Saturday, 23 May 2020

ACTRESS VANISHREE SON DR.ABHINAYA VENKATESA KARTHIK DIED OF HEART ATTACK ON 2020 MAY 22 NEAR CHINGLEPET



ACTRESS VANISHREE SON DR.ABHINAYA VENKATESA KARTHIK DIED OF HEART ATTACK ON 2020 MAY 22 NEAR CHINGLEPET



தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் வாணிஸ்ரீ. உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, ஊருக்கு உழைப்பவன், புண்ணிய பூமி, நல்லதொரு குடும்பம் என அவர் நடித்த படங்கள் ஏராளம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் நீண்ட காலத்திற்கு பிறகு சென்ற வருடம் தான் ஒரு தெலுங்கு சீரியலில் நடிக்க துவங்கினார் வாணிஸ்ரீ என்பது குறிபிடத்தக்கது.

பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் நேற்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான அபினய வெங்கடேஷ மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என கூறப்படுகிறது.
நேற்று சென்னை செங்கல்பட்டு அருகில் உள்ள வீட்டில், அவர் தூக்கத்தில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். அவரை எழுப்பிய குடும்பத்தினருக்கு காலையில் தான் அவர் இறந்தது தெரியவந்துள்ளது.அபிநய வெங்கடேஷின் உடல் வாணிஸ்ரீயின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இன்று இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.சென்னையில் உள்ள அன்னபூர்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் மருத்துவ படிப்பை முடித்துள்ளார் அபினய வெங்கடேஷ கார்த்திக். அதன் பிறகு பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவியும் மருத்துவர் தான். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவர்களது இரண்டாவது குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகும் நிலையில் அபிநய் மரணமடைந்து இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணிஸ்ரீக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள். ஒரு மகன் 'அபினய வெங்கடேஷ கார்த்திக்' மற்றும் ஒரு மகள் 'அனுபமா'. அவர்கள் இருவருமே மருத்துவர்கள் தான். இவர்கள் இடையே சொத்து பிரிப்பது தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வந்தது என கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட அதிக மன உளைச்சலில் தான் அபினை இருந்தார் என கூறப்படுகிறது. அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெங்களூரில் இருந்து நேராக தனது அப்பா இருக்கும் வீட்டுக்கு தான் சென்று உள்ளார் அவர். சொத்து தகராறில் அப்பா-மகன் ஒரு பக்கமும், அம்மா-மகள் ஒரு பக்கமும் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது. இதனால் குடும்பத்துக்குள் தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

70களில் கருணாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார் வாணிஸ்ரீ. அதன் பிறகு அவர் 80களில் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். அதன் பிறகு சென்ற வரும் பிரேம் நகர் என்கிற சீரியலில் நடிக்க துவங்கினர் அவர். ஒரு பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது அது.அவரது கணவர் கருணாகரன் மருத்துவர். அதனால் அவர்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் மருத்துவ துறையா தேர்ந்தெடுத்தனர்.
மகன் அபிநய் விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதனால் மருத்துவம் படிக்கும்போதும் விளையாட்டு துறைக்கான மருத்துவம் பற்றி தான் படித்தாராம். அபிநய்யின் மனைவி சென்னையில் உள்ள ராமச்சந்திர மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் உதவி பேரசிரியையாக பணியாற்றி வருகிறார்.





Vanisri was born as Ratna Kumari in Nellore, Andhra Pradesh, India in 1948. Her early life was marred with tragic losses: three members of her family, including her father, died of tuberculosis in a span of one month. When her father was dying, he told her mother to give young Ratna and her older sister a good education before marriage. Her mother kept a farm and sold goats milk to support the family. She sent young Ratna and her older sister to Andhra Mahila Sabha in Madras to be educated. While her older sister did well enough to go onto college, Ratna's interest wasn't in her studies, but only in her bharat natyam dancing class. When she was 12 years old, she participated in a dance function at her school. In the audience was a Kannada film director, who thought she resembled actress Savithri Ganesh, then the top female star in South India. He offered Ratna the lead role in his Kannada film, and she took it despite her mother's initial objections. The film became a hit, and she was offered more Kannada and Tamil films. As her visibility grew, Telugu film offers came to but only for small roles. Nevertheless, she took them and acted in her first Telugu film "Bheeshma" (1962). Soon, S.V. Ranga Rao changed her name from Ratna Kumari to Vanisri, an inverse name of his company "Sri Vani Films." She continued with supporting roles and comedy roles in Telugu films, and she finally made an impact in a sister role in "Sukha Dukhalu" (1967), a film written by the important filmmaker K. Balachander. It was a tragedienne role, and she looked beautiful, especially in the song "Idi Mallela velayani." The song became a hit, the film became a hit, and she landed her first heroine role in "Marapurani Katha" (1967). She continued with Tamil and Kannada films and had a hit with the Tamil film "Paal Polave Vaan Meedhile " (1969) and the song "naalai intha velai paarthu" that was picturized on her won a National Award. She was now consistently landing heroine roles in all South Indian films with top leading men. She was confident when she turned down the sister role in "Aatmiyulu" (1969) and opted for the heroine role opposite ANR. The producer and director relented after a couple of months and gave into her, and "Aatmiyulu" became a hit. She became the topmost heroine in the 1970's with more hits like "Dasara bolludu," and Prem Nagar." Around this time, the South Indian film industry was gradually converting from black-and-white to color films, and Vanisri took full advantage of her appearance in color films. She wore bright costumes and applied heavy pancake makeup to cover up her dark complexion. She applied variety of lipsticks and bhindis. She experimented with different hairstyles, and her striking appearance soon caught on and she became the trendy, glamorous star. Even though, she was taken into films because of her facial resemblance to Savitri, she decided she wanted to be a completely different star than her. To do so, she slimmed down, even if the producers had favored a heavier, curvier look. However, her greatest asset was her highly photogenic face, and she was friendly with all her cameramen who made sure she looked her very best onscreen. But, she never sacrificed the substance of her roles for her decorative appearance. She played dramatic roles and title roles, including double roles in "Vani Rani," "Ganga Manga," Iddaru ammayulu" and Secretary. She won acting awards for her superlative performances in "Krishnaveni" and Jeevana Jyothi. Her fame had reached its peak in 1976, when Filmfare magazine decided to do a special feature on the Telugu film industry and put Vanisri on the cover. However, another shift was occurring within the film industry as well as within Vanisri herself. She was working 16 hours a day and working in 14 films a year without any time off. The filmmaker on "Edurelini Manishi" (1975) wanted her to dance and dress more provocatively, and she objected, and although he relented, Vanisri saw the writing on the wall. Newer filmmakers like K. Raghavendra Rao were opting for newer, younger heroines, and he made permanent stars out of three younger heroines: Jaya Prada and Jayasudha in the blockbuster 'Adavi Ramudu' (1977), and 'Sridevi' in "Padaharale Vayausu' (1978). All three were vying for the top spot, the spot that Vanisri had held for nearly a decade. She knew her time was up, and she married her family doctor in 1979 and left films. Even then, she bend society's norms. She was 30, at a time when the average marrying age for a girl was in her early 20's. And she married someone who was slightly younger than her. Nevertheless, it was a lasting marriage, and she gave birth to a daughter Anupama, and son Abinaya Venkatesha Kartik. When she was pregnant with her son, she developed a thyroid problem and gained a lot of weight. Apart from her health problem, she also suffered from a longstanding court battle with her older sister and brother-in-law over property. They had handled her financial affairs when she was in films, and she had no knowledge of how much she earned and how much was spent. After a 12-year battle, the parties all reached a compromise and she and her sister's family reconciled. In 1989, Vanisri returned to films with "Athaku Yamudu Ammayiki Mogodu," where she had a supporting role as an arrogant mother-in-law. The film became a hit, and the audience welcomed her in more senior roles. Although, she continued with such roles, she kept her children away from films, and they both became doctors. Vanisri used her name and money for humanitarian causes, such as contributing to schools and setting up senior center. She is also involved in politics.
- IMDb Mini Biography By: Ramstep

Spouse (1)
Karunakaran (1979 - present) ( 2 children)
Trivia (7)
She established a school, where 400 students have passed and have gone on to become doctors and engineers. She also planned to construct an old age home for senior citizens in the Telugu film industry called Adharana and own a mobile theatre to spot talent from various places in Andhra Pradesh. She is also involved in politics.
She retired from films as a heroine in the late 1970s, because she objected to heroines being asked to dress more provocatively and act and dance like vamps. She then married her family physician and has two children with him, who also became doctors. In 1989, she returned to films and television serials, playing supporting roles as mothers, aunts, and mother-in-laws.
During her peak period as heroine, she starred in 14 films a year and worked 16 hours a day.
S.V. Ranga Rao gave her the professional name of Vanisri.
She said that the most challenging roles of her career were in the Telugu films Iddaru Ammayilu (1972) and Krishnaveni (1974).
Of all her Telugu films, the three films that she hated the most are: Debbaku tha dongala Mutha (1971), Vintha Katha (1973), and Bombayi Priyudu (1996).
There are two phases of career. One as a youthful heroine where she reached the top. The other is a shrewish mother-type roles where she again excelled.
Personal Quotes (8)
[on whether any leading man proposed marriage to her] Never, all the heroes got married, the existing ones probably didn't have the courage, but I always wanted to marry someone outside the industry and someone who is not already married once. I have seen many actresses who didn't succeed with second marriages and the characters we played helped us to study society.
I was averse to the same hair style, knotted bun and a plait with flowers. I bought in novelty by stitching two sarees, putting polka dots on it and wearing black outdoors, would have constant arguments with the art and camera department because they thought it would look gawdy.
I would read a lot of novels and the description of the heroine influenced me and I evolved my own style in dressing and make up. I was the first one to try on different shades of lipsticks, bindis, nail colours that would match the sarees and preferred bright colours. . .
I never knew how I would look without make up. While others had a professional and personal life, my reel life was my real life. Even the jewellery or sarees I bought was worn during shootings because there was no occasion to dress up. I was such a novice, would sign a cheque but never knew how it would be encashed in the bank.
Whatever a person learns before turning 27, stays with him till his death helping him to sustain his living. I want to provide a platform for those budding youngsters. The industry has given me so much, I want to do something for it.
[on why she didn't want her only daughter, Anupama, to become an actress, who instead became a doctor] The span of a heroine here is only 3 years. Soundarya was the last actress who worked for a longer time. Why should I put my daughter to so much torture, sending her to acting school, etc., and asking her to make movies the aim of her life.
I have no godfathers. The name and fame, whatever I got is because of my struggle and perseverance.
[on why she remained a top star during the 1970s] The existing heroines had announced their retirement, Savitri became overweight, T. Kirshna Kumari and Jamuna were married and around that time, I got great roles with God's blessing. Also with every film turning out to be a success, there was no looking back. Kanchana was there, but she did her own genre.



.பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் குடும்பத்தில் சோகம். நேற்று [23.5.2020] மரத்தில் பிணமாக தொங்கினார் மகன் மருத்துவர் அபினய வெங்கடேஷ கார்த்திக்… என்ன நடந்தது.. சென்னையில் பரபரப்பு!

.

மரத்தில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார் நடிகை வாணிஸ்ரீயின் மகன்.. இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

1960-களின் இறுதிகளிலும், 1970-களிலும் தமிழக மக்களை நடிப்பால் அசத்தியவர் வாணிஸ்ரீ.. எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்.. பல நடிகைகள் அந்த காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தாலும், வாணிஸ்ரீயின் டெடிகேஷன்தான் அவரை சமகாலத்து நடிகைகளையும் பின்னுக்குத் தள்ளியது. டாக்டர் கருணாகரன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார் வாணிஸ்ரீ. இது ஒரு காதல் திருமணம்.. ஒரு மகன், ஒரு மகள் என இவர்களுக்கு 2 பிள்ளைகள். 2 பேருமே டாக்டர்கள்தான்.

கார்த்திக் மகன் பெயர் அபினய வெங்கடேஷ கார்த்திக்.. வயது 36 ஆகிறது.. அவருக்கும் கல்யாணமாகி 4 வயதில் ஒரு மகனும், 8 மாசத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர், பெங்களூரில் ஒரு அரசுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார்… இவரது மனைவியும் ஒரு டாக்டர்தான்… ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியை. இவர் மனைவி, குழந்தைகளுடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்.. இவரது தந்தை திருக்கழுக்குன்றத்தில் வசித்து வருகிறார்.

திருக்கழுக்குன்றம் தற்போது ஊரடங்கு என்பதால், நுங்கம்பாக்கம் வீட்டுக்குப் போகாமல், திருக்கழுக்குன்றம் வீட்டிலேயே கார்த்திக் தங்கியுள்ளார்.. சில நாட்களாக மன உளைச்சலிலும் இருந்துள்ளார் என தெரிகிறது. எதனால் இந்த மன உளைச்சல் என தெரியவில்லை. குழந்தைகளை பார்க்க முடியாமல் உள்ளது என்று புலம்பியும் வந்திருக்கிறார். இந்த சமயத்தில்தான் வீட்டுக்குப் பின்னாடி இருந்த மரத்தில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

கொலையா?

இவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா என தெரியவில்லை.. போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.. வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. சில மாதத்துக்கு முன்பு குடும்பத்தில் சொத்து தகராறும் இருந்துள்ளது.. அதில், அப்பா, மகன் ஒரு தரப்பும், அம்மா, மகள் என ஒரு தரப்புமாக மாறி பிரச்சனை வந்துள்ளது.

பரபரப்பு


அது சம்பந்தமாககூட மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக சொல்கிறார்கள். தகராறு, சண்டை காரணமாகவே பெங்களூரிலிருந்து சென்னை வந்தாலும் நுங்கம்பாக்கம் வீட்டுக்குப் போகாமல், அப்பாவுடன் திருக்கழுக்குன்றம் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.. அதனால் அபினய் மரணத்துக்கான காரணம் எதுவென உறுதியாக தெரியவில்லை.. அதனால் இது கொலையா? தற்கொலையா என ஒரு முடிவுக்கு வந்த பிறகே, அந்த மரணத்துக்கான உண்மை காரணமும் போலீசார் வெளிக்கொணருவார்கள் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment