Wednesday, 22 July 2020

MUTHULAKSHMI REDDY ,ACTIVIST BORN 1886 JULY 30 - 1968 JULY 22



MUTHULAKSHMI REDDY ,ACTIVIST 
BORN 1886 JULY 30 - 1968 JULY 22



.முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.
பிறப்பு
இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.

சொந்த வாழ்க்கை
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.

இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 4.2.1904 அன்று விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, 1912-ல் நாட்டின் முதல் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.

திருமணத்தில் ஆர்வம் இல்லை. [சான்று தேவை]அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவர் டி. சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் - தந்தையைப் போல ஒரு மருத்துவர். புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.[1]

தமிழ்ப் பணிகள்
இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தருமம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.

சமூகப்பணி
1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.
அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.
சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.
விருதுகள்
முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.

மறைவு
முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார். [2]




தேவதாசி சட்டம் கொண்டுவர சட்டமன்றத்தில் உறுதிகுரல் எழுப்பிய முத்துலட்சுமி ரெட்டி! #DrMuthulakshmiReddy

பண்பாடு என்பதே காலம்தோறும் மாறிவருவதுதான். ஆனாலும், அதன் பெரும்பாலான கூறுகள், பெண்களை ஒடுக்கும் விதத்தில் இருப்பது கண்கூடு. உலகம் தழுவிய அளவிலும் இதேபோன்ற முறைகளே இருப்பதைப் பார்க்க முடியும். இதை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் போராடியுள்ளனர்; போராடி வருகின்றனர். கணவன் இறந்ததும், அவனை எரிக்கும் சிதையில் மனைவியையும் உயிரோடு எரிக்கும் உடன்கட்டை ஏறும் கொடும் வழக்கம், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்டோரின் பெரும் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அதேபோல, பெண்களைப் பொட்டுக்கட்டி 'தேவதாசி' எனக் கோயிலுக்கு அர்ப்பணிக்கும் பழக்கம் நிலவிவந்தது. பெண்களை அடிமைப்படுத்தும் இந்த முறையை மாற்ற, தமிழகத்தில் பெரியார், மூவலூர் ராமாமிருதம் அம்மையார் உள்ளிட்டோர் போராடினார்கள். இறுதியாகத் 'தேவதாசி ஒழிப்புச் சட்டம்' நிறைவேறியது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.


1886 ஜூலை 30-ம் நாள், புதுக்கோட்டையில் பிறந்தவர், முத்துலட்சுமி. தந்தை பிரபல வழக்கறிஞராக இருந்தாலும், பெண்கள் கல்வி கற்பது அபூர்வமான காலம் அது. ஆனால், முத்துலட்சுமிக்கு படிப்பின் மீது பெரும் ஆர்வம். ஆனால், பள்ளிக் கல்வி முடிந்ததுமே திருமணம் செய்துவைக்கும் முயற்சி நடந்தது. இவர் கல்லூரிக்குச் செல்வதில் குறியாக இருந்தார். குடும்பத்தினர் இவரின் மேற்கல்வியை மறுத்ததற்கு முக்கியக் காரணம், புதுக்கோட்டைக் கல்லூரியில் பெண்கள் யாரும் வருவதில்லை. இன்னொரு காரணம், பெற்றோரிடம் பெரிய அளவில் பொருளாதார வசதியில்லை.

முத்துலட்சுமி தளர்ந்துவிடவில்லை. புதுக்கோடை மகாராஜாவின் உதவியோடு கல்லூரியையும் மருத்துவப் படிப்பையும் முடித்தார். ஒரு வரியில் இதைச் சொல்லிவிட்டாலும், அந்தக் காலகட்டத்தில் இது மாபெரும் விஷயம். முத்துலட்சுமிதான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்றால், அதன் பின்புலம் புரியும். கல்வி அறிவுப் பெறுகையில் அடிமைப்பட்டிருக்கும் தாய்நாட்டைப் பற்றியும் கவலைகொண்டார். சரோஜினி நாயுடு, பாரதியாருடன் உரையாடும் தருணங்கள் இந்த உணர்வை இன்னும் மேலெழுப்பின.


28 வயதில் மருத்துவர் டி.சுந்தர ரெட்டியைச் சடங்குகளைத் தவிர்த்து திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய விருப்பங்களுக்குக் குறுக்கே நிற்கக்கூடாது என்ற நிபந்தனையுடனே மணமுடித்தார். 1926-ம் ஆண்டு பாரீஸில் நடந்த அகில உலகப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, 'ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடத்தப்பட வேண்டும்' என முழங்கினார். இதற்கு இடைப்பட்ட காலத்தில், நீதிக் கட்சியின் தலைவராக இருந்த பனகல் அரசரின் உதவியோடு, லண்டனுக்கு மேற்படிப்புக்குச் சென்றார். 1926-ம் ஆண்டு, பெண்களும் தேர்தலில் போட்டியிடும் உரிமை கிடைத்தது. சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். 

முத்துலட்சுமி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்ததன் மூலம், எண்ணற்றோரின் துயரங்கள் நீங்கின. பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், இருதாரத் தடைச் சட்டம்,, பால்ய விவாகத் தடை சட்டம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு அளப்பரியது. அவற்றைவிட குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, தேவதாசி ஒழிப்புச் சட்டம். இந்தச் சட்டம் வந்துவிடக் கூடாது எனச் சனாதானிகள் ஏராளமான குறுக்கு வேலைகளைச் செய்தனர். இந்தச் சட்டம் குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் எனச் சிலர் கூறிய யோசனைக்கு, தந்தை பெரியார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். 'குடியரசு' இதழில், 'ஒரு கணமும் எந்தக் காரணத்துக்காகவும் தாமதிக்கக்கூடாது' என உறுதிப்பட எழுதியிருந்தார்.


காலம் காலமாக நாம் பின்பற்றும் வழக்கத்தையும் பண்பாட்டையும் மாற்றக்கூடாது என்றும், தேவதாசி என்பது கடவுளுக்கே பணி செய்யும் அற்புத விஷயம் என்றும் சட்டடபையிலே சிலர் பேசி, இந்தச் சட்டத்தை நிறுத்த முயன்றனர். அதற்குத் தகுந்த பதிலடியாக, 'கடவுளுக்கே செய்யும் பணி என்றால், இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்களைச் செய்ய சொல்லலாமே' என்றார் முத்துலட்சுமி. 

இந்தப் பதில் பலரையும் மெளனத்தில் ஆழ்த்தியது. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. அதுவரை சொல்லொண்ணா இன்னல்களில் தவித்த தேவதாசிப் பெண்கள், விடுதலைக் காற்றைச் சுவாதித்தனர். சமூக நீதி வரலாற்றில் முத்துலட்சுமி ரெட்டிக்குச் சிறப்பான இடத்தையும் புகழையும் வழங்கியது இந்தச் சம்பவம். அதன்பின், பல்வேறு பதவிகளை வகித்தார். சுயமரியாதை இயக்க மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று உரை நிகழ்த்தினார். சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை தேவை என்பதை வலியுறுத்தினார். இவரின் தொடர் முயற்சியால் 1952-ம் ஆண்டு, அடையாறு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அவரின் சாதனைகளின் பட்டியல் மிக நீளமானது.


1968 ஜூலை 22, முத்துலட்சுமி இயற்கை எய்தினார்.

பெண்கள் கையில் அதிகாரம் கிடைக்கும்போதே, சமூக நீதிக்கான பயணம் விரைவுபடுத்தப்படுகிறது என்பதற்கு முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை ஓர் உதாரணம். 1913-ம் ஆண்டில், அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்பே சடங்கு மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இவரின் பெயரில், 'டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு மண நிதி உதவித் திட்டம்' எனும் பெயரில், கலப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு நிதி அளிக்கப்படுகிறது. முத்துலட்சுமி ரெட்டிக்கு மத்திய அரசு, 'பத்ம பூஷண்' விருது அளித்தது. 



சமூகப் போராளி டாக்டர்
                 #முத்துலட்சுமி_ரெட்டி.
         பிறந்தநாள் இன்று - சூலை 30.
~~~~~~~~
   
இந்தியாவின் #முதல்பெண்டாக்டர் #முத்துலட்சுமிரெட்டி
அனாதைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக சென்னை அடையாறில் #அவ்வை_இல்லத்தைத் தொடங்கினார். தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்த பெருமை இவரையே சாரும்.

இன்று (ஜூலை 30-ந் தேதி) இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்த அவர், திண்ணை பள்ளியில் படித்தார். பெண் கல்விக்கு எதிரான அந்த காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அவருடைய தாயார் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்தார். இதனை நேரில் பார்த்ததால் எப்படியும் மருத்துவர் ஆக வேண்டும். நம்முடைய தாயை போன்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே அவருக்குள் ஆணிவேராக வளர்ந்தது.


1907-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த இவர், படிப்பில் சிறந்து விளங்கியதால் பல்வேறு சான்றிதழ்களையும், தங்க பதக்கங்களையும் பெற்றார்.

கர்னல் ஜிப்போர்டு என்ற அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர், தன்னுடைய வகுப்பில் மாணவிகளை உட்கார அனுமதிப்பது இல்லை. ஆனால் அறுவை சிகிச்சை பாடத்தில் முத்துலட்சுமி #தங்கப்பதக்கம் பெற்ற பிறகு, மனம் மாறிய பேராசிரியர், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் தனது வகுப்பில் பெண்களும் உட்காரலாம் என்று கூறினார்.

1912-ம் ஆண்டு முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்றபோது, ‘சென்னை மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது பொன்னான நாள்’ என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு. பின்னர் எழும்பூர் மருத்துவமனையில் #முதல்_பெண் #மருத்துவராக பணியில் சேர்ந்தார். லண்டனில் உள்ள செல்சியா மருத்துவமனையில் தாய்சேய் மருத்துவம் மற்றும் புற்றுநோய் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார்.

1926-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும், 1933-ம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோவிலும் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடுகளில் இந்திய பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்திய மாதர் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் பணியாற்றி, அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

பின்னர் 1925-ம் ஆண்டு சட்டசபை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் சில புரட்சிகரமான சட்டங்களை நிறைவேற்ற அரும்பாடுபட்டார். அவற்றில் #தேவதாசி #முறைஒழிப்பு, #இருதாரதடைச்சட்டம், #பெண்களுக்கானசொத்துரிமை வழங்கும் சட்டம், #பால்யவிவாக #தடைச்சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆணாதிக்கமிக்க அந்த காலத்தில் தேவதாசி ஒழிப்பு சட்டத்திற்காக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். பின்னர் 1947-ம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது அந்த சட்டம் அமலுக்கு வந்தது.

அனாதைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை தொடங்கினார். புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கென நிதி திரட்டி 1952-ம் ஆண்டு அடையாறில் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பெற்று 1954-ல் தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்த பெருமை இவரையே சாரும். 1956-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 1968-ம் ஆண்டு தனது 81-வது வயதில் காலமானார்.

இவரது நினைவைப் பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசால்.                   ‘#டாக்டர்முத்துலட்சுமிமகப்பேறு_நிதி #உதவித்திட்டம்’ ஏழை கர்ப்பிணிகளுக்காக தொடங்கப்பட்டது. தற்போது, 2018-ம் ஆண்டு முதல் பேறுகால உதவியாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி பிறந்தநாளான ஜூலை 30-ந் தேதியை அரசு மருத்துவமனைகளில் ‘மருத்துவமனை தினமாக’ கொண்டாட தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் பல்வேறு மருத்துவ சேவைகள், சாதனைகள் மற்றும் வளர்ச்சிகள் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

‘#பட்டங்கள்ஆள்வதும்சட்டங்கள் #செய்வதும்
#பாரினில்பெண்கள்நடத்த_வந்தோம்
#எட்டுமறிவினில்ஆணுக்கிங்கேபெண்
#இளைப்பில்லைகாணென்றுகும்மியடி

என்ற மகாகவி பாரதியின் வாக்குக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் #டாக்டர் #முத்துலட்சுமி_ரெட்டி ஆவார். வாழ்க்கையில் எத்திசையில் திரும்பினாலும் தொல்லையும் துயரமும் உங்களுக்கு வந்தாலும் டாக்டர் முத்துலட்சுமியை நினைத்து கொள்ளுங்கள். துணிவும் தன்னம்பிக்கையும் உங்களுக்குத் தானாக வரும்.

#மருத்துவர்முத்துலட்சுமிரெட்டி

புகழ் என்றும் வாழ்க.
.🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தவிட்டுபாளையம் அந்தியூர் பெரியார் மாவட்டம்..🙏🙏🙏

No comments:

Post a Comment