Saturday, 25 July 2020

SRILANKA ,VELIKADAI JAIL MURDERS 1983 JULY 25 - 28



SRILANKA ,VELIKADAI JAIL MURDERS 1983 JULY 25 - 28




வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.[1]. இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.[2]
வரலாறு
இப்படுகொலை நிகழ்வானது இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு நாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.[3].

வெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் A3 B3 C3 மற்றும் D3 என்பன சிறைச்சாலையில் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3 மற்றும் D3 இல் இருந்த அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாவர். A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள். இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.[4]

வெலிக்கடைக் கொலைச் சம்பவங்களுக்கு முந்தைய சில நாட்களில் தீவ்யன''
போன்ற சிங்களப் பத்திரிகைகளில் தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளில்
விசேஷமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டதன்
மூலமும் தமிழ்க் கைதிகளுக்கு எதிராகத் ..துவேஷம் சிங்களக் கைதிகள் மத்தியில்
வளர்க்கப்பட்டது .வெலிக்கடைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சிங்களக்
கைதிக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
இவையெல்லாம்,வெலிக்கடைப் படுகொலைகள் முன்னரே திட்டமிடப்பட்டு 
நிறைவேற்றப்பட்ட சதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சுட்டிக்காட்டுகின்றன .
வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம்

பின்வருமாறு :
தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல் ,
குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன் ,
ஜெகன் என்று அழைக்கப்படும் .கணேஷானந்தன்
ஜெகநாதன் ,
தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம்,
சிவபாதம்
மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம்
சிவபாதம் ,
செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம்
நடேசுதாசன் ,
அருமைநாயகம் என்றும்சின்னராஜா என்றும்
அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம்,
அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம்
அன்பழகன் ,
ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன்
பாலசுப்பிரமணியம் ,
சுரேஷ்
மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார்,
சின்னதுரை அருந்தவராசா,
தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம்
தேவகுமார் ,
மயில்வாகனம்
சின்னையா ,
சித்திரவேல்
சிவானந்தராஜா,
கணபதிப்பிள்ளை மயில்வாகனம்,
தம்பு கந்தையா,
சின்னப்பு உதயசீலன்,
கணேஷ் என்றும் கணேஷ்வரன்என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்,
கிருஷ்ணபிள்ளை நாகராஜா,
கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம் ,
அம்பலம்
சுதாகரன்,
இராமலிங்கம்
பாலச்சந்திரன்,
பசுபதி மகேந்திரன்,
கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன்
தில்லைநாதன் ,
குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம் ,
மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார் ,
ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம்
சிவகுமார் ,
ராஜன்
கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்,
கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார்,
யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன் ,
அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன்
அமிர்தலிங்கம் ,
அந்தோணிப் பிள்ளை உதயகுமார்,
அழகராசா ராஜன்,
வேலுப்பிள்ளை சந்திரகுமார்,
சாந்தன் என்று அழைக்கப்படும்சிற்றம்பலம்
சாந்தகுமார் முதலிய 35 பேர்.

இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு :
1. தெய்வநாயகம் பாஸ்கரன்
 2.பொன்னம்பலம் தேவகுமார் 
3.பொன்னையா துரைராசா
 4.குத்துக்குமார் ஸ்ரீகுமார் 
5. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம்
6.செல்லச்சாமி குமார்
7.கந்தசாமி சர்வேஸ்வரன்
8.அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை 
9. சிவபாலம் நீதிராஜா 
10. ஞானமுத்து நவரத்தின சிங்கம் 
11. கந்தையா ராஜேந்திரம்
12. டாக்டர் ராஜசுந்தரம் 
13. சோமசுந்தரம் மனோரஞ்சன் 
14. ஆறுமுகம் சேயோன் 
15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்
16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம்
17. செல்லப்பா இராஜரட்னம்
18. .குமாரசாமி கணேசலிங்கன்

No comments:

Post a Comment