Monday, 12 April 2021

INDIAN REGIMENT BORDER SECURITY FORCE

 

INDIAN REGIMENT BORDER SECURITY FORCE



ஏப்ரல் 3, 2020 அதிகாலையில், எல்லை கட்டுபாட்டு கோடருகே 8ஆவது ஜாட் படையணி காவல் காத்து வந்த பகுதியில் கம்பி வேலிகள் பாகிஸ்தான் சிறப்பு படை கமாண்டோ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளால் வெட்டப்படுகிறது, இதன் பின்னர் நமது எல்லைக்குள் ஊடுருவி வருகின்றனர்.

 

திடீரென அந்த பகுதிக்கு ரோந்து வந்த 8ஆவது ஜாட் படையணி பனியில் காலடி தடங்கள் மற்றும் வெட்டப்பட்ட கம்பி வேலியை கண்டு உஷார் அடைந்து ராணுவ கட்டுபாட்டு மையத்திற்கு தகவல் அனுப்புகிறது.


உடனடியாக அருகில் இருந்து 41 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் மற்றும் 57ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் அந்த மொத்த பகுதியையும் தப்பிக்க ஒரு வழியும் இல்லாதபடி சுற்றி வளைக்க அனுப்பபட்டனர்.


இனி பயங்கரவாதிகளை நேரடியாக எதிர்கொள்ள 4ஆவது பாரா சிறப்பு படை களமிறக்கப்பட்டது. நடுநிசியில் கடுமையான பனிப்பொழிவுக்கு இடையே ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய வீரர்கள் மலையின் மேலிருந்து கீழ் நோக்கி பயங்கரவாதிகளை சல்லடை போட்டு தேடி கொண்டு வந்தனர்.


 

அதிகாலை 4.30மணியளவில் 8ஆவது ஜாட் படையணி சுற்றி வளைத்து இருந்த பகுதியில் 4ஆவது பாரா சிறப்பு படை வீரர்கள் வந்த போது பயங்கரவாதிகளுடன் முதல் மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த கீழ் நோக்கி தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிக்க சுபேதார் சஞ்சீவ் குமார் தனது படையணியுடன் மிக வேகமாக முன்னேறினார்.


பாராவீரர் பால் க்ரிஷன் – இமாச்சல பிரதேசம்,

மறுபடியும் காலை 8.30மணியளவில் பயங்கரவாதிகளுடன் இரண்டாவது மோதல் ஏற்படுகிறது. சுபேதார் சஞ்சீவ் குமார் பாராவீரர்கள் அமித் மற்றும் சத்ரபாலை கூட்டி கொண்டு சிறிது தூரம் சுற்ற சென்று அங்கிருந்து பயங்கரவாதிகளை மடக்க செல்கின்றார்.



திடீரென பனி இடிந்து விழ பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிக்கு மிக மிக நெருங்கிய நிலையில் சிறிய ஓடையில் மூவரும் விழ, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

 

மூன்று வீரர்களும் கடுமையான தோட்டா காயங்களை உள்வாங்குகின்றனர், சுபேதார் சஞ்சய் மற்றும் சத்ரபால் உடல்களை பல தோட்டாக்கள் துளைத்த நிலையில் பாராவீரர் அமித் உடலை சுமார் 15தோட்டாக்கள் சல்லடையாக துளைத்து இருந்தன. 


எனினும் மூவரும் சற்றும் பின்வாங்காமல் எதிர் தாக்குதல் நடத்தி 2 பயங்கரவாதிகளை கொல்கின்றனர்.


பாராவீரர் அமித் குமார் – உத்தராகண்ட், இவருக்கு சில மாதங்கள் முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

துப்பாக்கி சண்டை நடந்த திசையில் ஹவில்தார் தாவேந்தர் சிங் மற்றும் பாரா வீரர் பால் க்ரிஷன் விரைந்தனர்.


 படுகாயமடைந்த தங்களது நண்பர்களை காப்பாற்ற சென்ற போது பதுங்கி இருந்த மற்ற 2 பயங்கரவாதிகளும் இரண்டு ராணுவ வீரர்கள் மீதும் கடுமையான தாக்குதலை பிரயோகித்தனர்.


இதில் கடுமையான காயமடைந்த இருவரும் 2 பயங்கரவாதிகளையும் கொன்றொழித்தனர்.


5 சகாக்களும் சில நிமிடங்களில் நாட்டுக்காக ரத்த வெள்ளத்தில் நாட்டுக்காக உயிர் துறந்தனர்.


தப்பியோடிய கடைசி பயங்கரவாதியின் உடல் 8ஆவது ஜாட் படையணியால் சல்லடையாக்கப்பட்டது.


பாராவீரர் சத்ரபால் சிங் – ராஜஸ்தான் (22 வயதே நிரம்பிய இளைஞன்).

4ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியனுடைய படையணி திறம்பட செயல்பட்டது. நட்புக்கும் தேசப்பற்றிற்கும் இலக்கணமாக ஐவரும் விளங்கினர்.


கடந்த 2016 ஆண்டுக்கு பின்னர் சிறப்பு படைகளுக்கு தற்போது தான் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் இதே 4ஆவது பாரா சிறப்பு படை தான் 2016ஆம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகர் நடிகையர் என்ன உடை அணிந்தார்கள் என பட்டிமன்றம் நடத்தும் ஊடகங்கள் இத்தகைய தியாகங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.


1)சுபேதார் சஞ்சீவ் குமார் – இமாச்சல பிரதேசம்,

2)ஹவில்தார் தாவேந்தர் சிங் – உத்தராகண்ட்,

3)பாராவீரர் பால் க்ரிஷன் – இமாச்சல பிரதேசம்,

4)பாராவீரர் அமித் குமார் – உத்தராகண்ட், இவருக்கு சில மாதங்கள் முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

5) பாராவீரர் சத்ரபால் சிங் – ராஜஸ்தான் (22 வயதே நிரம்பிய இளைஞன்).


நமக்காக நாட்டைக் காக்க தனது இன்னுயிரை ஈந்த சிங்கங்களுக்கு நாம் வீரவணக்கம் செலுத்துவோம்


அவர்களது குடும்ப சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வீர வணக்கத்தை செலுத்துவோம்.

No comments:

Post a Comment