Tuesday, 19 June 2018

AUNG SAN SUU KYI ,IRON LADY OF MYANMAR BORN 1945 JUNE 19







AUNG SAN SUU KYI ,IRON LADY OF MYANMAR
BORN 1945 JUNE 19



இரும்பு பெண்மணி 
'ஆங் சான் சூச்சி பிறப்பு: சூன் 19, 1945

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) மக்களாட்சி-ஆதரவாளர், மியான்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் ஆவார். மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார்.

கடைசியாக 1990 ஆம் ஆண்டில் இருந்து 2010 நவம்பர் 13 ஆம் நாள் இராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்படும் வரை வீட்டுக்காவலில் இருந்து வந்துள்ளார்[2].

இவரது தந்தை ஆங் சான் அன்றைய பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிரதம அமைச்சராக இருந்தவர். 1947 இல் இவர் படுகொலை செய்யப்பட்டார்[3]. சூச்சீ 1990 இல் ராஃப்டோ பரிசு, சாக்கரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்றார்.

ஐரோப்பிய யூனியன் அமைப்பின் சார்பில் வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான சக்காரோவ் விருது 1990ம் ஆண்டு ஆங்சான் சூ கீக்கு வழங்கப்ப டுவதாக அறிவிக்கப்பட்டாலும், அக்காலகட்டத்தில் இவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததால் அதை பெற இயலவில்லை.

சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு அவ்விருதினை 2013இல் ஆங் சான் சூ கீ பெற்றுக் கொண்டார்.[4] 1992 இல் இந்திய அரசின் சவகர்லால் நேரு அமைதிப் பரிசைப் பெற்றார்.

2007 இல் கனடா அரசு இவரை அந்நாட்டின் பெருமைய குடிமகளாக அறிவித்தது [5]; இப்படி அறிவிக்கப்பெற்றுப் பெருமை பெற்றவர்கள் ஐவரே.[6]. 1990 இல் மியான்மா ரில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இவரது கட்சி பெரும்பான்மையான இடங்களை வென்றது. ஆங் சான் சூச்சியின் மக்களாட்சிக்கான தேசிய அமைப்புக் கட்சி நாட்டின் 59% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் இடங்களில் 81% இடங்களை (485 மொத்த இடங்களில் 392 இடங்களை) வென்றது

ஆனாலும் இவர் தேர்ந்தலுக்கு முன்னரே வீட்டுக் காவல் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் பிரதமராக முடியவில்லை. சூலை 20, 1989 முதல் நவம்பர் 10, 2010 வரையிலான 21 ஆண்டுக்காலத்தில் 15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்[13].

வாழ்க்கை[தொகு]

1945 சூன் 19 இல் பிறந்த ஆங்சான் சூச்சிக்கு இரண்டு வயது இருக்கையில் 1947 ஆம் ஆண்டு சூலை 19 இல் அவரது தந்தை செனரல் ஆங் சான் (Aung San) படுகொலை செய்யப்பட்டார்.

பின் 1948 சனவரி 04 ஆம் திகதி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து பர்மா (அப்போது மியன்மார், பர்மா என்றே அழைக்கப்பட்டது) விடுதலையானது. தனது கல்வியை இந்தியாவைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் பின் அமெரிக்காவிலும் நிறைவு செய்த ஆங்சான் சூச்சி, 1972 சனவரி 01 இல் திபேத்திய, பூட்டான் பண்பாட்டு ஆய்வாளரும் அறிஞருமானான பிரித்தானியர் மைக்கேல் ஏரிசு (Michael Aris) என்பவரை மணந்தார்.

1988 இல் தாயாரின் உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து மியன்மாருக்குத் திரும்பிய அவர், 1988 செப்டம்பர் 27 இல் உருவாக்கப்பட்ட மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு (NDL, National League for Democracy) இன் பொதுச்செயலாளராக பதவியேற்றார்.

1988 மார்கழி 27 இல் தாயார் மரணமடைய, 1989 சனவரி 02 இல் நடைபெற்ற தாயாரின் இறுதிக்கிரியைகளை அடுத்து மியன்மார் அரசியல் களத்தில் ஆங்சான் சூச்சி தீவிரமாகக் களமிறங்கி இராணுவ அடக்குமுறை க்கெதிராகப் போராடினார். அதைத் தொடர்ந்து 1989 சூலை 20 இல் அவர் இராணுவ அரசால் வீட்டுக்கா வலில் வைக்கப்பட்டார். 1990 வைகாசி 27 இல் நடை பெற்ற தேர்தலில் அவரது கட்சி 81% பெரும்பான்மை யைப் பெற்றிருந்த போதிலும் இராணுவ ஆட்சி யாளர்கள் அவரது கட்சியினை ஆட்சிப் பீடத்தில் ஏறவிடாது தடுத்ததுடன், ஆங்சான் சூச்சி வெளிநாட்டு க்காரரை (பிரித்தானியர்) மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட அருகதை இல்லை என்றும் அறிவித்து விட்டனர். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.

இரும்பு பெண்மணி 'ஆங் சான் சூச்சி' மியான்மர் மக்களுக்காக 21 ஆண்டுகள் வீட்டுச்சிறையும் விடுதலையுமாக மாறிமாறி வாழ்ந்த உலகத்தரமான ஒரு பெண் அரசியல் தலைவர்தான் இந்த ஆங் சான் சூச்சி.

வெற்றிக்கு தோல்வி

மியான்மரில் மக்கள் புரிதல் இல்லாத அதிகாரத்தை எதிர்த்து, மக்கள் விருப்ப கொள்கை வகுத்து, அதை ஜனநாயக பாதையில் மக்களால் வென்றெடுத்தும், ராணுவம் மறுத்ததால் இவரது வெற்றிக்கே தோல்வி கிடைத்தது.

ஐ.நா. மற்றும் அயல்நாடுகளின் கண்டனத்தாலும் தேர்தலுக்கு முன்பே சூச்சி வீட்டுச்சிறையில் இருந்ததாலும் 80 சதவீத இடங்களை கைப்பற்றியும் அந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றி அவருக்கு பயன்படாமல் போனது.
பன்முகங்கள்

மியான்மர் சமூக பெண் ஜனநாயகவாதி, 
அரசியல்வாதி, 
ஆசிரியை, 
அயல்நாட்டு தூதர், 
முதல் மாநில ஆலோசகர், 
ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைவர்.

மியான்மரின் முதல் பெண் வெளியுறவுதுறை அமைச்சர், 
ஜனாதிபதி அமைச்சகத்தின் முதல் பெண் அமைச்சர்

போன்ற பன்முகங்களை கொண்டவர் இப்போது 70 வயதை அடைந்திருக்கும் இந்த இரும்புப் பெண்மணி.

குடும்ப வாழ்க்கை

1947 ல் ஆங் சான் என்பவர், நவீன மியான்மர் ராணுவத்தை ஏற்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து சுதந்திரத்தை பெற முயற்சித்தார். ஆனால் அதே ஆண்டில் துரதிர்ஷ்டவசமாக எதிரிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார். அத்தகைய தியாகியும், மியான்மரின் தேசத் தந்தையுமாகிய ஆங் சானின் இளைய மகள் தான் இந்த ஆங் சான் சூச்சி.

இவர் பிரிட்டிஷ் பர்மாவில் ரங்கூனில் (தற்போது யங்கூன்)1945, ஜூன் 19 ல் பிறந்தார். இவரது தாயர் பெயர் கின் கீ. இவர்கள் தெராவடா புத்தமதத்தை சேர்ந்தவர்கள். இவருக்கு இளம் வயதில் இருந்தே மொழிகளை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தது. பர்மீஸ், இங்க்லீஷ், ஃபிரஞ்ச், ஜப்பானீஸ் ஆகிய நான்கு மொழிகளில் நன்கு புலமை உண்டு.

ஆங் சான் சூச்சியின் தாயார் கின் கீ, புதிதாக உருவான பர்மா அரசாங்கத்தில் ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக இருந்தார். பர்மாவின் தூதராக இந்தியா வுக்கும் நேபாளத்துக்கும் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதனால், சூச்சியின் இளம்வயது படிப்பு டெல்லியில் தொடங்கியது. இவர் 1964 ம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியலில் தனது முதல் பட்டப்படிப்பை முடித்தார். பிறகு, தத்துவம், பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1968 ல் தனது முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்தா ர்.அதனைத்தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

மைக்கேல் ஏரிஸ் என்பவருடன் 1972 ல் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அலெக்ஸாண்டர் ஏரிஸ், கிம் ஏரிஸ் என்ற இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். சூச்சி வீட்டுச்சிறை இருந்த காலத்தில் கணவரை 5 முறை மட்டுமே சந்தித்தார். கணவரும் குழந்தைகளும் இங்கிலாந்தில் வசித்தனர். ஏரிஸ் அனுப்பிய அரசியல், தத்துவம், வரலாறு வகைகளான புத்தகங்களை படிப்பது, பியானோ வாசிப்பதுதான் சூச்சியின் சிறைவாச பொழுதுபோக்கு.

கடைசியாக, 1995 கிறிஸ்துமஸின் போது சந்தித்த ஏரிஸ், பிறகு சந்திக்காமலே, 1999 மார்ச் 27 அன்று அவரது 53 வது பிறந்தநாளிலேயே இறந்தார். மரணத்தில் கூட கலந்துகொள்ள முடியாமல் 1989 லிருந்தே சூச்சி வீட்டுச்சிறையில் இருந்துவந்தார். 2011க்கு பிறகே அவருடைய பிள்ளைகள் அவரை வந்து சந்தித்தனர்.

அரசியல் எழுச்சி

ஆங் சான் சூச்சியின் அரசியல் வாழ்க்கை அவருடைய அன்னையை பின்பற்றியே 1988 க்கு பிறகு தீவிரமெடுத்தது. மியான்மரில் நடந்த வெகுஜன விரோத ஆட்சிக்கு எதிராக, மக்களிடம் ஜனநாயக எழுச்சியை ஏற்படுத்தினார். ஜனநாயகத்துக்காக அமைக்கப்பட்ட புதிய தேசிய லீக் (NLD) கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். 1990 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் சார்ந்த என்.எல்.டி. கட்சிக்கு 81 சதவீத இடங்களில் மக்கள் வெற்றியை கொடுத்தனர்.

ஆனால், சர்வதேச கண்டனங்களின் விளைவாக, தேர்தலுக்கு முன்பே வீட்டுச்சிறையில் இருந்துவந்த அவரிடம் ராணுவம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்துவிட்டது. மேலும், அந்த தேர்தல் முடிவையும் செல்லாததாக்கியது. 2010 ல் நடந்த தேர்தலிலும் இவருடைய கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டதால் ராணுவ ஆதரவுடனனான ஒற்றுமை மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றிபெற்றது.

2012 ல் நடந்த இடைத்தேர்தலில் 45 இடங்களுக்கு 43 இடங்களை பிடித்தார். 2015 தேர்தலில் அவருடைய கட்சி 86 சதவீத இடங்களை பிடித்து பெரும் வெற்றி பெற்றது. ஆனாலும், சூச்சியின் இறந்த கணவன் மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டு பிரஜைகள் என்பதால் ஜனாதிபதி பதவி ஏற்க மறுக்கப்பட்டது. பிறகு, பிரதமருக்கு நிகரான மாநில ஆலோசகர் பதவியை அவருக்காக உருவாக்கி அவரிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது.

1989 லிருந்து 2010 ம் ஆண்டு வரையிலான 21 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் இருந்தார். உலக அரசியல் கைதிகள் வரலாற்றில் தனித்தன்மையானது இவர் வாழ்க்கை. இவர் மியான்மர் மக்களை விட்டு பிரிந்து வேறுநாட்டுக்கு செல்வதென்றால் அதற்கு சட்டம் சுதந்திரமளித்தது. ஆனாலும், தன்னுடைய லட்சியத்தில் தர்மம் இருந்ததால், உலகம் என்றேனும் உண்மையை புரிந்துகொண்டு தனக்கும் தனது கொள்கைக்கும் சேர்த்தே விடுதலை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மக்களுக்காக வீட்டுக்காவலிலே இருந்தார்.

அதுபோலவே, மனிதம் மற்றும் அமைதியே முதன்மை முன்னேற்றம் என நம்பும் அமெரிக்க அதிபர் ஒபாமா முயற்சியால் நவம்பர் 13, 2010 ல் விடுதலையானார்.

சூச்சியின் விடுதலைக்குப் பிறகு, சர்வதேச அளவில் பெருமதிப்பு ஏற்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு, ரஃப்டோ பரிசு, ஷகாரோவ் பரிசு, ஜவகர்லால் நேரு விருது, சர்வதேச சிமோன் போலிவர் பரிசு உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment