Saturday, 17 October 2020

HOW CELLS GOT INFECTED ?

 



HOW CELLS GOT INFECTED ?

கிருமிகள் உலகில் மனிதர்கள் - 7



சாதாரணமாக வெளியேற வேண்டிய கழிவுகளை செல்களில் தேக்கமடைய வைத்து இரண்டாம் நிலைக் கழிவுகளைப் பெற்றோம். அப்போதும் நம்முடைய செல் தொந்தரவுகள் மூலம் கழிவுகளை வெளியேற்ற முயல்கிறது. இந்த நிலையில் 


நாம் முன்பு பார்த்த பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து கொண்டிருப்பது மூலமும், கழிவு வெளியேறுவதற் காக உடல் ஏற்படுத்திய தொந்தரவுகளை தவறாகப் புரிந்து கொண்டு கழிவு வெளியேற்றத்தை நிறுத்துவதன் மூலமும் செல்லின் கழிவுகள் ரசாயனக் கழிவுகளாக உருமாறுகின்றன. இது மூன்றாம் நிலைக் கழிவுகளாகும்.


சாதரணக் கழிவுகள் தேக்கமடைந்த வையாக மாறும் போதே அதன் தன்மை மோசமானதாக மாறுகிறது. உதாரணமாக, நாம் தினமும் மலம் கழிக்கிறோம். இது ஒரு தினசரி பழக்கமாக இருக்கும் போது அன்றாடம் உருவாகும் மலம் உடனே வெளியேற்றப்படுவதால் அதன் தன்மை சாதாரணமாக இருக்கும். ஆனால், நமக்கு திடீரென்று இரண்டு, மூன்று நாட்கள் மலம் போகவில்லை என்று வைத்துக் கொள்வோம். இப்படி ஏற்பட்ட மலச்சிக்கலுக்குப் பின்பு மூன்று நாட்களுக்குப் பிறகு மலம் வெளியேறினால் அதன் தன்மை எப்படி இருக்கும்?


சாதாரணமாக வெளியேறும் மலத்திற்கும், தேங்கிய பின்னர் வெளியேறும் மலத்திற்கும் வேறுபட்ட தன்மை இருக்குமல்லவா? தேங்கிய மலம் இறுக்கப்பட்ட தன்மையோடும், அதன் அமிலத் தன்மை மிக அதிகமாகவும், கடுமையான ஒட்டும் தன்மை மற்றும் துர்நாற்றம் போன்றவற்றோடும் இருக்கும்.


இது போலத்தான் சாதாரணமாக செல்லில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுகள் தேங்கி தேக்கமுற்ற கழிவுகளாக மாறுகிறது. இப்படி மோசமாக தேக்கமுற்ற கழிவுகள் ரசாயனக்கழிவு

களாக மாறினால் செல் என்ன ஆகும்?


ரசாயனத் தன்மையோடு நம் செல்களில் தேங்கியிருக்கும் கழிவுகளை நம் செல் எப்படி வெளியேற்றுகிறது என்பதை நாம் அறிந்து கொள்வது ஆங்கிலப் படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு இணையான ஆச்சரியத்தைத் தரும். நம் உடலின் அற்புதங்களில் ஒன்றை அறிந்தால் புரிதலைத் தரும்.


ரசாயனக் கழிவுகளை நம்முடைய செல் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்

குமானால் அது செல்லையே பாதித்து விடும். அதை வெளியேற்றினால் அதன் அருகிலுள்ள பிற செல்களுக்கு பாதிப்பு உருவாகும். ஆக, முழுமையான உடல்நலத்தின் மேல் அக்கறை கொண்ட செல் ரசாயனக் கழிவுகளை உள்ளேயும் வைத்துக் கொள்ள முடியாது; வெளியேற்றவும் முடியாது. இப்போது நம் செல் என்ன செய்யும்?




நம்முடைய செல் ரசாயனக் கழிவை வெளியேற்ற புதிய உத்தியைக் கையாள்கிறது.


செல்லின் படத்தைப் பாருங்கள். அதில் சிறிய துகள்கள் போல செல் சுவரின் அருகில் இருப்பவைதான் நம்முடைய கதாநாயகர்கள். அவற்றின் பெயர் லைசோசோம்கள். இவை செல்களால் தேவைக்கேற்ப உருவாக்கப்

படுகின்றன. இவை என்ன செய்கின்றன?


நம்முடைய செல்களில் ரசாயனக் கழிவுகள் தேங்குகிற போதே, அது செல்லினுள் உள்ள திரவத்தில் கலந்து விடாதவாறு ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்கிறது 

நம் செல். ஏற்கனவே ரசாயனமாக இருக்கக்கூடிய இக்கழிவு செல்திரவத்தில் கலந்து விட்டால் அது செல்லை அழித்து விடும் அல்லவா? எனவே கழிவுப் பொருளைச் சுற்றி ஒரு சவ்வு போன்ற அமைப்பை (Mucus Memberane) செல் ஏற்படுத்துகிறது. கழிவுகளின் ரசாயனத்தன்மை செல்லை பாதிக்காதவாறு இந்தச் சவ்வுப் பொருள் பாதுகாக்கிறது. இது தற்காலிக ஏற்பாடுதான். ஏனென்றால் ஏற்கனவே கழிவுகள் உருவாகக் காரணமான நம்முடைய இயற்கைக்கு மாறான பழக்க வழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலோரசாயன மருந்துகள் மூலம் கழிவுகளைஐ உடலுக்குள் அமுக்க முயன்றாலோ செல்களில் உள்ள ரசாயனக்கழிவுகள் பெருகலாம். அல்லது அதன் தன்மை இன்னும் மோசமாகலாம். எனவே இந்தச் சவ்வு அமைப்பை செல் தற்காலிகமாக ஏற்படுத்திக் கொள்கிறது.



நாம் ஏற்கனவே பார்த்த 

லைசோ 

சோம்கள்

தான் ரசாயனக் கழிவுகளை அழிக்கும் போர் வீரர்கள் 


லைசோ சோம் என்ற மருத்துவச் சொல்லிற்கு அழிக்கும் பொருள் என்று அர்த்தம். ஆங்கிலத்தில் இதனை Sucide Bags என்றும்,

 தமிழில் தற்கொலைப் பைகள் என்றும் இதை அழைப்பார்கள். உலகத்தின் முதல் தற்கொலைப் படையை உருவாக்கியது 

மனித உடலின் செல்களாகத்தான் இருக்கும்


தற்கொலைப் படை எவ்விதமாக தன் எதிரிகளை அழிக்கிறது? அழிக்கும் தன்மையுள்ள வெடி பொருட்களோடு எதிரியின் மீது தாக்குதல் நடத்துகிறது. தானும் அழிந்து எதிரியையும் அழிப்பதுதான் தற்கொலைப்படை. அதே போலத்தான்இந்த 

லைசோ சோம்கள். கழிவுகளின் தன்மையையும், அளவையும் பொருத்து 

லைசோ சோம்கள் வளர்கின்றன. செல்லில் நலமான சூழல் நிலவுகிற போது கழிவுகளைத் தாக்குகின்றன. விரதம், ஓய்வு 

என்று நாமே ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்திக் கொண்டாலும் சரி, அல்லது காய்ச்சல், சோர்வு என்று உடலே ஏற்படுத்திக் கொண்டாலும் சரி செல்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன.


லைசோ சோம்கள் ரசாயனக்கழிவு களின் மேல் மோதுகின்றன. இங்கு ஒரு சந்தேகம் வரலாம். 

லைசோ சோம்கள் இருப்பது செல் சுவரின் அருகில். ரசாயனக் கழிவுகள் இருப்பது இன்னொரு இடத்தில். எப்படி அங்கு சென்று மோதும்? செல்லில் இருக்கும் செல்திரவத்தின் மீதுதான் எல்லா உறுப்புக்களும் மிதந்து கொண்டிருக்

கின்றன. (கோழி முட்டை போல). 

லைசோ சோம் 

எங்கு செல்ல முடிவெடுக்கிறதோ அங்கு நகர்கிறது. தாக்குதல் நடத்துகிறது. மனிதன் என்பவன் ஒரு உயிர் அல்ல. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஒரு உயிர். அதிலும், செல்லிற்குள் இருக்கும் 

லைசோ சோம் தனியாக முடிவெடுக்கிறது. தனியாகப் பிறந்து, தனியாகச் செத்தும் போகிறது. அதுவும் ஒரு உயிர்தான். எண்ணற்ற உயிர்களால் ஆனதுதான் மனித உடல்.


லைசோ சோம் தாக்குதலில் சிக்கிய ரசாயனக்கழிவுகள் அழிந்து போகின்றன. தாக்குதல் நடத்திய லைசோசோம்களும்அழிந்து போகின்றன. தற்கொலைப் பைகள் என்று எவ்வளவு பொருத்தமாகப் பெயர் சூட்டியிருக்கிறார் கள் உயிரியல் விஞ்ஞானிகள். அழிந்த கழிவுகளில் இருந்து நுண்ணிய துகள்கள் கூட எஞ்சாத அளவுக்கு இத்தாக்குதல் நடந்து முடிகிறது. செல்லிற்கும் பாதிப்பில்லை, உடலுக்கும் பாதிப்பில்லை. அப்படியானால் லைசோசோம் தான் அழிந்து விட்டதே… வேறு லைசோ சோமுக்கு செல் என்ன செய்யும்? இப்போது மறுபடியும் செல்லின் படத்தைப் பாருங்கள். ஒரு செல்லில் நிறைய லைசோசோம்கள் இருக்கின்றன. அப்படியும் செல்லுக்கு புதிதாக லைசோ சோம்கள் தேவைப்பட்டால் உருவாக்கிக்

கொள்ளும்.


ஒரு செல்லின் இயக்கம் எவ்வளவு அருமையானது? அதன் கழிவு வெளியேற்றப் பணிகள் எவ்வளவு அருமையானவை? தினசரி உடலிற்கு சக்தியைத்தரும் பொருட்டு உருவாகும் கழிவுகளை செல்கள் வெளியேற்று

கின்றன. நம்முடைய தவறுகளால் அமுக்கப்படும் கழிவுகளை செல்கள் தொந்தரவுகள் மூலம் வெளியேற்று

கின்றன. மறுபடியும் ரசாயனங்களால், பழக்க வழக்கங்களால் ரசாயனக் கழிவுகளாக மாற்றப்பட்டாலும் அவற்றை அற்புதமான முறையில் அழித்து விடுகின்றன. 

ஆக, கழிவுகள் என்பவற்றை செல்கள் வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன… அதன் ஆயுள் முடிகிற வரைக்கும்.


இப்படி உடலில், அதன் செல்களில் தேங்கும் கழிவுகள் எந்தவகைக் கழிவானாலும் வெளியேற்றுவதுதான் உடலின் இயற்கை. 

நாம் உடலின் இயற்கைக்கு மாறாக மறுபடி மறுபடி கழிவுகளைத் தேங்குமாறு செய்கிறோம்


சாதாரணக் கழிவுகள், தேக்கமுற்ற கழிவுகள், ரசாயனக் கழிவுகள்... இப்படித் தொடரும் நம் சேமிப்பு அடுத்த நிலையை அடைகிறது. அழுகிய ரசாயனக் கழிவுகளாக மாறுகிறது. இவ்வகைக் கழிவுகள் தான் கிருமிகளுக்குத் தாயாகவும், 

கேன்சர் செல்களுக்குத் தந்தையாகவும் இருக்கின்றன. நான்காம் நிலைக் கழிவுகளில் என்னதான் நடக்கிறது?


நம்முடைய இயற்கைக்கு மாறான பழக்க வழக்கங்களால் நம் உடலில் கழிவுகள் தேங்குகின்றன என்று பார்த்தோம். நம் உடல் செல்களில் தேங்குகின்ற சாதாரணக் கழிவுகள், தேக்கமுற்ற கழிவுகளாகவும், ரசாயனக் கழிவுகளாகவும் மாறுகின்றன.


நம் உடல் உள்ளே தேங்கும் கழிவுகளுக்கு எதிராகப் போராடும் போதுதான் வெளியே தொந்தரவுகளாகத் தெரிகின்றன. இயற்கையான முறையில் இத்தொந்தரவு களை நாம் எதிர்கொண்டோ

மானால், கழிவுகள் வெளியேறி

விடுகின்றன. அப்படி இல்லாமல், தொந்தரவு களைக் கண்டு பயந்து, ரசாயனங்களைக் கொண்டு கழிவுகள் வெளியேறாமல் உள்ளே அமுக்கும் வேலையைச் செய்யும் போது அவை இன்னும் மோசமான நிலையை அடைகின்றன.


அப்படி மூன்றாம் நிலையில் உருவாகின்ற ரசாயனக்கழிவுகள் மறுபடியும் வெளியேற்றப் படாத போது நான்காம் நிலையில் அழுகிய ரசாயனக் கழிவுகளாக மாறுகின்றன. இவ்வகைக் கழிவுகளை அழிப்பதற்காகத்

தான் நம் உடலால் கிருமிகள் உருவாக்கப்

படுகின்றன.


கிருமிகள் உடலுக்கு வெளியிலிருந்து வருவதில்லை. உடலிற்குள்ளே இருக்கும் கழிவுகளின் நிலை மாற்றத்தால் உருவாகின்றன என்பதை நாம் பார்த்தோம். ஒவ்வொரு வகை கழிவையும் உடல் வெளியேற்ற முயல்கிறது. 

நாம் நம் முயற்சிகளால், நவீன வாழ்வுமுறை யால் கழிவுகளையும் சேமிக்கவே விரும்புகிறோம்


கழிவுகள் தேங்கிய நிலையில் சின்னச் சின்ன தொந்தரவுகள் மூலம் உடல் அவற்றை வெளியேற்ற முயல்கிறது. அடுத்த நிலையில் செல்களில் அழிக்கும் பொருட்களை உருவாக்கி கழிவுகளை அகற்ற முயல்கிறது. உடலின் எல்லா முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில், உடலின் கடைசி முயற்சி தான் கிருமிகள் உருவாக்கம்.


வெளியேற்றப்பட முடியாத கழிவுகளை எப்படியும் நீக்கியே தீர வேண்டும் என்பது உடலின் தேவை. 

உடல் நலமாக இயங்க வேண்டுமானால் உடலின் எந்த ஒரு பகுதியிலும் கழிவுகள் தேங்கி விடக்கூடாது. அதனால் தான் உடல் தன் கழிவு வெளியேற்ற முயற்சியை உயிர் இருக்கும் வரை தொடரும். எந்த நிலையிலும் அது ஓய்வதில்லை.


ஒரு அழுகிய நாயின் உடல் எப்படி புழுக்களால் சுத்தப்படுத்த

படுகிறது என்பதைப் பார்த்தோம். அது போல, செல்லினுள் தேங்கிய அழுகிய கழிவுகளைத் தூய்மைப் படுத்துவதற்காக கிருமிகள் உடலால் உருவாக்கப்

படுகின்றன


கிருமிகள் குறித்த நம் கேள்விகள் அனைத்தையும் இந்த அடிப்படையில் யோசித்துப் பாருங்கள். எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.


கிருமிகள் எங்கிருந்து வருகின்றன? என்ற கேள்விக்கு இன்றுவரை நவீன விஞ்ஞானிகள் தெளிவான பதிலைத் தரவில்லை. இயற்கையில் இருந்து வருகின்றன என்று பொத்தாம் பொதுவாய் சொல்லி

விடுகிறார்கள். தொடர்ந்து, முன்பு வந்த கிருமிகள் எல்லாம் இப்போது எங்கு இருக்கின்றன? என்று கேட்டால் விடயம் இன்னும் சிக்கலாகிவிடும்.


இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை மிகச் சுலபமானது என்பது நமக்குத் தெரியும். தேங்கிய கழிவுகளில் இருந்து கிருமிகள் உருவாகின்றன. எப்போதெல்லாம் கழிவுகள் தேக்கமடைகிறதோ அப்போதுதான் கிருமிகள் உருவாகும்.


கிருமிகள் பாதிப்பு ஏன் ஒருசிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது? பலருக்கு ஏற்படுவதில்லை? நுண்ணுயிரிய

-லாளர்கள் கூறுகிறார்கள் கிருமி தாக்குதலுக்கு ஏற்புடைய உடல்களை மட்டுமே தாக்கும். எல்லா நபர்களையும் கிருமிகள் தாக்குவதில்லை. இப்போது நமக்குப் புரிகிறது... கழிவுகள் இல்லாத மனிதர்களுக்கு கிருமிகள் உருவாக வேண்டிய அவசியம் இல்லை. எனவே உருவாவதில்லை. கழிவுகள் தேங்காத மனிதர்களிடத்தில் என்ன விதமான பரிசோதனைகள் செய்து பார்த்தாலும் கிருமிகள் இருக்கும் சின்ன அளவிலான ஆதாரத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் கிருமிகள் கழிவுகளற்ற உடலில் உருவாகாது.


நோயின் முதல் நிலையில் ஏன் கிருமிகளைக் காணோம்? 

நோயின் அடுத்தடுத்த நிலையிலேயே கிருமிகள் காணப்படுகின்றன. ஏன்? கிருமிகள் கழிவுகளில் இருந்து தோன்றுவதால் தான் நோயின் முதல் நிலையில் கிருமிகள் காணப்படுவ

-தில்லை. சாதாரண சளி உருவாகிறது என்றால் அதில் காச நோய்க் கிருமிகள் காணப்படு

-வதில்லை. அதே சளி வெளியேற்றத்தை நாம் தடுத்து, சேமித்து வைத்தோமானால் அடுத்தடுத்த நிலைகளில் சளிக்கழிவு தேக்கமடைந்து அழுகுகிறது. இப்போதுதான் கிருமிகளின் தேவை ஏற்படுகிறது. எனவே கிருமிகள் நோயின் இரண்டாம், மூன்றாம் நிலைகளில் தான் தோன்றுகின்றன. பரிசோதனை கூடங்களிலும் இதே முடிவுகள் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.


சாதாரணக் காய்ச்சல் 

டைபாய்டு அல்லது பன்றிக்காய்ச் சலாக மாறுவது எல்லாம் இப்படித்தான். கழிவுகளை நீக்குவதற்காக காய்ச்சல் தோன்றுகிறது. கழிவுகளை உள்ளடக்கும் நம் முயற்சியால் அவை அழுகிவிடுகின்றன. அப்புறம் கிருமிகள் தோன்றுகின்றன. இப்போது பரிசோதனைகளில் புதிய வகை காய்ச்சல் என்று விடை வரும்.


விதம் விதமான கிருமிகள் எங்கிருந்து வருகின்றன? என்பதையும் நாம் பார்த்தோம். கழிவுகளின் தன்மைக்கேற்ப அதிலிருந்து உருவாகும் கிருமிகளின் உருவமும் மாறுபடும். எனவே இலட்சக்கணக் கான கிருமி வகைகள் தோன்றுகின்றன. இன்னும் புதிய வகைகள் தோன்றிக் கொண்டேயிருக்கும


ஏனென்றால், 

நாம் உண்ணும் உணவுகள் காலந்தோறும் மாற்றமடைகின்றனசமையல் முறையும், உணவில் கலக்கும் பொருட்களும் மாறி வருகின்றன. எனவே உடலில் உருவாகும், தேங்கும் கழிவுகளின் தன்மையும் மாறிக் கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் 

ஒரு மனித உடலில் இருக்கும் கிருமி, இன்னொரு மனித உடலில் தோன்றும் கிருமியை விட வேறுபட்டதாக இருக்கும்.


இன்னும் சில வருடங்களில் இரு கிருமிகள் ஒரே தோற்றத்தில் இல்லாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். இப்படி சிக்கல்கள் வருமென்பதால் தான் கிருமிகளை வகைகளாகவும், குடும்பங்களாகவும் பிரித்து வைத்திருக்

கிறார்கள். ஏதாவது ஒரு புதிய கிருமி உருவாகி விட்டால்

 “இது இந்த வகை, அந்த குடும்பம்” 

என்று எளிமையாகச் சொல்லி விடலாம்.


ஆக, கிருமிகள் குறித்த எல்லா வகை ஆய்வுகளும் கிருமிகள் வெளியில் இருந்து மனித உடலிற்குள் நுழையும் எதிரிகள் என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்

படுகின்றன. அடிப்படையிலேயே சிக்கல் இருப்பதால் கிருமிகல் குறித்த சரியான ஆய்வுகள் இக்காலத்தில் செய்யப்படுவ

தில்லை


கிருமிகளின் தோற்றத்தை, விளக்கத்தை வெறுமனே செத்துப்போன ஒரு நாயின் உடலை வைத்து மட்டும் சொன்னால் போதுமா? 

அதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் தேவைதானே? வாருங்கள்... 


கிருமிகள் குறித்த ஆய்வுகளுக்குள் செல்வோம்.


மேலும்

நாளை பார்க்கலாமா...


நன்றி 

 அக்குபங்சர் மருத்துவர் 

அ.உமர் பாரூக் 

M.Acu, M.Sc(Psy), D.Litt,


அருள்நிதி 

வேதசிவா


வாழ்க வளமுடன்

[7:46 pm, 16/10/2020] +91 98404 84383: மனநிறைவும்

மகிழ்ச்சியும் 

வேண்டுமென்றால்


"எதிர்பார்ப்பதை விட்டு விட்டால் ஏமாற்றமே இருக்காது. மகிழ்ச்சி

யின்மைக்கும் முகம் சுழிப்பதற்கும் என்ன காரணம் என்றால் எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றம் தான். அது எப்படி வருகிறது எனில் கற்பனையாக எப்பொழுதுமே ஏதாவது ஒன்றை எதிபார்க்கிறோம். எனக்கு இப்படி வர வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையான எதிபார்ப்புகள் இல்லாமல், எப்பொழுதுமே றனநமக்குக் கிடைக்கிறது எல்லாம் நாம் செய்ததினுடைய செயல் மனமவிளைவாகத்தான் கிடைக்கிறது. ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து பிறருக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று நீங்கள் யோசித்துச் செய்ய ஆரம்பித்தீர்

களேயானால், 

பல பேருடைய நட்பையும் வலுப்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய மனத்தின் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளலாம். பிறருக்கு மனப்பூர்வமாக எந்த அளவு உதவி செய்கிறோமோ அத்தனை அளவு…

No comments:

Post a Comment