Saturday, 18 April 2020

POONAM DHILLON ,HINDI ACTRESS / FEMINA - MISS INDIA 1977 BORN 1962 ,APRIL 18



POONAM DHILLON ,HINDI ACTRESS 
/ FEMINA - MISS INDIA 1977
BORN 1962 ,APRIL 18



பூனம் தில்லான் (Poonam Dhillon) ஏப்ரல் 18, 1962இல் பிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் இந்தி திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தில்லான் 1977இல் "ஃபெமினா மிஸ் இந்தியா" பட்டம் பெற்றவர். இவர் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் 1979இல் வெளிவந்த நூரி, ராஜேஷ் கன்னாவுடன் நடித்த ரெட் ரோஸ்(1980), டார்ட் (1981), நிஷான் (1983), ஜமனா (1985), ஆவம் (1987) திரைப்படங்களின் மூலமாக நன்கு அறியப்படுகிறார். மேலும் இவர் ஜெய் சிவ் சங்கர் (1990), ரொமான்ஸ் (1983), சோஹ்னி மகிவால் (1984), தேரி மெகர்பானியன் (1985), சமுந்தர் (1986), சவேராய் வாலி காடி (1986), கர்மா (1986) நாம் (1986), மாலம்மால் (1988) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பூனம் தில்லான், 2009இல் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மற்றும் 2013இல், சோனி தொலைக்காட்சியின் ஈக் நயி பெஹ்ச்சான் தொடரில் ஷ்ரதா மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொழில்

மிஸ் யங் இந்தியாவாக 1978 ஆம் ஆண்டில் தனது 16 வயதில் முடிசூட்டப்பட்டபோது முதன்முறையாக தில்லான் புகழ் பெற்றார்.[2] இயக்குனர் யஷ் சோப்ரா இவரை கவனித்து திரிசூல் என்ற படத்தில் ஒரு வாய்ப்பு வழங்கினார். இப்படத்தில் இடம் பெற்ற கபூச்சி கபூச்சி கம் கம் என்ற பாடலுக்கு நடிகர் சச்சினுடன் நடனமாடினார்.[3][4] சோப்ரா தயாரிப்பில் பின்னர் நூரி (1979) திரைப்படத்தில் நடித்தார். இதற்காக, தில்லானுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் ஹிந்தி மொழியில் 90 திரைப்படங்களை செய்தார். நடிகர் ராஜேஷ் கன்னாவுக்கு இணையாக பல படங்களில் நடித்துள்ளார்.[5] தில்லான் நடமாடும் ஒப்பனை வாகன தொழிலை ஆரம்பித்தர், இது இந்தியத் திரையுலகில் எவரும் செய்யாத ஒன்றாகும். தனது ஒப்பனை நிறுவனத்திற்கு வானிட்டி எனப் பெயரிட்டார்.

தில்லான் ஒரு கல்வியாளர் குடும்பத்தில் இருந்து வந்தார். அவரது தந்தை ஒரு வானூர்தி பொறியியலாளராக இருந்தார், அவரின் தாய் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார், மேலும் அவரது இரண்டு உடன்பிறப்புகளும் மருத்துவர்கள் ஆவார்கள்.[6] பூனம் தனது 16 வது வயதில் திரைப்ப்டங்களில் தோன்ற ஆரம்பித்த பிறகு பட்டம் பெற்றார். தற்போது அவர் சர்வதேச வர்த்தகத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் செய்து வருகிறார்.[7] மருந்து விழிப்புணர்வு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, குடும்ப திட்டமிடல் மற்றும் உறுப்பு தானம் போன்ற சமூக காரணிகளால் அவர் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். காத்மாண்டு மற்றும் தில்லி சார்க் வணிக உச்சி மாநாட்டில் முக்கிய பேச்சாளராகவும் இருந்துள்ளார், மேலும் அவர் கலாச்சார தூதுவராக நியமிக்கப்பட்டார்.[8] அவர் மைன்ட்மைன் நிகழ்ச்சியில் ஒரு பேச்சாளராக இருந்தார்.[9]

சமீபத்தில் அவர் பொயடிக் ஜஸ்டிஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார்.[10]

சினிமா படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் தணிக்கை குழு (சென்சார் போர்டு) மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதில் உறுப்பினர்களாக சினிமா துறையினர், எழுத்தாளர்கள், தன்னார்வலர்கள் என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லியில் சென்சார் போர்டு மத்திய அலுவலகமும், சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை உள்ளிட்ட இடங்களில் பிராந்திய அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. சினிமா படங்களை சென்சார் போர்டு உறுப்பினர்கள் பார்த்த பின்பு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும்.

பிராந்திய அலுவலகங்களில் தணிக்கை சான்று வழங்குவதில் இடையூறு ஏற்பட்டால் டெல்லி, மும்பையில் மேல் முறையீடு செய்யப்படும். இங்கும் சிக்கல் ஏற்பட்டால் 5 பேர் கொண்ட தணிக்கை குழு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு செல்லலாம்.

இந்த தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.மகாஜன் தலைமையில் செயல்படுகிறது. பத்திரிகையாளர் சேகர் ஐயர், வக்கீல் பீனா குப்தா ஆகிய இருவர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் 2 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த 2 இடங்களுக்கு நடிகை பூனம் தில்லான், பா.ஜனதாவைச் சேர்ந்த ஷாசியா இல்மி ஆகியோரை மத்திய அரசு நியமித்து உள்ளது.

‘உத்தா பஞ்சாப்’ என்ற இந்திப் படம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஏராளமான காட்சிகளை வெட்ட தணிக்கை குழு உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து கோர்ட்டிலும், தணிக்கை குழு தீர்ப்பாயத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் உத்தா பஞ்சாப் தொடர்பான விசாரணை நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

   


.16 வயதில் "திரிசூல்' படத்தின் மூலம் அறிமுகமான பூனம் தில்லான், 40 ஆண்டுகளில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 56 வயதாகும் பூனம் தில்லான், தன் குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும் நேரத்தில் எம்பிஏ பட்டம் பெற்றதோடு, இரண்டு கவுரவ முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். ""நீங்கள் நினைத்ததை சாதிக்க வயது எப்போதும் தடையாக இருப்பதில்லை'' என்று கூறும் பூனம் தில்லான், தற்போது சோனி டிவியில் ஒளிப்பரப்பாகும் "தில் ஹி தோஹை' என்ற தொடரில் நடித்து வருகிறார்.

Beautifully attracted director Yash Chopra

Poonam Dhillon is one such actress who made her mark in the Hindi cinema world in a very short time. The 80s was a golden period in Bollywood, where many actors gained an identity. Attracted by the beauty of Poonam, Miss India, director Yash Chopra offered her her film ‘Trishul’. But at that time Poonam refused to act in the film. However, after explaining for several days, Poonam agreed to do this film.

Heroine was made in the first film

He got the lead role in his first film. It was a matter of time when she was studying and she had little experience working in films, but even then she had to work with famous stars like Sanjeev Kumar, Shashi Kapoor and Amitabh Bachchan for the film Trishul. Got a chance
When Shashi Kapoor slaps Poonam Dhillon

Shashi Kapoor slapped Poonam Dhillon for a scene in this film. To make the scene real, Yash Chopra said the action, Shashi Kapoor made a strong slap without telling Poonam Dhillon. Such Shashi Kapoor did because if he were to tell this scene, then the reaction would not have been real and the same happened by doing so. However, later Shashi Kapoor told all this thing to Poonam and even apologized to him for slapping.

Love life made headlines

Poonam Dhillon’s love life has also made a lot of headlines. According to reports, in the 80s, when Poonam’s stars were at a high level, there were reports of an affair with their director Raj Sippy. Raj and Poonam met during the shooting of a film, from where both came close. But Raj was already married. However, after some time the two separated. Poonam wanted to marry Raj, while Raj did not want to leave his family. Because of this, both of them separated their paths.

Divorce taken after marriage

Poonam married film producer Ashok Thakeria in 1988. After this, Poonam reduced her working in films. After the film ‘Antagonist’ released in 1992, he left the film industry for almost 5 years. He started his second innings of his career with the film ‘Judai’ released in 1997. However, within a few years of marriage, the two separated. The two divorced in 1997. they have two children. Now Poonam stays apart with her children.


No comments:

Post a Comment