Tuesday, 6 April 2021

EGYPT - NEW PYRAMIDS FOUND

 

EGYPT -  NEW PYRAMIDS  FOUND




சுமார் 3,700 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட பிரமிடின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எகிப்திய அரசின் தொல்பொருட்கள் அமைச்சகம்தெரிவித்துள்ளது.

கெய்ரோவின் தெற்கில் உள்ள தாஹ்சூர் அரச இடுகாடு பகுதியில், உள்புற நடைகூடம் மற்றும் எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்கள் அடங்கிய 10 வரிகள் கொண்ட ஒரு பகுதி ஆகியவை கண்டிபிடிக்கப்பட்டவைகளில் அடங்கும்.

பிரமிடின் அளவை நிறுவவும், மேலும் பல தகவல்களை வெளிக்கொணரும் வகையிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் அகழ்வாராய்ச்சி நடந்த இடங்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பிரமிட் 13-ஆம் பாரோனிக் வம்சத்தால் கட்டடப்பட்டதாக நம்பப்படுகிறது.

சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முன்104 மீட்டர் உயரம்(341அடி) கொண்ட எகிப்தின் முதல் உண்மையான வழவழப்பான பக்கங்களை கொண்டபிரமிட் இதுவாகும். இது தாஹ்சூர் என்ற இடத்தில் 4-ஆம் வம்சத்தை சேர்ந்த மன்னர் ஸ்னேபெரு கட்டியது ஆகும்.

அவர் இதற்கு முன்பாகவே 105 மீட்டர் உயரம் கொண்ட வளைந்த வடிவிலான பிரமிட் ஒன்றை கட்டியுள்ளார். இந்த பிரமிட்டின் சாய்வு பக்கங்கள், பாதிஅளவில் 54 டிகிரி முதல் 43 டிகிரியாக மாறும்படியாக கட்டப்பட்டுள்ளது.


ஸ்னேபெருவை தொடர்ந்து அவரது மகன் க்ஹுப் ஃபு தான், கிஸா என்ற இடத்தில் கிரேட் பிரமிட்டை காட்டியுள்ளார். இந்த பிரமிட்138 மீட்டர் உயரம் கொண்டது. இது, உலகின் பழைய அதிசயங்களில்.ஒன்றாகும்


No comments:

Post a Comment