Sunday, 10 November 2019

HISTORY OF MILADI NADI AND MOHAMED NABI




HISTORY OF MILADI NABI AND MOHAMED NABI


மிலாடி நபி மற்றும் நபிகள் நாயகம் வரலாறு

இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அவ்வலில் மீலாது நபி பண்டிகை கொண்டாட படுகிறது. இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னால் “மிலாதுன் நபி” என்று தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உலகில் அமைதியும் சகோரகரத்துவமும் மேலோங்க பாடுபட்ட நபிகள் நாயகம் அவர்களை இறைத்தூதராக வணங்குவது சிறப்பு, அதே சமயம் அவரை கடவுளாக வழிபடுவது கூடாது என்பது அவரது வலியுறுத்தலாக இருந்தது nabigal nayagam miladi nabi.

நபிகள் தோன்றியதன் பின்னணி

மனிதர்கள் தவறான பாதையில் சென்ற போது அவர்களை நல்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் தான் நபிமார்கள். இவர்களில் இருபது மூன்றாவதாக வந்த ஹஜ்ரத் ஈஸா அவர்களுக்கு பிறகு ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள் எந்த நபியும் தோன்றவில்லை. மனிதர்கள் மிருகங்களாக மாறி வாழ்க்கை முறை தாழ்ந்து போனது. இதனை நல்வழி படுத்த இறைவனால் அனுப்பப்பட்டவர் தான் நபிகள் நாயகம்.

நபிமார்களில் கடைசி நபி தான் முகமது நபி. இவருக்கு பின் நபிகள் தோன்ற மாட்டார்கள் என்றும் அவர்தான் கடைசி நபி என்றும் குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் கிபி 570 இல் பிறந்தார். இவர் பிறக்கும் முன்பே தந்தையை இழந்தார். இவரது ஆறாம் வயதில் தாயாரை இழந்தார். தாத்தா வீட்டில் வளர்ந்தார், அவரும் காலமாக சித்தப்பா வீட்டில் வளர்ந்தார்.

nabigal nayagam miladi nabi

இறைத்தூதர் நபிகள்
சிறு வயது முதலே மக்களால் நம்பிக்கையானவர் என்றும் உண்மையானவர் என்றும் மக்களால் போற்றப்பட்டவர். இவரது 40 ஆம் வயதில் இறை தூதராக அறிவிக்கப்பட்டார். இறை தூதரானதும் உலக மக்களின் நல்வாழ்வுக்கு வலி காட்டினார். இவரை ஏற்றுக்கொள்ளாத மெக்கா வாசிகள் இவரை துன்புறுத்தினர். மெக்காவிலிருந்து வெளியேறி மதீனாவில் வசித்து வந்த இவருக்கு ஆதரவு பெருகியது. பிறகு மெக்கா மக்களும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டனர்.

பணிவு, அன்பு, பிறர் துயரம் நீக்குதல் என வாழ்ந்த நபிகள் நாயகம் அவர் பிறந்தநாளான அவ்வல் 12 ஆம் நாளிலே இறந்தது, இறைவன் அவரை ஏற்றுக்கொண்டது ஒரே நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தோற்றம், மறைவு ஒன்றான நாளான அவ்வல் 12 ஆம் நாளே மீலாது நபி பண்டிகையாக கொண்டாட படுகிறது.

No comments:

Post a Comment