AMBIKA ,LEGEND OF SOUTHERN ACTRESS
BORN 1962 NOVEMBER 16
அம்பிகா ஒரு திரைப்பட நடிகை. அவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.தற்போது நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவரது சகோதரி ராதாவும் சமகாலத்தில் திரைப்பட நடிகையாகத் திகழ்ந்தார்.
சென்னையின் பிரபல ஸ்டுடியோக்களில் ஒன்று ஏஆர்எஸ். அம்பிகா, ராதா, அவர்களின் அம்மா சரஸ்வதி பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டுடியோ.
சென்னை வளசரவாக்கத்தில் ஓரளவு பெரிய நிலப்பரப்பில் இந்த ஸ்டுடியோ உள்ளது. தமிழின் பல முக்கிய படங்கள், குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு மிக முக்கிய இடமாகத் திகழ்ந்தது ஏஆர்எஸ்.
சென்னையில் பட ஸ்டுடியோக்கள் படிப்படியாக மூடப்பட்டு வந்தபோதும், ஏவி.எம், பிரசாத் ஆகிய இரு ஸ்டுடியோக்கள் மட்டும் மூடப்படாமல் உள்ளன. இந்த லிஸ்டில் ஏஆர்எஸ் ஸ்டுடியோவையும் சொல்லலாம்.1984-ம் வருடம் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது. ஏராளமான படங்கள் இந்த ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. ஆனால் இப்போது படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு மாறிவிட்டதால், டெலிவிஷன் தொடர்கள்தான் இந்த ஸ்டுடியோவை இயங்க வைத்துக் கொண்டிருந்தன.எனவே ஏ.ஆர்.எஸ். கார்டனில் உள்ள படப்பிடிப்பு நிலையங்களை இடித்து விட்டு, அந்த இடத்தில் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல் கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. நடிகை ராதாவின் கணவருக்கு சொந்தமாக மும்பையில் ஏற்கனவே ஒரு நட்சத்திர ஓட்டல் இருக்கிறது. நட்சத்திர ஓட்டல் தொழிலில் அவருக்கு அனுபவம் இருப்பதால், ஏ.ஆர்.எஸ். கார்டனையும் நட்சத்திர ஓட்டலாக மாற்ற ராதா முடிவு செய்துள்ளாராம்.
நடிகை அம்பிகா, அரசியல் மற்றும் சினிமா குறித்த தன் கருத்துகளை வெளிப்படையாகப் பேசுகிறார்.
``என் பூர்வீகம், கேரளா. அங்க எங்கம்மா காங்கிரஸ் கட்சியில் இருந்தாங்க. வீட்டில் எங்கம்மா அரசியல் பத்தி துளிகூட பேசமாட்டாங்க. நானும் என் தங்கை ராதாவும், சினிமா பத்தி எங்க வீட்டில் பேச மாட்டோம்.
அரசியலில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பெண் தலைவர்கள், ஜெயலலிதா அம்மா மற்றும் இந்திரா காந்தி அம்மா. நான் பிஸியா நடிச்சிட்டிருந்தப்போ இந்திரா காந்தி அம்மாவைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைச்சும் என்னால போக முடியலை. ஜெயலலிதா அம்மாவுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்துச்சு.அவங்களை ஒருமுறை சந்திச்சப்போ, `மத்தவங்களைப்போல தள்ளி நின்னு உங்களோடு போட்டோ எடுத்துக்க எனக்கு விருப்பமில்லை. உங்க பக்கத்துல நின்னு போட்டோ எடுத்துக்கணும்'னு கேட்டேன். சரினு சிரிச்சாங்க. அவங்க கையை இறுக்கமா பிடிச்சு பக்கத்துல நின்னு அவங்ககூட போட்டோ எடுத்துகிட்டேன்.
ஆண்டிபட்டி தொகுதியில ஜெயலலிதா அம்மா போட்டியிட்டப்போ, அவங்களுக்கு ஆதரவா பிரசாரம் செய்யச் சொல்லி என்னையும் என் தங்கை ராதாவையும் கேட்டாங்க. அவங்க மேல இருந்த அன்பினால் நானும் ராதாவும் பிரசாரம் செய்தோம். ஜெயலலிதா அம்மா சொன்னதுபோல அந்தத் தொகுதியில் எல்லா இடங்களுக்கும் போய் பிரசாரம் செய்தோம். நாங்க ரொம்ப இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு வேலை செய்த தேர்தல் பணி அது.
நான் நாலு மொழிகளில் நடிச்சிருந்தாலும், தமிழ் மக்கள்தான் எனக்கு அளவுகடந்த அன்பையும் ஆதரவையும் கொடுத்தாங்க. எனவே, தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவேன். `சினிமாக்காரங்க எதுக்கு அரசியலுக்கு வர்றாங்க?'னு பலரும் கேட்கிறாங்க. `சினிமாக்காரங்க ஏன் அரசியலுக்கு வரக்கூடாது?' என்பதுதான் என் வாதம்.
எம்.ஜி.ஆர் ஐயா, கலைஞர் ஐயா, ஜெயலலிதா அம்மானு சினிமா துறையிலிருந்து வந்த அரசியல் தலைவர்களை மக்கள் ஏத்துக்கலையா? சினிமாக்காரங்களுக்கு சினிமாவைத் தவிர, சமூக விஷயங்கள் குறித்தும் தெரியும். அரசியலுக்கு வர விரும்பும் சினிமா பிரபலங்களை முன்கூட்டியே தடுக்காதீங்க. அரசியலுக்கு வந்த பிறகு அவங்களோட செயல்பாடுகளைப் பார்த்துட்டு அப்புறம் விமர்சனம் செய்ங்க. அதுதான் சரியா இருக்கும். நான் நடிக்க வந்தப்போ தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரின் கட்சி ஆட்சியைப் பிடிச்சுது. இப்போ என் நிலைப்பாட்டைச் சொல்ல விரும்பலை. ஆனா, விரைவில் நான் அரசியலுக்கு வரும்போது என் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரியும்" என்கிற அம்பிகா, சினிமா சார்ந்த விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்.
``தமிழ் சினிமாவில் நடிக்க ரயில் பயணமாகத் தமிழகம் வந்துகிட்டு இருந்தேன். அப்போதான் முதன்முதலாக கே.பி.சுந்தராம்பாள் அம்மாவைச் சந்தித்துப் பேசினேன். சென்னைக்கு வந்ததும் நான் முதலில் சந்திச்சது, எம்.ஜி.ஆர் ஐயாவின் அண்ணன் சக்கரபாணி சாரை. திரையுலகில் நான் முதலில் சென்ற துக்க காரியம், `படாபட்’ ஜெயலட்சுமியின் இறப்பு. என்னை மிகவும் கலங்க வைத்த நிகழ்வுகளில் ஜெயலட்சுமியின் மரணமும் ஒன்று.
ஓவர் அன்பு உடம்புக்கு ஆகாதுனு சொல்வாங்க. அதுக்கு ஓர் உதாரணம் சொல்றேன். நான் ஹீரோயினா நடிச்சுக்கிட்டு இருந்தப்போ, கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். நான் திரும்பி வர முடியாத அளவுக்கு என்னைச் சுத்தி எக்கச்சக்க ரசிகர்கள் கூடியிருந்தாங்க. திடீர்னு ஒருவர் ஹேர்பின்னால் என் கையைக் கீறிவிட ரத்தம் வந்திடுச்சு. கூட்டத்தில் அவரை என்னால கண்டுபிடிக்க முடியலை. வலியைச் சமாளிச்சுட்டு, பிறகு சிகிச்சை எடுத்துகிட்டேன்.
சமீபத்துல `ஆடை' படம் ரிலீஸாகும் முன்பே, அதில் அமலா பால் ஆடையில்லாம நடிச்சிருக்கிறதா பலவித விமர்சனங்கள் எழுந்துச்சு. நானும் படம் பார்த்தேன். ஒரு படத்தில் நடிக்கிறது, நடிக்காதது எல்லாம் சம்பந்தப்பட்ட கலைஞர்களின் விருப்பம். அமலா பால் 6 வயசு குழந்தை கிடையாது. அந்தப் படத்தில் நடிக்கும் முன்பே, படம் ரிலீஸாகி எப்படியெல்லாம் பேச்சு வரும்னு யோசிச்சுதான் அவங்க நடிச்சிருப்பாங்க. கதைக்குத் தேவை இருந்ததால்தான் அப்படி நடிச்சிருப்பாங்க.
எனவே, படம் ரிலீஸாகும் முன்பே, பலரும் படத்தைப் பார்க்கும் முன்பே, தனிப்பட்ட கருத்தை யாரும் பிறருக்குத் திணிக்கக் கூடாது. அதனால் ஏற்கெனவே சிரமத்தில் இருக்கும் சினிமா தொழில், மேற்கொண்டு பாதிக்கப்படும்" என்கிறார் அம்பிகா.
தமிழ், மலையாளம் மற்றும் கன்னட சினிமாக்களில் 80-களில் கனவுக்கன்னியாக வலம்வந்தவர், அம்பிகா. அப்போதைய சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்குக் காத்திருந்தனர். பலதரப்பட்ட வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றார். இப்போதுவரை சினிமா பயணத்தைத் தொடரும் அம்பிகா, தன் வெற்றிப் பயணம் குறித்து அவள் விகடன் இதழின் 80'ஸ் எவர்கிரீன் நாயகிகள் தொடருக்காக விரிவாகப் பேசியிருக்கிறார். அதில் இருந்து...
"வீட்டில் மூத்த பெண்ணான எனக்கு, ரெண்டு தங்கை மற்றும் ரெண்டு தம்பி. கேரளாவில் எங்க கல்லற கிராமத்துல விவசாயம் செய்தோம். நாத்து நடுறது முதல் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிப்பது வரை எல்லா விவசாய வேலைகளையும் செய்வேன். அரசுப் பள்ளியில் படிச்சேன். படிப்பில் நாட்டமில்லாத எனக்கு, டான்ஸ் மற்றும் நடிப்பில்தான் அதிக ஆர்வம். ஸ்கூல் 'கட்'டடிச்சுட்டு, அடிக்கடி சினிமாவுக்குப் போவேன். திருவனந்தபுரத்துல 'சோட்டானிக்கர அம்மா' பட ஷூட்டிங் நடந்தது. அப்போ காய்ச்சல்ல கிடந்த நான், எங்கம்மாகிட்ட அடம்பிடிச்சு, என்னை அந்த ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க கூட்டிட்டுப் போகச் சொன்னேன். அழுது அடம்பிடிச்சு, அந்தப் படத்துல ஒரு சின்ன சீன்ல நடிச்சேன். படத்தின் ஒளிப்பதிவாளர் தாரா சார், 'வைராக்கியமா நடிச்சுட்ட. நல்ல முக அம்சம் உனக்கு. எதிர்காலத்துல பெரிய ஹீரோயினா கலக்குவே'ன்னு பாராட்டினார். அவர் சொன்னதுபோலவே நடந்துச்சு.
எம்.ஜி.ஆரின் பெரிய ரசிகையான நான், ஒருமுறை விமானப் பயணத்துல, பாதுகாவலர்களின் கெடுபிடிகளையும் மீறி அவர் பக்கத்துல போனேன். 'சினிமாவுல இருந்து எதுக்கு சார் விலகினீங்க? உங்ககூட நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்'னு சொன்னேன். சிரிச்சவர், 'சரியான நேரத்துக்கு ஷூட்டிங் போயிடணும். பெரிய நடிகையா வரணும்'னு வாழ்த்தினார். அவர்கூட நடிக்காவிட்டாலும், அவர் குடும்பத்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்துச்சு. எம்.ஜி.ஆர் சார் சொன்னதுபோல சரியான நேரத்துக்கு ஷூட்டிங் போயிடுவேன். பொறுப்பான நடிகைனு பெயர் வாங்கினேன். அந்த நம்பிக்கையில்தான், 'விக்ரம்' படத்துல வேறு ஒரு நடிகைக்குப் பதிலா என்னை நடிக்க வெச்சார் கமல் சார். அதேபோலத்தான், 'ஸ்ரீராகவேந்திரர்' படத்துல 'ஆடல் கலையே' பாடலிலும் என்னை நடிக்க வெச்சார் ரஜினி சார்.
ambika
ambika
'எங்கேயோ கேட்ட குரல்', 'காக்கிசட்டை', 'நான் சிகப்பு மனிதன்', 'படிக்காதவன்', 'மனக்கணக்கு', 'மிஸ்டர் பாரத்', 'காதல் பரிசு'ன்னு எக்கச்சக்க ஹிட் படங்கள்ல நடிச்சேன். அப்போ, ஒரே நாள்ல நாலு கால்ஷீட்ல நடிப்பேன். ரெண்டு நிமிஷத்துக்குள் அவசரமா சாப்பிட்டுட்டு ஷூட்டிங்குக்கு ஓடுவேன். 'சகோதரி, பாடல் ஷூட்டிங் இருக்கு'ன்னு இராம.நாராயணன் சார் கேட்க, 'நேரமே இல்லை சார்'னு சொல்வேன். அதனால, இரவு 9 மணிக்கு மேல ஷூட்டிங் நடக்கும். என் மேல் கடுப்பில் உட்கார்ந்திருக்கும் விஜயகாந்த் சார், 'நேரமில்லைன்னு உறுதியா சொல்லவேண்டியதுதானே? உன் தூக்கத்தையும் கெடுத்து, என் தூக்கத்தையும் கெடுக்கறியே'ன்னு செல்லமா கோபப்படுவார்.
இரண்டாவது இன்னிங்ஸ்... என் பர்சனல் வாழ்க்கை!
இரண்டாவது இன்னிங்ஸ்ல அதிக வாய்ப்புகள் வரலை. ஆனாலும், எனக்குப் பிடிச்ச சினிமா, சின்னத்திரை ரோல்களில் தொடர்ந்து நடிக்கிறேன். 'அவன் இவன்' படத்துல நடிச்ச மாதிரி வித்தியாசமான ரோல்களில் நடிக்க ஆசைப்படுறேன். சினிமாதான் என் உயிர். எழுந்து நடக்கிற அளவுக்கு என் உடலில் பலம் இருக்கிறவரை நடிப்பேன். எல்லோரையும்போல உண்மையான அன்புடன்தான் என் திருமண வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆனா, அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போச்சு. விவாகரத்து பெற்றேன். அதனால எனக்கு வருத்தமில்லைன்னு சொல்றது பொய். அந்த வருத்தம் எனக்குள் இருந்தாலும், என் பிள்ளைகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கினேன். துணிச்சலுடன் பிரச்னைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறணும். அந்தக் குணம்தான் என்னை இயக்கிட்டிருக்கு."
`சினிமாக்காரங்க எதுக்கு அரசியலுக்கு வர்றாங்க?'னு பலரும் கேட்கிறாங்க. `
சினிமாக்காரங்க ஏன் அரசியலுக்கு வரக்கூடாது?' என்பதுதான் என் வாதம்.
நடிகை அம்பிகா
திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
அவன் இவன் (2011)
உத்தம புத்திரன் (2010)
வேல் (2007)
மழை(2005)
ஒற்றன் (2003)
ஜோடி (1999)
சுயம்வரம் (1999)
உயிரோடு உயிராக (1999)
ஆனந்த பூங்காற்றே (1999)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (1998)
அருணாச்சலம் (1997)
பெரிய மனுஷன் (1997)
பேய் வீடு (1988)
நாகம் (1988)
கண் சிமிட்டும் நேரம் (1988)
ஆளப்பிறந்தவன் (1987)
கணம் கோர்ட்டார் அவர்களே (1987)
காதல் பரிசு (1987)
மாவீரன் (1986)
இதய கோவில் (1985)
நான் சிகப்பு மனிதன் (1985)
படிக்காதவன் (1985)
மிஸ்டர். பரத் (1985)
காக்கி சட்டை (1985)
உயர்ந்த உள்ளம் (1984)
அன்புள்ள ரஜனிகாந்த் (1984)
நான் பாடும் பாடல் (1984)
எங்கேயோ கேட்ட குரல் (1982)
வாழ்வே மாயம் (1982)
சகல கலா வல்லவன் (1982)
காதல் மீன்கள் (1982)
அந்த ஏழு நாட்கள் (1981) -
வேலுண்டு வினையில்லை
வாழ்க்கை
வெள்ளை ரோஜா
ராஜா வீட்டு கன்று
தழுவாத கைகள்
மனக்கணக்கு
பௌர்ணமி அலைகள்
தாலிதானம்
விக்ரம்
கண் சிமிட்டும் நேரம்
ஆளவந்தான்
வில்லாதி வில்லன்
மக்கள் என் பக்கம்
அண்ணா நகர் முதல் தெரு
நானும் ஒரு தொழிலாளி
வேங்கையின் மைந்தன்
அம்பிகை நேரில் வந்தாள்
தூங்காத கண்ணொன்று ஒன்று
ஒருவர் வாழும் ஆலயம்
மலையாளத் திரைப்படங்கள்
கூட்டு (2004)
வர்ணக்காழ்சகள் (2000)
உதயபுரம் சுல்த்தான் (1999)
நிறம் (1998)
காக்கோத்தி காவிலெ அப்பூப்பன் தாடிகள் (1988)
இருபதாம் நூற்றாண்டு (1987)
விளம்பரம் (1987)
வழியோரக்காழ்சகள் (1987)
எழுதாப்புறங்கள் (1987)
ராஜாவின்றெ மகன் (1986)
ஒரு நோக்கு காணான் (1985)
மறக்கில்லொரிக்கலும் (1983)
கேள்க்காத்த சப்தம் (1982)
பூவிரியும் புலரி (1982)
மணியன் பிள்ள அதவ மணியன் பிள்ள (1981)
அங்ஙாடி (1980)
அணியாத வளகள் (1980)
தீக்கனல் (1980)
இடவழியிலெ பூச்ச மிண்டாப்பூச்ச (1979)
மாமாங்கம் (1979)
No comments:
Post a Comment