Tuesday, 20 February 2018

S.N.LAKSHMI ,STAGE ,MOVIE ACTRESS EXPIRED 2012 FEBRUARY 20





S.N.LAKSHMI ,STAGE ,MOVIE ACTRESS
EXPIRED 2012 FEBRUARY 20





எஸ். என். லட்சுமி (1934 - பெப்ரவரி 20, 2012) முதுபெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை. 1948 ஆம் ஆண்டில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய லட்சுமி இருநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களிலும், ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர். இறுதிக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றவர்.

விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை வட்டம் சென்னல்குடி அருகே உள்ள பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த[2] எஸ். என். லட்சுமி ஆறு வயது முதல் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து திரைப்படத்துறைக்கு வந்தவர். சர்வர் சுந்தரம், துலாபாரம், மைக்கேல் மதன காமராஜன், மகாநதி, விருமாண்டி எனப் பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துப் புகழ் பெற்றவர். இறக்கும் போது "தென்றல்" , சரவணன் மீனாட்சி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.

இளமையும் வாழ்க்கையும்[மூலத்தைத் தொகு]

லட்சுமியின் தாய் பழனியம்மாள் எட்டு சிறுவர்களுடன் தனது சிற்றூரை விட்டு வெளியேறி விருதுநகரில் வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். மகன்கள் கல் உடைத்தும் மகள்கள் மாவரைத்தும் பிழைத்து வந்தார்கள். இந்நிலையில் வீட்டின் கடைசிப் பெண்ணான லட்சுமி குடும்பத்தைத் துறந்து நல்வாழ்க்கை தேடி சென்னைக்குப் பயணமானார்.[1] அங்கு மிகுந்த முயற்சிகளிடையே சந்திரலேகா திரைப்படத்தில் குழு நடனமொன்றில் பங்கேற்றார்.
அங்கிருந்து எஸ். வி. சகஸ்ரநாமம் வழிகாட்டுதலில் சேவா ஸ்டேஜ் நாடகக்குழுவில் நடித்து வந்தார். பின்னர் கே. பாலச்சந்தரின் ராகினி ரிக்கிரியேசன்ஸ் நாடகக்குழுவில் இணைந்தார். 1959 ஆம் ஆண்டில் வெளிவந்த தாமரைக்குளம் திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் திரையுலகில் நுழைந்தார். பாக்தாத் திருடன் திரைப்படத்தில் புலியுடனான சண்டைக் காட்சியில் நடித்து துணிகரமானப் பெண்மணி என்ற பெயர் பெற்றார்.[1]

தமிழக அரசின் வரிவிலக்கு ஆய்வுக்குழு உறுப்பினராகவும் மாநில தொலைக்காட்சி விருதுகள் நடுவர் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.[1]


திருமணம் ஆகாத லட்சுமி பல இடங்களுக்கும் தானே தனது சிற்றுந்தியை ஓட்டிக்கொண்டுச் செல்வார்.[1] சென்னையில் சாலிகிராமத்தில் வசித்து வந்தார்.

நடித்த திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]
சந்திரலேகா
பாக்தாத் திருடன்
நல்ல தங்கை
எங்கள் குலதேவி
சர்வர் சுந்தரம்
துலாபாரம்
மைக்கேல் மதன காமராஜன்
மகாநதி
விருமாண்டி
காதலா காதலா
வானத்தைப் போல
ரிதம்
தேவர் மகன்
நடித்த தொலைக்காட்சித் தொடர்கள்[மூலத்தைத் தொகு]
உறவுக்குக் கை கொடுப்போம்
முந்தானை முடிச்சு
சரவணன் மீனாட்சி
தென்றல்






பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார். அவரை நினைவுகூரும் வகையில், 26.10.2011 தேதியிட்ட 'என் விகடன் - சென்னை' இதழில் வெளியான அவரது பேட்டி இதோ...


''நீங்க சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்லுங்க?''


''முதலில் என்.எஸ்.கே. நாடக ட்ரூப்ல இருந்தேன். பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் மாசம் 60 ரூபாய் சம்பளத்துக்கு டான்ஸ் ட்ரூப்ல இருந்தேன். அப்புறம் சகஸ்ரநாமம் நாடக கம்பெனிக்குப் போனேன். என் முதல் படம் 'கண்ணம்மா என் காதலி’. பிறகு ஏகப்பட்ட படங்கள். அனைத்திலும் அம்மா, அத்தை, பாட்டி, சித்தி கேரக்டர்கள்தான்!''

''சிவாஜி, எம்.ஜி.ஆர்.கூட நடிச்ச அனுபவம்?''

(பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிய படியே...)  ''எம்.ஜி.ஆர்.கூட கிட்டத்தட்ட 20 படங்கள் நடிச்சிருப்பேன். அதுல எனக்கு ஞாபகம் வர்றது 'தொழிலாளி’ படம். அதுல எம்.ஜி.ஆருக்கு அம்மா கேரக்டர். தனக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்துல 'அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு’னு கத்திக்கிட்டே ஓடிவந்து எம்.ஜி.ஆர். என் னோட கால்ல விழுவார். ஆனால், கால்ல விழுறது ஸ்க்ரிப்ட்டுல இல்லாதது. 'ஐயையோ என்னங்க என் கால்ல விழுறீங்களே?’னு பதறினேன். எம்.ஜி.ஆர். ரொம்பச் சாதாரணமா, 'இந்தப் படத்துல ##~##நீங்க எனக்கு அம்மா. மரியாதையைத் தூக்கி ஓரமா வெச்சுடுங்க’ன்னார், பிறகு அந்த ஸ்டில்லையும் எனக்கு பிரின்ட் போட்டு அனுப்பினார். சிவாஜியோடும் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். அவர்ட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன். இவ்வளவு ஏன், அவருக்குப் பாட்டியாவே நடிச்சிருக் கேன். அவரோட பையன் பிரபுவுக்கும் பாட்டியா நடிச்சது பெருமையான விஷயம். கமல் எப்ப  போன் பண்ணாலும், 'என் மனசுலயே இருக்கீங்கம்மா. நீங்க பண்ற மாதிரி சரியான கேரக்டர் அமைஞ்சா கண்டிப்பா கூப்பிடுவேன்’ம்பார். ரஜினிகூட மூணு படங்கள்தான் பண்ணியிருக்கேன். 'உங்களுக்கும் எனக்கும் சரியான படங்களே அமையலை’னு ஒருமுறை வருத்தப்பட்டார். ஹீரோயின்களும் எந்தக் கர்வமும் இல்லாம பழகுவாங்க. குறிப்பா ஜெயலலிதா. சாரதா ஸ்டுடியோவை இடிச்சுக் கட்டிகிட்டு இருந் தப்ப ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டும் ரூம் கொடுத்துட்டாங்க. நாங்க தங்க சரியான ரூம் இல்லை. அப்ப என்னைத் தன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போய் எல்லா உதவிகளையும் செஞ்சாங்க. அதேபோல 'பாசம்’ல சரோஜாதேவி யின் அம்மா கேரக்டர். கண் பார்வை இல்லாத வளா நடிச்சிருப்பேன். எம்.ஜி.ஆரைக் கல்யாணம் பண்ணிக்க எங்கிட்ட கேட்கிறப்ப, 'உன் அம்மாவுக்கு கண் வேணும்னா தெரியாம இருக் கலாம். ஆனால், கருத்து தெரியாம இல்லை’னு பேசுவேன். அப்ப சரோஜா உண்மையிலேயே அழுதுடுச்சு. இப்ப உள்ள சினேகா, த்ரிஷா வரை எல்லாரும் 'பாட்டி... பாட்டி..’னு பாசமா பழகுறாங்க. இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும்?




அந்தக் காலத்துல நாடகம் போட டெல்லி, மும்பைனு போவோம். ஒரு முறை டெல்லியில மகாபாரதம் நாடகம். அதுல எனக்கு குந்தி வேஷம். ரெண்டு நாள் நாடகத்தில் ரெண்டாவது நாளில்தான் குந்தி கேரக்டர் வரும். அப்ப ரயில்வே அமைச்சரா இருந்த ராஜேந்திரபிரசாத் நாட கத்துக்கு வர்றதா இருந்தது. ஆனால், உடல் நிலை சரியில்லாமப் போனதால் அவர் வரலை. என் கேரக்டரையும் அவர் பார்க்கலை. பிறகு உங்க நடிப்பைப் பார்க்கலைனு ரொம்பவே வருத்தப்பட்டேனு வேறொரு நாடகத்துக்காக டெல்லி போனப்ப சொன்னார். இப்படி நேரு, ராதாகிருஷ்ணன்னு ஏகப்பட்ட தேசத் தலைவர்களுடன் எடுத்துக்கிட்ட படங்கள் இருக்கு.



எப்ப வாச்சும் நேரம் கிடைக்கிறப்ப பார்த்து பழைய விஷயங்களை நினைச்சுப் பார்த்துக்குவேன். நாடகம்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது, என்.எஸ்.கே. நாடகக் குழுவுல இருக்கும் போது, என்.எஸ்.கே. நடுராத்திரி 12 மணிக்கு நாடகம் முடிஞ்சி படுக்கைக்குப் போனாலும் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எழுந்திருச்சு கதை எழுத ஆரம்பிச்சுடுவார். அவரோட கற்பனாசக்தியை நினைச்சு வியந்திருக்கேன். இதை மறக்காம எழுதுங்க தம்பி!'' என்று அழுத்தமாக வலியுறுத்துகிறார் அன்பான கோடம்பாக்கப் பாட்டி.


- அ.முகமது சுலைமான்

No comments:

Post a Comment