Tuesday, 10 April 2018

SLAVERY IN MUSLIM TERRITORIES




SLAVERY  IN MUSLIM TERRITORIES



அரேபியாவில் அடிமைத்தனம் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒன்று. ஏழாம் நூற்றாண்டில் நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. ஆனால் திருக்குரானும், நபி(ஸல்)அவர்களின் பொன்மொழிகளும் அடிமைத்தனத்தைத் தடுத்து அடிமைகளை விடுதலை செய்யும் ஆர்வத்தை தூண் டின. அடிமைகளை விடுதலை செய்து விட மனிதனுக்கு பரிந்துரைக்கிறது என்று பலர் பொய்யுரைக்கின்றனர்  அரேபியாவில் குறிப்பாக பெண் அடிமைகள் மதிப்புடன் நடத்தப்பட்டனர் என்றும் சொல்லமுடியாது 


இசுலாம் சமயத்தின் முக்கிய நீதி அமைப்புகள் அடிமைத்தனத்தை முற்காலத்தில் ஏற்றுக்கொண்டன.[1] முகமதுவும் அவரோடு உடனிருந்தவர்களும் அடிமைகளை வாங்கி விற்றனர். சிலரை விடுதலையும் செய்தனர்.[1] 19 நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிய சிந்தனை அடிமைத்தனம் இஸ்லாமிற்கு உடன்படாத செயற்பாடு என திரும்பியது. சவூதி அரேபியாவின் en:Wahhabi இதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு காலத்தில் நாடோடிகளாகவும், அடிமைகளாகவும் இருந்த “மம்லுக்” இனத்தவர்கள் இஸ்லாமிய இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் சரியான சந்தர்ப்பத் தில் தனது எஜமான கலீஃபாக்களை மதிக்காமல் தாங்களே கைப்பற்றிய பகுதிக்கு ஆட்சியாளர்கள் ஆனார்கள். 

இதனால் அரேபியப் பகுதியில் அடிமைகளை இராணு வத்தில் சேர்ப்பது குறைந்தது. ஆனால் கிறிஸ்தவ நாடுகளில் ஆண், பெண் அடி மைகள் மிகவும் மோசமாக கையாளப்பட்டனர். தவ்ராத் மற்றும் பைபிள் அடிமை களைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. வட ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களிலும், அரசபைகளிலும் அடிமைகளை உரிமை கொண்டாடுவதைப் பற்றி விவாதங்கள் நடந்தன. ஆனால் மேற்கு ஐரோப்பாவில் அடிமைகள் மெது வாக குறைந்து போய் சுய பொறுப்பாளிகளாய் ஆகிப்போனார்கள்.


அடிமைகள் எஜமானர்களின் விலைமதிப்பில்லாத சொத்தாவார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் பாபிலான் அரசு ஹம்முராபி என்ற (CODE OF HAMMURABI) சட்டத்தையே இயற்றி இருந்தது. மனிதவரலாற்றில் முதன்முத லாக புராதன கிரேக்கர்கள் தான் அடிமைகளை வைத்திருந்ததாக சரித்திரம் பதிவு செய்து வைத்திருக்கிறது. கிரேக்கர்கள் தங்கள் அடிமைகளை போரில் வென்றெடு த்தவர்கள் என்றும், சுயமாக சிந்தித்து வேலை செய்பவர்கள் என்றும், அதேசமயத் தில் தங்கள் எஜமானனுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றும் சட்டமியற்றி வைத்திருந் தார்கள். 


ஏதென்ஸில் அடிமைகள் மதம் மாறக்கூடாது. ஆனால் அவர்களின் நிலைமை வேலைகளைப் பொறுத்து மாற்றப்படும். எதிர்பாராமல் ஏதென்ஸின் அடிமைகள் பெரும்பாலும் சுரங்கங்களில் பணிபுரிவதால், நிறைய அடிமைகள் இறந்து போய் விடுவார்கள். ஏதென்ஸ் அரசே 300 வில்லெறியக்கூடிய ஸைத்திய அடிமைகளை காவலர் படையில் வைத்திருந்தனர். அவர்கள் அடிமைகளாய் இருந்தாலும் கொஞ்சம் கௌரவமாக இருந்தனர் என்றும் சொல்லமுடியாது .

வீடுகளில் பணிபுரியும் ஏதென்ஸ் அடிமைகளின் எதிர்காலம் அவர்களின் எஜமானர்களுடனான உறவைப் பொறுத்தது. பெண் அடி மைகள் எஜமானர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதால் அவர்களுக்கு சற்று நெருக்கம் கிடைக்கப் பெறுவார்கள். ஆண்கள் வீட்டு நிர்வாகம் மற்றும் எடுபிடி வேலைகளைச் செய்வார்கள். அப்படியே அவர்களின் எஜமானர்கள் விடுதலை அளித்தாலும் மாற்று எஜமானிடம் வேலைசெய்த காரணத்தால், கௌரவக் குறைச்சலாக கருதி வேறுயாரும் அவர்களை வேலைக்குச் சேர்ப்பதில்லை. அதனால் ஏதென்ஸின் ஆண் அடிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டார்கள். 

ரோம் நாட்டின் அடிமைகளும் பல வேலைகளைக்கற்று அரசு அலுவலகங்களில் பணியிடம் பெற்றார்கள். சுரங் கங்களிலும், வயல்களிலும் சங்கிலிக் கூட்டமாக வேலை செய்தனர். பொழுது போக்கில் கிளாடியேட்டர் என்னும் வீர விளையாட்டில் ஈடுபடுத்தப்பட்டனர். ரோம அடிமைகளில் ஸ்பார்டகஸ் (SPARTACUS) என்பவர்கள் மிகவும் புகழ் பெற்றார்கள்.

பதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் முதல் முறையாக துணை சஹாரா ஆப்பிரிக்காவில் அடிமைகள் கப்பலைக் கொண்டு வந்தார்கள். இந்தப்பகுதி கடலில் சஹாராவிலிருந்து மெடிட்டரேனிய னுக்கு அடிமை வியாபாரத்திற்கு பெரிதும் உதவியது. இதனால் போர்ச்சுகீசியர் கள் புதிய அடிமை வியாபார சந்தையைத் துவக்கினார்கள். இந்த புதிய அடிமை சரக்கு வியாபாரத்திற்கு இயற்கையும் பெரிதும் உதவியது. வால்கானிக் வெர்டி தீவுகள் பெரிய பாறைகளுடன் கப்பல் போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தாக இருந் தது. இதனால் போர்ச்சுகீசியர்கள் இந்த சூடு மிகுந்த தீவை அடிமைச்சந்தைக்குத் தேர்ந்தெடுத்தனர். 

மேற்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு சஹாரா கடல் வழியைப் பயன்படுத்தினர். போர்ச்சுகீசியர்கள் 1460 ல் வால்கானிக் வெர்டி தீவுக்கு வந்தார்கள். 1466 ல் குறுகிய காலத்தில் அடிமை வியாபாரத்தில் புதிய உலகசந்தையைத் துவங்கி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கண் டார்கள். கினியா நாட்டின் கரையோரத்திலும் போர்ச்சுகீசியர்கள் அடிமைச்சந்தை யைத் துவங்கி அடிமை வியாபாரத்தில் தனி இடத்தைப் பெற்றனர். கினியாவில் துணிகளைக் கொடுத்துவிட்டு அடிமைகளைப் பெற்றுச்செல்வார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்த அபாயகரமான அடிமைக் கடத்தலில் பிரிட்டிஷ் கப்பல்கள் பெரிதும் ஈடுபட்டன. அவர்கள் கடல் பயணத்தை வீணாக்குவதில்லை. இதைப்பல காரணங்களுக்காக பயணிக்கும் கப்பலில் அடிமைகளைக் கடத்திச் செல்வதை ‘முக்கோண வியாபாரம்’ (TRIANGULAR TRADE) என்று அழைத்தனர். இந்த முக்கோண வியாபாரம் கப்பல் உரிமையாளருக்கு பொருளாதார ரீதியில் லாபம் அளித்ததால் அட்லாண்டிக்கின் கடல் வழி அடிமை கடத்தலுக்கு மிகவும் பயன்பட்டது. லிவர்பூல் மற்றும் பிரிஸ்டால் துறைமுகத்தி லிருந்து மேற்கு ஆப்பிரிக்காவுக்கு வெடிப்பொருள்கள், மதுவகைகள், பருத்தி துணிகள், உலோகங்கள் மற்றும் மணிகளை ஏற்றிச்செல்லும். 


கினியாவில் இந்த பொருட்களுக்காக வியாபாரிகள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அவர்கள் ஆப்பிரிக் காவின் உட்பகுதியில் பிடிக்கப்பட்ட அடிமைகளை பொருட்களுக்காக மாற்றிக் கொள்வார்கள். வியாபாரப் பொருட்கள் கைமாறியவுடன் அடிமைகள் ஆபத்தான மற்றும் பரிதாபமான முறையில் கப்பலில் ஏற்றப் (அடைக்க) படுவார்கள். இந்த அபாயகரமான பயணத்தில் ஆறு அடிமைகளில் ஒரு அடிமை மேற்கிந்திய தீவு களை கப்பல் அடையும் முன் இறந்துவிடுவார். இறுதியாக கப்பல் அமெரிக்க அடிமைச் சந்தையை வந்து அடையும்.


ஆச்சரியப்படாதீர்கள் இப்படியாக ஏறக்குறைய 1.5 கோடி அடிமைகள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இறக்குமதி செய்யப் பட்டிருக்கிறார்கள். அரேபியர்கள் அடிமைகளை எதற்காக எப்படி உபயோகப்படுத் தினார்கள் என்பதையும் இஸ்லாம் அதை எதிர்த்ததும் அனைவரும் அறிந்தது. ஆனால், இன்று மனித உரிமைகளைப்பற்றியும், நேட்டோ என்ற கூட்டுப்படை அமைத்து உலக சமாதானம் என்று ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, துருக்கி என இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து ரத்தத்தில் குளிக்க வைக்கும் அமெரிக்காவும், ஐரோப்பாவும் எப்படி அடிமைகளைப் பயன்படுத்தினார்கள் என் பதை அறிந்தால் நெஞ்சம் பதைக்கும். 


இந்த அடிமை வியாபாரம் முதன்முதலில் வெளி உலகத்திற்கு அஃப்ரா பெஹ்ன் என்பவர் “ஓரூனோகோ”(OROONOKO) என்ற நாவலில், ஒரு ஆப்பிரிக்க இளவரசனும்,அவன் காதலியும் ஆங்கிலேயர்களால் அடிமை களாக சுரினாமுக்கு கடத்தப்படுகிறார்கள். அவர்கள் படும் வேதனையில் இந்த கப்பலில் கடத்தும் முறையையும் எழுதி இருந்தார். இதன் பிறகு உலகம் முழுவ தும் வழக்கம் போல் கண்டனக்குரல்கள் எழுந்தன. பிரிட்டனில் புகழ்பெற்ற “பாஸ் டன் மஸ்ஸாக்கர்” நிகழ்ந்தது. இதற்கு பிரிட்டிஷாரின் குண்டுக்கு பலியான முதல் அடிமை ‘க்ரிஸ்பஸ் அட்டுக்ஸ்’ என்பவராவார். தங்கள் நாடுகளை வளப்படுத்திக் கொண்டு வழக்கப்போல் ஐரோப்பாவும், அமெரிக்காவும் அடிமைத்தனம் ஒழிய வேண்டி அமைதிக்குழு அமைத்தும், மாநாடுகள் நடத்தியும் ஒரு நூற்றாண்டு களுக்கும் மேலாகப் பேசிப்பேசி அடிமைத்தனத்தை அழித்தார்கள். 

எந்தெந்த நாடுகளில் கூடி என்னென்ன பேசினார்கள் என்பதெல்லாம் தூக்கம் வர வழைக் கும் சமாசாரங்கள். அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது சுமார் 40 லட்சம் அடி மைகள் விடுதலை செய்யப்பட் டார்கள். சில ஆயிரம் பேர் தங்கள் அடிமைக் கதைகளை பின்வரும் சந்ததிக்கு நாட்குறிப்பு, கடிதங்கள், ஒலிப்பதிவு மற்றும் வாய்மூலம் பதிவு செய்து வைத்தார்கள்.





அங்காடித்தெரு வெளியான பின்னர் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் கணிசமானவை வளைகுடா நாடுகளில் வேலைசெய்யும் தமிழர்களால் அனுப்பப்பட்டவை. ஒன்றைக்கூட வெளியிட அவர்கள் விரும்பவில்லை. பாதிரியைப்போல நின்று அவற்றை நான் கேட்கவேண்டும் என்று மட்டும் விரும்பினார்கள் என்று பட்டது. அங்காடித்தெரு காட்டும் சுரண்டல் உலகம் வளைகுடாவில் வேலைசெய்யும் அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லபப்ட்டிருந்தது.

கடுமையான தண்டனைகள், கீழ்த்தரமான பாலியல் சுரண்டல் [ ஓரினச்சேர்க்கையாளர்கள் அந்த அளவுக்கு மிகுந்த சமூகம் பிறிதில்லை என்று ஒருவர் எழுதியிருந்தார். அவர் சொன்னத அனுபவங்களே முதுகெலும்பை சில்லிட செய்பவை] ஊதியவெட்டுக்கள் இவற்றுடன் அவ்வப்போது வேலையில்லாமல் அரைப்பட்டினியாக கூரை இல்லாமல் கொடும்வெயிலில் அலைய நேரிடும் துயரங்கள் என அந்த அனுபவங்களைக் கேட்க ரத்தம் கொதித்தது. ஒரு இஸ்லாமிய வாசகரின் கடிதத்தை ஏதாவது இஸ்லாமிய இதழுக்கு அனுப்புங்கள் என்று பதில் எழுதினேன். அவர் மீண்டும் எழுதவில்லை.

இந்த விஷயத்தைப்பற்றி எவர் எழுதினாலும் அவரை இந்துத்துவர் என்று சொல்ல ஒரு பெரும் கும்பலே காத்திருக்கிறது. சீனாவிலோ வளைகுடாவிலோ நிகழும் வன்முறைகள், சுரண்டல்கள் எல்லாம் புனித வன்முறைகள் புனிதச் சுரண்டல்கள் என்று நம்புவதே முற்போக்கு. சராசரி அராபியனின் மனநிலையாக வெளியாகும் இனவெறியும் மதவெறியும் இன்றைய நவீன உலகின் ஆகப்பெரிய அபாயங்கள் என்று சொல்பவன் ஏகாதிபத்திய முத்திரையுடன் மிஞ்சிய வாழ்நாளை கழிக்க நேரும்


சீனா பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக ஒரு வாசகர் காலச்சுவடு இதழில் அதன் ஆசிரியர் எழுதிய இக்கட்டுரையை அனுப்பியிருந்தார். கண்ணன் கூர்மையாகவும் துணிச்சலாகவும் சொல்லியிருக்கிறார்.








எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களின் தளத்தில் அங்காடித்தெரு படத்திற்கு பிறகு உங்களுக்கு வந்த மடல்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். வளைகுடா நாட்டின் தொழிலாளர் சமூகம் பற்றிய பல கருத்துகள் வந்ததாக சொல்லியுள்ளீர்கள்.

வந்திருக்கும், அதை இல்லை என மறுக்கும் அயோக்கிய மன நிலை எனக்கில்லை. உழைப்பு சுரண்டல் மிகுந்த நாடுகளில் வளைகுடா நாடுகளும் ஒன்று. இது உண்மை… அப்பட்டமான உண்மை.

ஆனால், அந்த சுரண்டலுக்கான காரணகர்த்தாக்களை, மூலவர்களை அடையாளப்படுத்துவதில் சில சிக்கல் உள்ளதை.. உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் முன்வைக்கும் கருத்தில் அறியமுடிகிறது.

வளைகுடா வாழ்வின் சில அனுபவ பதிவாக என் சமீபத்திய கவிதை (கவிதை நூல் என உங்களைப்போறவர்கள் ஏற்கமாட்டீர்கள்) நூலில் சிலவற்றை சொல்லியுள்ளேன் அவை சொற்பமே. கலைஞர் தொலைக்காட்சியின் சந்தித்தவேளையிலும் பதிவு செய்துள்ளேன், ஆனால் நான் முன்வைக்கும் காரணிகள் வேறு.

அந்த உழைப்பு சுரண்டல்கள் அனைத்தும் முதலாளித்துவ அடிப்படையில் நிகழ்பவை, அவற்றுக்கு துணைப்போகும் இந்திய அல்லது தமிழக தரகுமுதலாளிகளும், இடைத்தரகர்களும் மிக முக்கியமானவர்கள்… இதனையும் ஆய்ந்து கருத்தை வெளிப்படுத்தும் கடமை உங்களுக்கு உண்டு என்பதை மறந்து, தட்டையாக அரபு இசுலாமியர் என்ற எல்லையில் மட்டும் உழைப்புச்சுரண்டல்காரர்களை அடையாளப்படுத்தியுள்ளீர்கள்.

சில.. அல்லது பல அராபியனின் மனநிலையை சராசரியாக அனைவரின் மனநிலையாக வெளிப்படுத்தும் உங்கள் எழுத்து வண்மம் அராபியனுக்கு அப்பால் உள்ள உழைப்பு சுரண்டல் பேர்வழிகளை தப்பிக்கச்செய்ய வழிவகுக்கும் என்பதை உணராதவராகவே உள்ளீர்.

இந்த என் மடலின் நோக்கம் அரபு முதலாளிகள் நல்லவர்கள் என நிறுவுவது அல்ல, தட்டையாக அவர்களை மட்டும் அடையாளம் காட்டுவதால் முழுமையான சுரண்டலை, தொழிலாளர் அவதியை தீர்த்துவிட இயலாது.

இது குறித்து விரிவாக பல செய்திகளை பேசவேண்டும்.. ஆனால் நேரம் சூழல் என்னை இப்போது அனுமதிக்கவில்லை. பிறகொரு சூழலில் விரிவாக பேசலாம்.

இது குறித்த நேர்மையான கருத்தை தெளிவான ஆய்வோடு எழுதுங்கள்..

உண்மையான எழுத்தை எதிர்பார்க்கிறேன்

அன்புடன்
இசாக்

அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கடிதம் வழக்கம்போல அவசரமான, தவறான புரிதலில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. அரபுலகில் மட்டுமே சுரண்டலும் ஒடுக்குமுறையும் உள்ளது என்றோ, அதற்கு இஸ்லாம் காரணம் என்றோ நான் சொல்லவில்லை. பதறவேண்டாம்.

ஒடுக்குமுறையும் சுரண்டலும் வரலாற்றின் எல்லா காலத்திலும் உண்டு. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில்தான் அது உச்சத்தை அடைந்தது. முதலாளித்துவ காலகட்டத்தில் அந்தச் சுரண்டலுக்கு எதிரான அமைப்புகள் உருவாகி வந்தன. அவ்வமைப்புகள் உருவாக்கிய விழுமியங்களும் உருவாகின.

நிலப்பிரபுத்துவ அமைப்பு தடையில்லாத ஆண்டான்-அடிமை மனநிலையை அடிப்படையாகக் கோண்டிருக்கும். அதற்கான விழுமியங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும். ஆனால் முதலாளித்துவ அமைப்பில் சுரண்டல் இருக்கும், கூடவே அதற்கு எதிர்விசையாகச் செயல்படும் அமைப்புகளும் இருக்கும். தொழிற்சங்கங்கள், ஜனநாயக அரசின் கட்டுப்பாடுகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் முதலியவை.

ஆகவேதான் முதலாளித்துவ அமைப்பில் ஒரு சுரண்டல் அல்லது அநீது வெளிப்படுத்தப்பட்டாலே போதும் அது முன்னர்போல தொடர முடியாது என்பது இன்றுவரை உண்மையாக உள்ளது. ஏனென்றால் முதலாளித்துவம் பெருமளவுக்கு ஜனநாயகத்தால் கட்டுப்படுத்தபப்டுவது. ஜனங்களின் ஒப்புதல் இல்லாத ஒன்று அங்கே நிகழ முடியாது. சுரண்டல் கூட!

முதலாளித்துவத்தில் அநீதியும் சுரண்டலும் கண்டிப்பாக உண்டு. ஆனால் அது நிலப்பிரபுத்துவத்தில் இருந்து பலமடங்கு வளர்ந்து மேலெ வந்த ஓர் அமைப்பு. அதில் இருந்து இன்னும் மேலே செல்லலாம், அதுதான் இந்த காலகட்டத்தின் தேடல். ஆனால் முதலாளித்துவத்தின் குறைகளை முன்வைத்து நிலப்பிரபுத்துவத்தை நியாயப்படுத்துவது பிழை. நீங்கள் செய்ய முயல்வது அதை. இஸ்லாமியர் பெரும்பாலும் வாதிடுவதும் அதற்காகவே.

அரபு நாடுகளில் உள்ளது முதலாளித்துவம் அல்ல. கெட்டிதட்டிப்போன நிலப்பிரபுத்துவம் மட்டுமே. இன்றும் அங்கே ஊழியர்களை அடிமைகள் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். அவ்வண்ணம் நடத்துகிறார்கள்.முதலாளித்துவம் அளித்துள்ள ஜனநாயக உரிமையையும், சங்க உரிமையையும் பிற எந்த எந்த வசதியையும் அளிக்காத மூடுண்ட நிலப்பிரபுத்துவ சமூகமாக அரபுலகம் உள்ளது என்பதுதான் உண்மை. அந்த நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் அராபிய இனவெறி இணைந்துகொள்கிறது. அந்த மன இருளின் விளைவுகளையே நம் மக்கள் அங்கே அனுபவிக்கிறார்கள்.

அராபிய இனவெறிக்கு இந்து இஸ்லாம் என்ற பேதமெல்லாம் கிடையாது. ஆப்ரிக்க நாடுகளில் அராபிய இன வெறியர்களால் கொன்றுகுவிக்கப்பட்ட கறுப்பின மக்கள் இஸ்லாமியர் தானே? உலகமெங்கும் கறுப்பு முஸ்லீம்கள் பட்டினியால் லட்சக்கணக்கில் சாக்கும்போது அராபிய இஸ்லாமியரின் பெட்ரோலியப் பணம் அங்கே உதவிக்குச் செல்லவில்லை என்பதுதானே வரலாற்று உண்மை?. கிறித்தவ மனிதாபிமானத்தின் பணம் தானே சென்றது.

அராபியப்பணம் அராபிய இனவெறியின் விளைவான ஓர் உலக இஸ்லாமிய அரசுக்காக ஆயுதங்கள் வாங்கவும் மதவெறியை பரப்பவும் மட்டுமே செலவிடப்படுகிறது. ஆதிக்க முகம் சுரண்டல் முகம் அன்றி வேறு எந்த முகமும் அதற்கில்லை. இன்றைய நவ உலகின் முதன்மையான அச்சுறுத்தல்கள் மேலைநாடுகளில் குவியும் பெருமூலதனத்தின் அதிகாரமும், சீனாவின் ஏகாதிபத்திய நோக்கும், அராபிய இனவெறியும்தான் என நான் நம்புகிறேன்.

அரபு நாடுகளில் உள்ள அராபிய இனவெறியையும் இஸ்லாமையும் நான் ஒன்றாகப் பார்க்கவில்லை. மாறாக எப்போதும் பிரித்தே பார்க்கிறேன். இஸ்லாம் என்ற நெறியை அராபிய இனவெறி தன் முகமூடியாக போட்டிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். ஆனால் அந்த வேறுபாட்டை நீங்கள், பெரும்பாலான இஸ்லாமியர், செய்வதில்லை என்பதே என் மனக்குறை. அப்படி ஒரு பிரிவினையை செய்பவர்களையே நீங்கள் இந்துத்துவர் என்றும் இஸ்லாமிய விரோதி என்றும் வன்மத்துடன் எழுதுவதாகவும்சொல்ல ஆரம்பித்துவிடுகிறீர்கள். இக்கடிதத்திலும் அதற்காகவே முயல்கிறீர்கள்.

அராபிய நாடுகளில் சுரண்டலும் அடிமைத்தனமும் உள்ளது என்பதல்ல பிரச்சினை. அவை வேறு இடங்களிலும் உள்ளனவே என்ற பதில் மூலம் எதிர்கொள்ள வேண்டிய கேள்வியும் அல்ல அது. மதவெறி மூலம் அந்த இனவெறியும் ஆதிக்கவெறியும் நியாயப்படுத்தப்படுவதைப்பற்றியே நான் சொல்லியிருக்கிறேன்.

வளைகுடா நாடுகளை நோக்கி நம் மக்களை அடிமைகளாக தள்ளிவிடும் கிராமப்புற வறுமை, அதை பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகர்கள் அவர்களை சுரண்டும் அரசியல்வாதிகள் எதையும் நான் மறுக்கவில்லை. அவற்றை கண்டிக்க தயங்கவும் இல்லை. என்னுடைய கேள்வியின் மையம் வேறு. இத்தனை மோசமான இன வெறி, மதவெறியை ஒரு இலட்சிய சமூகமாக எப்படி சித்தரிக்க முடிகிறது, அதற்கு எப்படி நம் முற்போக்காளர் துணைபோகிறார்கள், அந்த மனநிலை என்ன — அவ்வளவுதான்.

ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் சுரண்டலை ஒருவர் தான் கிறித்தவர் என்பதற்காக நியாயப்படுத்தினாரென்றால், ஓர் அண்ணாச்சி குத்துவிளக்கு ஏற்றி வைத்து முருகனைக் கும்பிடுவதனால் அவரது சுரண்டலை ஓர் இந்து நியாயப்படுத்தினாரென்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? அந்த நியாயத்தை அந்தரங்கமான ஒரு கணத்தில் உங்களுக்குள் பேசிக்கொள்ளும்போதாவது நீங்களும் உணருங்கள். அவ்வளவுதான்


ஜெ






No comments:

Post a Comment