Wednesday, 15 August 2018

ARJUN ACTOR BORN 1962 AUGUST 15






ARJUN ACTOR BORN 1962 AUGUST 15


1962 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மைசூரில் பிறந்தவர்ஆக்ஷன் கிங் அர்ஜுன்

கன்னடத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு கன்னடம் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அர்ஜுனின் இயற் பெயரைத் தமிழ் ரசிகர்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை இஅவரது இயற் பெயர் சீனிவாச சார்ஜா. இவரது இன்னொரு பெயர் அசோக் பாபு

1962 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மைசூரில் பிறந்தவர் இவர் இவரது தந்தை சக்தி பிரசாத், கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகர் இவரது தாயார் லட்சுமி, ஒரு கலை ஆசிரியராக இருந்தார்.

புரூஸ் லீ நடித்த எண்டர் த டிராகன் படம் பார்த்ததில் இருந்து கராத்தே மீது இவருக்கு ஆர்வம் பிறக்க தனது பதினாராவது வயதில் கராத்தே பயிற்சி பெற்ற இவர் அதில் கருப்பு பெல்ட்டும் பெற்றார் .

இவரது தந்தை ஒரு நடிகராக இருந்த போதிலும் இவர் அந்தத் துறைக்கு வருவதை அவர் விரும்பவில்லை.ஆகவே இளம் வயதில் இவருக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்தார் அவர்

பிரபல கன்னடப்பட இயக்குனரான ராஜேந்திர சிங் பாபு இவரது தந்தையை சமாதானப்படுத்தி Simhada Mari Sainya என்கிற கன்னடப் படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார் . அசோக்பாபு என்கிற இவரது பெயரை அர்ஜுன் என்று மாற்றி வைத்தவரும் அவர்தான். அதன் பிறகு பல கன்னடப் படங்களில் நடித்த இவரது திறமையைப் பார்த்த நடிகர் ஏவி.எம்.ராஜன், இயக்குநர் இராம.நாராயணனிடம் இவரை அறிமுகப் படுத்தினார். அதைத் தொடர்ந்து நன்றி படத்தில் இவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார் இராம.நாராயணன். அப்படம் தமிழில் இவருக்கு நல்ல அறிமுகத்தையும் வரவேற்பையும் பெற்று தந்தது. தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்த இவருக்கு ஏற்றத்தைத் தந்த படமாக ஏவி.எம். நிறுவனம் தயாரித்த சங்கர் குரு படம் அமைந்தது.

கோடி ராமகிருஷ்ணா இயக்கிய Maa Pallelo Gopaludu என்கிற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமான இவர் அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்த், தெலுங்கு இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார் .

இவரது பல படங்கள் தமிழில் இருந்து தெலுங்கிலும், தெலுங்கில் இருந்து தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டன .

ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த போது சேவகன் என்கிற படத்தை சொந்தமாக தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்தது மட்டுமின்றி அந்தப்படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்றார். அந்தப் படம் இவருக்கு இயக்குனர் நடிகர் என இரு தகுதிகளிலும் வெற்றியைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ள

ஷங்கர் இயக்குநராக அறிமுகமான ஜெண்டில்மேன் படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ஷங்கர் தயாரித்து, இயக்கிய முதல்வன் படத்திலும் கதாநாயகனாக நடித்தார் . இந்த இரு படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்று இவருக்குப் பெரும் புகழைத் தேடி தந்தன .இதில் முதல்வன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி தமிழக அரசு இவரை கவுரவித்தது

இவர் கன்னடத்தில் நடித்த பிரசாத் என்கிற படம் கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று தந்தது.

கமல்ஹாசன் தயாரித்து நடித்த குருதிப்புனல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் இவர். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய அந்தப் படம் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக 68வது அகடாமி விழாவில் திரையிடப்பட்டது. இதில் இவரது வேடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர் இயக்கி நடித்த ஜெய்ஹிந்த் படம் இவருக்கு பெரும் பாராட்டையும், தேச பற்று மிக்க படங்களை கொடுக்கிற நடிகர் என்கிற நற்பெயரையும் பெற்று தந்தது.

ராம நாராயணன்,சுரேஷ் கிருஷ்ணா, வசந்த், கே எஸ் ரவிகுமார் ஆர்.வி உதயகுமார் சுந்தர்.சி செல்வா ,ஜெயம் ராஜா, சுராஜ் வெங்கட் பிரபு உட்பட எண்ணற்ற இயக்குனர்களின் படங்களில் படங்களில் நடித்த இவர் தமிழ்ப் பட உலகின் முக்கியமான இயக்குனர்களான பாரதிராஜா மணிரத்னம் ஆகியோரது படங்களில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்தார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 125 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவரது படங்களில் இடம் பெற்ற சண்டைக் காட்சிகள் "ஆக்சன் கிங்" என்று பட்டத்தை இவருக்குப் பெற்றுத் தந்தது

மற்ற கதாநாயகர்களைப் போலவே பாடகராகவும் அவதாரம் எடுத்த் இவர் இதுவரை ஏ ஆர் ரகுமான் சங்கர் கணேஷ் வித்யாசாகர் தேவா ஆகியோரது இசையமைப்பில் நான்கு பாடல்களைப் பாடியுள்ளார்

இவரது மனைவியின் பெயர் ஆஷாராணி. இவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இருமகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா, விஷால் கதாநாயகனாக நடித்த பட்டத்து யானை படத்தில் கதாநாயகியாக 2௦12ஆம் ஆண்டு அறிமுகமானார்

ஆஞ்சநேயரின் பரம பக்தரான இவர் கோவூர் அருகே உள்ள தனது இடத்தில் இப்போது பிரம்மாணடமான ஆஞ்சநேயர் கோவில் ஒன்றைக் 
கட்டி வருகிறார். அங்கு அமைக்கப்பட உள்ள சிலையை செதுக்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் இவர்.

கதாசிரியர், இயக்குனர்,பாடகர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் திரையுலகில் வெற்றிகரமாக பவனி வரும் இவர் கடந்த முப்பத்தி நான்கு ஆண்டுகளாக கதாநாயகனாக நடித்து வருகிறார் என்றால் அதற்குக் காரணம் இவரது நடிப்புத் திறமை மட்டுமல்ல இவரது பழகும் தன்மைக்கும் அதில் முக்கிய பங்குண்டு

No comments:

Post a Comment