Thursday, 14 November 2019

SIVAJI GANESAN ,A LOYAL POLITICIAN



SIVAJI GANESAN ,A LOYAL POLITICIAN


அரசியல் அரிச்சுவடி அறியாத பலரும் அரசியலில் சிவாஜி ஜொலிக்கவில்லை என்று சாதாரணமாக, போகிற போக்கில் கூறுகிறார்கள், இந்த வரிசையில் விபரம் அறியாமல் சிவாஜியின் அரசியல் குறித்து தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி ராமசாமி உளறி வைத்துள்ளார். அருகதை அற்றவர்களின் அலப்பறை. உங்களின் முடைநாற்ற அரசியலுக்கு கர்மவீரர் காமராஜரை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்ட நடிகர் திலகம் ஊறுகாயா?
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
1989-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்கிற தனிக்கட்சித்தொடங்கி ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து திருவையாறு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார்.

நேற்று முன்தினம், முதலமை‌ச்ச‌ர் ரஜினி, கமல் அரசியல் குறித்து விமர்சிக்கும்போது சிவாஜி கணேசனே தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து ஒரு விளக்கம் ;


“காழ்ப்புணர்ச்சியால், அரசியல் அரிச்சுவடி அறியாத பலரும் அரசியலில் சிவாஜி ஜொலிக்கவில்லை என்று சாதாரணமாக, போகிற போக்கில் கூறுகிறார்கள். அந்த வரிசையில், நேற்று தமிழக முதல்அமைச்சர் சிவாஜி கணேசன் கூட தேர்தலில் ஜெயிக்க முடியவில்லை என்று உளறுகிறார்.

ஆம், இவரைப்போல யார் காலில் விழுந்தேனும் பதவியைப் பெறவேண்டும் என்ற பதவி வெறி அவருக்கு இல்லாததுதான் காரணம். அரசியலில் ஜொலிப்பது என்றால், அமைச்சர், எம்.எல்.ஏ, எம்.பி. பதவியைப் பெறுவதா? அல்லது, பதவியை, அதிகாரத்தைப் பயன்படுத்தி, கொள்ளையடித்து சொத்துக்களை சேர்ப்பதா?

டெல்லி மாநிலங்களவை உறுப்பினராக இரண்டரை ஆண்டுகாலம் பதவி வகித்தபோது, தனது எம்.பி. பதவிக்கான விமான டிக்கெட், இலவச ரயில் டிக்கெட் போன்றவற்றைக் கூட உபயோகப்படுத்தாமல், தனது சொந்த செலவிலேயே பயணங்களை மேற்கொண்டவர் சிவாஜி கணேசன்.

காங்கிரசில் இருந்தபோது தேர்தல் பிரச்சாரங்களை தனது சொந்த செலவில் மேற்கொண்டவர். பெரியார், காமராஜர் முதல் கருணாநிதி, எம்.ஜி.ஆர் வரை எல்லோராலும் மதிக்கத்தக்க ஒரு அரசியல்வாதியாக வாழ்ந்ததே போதும். அரசியல் நாகரிகம், சுயமரியாதை ஆகியவற்றோடு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், காமராஜரின் அடிச்சுவட்டை இறுதிவரை பின்பற்றி, யாராலும் குற்றம் சொல்ல முடியாமல் நடந்ததே அவருடைய அரசியல் வெற்றி.

அரசியல் என்றால் சம்பாதிக்கும் ஒரு தளம், பதவியை அனுபவிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இடம் என்று நினைக்கும், இப்போதைய ராஜேந்திர பாலாஜி போன்ற அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால், நடிகர் திலகத்தின் நேர்மை அரசியல் கேலி செய்யக்கூடியதாக இருக்கலாம்.

சொத்துக் குவிப்பு, லஞ்ச ஊழல் வழக்கு, சிறை என்று குடும்பத்துடன் அலையும் இவர்களைவிட நடிகர் திலகத்தின் பாதையே வெற்றிப் பாதை. அரசியலில், தேர்தல் வெற்றி என்பது மட்டுமே வெற்றி அல்ல. அப்படிப் பார்த்தால், இந்திய அரசியல் சாசன சிற்பியாகப் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கார் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.

ஏன், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தாலும் இன்று அனைத்துத் தரப்பினராலும் போற்றப்படும் நல்லக்கண்ணு எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. இதுபோல பல உதாரணங்களைக் கூறமுடியும். கேமரா முன்பு மட்டுமே நடித்து, மக்கள் மன்றத்தில் நடிக்கத் தெரியாத சிவாஜி கணேசன், போட்டியிட்டு வெற்றி பெறவில்லையே (அதுவும் ஒரு தேர்தலில் மட்டுமே போட்டியிட்டார்) தவிர அவரால் உருவாக்கப்பட்ட, அவரால் வெற்றிபெற்றவர்கள் பலர்.

தான் செய்த நற்பணிகளை, பலரை வளர்த்துவிட்டதை, உருவாக்கியதை நடிகர் திலகம் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், துரதிஷ்டம், அவரால் வெற்றி பெற்றவர்கள், பலன் பெற்றவர்கள்கூட அதனை வெளியில் சொல்லாமல் விட்டதுதான்.

"உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன் - வேறொன்றும் தெரியாது" என்று திரையில் மட்டுமல்ல, தன் பொது வாழ்விலும் மனசாட்சிப்படி நேர்மையாக நடந்துகொண்டவர் சிவாஜி கணேசன்.

எனவே, இனியாகிலும், நடிகர்கள் அரசியல் என்று வரும்போது அரைவேக்காட்டுத் தனமாக சிவாஜியே அரசியலில் வெற்றி பெறமுடியவில்லை என்று உளறுவதைத் தவிர்த்தால் நல்லது.”

ஆனந்தன் பிருந்தா.

No comments:

Post a Comment