவோடு சேர்ந்து மஞ்சுளா கர்ப்பமானதும் சைமன் தன் காதலையே விட்டுக்கொடுக்கிறார்.

மொத்தத்தில் சைமன் ரஜினி படத்தில் டெனிம் கோட், பேண்ட். என்ஃபீல்ட் பைக். ஸ்டைலான நடிப்பு. கருப்பு வெள்ளையில் இருந்தாலும் ரஜினியின் ஸ்டைல் படத்தை ரசித்துப்பார்க்க வைக்கிறது. க்ளைமேக்ஸில் காதல் தோல்வியை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ரஜினி. அந்த நடிப்பெல்லாம் எங்கே போனது?

ரஜினி செம ஸ்பீடு படத்தில். எவ்வளவு ஸ்பீடுன்னா சிந்துநதிப்பூவே பாட்டில் மூறு ஜோடியும் மணலில் உட்கார்ந்து இசைக்கு தகுந்த மாதிரி ஜோடி மாறாமல் நகரவேண்டும். ரஜினி ஸ்பீடில் லதாவை விட்டு விட்டு முன்னே போய் விடுவார்.  அவர் ஸ்பீடை கன்ட்ரோல் பண்ண முடியாது போல. அதே ஷாட் ஓகே.

சுருளி-மனோராமா காமெடி கவுண்டமணி காமெடிக்கு முன்னோடி. கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். படத்தில் எம்.எஸ்.வசந்தி அறிமுகம். வீரராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், ஒய்.ஜி.பி., ராமதாஸ் என பெரிய பட்டாளமே இருக்கிறது. விஜயகுமார்-மஞ்சுளா திருமணத்துக்குப்பிறகு நடித்த படம்.

அதிசயமான ஒரு ஒற்றுமை என்னன்னா பி.மாதவன் இயக்கிய இந்தப்படத்தில் தங்கை மஞ்சுளாவுக்காக விஜயகுமாரை திருமணத்திற்கு பேச ரஜினி விஜயகுமார் அப்பாவிடம் பேச வருவார். இதே காட்சி 16 வருடம் கழித்து பாட்சா படத்தில் தங்கைக்காக பேச வருவார். அப்போது மாப்பிள்ளையாக நடித்தது சங்கர் சலீம் சைமன் படத்தின் இயக்குனர் பி.மாதவனின் மகன் அருண் பிரசாத். எப்படி பாருங்க...அந்த விஜயகுமார் பாட்சாவில் அப்பா...

78 தொடக்கத்தில் வந்த படம் இது. கடைசியாக ப்ரியா. மொத்தம் 20 படங்கள். ரஜினி படத்தில் ஒரு வில்லனிக் ஹீரோ சைமன். 

மறக்க முடியாத கறுப்பு வெள்ளை படம்..

#செல்வன்

No comments:

Post a Comment