Sunday, 27 September 2020

K.T.RUKMANI ,FIRST BIKE RIDER ,FIRST SMOKER , FIRST DOUBLE BRAID IN TAMIL CINEMA

 


K.T.RUKMANI ,FIRST BIKE RIDER ,FIRST SMOKER , FIRST DOUBLE BRAID  IN TAMIL CINEMA


கே .டி .ருக்மணி 


அன்றைய இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக, ‘பாரிஸ் பியூட்டி’ என்று வர்ணிக்கப்பட்டவர் கே .டி .ருக்மணி  பத்து வயதில் ருக்மணிக்குக் கலைப்பித்து ஆரம்பித்தது அம்மாவிடமிருந்து. தாயோடு விடாப்பிடியாக நாடகம் பார்க்கத் தவறாமல் சென்றார். மேடையில் ஆடப்பட்ட நாட்டியங்கள் ருக்மணியையும் அறியாமல் அவருக்குள் குதிபோட்டன. மறுநாள் அவற்றை அப்படியே ஆடிக் காண்பித்தார். வீடு வியப்பில் ஆழ்ந்தது.


ஊமைப் படங்கள் உருவாகத் தொடங்கியிருந்த காலகட்டம். ருக்மணி சினிமா நடிகை ஆனார். அவரது முதல் மவுனச் சித்திரம் ‘பேயும் பெண்மணியும்’. டைரக்டர் ஆர். பிரகாசம் அவருக்கு வழங்கிய முதல் வெளிச்சம். அடுத்து இம்பீரியல் ஸ்டுடியோவின் ‘பாமா விஜயம்’. படம் வெளியான நான்காவது நாளில் ருக்மணிக்கு வெள்ளிக் குத்துவிளக்கு பரிசாகக் கிடைத்தது. ‘டெவில் அண்ட் தி டான்சர்’ என்கிற ஆங்கில சினிமாவிலும் ருக்மணி நடித்தார். ராஜா சாண்டோ இயக்கிய ‘விப்ரநாராயணா’, மற்றும் சி.வி. ராமனின் இயக்கத்தில் ‘விஷ்ணு லீலா’ ஆகிய மவுனச் சித்திரங்களிலும் ருக்மணி தோன்றினார்.

தமிழின் முதல் முழு நீள ஆக்‌ஷன் சினிமா ‘மின்னல் கொடி’ ஒளிபெறத் தொடங்கியது.தமிழ் சினிமாவில் கதாநாயகியொருவர் முதல்முறையாக இரட்டை ஜடை போட்டுக்கொண்டு வந்து நடித்த முதல் படமும் அதுவாக இருந்தது.


மின்னல்கொடியைத் தொடர்ந்து ஆக்‌ஷன் ஹீரோயின் வாய்ப்புகள் அவரைத் துரத்தின. கே .டி .ருக்மணி  தமிழ் சினிமாவின் முதல் ‘ஆக்‌ஷன் ஹீரோயின்’ என்ற அழியாப் புகழைப் பெற்றார். கே .டி .ருக்மணி 1939  இல் நடித்த படம் வீரரமணி.இந்தப்படத்தில் மோட்டார் பைக் ஒட்டி வருவதுடன் ,சுருள் சுருளாய் புகையை 

விட்டு ரசிகர் உள்ளங்களை கொள்ளைகொண்டு சரித்திரத்திலும் இடம் பிடித்து விட்டார் விஜயலலிதா, ஜோதிலட்சுமி, விஜயசாந்தி, அனுஷ்கா ஆகியோருக்கு அவரே முன் மாதிரி.


கே .டி .ருக்மணி  தன் முத்திரையை அழுந்தப் பதித்த மற்ற படங்களில் ‘தூக்குத் தூக்கி’, ‘மனோகரா’, ‘மேனகா’, ‘சாமூண்டீஸ்வரி’, ‘ஜெயக்கொடி’, ‘பஸ்மாசர மோகினி’, ‘வீரரமணி’, ‘சாந்தா’, ‘திருமங்கை ஆழ்வார்’ ஆகியவை அடங்கும்.


கே .டி .ருக்மணி யின் பூர்விகமும் குடும்பப் பின்னணியும் பதிவாகாமலேயே போய்விட்டன.


தி இந்து தமிழ் நாளிதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.


நன்றி: http://tamil.thehindu.com/cinema/cinema-others/article8256908.ece


K.T.Rukmani_2_2743209g



.

No comments:

Post a Comment