Sunday, 3 November 2019

JIKKI ,THE LEGEND SINGER ,BORN 1935,NOVEMBER 3- 2004 AUGUST 16



JIKKI ,THE LEGEND SINGER ,BORN
1935,NOVEMBER 3- 2004 AUGUST 16




ஜிக்கி (Jikki, நவம்பர் 3, 1935 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி

கலையுலக வாழ்வு
ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகையா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல் மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது.
1952 இல் கே. வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.

வாழ்க்கைச் சுருக்கம்

ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். 1955 இல் மகேஸ்வரி படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.[சான்று தேவை] 1958 இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.

பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜிக்கி மரணமடைந்தார். ஜிக்கி என்று பிரபலமாக அழைக்கப்பட்ட பி.ஜி.கிருஷ்ணவேணிக்கு வயது 70. மறைந்த பாடகர் ஏ.எம்.ராஜாவின்மனைவிதான் ஜிக்கி. 7 வயதில் நடிக்க வந்த ஜிக்கி பின்னர் பின்னணிப் பாடகியாக உருவெடுத்தார். ஞானசெளந்தரி என்ற படம்தான் ஜிக்கியின் முதல் பாடல் இடம்பெற்ற படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், சிங்களம்ஆகிய மொழிகளில் ஜிக்கி எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார். யாரடி நீ மோகினி, துள்ளாத மனம் துள்ளும், நாயகன் படத்தில் நான் சித்தால் தீபாவளி, சொல்லு சொல்லுஆகியவை ஜிக்கியின் பிரபல பாடல்களில் சில. தமிழக அரசின் கலைமாணி விருதைப் பெற்றிருந்த ஜிக்கி, புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந் நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜிக்கி மரணமடைந்தார்.அவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். ஜிக்கியின் கணவர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன் ரயில் விபத்தில் பலியாகிவிட்டது நினைவுகூறத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/2004/08/17/jikki.html

ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில
அருள்தாரும் தேவமாதாவே
ஆசைநிலா சென்றதே
காதல் வாழ்வில் நானே
கண் கான்பதற்குள் மனம் கனிந்து விடும்
மானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)
என் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)
மயக்கும் மாலைப்பொழுதே (குலேபகாவலி)
ஜீவிதமே சபலமோ
கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
கள்ளங்கபடம் தெரியாதவனே
காதல் வியாதி பொல்லாதது
ஊரெங்கும் தேடினேன்
துள்ளாத மனமும் துள்ளும்
நான் வாழ்ந்ததும் உன்னாலே
பச்சைக்கிளி பாடுது
அழகோடையில் நீந்தும் அன்னம்
நாடகமெல்லாம் கண்டேன்
பூவாமரமும் பூத்ததே
உள்ளம் ரெண்டும் ஒன்று*
இன்று நமதுள்ளமே*
கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே
சின்னப்பெண்ணான போதில
கண்களால் காதல்காவியம்
யாரடி நீ மோகினி
பேசும்யாழே பெண்மானே
அன்பே என்றன் முன்னாலே
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
காதலெனும் கோயில் (வட்டத்துக்குள் சதுரம் 1978)
ராத்திரி பூத்தது காட்டுரோஜா (தாயம் ஒண்ணு 1988)
நினைத்தது யாரோ (பாட்டுக்கொரு தலைவன்)
வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994

ஜிக்கி ( Jikki , 1937 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி.
கலையுலக வாழ்வு
ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில்,
ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி
அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா ,
தியாகையா , கொல்லபாமா , மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் , ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல்
மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய் ,
உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. 1952 இல்
கே. வி. மகாதேவன் இசையமைத்த
குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான
ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.
வாழ்க்கைச் சுருக்கம்

ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். 1955 இல்
மகேஸ்வரி படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.  1958 இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.


ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில
அருள்தாரும் தேவமாதாவே
ஆசைநிலா சென்றதே
காதல் வாழ்வில் நானே
கண் கான்பதற்குள் மனம் கனிந்து விடும்
மானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)
என் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)
மயக்கும் மாலைப்பொழுதே (குலேபகாவலி)
ஜீவிதமே சபலமோ
கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
கள்ளங்கபடம் தெரியாதவனே
காதல் வியாதி பொல்லாதது
ஊரெங்கும் தேடினேன்
துள்ளாத மனமும் துள்ளும்
நான் வாழ்ந்ததும் உன்னாலே
பச்சைக்கிளி பாடுது
அழகோடையில் நீந்தும் அன்னம்
நாடகமெல்லாம் கண்டேன்
பூவாமரமும் பூத்ததே
உள்ளம் ரெண்டும் ஒன்று*
இன்று நமதுள்ளமே*
கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே
சின்னப்பெண்ணான போதில
கண்களால் காதல்காவியம்
யாரடி நீ மோகினி
பேசும்யாழே பெண்மானே
அன்பே என்றன் முன்னாலே
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
காதலெனும் கோயில் (வட்டத்துக்குள் சதுரம் 1978)
ராத்திரி பூத்தது காட்டுரோஜா (தாயம் ஒண்ணு 1988)
நினைத்தது யாரோ (பாட்டுக்கொரு தலைவன்)
வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994).



தமிழ்த் திரைப்பட இசையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகித் தனது வசீகரக் குரலினிமையினால் இலட்சக்கணக்கான கலையுள்ளங்களை ஈர்த்துக்கொண்டவர் ஜிக்கி.
உற்சாகம் நிறைந்த துள்ளலும், துரிதமும், பாவமும் பரிமளிக்கும் ஜிக்கியின் பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் தனது கணீரென்ற குரலினால் ஜிக்கி சாதனை படைத்துள்ளார். “தந்தானைத் துதிப்போமே” முதலான கிறிஸ்தவ கீதங்களையும் பாடியுள் ளார்.
“அருள்தாரும் தேவமாதாவே”, “ஆசைநிலா சென்றதே”, “ஜீவிதமே சபலமோ”, “கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்”, “கள்ளங்கபடம் தெரியாதவனே”, “காதல் வியாதி பொல்லாதது”, “ஊரெங்கும் தேடினேன்”, “துள்ளாத மனமும் துள்ளும்”, “நான் வாழ்ந்ததும் உன்னாலே”, “பச்சைக்கிளி பாடுது”, “வண்ண வண்ணச் சொல்லெடுத்து” போன்ற ஆயிரக்கணக்கான ஜிக்கியின் திரையிசைப் பாடல்கள் இன்றும் நம் நெஞ்சை நிறைக்கின்றன.
பி.ஜி. கிருஷ்ணவேணி (பிள்ளைவாள்ளு கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி) என்ற இயற்பெயரைவிட, செல்லப் பெயரான ஜிக்கி என்பதே பெருவழக்குப் பெறுவதாயிற்று. ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர்தான் ஜிக்கி. சென்னையில் பிறந்து வளர்ந்து, ஆறுவயதில் சங்கீத ஆர்வமுற்று, தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி (1948) திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி
“அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே” என்பதைத் தனது 11ஆவது வயதில் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகைய்யா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக்கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக்கேட்ட பிரபல இசைமேதை ஜி.இராமநாதன் அவர்கள், பலரது மறுப்பையும் பொருட்படுத்தாது ஜிக்கியின் 13ஆவது வயதில் (1950இல்) மொடேர்ன் தியேட்டர்ஸாரின் 'மந்திரி குமாரி' திரைப்படத்தில் “வாராய் நீ வாராய்”, “உலவும் தென்றல் காற்றினிலே” முதலிய டூயட் பாடல்களை திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது, 1950-1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது.
1952இல் கே.வி. மகாதேவன் இசையமைத்த 'குமாரி' படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ.எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். தொடர்ந்து ராஜா - ஜிக்கி பாடிய நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் மறக்கமுடியாதவைகளாகத் தமிழ்த் திரையிசையுலகை ஆக்கிரமித்துள்ளன. பிரபல வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான 'ஆஹ' இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு 'அவன்' என்பதில் இந்த ஜோடி இனிய பாடல்களைத் தந்தது.
“கண்காணாததும்”, “கல்யாண ஊர்வலம்வரும்”, “ஆகா நானின்று அறிந்து கொண்டேன்”, “உன் பேரைக்கேட்டேன்”,“ஏகாந்தமாம் இம்மாலையில்” முதலான இனிய பாடல்கள் அவனில் ஜிக்கியின் குரலில் ஒலித்தன. பல்வேறு பின்னணிப் பாடகர் - பாடகிகளுடனும் அக்காலத்தில் ஜிக்கி பாடினார். 1955ஆம் ஆண்டு 'மகேஸ்வரி' படத்தில் “அழகு நிலாவின் பவனியிலே” பாடலின் ஒத்திகை இடைவேளை யின்போது, ஏ.எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார். 1958இல் பெற்றோர் ஆசியுடன் ராஜா-ஜிக்கி திருமணம் நடந்தது.
திருமணத்தையடுத்து 1959இல் ஸ்ரீதரின் 'கல்யாணப்பரிசு' படம் பெருவெற்றி பெற்றதுடன், சிறந்த இசையமைப்பாளர் விருதையும் ராஜாவுக்கு ஈட்டிக் கொடுத்தது. தொடர்ந்து 'தேன்நிலவு' (1961) வசூலில் தோல்விப் படமானாலும் பாடல்கள் வெற்றிகண்டு ராஜாவின் புகழைக் கூட்டின. எனினும் ஸ்ரீதருடனான ராஜாவின் மனமுறிவு, திரையுலகிலிருந்து தங்களை ஒதுக்கச் சிலர் விரும்புவதாகக் கருதச்செய்தது. ஜிக்கி திரையில் பாடுவதை ராஜா விரும்பவில்லை. இதனால் உடலும் உள்ளமும் வேதனையினால் வருந்த ஜிக்கி குடும்பத்துடன் ஒதுங்கிக்கொண்டார். இருப்பினும் ஆங்காங்கே அவரது சில பாடல்கள் வெளிவந்தன. கணவருடன் இசைநிகழ்ச்சிகளை நடத்திவந்தார். 70களில் சில படங்களில் மீண்டும் ராஜா-ஜிக்கி இணை பாடியது. 1989ஆம் ஆண்டு நாகர்கோவிலில் இசைநிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புகைவண்டியில் செல்லும்போது, வள்ளியூருக்கு அருகில் உள்ள நிலையத்தில் இறங்கிய ராஜா, புகைவண்டி புறப்பட்டுவிட்ட அவசரத்தில் வேகமாக ஓடினார். படாதஇடத்தில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். இத்துயர நினைவு ஜிக்கியின் நெஞ்சில் படமாக நிலைத்துவிட்டது. நான்கு பெண்கள் (இருவர் மணமுடித்துவிட்டனர்) இரு ஆண்கள் என ஆறுபிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காக மீண்டும் மேடையேறினார். தனது இரு மகன்களான சந்திரசேகர், மகேஸ்குமார் ஆகியோருடன் இசைநிகழ்ச்சிகளில் பாடத்தொடங்கினார்.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் பழைய பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்வித்தார். “காதலெனும் கோயில்” (வட்டத்துக்குள் சதுரம் 1978), “ராத்திரி பூத்தது காட்டுரோஜா” (தாயம் ஒண்ணு 1988), “நினைத்தது யாரோ” (பாட்டுக்கொரு தலைவன்), “வண்ண வண்ண சொல்லெடுத்து” (செந்தமிழ்ப் பாட்டு 1994) ஆகிய பாடல்கள் திரையில் ஜிக்கி பாடிய இறுதிப்பாடல்களாகும். 1948-1994 ஆண்டுகள் வரை ஜிக்கியின் திரையிசை வாழ்வுப் பயணம் விட்டுவிட்டுத் தொடர்ந்தது.
“அழகோடையில் நீந்தும் அன்னம்”, “நாடகமெல்லாம் கண்டேன்”, “பூவாமரமும் பூத்ததே”, “உள்ளம் ரெண்டும் ஒன்று”, “இன்று நமதுள்ளமே”, “கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே”, “சின்னப்பெண்ணான போதிலே”, “கண்களால் காதல்காவியம்”, “யாரடி நீ மோகினி”, “பேசும்யாழே பெண்மானே”, “அன்பே என்றன் முன்னாலே”, “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ” முதலான பலநூற்றுக்கணக்கான பாடல்கள் தமிழ்த் திரையுலகில் ஜிக்கியின் புகழை நிலைநிறுத்திக் காட்டுவனவாகும்.
1937ஆம் ஆண்டு பிறந்த இந்த இசைக்குயில், கடந்த சில ஆண்டுகளாக மார்புப் புற்றுநோயினால் வருந்தியது. ஆயிரமாயிரம் இசை ரசிகர் உள்ளங்களைத் தனது இனிய குரலினால் கட்டிப் போட்ட ஜீவநாதம், 16.08.2004 அன்று அதிகாலை அடங்கிற்று.




ஜிக்கி [பின்னணிப் பாடகி]
தமிழ்த் திரைப்பட இசையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகித் தனது வசீகரக் குரலினிமையினால் இலட்சக்கணக்கான கலையுள்ளங்களை ஈர்த்துக்கொண்டவர் ஜிக்கி.
உற்சாகம் நிறைந்த துள்ளலும், துரிதமும், பாவமும் பரிமளிக்கும் ஜிக்கியின் பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் தனது கணீரென்ற குரலினால் ஜிக்கி சாதனை படைத்துள்ளார். “தந்தானைத் துதிப்போமே” முதலான கிறிஸ்தவ கீதங்களையும் பாடியுள் ளார். “அருள்தாரும் தேவமாதாவே”, “ஆசைநிலா சென்றதே”, “ஜீவிதமே சபலமோ”, “கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்”, “கள்ளங்கபடம் தெரியாதவனே”, “காதல் வியாதி பொல்லாதது”, “ஊரெங்கும் தேடினேன்”, “துள்ளாத மனமும் துள்ளும்”, “நான் வாழ்ந்ததும் உன்னாலே”, “பச்சைக்கிளி பாடுது”, “வண்ண வண்ணச் சொல்லெடுத்து” போன்ற ஆயிரக்கணக்கான ஜிக்கியின் திரையிசைப் பாடல்கள் இன்றும் நம் நெஞ்சை நிறைக்கின்றன.

பி.ஜி. கிருஷ்ணவேணி (பிள்ளைவாள்ளு  கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி) என்ற இயற்பெயரைவிட, செல்லப் பெயரான ஜிக்கி என்பதே பெருவழக்குப் பெறுவதாயிற்று. ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர்தான் ஜிக்கி. சென்னையில் பிறந்து வளர்ந்து, ஆறுவயதில் சங்கீத ஆர்வமுற்று, தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி (1948) திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி “அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே”என்பதைத் தனது 11ஆவது வயதில் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகைய்யா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக்கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக்கேட்ட பிரபல இசைமேதை ஜி.இராமநாதன் அவர்கள், பலரது மறுப்பையும் பொருட்படுத்தாது ஜிக்கியின் 13ஆவது வயதில் (1950இல்) மொடேர்ன் தியேட்டர்ஸாரின் ‘மந்திரி குமாரி’  திரைப்படத்தில் “வாராய் நீ வாராய்”, “உலவும் தென்றல் காற்றினிலே” முதலிய டூயட் பாடல்களை திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது, 1950-1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது.

1952இல் கே.வி. மகாதேவன் இசையமைத்த ‘குமாரி’ படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ.எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். தொடர்ந்து ராஜா – ஜிக்கி பாடிய நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் மறக்கமுடியாதவைகளாகத் தமிழ்த் திரையிசையுலகை ஆக்கிரமித்துள்ளன. பிரபல வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ‘ஆஹ’ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு ‘அவன்’ என்பதில் இந்த ஜோடி இனிய பாடல்களைத் தந்தது. “கண்காணாததும்”, “கல்யாண ஊர்வலம்வரும்”, “ஆகா நானின்று அறிந்து கொண்டேன்”, “உன் பேரைக்கேட்டேன்”,“ஏகாந்தமாம் இம்மாலையில்” முதலான இனிய பாடல்கள் அவனில் ஜிக்கியின் குரலில் ஒலித்தன. பல்வேறு பின்னணிப் பாடகர் – பாடகிகளுடனும் அக்காலத்தில் ஜிக்கி பாடினார். 1955ஆம் ஆண்டு ‘மகேஸ்வரி’ படத்தில் “அழகு நிலாவின் பவனியிலே” பாடலின் ஒத்திகை இடைவேளை யின்போது, ஏ.எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார். 1958இல் பெற்றோர் ஆசியுடன் ராஜா-ஜிக்கி திருமணம் நடந்தது.

திருமணத்தையடுத்து 1959இல் ஸ்ரீதரின் ‘கல்யாணப்பரிசு’ படம் பெருவெற்றி பெற்றதுடன், சிறந்த இசையமைப்பாளர் விருதையும் ராஜாவுக்கு ஈட்டிக் கொடுத்தது. தொடர்ந்து ‘தேன்நிலவு’ (1961) வசூலில் தோல்விப் படமானாலும் பாடல்கள் வெற்றிகண்டு ராஜாவின் புகழைக் கூட்டின. எனினும் ஸ்ரீதருடனான ராஜாவின் மனமுறிவு, திரையுலகிலிருந்து தங்களை ஒதுக்கச் சிலர் விரும்புவதாகக் கருதச்செய்தது. ஜிக்கி திரையில் பாடுவதை ராஜா விரும்பவில்லை. இதனால் உடலும் உள்ளமும் வேதனையினால் வருந்த ஜிக்கி குடும்பத்துடன் ஒதுங்கிக்கொண்டார். இருப்பினும் ஆங்காங்கே அவரது சில பாடல்கள் வெளிவந்தன. கணவருடன் இசைநிகழ்ச்சிகளை நடத்திவந்தார். 70களில் சில படங்களில் மீண்டும் ராஜா-ஜிக்கி இணை பாடியது. 1989ஆம் ஆண்டு நாகர்கோவிலில் இசைநிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புகைவண்டியில் செல்லும்போது, வள்ளியூருக்கு அருகில் உள்ள நிலையத்தில் இறங்கிய ராஜா, புகைவண்டி புறப்பட்டுவிட்ட அவசரத்தில் வேகமாக ஓடினார். படாதஇடத்தில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். இத்துயர நினைவு ஜிக்கியின் நெஞ்சில் படமாக நிலைத்துவிட்டது. நான்கு பெண்கள் (இருவர் மணமுடித்துவிட்டனர்) இரு ஆண்கள் என ஆறுபிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காக மீண்டும் மேடையேறினார். தனது இரு மகன்களான சந்திரசேகர், மகேஸ்குமார் ஆகியோருடன் இசைநிகழ்ச்சிகளில் பாடத்தொடங்கினார்.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் பழைய பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்வித்தார். “காதலெனும் கோயில்” (வட்டத்துக்குள் சதுரம் 1978), “ராத்திரி பூத்தது காட்டுரோஜா” (தாயம் ஒண்ணு 1988), “நினைத்தது யாரோ” (பாட்டுக்கொரு தலைவன்), “வண்ண வண்ண சொல்லெடுத்து” (செந்தமிழ்ப் பாட்டு 1994) ஆகிய பாடல்கள் திரையில் ஜிக்கி பாடிய இறுதிப்பாடல்களாகும். 1948-1994 ஆண்டுகள் வரை ஜிக்கியின் திரையிசை வாழ்வுப் பயணம் விட்டுவிட்டுத் தொடர்ந்தது.“அழகோடையில் நீந்தும் அன்னம்”, “நாடகமெல்லாம் கண்டேன்”, “பூவாமரமும் பூத்ததே”, “உள்ளம் ரெண்டும் ஒன்று”, “இன்று நமதுள்ளமே”, “கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே”, “சின்னப்பெண்ணான போதிலே”, “கண்களால் காதல்காவியம்”, “யாரடி நீ மோகினி”, “பேசும்யாழே பெண்மானே”, “அன்பே என்றன் முன்னாலே”, “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ” முதலான பலநூற்றுக்கணக்கான பாடல்கள் தமிழ்த் திரையுலகில் ஜிக்கியின் புகழை நிலைநிறுத்திக் காட்டுவனவாகும். 

1937ஆம் ஆண்டு பிறந்த இந்த இசைக்குயில், கடந்த சில ஆண்டுகளாக மார்புப் புற்றுநோயினால் வருந்தியது. ஆயிரமாயிரம் இசை ரசிகர் உள்ளங்களைத் தனது இனிய குரலினால் கட்டிப் போட்ட ஜீவநாதம், 16.08.2004 அன்று அதிகாலை அடங்கிற்று. 

No comments:

Post a Comment