Saturday, 26 June 2021

ACTOR VEERA RAGHAVAN BIOGRAPHY

 


ACTOR VEERA RAGHAVAN BIOGRAPHY

நல்ல நடிகராக இருந்தும், பல முன்னணி நடிகர்களோடு நடிக்க வாய்ப்புகள் அமைந்தும், திரை உலகினரால் சரியாக பயன்படுத்திக்கொள்ளப்படாமல் பல திறமையானவர்கள்- "இவர் இந்தவேடத்திற்குதான் சரியானவர் "-என முத்திரை குத்தப்பட்டு கால ஓட்டத்தில் ரசிகர்களால் மறக்கப்பட்டும் விடுவர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் வீரராகவன். காவல் துறை அதிகாரி, நீதிபதி, வங்கி அதிகாரி, கல்லூரி முதல்வர் என பல படங்களில் நடித்தாலும், இவரது நடிப்புததிறனை வெளிக்கொணரும் வகையில் படங்களோ- பாத்திரங்களோ அமையவில்லை என்பது வேதனையானது. இத்தனைக்கும் இவர் நடிகர் திலகம், ரஜினிகாந்த், சிவக்குமார் ஆகிய சாதனையாளர்களோடு நடித்தும்- கே.பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்ற புகழ் பெற்ற இயககுநர்களின் படங்களில் நடித்தும் இருக்கிறார்.
மன்னவன் வந்தானடி, உத்தரவின்றி உள்ளே வா, சொல்லத்தான் நினைக்கிறேன், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, ஆனந்தக்கண்ணீர், அழகன், நான் மகான் அல்ல, தர்மயுத்தம், பட்டாக்கத்தி பைரவன், சங்கிலி ஆகிய படங்கள் இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கவை.
இவர் மேஜர் சுந்தரராஜனின் நாடக குழுவில் ஒரு அமெச்சூர் நடிகராக இருந்தார். ஆரம்ப காலங்களில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (LIC) பணிபுரிந்து கொண்டே, நாடகங்களிலும் பின் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
1999 ஆம் ஆண்டு தனது 72 ஆவது வயதில் மரணமடைந்தார். மனைவியின் பெயர் பூமா. ஒரு மகன்-மகள் உள்ளார்கள். நல்ல நடிப்புத்திறன், சிறிய வேடமாயினும் அதை நன்கு உள்வாங்கி நடிக்கக்கூடிய தன்மை ஆகியவற்றை கொண்டிருந்த இவரை தமிழ்த்திரையுலகம் நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்..!!!

No comments:

Post a Comment