Friday, 24 April 2020

ARMENIA ,PEACEFUL COUNTRY IN WORLD



ARMENIA ,PEACEFUL 
COUNTRY IN WORLD



ஆர்மேனியா - நான் கண்ட சொர்க்கம் ஆர்மேனியா எங்கடா இருக்கு நு நெறையபேர் இப்பவே atlas ல தேட ஆரம்பிச்சு இருப்பீங்க.... என்னபா கடைலயே இல்லையாம் " நு atlas ல பாத்து கேக்குறது புரியுது ... atlas ல தேடி கண்டுபிடிகுறது கஷ்டம்  தான்.....அவ்வளவு சின்ன நாடு .
ஆனா வரலாற்று பக்கத்துல சிறப்பான இடம் புடிச்ச நாடு. கிருத்துவ மார்கத்த முதல தழுவிய நாடும் இது தான். இப்ப இருக்க நிலப்பரப்பு ரொம்ப கம்மி தாங்க , ஆனா கிட்டதட்ட 3௦௦௦ வருசங்களுக்கு முன்னாடி இந்த நாடோட நிலப்பரப்பு ரொம்ப பெருசுங்க... பைபிள் ல சொல்லி இருக்க உறர்டு (urartu) தேசம் இது தானுங்க.  இதோட இன்னொரு பெருமை  என்னன்னா நோவா வோட கப்பல் (noah's ark) தரைத் தட்டுன இடமும் இது தானுங்க. அவரோட மகனால தான் இந்த சாம்ராஜ்யமே உருவாச்சு நு சொல்றாங்க. "டிக்ரன்" "ஆர்மேன்" போல "தி கிரேட் " நு சொல்ல படுற மன்னர்கள ஈன்று எடுத்த நாடும் இது தான். உலகத்தையே ஆளனும் நு நெனச்ச அலெக்சாண்டரோட படையுல  அர்மேனியரோட பங்கு அதிகம்.  அது சேரி ஆர்மேனியாவ எதுக்குடா நீ சொர்க்கம் நு சொன்ன நு கேக்குறது எனக்கு புரியுது வெயிட் பண்ணுங்கபா மேட்டருக்கு  வரேன். இந்த நாடு கிட்டதட்ட 5௦௦ வருசமா நல்ல தலைமையீன் கீழ் இல்லாம துருக்கியர் கைலயும் , ரஷ்யர் கைலயும் சிக்கி சின்னாபின்னமாகி ( அர்மேனியன் இன படுகொலை .. அத பத்தி தனியா ஒரு பதிவு போடுறேன்.. அது கிட்டதட்ட நம்ம ஈழ தமிழர்கள் இன படுகொலைக்கு சமம் ) இப்ப தான் சுதந்திர காத்த சுவாசிகுது. எந்த நாட்டுலயும் இந்தியருக்கு கிடைக்காத ஒரு அன்பு  இங்க கிடைக்கும். நம்மள பாத்தாலே  ஒரு
குஷியயுடுவங்கான பாத்துகோங்க. அவங்க நமக்கு காட்டுற  அன்பு திக்குமுக்காட வச்சுரும் (அனுபவிச்சதுனால சொல்றேன் )  இங்க இருக்க மனுசங்க எல்லாரும் அருமையான மக்கள் . கடுமையா உழைக்கறவங்க. மனசுல வேற்றும பாக்காம எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசுறவங்க.. மத்த மதத்தினர் கிட்டயும் மத்த இனத்தவர் கிட்டயும் மரியதையா நடந்துகிறவங்க. ஆர்மேனியா வுல இருந்தீங்கனா தெரியும், இங்க இருக்க சீதோசன நிலை எப்பவும் ஊட்டி ல இருக்குறது போலவே இருக்கும் .. இங்க இருக்க இடங்கள்  ( எரேவன் , garni கோவில் , tsakhadzor, lastiver, dilijan நகரம் ,etc ) எல்லாம் பழமையும் புதுமையும் கலந்து இருக்கும். இந்த நாடோட சீதோசன நிலையும் , மக்களோட அன்பும் , அந்த இடங்களும் உங்களுக்கு சொர்கத்தில இருக்கிற நினைப்ப தரும். அப்படி தரலனா என்னோட ஒரு பக்க மீசைய எடுத்திறேன் {( நான் எப்பவும் trim பண்ணி தான் இருப்பேன்... அது வேற விஷயம்.... நீங்க கோபம் ஆகுறதுக்குள்ள நா அப்பிட்டு ஆகிகுறேன் )} அடுத்த பதிவுல இந்தியா வுக்கும் அர்மேனியாவுக்கும் உள்ள தொடர்ப பத்தியும், அர்மேனியா வந்த ஹிந்து மன்னர்களும் , அவங்களுக்குள நடந்த சண்டைய பத்தியும் பதிவு பண்ணுறேன். இப்ப அப்பிட்டு அகிக்குறேன் ....

No comments:

Post a Comment