Friday, 29 May 2020

KARTHICK I.P.S , HOME GARDENING


KARTHICK  I.P.S , HOME GARDENING



.திடீரென ஒருநாள் கார்த்திக்கின் வீட்டுக்கு நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார், மாநில வேளாண்துறை அமைச்சர் சுனில்குமார். அமைச்சரின் இந்த `வேற லெவல்’ பாராட்டால் மாநிலம் முழுக்க பிரபலமானார் கார்த்திக் ஐ.பி.எஸ்.

கொரோனா லாக்டெளன் பெரும் இன்னல்களுடன் அவசியமும் அத்தியாவசியமுமான சில பாடங்களையும் சேர்த்தே நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. அதில் முக்கியமானது, மீண்டும் இயற்கையை நோக்கிய பயணம். முடிந்தவரை வீட்டுத் தேவைக்கான காய்கறிகளை வீட்டுத்தோட்டத்தில் அல்லது மாடித்தோட்டத்தில் உற்பத்தி செய்துகொள்வதே சிறந்தது என்ற சிந்தனை தற்போது பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதே சிந்தனை, ஐ.பி.எஸ் அதிகாரி கார்த்திக் என்பவர் மூலமாகக் கேரளா மாநிலம் முழுவதும் தற்போது பரவியிருக்கிறது. இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கார்த்திக் ஐ.பி.எஸ்
கார்த்திக் ஐ.பி.எஸ்
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக (எஸ்.பி) பணியாற்றும் கார்த்திக், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இயற்கை விவசாயத்தின்மீது அதீத ஆர்வம் கொண்டவர், தான் பணிமாறுதலாகிச் செல்லும் அலுவலகக் குடியிருப்புகளில் தவறாமல் வீட்டுத்தோட்டம் அமைப்பது வழக்கம். அதன் மூலம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைத் தோட்டத்திலேயே உற்பத்தி செய்துகொள்வார்.


இதே நடைமுறைதான் தற்போது இவர் வசிக்கும் எர்ணாகுளம் அலுவலகக் குடியிருப்பிலும் தொடர்கிறது. இவரின் வீட்டுத்தோட்டத்தில் அபரிமிதமாக விளையும் காய்கறிகளால் கார்த்திக் குடும்பம் மட்டுமன்றி, அவர் குடியிருப்பிலுள்ள பணியாளர்கள் சிலரின் குடும்பங்களும் பயன்பெறுகின்றன. இந்த நிலையில், லாக்டெளனால் மக்கள் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கச் சிரமப்படுவதை அறிந்தார் கார்த்திக்.

வீட்டுத்தோட்டத்தில் மகனுடன் கார்த்திக் ஐ.பி.எஸ்
வீட்டுத்தோட்டத்தில் மகனுடன் கார்த்திக் ஐ.பி.எஸ்
தனது வீட்டுத்தோட்டத்தைப் போட்டோ எடுத்து `கிச்சன் கார்டன் சேலஞ்ச்’ என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர், தோட்டம் வைத்திருக்கும் பலரையும் இதேபோல போட்டோ எடுத்துப் பதிவிடுமாறும் வேண்டுகோள்விடுத்தார். ஆயிரக்கணக்கானோர் இதேபோல பதிவிட்டனர். `போதிய இடமும் அதைவிட ஆர்வமும் எங்களுக்கு அதிகம் இருக்கிறது. ஆனால், விதை கைவசம் இல்லை; எங்களிடம் தோட்டம் அமைக்க பை மற்றும் மணல் இல்லை’ என்ற கமெட்ன்ஸும் அதிகம் வந்துள்ளன. காவல்துறையினர் மூலம் அவர்களின் வீட்டுக்கே விதைகளும், பை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும் சென்றுசேர வழிவகை செய்திருக்கிறார் கார்த்திக். இதனால் கேரளாவில் புதிதாகப் பல ஆயிரம் பேர் வீட்டுத் தோட்டம் அமைத்து, காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்கின்றனர்.


ஃபேஸ்புக்கில் கார்த்திக் விதைத்த சிறு முயற்சி, இன்று பெரு விருட்சமாகப் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் பெரிய பேசுபொருளாக மாறி, பலரின் லைக்ஸையும் பாராட்டுகளையும் பெற்றுவருகிறார் கார்த்திக். எனவே, இவரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் அம்மாநில வேளாண்துறை அமைச்சர் சுனில்குமார். கைகுலுக்கி கார்த்திக்கை மனதாரப் பாராட்டிய அமைச்சர், இந்த முயற்சியை மாநிலம் முழுக்க விரிவுபடுத்தச் சொல்லி டி.ஜி.பி மூலமாக உத்தரவிட்டிருக்கிறார்.
கார்த்திக் ஐ.பி.எஸ் வீட்டுக்கு வருகைதந்த அமைச்சர் சுனில்குமார்
கார்த்திக் ஐ.பி.எஸ் வீட்டுக்கு வருகைதந்த அமைச்சர் சுனில்குமார்
.

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு... விவசாயத்தில் கலக்கும் `இன்ஜினீயரிங்' சகோதரர்கள்!
ரம்மியமான ஒரு மாலை வேளையில் வீட்டுத் தோட்டப் பராமரிப்பில் இருந்த கார்த்திக், இயற்கை விவசாய ஆர்வம் முதல் கிச்சன் கார்டன் சேலஞ்ச் வரை விரிவாகப் பேசினார்.


"திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் கிராமம் என் பூர்வீகம். நடுத்தர விவசாயக் குடும்பம். அங்கு விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பும் நடக்கிறது. மாட்டுச்சாணம், தொழுவுரம் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தைத்தான் என் பெற்றோர் இப்போதுவரை கடைப்பிடிக்கிறார்கள். பள்ளிப் படிப்பு முடிக்கும்வரை பெற்றோருக்கு விவசாய வேலைகளில் உதவியாக இருந்தேன். கல்லூரி, வேலை எனச் சென்னையில் சில ஆண்டுகள் இருந்தேன். அப்போதும் விடுமுறைக்கு ஊருக்குப் போகும்போதெல்லாம் தவறாமல் விவசாய வேலைகளைச் செய்வேன். பின்னர் ஐ.பி.எஸ் பணி கிடைத்து கேரளாவில் வசித்தாலும், அவ்வப்போது சொந்த ஊர் சென்று விவசாய வேலைகளைக் கவனிப்பேன். எனவே, காவல்துறை அதிகாரி என்பதைவிட விவசாயி என்பதில் எனக்குக் கூடுதல் பெருமை.

தரையில் 300-க்கும் அதிகமான பைகளில் செடி வளர்ப்பது உட்பட மொத்தம் ஆறு சென்ட் இடத்தில் வீட்டுத்தோட்டம் அமைத்திருக்கிறார் கார்த்திக். இதில் 50-க்கும் மேற்பட்ட பயிர்களை வளர்க்கிறார்.
கேரளாவில் எனக்கு எங்கு பணிமாறுதல் கிடைத்தாலும், அலுவலகக் குடியிருப்பில் வீட்டுத்தோட்டம் அமைப்பது வழக்கம். இதனால் நமக்கான காய்கறிகளை ஆரோக்கியமான முறையில் நாமே உற்பத்தி செய்துகொள்ளும் மனநிறைவுடன், இயற்கை சூழலில் வாழும் திருப்தியும் கிடைக்கிறது. கடந்த ஆண்டு எர்ணாகுளம் மாவட்ட எஸ்.பி-யாக மாறுதலாகி இங்கு வந்தேன். இந்த வீட்டைச் சுற்றி 10 சென்ட் இடம் காலியாக இருந்தது. உடனே வேளாண் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பல்வேறு விதைகளை வாங்கினேன்.


இந்த நிலம் அதிக கற்கள் உடையதாகவும் கடினமானதாகவும் இருந்தது. செம்மண் கொட்டி முடிந்தவரை பயிர் செய்ய ஏற்ற நிலமாக மாற்றினேன். மீதமுள்ள இடத்தின்மீது பைகள் வைத்து செடிகள் வளர்க்க ஆரம்பித்தேன். அரைக்கீரை, சிறுக்கீரை, முடக்கத்தான், மணத்தக்காளி, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணி உள்ளிட்ட கீரைகள் இங்கு கிடைப்பதில்லை. அந்த விதைகளை ஊரிலிந்து என் பெற்றோர் கூரியரில் எனக்கு அனுப்பி வைத்தனர்” என்பவர், ஒரு மாதத்துக்குள் தோட்டத்தைத் தயார் செய்துள்ளார். தற்போது ஆறு சென்ட் நிலத்தில் வீட்டுத் தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.

வீட்டுத்தோட்டத்தில் மகனுடன் கார்த்திக் ஐ.பி.எஸ்
வீட்டுத்தோட்டத்தில் மகனுடன் கார்த்திக் ஐ.பி.எஸ்
தக்காளி, கத்தரி, பாகல், அவரை, வெங்காயம், பச்சைமிளகாய், முள்ளங்கி, முட்டைக்கோஸ், புடலை, பூசணி, பீர்க்கன், காராமணி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, கீரை வகைகள், மூலிகைச் செடிகள் மற்றும் பழவகை மரங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட பயிர்களை வீட்டில் வளர்க்கிறார் கார்த்திக். நிலத்திலும் 300-க்கும் அதிகமான பைகளிலும் செடிகளை வளர்க்கிறார். இதன் மூலம் வீட்டுத் தேவைக்கான காய்கறிகளில் 80 சதவிகிதம் இவரின் தோட்டத்தில் கிடைக்கிறது.

சென்னையில் பொறியியல் படிப்பை முடித்த கார்த்திக், தனியார் நிறுவனத்தில் ஓராண்டு பணியாற்றினார். ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆர்வத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாரானார். முதல் முயற்சியிலேயே வெற்றியுடன், கார்த்திக் விருப்பப்பட்டதுபோல ஐ.பி.எஸ் பணியும் கிடைத்தது. கேரளா மாநில கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாக, 2011-ம் ஆண்டு பணியைத் தொடங்கியிருக்கிறார்.
வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்

கிச்சன் கார்டன் சேலஞ்ச் குறித்துப் பேசுபவர், "சித்திரை 1-ம் தேதி நமக்குத் தமிழ் வருடப் பிறப்பு. அதே நாளில் இங்கு கேரளாவில் விஷூ பண்டிகை. காய்கறிகள் அதிகளவில் விளைந்திருந்ததால் அதை அக்கம்பக்கத்தினருக்கும் பகிர்ந்து கொடுத்தோம். வீட்டுத்தோட்டம் வைத்திருந்ததால் இது சாத்தியமானது. இதேவேளையில் லாக்டெளனால் பலர் வெளியில் சென்று காய்கறிகள் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, என் தோட்டத்தைப் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். நான் பதிவிட்டதுபோலவே, பலரும் `கிச்சன் கார்டன் சேலஞ்ச்’ என்ற வாசகத்துடன் அவர்களின் வீட்டுத்தோட்டப் போட்டோக்களைப் பகிர்ந்தனர்.

தோட்டம் அமைக்க ஆர்வம் இருந்தும், விதை மற்றும் பை இல்லாதவர்கள் அதுகுறித்தும் பதிவிட்டார்கள். அதில், எனது மாவட்டத்துக்குள் இருப்பவர்களின் முகவரி, செல் நம்பர் உள்ளிட்ட தகவல்களைப் பெற்றோம். அவர்களுக்கு உதவ வேளாண்துறை அதிகாரிகளிடம் விதை, பை உள்ளிட்ட இடுபொருள்களை வாங்கினோம். அந்தந்தப் பகுதியிலுள்ள காவல்துறையினர் ரோந்துப் பணிக்காகச் செல்லும்போது, ஃபேஸ்புக்கில் உதவிகேட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று விதை, பைகளைக் கொடுக்க ஏற்பாடுகள் செய்தோம். இந்த முறையில் 4,000-க்கும் அதிகமானோர் பயன்பெற்றனர். வேறு மாவட்ட மக்களுக்கு அந்தந்த மாவட்ட வேளாண் அதிகாரிகளின் மூலம் உதவி செய்தோம். இதனால் வீட்டுத்தோட்டம் அமைப்போரின் எண்ணிக்கை அதிகமானது. கிச்சன் கார்டன் சேலஞ்ச் மாநிலம் முழுக்க வைரலானது."

கார்த்திக் ஐ.பி.எஸ்
கார்த்திக் ஐ.பி.எஸ்
திடீரென ஒருநாள் கார்த்திக்கின் வீட்டுக்கு நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மாநில வேளாண்துறை அமைச்சர் சுனில்குமார். கார்த்திக்கின் இந்தச் செயலைப் பாராட்டிய அமைச்சர், வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க 100 பைகளுடன் பல்வேறு விதைகளையும் கொடுத்து ஊக்கப்படுத்தியிருக்கிறார். மேலும், சில பைகளில் அவரே செடிகளை நட்டு வைத்திருக்கிறார். பின்னர், இந்த முயற்சியை மாநிலம் முழுக்க விரிவுபடுத்தக் காவல்துறை டி.ஜி.பியிடம் கூறியவர், அதுதொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கினார். அமைச்சரின் இந்த `வேற லெவல்’ பாராட்டால் மாநிலம் முழுக்க பிரபலமானார், கார்த்திக். அதன் பிறகு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உட்பட பல பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கார்த்திக்கைப் பாராட்டியுள்ளனர்.

தனது தோட்டப் பராமரிப்பு குறித்துப் பேசும் கார்த்திக், "இங்கு அடிக்கடி மழைப்பொழிவு இருக்கும். வெப்பநிலையும் கட்டுக்குள்தான் இருக்கும். எனவே, சில தினங்களுக்கு ஒருமுறை செடிகளுக்குத் தண்ணீர் விட்டாலே போதுமானது. மண்புழு உரம் உள்ளிட்ட சில இயற்கை உரங்கள் என்னிடம் இருக்கின்றன. அதை மட்டும்தான் அவ்வப்போது செடிகளுக்கு இடுவேன். நோய்த் தாக்குதல் இருந்தால் வேப்பெண்ணெய்க் கரைசல் மட்டும் தெளிப்பேன். இதுதவிர வேறு எந்த மெனக்கெடலும் செய்வதில்லை.

பெருநகரம், நகரம், கிராமம் என மூன்று வகையான வாழ்க்கை முறையிலும் வாழ்ந்திருக்கிறேன். எல்லாவற்றையும்விட, கிராமத்து வாழ்க்கை முறைதான் சிறந்தது. பணிச்சூழலில் அந்த வாழ்க்கை முறை எனக்குச் சாத்தியமில்லை. எனவேதான், என் வீட்டிலேயே கிராமத்துச் சூழலை உருவாக்கிக்கொள்கிறேன்.
கார்த்திக் ஐ.பி.எஸ்
``எனக்கு ஊரடங்கு கவலை இல்லை!" - `ஜூப்ளி பாலு' வீட்டுத்தோட்டம்!
Also Read
``எனக்கு ஊரடங்கு கவலை இல்லை!" - `ஜூப்ளி பாலு' வீட்டுத்தோட்டம்!
தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது ஒதுக்கி செடிகளைப் பராமரிக்கிறேன். தவிர, என் மனைவியும் தோட்டத்தைப் பராமரிப்பார். 5 வயதாகும் எங்கள் மகனுக்கும் தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் உண்டு. பணிச்சூழல் தாண்டி, நமக்குத் தனிப்பட்ட பொழுதுபோக்கு விஷயங்கள் இருக்க வேண்டும். அதற்கு வீட்டுத் தோட்டம் உதவுகிறது.

முறையாகப் பராமரிப்பதால், எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே காய்கறிகளின் விளைச்சல் இருக்கிறது. எனது அலுவலகக் குடியிருப்பில் கேம்ப் அலுவலகமும் உள்ளது. இதில் சில பணியாளர்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். அவர்களுக்கும் காய்கறிகளைக் கொடுக்கிறோம். எனவே, காய்கறிகள் தேவைக்குப் பெரிய சிரமம் எதுவும் இருப்பதில்லை. நகர்ப்புறக் கடைகளில் விற்கப்படும் காய்கறிகள் வாரக்கணக்கில் வாடாமல் இருக்கும்.

வீட்டுத்தோட்டத்தில் மகனுடன் கார்த்திக் ஐ.பி.எஸ்
வீட்டுத்தோட்டத்தில் மகனுடன் கார்த்திக் ஐ.பி.எஸ்
ரசாயன உரத்தால் விளைவிக்கப்பட்டு, சீக்கிரம் வாடாமல் இருக்க ரசாயனக் கலவையில் முக்கி எடுக்கப்பட்ட அந்தக் காய்கறிகளைத்தான் பலரும் உட்கொள்கிறார்கள். அது உடல்நலனுக்குக் கெடுதல் என்பதால், ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் கிடைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து மக்கள் அதிகம் யோசிக்க வேண்டும்.

பெருநகரம், நகரம், கிராமம் என மூன்று வகையான வாழ்க்கை முறையிலும் வாழ்ந்திருக்கிறேன். எல்லாவற்றையும்விட கிராமத்து வாழ்க்கை முறைதான் சிறந்தது. பணிச்சூழலில் அந்த வாழ்க்கை முறை எனக்குச் சாத்தியமில்லை. எனவேதான், என் வீட்டிலேயே கிராமத்துச் சூழலை உருவாக்கிக்கொள்கிறேன். இதற்கு இயற்கை ஆர்வமும் தேடலும் இருந்தாலே போதும். எல்லோரும் இந்த வாழ்க்கை முறை சாத்தியமே” என்று உற்சாகமாகக் கூறும் கார்த்திக், காய்கறி அறுவடையில் மும்முரமானார்.

விகடன் பரிந்துரைக்கும் மற்ற கட்டுரைகள்...

No comments:

Post a Comment