Thursday, 22 July 2021

COMEDY AND MIMICRY ARTIST SADAN BIOGRAPHY

 

COMEDY AND MIMICRY ARTIST  SADAN BIOGRAPHY



” சதன் “ என்ற மூன்றெழுத்துக்காரரை நினைவிருக்கிறதா? சதன் உயிரா மானமா, எதிர் வீட்டு ஜன்னல், பட்டிக்காடா பட்டணமா, தேன்கிண்ணம், படிக்காத பண்ணையார் போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 1960-1970-களில் திரைப்படங்களில் ஆடு, மாடு, கோழி, நாய், பேய் என்றால் இவரைத்தான் அழைப்பார்கள் குரல் கொடுக்க. முன்பு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனின் இசைக்குழுவில் சதன்தான் ஆஸ்தான விகடகவிபோல் விளங்கி வந்தார். மிமிக்கிரிக்கு சதனை முழுமையாக பயன்படுத்தி வந்தவர் எம்.எஸ்.விசுவநாதன் தான். பிரபலமான போனால் போகட்டும் போடா பாடலில் வரும் ஆந்தை, நரி, பேய்க் குரலெல்லாம் சதனுடையது தான்.

1959-இல் வெளிவந்த “சதுரங்கம்” என்ற மலையாளப் படத்தில் தான் இவர் நடிகராக அறிமுகமானார்.




மலையாளத்தில் சிறந்ததொரு நகைச்சுவை நடிகராக இவர் திகழ்ந்து வந்தார்.  இவர் நகைச்சுவை நடிகராகத் தோன்றிய “வான்மாரே அவசியமுண்டு” என்ற மலையாளப்படம் கேரளத் திரையரங்குகளில் 50-நாட்களைத் தாண்டி ஓடி வெற்றி பெற்றது. “கீதா அவுர் சீதா” இந்திப்படத்தைத் தழுவி நடிகை லெட்சுமி தயாரித்த “பெந்தம்” என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.  இதுவரை தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட நடித்துள்ளார். இவற்றில் அதிகமானவை தமிழில்தான். அத்துடன்  எம்.எஸ்.விசுவநாதன், சங்கர்-கணேஷ் இசைக்குழுவில் ரிதம்-மிமிக்கிரி சைடுகளைக் கவனித்து வந்தார். 1980 காலகட்டங்களில் மிமிக்கிரிக்குத் தேவை குறைந்தது. சென்னை, வடபழனியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் 1992-ஆம் ஆண்டு உடல் நலமின்றி வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இவர் காலமானார்.

இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

மிமிக்கிரிக்குத் தேவை குறைந்தது. குறித்து சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சதன் கூறியிருப்பதாவது;

ஒரு சமயத்திலே மிமிக்கிரிக்குத் தேவை அதிகமிருந்தது. “பாலும் பழமும்” படம் ”சாந்தி” என்ற பெயரிலே இந்திப்படமான பொழுது முகேஷ் பாடின போனால் போகட்டும் போடா பாட்டுக்கு சதன்தான் மிமிக்கிரி கொடுக்கவேண்டும், என்று என்னை இசையமைப்பாளர் நௌஷாத் பம்பாய்க்கே கூட்டிட்டுப் போனார். பிறகு “லாட்லா” இந்திப்படத்துக்கு லட்சுமிகாந்த் பியாரிலால் இசையமைப்பிலே லதா மங்கேஷ்கர் பாடிய பாட்டிலே கிளிக்குக் குரல் கொடுத்தேன். மிமிக்கிரி ஸ்பெஷல் எஃபெக்ட் என்னென்ன உண்டோ அதெல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன். இப்பொழுது மிமிக்கிரிக்கு ஜனங்களிடம் அவ்வளவா மோகம் இல்லே. அதனால் யாரும் மிமிக்கிரி வைத்து மியூசிக் கம்போஸ் பண்றதில்லை; போனால் போகட்டும் போடா  மிமிக்கிரி போனால் போகட்டும் போடா .

(1.12.1983 சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்தது) நன்றி: சினிமா எக்ஸ்பிரஸ்




ரி.ஆர்.ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படமான “நீ” திரைப்படத்தில் சதன் நாகேசுடன் இணைந்து நகைச்சுவையை வாரி வழங்கியிருந்தார். நாகேஷ் இப்படத்தில் மருந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு கூடத்தை நிறுவுகிறார். அதற்கு மாதவியும் என்னத்தே கன்னையாவும் உதவி செய்கின்றனர். இப்படத்தில் சதன் ஒரு நாட்டுப்புறம். ‘சப்பாணி’ என்பது கதாபாத்திரத்தின் பெயர். இவரது மாமனார் என்னத்தே கன்னையா. இவருக்கு ஒரு மகள் மாதவி.பெயர் செல்லாயி. மாதவியைத் தன் மருமகனுக்கு 2-ஆவது திருமணம் செய்து கொடுக்கவேண்டுமென்பது என்னத்தே கன்னையாவின் ஆசை. மாதவியோ சதன் நாட்டுப்புறமாக இருப்பதால் மணந்துகொள்ள மறுக்கிறார். என்னத்தே கன்னையா நாகேஷின் உதவியை நாடுகிறார்.

யோவ்….. ஒம்மருமகன் ஒம் மகளைக் கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவுதானே. நான் அதற்கு மருந்து தருகிறேன் என்று என்னத்தே கன்னையாவிடம் கூறிக்கொண்டு ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குப் பறந்து பறந்து பலவித மருந்துகளை ஒன்று சேர்த்து ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பார். இதற்கிடையே ஆராய்ச்சிக் கூடத்திற்குள் நுழையும் சதன் அவசரப்பட்டு ஒரு கண்ணாடிக் குவளைக்குள்ளிருந்த மருந்து ஒன்றை முகர்ந்து பார்த்துவிட்டு நாகேஷுக்குத் தெரியாமல் நாக்கில் தடவிப்பார்ப்பார். அது இனிப்பாக இருக்க அதை சர்பத்தைப் போல மொத்தமாகக் குடித்துவிடுவார். இந்நேரம் நாகேஷும் என்னத்தே கன்னையாவும் அறைக்குள் நுழைய, சதன் ஒரு மாதிரியாக குரல் கொடுப்பார். யோவ் நாட்டுப்புறம் என்னய்யா பண்ணுன. இந்த மருந்த எடுத்துக் குடிச்சியா. ஐயோ அது நாயாக மாத்திடுமே என்பார் நாகேஷ். அவ்வளவுதான். சதன் ஏற்கெனவே ‘பலகுரல் மன்னன்’. கேட்கவேண்டுமா. நாயைப்போல் ஊளையிட்டுக் கொண்டு அதைப்போலவே அங்குமிங்கும் ஓடிக்கொண்டு அங்க சேஷ்டைகள் பல காட்டி வெளுத்து வாங்கிவிடுவார். மீண்டும் ஒரு மருந்து கொடுத்து மனிதராக்குவார் நாகேஷ்.




இதைப்போல மற்றொரு காட்சியில் என்னத்தே கன்னையா, சதன், மாதவி மூவரும் நாட்டுப்புறத்தை மாற்றி 40 வயதுக்காரரை 20 வயதாக்குவதற்காக ஆராய்ச்சிக் கூடத்திற்குள் நுழைவார்கள். நாகேஷும் பலவித மருந்துகளைக் கண்டுபிடித்து ஒரு பெரிய பேரலில் சதனை உள்ளே தூக்கிப்போட்டு மருந்து செலுத்தி புகை போன்று வரச்செய்வார். சில வினாடிகளுக்குப்பின் என்னத்தே கன்னையாவிடம் ஒம்மருமகனை வெளிய இழுத்துப்பார் என்பார். அதுபோலவே என்னத்தே கன்னையாவும் இழுப்பார். சதன் 20 வயதுக்காரராக மாறியிருப்பார். மூவரும் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாகேஷ் அடுத்த அறைக்குள் போய்விட்டு வருமுன் சதன் மாதவியிடம் ‘செல்லாயி’ ஒரு தடவ செஞ்சதுக்கு 40 வயது 20 வயதாயிற்று. இன்னும் ஒரு தடவ செஞ்சா 18 வயதுக்கார வாலிபனாயிடுவேன் கவலையேயில்லை என்பார். அதனால் நாகேஷ் வருவதற்குள் அவசரப்பட்டு என்னத்தே கன்னையாவும் மாதவியுமாக சதனை பேரலுக்குள் அமுக்கி நாகேஷ் செய்தது போலவே சுவிட்சைப் போட்டு வாயுவை செலுத்திவிடுவார்கள். அச்சமயம் அங்கு வரும் நாகேஷ் என்னய்யா செஞ்சே என கேட்க, இவர்கள் விவரத்தைக் கூற அதிர்ந்து போன நாகேஷ்….. யோவ் ஒம்மருமவனைத் தேடுய்யா என்பார். என்னத்தே கன்னையாவும் தேடுவார். தட்டுப்படமாட்டார் சதன். நல்லா உள்ள கையவிட்டுத் தேடுய்யா என்பார் நாகேஷ். அதுபோலவே தேடுவார். கடைசியில் ஒரு சிறிய குரங்காக இருப்பார் சதன். பிறகென்ன அடுத்த மருந்து. குரங்காக மாறியவர் மனிதராகிவிடுவார். படம் முழுக்க இந்நால்வரும் செய்யும் சேஷ்டைகள் நகைச்சுவையை ரசிகர்களுக்கு வாரி வழங்கியிருந்தது மறக்க முடியாதது. இறுதியில் நாட்டுபுறத்தாரை இளமையாக்க மருந்து கொடுத்து கொடுத்து அது மாதவியை நாகேஷையே விரும்பச் செய்துவிடும். இருவரும் திருமணமும் செய்துகொள்வார்கள். படமும் முடியும். படம் முழுக்க நகைச்சுவை விருந்திற்குப் பஞ்சமேயிருக்காது.

Pattom Sadan was a comedian actor of Malayalam cinema who also appeared in some Tamil films mainly during 60’s , 70’s , and early 80’s.He was having unusual talent of imitating sounds which helped him to utilize for more than twenty songs in Tamil and Malayalam films in which he produced the sounds of birds, animals etc.He would have been muchmore popular and successful f lived in this genre because at those times mimicry was not very familiar.
Pattom Sadan had excellent talents to create comedy and this helped him to act in South Indian languages as a comedian.
Selected Filmography
Arappavan
Lakshaprabhu
Kattukurangu
Ladies Hostel
College Girl
Babumon
Chandanachola
Kalyanapandal
Kamam Krodham Moham
Chirikkudukka
Cheenavala
Vanadevatha
Sathyavan Savithri
Niraparayum Nilavilakkum
Kaithapoo
Balapareekshanam
Benz Vasu
Varanmare Avasyamundu
Malayathipennu
Chakkikotha Chankaran

Pattam Sadhan-The great comedian and singer in Thamizh-Malayalam Films

Sadasivan, popularly known as Pattom Sadan was a Malayalam film actor. He acted in more than 200 films. His debut movie was Chathurangam in 1959. He was a famous comedy artist during the 1960s and 1970s. He acted in many Tamil movies as well. He was a theatre artist turned movie actor. He hailed from PattomThiruvananthapuram. He started his career with drama and later moved to Tamil movies. He was married and has two children. The family resides at VadapalaniChennai. He died at a private hospital at Vadapalani in 1992.


'பட்டம்' சதன்
திருவனந்தபுரத்தில் உள்ள பட்டம் என்பது தான் அவரது ஊர். 50 களின் இறுதியில் மலையாள நாடகங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை செய்து வந்தவருக்கு சினிமா மீது காதல்... சினிமாக் கனவுகளுடன் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்தார்.
நகைச்சுவையில் 50 களின் பிற்பாதியில் சந்திரபாபுவும் 60 - 70 களில் நாகேஷும் கொடிகட்டிப் பறந்த தமிழ் சினிமாவில் அதே பாணியில் நகைச்சுவைகளை செய்த இவருக்கென்று பெரிதான இடம் கிடைக்கவில்லை.
இவரது பல குரல் திறமையை எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் பலரும் நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
குழந்தையும் தெய்வமும்" படத்தில் டி.எம்.எஸ்ஸும், ஏ.எல்.ராகவனும் பாடும் "என்ன வேகம்.. நில்லு பாமா" பாடலில் இவர்கள் இருவரோடு ஒலிக்கும் "டௌ டௌடௌட டௌ" கோரஸ் பகுதி சதன் பாடியது..
பணக்கார குடும்பம்-பறக்கும் பந்து பறக்கும்...சந்திக்கும் ஓசையை வாய்க்குள் விரல் வைத்து டப் டப் என்ற ஓசையை எழுப்பியவர் இவர்தான்.
பாடல் பதிவு முடித்தபோது வாயில் ரத்தமே வந்துவிட்டதாம்!
போனால் போகட்டும் போடா பாடலில் சதனின் சுடுகாட்டு ஓநாய் ஆந்தை குரல்தான் நம்மை திகிலடைய வைத்தது.
சர்வர் சுந்தரம் படத்தில் கே.ஆர்.விஜயா கிளியோடு பாடுவது போல அமைந்த தந்தை நெஞ்சம் பாடலில் இசையரசி பி.சுசீலாவுடன் "முத்தக்கிளி", "இல்லியோ கிளி போல பாடினார்!
மகாராஜா ஒரு மகாராணி..."குட்டிராணி" என்று கொஞ்சுவது சதனின் குரல் தான்.
மலரென்ற முகமொன்று சிரிக்கட்டும்...யூடு யூடு யூடு யூடுடுடுஊ" என்று ஒலிக்கும் குரல் சதனுடையது!
கடவுள் அமைத்து வைத்த மேடை...பலகுரல்களை கொடுத்து அசத்தியிருப்பார்
அவர்கள் ...ஜுனியர் பாடலில் பொம்மையாக பாடியிருப்பார் செய் ஹிட்
முத்தமோ மோகமோ பறக்கும் பாவை படத்தில் விலங்கு பறவைகளின் குரல் இவருடையதுதான்.
70 களில் மட்டும் 150 படங்களில் இவர் குரல் ஒலித்து!
May be an image of 2 people and text


Filmography[edit]

Tamil[edit]

Bommai

Malayalam[edit]

  • Hijack (1995) as Thankappan
  • Simhadhwani (1992)
  • Kaumaara Swapnangal (1991)
  • Chakkikotha Chankaran (1989)
  • Malayathippennu (1989)
  • Bheekaran (1988)
  • Ormayil Ennum (1988) as Kuruppu
  • Loose Loose Arappiri Loose (1988)
  • Jungle Boy (1987) as Velappan
  • Aalorungi Arangorungi (1986)
  • Kiraatham (1985) as Santhappan
  • Prathijnja (1983) as Charayam Paramu
  • Varanmaare Aavashyamundu (1983)
  • Bandham (1983)
  • Benz Vasu (1980)
  • Vijayam Nammude Senaani (1979)
  • Vaaleduthavan Vaalaal (1979)
  • Aval Niraparaadhi (1979)
  • Avano Atho Avalo (1979)
  • Madanolsavam (1978)
  • Beena (1978)
  • Velluvili (1978) as Kuttappan
  • Naalumanippookkal (1978)
  • Aaravam (1978)
  • Balapareekshanam (1978)
  • Madhurikkunna Raathri (1978)
  • Kaithappoo (1978)
  • Anugraham (1977) as Mathew
  • Amme Anupame (1977)
  • Sujatha (1977)
  • Snehayamuna (1977)
  • Kaavilamma (1977)
  • Niraparayum Nilavilakkum (1977)
  • Minimol (1977)
  • Satyavan Savithri (1977)
  • Manassoru Mayil (1977)
  • Ammaayi Amma (1977)
  • Priyamvada (1976)
  • Vanadevatha (1976) as Velu
  • Chirikkudukka (1976) as Naanu
  • Themmadi Velappan (1976) as Claver
  • Kaamadhenu (1976)
  • Theekkanal (1976)
  • Cheenavala (1975)
  • Kaamam Krodham Moham (1975)
  • Kalyaanappanthal (1975)
  • Chandanachola (1975)
  • Love Letter (1975)
  • Love Marriage (1975)
  • Ullaasayaathra (1975)
  • Boy Friend (1975)
  • Babumon (1975) as Appunni
  • Check Post (1974)
  • College Girl (1974) as Haider
  • Udayam Kizhakku Thanne (1978)
  • Alakal (1974)
  • Urvashi Bharathi (1973)
  • Thaniniram(1973) as Sukumarankutty
  • Ladies Hostel (1973) as Punewala
  • Manthrakodi(1972)
  • Jalakanyaka (1971)
  • Nishaagandhi (1970)
  • Nizhalattam(1970) as Band Master
  • Kaattukurangu (1969)
  • Agnipareeksha (1968) as Manoharan
  • Lakshaprabhu (1968)
  • Collector Malathy (1967) as Sarasan
  • Jeevikkaan Anuvadikkoo (1967)
  • Jeevithayaathra (1965)
  • Arappavan (1961) as Balan
  • Aval Oru Thudar Katha (1975) as Bommai

No comments:

Post a Comment