Wednesday, 30 September 2020

MARUTHU PANDIAR SERVICE TO CITIZENS - WATER CANAL

 



MARUTHU PANDIAR SERVICE 

TO CITIZENS - WATER CANAL 

தாகம் தீர்த்தவருக்கு மருது பாண்டியர் செய்த மரியாதை... தொல்லியல் எச்சங்கள் சொல்லும் கதை!


அருண் சின்னதுரை

ஈ.ஜெ.நந்தகுமார்

மருது பாண்டியர் கட்டிய கல் மண்டபம்

மருது பாண்டியர் கட்டிய கல் மண்டபம்

மருது பாண்டியர் கொல்லங்குடி ஊருக்குக் குடிதண்ணீர் ஊரணியை வெட்டித் தந்ததோடு கல்மண்டபமும் கட்டி சிறப்பித்தனர்.


சிவகங்கை மாவட்டத்தில் நீர்வளம் பெரிதாக இல்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பொழியும் மழைநீரை கிராமங்கள் தோறும் குளம், கண்மாய்கள் வெட்டி பக்குவமாய் சேமித்து நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். மேலும் கண்மாய் குளங்களைப் பெருமைபடுத்த பல்வேறு கோயில்களும், மடைக்கல்வெட்டுகளும், குளங்களின் சிறப்பு சொல்லும் தூண்கள் மற்றும் கல்வெட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு சான்றாகத்தான் பல்வேறு தொல்லியல் எச்சங்களும் கீழடியை போல் பல இடங்களில் கிடைத்து வருகின்றன.


மருது பாண்டியர் வெட்டிய ஊரணி

மருது பாண்டியர் வெட்டிய ஊரணி

இந்நிலையில் மருதிருவர் எனப் போற்றப்படும் மருதுபாண்டியர் வெட்டிய வளமான ஊரணிக்குச் சாட்சியாக கல் மண்டபங்கள் பொலிவாக காட்சியளிக்கின்றன. இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் புலவர் கா.காளிராசா தெரிவிக்கையில், "சிவகங்கை மாவட்டம் கட்டுமானம் மற்றும் நீர் ஆதாரங்களை வலுப்படுத்துவதில் ஆரம்பக் காலகட்டத்திலிருந்து சிறப்பாக விளங்கியுள்ளது.




சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோயில் கோபுரம் போன்றவை முதன்மையானவை. இந்தக் கோபுரத்திற்காக மருதிருவர் இன்னுயிர் நீத்தமை அனைவரும் அறிந்ததே! சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் காளையார் கோயில் போரில் 1772ல் இறந்ததால் அவர் நினைவாக காளையார்கோயில் சிவன் கோயிலில் 152 1/2 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தை மருதுபாண்டியர் அமைத்தனர்.


நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம்

கோபுரம் கட்டுமானப்பணிக்கு மானாமதுரையில் இருந்து காளையார் கோயிலுக்கு மக்கள் வரிசையாக நின்று கைமாற்றி செங்கற்களை கொண்டு வந்துள்ளனர். அப்பணியின்போது கொல்லங்குடி புதிதாக உருவான ஊராக இருந்ததால் குடிநீர் ஊரணி வசதியில்லை. கொல்லங்குடி பகுதியில் குருகாடி பட்டியை சேர்ந்த மொட்டையன் சாமி என்பவர் இறைத்தொண்டாக தண்ணீர் பந்தல் வைத்திருந்தார். கோபுரம் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களுக்கும், தாகம் தீர்க்க தண்ணீர் வேண்டுவோருக்கும் தண்ணீரைச் சுமந்து வந்து வழங்கி தாகம் தீர்த்துள்ளார். இச்செய்தி மருதிருவர் காதுக்குக் கிடைக்க அவரைக் காண வந்துள்ளனர்.

.



ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த மொட்டையன் சாமி மருது சகோதரர்கள் தன்னைக் காண வரும் செய்தியை அறிந்து அச்சப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடந்த சம்பவம் வேறு. வரிசையாக மக்கள் செங்கற்கற்களை கை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் மொட்டையன் சாமியை மருது சகோதரர்கள் கண்டு மக்கள் தொண்டை மகேசன் தொண்டாக செய்த அவரை பெருமை செய்யும் விதமாக உமக்குக் கொடையாக என்ன வேண்டும் எனக் கேட்க கொல்லங்குடிக்கு குடிநீர் ஊரணி வெட்டித் தரக் கேட்டுள்ளார்.


மருது பாண்டியர்   கட்டிய கல் மண்படபம்

மருது பாண்டியர் கட்டிய கல் மண்படபம்

அதனால் மருது சகோதரர்கள் கல்மண்டபமும் ஊரணியும் அமைத்துத் தந்தனர். கொல்லங்குடி ஊருக்கு குடிதண்ணீர் ஊரணியை வெட்டித் தந்ததோடு கொல்லங்குடியிலும் மொட்டயன் சாமி பிறந்த குருகாடிப்பட்டியிலும் அவருக்குப் பெருமை செய்யும் விதமாக கல் மண்டபங்களைக் கட்டி வைத்ததோடு நிலபுலங்களை வழங்கிச் சிறப்பித்தனர். இன்றும் இந்நிகழ்வின் சாட்சியாக கொல்லங்குடியிலும் குருகாடிப்பட்டியிலும் மண்டபங்கள் இருப்பதோடு கொல்லங்குடி குடிநீர் ஊரணி மருது ஊரணி என அழைக்கப்படுகிறது. பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் விவர நூலில் இச்செய்தி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கல்மண்டபங்களை மொட்டையன் சாமி வழித்தோன்றல்கள் இன்றும் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்" என்றார்.


விகடன் பரிந்துரைக்கும் மற்ற கட்டுரைகள்...


.

No comments:

Post a Comment