Wednesday, 26 August 2020

MAA.RAA , DIALOGUE WRITER DIED 2014 AUGUST 26



MAA.RAA  , DIALOGUE WRITER  
DIED 2014 AUGUST 26


மா. ரா. என பிரபலமாக அறியப்பட்ட மா. ராமச்சந்திரன் ஒரு எழுத்தாளரும், திரைப்பட கதை வசனகர்த்தாவும், இயக்குநரும், தயாரிப்பாளருமாவார்.

தொழில் வாழ்க்கை
சாண்டோ சின்னப்பா தேவருக்குச் சொந்தமான தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கதை இலாகாவில் பணியாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். முன்னணி நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்றோர் நடித்த படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவற்றுள் என் அண்ணன், பலே பாண்டியா, ராமன் தேடிய சீதை என்பன குறிப்பிடத்தக்கவை.[1]

கல்யாண மண்டபம் (1965)[2] என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். அப்பா அம்மா (1974) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.


சென்னை இராயப்பேட்டையில் ஒரு பதிப்பகத்தை நடத்தி நூல்களை வெளியிட்டார்.

இறப்பு
உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 81-ஆவது வயதில் சென்னை வேளச்சேரியில் 2014 ஆகஸ்ட் 26 செவ்வாய்க்கிழமை காலமானார்.[

திரைப்பட வசனகர்த்தா மா.ரா. (வயது 81) மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) காலமானார்.

மா.ரா. என்று அழைக்கப்பட்ட மா.ராமச்சந்திரன், சிறிது காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார்.

தேவர் பிலிம்ஸின் கதை இலாகாவில் முக்கியப் பங்கு வகித்த மா.ரா. - எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர். "என் கடமை', "தாய் மீது சத்தியம்', "பலே பாண்டியா', "என் அண்ணன்', "ராமன் தேடிய சீதை' உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் மா.ரா..

இவருக்கு மனைவி கஸ்தூரி, 3 மகன்கள், 1 மகள் ஆகியோர் உள்ளனர். சென்னை வேளச்சேரி டாக்டர் சீதாபதி நகரில் உள்ள இல்லத்தில் மா.ரா.வின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (ஆக.28) காலை நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment