Thursday, 29 July 2021

SYMPTOMS OF LAKSHMI DEVI INVITATION

 


SYMPTOMS OF LAKSHMI DEVI INVITATION

உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?





இந்து மதத்தில் செல்வம் மற்றும் செழுமையின் தெய்வதாக லட்சுமி தேவி கருதப்படுகிறார். நம்பிக்கைகளின் படி, லட்சுமி தேவி வசிக்கும் வீடுகளில் ஒருபோதும் பணப்பற்றாக்குறை இருக்காது. அதுமட்டுமல்லாமல், அத்தகைய வீடுகளில் வறுமை ஒருபோதும் வருவதில்லை மற்றும் அங்கு சந்தோஷமும், செழிப்பும் எப்போதும் இருக்கும். இது தவிர, லட்சுமி ஒருவரது வீட்டில் வசிக்கப் போகிறார் என்றால் அந்த வீட்டின் நபர் ஏற்கனவே சில அறிகுறிகளை உணர்வார் என்பது தெரியுமா?

ஆம், இந்து மத நம்பிக்கைகளின் படி, எந்த வீட்டிற்கு லட்சுமி தேவி வருகிறாரோ, அந்த வீட்டில் வசிக்கும் நபருக்கு ஒருசில அறிகுறிகளை கொடுப்பார். லட்சுமி தேவியின் அறிகுறியைக் குறிக்கும் அந்த அறிகுறிகளைப் பற்றி இப்போது காண்போம்.


அழகான ஆந்தை இந்து மதத்தில் ஆந்தைக்கு மிக முக்கியமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆந்தை லட்சுமி தேவியின் வாகனமாக கருதப்படுகிறார். ஆகவே, நீங்கள் எங்காவது ஆந்தையைப் பார்த்தால், அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. நீங்கள் திடீரென்று ஒரு இடத்தில் ஆந்தையைப் பார்த்தால், விரைவில் உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வரப் போகிறார் என்று அர்த்தம்.

உணவில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கும் லட்சுமி தேவி எப்போது வருவதாக இருந்தாலும், அந்த வீட்டில் உள்ளோரின் உணவுப் பழக்கம் மாறத் தொடங்கும். மேலும் லட்சுமி தேவி வரக்கூடிய வீட்டில் உள்ளோர் பசியை குறைவாக உணர்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சிறப்பான விஷயம் என்னவெனில், அந்த வீடுகளில் குறைந்த உணவு கூட போதுமானது. இது தவிர, இத்தகைய வீடுகளில் உள்ளோர் திடீரென்று அசைவ உணவுகளில் இருந்து விலகி இருக்க தொடங்குவார்கள்


துடைப்பத்தை பார்ப்பது செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி சுத்தத்தை விரும்புபவர். சுத்தமாக இருக்கும் வீடுகளில் லட்சுமி தேவி எப்போதும் வசிப்பார். இது தவிர, சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பமும் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும். எனவே காலையில் எங்காவது செல்லும் போது, வீட்டிற்கு வெளியே யாரேனும் துடைப்பத்தை வைத்துக் கொண்டு இருந்தால், அது ஒரு நல்ல சகுனமாக கூறப்படுகிறது.


சங்கு சப்தம் நல்ல அறிகுறி இந்து மதத்தில் சங்கிற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சங்கு மட்டுமின்றி, அதன் சப்தம் கூட புனிதமானதாக கருதப்படுகிறது. எனவே தான் எந்த ஒரு புனிதமான சந்தர்ப்பத்திலும் சங்கு ஒலி எழுப்பப்படுகிறது. நீங்கள் காலையில் எழும் போது சங்கு ஒலி கேட்டால், அது ஒரு நல்ல சகுனம். காலையில் எழுந்ததும் சங்கு ஒலி கேட்பது, உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருகிறார் என்பதை குறிப்பதாக நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment