Saturday, 7 July 2018

VASCO-DA-GAMA ,PORTUGAL EXPLORER






VASCO-DA-GAMA ,PORTUGAL EXPLORER




வாஸ்கோ ட காமாவின் முதல் இந்தியப் பயணம்[தொகு]

1483 இல், டீகோ காவோ போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து வந்தடைந்தது; அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்டோலொமு டயஸ் ஆப்ரிக்க கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தது. ஒரு கதைப் படி, ஆப்ரிக்காவின் தொன்கோடி முனைக்கு "நன்நம்பிக்கை முனை" எனப் பெயர் வைத்தது - டயஸ் தான் என்பார்கள். (அதே இடத்திற்கு திரும்பவும் வந்து, பின் அங்கிருந்து இந்தியாவை அடையும் பயணத்தை துவக்கிடலாம் என்ற நம்பிக்கையில்). பின்னர் இன்னொரு பயணத்தில் அவர் இறந்து விட்டதால், அந்த பொறுப்பு வாஸ்கோ ட காமாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெனிஸ் நகரத்திலிருந்து 1497 ஜூலை 8 இல் வாஸ்கோட காமா புறப்பட்டார் 

அதன் பின்னர் நன்நம்பிக்கை முனையை 1497 இல் அடைந்தார் வாஸ்கோ ட காமா. பின்னர் அங்கிருந்து, ஆப்ரிக்காவின் கிழக்கு கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்ரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைந்தார்.

மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் அறிவுச்சுரங்கமாக - அதன் வணிகக் காற்றையும், அதன் வீச்சையும் நன்கறிந்த மாலுமியான அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெறுகிறார் வாஸ்கோடகாமா. 1498 இல், அந்தத் துணையுடன் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய தென்மேற்கு பருவக்காற்றாலே தான் அவ்வளவு துரிதம் சாத்தியமாயிற்று.வாஸ்கோடகாமா 1498 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இந்தியாவில் உள்ள கோழிக்கூடு என்ற பகுதியினை வந்தடைந்தார். கோழிக்கூடு பகுதியினை ஆண்ட சாமரின் மன்னர் அவரை வரவேற்றார். வாஸ்கோடகாமா அவரிடம் சில சலுகைகளைப் பெற்றார். வாஸ்கோடகாமா இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார்.
அவர் திரும்பிச் செல்கையில் பல விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு சென்றார். இதனால் கவரப்பட்ட மற்ற ஐரோப்பிய வணிகர்கள் இந்தியா வர விரும்பினர். வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர் திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. வாஸ்கோடகாமா 1501-ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக இந்தியா வந்தார். அப்போது இந்தியாவில் கண்ணனூர் என்ற இடத்தில் போர்த்துக்கீசிய வணிகத்தலம் ஒன்றை நிறுவினார். இப்படியாக, இந்தியாவிற்கான இன்னொரு மார்கத்தினை சாத்தியப்படுத்திக் காட்டினார் காமா. குறிப்பாக அரபு நாடுகள் வழியாக தரை வழி மார்க்கமானது அரசியல் காரணாங்களால் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளான ஒன்றாக இருந்ததால், கடல் மார்க்கமான, அதிலும் அன்னியர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இந்தியப் பெருங்கடல் வழி மார்க்கமானது, சிறப்பானதொரு மாற்று என்ற ஒரு நம்பிக்கையை வழங்கியது.



விளைவுகள்[தொகு]
வாஸ்கோ ட காமாவின் இந்தியப் பயணத்தின் விளைவாக,ஐரோப்பா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளுக்கிடையேயான ஒரு நேரடி கடல்வழித் தடம் அமைந்தது.இதன் காரணமாக,எண்ணற்ற நாடுகள் பெரும் பயனடைந்தன.இதுவே வாஸ்கோ ட காமா கடல்வழிப் பயணத்தின் அடிப்படை முக்கியத்துவமாக இருந்தது.இந்தப் பயணத்தால் போர்ச்சுக்கல் நாட்டிற்கு குறுகிய காலத்தில் அதிகம் பயன் கிடைத்தது.கீழை நாடுகளுக்கான புதிய கடல் வாணிக வழித் தடத்தைப் போர்ச்சுகல் கட்டுப்படுத்தியது.அதன் மூலம், நாகரிக உலகின் எல்லையோரத்தில் மிகவும் ஏழை நாடாக இருந்துவந்த இந்த நாடு, ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வச் செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றாக மிக விரைவில் முன்னேறியது.அத்துடன் இந்தியப் பெருங்கடலைச் சுற்றிக் கணிசமான எண்ணிக்கையில் குடியேற்றங்களையும் துரிதமாகப் போர்ச்சுக்கல் நிறுவியது. இந்தியாவிலும், இந்தோனேசியாவிலும், மடகாஸ்கரிலும், ஆப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலும், வேறு பல பகுதிகளிலும் போர்ச்சுக்கலுக்குப் புறக் காவற்படைத் தளங்களும் நிறுவப் பெற்றன.இவை தவிர, பிரேசிலும் மேற்கு ஆப்ரிக்காவிலும் போர்ச்சுகலுக்குக் குடியேற்றங்கள் இருந்து வந்தன. இக்குடியேற்றங்களை இவரது பயணங்களுக்கு முன்னரே போர்ச்சுக்கீசியர் நிறுவியிருந்தார். இந்தக் குடியேற்றங்களில் பெரும்பாலானவற்றை இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பிற்பாதி வரையிலும் போர்ச்சுகல் விடாது வைத்திருந்தது.இந்தியாவுக்கு வாஸ்கோ ட காமா புதிய கடல் வாணிக வழித் தடத்தை ஏற்படுத்தியதன் விளைவாக,இந்தியப் பெருங்கடலின் வாணிக வழித்தடங்களில் அதுநாள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த இஸ்லாமியர்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.இஸ்லாமிய வாணிகர்கள் ஒடுக்கப்பட்டனர். மேலும்,அவர்களுடைய இடத்தைப் போர்ச்சுக்கீசியர்கள் கைப்பற்றி கொண்டனர்.அது மட்டுமின்றி,இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான நிலவழி வாணிகத் தடங்கள் பயனற்றுப் போயின.ஏனெனில்,ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்லும் போர்ச்சுக்கீசிய கடல் வழித்தடம் எளிதாகவும் மலிவாகவும் இருந்தது. இது, கீழை நாடுகளுக்கான வாணிக வழித் தடங்களைக் கட்டுப்படுத்தி வந்த ஆட்டோமான் துருக்கியர்களுக்கும் பேரிடியாக அமைந்தது. ஏனென்றால், எஞ்சிய ஐரோப்பியப் பகுதிகளுக்குப் புதிய கடல் வாணிக வழித்தடம் மூலம் தூர நாடுகளிலிருந்து சரக்குகள் வருவது முன்பை விட மலிவாக இருந்தது.[6]

எனினும்,வாஸ்கோ ட காமாவின் பயணத்தினால்,இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.1498 ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா ஐரோப்பாவின் தொடர்பின்றி தனிமைப்பட்டுக் காணப்பட்டது.உண்மையைக் கூறின்,வரலாற்றின் பெரும் பகுதியில் ஓரளவு தன்னிறைவுடைய ஒரு தனி நாடாகவும் இந்தியா இயங்கிவந்தது.அவ்வப்போது,வடமேற்கிலிருந்து மட்டுமே சில அயல்நாட்டுப் பாதிப்புகள் ஏற்பட்டன.ஆயினும்,வாஸ்கோ ட காமாவின் பயணத்தால் ஏற்பட்ட கடல்வழித்தடத்தின் வாயிலாக, ஐரோப்பிய நாகரிகத்துடன் இந்தியாவுக்கு நேரடித் தொடர்பு உண்டாயிற்று. ஐரோப்பியரின் செல்வாக்கும், வலிமையும், இந்தியாவில் படிப்படியாக வளர்ந்து வந்தது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பிற்பாதிக்குள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே பிரிட்டிஷ் குடியரசின் கீழ் அடிமைப்பட்டது.(வரலாற்றில் இந்தியா முழுவதும் ஒரே ஆட்சியாளரின் கீழ் ஒரு குடையில் இருந்தது.இந்தக் காலத்தின்போதுதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது).இந்தோனேசியாவைப் பொறுத்த வரையில் முதலில் அது ஐரோப்பியச் செல்வாக்குக்கு ஆட்பட்டது.பிறகு,அது முழுமையாக ஐரோப்பிய் ஆதிக்கத்தின்கீழ் வந்தது.இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் இந்தப் பகுதிகள் யாவும் சுதந்திரம் பெற்றன.[6]














No comments:

Post a Comment