Monday, 7 May 2018

ROBERT CALDWELL , FATHER OF DRAVIDAN LANGUAGE BORN 1814 MAY 7- 1891 AUGUST 28





ROBERT CALDWELL , FATHER OF 
DRAVIDAN LANGUAGE BORN 
1814 MAY 7- 1891 AUGUST 28




கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்

இளமைக் காலம்
இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.[1]

மொழியியல் ஆய்வுகள்
1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே."[2]

குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன் முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர். குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும், நில வழியாகவும் பெலுசித்தான், மெசபடோமியா முதலிய வடமேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர். – அறிஞர் கால்டுவெல்

வரலாற்று ஆய்வுகள்
திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெரும் பேறாக "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட இராபர்ட் எரிக்கு ஃபிரிக்கென்பர்க்கு (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.[3]

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்
நற்கருணை தியான மாலை (1853)
தாமரைத் தடாகம் (1871)
ஞான ஸ்நானம் (கட்டுரை)
நற்கருணை (கட்டுரை)
பரதகண்ட புராதனம்
கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)
திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)






மிழருக்கும் ஐரோப்பியருக்கும் ஏற்பட்ட சமய, வாணிப மற்றும் அரசியல் தொடர்புகளால் தமிழில் சில மாறுதல்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. தமிழ் மொழிக்கு ஏற்பட்ட மாறுதல் அல்லது வளர்ச்சி பெரும்பாலும் ஐரோப்பியப் பாதிரியார்களால் உண்டானவையே என்று மயிலை சீனி. வேங்கடசாமி அவரது ‘கிறித்தவமும் தமிழும்’ என்ற நூலில் கூறுகிறார். இப்படி, கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழகம் வந்து, தமிழுக்குத் தொண்டாற்றிய ஐரோப்பியர்களுள் ராபர்ட் கால்டுவெல் குறிப்பிடத் தக்கவர்.

அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல், லண்டன் மிஷனரி சங்கத்தில் சேர்ந்தார். பின்னர் அந்த சங்கத்தின் சார்பாக கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பயின்றார். அங்கு கிரேக்க மொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் சாண்ட்ஃபோர்டு என்பவர் மொழிநூல் முறை குறித்தும், ஒப்பிலக்கணத்தின் வாயிலாக மொழியின் தன்மையை உணர்ந்துகொள்ளும் முறை குறித்தும் ஆற்றிய உரைகள், அவருக்கு மொழியியலின்மீது ஆர்வத்தைத் தூண்டியது. பின்னாளில் அவர் தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் குறித்த நூலை எழுதுவதற்கு அடித்தளமிட்டவர் இந்தப் பேராசிரியரே என்று கால்டுவெல் கூறியுள்ளார்.

தென்திசை நோக்கிய பயணம்

1838-ல் லண்டன் மிஷனரி சங்கத்தின் சார்பாக, சமயப் பணிபுரிவதற்காக சென்னை துறைமுகம் வந்து சேர்ந்தார் கால்டுவெல். சென்னையில் தங்கி மூன்றாண்டுகள் தமிழைக் கற்றுக்கொண்டு, அங்கிருந்து திருநெல்வேலிக்குக் கால்நடையாகவே பயணம் மேற்கொண்டார். இந்த மண்ணையும் மக்களையும் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர் தேர்ந்தெடுத்த இந்தப் பயணம், தமிழர் வாழ்க்கை முறைமீது அவருக்குப் பேரார்வத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலியில் உள்ள இடையன்குடியில் வசிக்கத் தொடங்கிய கால்டுவெல், சமயப் பணியோடு தமிழ்ப் பணியையும் தொடர்ந்தார்.

திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில், திருக்குறள், சீவக சிந்தாமணி, நன்னூல் ஆகிய நூல்களைக் கற்றுணர்ந்தார் கால்டுவெல். தமிழில் உள்ள கிறிஸ்தவ மதப் பிரார்த்தனை நூலையும், புதிய ஏற்பாட்டையும் திருத்தி வெளியிட்ட குழுவில் உறுப்பினராக இடம்பெற்றார். தமிழ்ப் பணியோடு வரலாற்று ஆய்வுகளிலும் ஈடுபட்ட கால்டுவெல், ‘திருநெல்வேலியின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ (A Political and General History of Tinnevely) என்னும் நூலைப் படைத்தார்.

ஒப்பியல் ஆய்வு

கால்டுவெல்லின் பணிகளுள் தலையாயதாகப் போற்றப்படுவது, திராவிட மொழிக் குடும்பம் குறித்த அவரது ஆய்வுகளே. இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் வடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததே என்னும் கருத்து வலுப்பெற்றிருந்த காலம் அது. 1838-ல், கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பேராசிரியர் எல்லிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கு இடையேயுள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி, இவை நான்கும் ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கூறினார். சென்னையில் உள்ள எல்லிஸ் சாலை இவரது பெயராலேயே அமைந்துள்ளது.

இவரைத் தொடர்ந்து கிறித்தவ லாசர், வில்லியம் கேரி, ஸ்டீவன்சன் போன்ற பலரும் தமிழ், மலையாளம் போன்ற மொழிகள் தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், வட இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்றும் நிறுவ முயன்றனர்.

பண்டைய தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும், பண்டைய தெலுங்குச் சொற்களோடும் ஒப்பிட்ட கால்டுவெல், நூற்றுக்கணக்கான இயற்சொற்களின் வேர்கள் இம்மூன்று மொழிகளிலும் ஒன்றுபட்டு இருப்பதைக் கண்டார். ஐரோப்பிய மொழி நூல்களில் உள்ள ஆராய்ச்சி முறைகளின் துணையோடு, தென்னிந்திய மொழிகளை ஆராய்ந்தார் கால்டுவெல். 15 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில், தென்னிந்திய மொழிகளின் இலக்கணக் கூறுகளும், சொல்லாக்க முறைகளும் அடிப்படையான ஒற்றுமை உடையதாக விளங்குவதைக் கண்டார்.

தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குடகு ஆகிய ஆறு மொழிகளைத் திருந்திய மொழிகள் என்றும், துதம், கோதம், கூ, கோண்ட், பிராகுய் உள்ளிட்ட மொழிகளைத் திருத்தமடையாத மொழிகள் என்றும் வகைப்படுத்தினார். இம்மொழிகளைத் திராவிடம் என்னும் பெயரால் அழைத்தார். இந்திய மொழிகளில் திராவிட மொழிகள் ஒரு தனிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்றும், அவை இந்தோ – ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையவை அல்ல என்றும் பல்வேறு சான்றுகளோடு நிறுவினார். தனது ஆய்வை 1856–ல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

தனித்தியங்கும் தமிழ்

திராவிட மொழிகளுக்கே உரித்தான கூறுகளைத் தமது நூலில் விளக்கியுள்ள கால்டுவெல், பெயர்களை உயர்திணை என்றும், அஃறிணை என்றும் திராவிட இலக்கண ஆசிரியர்கள் வகுத்த முறை உலகத்தில் வேறெந்த மொழி நூலிலும் காணப்படாத சிறந்த முறை என்று போற்றியுள்ளார்.

தென்னிந்திய மொழிகளுள் மலையாளம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையதாக வழங்கிவந்ததாகவும், பின்னாளில் வடமொழிச் சொற்களைத் தழுவிய காரணத்தால், முற்கால மலையாளத்திலிருந்து வேறுபட்டு வழங்கலாயிற்று எனவும் குறிப்பிடும் கால்டுவெல், அவ்வாறே தெலுங்கும் கன்னடமும் வடமொழிச் சொற்களை அளவின்றி ஏற்று வழங்கத் தொடங்கியதால், இருமொழிகளும் வடமொழி உதவியின்றித் தனித்தியங்கும் ஆற்றலை இழந்துவிட்டதாகவும் கூறுகிறார்.

தமிழ் நூல்களை இயற்றிய புலவர்கள் இயன்றவரை தமிழ்ச் சொற்களையே நூல்களில் கையாண்டதாலும், இன்றியமையாத வடமொழிச் சொற்களை ஏற்கும்போதும் அவற்றைத் தமிழுக்கேற்ற வகையில் மாற்றியமைத்து வழங்கிவந்ததாலும் இன்றளவும் தமிழ்மொழி அதன் திறம் குன்றாது வழங்கிவருகிறதெனவும், தமிழில் இன்று வழங்கும் வடமொழிச் சொற்களை அகற்றினாலும் தமிழ் தனித்து இயங்கவல்லதென்றும் தனது ஆராய்ச்சியில் நிறுவியுள்ளார்.

கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதிய காலத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் தவிர்த்த ஏனைய மொழிக் குடும்பங்களில் ஒப்பியல் ஆய்வு போதிய அளவு வளர்ச்சியடையவில்லை. மேலும் ஒலியியல் ஆய்வு, கால்டுவெல்லின் காலத்தில் அறிவியல் கண்ணோட்டத்துடன் மிகுந்த வளர்ச்சியைப் பெறவில்லை. இவ்வாறு ஒப்பியல் ஆய்வும் ஒலியியல் ஆய்வும் மிகவும் பின்தங்கியிருந்த காலத்தில் குறைந்த வசதிகளோடு சிறந்த ஆய்வை அவர் மேற்கொண்டு பல அரிய செய்திகளை வெளிக்கொண்டுவந்தார் என்பதுதான் அவரது பெருமுயற்சியின் தனிச்சிறப்பு.

-செ. விஜய்கிருஷ்ணராஜ்,






வாசிப்புப் பழக்கம் இல்லாமல் மாணவன் உயர்மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும்; ஆனால், எதனையும் விரிவாக அறியாமல், தன் பாடத்திட்டத்தில் மட்டும் திருப்தி கொண்டுவிடுவான்'' என்றார் ராபர்ட் கால்டுவெல். வாசிப்புமேல் அவருக்கு இருந்த காதல்தான், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்கிற நூலை எழுதவைத்தது. தமிழ்மொழிக்குச் 'செம்மொழி' என்ற சிறப்பைத் தேடித்தந்த அந்தப் பெருமகனாரின் 203-வது பிறந்த தினம் இன்று.


இளமைக்காலம்!

1814-ம் ஆண்டு மே 7-ம் நாள், அயர்லாந்து நாட்டின் கிளாடி ஆற்றங்கரையிலுள்ள பெல்பாஸ்ட் என்ற சிற்றூரில் பிறந்தவர் ராபர்ட் கால்டுவெல். இளமையிலேயே தரமான கல்வியை அளிக்க அவருடைய பெற்றோர் முடிவெடுத்தனர். அதன் காரணமாகத் தங்களது தாயகமான தாய்லாந்துக்கு கால்டுவெல்லை அழைத்துச் சென்றனர். பள்ளிக்கல்வியைத் தொடர்ந்த அவர், ஆர்வத்தின் காரணமாக இளமையிலேயே ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்று விளங்கினார். அதோடு ஓவியக்கலையையும் கற்றுத் தேர்ந்தார். அதன் பின்னர், சமய நூல்களையும், மொழியியல் நூல்களையும் தேடித்தேடி படிக்கத் தொடங்கினார். கிரேக்க மொழியில் தொடங்கிய அவரது ஆர்வம் தமிழின் மீது தணியாத காதலை ஏற்படுத்திக்கொண்டது. 

தமிழின் மீதுகொண்ட காதல்!

1838-ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த அவர், கப்பலில்... பிரௌன் என்பவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகத் தமிழைக் கற்றுக்கொண்டார். தமிழின் அழகியலை அறிந்த அந்த அறிஞர் பெருமகனார், தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி மொழியைத் திறம்பட பயின்றதாக நூல்கள் சொல்கின்றன. வட்டார வழக்குமொழிகளைக் கொண்டது தமிழ் என்பதால், பேச்சு வழக்கை அறியவும், அதன் மூலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டார் கால்டுவெல். திருச்சி, சிதம்பரம், நீலகிரி, நாகப்பட்டினம் போன்ற பல்வேறு  மாவட்டங்கள், பிற ஊர்கள், மலைக்கிராமங்கள் என தனது பயணத்தை வடிவமைத்துக்கொண்டு தமிழ் மொழியில் உள்ள வட்டார மொழிகளைக் கண்டறிந்தார்.  

அந்தத் தேடலின்போது, 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலை எழுதினார். அதில், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் பற்றிய பதிவுகள், ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, மொழியியல் நடையில் எவ்வாறு மற்றமொழிகளில் தமிழின் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் கூறியுள்ளார். தமிழில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எவ்வாறு கிரேக்க மொழியில் திரித்துக் கையாளப்பட்டுள்ளது என்பது பற்றியும் அந்த நூலில் தெரிவித்துள்ளார்.

ராபர்ட் கால்டுவெல்

ஆய்வியலும்... கட்டுரைகளும்! 

சிங்கள இலக்கிய நூலான 'மகாவம்சம்' என்ற நூலின் துணைக்கொண்டு தமிழ் - ஈழ உறவுகளையும் ஆய்வு செய்துள்ளார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தவரும் ராபர்ட் கால்டுவெல்தான். பின்னர் தாம் கண்டறிந்தவற்றைக் கட்டுரைகளாகவும் வெளியிட்டார். 

மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு, கலாசாரம், வாழ்கை முறை போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியியல் தரவுகளை தமது பயணத்திலேயே சேகரித்தார். அது மட்டுமன்றி, பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து அதில் இருந்து குறிப்புகள் எடுத்து ஒப்பிட்டுமுறை செய்து, ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். பின்னர் அவற்றை எல்லாம் தொகுத்து 1856-ல், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

"தன்னிடையே இடம்பெற்றிருக்கும் சொற்களை அறவே ஒழித்துவிட்டுத் தனித்து உயிர் வாழ்வதோடு... அவற்றின் துணை, சிறிதும் இல்லாமல் வளம்பெற்று வளர்வதோடு முன்பிருந்த நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக நிலைபெறும்'' என்றார் கால்டுவெல். அவர் சொல்லிய அந்தஸ்தோடு செம்மொழியாக நிலைபெற்றது தமிழ்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அன்பு!

தமிழோடு மட்டும் அவருடைய உறவு முடிந்துவிடவில்லை. தமிழ் மக்கள் மீதான அன்பும் காட்டாற்று வெள்ளம்போல் அவர் நெஞ்சில் பாய்ந்தோடியது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மிகுந்த அன்புகொண்டிருந்ததாக நூல்கள் கூறுகின்றன. ஆங்கிலக் கல்வி படித்துவிட்டு உயர்சாதி பிரிவினிரிடம் பணியாற்றலாம் என்ற காலகட்டம் அப்போது இருந்தது. ஆனால், கால்டுவெல் ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் பணியாற்றவே விரும்பினார். ஒடுக்கப்பட்ட மக்களைக் கல்வியறிவு பெறச் செய்வதற்கு பெரும் பணியாற்றியுள்ளார்.

''சமஸ்கிருதம்தான் மொழிக்கான தலைமையானது'' என்று வட மொழி ஆசிரியர்கள் பலரும் கர்ஜித்துவந்த நிலையில், ''காலம் காலமாகத் திராவிடர்கள் (தமிழர்கள்) பேசிவந்த மொழியே தமிழ்மொழி. அந்தமொழி மிகவும் தொன்மையானது'' என்று ஆய்வுகளின்படி வெளியிட்டார். இப்படித் தமிழுக்கும், திராவிடத்துக்குமான நெருங்கிய பந்தத்தை மிக அழகாக உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமகனார் கால்டுவெல்.

கால்டுவெல்

மதமும் மொழியும் தடை இல்லை!

செயற்கரிய காரியங்களைச் செய்யவும் பிற உயிர்களை நேசிக்கவும் மதமும் மொழியும் அவசியம் இல்லை என்பதை உணர்த்தியவர். எந்த மொழியும் நம் மொழியே எந்த மனிதரும் நமது உறவே என்ற தொடர்பை ஏற்படுத்தியவர் அந்தத் தமிழ்மகன். தமிழ்மொழியோடு சுவாசம் கொண்டிருந்த அவர், கடுங்குளிர் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு 1891-ல் ஆகஸ்ட் 28-ம் தேதி இ

No comments:

Post a Comment