Friday, 6 August 2021

 



வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

இரண்டாவது மனைவியும் இறந்து விட்டார்

இதை அறியாமல் நீங்கள் அவனுக்கு உங்கள் இஷ்டப்படி திருமணம் செய்து வைத்துவிட்டீர்கள். அது உங்கள் தவறு. இப்போ இரண்டாவது திருமணம் செய்து வைத்த அந்த பெண்ணும் இறந்து விடுவாள். எனவே இனிமேலாவது அம்மா அவனுடைய சொந்த வாழ்க்கையில் நீங்கள் தலையிடாதீர்கள். எந்த விஷயத்தையும் உங்கள் மகன் இஷ்டத்திற்கு விட்டு விடுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும். இதைகேட்ட சத்தியதாய்க்கு தான் மிக பெரிய தவறு செய்து விட்டோ ம் என்று நினைத்து மிகவும் வேதனைப்பட்டார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் தன் மனதிற்குள்ளே வைத்து கொண்டார். பிறகு உடல் நலம் இல்லாமல் படுக்கையில் கிடக்கும் சதானந்தவதிக்கு தினமும் வீட்டிற்கு வந்து நோயை பார்த்து கவனித்துச்செல்லும்படி ஒரு நல்ல டாக்டரை அமைத்தார் எம்.ஜி.ஆர் அவர் தன் தன்னுடைய குடும்ப டாக்டர் B.R. சுப்பிரமணி (BRS) இவர் நிரந்தரமாக எம்.ஜி.ஆர் குடும்ப டாக்டராகிவிட்டார். 1950 முதல் 1976 வரை அவர் நடித்த படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. எம்.ஜி.ஆர் என்ற பெயருடன் புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்ற பெயர்களும் மக்களால் சூட்டப்பட்டது.

இவருடைய மூத்த நடிகர்கள் ஆசான்கள், பாராட்டும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்து வந்தார். இதற்கு இடையில் தற்போது குடி இருக்கும் வீட்டை நமக்கு சொந்தமாக வாங்கனும் இதைபற்றி வீட்டுக்காரரிடம் பேசுங்கள் என்று எம்.ஜி.சி. அவர்களிடமும் தன் தாயாரிடமும் சொன்னார். அதன்படி அவர்களும் அதை பற்றி மிகவும் முயற்சி எடுத்துமிக குறைந்த விலைக்கு பேசி முடித்தார்கள். இந்த விஷயத்தை தன் அண்ணனிடம் சொல்லி மகனே நீ போய் வீட்டு ஓனரைப் பார்த்து பேசினால் இந்த வீடு நமக்கு சொந்தமாகி விடும். அதன்படி எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாள் சூட்டிங் இல்லாத நாள் அன்று வீட்டுக்காரர் வீட்டிற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சென்றார். அங்கு அந்த நேரம் வீட்டில் வீட்டுக்காரரும் இருந்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை அவரிடம் நான் தான் எம்.ஜி.ஆர் தங்களிடம் ஒரு 5 நிமிடம் பேசனும் அடியேனுக்கு அனுமதி கிடைக்குமா என்றார். உடனே அவர் வாங்க, வாங்க 5 நிமிடம் என்ன 10 நிமிடமே பேசலாமே என்ன விஷயம் சொல்லுங்க எம்.ஜி.ஆர் அய்யா நான் பேசப்போவதை கேட்டு கோபப்படக்கூடாது (தவறாக நினைத்து) நாங்கள் குடி இருக்கும் தங்களுடைய வீட்டை விற்க போவதாக கேள்விபட்டோ ம். அப்படி அந்த வீட்டை விற்பதாக இருந்தால் அதை எங்களுக்கே விலைக்கு கொடுத்து உதவுங்கள் என்று மிக பணிவோடு கேட்டார். வீட்டுக்காரர் சற்று யோசனை செய்து விட்டு அதை நான் இப்போதைக்கு விற்பதாக இல்லை என்று அவர் சொன்னதும் உடனே எம்.ஜி.ஆர் அவர்கள் ரொம்ப நல்லது. வணக்கம் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்ததும் அம்மாவும், அண்ணனும் மிக ஆவலோடு விவரத்தை கேட்டார்கள். எம்.ஜி.ஆர் விவரத்தை சொன்னார். கடவுள் செயல் நமக்கு இந்த வீடு கிடைக்கனும் என்றால் கண்டிப்பாக கிடைக்கும். அது போல் அந்த வீடு இவங்களுக்கே கிடைத்தது குறைந்த விலைக்கு நிறைந்த மனதோடு அந்த வீட்டுக்காரர் அட்வகேட் ஐயர் பெயர் ராமன் நல்ல குணமுள்ளவர். இந்தவீடு தான் எம்.ஜி.ஆர் அவர்களுடைய கடும் உழைப்பால் பெரும் முயற்சியால் முதல் முதலாக சொந்தமாக வாங்கப்பட்ட சொத்து.

 

வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

முதன் முதலில் சொந்தமாக வீடு

அந்த வீடுசற்று சிறியதாக இருந்தாலும் வீட்டிற்கும் முன்னும் பின்னும் காலி இடம் இருந்தது. சென்னை நகரில் ராயப்பேட்டை என்பது ஒரு முக்கியமான இடம். மேலும் இந்த வீடு இருக்கும் நல்ல பெரிய ரோடு பெயர் லாயட்ஸ்சாலை இப்போ அவ்வை சண்முகம் சாலை ஐகிளாஸ் ஏரியா இந்த வீட்டின் கதவு எண் 160 கூட்டு எண் 7 எம்.ஜி.ஆர். அவர்களுடைய ராசி நம்பர் 7 நாளடைவில் அந்த வீட்டில் உள்ள காலி இடங்களில் வசதிக்குத் தகுந்தார் போல் கட்டிடங்கள் கட்டி பழைய கட்டிடத்தை புதுப்பித்து, புதுசையும், பழசையும் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய வீடாக்கி விட்டார்கள். அந்த வீட்டிற்கு "தாய் வீடு" என்று பெயர் வைத்தார் எம்.ஜி.ஆர் பிறகு அந்த வீட்டை ஒரு புதிய வீடாக கட்டியதை அந்த வீட்டை விற்ற அட்வகேட் ராமன் அவர்களிடம் விவரங்களை சொல்லி அந்த வீட்டின் திறப்பு விழாவில் விளக்கேற்றி வைத்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொண்டார் எம்.ஜி.ஆர். அதன்படி அட்வகேட் ராமன் அவர்களும் வந்து விளக்கேற்றி வைத்து ஆசிர்வாதம் செய்தார். இதை போல் இன்னும் பல சொத்துக்களை வாங்கிநல்ல பெயரும் புகழுமாக வாழவேண்டும் எம்.ஜி.ஆரை பார்த்து சொல்லிக் கொண்டு இருக்கும் போதே எம்.ஜி.ஆர் அவர்கள் அந்த அட்வகேட் காலை தொட்டு வணங்கினார். அவர் எம்.ஜி.ஆரை தூக்கி தோள்பட்டை தட்டி கொடுத்து வாழ்த்தினார். அவருக்கு அப்போது வயது 60க்கு மேல் இருக்கும். ஒரு வக்கீல் அதிலும் பிராமின் இவர் நம்ம குடும்பத்தில் இவ்வளவு அன்பு பாசம் வைத்து இருக்கிறாதே மகன்களே இவரை என்றும் மறக்கக்கூடாது என்று சத்தியதாய் மிக உணர்ச்சி வசத்தோடு மகன்களிடம் சொன்னார். வருடத்திற்கு வருடம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் அதிகமாக புக்கானது இவர் நடித்த படங்கள் நல்ல வருமானத்தை பட தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது.

1950க்கு மேல் இவருடைய வீட்டிற்கு முன் எம்.ஜி.ஆர் அவர்களை பார்க்க காலையிலும் மாலையிலும் ரசிகர்கள் கூட்டமாக வீட்டுக்கு வெளியே ரோட்டில் நின்று கொண்டு இருப்பார்கள். எம்.ஜி.ஆர். அவர்களும் சூட்டிங்குக்கு போகும் போதும் திரும்பி வீட்டிற்கு வரும் போதெல்லாம் ரசிகர்களை பார்க்காமல் போவதில்லை. இதை கண்ட சத்தியதாய் மிகவும் பெருமை அடைந்தார். இந்த நிலை மாதம் வருடம் என்ற முறையில் தமிழ்நாடு எங்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். பிறகு 1954க்கு மேல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தமிழ்நாடு எங்கும் ரசிகர் மன்றங்கள் பெருகிவந்தது. இவர் D.M.K.யில் சேர்ந்த பிறகு சென்னையில் நடிகர்கள் என்.எஸ்.கே, கே.ஆர்.ராமசாமி, டி.வி. நாராயணசாமி, எஸ்.எஸ். ஆர், வளையாபதி, முத்து கிருஷ்ணன் இன்னும் சிலர் ஒரு கூட்டாக அமைந்தார்கள். சிவாஜி, டி.ஆர். மகாலிங்கம் இவர்கள் தனி இவர்கள் வளர, வளர சினிமாவில் இவர்களுக்கு முன் மூத்த கதாநாயகர்கள் கொன்னப்பா, தியாகராஜ, பாகவதர், பி.யு. சின்னப்பா, எம்.கே. ராதா இன்னும் சிலர்கள் இவர்கள் எல்லாம் சினிமாவில் இருந்து விலக ஒருசந்தர்ப்ப சூழ்நிலை ஏற்பட்டது. இதை நான் சுருக்கமாக எழுதி உள்ளேன்.

1960ல் இருந்து 1976 வரை தமிழக மக்களின் இதயங்களிலும், அகில உலக தமிழ் மக்கள் இதயங்களிலும் கொடி கட்டி பறந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய சினிமா வாழ்க்கையை சற்று சுருக்கமாக முடித்து கொண்டு அடுத்து அவருடைய அரசியல் வாழ்க்கையை பற்றி பார்ப்போம். எம்.ஜி.ஆர். அவர்கள் 1937ல் வெள்ளையர் ஆட்சி காலத்தில் காந்தியுடைய இயக்கத்தில் இணைந்து வெள்ளையனே வெளியேறு, வந்தே மாதரம் மகாத்மாகாந்திக்கு ஜே என்று சொல்லியவர்களில் ஒருவர் மக்கள் திலகமும் ஒருவர். இவருக்கு நாடக கம்பெனி முதலாளிகள் எல்லாமே காந்தி இயக்கம் இதைபோல் சினிமாவுக்கு வந்த பிறகு இங்கேயும் காந்தி இயக்கம். இதில் காந்தி அடிகள் அகிம்சை போராட்டம் செய்பவர். அகிம்சை முறை பிடிக்காமல் சுபாஷ் சந்திரபோஸ் விலகி வீரபோர் என்ற பெயரில் ஒரு அமைப்பை வீர சுபாஷ் போஸ் கொண்டு வந்தார். இந்த இயக்கத்தில் பல இளைஞர்கள் சேர்ந்தார்கள் இதில் மக்கள் திலகமும் ஒருவர்.

1947ல் இந்தியாவை காங்கிரஸ் வெள்ளையர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியது. 1948ல் இருந்து எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரசில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காமராசர் சிஷ்யனாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் 1953ல் கலைஞர் கருணாநிதி, டி.வி. நாராயணசாமி இவர்களுடைய தூண்டுதலில் அண்ணா அவர்களுடைய சிஷ்யன் ஆனார். பிறகு எம்.ஜி.ஆர். அவர்களுடைய புரட்சிகரமான அரசியல் வாழ்க்கையை பற்றி தமிழ் மக்களும், அகில உலக தமிழர்களும் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அரசியல் திறமையை பற்றி எல்லோருக்கும் அறிந்த விஷயமே. எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் புரட்சி நடிகர் என்று புகழ்பெற்றார். அரசியலில் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார். பிறகு 1977 தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். (1967ல் பரங்கிமலை காங்கிரஸ் கோட்டையை பிடித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிலிருந்து அரசியல் கொடியை தமிழ்நாடு எங்கும் ஏற்றி வந்தவர் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்ட்ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினத்தன்று மக்கள் திலகம் தேசிய கொடியை ஏற்றினார். இதை தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு வரை இந்த தேசிய கொடியினை 10 ஆண்டு காலமாக சுதந்திர கொடியை ஏற்றி வந்தார் என்பது தமிழக மக்கள் அறிந்த விஷயமே. இந்த 10 ஆண்டு கால கட்டத்தில் தமிழக மக்களுக்கு எப்படி ஒழுங்கு முறையாக ஆட்சி நடத்தினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் முப்பிறவி எடுத்தவர், மூன்று முறை அரசு ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்தவர், மேலும் எம்.ஜி.ஆர் அவர்கள் மூன்று துறைகளில் புகழ் பெற்றவ்ர, சினிமா, அரசியல், அரசாட்சி இதோடு அவருடைய சொந்த வாழ்க்கையில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். இதில் முப்பிறவி எடுத்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இவைகள் அனைத்தும் தமிழக மக்கள் நன்கு அறிந்ததே.

 

வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

வி.என். ஜானகி அம்மா வரலாறு

வி.என். ஜானகி அம்மா அவர்கள் சொந்த ஊர் கேரளா பாலக்காட்டுக்கு அடுத்து உள்ள வைக்கம் என்ற ஊர். இவர் பிரபல கர்நாடக பாடல் அசிரியர் பாபநாசம் அவருடைய தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள் தான் வி.என். ஜானகி அம்மா அவர்கள். வைக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும் படித்தது, நடனம் கற்றக்கொண்டது எல்லாம் சென்னைதான். இவருடன் பிறந்தது ஒரு ஆண் அவர் பெயர் நாராயணன். இவர்கள் சென்னை மைலாப்பூர் கேசவப் பெருமாள் கோயிலுக்கு அருகில் வசித்தார்கள். இவர்கள் பக்கா பிராமின் வி.என். ஜானகி அவர்கள், பிரபல டைரக்டர் K. சுப்பிரமணி, நடிகை S.D. சுப்புலட்சுமி அவர்கள் நடத்தி வந்த நாடக குழுவில் நடித்து வந்தார். பிறகு டைரக்டர் K. சுப்பிரமணி வழியாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" இந்த படத்தில் கதாநாயகியாக ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளார். அந்த படத்தில் இவர் ஆயிரம் தலைகளை வெட்டி குவிக்கும் காட்சி மயிர் சிலிர்க்க வைக்கும் அந்த படம். எம்.ஜி.ஆர். அவர்களுடன் கதாநாயகியாக நடிக்க சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் மோகினி 1948ல் வெளிவந்தது. அதை அடுத்து மருதநாட்டு இளவரசி, நாம் போன்ற படங்கள் இவர்கள் நடித்த படங்கள். இந்த கால கட்டத்தில் இல்லற வாழ்க்கையே நமக்கு இனிமேல் ௾ல்லை தான் உண்டு தன் தொழில் உண்டு உழைப்பே உயர்வு என்ற ஏணியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய சறுக்கல் அதாவது எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மூன்றாவது கல்யாணம் நடக்க இயற்கை அழைக்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் மூன்று படங்களில் ஜானகி அம்மாள் நடித்து உள்ளார்கள்.

இதற்கு இடையில் எம்.ஜி.ஆர். மீது அன்பு கொண்டார். (காதல்) இதை அறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அன்புக்கு அடிமையானார். ஆனால் காதல் என்பது சினிமாவில் மட்டும் (நடிப்பில்) என்னுடைய சொந்த வாழ்க்கையில் இல்லை. என் தாய் உடனே எனக்கு கேரளாவில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். நான் அந்த பெண்ணுடன் ஒரு வருடம் தான் வாழ்ந்தேன். பிறகு ஒரு வருடம் கழித்து எனக்கு கட்டாயமாக இரண்டாவது கல்யாணம் நடந்தது. அந்த பெண்ணோடு நான் ஒரு வருடம் தான் நல்ல சந்தோஷமாக வாழமுடிந்தது.

பிறகு அந்த பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அது சரி ஆகாமல் தொடர்ந்து உடல் நலக்குறைவாகவே இருக்குது. இந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ள என்னிடம் என்னை நீங்கள் விரும்புவது எப்படி சரியாகும், தயவு செய்து இது வேண்டாம் நாம் இருவரும் நண்பர்களாக ௾ருப்போம் தொடர்ந்து படங்களில் நடிப்போம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் மிக விளக்கமாக சொன்னார். இருந்தாலும் தன்னுடைய குடும்ப நிலைகளை விபரமாக சொன்னார். வி.என். ஜானகி அவர்கள் பெண் என்றால் பேயின் மனம் இறங்கும் என்பது போல் எல்லாவற்றையும் யோசித்த எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்பட்டார். ஒரு பக்கம் தன் தாய், மறு பக்கம் தன் மனைவி, மேலும் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணை காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ சட்டப்படி குற்றம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் நன்கு அறிவார். அவர் நாடகம், சினிமா, குடும்ப வாழ்க்கையில் மிகவும் அனுபவம் பெற்றவர். எதையும் யோசிக்காமல் செய்யமாட்டார். அப்படிபட்ட இவருக்கு வி.என். ஜானகி அம்மா விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. வி.என். ஜானகி அம்மாவிடமும், சதானந்தவதியிடமும் பேசுவது, சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடுவோமே என்று மிகவும் மனதை தைரியப்படுத்தி கொண்டு ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் தன் மனைவியை பார்த்து விட்டுத்தான் மற்ற வேலைகளை செய்வது வழக்கமாக நடக்கிற விஷயம். இப்போ தன் மனைவியிடமே நேரடியாக இதை பற்றி பேசி விடலாம் என்ற எண்ணத்துடன் தன் மனைவியிடம் வி.என். ஜானிகி அவர்களைப் பற்றி முழுவிவரத்தையும் சுருக்கமாக சொல்லிவிட்டு பிறகு காதல் கல்யாண விஷயத்தையும் கடகடவென்று சொல்லிவிட்டு தன் மனைவியின் கையை பிடித்து கொண்டார். இந்த விஷயத்தில் மனைவியின் சம்மதம் இருந்தால் போதும். பிறகு மற்றவர்களுடைய சம்மதத்தை பெற்று விடலாம். தன் கணவர் தன்னிடம் பேசியதை கேட்டு கொண்டு இருந்த சதானந்தவதி அவர்களின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

இதை பார்த்த எம்.ஜி.ஆர். உடனே கண்ணீரை துடைத்து விட்டு கொண்டே தன் மனைவியிடம் உனக்கு இது பிடிக்காவிட்டால் விட்டு விடு அழாதே உன்னுடைய சம்மதம் இல்லாமல் இனி மேல் அந்த பெண்ணிடம் பேச கூட மாட்டேன். கவலைபடாதே இந்த விஷயத்தை அம்மாவிடம் கூடநான் சொல்லவில்லை நீ நல்லா யோசித்து உன் முடிவை மெதுவாக சொல் அவசரம் இல்லை என்று சொல்லிவிட்டு அவருடைய அறைக்குள் போய்விட்டார். இவர் சென்ற பிறகு தன்னுடைய கணவருடைய நிலமையைப் பற்றியும் அவருடைய வேண்டுகோளைப் பற்றியும் நினைத்து இந்த விஷயத்தை அடுத்த நாள் தன் மாமியார் இடமும் எம்.ஜி.சி. அவர்களிடமும் இந்த விஷயத்தை பற்றி பேசினார். இந்த செய்தியைக்கேட்ட இந்த இருவருக்கும் அதிர்ச்சி அடைந்து போனார்கள். பிறகு சதானந்தவதி சத்தியதாயிடமும் எம்.ஜி.சி அவர்களிடமும் தன் கணவர்விருப்பப்படி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும், எனக்கு என் கணவருடைய மன நலம் தான் முக்கியம் அவருடைய மனம் நோகக்கூடாது. என்னுடைய உடல் இனிமேல் நலம்பெற்று நான் எழுந்து மீண்டும் என்னுடைய பொறுப்புகளை சேவைகளை அவருக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே தயவு செய்து அவரிடம் எந்த வித மறுப்பும் சொல்லாமல் கேள்விகள் கேட்காமல் அவரிடம் நீங்களே உங்களுடைய சம்மத்தை சொல்லுங்கள். அவர் மனம் புன்படாமல் நல்ல சந்தோஷமாக இருப்பது தான் நமக்கு முக்கியம் என்று சொல்லிக்கொண்டு சத்தியதாயுடைய கையை பிடித்து கண்ணீர் விட்டார். இந்து அகராதிப்படி கணவன் தன் மனைவியிடம் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளபோகிறேன் என்று சம்மதம் கேட்டதும் இல்லை. மனைவி கணவருக்கு சரி செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதில்லை. எந்த சூழ்நிலையிலும் தன் கணவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் வைப்பாட்டியோ 2வது பெண்டாட்டி வைத்து கொள்ள நல்லமனத்துடன் சம்மதிக்க மாட்டார்கள்.

ஆனால் சதானந்தவதி அவர்கள் தன் கணவர் தன்னிடம் நான் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டதை நினைத்து பூரிப்பு அடைந்து போனார். தன் மனைவி ஒரு படுக்கை நோயாளி என்று நினைக்காமல் பாசத்தோடும் பற்றோடும் கேட்டாரே இவர் வேறு திருமணம் செய்து கொண்ட பிறகு நம் மீது வைத்துள்ள அன்பும், பாசமும், பற்றும் போய்விடுமோ என்று நினைத்து எதுவானாலும் சரி அவர் நல்லா இருந்தால் போதும். நாம் சாகும் வரை அவருடைய முகத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் போதும். இந்த விஷயத்தில் சத்தியத்தாயும் எம்.ஜி.சி. அவர்களும் எந்த வித மறுப்பும் சொல்லவில்லை. அப்படி இப்படினு எப்படியோ 1957ல் எம்.ஜி.ஆர் அவர்களும், வி.என். ஜானகி அம்மா அவர்களும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு ராயப்பேட்டையிலேயே ஒரு தனி வீடு பார்த்து குடித்தனம் அமைத்தார். திருமணம் செய்து கொண்ட உடனே வி.என். ஜானகி அவர்களை சதானந்தவதிக்கு அறிமுகப்படுத்தினார். உடனே வி.என். ஜானகி அவர்கள் சதானந்தவதி அவர்களுடைய காலை தொட்டு வணங்கி விட்டு அக்கா நான் உங்களுடைய உடன் பிறவா தங்கை என்னை உங்கள் தங்கை போல் நினைத்து கொள்ளுங்கள் எனக்கு இப்போ என் உடன் பிறந்த தம்பியைத் தவிர வேறு யாரும் இல்லை. இதை கேட்ட சதானந்தவதி அவர்கள் வி.என். ஜானகி அவர்களுடைய கையைப்பிடித்து கொண்டு நான் இருக்கிறேன் கவலைபடாதே என்றார்.


No comments:

Post a Comment