Thursday, 17 June 2021

DEVOTIONAL SONGS OF T.M.SOUNDARAJAN

 

DEVOTIONAL SONGS OF T.M.SOUNDARAJAN



⚜ 🔱 *பக்திப்பரவசம்* 🔱⚜
இன்றைய காலைப்பொழுதில்
இடம் பெறும் பாடல்கள்...
*டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலில் திரைக்கு வராமலே பிரபலமான முருகன் பாடல்கள்.!*
👇👇👇
அந்நாட்களில் எல்லாம் ஒரு சிலர் வீடுகளில் தான் வானொலிப் பெட்டி இருக்கும். இல்லா விட்டால், ஊர்த்திருவிழா, கல்யாண வீடுகள், டூரிங் டாக்கீஸ்கள் என எங்கோ தொலை தூரத்தில் குழாய் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்கள் இவைதான் அன்றைய மனிதர்களின் மன இறுக்கத்தை போக்க வந்த மகிழ்வான நிகழ்வுகள்.
இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில்தான் வராது வந்த மாமணி போல் வந்து சேர்ந்தார் *டி.எம்.எஸ்* என்கிற டி.எம்.சௌந்தரராஜன். *சிம்ம குரலெடுத்து அவர் பாடிய பாடல்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி எனத் திரையுலகின் இரு ஆளுமைகளுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ்க்கொடி வீசிப்பறந்தன.!* இவர் பாடிய சினிமாப் பாடல்கள் பல விதங்களில் ஹிட் அடித்தவை.
ஆனால், திரைக்கு வராமலே இவர் பாடி தமிழர்களின் வாழ்வில் கலந்த *'முருகன் பக்திப்பாடல்கள்'* சாகா வரம் பெற்றவை.
*முருகனின் ஆறுபடை வீடுகளிலும் இன்றும் இரவு பகல் பாராது எந்நேரமும் ஒலிப்பவை.!*
இத்தனைச் சிறப்புமிக்க *தனிப்பாடல்கள் உருவான வரலாற்றுடன் இசைத்தொகுப்பு இதோ உங்களுக்காக...
*திருச்சி ரயில் நிலையம்:!*.
அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ரயில் வண்டியை அணுகுகிறார் ஒரு இளைஞர். உள்ளூரில் கதை, கவிதை என எழுதிக்கொண்டிருந்த *இளஞனின் கையில் அவர் எழுதிய பாடல் அடங்கிய தாள்.!*
அந்த வண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்ந்திருக்கும் *பிரபலப் பின்னணிப் பாடகரை தயங்கித் தயங்கி அணுகி, தான் எழுதிய பாடலைக் காண்பிக்கிறார்.!*
வாங்கிப் பார்த்த *பிரபல பாடகருக்கு முகம் மலருகிறது.* அவருக்குப் பிடித்த *அழகன் முருகனைப் பற்றிய பாடல்.!*
அங்கேயே வாயாலேயே மெட்டமைத்து பாடலை மெல்லப் பாடிப் பார்க்கிறார். *பாடலில் உள்ள கவிதை மற்றும் சந்தம்* அவர் கருத்தைக் கவர்ந்தது.
*ஆரம்ப வரிகளே மனதை கொள்ளை கொண்டது.!*
*பல்லவி 😘
*‘கற்பனை என்றாலும்*
*கற்சிலை என்றாலும்*
*கந்தனே உன்னை மறவேன்’*
*அனுபல்லவி:*
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையின் கடலே –நீ
*சரணம்:*
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே என்று பாடல் தொடர்கிறது....
*‘அவனன்றி ஓரணுவும் அசையாது’* என்பதை அந்த இளைஞர் எத்தனை எளிமையாக விளக்கியிருக்கிறார் பாருங்கள்.
*பாடல் மிகவும் படித்துப் போக தானே இசையமைத்து பாடினார் அந்த பாடகர்.!*
அந்த இளைஞர் தான் *வாலி.* பிரபலப் பாடகர் : *டி.எம்.எஸ்.* இன்று இந்த இருவருமே இல்லை. ஆனாலும் *இந்தப் பாடல் "இறவா வரம்" பெற்ற பாடல்!*
வாலிக்கு முருகன் மேல் தீராத பக்தி. எப்போதும் முருகா முருகா என்று சொல்லிக் கொண்டே இருப்பார். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் கொடுப்பார்.
*வாலி எழுதி டி.எம்.எஸ் பாடிய முருகனின் பாடல்கள் என்றென்றைக்கும் தமிழ் கூறும் நல்ல நெஞ்சங்கள் எல்லாவற்றிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும்..!* 🙏
அதன் பின்னர் அவர் எழுதிய வேறு சில பாடல்களையும் பாடி ஒரு எல்.பி இசைத்தட்டாக வெளிவந்து பக்தர்கள் அனைவருக்கும் பக்தி பரவசமூட்டியது.!
*அதில் மற்ற சில பாடல்களைப்பற்றி...*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்*
துன்பம் வாராத நிலைதன்னைச்
சேர்க்கும் ஐயன் ஓராறு முகமும்...
இதை கேட்கும் போதிலே
சரவணப் பொய்கையில்
கார்த்திகை கன்னிகையரிடத்தில்
வளர்ந்த குமரக்கடவுள்களின்
கனிவான முகம் நினைவில் வந்து
நம் கவலைகளை எல்லாம்
மறக்க செய்து விடும்.!
〰 🎶 〰 🎶 〰 🎶 〰
🌺*'உள்ளம் உருகுதைய்யா'*
முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா...
இந்த இரண்டு பாடலைக் கேட்கும் போது, கேட்பவரின் கவலைகள் யாவும் காற்றில் பறக்கும். துன்பங்கள் யாவையும் பஞ்சாக பறந்து போகும். இறைவன் மேல் இந்த அளவு கசிந்துருகி எவரும் இனிப் பாட முடியுமா என்பதே பெரும் கேள்விக்குறி தான்.?
〰 🎶 〰 🎶 〰 🎶 〰
🌺*சொல்லாத நாளில்லை*
சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச் சொல்லாத நாளில்லை
இந்தப் பாடலும் கேட்கும்போதே மனம் லயித்துப்போகும். அத்தனை அருமையான பாடல். தமிழ் வார்த்தைகளும், அவரது உச்சரிப்பும் நம் மனதை மயக்குபவை.
〰 🎶 〰 🎶 〰 🎶 〰
🌺*முருகா..! முருகா..!*
*அழகென்ற சொல்லுக்கு முருகா*
உந்தன் அருளன்றி உலகிலே
பொருளேது முருகா
பாடலைக்கேட்கும் போதே முற்றிலும்
நாம் கரைந்து போய் விடுவோம். எளிய இசைக்கருவிகளுடன் கனிவான டி.எம்.எஸ்ஸின் குரல் கல்நெஞ்சையே கரைய வைக்கும். தமிழ்க் கடவுள் முருகன் கசிந்துருக மாட்டாரா என்ன..!
〰 🎶 〰 🎶 〰 🎶 〰
🌺 *இனிய காலை வணக்கம்* 🌺

No comments:

Post a Comment