MONGOLS INADED AGAINST
JIN DYNASTY 1211 -1234
மங்கோலியர்களின் சின் வம்சப் படையெடுப்பு (மங்கோலியர்-சின் போர்) என்பது மங்கோலியப் பேரரசிற்கும், மஞ்சூரியா மற்றும் வட சீனாவை ஆண்ட சுரசன்கள் தலைமையிலான சின் அரசமரபிற்கும் இடையே நடைபெற்ற போர் ஆகும். கிபி. 1211ல் ஆரம்பிக்கப்பட்ட இப்போர் 23 வருடங்களுக்கும் மேலாக நீடித்தது. கி.பி. 1234ல் மங்கோலியர்களால் சின் வம்சம் முழுமையாகக் கைப்பற்றப்பட்ட பின்னரே முடிந்தது.
மங்கோலியர்களின் சின் வம்சப் படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் சீனப் படையெடுப்பு | |||||||
மங்கோலிய-சின் போரின் போது நடைபெற்ற எஹுலிங் யுத்தத்தின் ஒரு விளக்கப்படம் | |||||||
|
பின்புலம்[தொகு]
சின் அரசமரபின் சுரசன் ஆட்சியாளர்கள் மங்கோலிய புல்வெளிகளில் வாழ்ந்த நாடோடி பழங்குடியினரிடம் கப்பம் பெற்றுக் கொண்டிருந்தனர். மேலும் பழங்குடியினருக்கு இடையே சண்டைகளை தூண்டிவிட்டனர். மங்கோலியர்களின் காபூல் கானின் தலைமையில் 12 ஆம் நூற்றாண்டில் ஒன்றிணைந்தபோது சுரசன்கள் தாதர்களைத் தூண்டி விட்டு அவர்களை அழிக்க முயன்றனர். ஆனால் மங்கோலியர்கள் தங்கள் பகுதியில் இருந்து சின் படைகளை வெளியேற்றினர். காபூல் கானுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அம்பகையை தாதர்கள் பிடித்தனர். அவரை சின் ஏகாதிபத்திய அவையில் ஒப்படைத்தனர். சின் அரசமரபின் பேரரசர் க்ஷிசோங் அம்பகையை சிலுவையில் அறைந்து கொல்ல ஆணையிட்டார். சின் அரசாங்கமானது அடிக்கடி மங்கோலிய நாடோடிகளுக்கு எதிராக சிறு தாக்குதல்களையும் நடத்தியது. தாக்குதலின் முடிவில் அவர்கள் அடிமையாக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.
1210 இல் செங்கிஸ்கானின் அவைக்கு வன்யன் யோங்ஜி சின் அரியணைக்கு வந்ததை அறிவிக்க ஒரு குழு வந்தது. மங்கோலியர்களை கப்பம் கட்ட கூறியது. சுரசன்கள் சக்தி வாய்ந்த புல்வெளி நாடோடிகளை தோற்கடித்து இருந்தனர். கெரயிடுகள் மற்றும் தாதர்களுடன் கூட்டணியில் இருந்தனர். இதன் காரணமாக புல்வெளியில் இருந்த அனைத்து பழங்குடியினரும் தங்கள் ஆட்சியின் கீழ் என கூறினர். சின் அரசாங்கத்தின் உயர்நீதிமன்ற அதிகாரிகள் மங்கோலியர்கள் பக்கம் கட்சித் தாவி செங்கிஸ்கானை சின் அரசமரபை தாக்குமாறு வலியுறுத்தினர். இது ஒரு பொறியாகவோ அல்லது மோசமான சூழ்ச்சித் திட்டமாகவே இருக்கலாம் என எண்ணிய செங்கிஸ்கான் மறுத்தார். கப்பம் கட்ட கூறி ஆணை வந்தபோது செங்கிஸ்கான் தெற்குப் பக்கம் திரும்பி தரையில் எச்சில் துப்பியதாக கூறப்படுகிறது. பிறகு தனது குதிரையில் ஏறி வடக்குப் பக்கம் சென்றார். அதிர்ச்சியில் உறைந்திருந்த தூதுவன் குதிரை குளம்பின் புழுதியில் மூச்சு முட்ட நின்றான். செங்கிஸ்கானின் மறுப்பு மங்கோலியர்கள் மற்றும் சுரசன்கள் இடையே ஒரு போரை அறிவித்ததற்கு சமமானதாகும்.[2]
கெர்லன் ஆற்றுக்கு செங்கிஸ்கான் திரும்பி வந்த பிறகு 1211ன் ஆரம்பத்தில் அவர் ஒரு குறுல்த்தாய்க்கு அறிவிப்பு விடுத்தார். ஒரு பெரிய விவாதத்திற்கு ஏற்பாடு செய்ததன் மூலம் சமூகத்தில் இருந்த ஒவ்வொருவரும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். அருகில் இருந்த மலையில் கான் தனியாக வழிபட்டார். தனது தொப்பியையும் பெல்ட்டையும் கழட்டி எல்லையற்ற வானத்தின் முன்பு வணங்கி நின்றார். பல தலைமுறைகளாக சுரசன்களுக்கு எதிராக தன் மக்களுக்கு இருந்த குறைகளையும் தனது முன்னோர்கள் அனுபவித்த சித்திரவதை மற்றும் அவர்கள் கொல்லப்பட்டதையும் விவரித்தார். சுரசன்களுக்கு எதிரான இந்தப் போரை தான் கேட்கவில்லை என்று விளக்கம் அளித்தார். நான்காம் நாள் காலையில் செங்கிஸ்கான் ஒரு தீர்ப்புடன் வெளிப்பட்டார்: "எல்லையற்ற நீல வானமானது வெற்றி மற்றும் பழிவாங்கலை நமக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளது".[3]
செங்கிஸ்கான் நடந்து கொண்ட விதத்தை கேள்விப்பட்ட வன்யன் யோங்ஜி, கானுக்கு ஒரு செய்தியை அனுப்பினார்: "எங்கள் பேரரசு கடல் போன்றது; உங்களுடையதோ கைப்பிடி மண் போன்றது ... நாங்கள் எப்படி உங்களை கண்டு பயப்பட முடியும்?".[4]
செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியப் படையெடுப்பு[தொகு]
தாங்குடுகள் தலைமையிலான மேற்கு சியா பேரரசு மீது படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டபோது 1207 முதல் 1209 வரை பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.[5] மங்கோலியர்கள் 1211 இல் சின் பகுதிகளை தாக்கியபோது ஒங்குடு மக்களின் தலைவராக இருந்த அல 'குஸ் செங்கிஸ்கானை ஆதரித்தார். சின் அரசமரபின் இதயப் பகுதிக்கு செல்ல பாதுகாப்பான வழியையும் காண்பித்தார். மங்கோலியப் பேரரசு மற்றும் சின் அரசமரபுக்கு இடையிலான முதல் முக்கியமான யுத்தமானது எஹுலிங் யுத்தம் ஆகும். இது 1211 இல் ஜங்ஜியாகோவு என்ற இடத்தில் ஒரு மலை வழியில் நடைபெற்றது. அங்கு சின் தளபதி வன்யன் ஜியுஜின் மங்கோலியர்களை தாக்க தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை பயன்படுத்தாமல் ஒரு தந்திரோபாய தவறை செய்தார். அதற்கு பதிலாக அவர் சிமோ மிங்கன் என்ற தூதுவனை மங்கோலியர்களிடம் அனுப்பினார். உடனடியாக மங்கோலியர்கள் பக்கம் கட்சித் தாவிய அந்த தூதுவன் சின் படையானது வழியின் அடுத்த பக்கத்தில் காத்திருப்பதை கூறினான். அங்கு நடைபெற்ற எஹுலிங் யுத்தத்தில் மங்கோலியர்கள் ஆயிரக்கணக்கான சின் துருப்புக்களை கொன்றனர். படையை நகர்த்திக்கொண்டே சண்டையிட மங்கோலியர்கள் ஆரம்பத்திலேயே கற்றனர். அவர்கள் பட்டணங்கள் வழியே சென்று தங்களது எதிரிகளை அவர்களின் விலங்குகளிடமிருந்து பிரிந்து வர வைப்பர். எதிரிகள் மங்கோலிய ராணுவத்தின் பொறிக்குள் சிக்கும் போது மங்கோலியர்கள் அவர்களைக் கொன்று அவர்களுடைய விலங்குகளை எடுத்துக் கொள்வர்.[6] செங்கிஸ்கான் தெற்கு நோக்கி சென்றபோது அவருடைய தளபதி செபே மேலும் கிழக்கு நோக்கி மஞ்சூரியாவிற்கு பயணம் செய்தார். அங்கு முக்டென் (தற்கால ஷென்யங்க்) என்ற பகுதியைக் கைப்பற்றினார். எனினும் 1212 இல் செங்கிஸ் கான் தனது முழங்காலில் பட்ட அம்பினால் காயமுற்றார். இதன் பிறகு மங்கோலியர்கள் புல்வெளி மற்றும் கோபி பாலைவனத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இருந்து ஓய்விற்குப் பிறகு திரும்பினர்.[7] 1212 இல் கிதான் தலைவர் லியு-கே செங்கிஸ்கான் உடன் தனது கூட்டணியை பிரகடனப்படுத்தினார். மஞ்சூரியாவை சின்களிடமிருந்து விடுவித்தார்.
மங்கோலிய இராணுவமானது 1213 இல் சின்களின் மத்திய தலைநகரமான ஷோங்டுவை (தற்கால பெய்ஜிங்) முற்றுகையிட்டது. அப்போது லி யிங், லி க்ஷியோங் மற்றும் சில பிற தளபதிகள் 10,000க்கும் மேற்பட்ட வீரர்களை கொண்ட குடிமக்கள் படையை சேர்த்து மங்கோலியர்களை பல இடங்களில் தோற்கடித்தனர். மங்கோலியர்கள் ஒவ்வொன்றும் லட்சம் வீரர்களை கொண்ட சின் ராணுவங்களை தோற்கடித்தனர். ஜுயோங் மற்றும் ஜிஜிங் வழிகள் வழியே தடைகளைத் தகர்த்து கொண்டு மங்கோலியர்கள் நவம்பர் 1213 இல் சென்றனர்.[8] 1213 முதல் 1214ன் ஆரம்பம் வரை மங்கோலியர்கள் முழு வடக்கு சீன சமவெளியையும் சூறையாடினர். 1214 இல் செங்கிஸ்கான் ஷோங்டுவில் உள்ள தங்க கானின் அவையை சுற்றி வளைத்தார்.[9] சின் தளபதி ஹுஷாஹு பேரரசர் வன்யன் யோங்ஜியை கொலை செய்து வன்யன் யோங்ஜியின் உடன் பிறப்பின் மகனான க்ஷுவான்ஷோங்கை பேரரசர் பதவியில் அமர்த்தினார். மங்கோலியர்கள் ஷோங்டுவை முற்றுகையிட்டபோது சின் அரசாங்கமானது மங்கோலியப் பேரரசுக்கு கப்பம் கட்ட தற்காலிகமாக ஒப்புக்கொண்டது. செங்கிஸ்கானுக்கு ஒரு சுரசன் இளவரசியையும் பரிசாக அளித்தது. சின்களிடமிருந்து பெரும் அளவில் பரிசுகளை பெற்று இருந்த மங்கோலியர்கள் 1214 இல் போர் முடிவுற்றதாக நினைத்து பின்வாங்க ஆரம்பித்தனர். அப்போது பல்லாயிரக்கணக்கில் பெருகி இருந்த தனது படையினரை கொண்டு லி யிங் மங்கோலியர்கள் மீது அவர்கள் செல்லும் வழியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த விரும்பினார். ஆனால் சின் ஆட்சியாளர் பேரரசர் அயிசோங் மங்கோலியர்களை தாக்க பயந்தார். எனவே லி யிங்கை தடுத்து நிறுத்தினார். பேரரசர் அயிசோங் மற்றும் தளபதி ஜுஹு கவோகி ஆகியோர் தலைநகரை தெற்கிலுள்ள கைஃபேங்குக்கு மாற்ற முடிவு செய்தனர். லி யிங் உட்பட பல அவையினரின் எதிர்ப்பையும் மீறி இந்த முடிவு எடுக்கப்பட்டது. அன்றிலிருந்து சின்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவே முயற்சித்தனர். 1215 இல் ஷோங்டு மங்கோலியர்களிடம் வீழ்ந்தது.
சின் தலைநகரை கைஃபேங்குக்கு மாற்றிய பிறகு சின் வேந்தர் வன்யன் செங்குயி மற்றும் தளபதி மோரன் ஜிங்ஜோங் ஆகியோர் ஷோங்டுவை காவல் காக்க விடப்பட்டனர். அந்த நேரத்தில் சின் ராணுவத்தின் ஒரு பகுதி மங்கோலியர்கள் பக்கம் கட்சி தாவியது. ஷோங்டுவை தெற்கு பகுதியிலிருந்து தாக்கி லுகோவு பாலத்தை கைப்பற்றியது. செங்கிஸ்கான் ஷோங்டுவை தாக்க மீண்டும் தனது துருப்புக்களை அனுப்பினார். சரணடைந்த கிதான் தளபதிகளான சிமோ மிங்கன், எலு அஹை மற்றும் எலு துஹுவா ஆகியோரின் தலைமையில் அப்படை அனுப்பப்பட்டது. மோரன் ஜிங்ஜோங்கிற்கு இரண்டாம் இடத்தில் இருந்த புசா ஜிஜின் தன்னிடம் இருந்த அனைத்து துருப்புகளுடன் மங்கோலியர்களிடம் சரண் அடைந்தார். இதனால் ஷோங்டுவில் நெருக்கடி ஏற்பட்டது. பிறகு பேரரசர் அயிசோங் வடக்குப் பகுதிக்கு உதவி படைகளை அனுப்பினார்: ஜென்டுங்கில் இருந்து ஜோங்ஷானுக்கு யோங்க்ஷி தலைமையில் துருப்புகளும் (எண்ணிக்கை தரப்படவில்லை), உகுலின் ஜிங்ஷோவு தலைமையில் 18,000 ஏகாதிபத்திய காவலாளிகளும், 11,000 காலாட்படை மற்றும் குதிரைப் படையினர் தென்மேற்கு திசை வழியாகவும் மற்றும் 10 ஆயிரம் வீரர்கள் ஹீபே மாகாணத்திலிருந்தும், அவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கும் வண்டிகள் லி யிங் தலைமையிலும் அனுப்பப்பட்டன. ஷோங்டு மங்கோலியர்களிடம் மே 31 1215 இல் வீழ்ந்தது. மங்கோலியர்கள் பிறகு ஷான்க்ஷி, ஹீபே மற்றும் ஷான்டோங் மாகாணங்களில் இருந்த அனைத்து எதிர்ப்பாளர்களையும் 1217 முதல் 1223 வரை தோற்கடித்தனர். செங்கிஸ்கான் பிறகு தனது கவனத்தை மத்திய ஆசியா மற்றும் பாரசீகத்தில் இருந்த மற்றொரு நிகழ்வின் மீது திருப்பினார்.
ஏகாதிபத்திய அவை 1217 இல் ஜுஹு கவோகியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர் முட்டாள்தனமாக கிட்டத்தட்ட முப்பது வருடங்களில் முதல் முறையாக ஹான் சீனர்கள் தலைமையில் இருந்த தெற்கு சாங் அரசமரபை தாக்க முடிவு செய்தார். இப்போர் 1224 வரை நீடித்தது. சின் அரசமரபுக்கு முழு தோல்வியாக அமைந்தது. 1224 இல் பேரரசர் அயிசோங் சின் அரசமரபானது என்றும் மீண்டும் சாங் அரசமரபை தாக்காது என்று அறிவித்தார். ஆனால் பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது - சின் படைகள் வடக்கு மற்றும் தெற்கில் பிரிக்கப்பட்டிருந்தன. அந்த நேரத்தில் அவர்கள் மங்கோலியர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர். ஷோங்டு, ஹீபே மற்றும் ஷான்டோங் மாகாணங்கள் வீழ்ந்தன மற்றும் ஷான்க்ஷி மாகாணம் தாக்கப்பட்டு கொண்டிருந்தது. பல கிதான் கூலிப்படையினர் சுரசன் ராணுவத்தில் இருந்து விலகி மங்கோலியர்களுடன் இணைந்தனர்.
முகாலியின் முன்னேற்றம்[தொகு]
1223 இல் செங்கிஸ்கான் குவாரசமியாவை தாக்கிக் கொண்டிருந்த போது மங்கோலிய தளபதி முகாலி ஷான்க்ஷி மாகாணத்தின் சங்கன் பகுதியை தாக்கினார். சங்கன் கோட்டையில் 200,000 வீரர்கள் வன்யன் ஹெடா தலைமையில் பலம் பொருந்தி இருந்ததால் முகாலி தன் இலக்கை மாற்றி ஃபெங் பகுதியை 100,000 வீரர்களுடன் முற்றுகையிட்டார். முற்றுகையானது மாதக்கணக்கில் முடிவுறாமல் நடந்து கொண்டிருந்தது. மங்கோலியர்கள் உள்ளூர் மக்கள் படையினரால் தாக்கப்பட்டனர். அந்நேரத்தில் சின் அரசின் உதவிப் படைகளும் வந்து கொண்டிருந்தன. அப்போது முகாலி உடல் நலக்குறைவால் இறந்தார். மங்கோலியர்கள் பின்வாங்கினர். இந்த முற்றுகையின் போது தான் மங்கோலியர்களுக்கு ஆதரவளித்து கொண்டிருந்த மேற்கு சியா துருப்புக்கள் ஆதரவை விலக்கிக் கொண்டு தங்கள் நாட்டிற்கு திரும்பின. இதனால் செங்கிஸ்கானின் கோபத்திற்கு ஆளாயின. மங்கோலியர்களுக்கு எதிரான போர்களில் சின் அரசானது குதிரை படைக்கு, உய்குர்கள், தாங்குடுகள் மற்றும் கிதான்கள் போன்ற குடிமக்கள் அல்லது கூட்டாளிகளை நம்பியிருந்தது.
அணி மாறிய ஹான் சீனர்கள்[தொகு]
பல ஹான் சீனர்கள் மற்றும் கிதான்கள் சின் அரசுக்கு எதிராக போர் புரிய மங்கோலியர்கள் பக்கம் அணி மாறினர். ஷி டியான்சே மற்றும் லியு ஹெயிமா (劉黑馬) ஆகிய இரண்டு ஹான் சீன தலைவர்கள்[10] மற்றும் கிதான் இன ஜியாவோ ஜாலா (蕭札剌) ஆகியோர் மங்கோலியர்கள் பக்கம் அணிமாறி மங்கோலிய ராணுவத்தில் 3 தியுமன்களை வழிநடத்தினர்.[11] லியு ஹெயிமா மற்றும் ஷி டியான்சே ஆகியோர் செங்கிஸ்கானுக்கு அடுத்து வந்த ஒகோடி கானின் கீழும் பணியாற்றினர்.[12] லியு ஹெயிமா மற்றும் ஷி டியான்சே மேற்கு சியாவுக்கு எதிராக மங்கோலிய இராணுவங்களுக்கு தலைமை தாங்கினார்.[13] மங்கோலிய ராணுவத்தில் நான்கு ஹான் தியுமன்கள் மற்றும் மூன்று கிதான் தியுமன்கள் இருந்தன. ஒவ்வொரு தியுமனிலும் 10,000 வீரர்கள் இருந்தனர். மூன்று கிதான் தளபதிகள் ஷிமோ பெயிடியர் (石抹孛迭兒), டபுயிர் (塔不已兒), மற்றும் சியாவோ ஜோங்க்ஷி (蕭重喜; ஜியாவோ ஜாலாவின் மகன்) ஆகியோர் மூன்று கிதான் தியுமன்களுக்கு தலைமை தாங்கினர். நான்கு ஹான் தளபதிகள் ஜங் ரோவு (張柔), யன் ஷி (嚴實), ஷி டியான்சே மற்றும் லியு ஹெயிமா ஆகியோர் நான்கு ஹான் தியுமன்களுக்கு ஒகோடி கானின் கீழ் தலைமை தாங்கினார்.[14][15][16][17] மங்கோலியர்கள் பக்கம் அணி மாறிய சின் அரச மரபில் பணியாற்றிய ஷி டியான்சே, ஜங் ரோவு, யன் ஷி மற்றும் பிற ஹான் சீனர்கள் புதிய மங்கோலிய அரசின் நிர்வாகத்திற்கு அமைப்பை உருவாக்கி கொடுப்பதில் உதவினர்.[18]
ஒகோடி கானின் தலைமையில் மங்கோலிய படையெடுப்பு[தொகு]
ஒகோடி கான் தனது தந்தைக்கு பிறகு ஆட்சிக்கு வந்த போது சின் அரசின் அமைதிப் பேச்சு வார்த்தைகளை நிராகரித்தார். சின் அதிகாரிகள் மங்கோலிய தூதுவர்களை கொன்றனர்.[19] டோங் வழியை தாக்க முயற்சிக்க கெசிக் தளபதி தோகோல்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவரை வன்யன் ஹெடா தோற்கடித்தார். இதன் காரணமாக 1230 இல் சுபுதை பின்வாங்கினார். 1231 இல் மங்கோலியர்கள் மீண்டும் தாக்கினர். கடைசியாக ஃபெங்க்ஷியாங்கை கைப்பற்றினர். சங்கன் கோட்டையில் இருந்த சின் வீரர்கள் பயந்து கோட்டையை கைவிட்டு விட்டு ஓடினர். நகரத்தின் அனைத்து மக்களுடன் ஹெனான் மாகாணத்திற்கு ஓடினர். ஒரு மாதத்திற்கு பிறகு கைஃபேங் மீது வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளில் இருந்து மும்முனைத் தாக்குதல் நடத்த மங்கோலியர்கள் முடிவு செய்தனர். ஃபெங்க்ஷியாங்கில் இருந்து வரும் மேற்கு படையானது டொலுயின் தலைமையில் வரும். டோங் வழிக்குள் நுழையும். ஹான் ஆற்றின் (க்ஷியாங்கியாங் அருகில்) அருகில் இருக்கும் சாங் அரசின் பகுதி வழியாக செல்லும். கைஃபேங்குக்கு தெற்கில் தோன்றும். சுரசன்களுக்கு ஆச்சரியம் அளிக்கும்.
ஆனால் இந்தத் திட்டத்தை வன்யன் ஹெடா அறிந்தார். டொலுயை வழிமறிக்க 200,000 வீரர்களுடன் சென்றார். டெங்சோவு என்ற இடத்தில் டொலுயின் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்தார். பல்லாயிரக்கணக்கான குதிரைப் படையினரை மலையின் மறுபுறத்தில் பதுக்கி வைத்தார். ஆனால் டொலுயின் ஒற்றர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். டொலுய் தனது பெரும்பகுதி படையை ராணுவ உதவி பொருட்கள் வழங்கும் வண்டிகள் உடனேயே வைத்திருந்தார். சிறு இலகுரக குதிரை படையினரை மட்டும் பள்ளத்தாக்கை சுற்றிவர செய்து சின் துருப்புகளை பின்பகுதியிலிருந்து தாக்கினார். தனது திட்டம் முறியடிக்கப்பட்டதை வன்யன் ஹெடா உணர்ந்தார். மங்கோலியர்கள் மீது தாக்குதல் நடத்த தனது படையைத் திரட்டினார். டெங்சோவுவுக்கு தென்மேற்கில் யு மலையில் இரு ராணுவங்களும் ஒரு சிறு யுத்தத்தை நடத்தின. சின் ராணுவத்திடம் ஏராளமான படை வீரர்கள் இருந்தனர். அவர்கள் ஆக்ரோஷத்துடன் போரிட்டனர். மங்கோலியர்கள் யு மலையிலிருந்து 30 லி தொலைவிற்கு பின்வாங்கினர். டொலுய் தனது திட்டத்தை மாற்றினார். வன்யன் ஹெடாவை போரிட்டுக் கொண்டே வைத்திருக்க தனது படையின் ஒரு பகுதியை விட்டு விட்டு சென்றார். தனது பெரும்பாலான வீரர்களை வடக்கு நோக்கி பல குழுக்களாக ஹெடாவுக்கு தெரியாத வண்ணம் கைஃபேங்கை தாக்க அனுப்பினார்.
டெங்சோவுவில் இருந்து கைஃபேங்குக்குச் செல்லும் வழியில் இருந்த அனைத்து பகுதிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக மங்கோலியர்கள் எளிதாக வென்றனர். ராணுவத்திற்கு உதவியாக இருக்கும் அனைத்து பொருட்களையும் அழித்தனர். பின்வரும் வன்யன் ஹெடாவின் ராணுவத்திற்கு எந்த உதவியும் கிடைக்க கூடாது என்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர். வன்யன் ஹெடா பின்வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. செல்லும் வழியில் ஜுன்சோவு என்ற இடத்தில் இருந்த மூன்று சிகர மலையில், மங்கோலியர்களிடமே அவர் செல்ல நேர்ந்தது. இந்த நேரத்தில் மஞ்சள் ஆற்றில் இருந்த சின் துருப்புகளும் டொலுயின் தாக்குதலை சந்திக்க தெற்குப் பகுதிக்கு திருப்பி விடப்பட்டு இருந்தன. ஒகோடி கான் தலைமையிலான மங்கோலிய வடக்கு படையானது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உறைந்திருந்த ஆற்றை கடந்து டொலுயுடன் இணைந்தது - இந்த நேரத்தில் கூட இணைக்கப்பட்ட மங்கோலியப் படைகளின் வீரர்கள் எண்ணிக்கையானது வெறும் 50,000 ஆகத்தான் இருந்தது. 1232 இல் சுரசன் ஆட்சியாளரான பேரரசர் அயிசோங் கைஃபேங்கில் முற்றுகையிடப்பட்டார். ஒகோடி மற்றும் டொலுய் இணைந்து சின் படையினரை நொறுக்கினர். சிறிது காலத்திலேயே ஒகோடி கடைசி தாக்குதலை தனது தளபதிகளிடம் கொடுத்து விட்டு அவர் விலகிச் சென்றார்.
சின் அரசமரபின் வீழ்ச்சி[தொகு]
யு மலை யுத்தத்திற்கு பின்னரும் கூட வன்யன் ஹெடாவின் ராணுவத்தில் 100,000க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர். எதிரிகளை சோர்வடைய செய்யும் உத்தியை மங்கோலியர்கள் பின்பற்றினர். டெங்சோவுவில் இருந்து வந்த சின் துருப்புகள் சிறிதளவே ஓய்வெடுத்து இருந்தன. மூன்று நாட்களுக்கு உணவு உண்ணாமல் வந்திருந்தனர். ஏனெனில் மங்கோலியர்கள் ராணுவத்திற்கு உதவியாக இருக்கும் என நினைத்த எல்லாவற்றையும் அழித்து இருந்தனர். வீரர்களின் மனநிறைவு குறைந்து கொண்டே போனது. அவர்களது தளபதிகள் நம்பிக்கை இழந்து கொண்டிருந்தனர். மூன்று சிகர மலையை அடைந்த போது ஒரு பனிப்புயல் வந்தது. கடுமையான குளிர் காரணமாக சின் துருப்புகளின் முகம் பிணம் போல வெள்ளையானது. அவர்கள் நடப்பதற்கே கடினமாக இருந்தது. வழியின்றி இருந்த அவர்களை மங்கோலியர்கள் தாக்காமல் தப்பிக்க விட்டனர். தப்பித்து கொண்டிருந்த படையினரை மங்கோலியர்கள் பதுங்கியிருந்து தாக்கினர். சின் இராணுவமானது எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் சரிந்தது. மங்கோலியர்கள் தப்பித்து ஓடிய சின் துருப்புக்களை துரத்தினர். வன்யன் ஹெடா கொல்லப்பட்டார். அவரது பெரும்பாலான தளபதிகளும் தங்கள் உயிர்களை இழந்தனர். மூன்று சிகர மலை யுத்தத்திற்குப் பிறகு கைஃபேங் சபிக்கப்பட்ட பகுதியை போல் ஆனது. பேரரசர் அயிசோங் நகரத்தை விட்டு வெளியேறினார். தன்னுடைய ஆட்சியை நடத்த வீண் முயற்சியாக ஹீபே மாகாணத்திற்குள் நுழைந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் மங்கோலியர்களை எதிர்த்து தாக்கு பிடித்தனர். மங்கோலியர்கள் தாக்குதலை தங்கள் தளபதிகளிலேயே துணிச்சலானவரான சுபுதையிடம் ஒப்படைத்திருந்தனர். பேரரசர் அயிசோங் மீண்டும் தெற்குப் பகுதிக்கு விரட்டப்பட்டார். அந்த நேரத்தில் மங்கோலியர்கள் கைஃபேங்கை கைப்பற்றியிருந்தனர். இதனால் பேரரசர் அயிசோங் தனது புது தலைநகரை ஹெனான் மாகாணம் கயிசோவுவில் நிறுவினார். அனைத்து மக்களையும் கொல்ல சுபுதை நினைத்தார். ஆனால் ஆலோசகரான எலு சுகையின் மனிதாபிமானமுடைய ஆலோசனைப்படி ஒகோடி கான் அந்த இரக்கமற்ற திட்டத்தை நிராகரித்தார்.
1232 இல் கைஃபேங்கை தற்காத்து கொள்ள சுரசன்கள் மங்கோலியர்களுக்கு எதிராக நெருப்பு அம்புகளை எய்தனர். மங்கோலியர்கள் இந்த ஆயுதத்தை அவர்களது எதிர்கால படையெடுப்புகளில் பயன்படுத்தினர்.[20]
1233 இல் பேரரசர் அயிசோங்கால் கைஃபேங்கை கைவிட்ட பிறகு ஹீபேயில் தனக்கென ஒரு புதிய ராணுவத்தை சேர்க்க இயலவில்லை. அவர் ஹெனானுக்கே திரும்பி தனது அவையை குயிடேவில் (தற்கால அன்யங்) அமைத்தார். சிதறிக்கிடந்த சின் ராணுவங்கள் சுற்றியிருந்த பகுதிகள் மற்றும் ஹீபேயிலிருந்து குயிடேவுக்கு வந்து சேர ஆரம்பித்தன. ஆனால் அந்நகரத்தில் அனைத்து வீரர்களுக்கும் உணவளிக்க போதிய உணவு இல்லை. இதன் காரணமாக பேரரசர் அயிசோங், புசா குவன்னு தலைமையில் 450 ஹான் சீன துருப்புகள் மற்றும் மா யோங் தலைமையில் 280 வீரர்களை மட்டும் நகரத்தை காப்பதற்காக வைத்துக் கொண்டு மீதமிருந்த துருப்புக்களை சு (அன்ஹுயி மாகாணம்), க்ஷு (தற்கால க்ஷுசோவு, ஜியாங்சு மாகாணம்) மற்றும் சென் (தற்கால ஹுவாயியங், ஹெனான் மாகாணம்) ஆகிய இடங்களில் உணவு தேடி இருக்கச் சொன்னார்.
புசா குவன்னு தனது துருப்புகளுடன் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றினார். மா யோங் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பிற அவையினர் மேலும் தன்னுடன் ஒத்துழைக்க மறுத்த 3000 அதிகாரிகள், அரண்மனைக் காவலர்கள் மற்றும் குடிமக்களை கொன்றார். அவர் பேரரசர் அயிசோங்கை ஒரு கைப்பாவை ஆக்கிவிட்டு சின் ஏகாதிபத்திய அவையின் உண்மையான தலைவரானார். அந்த நேரத்தில் குயிடேவுக்கு வெளியில் மங்கோலியர்கள் வந்தனர். அந்நகரத்தை முற்றுகையிட தயாராகினர். நகருக்கு வடக்கில் ஆற்றங்கரையில் மங்கோலிய தளபதி சஜிசிபுஹுவா தன்னுடைய கூடாரத்தை அமைத்தார். குவன்னு பிறகு தனது 450 துருப்புகளை தெற்கு வாயில் கதவின் வழியாக இரவில் படகுகளில் நெருப்பு ஈட்டிகளுடன் கூட்டிக் கொண்டு புறப்பட்டார். அவர்கள் ஆற்றில் நகரத்தின் கிழக்குப் பக்கம் துடுப்பிட்டு மறுநாள் காலையில் மங்கோலிய கூடாரத்தை அடைந்தனர். பேரரசர் அயிசோங் இந்த யுத்தத்தை நகரத்தின் வடக்கு வாயிலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கென்று ஒரு ஏகாதிபத்திய படகு சின் துருப்புக்கள் தோற்கடிக்கப்படும் பட்சத்தில் அவரை க்ஷுசோவுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்தது.
சின் துருப்புக்கள் மங்கோலிய கூடாரங்களை இரு பக்கங்களில் இருந்தும் தாக்கின. தங்களுடைய நெருப்பு ஈட்டிகளை கொண்டு மங்கோலியர்களை பீதி அடைய வைத்தன. தப்பித்து ஓடிய 3500க்கும் மேற்பட்ட மங்கோலியர்கள் ஆற்றில் மூழ்கினர். மங்கோலியர்களின் மரத் துண்டுகளாலான வேலிகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டன. சஜிசிபுஹுவாவும் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டார். புசா குவன்னு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தார். அவருக்கு பேரரசர் அயிசோங் பதவி உயர்வு கொடுத்தார். ஆனால் குயிடேவை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க முடியாது. மற்ற அவையினர் பேரரசர் அயிசோங்கை கைசோவுவுக்கு இடத்தை மாற்றுமாறு கூறினர். கைசோவுவில் வலிமையான சுவர்களும், ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஏராளமான துருப்புகளும் இருந்தன. இந்த முடிவை புசா குவன்னு எதிர்த்தார். அரசில் தன்னுடைய பலம் குறைந்து விடுமோ என பயந்தார். கைசோவுவின் நன்மைகள் மிகைப்படுத்தப்படுவதாக கூறினார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு பேரரசர் அயிசோங், குவன்னுவை தீர்த்துக்கட்ட ஒரு திட்டத்தை பயன்படுத்தினார். பிறகு கைசோவுவுக்கு இடத்தை மாற்ற தேவையான நடவடிக்கைகளை வேகமாக எடுத்தார். கைசோவு ஆனது பாதுகாப்பு, துருப்புக்கள் மற்றும் உதவிப் பொருட்களை ஆகியவற்றில் அவ்வளவாக பலன் அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்று புதிய தகவல்கள் அவரை சென்றடைந்த போது அவர் கிட்டத்தட்ட நகரை அடைந்து இருந்தார். குயிடேவில் பல பிரச்சனைகளுக்கு இடையில் அவர்கள் வெற்றி பெற்றிருந்த போதும் சின் அரசமரபின் தலைவிதி தற்போது நிச்சயிக்கப்பட்டிருந்தது.
தெற்கு சாங் அரசமரபானது சின் அரசமரபுக்கு மரண அடி கொடுக்க காத்திருந்தது. அவர்கள் மீது போரை அறிவித்தது. ஒரு பெரிய ராணுவத்தை நிறுத்தியது. எஞ்சிய சின் ராணுவத்தினர் கைசோவுவில் தஞ்சம் அடைந்தனர். அங்கே அவர்கள் மங்கோலியர்களால் ஒரு பக்கமும் சாங் ராணுவத்தால் மறுபக்கமும் முற்றுகையிடப்பட்டனர். சுற்றிவளைக்கப்பட்ட சுரசன்கள் விரக்தியின் தைரியத்தில் போரிட்டனர். சில காலத்திற்கு தங்கள் எதிரிகளிடம் தாக்கு பிடித்தனர். கடைசியாக பேரரசர் அயிசோங் இப்போராட்டத்தை நீண்ட நாட்களுக்கு நடத்த முடியாது என்பதை உணர்ந்தார். தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தார். நகர சுவர்களை எதிரிகள் கடந்து வந்த போது தன்னுடைய அரியணையை தன் தளபதி வன்யன் செங்லினிடம் கொடுத்து விட்டு பேரரசர் அயிசோங் தற்கொலை செய்து கொண்டார். வன்யன் செங்லின் வரலாற்று ரீதியாக பேரரசர் மோ என்று அறியப்படுகிறார். ஒரு நாளுக்கு குறைந்த காலமே ஆட்சி புரிந்தார். அவரும் போரில் கொல்லப்பட்டார். இவ்வாறாக சின் அரசமரபானது 1234 இல் முடிவுக்கு வந்தது.
மங்கோலிய கொள்கைகள்[தொகு]
மங்கோலிய படுகொலைகளால் வடக்கு சீனாவின் மக்கள் தொகையில் குறைவு ஏற்பட்டது என்பதை ஜேம்ஸ் வாட்டர்சன் கவனத்துடன் கூற வேண்டும் என்கிறார். ஏனெனில் பெரும்பாலான மக்கள் தெற்கு சாங் அரசமரபால் ஆளப்பட்ட தெற்கு சீனாவிற்கு இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது, விவசாய மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதால் நோய் மற்றும் பஞ்சத்தால் இறந்திருக்கலாம்.[21] மங்கோலியர்கள் நகரங்கள் சரணடைந்தால் அவற்றிற்கு படுகொலை மற்றும் சூறையாடலில் இருந்து விலக்கு அளித்தனர். கைபெங் நகரமானது சூ லியால் சுபுதையிடம் சரணடைய வைக்கப்பட்டது. சூறையாடலிலிருந்து தப்பித்தது.[22] ஹங்சோ நகரமானது லி டிங்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. லி டிங்சி தெற்கு சாங் அரசமரபால் கொல்லப்பட்டார். லி டிங்சிக்கு அடுத்த இடத்தில் இருந்தவரால் அந்நகரம் பயன் இடம் சரணடையவைக்கப்பட்டது.[23] சரணடைந்ததால் ஹங்சோ நகரத்திற்கு சூறையாடலிலிருந்து குப்லாய் கானால் விலக்கு அளிக்கப்பட்டது.[24] ஆன் சீனர் மற்றும் கிதான் வீரர்கள் சுரசன் சின் அரசுக்கு எதிராக செங்கிஸ்கானிடம் கூட்டம் கூட்டமாக போய் சேர்ந்தனர்.[25] சரணடைந்த பட்டணங்களுக்கு சூறையாடல் மற்றும் படுகொலையில் இருந்து குப்லாய் கான் விலக்கு அளித்தார்.[26] சின் அரசமரபினர் தங்களது முதன்மை தலைநகரத்தை பெய்ஜிங்கில் இருந்து தெற்கே கைபெங்கிற்கு மாற்றியபோது கிதான்கள் தங்களது மஞ்சூரிய தாயகத்திலிருந்து தயக்கத்துடன் வெளியேறினர். மங்கோலியர்களுடன் அணி சேர்ந்தனர்.[27]
சின் அரசமரபுக்கு எதிராக போர் புரிய பல ஆன் சீனர்கள் மற்றும் கிதான்கள் மங்கோலியர்கள் பக்கம் சேர்ந்தனர். இரண்டு ஆன் சீன தலைவர்களான சி டியான்சே மற்றும் லியு ஹெய்மா (劉黑馬),[28] மற்றும் கிதான் சியாவோ சலா (蕭札剌) ஆகியோர் மங்கோலியர்கள் பக்கம் சேர்ந்தனர். மங்கோலிய ராணுவத்தில் மூன்று தியுமன்களுக்கு தலைமை தாங்கினார்.[29] லியு ஹெய்மா மற்றும் சி டியான்சே ஆகியோர் செங்கிஸ் கானுக்கு பின்வந்த ஒகோடி கானிடம் பணியாற்றினர்.[30] லியு ஹெய்மா மற்றும் சி டியான்சியாங் ஆகியோர் மேற்கு சியாவிற்கு எதிராக மங்கோலியர்களுக்காக ராணுவங்களை வழி நடத்தினர்.[31] மொத்தம் நான்கு ஆன் தியுமன்கள் மற்றும் மூன்று கிதான் தியுமன்கள் ஒவ்வொன்றும் 10,000 துருப்புக்களுடன் இருந்தன. மூன்று கிதான் தளபதிகளான சிமோ பெய்தியர் (石抹孛迭兒), தபுயிர் (塔不已兒), மற்றும் சியாவோ சோங்சி (蕭重喜; சியாவோ சலாவின் மகன்) ஆகியோர் மூன்று கிதான் தியுமன்களையும், நான்கு ஆன் தளபதிகளான சங் ரோவு (張柔), யான் சி (嚴實), சி டியான்சே மற்றும் லியு ஹெய்மா ஆகியோர் நான்கு ஆன் தியுமன்களையும் ஒகோடி கானின் கீழ் தலைமை தாங்கினார்.[32][33][34][35] சி டியான்சே, சங் ரோவு, யான் சி, மற்றும் பிற ஆன் சீனர்கள் ஆகியோர் சின் அரசமரபில் பணியாற்றினர். மங்கோலியர்கள் பக்கம் அணி சேர்ந்தனர். புதிய மங்கோலிய அரசின் நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கு உதவி புரிந்தனர்.[36]
மங்கோலியர்கள் மருத்துவர்கள், கைவினைஞர்கள் மற்றும் மதகுருமார்களுக்கு மதிப்பு அளித்தனர். அவர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க ஆணையிட்டனர். வடக்கு சீனாவில் நகரங்களை கைப்பற்றிய போது அவர்களை தங்களது பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.[37]
ஆன் சீன உயர்குடியினரான டியூக் யான்செங் மற்றும் பிறர், முந்தைய அரசமரபுகளின் காலங்களிலிருந்து மங்கோலிய பேரரசு மற்றும் யுவான் அரசமரபு ஆகியவற்றின் காலங்களில் தங்களது பட்டங்களை பயன்படுத்திக்கொண்டனர்.
No comments:
Post a Comment