Sunday, 11 April 2021

RADIO ANNOUNCER SAROJ NARAYANASAMY

 


RADIO ANNOUNCER SAROJ NARAYANASAMY

வானொலி நினைவலைகள்...

**************************************


"ஆகாசவாணி!  செய்திகள்   வாசிப்பது   சரோஜ்  நாராயணசுவாமி "  இதைப்   படிக்கும்  போது  மனம்  காலை  ஏழே   கால்  மணி  பரபரப்பை  உணர்ந்தது. அந்த   நேர   ஸ்கூல் ,  கல்லூரிக்கு     செல்லும்    பரபரப்பு  ,   அடுக்களையிலிருந்து  மிதந்து வரும்    சாம்பார்   கொதிக்கும்     மணம்    எல்லாமே     நினைவுக்கு  வந்தன..

 'ரேடியோ' பொழுது    போக்கு    அம்சத்தை     நம்    வீட்டு     கூடத்திற்கு   கொண்டு வந்தது.  இன்று    தொழில்  நுட்பம்    எத்தனையோ    சாதனங்களை    நம்   கையருகில்   கொண்டு வந்திருக்கலாம்.   அதற்கெல்லாம்   முன்னோடி   'ரேடியோ.'

கடிகாரம்    பார்க்க வேண்டிய    அவசியம்  இல்லாமல்   காதால்  நிகழ்ச்சியைக்   கேட்டே    நேரம்   தவறாமல்    காரியங்களை  நடத்திக்  கொண்டிருந்தோம்.

 "ஆகாஷவாணி " , " ஆல் இன்டியா    ரேடியோ " ஆனது.



நேயர் விருப்பம் இன்றும்  எனக்கு    விருப்பமே ! என்னைப்   போல்   நிறைய  பேர்     உண்டென்றே  நினைக்கிறேன்.

மெட்ராஸ்   A   , மெட்ராஸ்  B  ,  திருச்சி   என்று  பல  ஸ்டேஷன்களை    மாற்றி   மாற்றி   கேட்டிருக்கிறேன்.

ரேடியோ    சிலோன்  ல் வரும் பிறந்த நாள்  வாழ்த்து  நிகழ்ச்சி   பலரும்   விரும்பிக்   கேட்கும்   ஒன்று   ஆகும்.

"வாழ்த்துகிறவர்கள்  அம்மம்மா,  அப்பப்பா,   மாமி,    மாமா ....... "  என்று  நீண்டு     கொண்டே  போகும்  லிஸ்ட்டையே    ரசிப்பவர்கள்   நிறைய  பேர்.

வீட்டில்    ரேடியோ   வாங்கிய   அன்று    எப்படி   ஒரு   சந்தோஷத்தில்    மிதந்தோம்    .அப்படியே   நினைவில்  இருக்கிறது.



திருச்சி  ஸ்டேஷனும்     ரேடியோ    சிலோனும்  கேட்பதற்காக     ஒரு    பெரிய ஏரியல்    ஹாலில்    நீளமாகக்     கட்டியும் , ரேடியோ    சிலோனில்    TMS ம் , சுசீலாவும் தொண்டைக்   கட்டு   வந்தது    போல்   தான்  பாடிக் கொண்டிருந்தார்கள்.

விவித்பாரதி ,   நாம்  வணிகமயமாகப்    போவதை   முன்கூட்டியே    நம்  வீட்டிற்குள்    வந்து   அறிவித்தது. அதில்     வரும்   தேன்கிண்ணம்   நிகழ்ச்சிக்கு      அப்போதெல்லாம்     பெரும்      ரசிகர்      பட்டாளம்   உண்டு. சினிமாப்    பாட்டுக்கு   மட்டுமல்ல ,  அதில்   வந்த   விளம்பரங்களுக்கு   கூடத்தான்   ரசிகர்கள். சாரிடான்    ,    அர்ச்சனா   ஸ்வீட்ஸ்,  நரசுஸ்   காபி    விளம்பரம்.,   இது    போல்     நிறைய   ......... .மனதைக்    கொள்ளையடிக்கும்.

சினிமா   பாட்டு  மட்டுமல்ல,   கர்நாடக   சங்கீதமும்,  இசைவிழா,   நாடக   விழா        எல்லாமே    காதிற்கு    விருந்து   தான்.

கிரிக்கெட்  மேட்ச்    கமெண்டரி   மறக்க முடியுமா.? கிரிக்கெட்  க்ரௌண்டை   கண்ணால்  பார்க்காமலே     mid on  ,  midoff,  covers   எல்லாமே    கற்பனையில்..........   நாம்    நினைக்கின்ற இடம்  தான் . .Pataudi    catch   பிடித்தது   அப்படியே    மனக்  கண்ணில்    விரிய  வைக்கும் ,  கமெண்டேடர்    சாமர்த்தியம்.

 அதன்    படி    மழையெல்லாம்    வருமா?

 உஷ்.......... அதெல்லாம்    கேட்கக்   கூடாது.

 அதற்குப்  பிறகு    transistor  வந்தது. பார்ப்பதற்கும்   ரேடியோவின்  சிஸ்டர்   தான். டேப்    ரெகார்டர்  வந்தும்    ரேடியோவின்  மவுசு  குறையத்தானில்லை.

தற்போது    FM    களின்   ஆட்சி    . கைபேசியிலேயே   கேட்டுவிடலாம். ஆகவே    இப்பொழுது   ரேடியோ  அவசியமில்லை  என்ற  நிலைக்கு   வந்துவிட்டோம்.

சட்டென்று  ஒரு  குரல்    "இன்றைய    தலைப்புச்  செய்திகள்."

 ஓ! நான்      இப்பொழுது    "டிவி"   முன்னால், கையிலோ   " ஐபேட் "

டிவியும்  ,  இணையமும்  , சேர்ந்து    ரேடியோ   ரசிகர்களை   கடத்திக்  கொண்டு  போய்     விட்டது   என்று    நினைத்தால்......

இல்லை  , என்கிறது  புள்ளிவிவரம்*.உலகளவில் 1,00,000 ற்கு   மேல்   ரேடியோ  ஸ்டேஷன்களும் , 2,00,000  கோடி   ரேடியோக்களும்,  அதற்கான  ரசிகர்களும்   உள்ளார்களாம்.

நம்மை  மகிழ்விக்கும்,  ரேடியோவைக்   கண்டுபிடித்துக்   கொடுத்த   'மார்கோனி 'க்கு

 " hats  off ".

ஆக்கம்: ராஜலட்சுமி பரமசிவம்

நன்றி: இணையம்...




பிறந்த நாள்.. இன்று பிறந்த நாள். நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்து நாள் என்று அறிவிப்பாளர்( மயில் வாகனன் என்று நினைக்கிறேன்.) சொல்லும் போது நமக்கே பிறந்த நாள் வந்த குதுகூலம் !!!


இரவில் 9 மணிக்கு மேல் சிலோன் ரேடியோவில் இந்தி பாடல்களை கேட்பதற்கு மனம் ஆவலாய் சிறகடித்து பறக்கும். 60 லிருந்து வந்த பாடல்கள் இன்றும் செவியில் ரீங்காரம்

இலங்கை வானொலியின் மதுரகானம், நினைவில் நின்றவை (நீங்காதவை) இரவின் மடியில்...மறக்க முடியாதவை

No comments:

Post a Comment