Wednesday, 6 June 2018

BHAVANA , SOUTH INDIA ACTRESS BORN 1986 JUNE 6




BHAVANA , SOUTH INDIA ACTRESS
BORN 1986 JUNE 6





பாவனா (பிறப்பு - ஜூன் 6, 1986, திருச்சூர், கேரளா) தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது


கன்னடத்தில் வெளியான 'ரோமியோ' என்ற படத்தில், பாவனா கதாநாயகியாக நடித்தார். அப்போதிலிருந்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நவீனுடன் நட்பில் இருந்தார் பாவனா. பிறகு, அவருடன் நட்பு காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கடந்த ஐந்து வருடங்களாகக் காதலர்களாக இருந்துவந்தனர். முதலில், ஊடகங்கள் முன்பு தம் காதலை மறுத்துவந்த இவர்கள், பிறகு ஆம் என்றனர். 


இந்நிலையில், இவர்களின் திருமணம் பெரியோர்களால் கடந்த வருடம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், சினிமாவைச் சேர்ந்த மிகச் சிலர் கலந்துகொண்டனர். நடிகை பாவனாவின் தந்தை பாலச்சந்திரனின் திடீர் மறைவு போன்ற சில காரணங்களால்  திருமணம் தள்ளிப்போனது. இன்று, 2018 JAN 22 பாவனாவுக்கு திருச்சூரில் உள்ள திருவம்பாடி ஆலயத்தில் காலை 9.30 மணிக்கு திருமணம் நடைபெற்றது. நடிகை பாவனா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பிரமாண்டமான முறையில் திருச்சூர் லூலூ சென்டரில் இன்று மாலை நடைபெற இருக்கிறது.





ஹோட்டலில் கூத்தடித்த திலீப்-காவ்யா.. 




நேரில் கண்டதை மஞ்சுவிடம் சொன்ன பாவனா! கடத்தலின் பரபர பின்னணி

திருவனந்தபுரம்: திலீப்புடன் உள்ள உறவை துண்டித்து கொள்ள அவரது முதல் மனைவி மஞ்சுவாரியர் முடிவு செய்வதற்கு நடிகை பாவனா ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளது அம்பலமாகியுள்ளது. சினிமா நடிகர்களுக்கான கலைவிழா வெளிநாடு ஒன்றில் நடந்தபோது வெளிநாட்டிற்கு மனைவி மஞ்சுவாரியார், மகளுடனும், பிற நட்சத்திரங்களுடனும் சென்றுள்ளார் திலீப். ஆனால் திடீரென்று தனது மனைவியையும் மகளையும் மட்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளார். காவ்யா மாதவன், இரவில் திலீப் தங்கியிருந்த ஓட்டலுக்கு வருவதாக கூறியதையடுத்தே, மஞ்சு வாரியரையும், மகளையும் ஊருக்கே திருப்பியனுப்பினாராம் திலீப். பார்த்த பாவனா இதையடுத்து, காவ்யா, இரவில் திலீப்பும் தங்கியிருந்த அறைக்கு வந்துள்ளார். இவர்கள் இருவரும் தங்கிய அறை அருகேதான் பாவனாவின் அறையும் இருந்துள்ள. இரவில் எதற்காகவோ பாவனா தனது அறையை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது திலீப்பும், காவ்யாவும் ஒன்றாக ரூமிலிருந்து வெளியேறியதை பாவனா பார்த்துள்ளார்.

மறைத்த பாவனா அதற்கு முன்பாகவே அரசல், புரசலாக இந்த உறவு பற்றி அறிந்திருந்த பாவனா, அதை நேரில் பார்த்து அதிர்ந்தார். மஞ்சு வாரியர், பாவனாவின் தோழி என்பதும், இந்த அதிர்ச்சிக்கு முக்கிய காரணம். இது தொடர்பாக மஞ்சு வாரியரின் உறவினர்களில் ஒருவரும் பிரபல நடிகர் ஒருவரின் மனைவியுமான நடிகையிடம் பாவனா தெரிவித்துள்ளார். அதனை அவர் திலீப்புடன் நடித்த மற்றொரு நடிகை ஒருவரிடம் கூறியுள்ளார்.

நேரில் நியாயம் கேட்ட மஞ்சு இந்த தகவல்களை அறிந்த மஞ்சுவாரியர் ஒரு நாள் நடிகை பாவானாவின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது, "திலீப் குறித்து தகவல்கள் அறிந்தபோதும் நெருங்கிய தோழியான நீ ஏன் என்னிடம் கூறவில்லை" என்று கேட்டு பாவனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.ஸ்பீக்கர் போன் பாவனாவும், மஞ்சு வாரியரும் பேசிக்கொண்டு இருந்தபோது, இந்த உறவை நிரூபித்துக்காட்டுகிறேன் என கூறிய பாவனா தனது போனில் இருந்து காவ்யா மாதவனின் தாயார் போனுக்கு அழைத்துள்ளார். அவர்கள் திலீப்புடனான உறவு பற்றி பேசியதை ஸ்பீக்கர் போனில் கேட்ட மஞ்சுவாரியர் நடந்த விபரங்களை உறுதி செய்துள்ளார். மேலும் மஞ்சுவாரியர் இதை ஒரு போதும் அறியக்கூடாது என்றும் காவ்யா மாதவனின் தாயார் அப்போது போனில் பேசினாராம். இதனை கேட்டு மஞ்சுவாரியர் பாவனா வீட்டில் உட்கார்ந்து அழுதுள்ளார். இதன் பிறகே மஞ்சுவாரியர், திலீப்பை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.
பழி வாங்கல் பாவனா இவ்வாறு ஸ்பீக்கர் போனில் போட்டு மஞ்சுவாரியர் விவாகரத்து செய்ததால்தான் திலீப் அவர் மீது கோபத்தில் இருந்ததாக கூறுகிறது கேரளா சினிமா உலகம். இதை மனதில் வைத்துதான், பாவனாவை நாகரீகமற்ற வகையில் பழி வாங்கியுள்ளார் திலீப்.



திரைப்படங்கள்
தமிழ்
2009 - அசல்
2008 - ஜெயம்கொண்டான்
2007 - வாழ்த்துக்கள்
2007 - ராமேஸ்வரம்
2007 - ஆர்யா
2007 - கூடல் நகர்
2007 - தீபாவளி
2006 - வெயில்
2006 - கிழக்கு கடற்கரை சாலை
2006 - சித்திரம் பேசுதடி
மலையாளம்
2003 - ஸ்வப்னக் கூடு
கன்னடம்
2010 - ஜாக்கி
2011 - விஷ்ணுவர்தனா
2012 - ரோமியோ
2012 - யாரே குகாத்லி
2013 - தொப்பிவாலா
2013 - பச்சன்
2015 - மைதிரி

No comments:

Post a Comment