Wednesday, 14 February 2018

TIMUR ,MURDERER DIED 1405 FEBRUARY 19




TIMUR ,MURDERER  DIED 1405 FEBRUARY 19





தைமூர் (9 ஏப்ரல் 1336 - 19 பெப்ரவரி 1405) 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய - மங்கோலிய கலப்பினப் பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே.[2]

மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்களின் வழி வந்த தைமூரின் இனத்தவர் துருக்கிய அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். பாரசீகக் கல்வியும், உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர் தனது மூதாதையர்களின் பேரரசை மீள்விக்க எண்ணம் கொண்டார். இவரது காலத்தில் துருக்கிய இலக்கியத்தில் முக்கியமானவை சில எழுதப்பட்டன. துருக்கியப் பண்பாட்டின் செல்வாக்கும் விரிவடைந்து செழித்தது.

தைமூர் ஒரு போரியல் மேதை. போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஓய்வு நேரங்களில் சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை.

வரலாற்றில், அவரது வாழ்நாளிலும் கூட, தைமூர் ஒரு முரண்பட்டவராகவும், சர்ச்சைக்கு உரியவராகவும் இருந்தார். பல கலைகளை ஆதரித்த இவர், பல சிறந்த கல்வி மையங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தா

சாமர்கன்ட்[மூலத்தைத் தொகு]
ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலின் வடக்கில் , முந்தைய சோவியத் ரஷ்யாவின் தென்கோடியில் , இன்றைய உஸ்பெக் பகுதியில் உள்ள முக்கிய நகரம் சமர்கந்து . இதுவே துருக்கிய- மங்கோலிய இனத்தைச்சேர்ந்த தைமூரின் தலைநகரம் ஆகும்.

படையெடுப்புகள்[மூலத்தைத் தொகு]
வெற்றி கொண்ட நிலப்பரப்புகள்[மூலத்தைத் தொகு]
1335-இல் தைமூரின் முதல் படையெடுப்பு பாரசீகம் மீதாகும். [3] [4] பின்னர் தற்கால பாக்தாத், அனதோலியாவின் தென்கிழக்கு துருக்கி, சிரியா, நடு ஆசியாவின் ருசியாவின் பகுதிகள், ஜார்ஜியா, ஆர்மீனியா, துருக்மேனிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தெற்காசியாவின் பாகிஸ்தான், ஆப்கானித்தான் ஆகும். அதன்பின் அவர் வெற்றி பெற்ற இடம் தில்லி ஆகும். [5] மேலும் பஞ்சாப், மீரட், மற்றும் லாகூர் போன்ற நகரங்களையும் கைப்பற்றினார் தைமூர். கி.பி.1400 இல் தைமூர், துருக்கி நாட்டுக்குள் புகுந்து சுல்தான் இரண்டாம் பயோசியத்தை வெற்றி கண்டார்.

தைமூரின் குணங்கள்[மூலத்தைத் தொகு]
தைமூரின் போர்க்குணமே அவர் பல வெற்றிகள் காண காரணமாகும். இரக்கம் காட்டுவதோ,எதிரிகளை எனோதானோ என்று விட்டு விடுவது தைமூருக்கு பிடிக்காத ஒன்று ஆகும்.தைமூரை பொருத்தவரையில் தலை வேறு உடல் வேறாக இருப்பவனே எந்தப்பிரச்சனையும் இல்லாத எதிரி ஆகும். இதையே தைமூரின் வீரர்களும் பின்பற்றினர்.

எதிரிகளை தீர்த்துக்கட்டுவதை வேகமாக முடிக்க வேண்டும் என்பதும் தைமூரின் கொள்கைகளில் ஒன்று."யாரும் சோம்பலாக உட்காரக்கூடாது.எல்லோரும் கூட்டுறவாகச் செயல்பட்டால்தான் காலதாமதம் இல்லாமல் காரியத்தை முடிக்க முடியும்" என்று தைமூர் தன் படை வீரர்களிடம் வழக்கம்.

பஞ்சாப் பிரதேசத்தில் சிறைபடுத்தப்பட்ட ஒரு லட்சம் அடிமைகளின் தலைகளைச்சீவ அவன் ஆணையிட்டபோது ஒவ்வொரு வீரனும் கிளம்பினான்.அப்போது தொழுகைக் காலங்களில் தைமூருக்காகப் குர் ஆனை ஓதும் முதியவர் ஒருவர் அப்படியே அமர்ந்திருக்க "என்ன பெரியவரெ! சும்மா உட்காந்திருந்தால் எப்படி? நீங்களும் ஒரு வாளை எடுத்துக்கொண்டு போய் ஒத்துழைக்கலாம் அல்லவா?" - என்று தைமூர் சொல்ல அவரின் சகாக்கள் எறும்பைக்கூட மிதிக்க யோசிக்கும் பெரியவரை ஒருவரின் வயிற்றில் வாளை செலுத்த வைத்தார்களாம்.

தைமூர் போர்குணங்கள் கொண்டவனாக இருந்தலும், சில நகைப்பை வரவழைக்கும் செயல்களையும் செய்துள்ளார்.இந்தியாவை கைப்பற்றியதும்,யானைகளுக்கு பச்சை,நீலம்,மஞ்சள் போன்ற வண்ணங்களை அடித்து காவலுக்காக தனது கூடாரத்தின் முகப்பில் நிறுத்தினாராம்.

தைமூரின் ஆளுமை[மூலத்தைத் தொகு]

தைமூர் ஒரு இராணுவ பேரறிவாளனாக அறியப்படுகிறார். மேலும் மத்திய ஆசியாவில் அவரது ஆட்சி காலத்தில் அயல்நாடோடிகளின் விசுவாசமான ஒரு பின்தொடர்பைப் பெற்று அரசியல் கட்டமைப்பிற்குள் பணியாற்றுவதற்கான விசித்திரமான திறமையுடன் ஒரு சிறந்த படையாட்சித் திறலாளராகவும் தைமூர் திகழ்ந்தார்.உள்ளுணர்வால் மட்டுமல்லாமல் அவர் அசாதாரணமான அறிவார்ந்தவராகவும் விளங்கினார் [6]:16. சமர்கந்து மற்றும் அவரது பல பயணங்களில், புகழ்பெற்ற அறிஞர்களின் வழிகாட்டலின் படி, பாரசீக, மங்கோலிய மொழி மற்றும் துருக்கிய மொழி ஆகிய மொழிகளைக் தைமூரால் கற்றுக்கொள்ள முடிந்தது [7]

இந்தியாவும் தைமூரும்[மூலத்தைத் தொகு]

தைமூர் பல நகரங்களை வெற்றி கண்டபோதும் இந்தியாவிற்கு வந்ததே பெரிய சரித்திர நிகழ்வாக மாறியது. ஏனெனில் இயற்கை அரண்களான இமயமலைத்தொடர் மற்றும் ஆழமான சிந்து நதியையும் கடந்து படையெடுத்தவர்கள் அலெக்சாந்தர்,கஜினி போன்று மிக சிலரே. செப்டம்பர் 22,1398 இல் டெல்லி நகரை கைப்பற்ற வந்தார் தைமூர். சிந்து நதியை பொருட்படுத்தாத தைமூர் பல படகுகளை ஒன்றாக இணைத்து சிந்து நதியை கடந்தார்.

சிந்து நதியை கடந்த தைமூர் ஐந்து நதிகள் இணையும் பஞ்சாப் பகுதியில் தனது ஆக்ரமிப்பை ஆரம்பித்தார்.சுமார் ஒரு லட்சம் பேரை அடிமைகளாக பஞ்சாப் நகரத்தில் அடிமைகளாக பிடித்தார் தைமூர். ஒருமுறை முகமது ஷா, சில வீரர்களுடன் இருந்த தைமூரை விரட்டி அடித்தார். அதனால் கோபமுற்ற தைமூர் பஞ்சாபில் பிடித்த ஒரு லட்சம்அடிமைகளையும் வெட்டி வீழ்த்த ஆணையிட்டார்.[8]

பின் டிசம்பர் 17,1398 இல் தைமூர், மல்லூகான் இக்பாலின் உதவியோடு டெல்லி அரியனையில் இருந்த முகமது ஷாவை வீழ்த்தி டெல்லி நகரை கைப்பற்றினார்.

நொண்டி தைமூர்[மூலத்தைத் தொகு]

இளம் வயதில் ஒரு போர்க்களத்தில் போரிடும் போது எதிரியின் அம்பு தொடையில் பாய்ந்ததால் கால் பாதிப்புக்குள்ளானது. அதை சரி செய்ய யாராலும் இயலவில்லை. அதனால், தைமூர் சற்று விந்தி விந்தி நடப்பார். இதனால் உருவான பட்டை பெயரெ "தைமூர் இ லெங்" -'நொண்டி தைமூர்' ஆகும்.

இப்படி மற்றவர்கள் அழைப்பது தைமூருக்கும் தெரியும். ஆனால் தன் எதிரில் நின்று யாரும் அழைக்க மாட்டேன் என்கிறார்களே என்று தன் ஆட்களிடம் அலுப்புச்சிரிப்புடன் கூறிப்பிடுவாராம் தைமூர்.

தைமூரும் கட்டிடகலையும்[மூலத்தைத் தொகு]
இந்தியாவிற்கு வந்து தங்கிய தைமூர் குதுப்மினார் மற்றும் குவ்வாத்-அல்-இஸ்லாம் மசூதியை சுற்றி பார்த்து 'இந்தியர்கள் சாதாரனமானவர்கள் அல்ல' என்றாராம். திரும்பி செல்லும் போது இந்தியக் கட்டிட கலைஞர்களையும் தன்னுடன் அழைத்துச்சென்றார்.

இறப்பு[மூலத்தைத் தொகு]
பல லட்சம் பேரை வெட்டிவீழ்த்திய தைமூர் மிக எளிய முறையில் இறந்தார்.சீனாவை கைப்பற்ற திட்டம் வகுத்துக்கொண்டிருந்த தைமூர் சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து 1405 -ம் ஆண்டு ஜனவரி மாதம் உயிரை விட்டார்.

தைமூரின் கல்லறை[மூலத்தைத் தொகு]
இந்தியக் கட்டிட கலைஞர்கள் துருக்கி சென்றவுடன் சில மாதங்களிளேயே துருக்கிய மற்றும் பெர்ஷிய கலைநுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தனர். அவர்களை வைத்து தைமூரின் கல்லரை கட்டப்பட்டது.இந்தியக் கட்டிட கலைஞர்கள் சமர்கன்ட் நகரில் 'குர் அமிர்' என்கிற மிகப்பெரிய அற்புதமான கல்லறையைக் கட்டிமுடித்தார்கள். இவரிடம் இருந்துதான் மிக பெரிய அளவில் கல்லரைக்கட்டும் பழக்கம் மொகலாயர்களிடம் வந்தது.

தைமூரின் மனைவிகள் மற்றும் துணைவிகள்[மூலத்தைத் தொகு]
தைமூருக்கு பதினெட்டு மனைவிகளும் இருபத்து நான்கு துணைவியர்களும் இருந்துள்ளனர்

துருமிசு ஆகா, ஜஹாங்கிர் மிர்சாவின் தாய்
ஒல்ஜே துர்ஹான் ஆகா (Oljay Turkhan Agha) (m. 1357/58),அமீர் மாஸ்லாவின் மகள் மற்றும் அமிர் குர்கெனின் பேத்தி)
செரே முல்க் கானும் (m. 1367), எமிர் ஹூசைன் இறப்பால் விதவையானவள் மற்றும் கசன் ஹானின் மகள்;
இசுலாம் ஆகா (m. 1367), எமிர் ஹூசைன் இறப்பால் விதவையானவள், மற்றும் அமிர் பயான் சல்துஸ் மகள்;
உலுஸ் ஆகா (m. 1367), எமிர் ஹூசைன் இறப்பால் விதவையானவள்,மற்றும் அமிர் கிசிர் யாசுரி மகள்;
திச்சாத் ஆஹா (m. 1374),சமசிதின் மகள் மற்றும் புஜன் ஆஹாவின் மனைவி ;
தௌமன் ஆகா Touman Agha (m. 1377),எமிர் மூசாவின் மகள்,அர்சு மூக்னாவின் மனைவி,
சுல்பன் முல்ச் ஆகா, ஜெட்டாவின் ஹாஜி பேக்கின் மகள்;
துகல் கானும் (m. 1395) மங்கோல் கான் கீர் காஜ்வா ஆக்லெனின் மகள்
தொலுன் அகா,முதலாம் உமர் சேக் மிர்சாவின் தாய்
மெங்லி அகா,மிரான் சா இபின் தைமூரின் தாய்
தொகே துர்கான் அகா,
துஹ்டி பே ஆகா , அக் சூபி கொங்-கிராட்டின் மகள்
தைமூரின் வழித்தோன்றல்கள்[மூலத்தைத் தொகு]

தைமூரின் மகன்கள்[மூலத்தைத் தொகு]
ஜஹாங்கிர் மிர்சா இபின் தைமூர் - துர்மிசு ஆஹா (Turmish Agha) என்ற மனைவிக்கு பிறந்தவர்;
உமர் சேக் மிர்சா I - டொலுன் அஹா (Tolun Agha)என்ற மனைவிக்கு பிறந்தவர் ;
மீரான் ஷா இபின் தைமூர் - மெங்லி ஆஹா (Mengli Agha) என்ற மனைவிக்கு பிறந்தவர் ;
சாரூக் மிர்சா இபின் தைமூர் -தொகே துர்ஹான் ஆஹா (Toghay Turkhan Agha) என்ற மனைவிக்கு பிறந்தவர்;
ஹலீல் சுல்தான் இபின் தைமூர் - சரே முல்க் கானும் (Saray Mulk Khanum)என்ற மனைவிக்கு பிறந்தவர் .
தைமூரின் மகள்கள்[மூலத்தைத் தொகு]
ஆகியா பேகி (இவர் அமீர் மூசாவின் மகனான முகமது பேகி என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார்)
பெயர் தெரியவில்லை, (சுலைமான் மிர்சாவுக்கு மணமுடிக்கப்பட்டார்)
பெயர் தெரியவில்லை, ( குமலேசா மிர்சா என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார்)
சுல்தான் பக்த் பேகம் (முதலில் முகமது மிரேகி பின்னர் சுலைமான் சாவுக்கு இரண்டாம் தாரமாக மணமுடிக்கப்பட்டார்)
ஜஹாங்கிரின் மகன்கள்[மூலத்தைத் தொகு]
பீர் முகமது பின் ஜஹாங்கிர் மிர்சா
உமர் சேக் மிர்சா I ன் மகன்கள்[மூலத்தைத் தொகு]
பீர் முகமது இபின் உமர் ஷேக் மிர்சா I
இஸ்கந்தர் இபின் உமர் ஷேக் மிர்சா I
ருஸ்தம் இபின் உமர் ஷேக் மிர்சா I
பேகார் இபின் உமர் ஷேக் மிர்சா I
மன்சூர் இபின் பேகார்
ஹூசைன் இபின் மன்சூர் பின் பேகார்
பாடி அல் ஸமான் ( திமுருத்தின் ஆட்சியாளர்)
முகமது மூமின்
முசாபர் ஹூசைன்
இப்ராகிம் ஹூசைன்
மீரான் ஷாவின் மகன்கள்[மூலத்தைத் தொகு]
காலி சுல்தான் இபின் மீரான் ஷா
அபு பக்கிர் இபின் மீரான் ஷா
முகமது இபின் மீரான் ஷா
அபு சையத் மரிசா
உமர் ஷேக் மிர்ஷா II
சாகிர் உத் தின் முகமது பாபுர்
முகலாயர்கள்
ஜஹாங்கீர் மிர்சா II
சாரூக் மிர்சாவின் மகன்கள்[மூலத்தைத் தொகு]
மிர்சா முகமது தராஹே (உலூஹ் பெஹ் (Ulugh Beg) என பரவலாக அறியப்படுபவர்
அப்தல் லத்தீப் இபின் முகமது தராஹே உலூஹ் பெஹ்
ஹியாத் அல் தின் பெசோங்கோர்
அலா-உத்-துலா மிர்சா இபின் பெசோங்கோர்
இப்ராஹிம் மிர்சா (திம்ரூத் அரசாட்சி)
சுல்தான் முகமது இபின் பெசோங்கோர் (திம்ரூத் அரசாட்சி)
யதிகார் முகமது
மிர்சா அபுல் காசிம் பபூர் இபின் பேசுங்கூர்
சுல்தான் இப்ராகிம் மிர்சா
அப்துல்லா மிர்சா
மிர்சா சொயுர்காட்மிஷ் கான்
மிர்சா முகமது ஜூகி

No comments:

Post a Comment