Monday, 6 April 2020

OPERATION HALALA - MOULANAS GAINED MONEY ALONG WITH SEX



OPERATION HALALA - MOULANAS GAINED MONEY ALONG WITH SEX




முன்னாள் கணவனை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்

முகம் தெரியாத நபருடன் திருமணம், பாலுறவு, பிறகு விவாகரத்து. இவை எல்லாமே, முன்னாள் கணனை அடைவதற்காக முஸ்லிம் பெண்கள் ஏராளமான பணம் கொடுத்து அனுபவிக்கும் துயரங்கள்.

நம்ப முடியாவிட்டாலும், உண்மை அதுதான். இது, பிபிசி புலனாய்வு மூலம் வெளிப்பட்ட தகவல்.

அந்த வேதனையை அனுபவிக்க, பல முஸ்லிம் பெண்கள், `ஹலாலா' என்று அழைக்கப்படும் இஸ்லாமிய திருமணத்துக்காக ஏராளமான தொகையை செலவிடுகிறார்கள். இந்த சேவையை வழங்க, பல இணையதள சேவை நிறுவனங்கள் அந்தப் பெண்களிடமிருந்து பெருமளவு கட்டணம் வசூலிக்கின்றன.


ஃபரா - இது அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் அல்ல. ஃபரா தனது 20 வயதுகளில் இருக்கும் போது தனது வருங்கால கணவரை சந்தித்தார். அவர் குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் ஃபராவிற்கு அறிமுகமானவர். திருமணத்திற்கு பிறகு அவர்கள் குழந்தை பெற்று கொண்டனர் ஆனால் அப்போதிலிருந்து அவர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாக ஃபரா தெரிவிக்கிறார்.

பணம் வேண்டும் என்று முதல் முறையாக அவர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாக பிபிசியின் ஆசிய சேவையிடம் ஃபரா தெரிவித்துள்ளார்.

"எனது முடியை பிடித்து தரதரவென இரண்டு அறைகளைத் தாண்டி வெளியே இழுத்துக் கொண்டு வந்து வீட்டை விட்டு வெளியே துரத்த முயற்சி செய்தார்; சில சமயங்களில் அவர் மிகவும் மோசமாக நடந்து கொள்வார்"

ஆனால் இந்த நிலை மாறும் என ஃபரா நம்பினார். ஆனால் அவர் கணவரின் நடத்தை அதைவிட மோசமாகத்தான் மாறிக் கொண்டிருந்தது குறுஞ்செய்தியின் வழியாக அவரை விவாகரத்து செய்யும் அளவிற்கு அவரின் நடத்தை மோசமாகயிருந்தது.

"நான் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தேன். அவர் தனது அலுவலகத்தில் இருந்தார். எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, `தலாக், தலாக், தலாக்`" என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பினார்.

இந்த விவாகரத்து முறை, பல இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது; பிரிட்டனில் இம்முறையின் மூலம் எத்தனை பெண்கள் "விவாகரத்து" பெற்றுள்ளனர் என்ற தகவல்களை அறிய வாய்ப்பில்லை.

"அலைப்பேசி என்னிடம் இருந்தது", அதை நான் எனது தந்தையிடம் காண்பித்தேன், அவர் உடனே "உனது திருமணம் முறிந்துவிட்டது, நீ அவரிடம் திரும்ப செல்ல முடியாது." என்று தெரிவித்தார் என்று நடந்ததை விவரிக்கிறார் ஃபரா.

"என் மனம் சுக்குநூறாகிப் போனது. ஆனால் என்னுடைய முன்னாள் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் ஏனேன்றால் அவரை நான் மிகவும் நேசித்தேன்"

அதேபோல,தனது முன்னாள் கணவரும் அவரை விவாகரத்து செய்தது குறித்து வருத்தமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வதந்திக்கு எதிராக 17 ஆண்டுகள் போராடிய பெண்

இதனால் சர்ச்சைக்குரிய ஒரு திருமண முறையான ஹலாலாவை ஃபரா அணுக நேர்ந்தது; இந்த திருமண முறை முஸ்லிம்களில் ஒரு சிறிய குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது அவர்கள் மும்முறை தலாக்கையும் எற்றுக் கொள்கிறார்கள்.

தம்பதிகள், விவாகரத்து செய்து கொண்ட பின்னர் மீண்டும் இணைய விரும்பினால் ஹலாலா முறைதான் ஒரே வழி என்று அவர்கள் நம்பினார்கள்

ஹலாலா என்பது விவாகரத்து ஆன ஒரு பெண், முகம் தெரியாத வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு முழுமையாக அவருடன் இணைந்து வாழ்ந்து பின் விவாகரத்து பெறுவது. இவ்வாறு செய்தால் மட்டுமே அவரால் திரும்பவும் முதல் கணவரை திருமணம் செய்துகொள்ள முடியும்.

"பணியிடத்தில் தலையில் முக்காடு அணிவதை நிறுவனம் தடை செய்வது சட்டப்பூர்வமானது"

ஆனால் சில சமயங்களில் ஹலாலா சேவையை கோரும் பெண்கள் பெருமளவு பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மோசடிக்கு உள்ளாக்கப்பட்டு, அச்சுறுத்தப்படுகிறார்கள், பாலியல் ரீதியாகவும் துன்புறத்தப்படுகிறார்கள், ஏன் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்த முறை பெரும்பாலான முஸ்லிம் மக்களால் வண்மையாக கண்டிக்கப்படுகிறது; மேலும் விவாகரத்து குறித்த இஸ்லாமிய சட்டத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டிருப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

பிபிசியால் நடத்தப்பட்ட புலனாய்வில், ஹலாலா சேவைகளை வழங்கும் சில இணையதள கணக்குகள் பற்றி தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானோர், தற்காலிக திருமணங்களை செய்து கொள்வதற்கு பெண்களிடம் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை வசூலிக்கின்றனர்.

`தீவிர விருப்பம்`

விவாகரத்து ஆன ஒரு பெண் 2500 பவுண்டுகளை செலுத்த வேண்டும் என்றும், அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிறகு ஹலாலா திருமணம் "முழுமையடைந்த" பின் அவருக்கு விவாகரத்து வழங்கப்படும் என்றும் ஹலாலா சேவைகள் குறித்து முகநூலில் விளம்பரம் செய்த நபர் ஒருவர், பிபிசி செய்தியாளர் என்று அடையாளம் காட்டிக் கொள்ளாத, விவாகரத்தான ஒரு முஸ்லிம் பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்ட செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இதில் தன்னுடன் பலர் பணிபுரிவதாக அந்த நபர் தெரிவித்தார் மேலும் அதில் ஒருவர் ஹலாலா சேவை முடிந்தவுடன் ஒரு பெண்ணிற்கு விவாகரத்து வழங்க மறுத்துவிட்டார் எனவும் தெரிவித்தார்.

லெகின்ஸ் அணிந்திருந்த பெண்கள் விமானத்தில் பயணிக்க தடை

ஆனால் அந்த நபர் சட்டவிரோத காரியங்களை செய்கிறார் என தெரிவிப்பதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை. மேலும் பிபிசி இது தொடர்பாக அந்த நபரைத் தொடர்பு கொண்ட போது தான் ஹலாலா திருமண சேவைகளில் ஈடுபடவில்லை எனவும் முகநூலில் உள்ள கணக்கு, சமூகம் குறித்த ஒரு சோதனை முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது கணவருடன் மீண்டும் இணையும் தீவிர எண்ணத்தில் இருந்த ஃபரா, ஹலாலா திருமணத்திற்கு இசையும் ஒரு நபரை தேட தொடங்கினார்.

"குடும்பங்களின் ஆதரவுடன் இதனை செய்யும் சில பெண்களை எனக்கு தெரியும். அவர்கள் இதுபோல திருமணம் செய்துகொண்டு பிறகு, அவர்கள் பல மாதங்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்கள்" என ஃபரா தெரிவிக்கிறார்,

"அவர்கள் மசூதிக்கு செல்வார்கள். அங்கு இதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் அந்த சேவையை அளிக்கும் நபர்களுடன் பாலுறவு கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் வேறு நபர்களையும் அப்பெண்ணிடம் பாலுறவு கொள்ள அனுமதிப்பார்கள்."

விவாகரத்து குறித்து பெண்களுக்கு ஆலோசனை வழங்கும் கிழக்கு லண்டனில் உள்ள இஸ்லாம் ஷரியா கவுன்சில், இந்த ஹலாலா திருமணங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

"இது ஒரு போலியான திருமணம், இது பணம் சம்பாதிபதற்கான வழியாகக் கருதப்படுகிறது; மேலும் பலவீனமானவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்" என அந்த அமைப்பைச் சேர்ந்த கோலா ஹசன் தெரிவிக்கிறார்.

"இது மன்னிக்க முடியாத கொடுமை; ஹலாலா திருமணத்தை தவிர்க்க உதவிகளை நாடலாம் அல்லது ஆலோசனை பெறலாம். எவரையும் இந்த ஹலாலா திருமணத்தை செய்து கொள்ள அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

இதையெல்லாம் கேட்ட பிறகு, ஹலாலா திருமணம் செய்து, அதில் பல கொடுமைகளை அனுபவித்து, அதன் பிறகு தனது முதல் கணவருடன் மீண்டும் சேரும் முடிவிலிருந்து பின் வாங்கிவிட்டார் ஃபரா.

ஆனால் என்னைப் போல ஏராளமான பெண்கள், எப்படியாவது தீர்வு கிடைக்காதா என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என எச்சரிக்கிறார் ஃபரா.

"விவாகரத்து பெற்றுவிட்டு வலியை அனுபவித்து கொண்டிருக்கும் என்னை போன்றவர்களின் நிலையில் இருந்தால் ஒழிய, பெண்களின் வலியை புரிந்து கொள்ள முடியாது".

"இப்போது என்னைக் கேட்டால் நான் இந்தக் காரியத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன். ஒருவரிடம் சேர்ந்து வாழ இன்னொருவருடன் என் உடலைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன். ஆனால் அந்த நேரத்தில், எனது முன்னாள் கணவருடன் சேர்ந்து எந்த ஒரு நடவடிக்கைக்கும் நான் தயாராகவே இருந்தேன்" என்கிறார் ஃபரா.




A number of online services are charging "divorced" Muslim women thousands of pounds to take part in "halala" Islamic marriages, a BBC investigation has found. Women pay to marry, have sex with and then divorce a stranger, so they can get back with their first husbands.

Farah - not her real name - met her husband after being introduced to him by a family friend when she was in her 20s. They had children together soon afterwards but then, Farah says, the abuse began.

"The first time he was abusive was over money," she tells the BBC's Asian Network and Victoria Derbyshire programme.

"He dragged me by my hair through two rooms and tried to throw me out of the house. There would be times where he would just go crazy."

Despite the abuse, Farah hoped things would change. Her husband's behaviour though became increasingly erratic - leading to him "divorcing" her via text message.

"I was at home with the children and he was at work. During a heated discussion he sent me a text saying, 'talaq, talaq, talaq'."

"Triple talaq" - where a man says "talaq", or divorce, to his wife three times in a row - is a practice which some Muslims believe ends an Islamic marriage instantly.

It is banned in most Muslim countries but still happens, though it is impossible to know exactly how many women are "divorced" like this in the UK.

"I had my phone on me," Farah explains, "and I just passed it over to my dad. He was like, 'Your marriage is over, you can't go back to him.'"


Media captionFarah would have had to consummate her halala marriage
Farah says she was "absolutely distraught", but willing to return to her ex-husband because he was "the love of my life".

She says her ex-husband also regretted divorcing her.

This led Farah to seek the controversial practice known as halala, which is accepted by a small minority of Muslims who subscribe to the concept of a triple talaq.

They believe halala is the only way a couple who have been divorced, and wish to reconcile, can remarry.

Halala involves the woman marrying someone else, consummating the marriage and then getting a divorce - after which she is able to remarry her first husband.


But in some cases, women who seek halala services are at risk of being financially exploited, blackmailed and even sexually abused.

It's a practice the vast majority of Muslims are strongly against and is attributed to individuals misunderstanding the Islamic laws around divorce.

But an investigation by the BBC has found a number of online accounts offering halala services, several of which are charging women thousands of pounds to take part in temporary marriages.

'Desperation'
One man, advertising halala services on Facebook, told an undercover BBC reporter posing as a divorced Muslim woman that she would need to pay £2,500 and have sex with him in order for the marriage to be "complete" - at which point he would divorce her.

The man also said he had several other men working with him, one who he claims initially refused to issue a woman a divorce after a halala service was complete.

There is nothing to suggest the man is doing anything illegal. The BBC contacted him after the meeting - he rejects any allegations against him, claiming he has never carried out or been involved in a halala marriage and that the Facebook account he created was for fun, as part of a social experiment.

In her desperation to be reunited with her husband, Farah began trying to find men who were willing to carry out a halala marriage.

"I knew of girls who had gone behind families' backs and had it done and been used for months," she says.

"They went to the mosque, there was apparently a designated room where they did this stuff and the imam or whoever offers these services, slept with her and then allowed other men to sleep with her too."

Image caption

Khola Hasan says halala services are "abusing vulnerable people"
But the Islamic Sharia Council in East London, which regularly advises women on issues around divorce, strongly condemns halala marriages.

"This is a sham marriage, it is about making money and abusing vulnerable people," says Khola Hasan from the organisation.

"It's haram, it's forbidden. There's no stronger word I can use. There are other options, like getting help or counselling. We would not allow anyone to go through with that. You do not need halala, no matter what," she adds.

Farah ultimately decided against getting back with her husband - and the risks of going through a halala marriage. But she warns there are other women out there, like her, who are desperate for a solution.

"Unless you're in that situation where you're divorced and feeling the pain I felt, no-one's going to understand the desperation some women feel.

"If you ask me now, in a sane state, I would never do it. I'm not going to sleep with someone to get back with a man. But at that precise time I was desperate to get back with my ex-partner at any means or measure."

Related Topics
.

No comments:

Post a Comment