Tuesday, 11 January 2022

M.R.RADHA BOLD MAN AGAINST CASTE AND RELIGION

 

M.R.RADHA  BOLD MAN AGAINST CASTE AND RELIGION




தமிழ்நாட்டில் ஒரே ஒரு நடிகருக்கு மட்டும்தான் அந்த அசாத்திய துணிச்சல் இருந்தது.

எம் ஆர் ராதா.

அவரைப்போல ஜாதி மத துவேஷங்களுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்த நடிகர் வேறு எவரும் இல்லை.

எதைப்பற்றியும்  கவலைப்படாமல் 

யாரைப்பற்றியும் கண்டுகொள்ளாமல்

தன் மனதுக்குப் பட்டதை பளிச்சென்று துணிவோடு சொன்னவர்  எம் ஆர் ராதா.

எம். ஆர். ராதாவின் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது.

ஒரு முறை கம்பர் விழாவில் பேச, எம்.ஆர். ராதாவுக்கு அழைப்பு வந்தது. 

அதில் பேசிய எம்.ஆர். ராதா,

“பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே !

நீங்கள் எல்லாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே...” என்று ஆரம்பித்த போது ஒருவர் குறுக்கிட்டு, 

“ அய்யா... அவரு நாடாரு இல்ல..” என்றார்.

“நாடார் இல்லயா ? அப்ப இந்த கம்ப முதலியாராகப்பட்டவர்...”

“அய்யா... அவரு முதலியாரும் இல்ல...”என்றார் கூட்டத்தில் இருந்தவர்.

“முதலியாரும் இல்லயா ? 

சரி... என்னன்னு புரிஞ்சு போச்சு; இந்த கம்பர் அய்யர் ஆனவர்...”

“அய்யா... அவரு அய்யரும் இல்ல...”

“என்னது நாடார் இல்ல, முதலியார் இல்ல ... அய்யரும் இல்லயா... 

அப்போ, இப்போதான் ஜாதிகளை சொல்லிக்கிட்டிருக்கோமா ? அந்தக் காலத்தில ஜாதி கிடையாதா ? 

சரிதான்..! இந்த ஜாதியில்லாத கம்பன் விழாவிலே...” என எம்.ஆர். ராதாவின் பேச்சு தொடர்ந்ததாம்..!

ஜாதி மத வேறுபாடுகளுக்கு எதிராக இத்தனை தைரியமாக குரல் கொடுத்த  எம்.ஆர்.ராதாவின் இந்த துணிவு அவருக்குப் பின் வேறு எந்த நடிகருக்கும் வரவில்லை.

நடிகன் ஒரு கருத்தைச் சொன்னால், அதை நாடே கவனிக்கிறது.

அதை உணர்ந்து உருப்படியாக பயன்படுத்திக் கொண்ட ஒரே நடிகர் எம் ஆர் ராதா மட்டும்தான்.

John Durai Asir Chelliah

No comments:

Post a Comment