Tuesday, 10 July 2018

VELLORE SEPOY MUTINY RAISED ON 1806 JULY 10









VELLORE SEPOY MUTINY 
RAISED ON 1806 JULY 10




வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும்.

பின்புலம்[மூலத்தைத் தொகு]

1805இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்தக் கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது. இதற்கிடையில், வேலூரில் சிறை வைக்கப் பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன்கள் துருப்புக்களுக்கு ஆரவாரம் கொடுத்துத் தூண்டி விட்டதாகச் சொல்லப் படுகிறது.

புரட்சிப் போக்கு[மூலத்தைத் தொகு]

10-7-1806 அதிகாலையில் பல ஆங்லேய அதிகாரிகள் அவர்கள் படுக்கையில் இருக்கும்போதெ கொல்லப்பட்டனர். அங்கிருந்த 350 பிரிட்டிஷ் ஆட்களில், 100 பேர் கொல்லப் பட்டனர். ஆனால் இந்தப் புரட்சி அரசியல், ராணுவ குறிக்கோள்களுடன் எழவில்லை. அதனால், இந்தியத் துருப்புக்களை, அதிகாரிகளைக் கொன்று களித்து வந்தனர். அவர்கள் வேலூர் கோட்டையின் கதவைக் கூட மூடவில்லை. இரண்டு நாட்களில், ஆர்காட்டிலிருந்த 19ம் சிறிய குதிரைப் படை (19த் லைட் ட்ரகூன்ஸ்) வேலூர் நோக்கிப் பாய்ந்து, வேலூர் கோட்டையைக் கைப்பற்றியது. அந்தச் சண்டையில் 350 துருப்புகள் உயிர் துறந்தன; அந்த அளவு காயமடைந்தனர். மற்ற இந்தியத் துருப்புக்களும் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட துருப்புகள் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அஞ்சல் தலை[மூலத்தைத் தொகு]

இச் சிப்பாய்ப் புரட்சி, 1857 பெரும் புரட்சிக்கு முன்னோடியாகும். இந்நிகழ்வின் ஞாபகமாக, இந்திய அரசு ஜூலை 2006ல், அஞ்சல் தலை வெளியிட்டது.

வேலூர் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தை சேர்ந்த நகரமும் வேலூர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். வேலூரின் முக்கியமான இடமாக வேலூர் கோட்டை சிறந்து விளங்குகின்றது. கோட்டையின் உள்ளே இந்துக் கோயில், கிறிஸ்தவ தேவாலயம், இஸ்லாமியரின் மசூதி போன்ற மூன்று வணக்கஸ்த் தலங்கள் முக்கியமான சிறப்பம்சமாக ஒருங்கே இங்கு அமைந்துள்ளது.

வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார். பின்னர் 
மராட்டியர்களாலும் தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக் கோட்டை விடப்பட்டது. 1760ஆம் ஆண்டில் இக் கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர்.

ஜலகண்டேஸ்வரர் கோயில் வேலூர் கோட்டையை போலவே இக் கோயில் கி.பி-1566ஆம் ஆண்டிற்கு முன்பாக வீரப்ப நாயக்கரின் மகனும், லிங்கபூபாலரின் தந்தையுமான சின்ன பொம்மி நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. இம் மன்னன் மஹாமண்டலேச்வரர் திருமலைய தேவருக்கும் மஹாராஜ சதாசிவ தேவருக்கும் ( அவருக்குப்பின் ஸ்ரீரங்க தேவ மஹாராஜருக்கும்) உட்பட்ட சிற்றரசாக வேலூர்ச் சீமையில் ஆண்டான் இக் கோயில் விஜயநகரக் கட்டிடப்பாணியின் இறுதி வடிவில் கட்டப்பட்டு கருவறையும் உண்ணாழியும் அதனுடன் ஒருமித்த மஹாமண்டபமும் கூடியது வடபுறம் நடராஜருக்குரிய சந்நிதி அறையின் அடித்தளத்தின் நிலவறை யொன்றுண்டு.

கோயிலமைப்பின் வெளிப்பிரகாரத்தின் தெற்கு முகமாக உயர்ந்த கோபுர வாயிலொன்றும் தென் மேற்கே கல்யாண மண்டபமும் வட மேற்கே அகழியுடன் தொடர்புள்ள நிலவறையுடன் 
கூடிய மண்டபமும் அம்மன் சந்நிதியும் உள்ளன. கல்யாண மண்டபத்தின் சிறந்த நூண்ணிய சிற்பவேலைப்பாடு விஜயநகரபாணியின் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது. கோட்டை ஜலகண்டடேஸ்வரருக்கு மானியமாக வழங்கப்பட்ட அருகிலுள்ள எழுசிரா மக்களைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புக்கள் இருக்கின்றன. இதனின்றும் சிவனுக்குரிய ஜலகண்டேஸ்வரர் என்று மாறியதை அறியலாம் 17,18,19 ஆம் நூற்றாண்டில்தொடர்ந்து விளக்க பீஜாப்பூர் அதில் ஷாஹி மராட்டிய கர்நாடக நவாபியப் படையெடுப்புக்களில் போது இக் கோயில் படைமுகமாக உபயோகிக்கப்பட்டு சிதைந்து பூசையினை யற்றநிலை அடைந்தது. 
ஆனால் இப்போது புதுப்போலிவுடன் உள்ளது.

வேலூரில் அமைந்துள்ள கோட்டை 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் தலைவர்கள் இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. கருங்கற்கலால் கட்டப்பட்ட இக் கோட்டை இதன் பாரிய மதில்கள் அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்கும் பெயர் பெற்றது.

நாயக்கர்ளிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும் பின்னர் மராட்டியருக்கும் தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரித்தானியருக்கும் இக் கோட்டை பிரித்தானியர்களிடையே இருந்தது. பிரித்தானியர் காலத்தில் இக் கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினைரச் சிறை வைத்திருந்தனர். இலங்கையின் கண்டியரசனின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கபட்டிருந்தான்.

பிரித்தாணியருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி இக் கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராஜனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்.

1506-ல்--சி;ன்ன பொம்ம நாயக்கரால் கட்டப்பட்டது (விஜயநகர பேரரசு)
1650-ல்--பிஜபூர் சுல்தான் கைப்பெற்றினார்கள்
1676-ல்--மராட்டியர்கள் கைபடபெற்றினார்கள்
1708-ல்-- தௌலத்கான் (டெல்லி) கைப்பெற்றினார்
1760-ல்--பிரிட்டிஷ்காரர்களால் கைப்பெற்றப்பட்டது
1806-ல்--முதல் சிப்பாய் கலகம் கைப்பெற்றப்பட்டது

வேலூர் சிப்பாய் கலகம் எழுச்சி ஜீலை 10 1806ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் கலகம் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும். 1805இல் வேலூர் கோட்டையில் இருந்து மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்திய துருப்புக்கள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அன்று அதிகாலையில் தான் திப்பு சுல்தான் மகனுக்கு திருமணம் இந்த திருமணத்தில் 200 ஆங்கிலேயர்கள் கலந்து கொண்டார்கள். இந்த தருனத்திற்காக காத்திருந்த சிற்பாய் கலகம் தங்கள் படையெடுப்பை ஆரம்பித்தனர்

பல ஆங்கிலேயே அதிகாரிகள் அவர்கள் படுக்கையில் கொல்லப்பட்டார்கள். அங்கிருந்த 350பிரிட்டிஷ் ஆட்களில் 100பெயர் கொல்லப்பட்டனர். இரண்டு நாட்களில் ஆர்காட்டிலிருந்து 19ஆம் சிறிய குதிரைப் படை(19த் லைட் ட்ரகூன்ஸ்) வேலூர் நோக்கி பாய்ந்தது வேலூர் கோட்டையை கைப்பற்றியது அந்த சண்டையில் 350 துருப்புக்கள் உயிர் துறந்தனர் அந்த அளவு காயமடைந்தார்கள். மற்றய இந்திய துருப்புக்கள் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்ட துருப்புக்கள் ஒவ்வொருவரையும் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப்பட்டு பீரங்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

வேலூர் கோட்டை கருங்கற்களால் முழுக்க முழுக்க செய்யப்பட்ட ஒரு பிரமாண்டமான கோட்டை ஆகும்;. இந்தக் கோட்டையை காவல் காப்பதற்கு என கோட்டையின் உட்புறங்களில் காவலர்கள் 15 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு என விஷேடமாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண் அங்கு காணக்கூடியதாக உள்ளது.

No comments:

Post a Comment