Wednesday, 14 February 2018

SAINT VALENTINE DAY , FEBRUARY 14



SAINT VALENTINE DAY ,
FEBRUARY 14




புனித வேலன்டைன் நாள் (Saint Valentine's Day) அல்லது பொதுவாக வேலன்டைன் நாள் (Valentine's Day)[1][2][3] உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவத் தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் நாள் என்றும் காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. காதலர்கள் தவிர பலரும் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இது இருப்பதால் அன்பர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. தோற்றத்தில் இது மேற்கத்திய உலகக் கொண்டாட்டமாக இருந்தாலும், அண்மைக் காலங்களில் உலகெங்கும் இந்நாளை கொண்டாடும் போக்கு இளைஞர்களிடையே கூடி வருகிறது. எனினும், இது மேலை நாட்டுப் பண்பாடுகளை திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் நினைவுப் பரிசுப் பொருட்களை விற்கும் வணிகமயமாக்கம் என்றும் ஒரு சாராரால் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நாள், நேர்த்தியான காதல் என்ற கருத்து தழைத்தோங்கிக் கொண்டிருந்த உயர் மத்திய காலத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி சாஸர் வட்டத்தில் உருவாகியிருந்த ரொமாண்டிக் காதல் என்ற விஷயத்தோடு தொடர்புகொண்டிருந்தது. "வாலண்டைன்கள்" வடிவத்தில் காதல் குறிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுவதோடும் இந்த நாள் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்தது. இதய வடிவலான உருவம், புறாக்கள் மற்றும் சிறகுகளுள்ள தேவதையின் உருவம் ஆகியவை நவீன காலத்திய காதலர் தின குறியீடுகளில் அடங்கும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், கையால் எழுதப்படும் குறிப்புகள், பெருமளவில் தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கு வழிவிட்டிருக்கிறது.[4] பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் வாலண்டைன்களை அனுப்புவது ஒரு நாகரீகமாக இருந்தது, 1847 ஆம் ஆண்டில் எஸ்தர் ஹாவ்லண்ட் தன்னுடைய வெர்ஸ்டர், மசாசூஸெட்ஸ் வீட்டில் ஆங்கிலேய உருமாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு வாலண்டைன் அட்டைகளை கையால் செய்யும் தொழிலை வெற்றிகரமாக உருவாக்கினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்காவில், தற்போது காதலை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் பொதுவான வாழ்த்து அட்டைகளாக உள்ள பல வாலண்டைன் அட்டைகளும் பிரபலமாக இருந்தபோது அமெரிக்காவில் விடுமுறை தினங்கள் வணிகமயமாவதற்கான எதிர்கால முன்னறிவிப்பாக இருந்துள்ளது.[5]

கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்தபடியாக, வாழ்த்து அட்டை அனுப்புவதில் இரண்டாவது இடத்தில் உள்ள கொண்டாட்ட தினமான வாலண்டைன்ஸ் தினத்தில் உலகம் முழுவதிலும் வருடத்திற்கு ஏறத்தாழ ஒரு பில்லியன் வாலண்டைன் அட்டைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு கணக்கிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் பெண்களைவிட ஆண்கள் சராசரியாக இரண்டு மடங்கு செலவிடுகிறார்கள் என்று இந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.[6]
புனித வாலண்டைன்[மூலத்தைத் தொகு]

For more details on this topic, see புனித வேலண்டைன்.
முற்காலத்தில் கிறிஸ்துவ தியாகிகள் பலரும் வாலண்டைன் என்று பெயரிடப்பட்டனர்.[7] 1969 ஆம் ஆண்டு வரை கத்தோலிக்க தேவாலயம் பதினோரு வாலண்டைன் தினங்களை அங்கீகரித்திருந்தது. [மேற்கோள் தேவை]பிப்ரவரி 14 அன்று கௌரவிக்கப்படும் வாலண்டைன்கள் ரோமைச் சேர்ந்த வாலண்டைன்கள் ஆவர் (வாலண்டைன் பிரிஸ்ப்.எம்.) ரோமா மற்றும் வாலண்டைன் டெர்னி (வாலண்டைனஸ் எப். இண்டராநெமிஸிஸ் எம். ரோம் .[8] வாலண்டைன் ரோம் [9] என்பவர் ஏறத்தாழ 269 ஆம் ஆண்டில் உயிர்த்தியாகம் செய்த ரோமானிய மதகுரு ஆவார், அவர் வயா ஃப்ளமெனியாவில் புதைக்கப்பட்டார். அவருடைய புனித நினைவுப் பொருட்கள் ரோமிலுள்ள செயிண்ட் பிராக்ஸ் தேவாலயத்திலும்,[10] அயர்லாந்து டப்ளினிலுள்ள ஒயிட்ஃபிரையர் தெரு கார்மலைட் தேவாலயத்திலும் உள்ளன.

டெர்னி வாலண்டைன் [11] 197 ஆம் ஆண்டில் இண்டெரெம்னாவின் பிஷப்பாக இருந்து (நவீன டெர்னி) பேரரசர் அரேலியன் கொடுமையால் கொல்லப்பட்டார். அவரும் வாலண்டைன் ரோம் புதைக்கப்பட்ட வயா ஃப்ளமெனியாவில் உள்ள வேறு இடத்தில் புதைக்கப்பட்டார். அவருடைய புனித நினைவுப் பொருட்கள் டெர்னியில் உள்ள செயிண்ட் வாலண்டினா பசிலிக்காவில் உள்ளது. (பசிலிக்கா டி சான் வாலண்டினா ).[12]

பிப்ரவரி 14 தேதியின் கீழ் முற்காலத்திய தியாகிகள் பட்டியலில் வாலண்டைன் என்று குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது புனிதர் ஒருவர் பற்றியும் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. அவர் தன்னுடன் இருந்த பல கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆப்ரிக்காவில் புதைக்கப்பட்டார், ஆனால் இதற்குமேல் இவரைப் பற்றி வேறு எந்தத் தகவலும் இல்லை.[13]

இந்தத் தியாகிகளின் அசல் மத்தியகால சரிதைகள் எவற்றிலும் ரொமாண்டிக் கூறுகள் எதுவும் இல்லை. இக்காலத்தில் தூய வாலண்டைன் பதினான்காம் நூற்றாண்டில் ரொமாண்டிக் கூறுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டார், வாலண்டைன் ரோமிற்கும் வாலண்டைன் டெர்னிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் முற்றிலும் தொலைந்துபோய்விட்டன.[14]

1969 ஆம் ஆண்டில் புனிதர்களின் ரோம கத்தோலிக்க நாட்காட்டி திருத்தப்பட்டபோது பிப்ரவரி 14ஆம் நாளின் புனித வாலண்டைனுடைய விருந்துநாள் பொதுவான ரோமானிய நாட்காட்டியிலிருந்து நீ்க்கப்பட்டு குறிப்பிட்ட (உள்ளூர் அல்லது தேசிய நிகழ்ச்சி) நாட்காட்டிகளி்ல் பின்வரும் காரணங்களுக்காக மாற்றித்தரப்பட்டது: "புனித வாலண்டைனின் நினைவு புராதனமானது என்றபோதிலும், இது குறிப்பிட்ட நாட்காட்டிகளுக்கு மட்டும் தரப்படுகிறது, இதிலிருந்து, அவரது பெயரைத் தவிர்த்து அவர் பிப்ரவரி 14 அன்று வயா ஃப்ளமெனியாவில் புதைக்கப்பட்டார் என்பது தவிர அவரைப் பற்றி்த் தெரிந்துகொள்ள எதுவுமில்லை." [15] இந்த விருந்துநாள் புனிதரின் நினைவுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் பால்சன் மால்டாவில் இப்போதும் கொண்டாடப்படுகிறது, அத்துடன் உலகம் முழுவதிலும் பழங்கால, இரண்டாம் வாடிகன் நாட்காட்டியைப் பின்பற்றும் பழமைவாத கத்தோலி்க்கர்களாலும் கொண்டாடப்படுகிறது.

புனித வாலண்டைன் பற்றி முந்தைய மத்தியகால அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பீட் அவர்களால் மேற்கோள் காட்டப்பட்டு லெஜண்டா ஔரியில் விவரிக்கப்பட்டுள்ளது.[16] அந்தப் பதிப்பின்படி, புனித வாலண்டைன் ஒரு கிறித்துவர் என்பதற்காக கொடுமைப்படுத்தப்பட்டு ரோமானியப் பேரரசர் இரண்டாம் கிளேடியசால் சிறை வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

வாலண்டைனால் தாக்கம் கொண்டு அவருடன் விவாதம் செய்த கிளேடியஸ் அவருடைய உயிரைக் காப்பாற்றும் விதமாக அவரை ரோமானிய புறச்சமயத்திற்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். அதை மறுத்த வாலண்டைன் அதற்குப் பதிலாக கிளேடியஸை கிறித்துவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்தார். இதன் காரணமாக அவர் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது மரண தண்டனைக்கு முன்பாக, அவரது சிறைக் காவல் அதிகாரியின் குருட்டு கண்களைக் குணப்படுத்தும் அற்புதத்தை செய்துகாட்டியதாகக் கூறப்படுகிறது.


லெஜண்டா ஔரி உணர்ச்சிப்பெருக்கான காதலுடன் இருப்பதான எந்த ஒரு தொடர்பையும் தரவில்லை, இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளாமலே இருக்க வேண்டும் என்று அதிரடியான கட்டளையிட்ட ரோமானியப் பேரரசர் இரண்டாம் கிளாடியசுக்கு வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத விதியை ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரு மதகுருவாக இருந்த வாலண்டைனைப் பற்றி சித்தரிப்பதற்கு நவீன காலத்தில் போதுமான கற்பனைகள் செய்யப்ட்டிருக்கின்றன.

திருமணமானவர்கள் நல்ல போர்வீரர்களாக உருவாவதில்லை என்று நம்பியதன் காரணமாக, தன்னுடைய படையை வளர்ப்பதற்கு இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் மதகுருவான வாலண்டைன் இளைஞர்களுக்கு இரகசியமாக திருமண நிகழ்ச்சிகளை நடத்திவைத்தார். கிளாடியஸ் இதைக் கண்டுபிடித்தபோது, அவர் வாலண்டைனை கைது செய்து சிறையிலடைத்தார். கோல்டன் லெஜண்டில் உள்ள ஒரு கற்பனையில், வாலண்டைன் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய மாலை, அவருக்கு தோழியாகவும் [17] அவர் குணப்படுத்தியவராகவும் அல்லது [18] இரண்டுமாகவும் இருந்த சிறை அதிகாரியன் மகளான, அவரது அன்புக்கினியவராக பரவலாக அடையாளம் காணப்பட்ட இளம் பெண்ணைக் குறித்து முதன்முறையாக வாலண்டைனே எழுதிறார். அந்தக் குறிப்பு "உன் வாலண்டைனிடமிருந்து" என்பதாகும்.[17]

இதேபோன்ற ஒரு தினம் நீண்டநாட்களுக்கு முன்பு, காதல் மற்றும் காதலர்கள் தினமாக புராதன பெர்ஷியாவில் கொண்டாடப்பட்டிருக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியங்கள்[மூலத்தைத் தொகு]
லூபர்கேலியா[மூலத்தைத் தொகு]
பிரபலமான நவீன ஆதாரங்கள் கிரெகோ-ரோமன் பிப்ரவரி கொண்டாட்ட தினங்களை இனப்பெருக்கத்திற்கும் காதலுக்கும் என்று வாலண்டைனுக்கான தினமாக அர்ப்பணிக்கப்பட்ட போதிலும், கென்சாஸ் பல்கலைக்கழகத்தைச் [19] சேர்ந்த பேராசியர் ஜாக் ஓரிச்,சாஸருக்கு முன்பு வாலண்டைனஸ் என்று பெயர்கொண்ட புனிதர்களுக்கும் ரொமாண்டிக் காதலுக்கும் இடையே எந்த தொடர்பும் இருந்திருக்கவில்லை என்று வாதிடுகிறார்.

புராதான அதீனியன் நாட்காட்டியில் மத்திய ஜனவரிக்கும் மத்திய பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலமானது, ஜீயஸுக்கும் ஹெராவுக்கும் நடந்த தெய்வீக திருமணத்திற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கெமீலியன் மாதமாக இருந்துள்ளது.

புராதன ரோமில் பிப்ரவரி 13 முதல் 15 வரை அனுசரிக்கப்படும் லூபர்கேலா இனவிருத்தியோடு தொடர்புடைய பழங்கால சடங்காகும். லூபர்கேலா ரோம் நகர உள்ளூர் மக்களுக்கான ஒரு திருவிழா. மிகவும் பொதுவான திருவிழாவான ஜூனோ ஃபெப்ருவா, அதாவது "தூய்மையாக்கும் ஜூனோ" அல்லது "கற்புள்ள ஜூனோ" பிப்ரவரி 13-14 ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. போப் முதலாம் கெலாசியஸ் (492-496) இதை நீக்கினார்.

கிறித்துவ தேவாலயம், வாலண்டைன் விருந்து தினத்தை புறச்சமய லூபர்கேலா கொண்டாட்டங்களை கிறிதுதுவமயமாக்கும் முயற்சியாக பிப்ரவரி மத்தியில் கொண்டாட முடிவுசெய்திருக்கலாம் என்ற பொதுவான கருத்தும் இருக்கிறது.

இருப்பினும், விருந்து தினங்கள் தியாகிகளோடு சம்பந்தப்பட்டிருப்பதாக இருப்பதால் கிட்டத்தட்ட எப்போதும் தியாகிகள் தினத்தன்றே கொண்டாடப்படுவதற்கு, லூபர்கேலாவிற்கும் செயிண்ட் வாலண்டைன் விருந்திற்கும் இடையே உள்ள தொடர்பு மிகவும் தற்செயலானதுதான். கத்தோலிக்க தேவாலயத்தில் ஆழமாக வேரூன்றிவிட்ட லூபர்கேலா திருவிழாவை முற்றிலுமாக அழித்துவிட முடியவில்லை என்பதால், அந்த நாளை கன்னி மேரியை கௌரவப்படுத்தும் தினமாக மாற்றியது என்றும் ஒரு வரலாற்றாசிரியர் வாதிடுகிறார்.[20]


Geoffrey Chaucer by Thomas Occleve (1412)
சாஸரின் காதல் பறவைகள்[மூலத்தைத் தொகு]

ரொமாண்டிக் காதலுடன் சம்பந்தப்பட்ட வாலண்டைன் தின அமைப்பு குறித்த பதிவு ஃபவுல்ஸ் பாராளுமன்றத்தில் ஜெஃப்ரி சாஸரால் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிலர் கூறினாலும் [21] இதுகூட தவறான விளக்கத்தின் விளைவாக இருக்கலாம். சாஸர் இவ்வாறு எழுதுகிறார்:

இது செயிண்ட் வாலண்டின் தினத்திற்கானது
ஒவ்வொரு பறவையும் தன்னுடைய இணையைத் தேடி வரும்போது .

இந்தக் கவிதை, இங்கிலாந்து அரசர் இரண்டாம் ரிச்சர்ட்டுக்கும், போஹிமியா ஆன்னுக்கும் நடந்த திருமண ஒப்பந்தத்தின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை கௌரவிக்கும் விதமாக எழுதப்பட்டது.[22](அவர்கள் எட்டு மாதங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டபோது அவருக்கு 13 அல்லது 14 வயதும், அவளுக்கு 14 வயதும் ஆகியிருந்தது.)

பிப்ரவரி 14 ஆம் நாளை வாலண்டைன் தினமாக சாஸர்தான் அறிவித்தார் என்று வாசகர்கள் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர்; இருப்பினும், இங்கிலாந்தில் மத்திய பிப்ரவரி மாதம் பறவைகள் இணைசேருவதற்கு ஏற்ற நேரமல்ல. ஹென்றி ஆன்ஸ்கர் கெல்லி,[23] பொதுவழிபாட்டு நாட்காட்டியில் ஜெனொவா வாலண்டைனுக்காக புனிதர்கள் தினமாக மே 2 உள்ளது என்று குறிப்பிடுகிறார்.

இந்த செயிண்ட் வாலண்டைன் 307 ஆம் ஆண்டில் இறந்துவிட்ட ஜெனொவா பிஷப் ஆவார்.[24]

சாஸரின் ஃபவுல்ஸ் பாராளுமன்றம் பழம் பாரம்பரியத்தின் புனைவு சூழ்நிலைக்கேற்ப பொருத்தப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் சாஸருக்கு முன்பு அப்படி ஒரு பாரம்பரியம் இல்லவே இல்லை. வரலாற்று உண்மைகளாக காட்சி தரும், உணர்ச்சிப்பெருக்கான பழக்கவழக்கங்களின் யூகவாத விளக்கங்கள் பதினெட்டாம் நூற்றாண்ட முற்காலங்களிடைய தங்கள் மூலங்களைக் கொண்டிருக்கின்றன, குறிப்பாக பட்லர்ஸ் லைவ்ஸ் ஆஃப் செய்ண்டஸ் என்ற புத்தகத்தை எழுதியவரான ஆல்பன் பட்லர் மரியாதைக்குரிய நவீன ஆய்வாளர்களாலும் நிரந்தரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், "வாலண்டைன் தின சம்பிரதாயங்கள் என்ற கருத்தாங்கள் ரோமானிய லூபர்கேலாவால் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல்வேறு வடிவங்களில் இன்றுவரை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது"[25]

மத்திய காலமும் ஆங்கில மறுமலர்ச்சியும்[மூலத்தைத் தொகு]
சட்ட மொழியைப் பயன்படுத்தி நேர்த்தியான காதலின் சம்பிரதாயங்களுக்கான "காதல் உயர்நீதிமன்றம்" 1400 ஆம் ஆண்டு வாலண்டைன் தினத்தன்று பாரீசில் நிறுவப்பட்டது. இந்த நீதிமன்றம் காதல் ஒப்பந்தங்கள், துரோகங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை கவனித்தது. கவிதை வாசிப்பின் அடிப்படையில் பெண்களால் நீதிபதிகள் தேர்வுசெய்யப்பட்டனர்.[26][27]

முற்காலத்தில் நீடித்த வாலண்டைன், தனது உயிர்க்காதல் மனைவிக்கு ஆர்லியன்சைச் சேர்ந்த பிரபுவான சார்லஸ் என்பவரால் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு கவிதை, இவ்வாறு தொடங்கிற்று.

Je suis desja d'amour tanné

Ma tres doulce Valentinée…

—Charles d'Orléans, Rondeau VI, lines 1–2 [28]
அந்த நேரத்தில், இந்த பிரபு அஜின்கோர்ட் சண்டையில் பிடிபட்டு லண்டன் டவரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.[29]

ஹாம்லெட் டில் ஓஃபிலாவால் வாலண்டைன் தினம் வருத்தத்தோடு (1600-1601) குறிப்பிடப்படுகிறது:

To-morrow is Saint Valentine's day,
All in the morning betime,
And I a maid at your window,
To be your Valentine.
Then up he rose, and donn'd his clothes,
And dupp'd the chamber-door;
Let in the maid, that out a maid
Never departed more.

—William Shakespeare, Hamlet, Act IV, Scene 5

வாலண்டைன் தின அஞ்சலட்டை, ஏறத்தாழ 1910
நவீன காலங்கள்[மூலத்தைத் தொகு]
பதினேழாம் நூற்றாண்டில், கடையில் வாங்கப்பட்ட அட்டைகள் சிறியதாகவும் விலைமிகுந்ததாகவும் இருந்தபோது கையால் செய்யப்பட்ட அட்டைகள் பெரிதாக்கப்பட்டு விரிவான அளவில் செய்யப்பட்டன. 1797 ஆம் ஆண்டில், சொந்தமாக கவிதை இயற்ற முடியாத இளம் காதலர்களுக்கென்று உணர்ச்சிப்பெருக்கான வரிகள் கொண்ட பாடல்கள் அடங்கிய தி யங் மான்ஸ் வாலண்டைன் ரைட்டர் என்ற புத்தகத்தை ஒரு ஆங்கிலேய பதிப்பாளர் வெளியிட்டார். பதிப்பாளர்கள் "மெக்கானிக்கல் வாலண்டைன்கள்" எனப்பட்ட கவிதை வரிகளும் உருவப்படங்களும் அடங்கிய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அட்டைகளை ஏற்கெனவே உருவாக்கத் தொடங்கியிருந்தனர், அடுத்த நூற்றாண்டிலேயே அஞ்சல் கட்டணங்களில் ஏற்பட்ட விலை குறைப்பு, தனிப்பட்ட முறையில்
குறைவான ஆனால் வாலண்டைன்களை அனுப்பும் நடவடிக்கையை அறிமுகப்படுத்தியது. இது அதற்கு மாற்றாக, முதல் முறையாக அநாமதேய அட்டைகளை மாற்றிக்கொள்ளப்படுவதை சாத்தியமாக்கியது, வரலாற்று காலத்தில் மற்றவகையில் முற்றிலும் விக்டோரியன் மயமாக இல்லாத இனவாத கவிதை வரிகளின் திடீர்த் தோற்றத்திற்கான காரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.[30]

1800 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் காகித வாலண்டைன்கள் இங்கிலாந்தில் பிரபலமாக இருந்தன, காகித வாலண்டைன்கள் தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டன. சித்திர வேலைப்பாடு கொண்ட வாலண்டைன்கள் நிஜமான சரிகைகளும் ரிப்பன்களும் கொண்டு தயாரிக்கப்பட்டன, காகித சரிகைகள் 1800 ஆம் ஆண்டுகளின் மத்தியில் அறிமுகமாயின.[31].

1840 ஆம் ஆண்டுகளில் புத்துருவாக்கம் செய்யப்பட்ட வாலண்டைன் தினம் லீஹ் எரிக் ஸ்மி்த் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[32] 1849 ஆம் ஆண்டில் கிரகாம் அமெரிக்கன் மாதாந்திர இதழில் எழுத்தாளராக இருந்த இவர், "செயிண்ட் வாலண்டைன் தினம்... தேசிய கொண்டாட்ட தினமாகிறது, இல்லையில்லை, ஆகிவிட்டது" என்று அறிவித்தார்.[33]அமெரிக்காவில், 1847 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறுகிய காலத்திலேயே சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட காகித சரிகை கொண்ட முதல் வாலண்டைன்கள் வெர்சஸ்டர், மசாசூஸெட்சைச் சேர்ந்த எஸ்தர் ஹாவ்லண்ட் (1828-1904) அவர்களால் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

அவருடைய தந்தை பெரிய புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரிகளை விற்பனை செய்யும் கடையை நடத்திவந்தார், ஆனால் ஹாவ்லண்ட் தனக்கான தாக்கத்தை அவர் பெற்ற ஆங்கில வாலண்டைனிடமிருந்தே பெற்றார், எனவே வாலண்டைன் அட்டைகளை அனுப்புவது வட அமெரிக்காவில் பிரபலமாவதற்கு முன்பே இங்கிலாந்தில் இருந்துவந்துள்ளது என்பது தெளிவாகிறது. வாலண்டைன் அட்டைகள் அனுப்புதல் என்ற முறை எலிசபெத் காஸ்கெல் எழுதிய மிஸ்டர். ஹாரிசன்ஸ் கன்ஃபெஷன்ஸ் (1851 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது) என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. 2001 ஆம் ஆண்டிலிருந்து வாழ்த்து அட்டைகள் அமைப்பினர் வருடாந்திர "எஸ்தர் ஹாவ்லண்ட் வாழ்த்து அட்டைகள் கற்பனைத்திறன்" விருதினை வழங்கி வருகின்றனர். கிறித்துமஸ் தினத்திற்கு அடுத்தபடியாக, வாழ்த்து அட்டை அனுப்புவதில் இரண்டாவதாக உள்ள கொண்டாட்ட தினமாக இருப்பது வாலண்டைன்ஸ் தினத்தன்று உலகம் முழுவதிலும் வருடத்திற்கு ஏறத்தாழ ஒரு பில்லியன் வாலண்டைன் அட்டைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு கணக்கிட்டுள்ளது.

இதற்காக அமெரிக்காவில் பெண்களைவிட ஆண்கள் சராசரியாக இரண்டு மடங்கு செலவிடுகிறார்கள் என்று இந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.[6]

பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், கையால் எழுதப்படும் குறிப்புகள் பெருமளவில் தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கு வழிவிட்டது.[34] மத்திய-பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்த்து அட்டைகள் விற்பனை அமெரிக்காவில் விடுமுறை தினங்கள் வணிகமயமாவதற்கான எதிர்கால முன்னறிவிப்பாக இருந்துள்ளது.[35]

அமெரிக்காவில், இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் வழக்கமாக ஆண்கள் பெண்களுக்கு வாழ்த்து அட்டைகளை மாற்றிக்கொள்ளுதல் என்ற முறை எல்லா வகையிலும் பரிசளிப்பது என்பது வரை நீட்டித்துக்கொண்டது. இதுபோன்ற பரிசுகள் ரோஜாக்கள் மற்றும் சிகப்பு சாடின் துணி கொண்டு சுற்றப்பட்ட இதய வடிவிலான பெட்டியில் வைத்து சாக்லேட்டுகளை அளிப்பது என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. 1980 ஆம் ஆண்டுகளில், வைரத் தொழிலானது ஆபரணம் வாங்கித்தரும் தருணமாக வாலண்டைன் தினத்தை
மேம்படுத்தத் தொடங்கியது. இந்த நாள் பொதுவான ஆன்ம நேயமுள்ள "இனிய வாலண்டைன் தின வாழ்த்துக்கள்" என்று வாழ்த்துச் சொல்லுவதோடும் தொடர்புள்ளதாகும். வாலண்டைன் தினம் "தனித்திருப்பவர்கள் விழித்திருக்கும் நாள்" என்றும் வேடிக்கையாகச் சொல்லப்படுவதுண்டு. சில வட அமெரிக்க துவக்கப் பள்ளிகளில் குழந்தைகள் வகுப்பறையை அலங்கரித்து, வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொண்டு, இனிப்புகளை சாப்பிடுகின்றனர். இந்த மாணவர்களின் வாழ்த்து அட்டைகள் ஒருவரையொருவர் பாராட்டுதலைப் பற்றிய குறிப்புகளையே கொண்டிருக்கும்.

இந்த புத்தாயிரம் ஆண்டு துவக்கத்தில் எழுச்சியுற்ற இணையங்கள் புதிய நடைமுறைகளை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் இதில் மின்-வாழ்த்து அட்டைகள், காதல் கூப்பன்கள் அல்லது அச்சிடக்கூடிய வாழ்த்து அட்டைகள் உள்ளிட்ட வாலண்டைன் தின வாழ்த்து அட்டைகள் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

இதேபோன்று காதலை கௌரவிக்கும் தினங்கள்[மூலத்தைத் தொகு]
மேற்கத்திய நாடுகளில்[மூலத்தைத் தொகு]
ஐரோப்பா[மூலத்தைத் தொகு]
வாலண்டைன் தினங்கள் பிரிட்டனில் பிரதேச அளவிளவிலான பாரம்பரியம் கொண்டவையாக இருந்திருக்கின்றன. நோர்ஃபெக்கில் 'ஜாக்' எனப்படும் வாலண்டைன், வீடுகளின் பின்பக்க கதவைத் தட்டி இனிப்புகளையும், குழந்தைகளுக்கான பரிசுகளையும் விட்டுச்செல்வார். அவர் விருந்தளித்துச் சென்றாலும், பல குழந்தைகளும் இந்த மாய மனிதனை நினைத்து அச்சம்கொள்ளவே செய்கின்றனர். வேல்ஸில், வாலண்டைன் தினத்திற்கு மாற்றாக ஜனவரி 25 அன்று பலரும் டைடு சாண்டேஸ் டிவைன்வன் (தூய டிவைன்வென் தினம்) கொண்டாடுகின்றனர். வெஸ்ஷ் காதலர்களுக்கு ஆதரவாளரான இந்த தூய டிவைன்வென் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய கத்தோலிக்க நாடான பிரான்சில் வாலண்டைன் தினம் "செயிண்ட் வாலண்டைன்" என்றே அறியப்படுகிறது என்பதுடன் மற்ற மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் அதே முறையிலேயே கொண்டாடப்படுகிறது.

ஸ்பெயினில் வாலண்டைன் தினம் சான் வாலண்டைன் என்று அறியப்படுவதோடு பிரிட்டனில் கொண்டாடப்படும் அதே முறையிலேயே கொண்டாடப்படுகிறது, இருப்பினும் கத்தோலோனியாவில் லா டியாடா டி சாண்ட் ஜோர்டி (செயிண்ட் ஜார்ஜ் தினம்) அன்று ரோஜா மற்றும்/அல்லது புத்தகம் வழங்கி கொண்டாடப்படும் இதேபோன்ற தினத்தால் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது. போர்த்துக்கலில் இது மிகப்பொதுவாக "டயா டோஸ் நெமோரடஸ்"(ஆண்கள்/பெண்கள் தினம்) என்று குறிப்பிடப்படுகிறது.

டென்மார்க் மற்றும் நார்வேவில் வாலண்டைன் தினம் (பிப்ரவரி 14) வாலண்டைன்ஸ் டே என்று அறியப்படுகிறது. இது பெரிய அளவில் கொண்டாடப்படுவதில்லை, ஆனால் பலரும் தங்கள் இணையுடன் ரொமாண்டிக் உணவு உண்ணவும், தாங்கள் நேசிக்கின்றவருக்கு ரகசியக் காதலுக்கான வாழ்த்து அட்டை அனுப்பவும் அல்லது சிகப்பு ரோஜாவைக் கொடுக்கவும் நேரத்தை செலவிடுகின்றனர். ஸ்வீடனில் இது அலா ஹர்டன்ஸ் டேக் ("அனைத்து இதயங்களின் நாள்") என்றழைக்கப்படுகிறது, இது 1960 ஆம் ஆண்டுகளின் பூ தொழில் வணிக நோக்கங்களுக்காகவும், அமெரிக்க கலாச்சாரத்தின் செல்வாக்கினாலும் துவக்கி வைக்கப்பட்டது. இது அதிகாரப்பூர்வமான விடுமுறை தினம் அல்ல, ஆனால் இந்தக் கொண்டாட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, அன்னையர் தினத்தைவிட அழகுசாதனப் பொருட்களும் பூக்களும் மட்டுமே இந்த தினத்தில் அதிகமாக விற்பனையாகின்றன.

ஃபின்லாந்தில் வாலண்டைன் தினம் ஸ்த்வான்பைவா அதாவது "நண்பர்கள் தினம்" என்று அழைக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவதுபோல, இந்த நாள் நீ்ங்கள் நேசிப்பவர் மட்டுமல்லாது உங்கள் நண்பர்களையும் நினைவுகூறும் நாளாக இருக்கிறது. எஸ்தோனியாவில் வாலண்டைன் தினம் இதேபோன்று பொருள் கொண்ட சோப்ராபேவ் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்லாவேனியாவில், "தூய வாலண்டைன் வேர்களின் சாவியை கொண்டுவந்திருக்கிறார்" என்று ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு, எனவே பிப்ரவரி 14 அன்று செடிகளும் மலர்களும் வளரத் தொடங்குகின்றன. ஓயின் நிலங்களில் வேலை தொடங்கும்போது அது வாலண்டைன் தினமாக கொண்டாடப்படுகிறது. பறவைகள் ஒன்றுக்கொன்று கோரிக்கை விடுக்கின்ற அல்லது திருமணம் செய்துகொள்கிற நாளாகவும் அது இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும், இது இப்போதுதான் காதல் தினமாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக காதல் தினம் என்பது தூய கிரிகோரியின தினமான மார்ச் 12 அன்றுதான் கடைபிடிக்கப்படுகிறது. மற்றொரு பழமொழி "Valentin - prvi spomladin" (வாலண்டைன் - இளவேனிற்கால முதல் தூயவன்) என்று கூறுகிறது, சில இடங்களில் இருப்பதுபோல் (குறிப்பாக, ஒயிட் கர்னியோலா) தூய வாலண்டைன் இளவேனிற்கால தொடக்கத்தையே குறிப்பிடுகிறார்.

ரோமானியாவில், காதலர்களுக்கான பாரம்பரிய கொண்டாட்ட தினம், பிப்ரவரி 24 அன்று கொண்டாடப்படும் டிராகோபீட் ஆகும். பாபா டோகியாவின் மகனாக இருக்கலாம் என்று கருதப்படும் ரோமானிய நாட்டுப்புற கதாபாத்திரத்தின் நினைவாக இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. அவர் பெயரின் ஒரு பகுதி, dragoste ("காதல்") என்ற வார்த்தையிலும் காணப்படுகின்ற drag ("அன்புக்குரிய") என்ற வார்த்தையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், ஏற்கனவே டிராகோபீட் என்ற பாரம்பரியமான கொண்டாட்ட தினம் இருந்தபோதிலும் ரோமானியாவும் வாலண்டைன் தினத்தைக் கொண்டாட தொடங்கியுள்ளது. இது பல்வேறு குழுக்கள், மேம்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கடுமையான விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது,[36] அத்துடன் வாலண்டைன் தினத்தை மேலோட்டமான, வணிகமயமான மற்றும் மேற்கிலிருந்து இறக்குமதியான மோசமான விஷயமாக இருக்கிறது என்று கண்டிக்கின்ற நோவா டிரெப்தா போன்ற தேசியவாத அமைப்புக்களும் இதை எதிர்க்கின்றன.

வாலண்டைன் தினம் துருக்கியில் Sevgililer Günü அதாவது "இனிய இதயங்களின் தினம்" என்று அழைக்கப்படுகிறது.

யூத மரபுப்படி Av - Tu B'Av (வழக்கமாக ஆகஸ்டு பிற்பாதி) காதல் திருவிழா தினமாகும்.
முற்காலத்தில் பெண்கள் வெள்ளை உடையணிந்து ஓயின் நிலங்களில் நடனமாடுவர், ஆண்கள் அவர்களுக்காக காத்திருப்பர் (Mishna Taanith நான்காம் அத்தியாய முடிவு).
நவீன இஸ்ரேலிய கலாச்சாரத்தில் காதலைச் சொல்லவும், திருமண கோரிக்கை வைக்கவும், வாழ்த்து அட்டைகள் அல்லது பூக்கள் போன்ற பரிசுகளை வழங்குவதற்கும் ஒரு பிரபலமான நாளாக இருந்து வருகிறது.
மத்திய மற்றும் தென் அமெரிக்கா[மூலத்தைத் தொகு]
கௌதமாலாவில், வாலண்டைன் தினம் "Día del Amor y la Amistad" (காதல் மற்றும் நட்பு தினம்) என்று அழைக்கப்படுகிறது. இது பல வழிகளிலும் அமெரிக்க வடிவத்தை ஒத்திருக்கிறபோதும், தங்கள் நண்பர்களுக்கான "பாராட்டு தெரிவித்தல்" என்ற செயலை மக்கள் செய்வது பொதுவான விஷயமாகும்.[37]

பிரேசிலில்,Dia dos Namorados (இலக். "நேசம்கொண்டவர்கள் தினம்", அல்லது "ஆண் நண்பர்கள்/பெண் நண்பர்கள் தினம்") ஜூன் 12 அன்று கொண்டாடப்படுகிறது, அப்போது ஜோடிகள் பரிசுகள், சாக்லேட்டுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் மலர்ச்செண்டுகளை பரிமாறிக்கொள்வர்.

இந்த நாள் ஃபெஸ்டா ஜுனினாவின் செயிண்ட் அந்தோணி தினத்திற்கு முன்பாக வருவதால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம், அவர்களுடைய திருமண புனிதராக அறியப்படும் இவருடைய நாளில், பாரம்பரியமாக, திருமணமாகாத பெண்கள் தங்கள் கணவரையோ காதலனையோ கண்டுபிடிக்கும் விதமாக சிம்பதியா எனப்படும் பிரபலமான சடங்குமுறையைச் செய்வார்கள். பிப்ரவரி 14 வாலண்டைன் தினம் முக்கியமாக பிரேசில் கலாச்சார மற்றும் வர்த்தக காரணங்களுக்காக கொண்டாடப்படுவதே இல்லை. பிரேசிலில் பிரதான ஃப்ளோட்டிங் விடுமுறை தினமும் - நீண்டகாலமாக பாலுறுவுக்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் என்று அந்த நாட்டிலுள்ள பலராலும் குறிப்பிடப்பட்டது - பிப்ரவரி முற்பாதியிலிருந்து மார்ச் முற்பாதிவவரை எந்த நாளிலும் வந்துவிடக்கூடிய கேளிக்கைகளுக்கு முன்போ பின்போ [38] வெகு விரைவிலேயே வாலண்டைன் தினம் வந்துவிடுவதால் கொண்டாடப்படுவதில்லை.

வெனிசுலாவில், 2009 ஆம் ஆண்டில் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் தனது ஆதரவாளர்களிடம் பிப்ரவரி 15 அன்று வரவிருந்த பொதுவாக்கெடுப்பு குறித்து இவ்வாறு கூறினார், "பிப்ரவரி 14 அன்றிலிருந்து எதையும் செய்வதற்கு நேரமிருக்காது அல்லது எதுவுமிருக்காது... ஒரு முத்தமோ அல்லது வேறு ஏதேனுமோ மிகவும் அற்பத்தனமானதே", அவர் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு முடிந்த பின்னர் ஒரு வாரம் முழுவதையும் காதல் வாரமாக கொண்டாடுமாறு பரிந்துரைத்தார்.[39]

தென் அமெரிக்காவில் பெரும்பாலும் 1}Día del amor y la amistad (இலக். "காதல் மற்றும் நட்பு தினம்") மற்றும் Amigo secreto ("ரகசிய நண்பன்") முற்றிலும் பிரபலமானது என்பதுடன், இரண்டும் பிப்ரவரி 14 அன்று ஒன்றாகவே கொண்டாடப்படுகிறது (ஒரே விதிவிலக்கு என்னவெனில், கொலம்பியாவில் இது செப்டம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது). பின்னர் கூறியதில் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் தற்செயல் முறையில் ஒரு பெறுபவர் ஒதுக்கப்படுவார், அவர் அநாமதேய பரிசு ஒன்றைத் தருவார் (இது கிறித்துவ பாரம்பரியத்தில் உள்ள சீக்ரெட் சாண்டாவைப் போன்றது).

ஆசியா[மூலத்தைத் தொகு]
மையப்படுத்தப்பட்ட சந்தையிடல் முயற்சியின் காரணமாக சிங்கப்பூர், சீனா மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்தவர்களால் வாலண்டைன் பரிசுகளுக்கு பெரும்பாலான பணம் செலவிடப்பட்டு சில ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது.[40]
ஜப்பானில், 1961 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ஜப்பானிய தின்பண்டம் தயாரிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான மோரிநாகா, ஆண்களுக்குத்தான் பெண்கள் சாக்லேட் தரவேண்டும் என்ற பழக்கத்தை தொடக்கி வைத்தது. குறிப்பாக, அலுவலக பெண்கள் தங்களது சக ஊழியர்களுக்கு சாக்லேட் தருவார்கள். ஒரு மாதத்திற்குப் பின்னர், மார்ச் 14 அன்று, ஜப்பானிய தேசிய தின்பண்டத் தொழில் அமைப்பினரால் "திருப்பியளிக்கும் நாள்" என்று உருவாக்கப்பட்ட வெள்ளை தினமான வாலண்டைன் தினத்தன்று தங்களுக்கு சாக்லேட் வழங்கியவர்களுக்கு ஆண்கள் திருப்பித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளைப் போன்று அல்லாமல் மிட்டாய்கள், பூக்கள் போன்ற பரிசுகளை அளித்தல் அல்லது டின்னர் தேதி ஆகியவை சாதாரணமானவை. உடன் பணியாற்றும் ஆண் ஊழியர்கள் அனைவருக்கும் பெண்கள் சாக்லேட்டுகளை கொடுப்பது ஒரு கடமையாகவே ஆகிவிட்டது. ஒரு ஆணின் பிரபலம் அந்த நாளில் அவர் எத்தனை சாக்லேட்டுகளைப் பெற்றார் என்பதை வைத்தே அளவிடப்படுகிறது; பெருமளவில் சாக்லேட்டுகளைப் பெறுவது ஒரு ஆணுக்கு ஒரு உணர்வுசார்ந்த பிரச்சினை, அந்த அளவு வெளியில் தெரியப்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிப்பாட்டைப் பெற்றபிறகே அவர்கள் அதைப்பற்றித் தெரிவிப்பார்கள். இது giri-choko (義理チョコ) எனப்படுகிறது, அதாவது giri ("கடமை") மற்றும் choko, ("சாக்லேட்") என்பதிலிருந்து வந்தது, பிரபலமடையாத உடன்பணிபுரிவர்கள் "எதிர் கடமை" chō-giri choko விலைகுறைவான சாக்லேட்டுகளை மட்டுமே பெறுவர்.
இது honmei-choko (本命チョコ); நேசிப்பவருக்கு சாக்லேட் தருவது என்பதுடன் முரண்படுகிறது. நண்பர்கள், குறிப்பாக பெண்கள், சாக்லேட்டுகளை பகிர்ந்துகொள்வது tomo-choko (友チョコ); எனப்படுகிறது, அதாவது tomo என்றால் "நண்பன்".[41]
தென் கொரியாவில், பெண்கள் பிப்ரவரி 14 அன்று ஆண்களுக்கு சாக்லேட் தருவார்கள், ஆண்கள் மார்ச் 14 அன்று பெண்களுக்கு சாக்லேட் அல்லாத மிட்டாய் தருவார்கள். ஏப்ரல் 14 அன்று (கருப்பு தினம்), 14 பிப்ரவரி அல்லது மார்ச்சில் எதையும் பெறாதவர்கள், ஒரு சீன உணவகத்திற்கு சென்று கருப்பு நூடுல்ஸ் சாப்பிட்டு தங்கள் தனி வாழ்க்கையை நினைத்து துயரப்படுவார்கள். கொரியர்கள் நவம்பர் 11 அன்று பெப்பரோ தினத்தையும் கொண்டாடுவார்கள், அப்போது இளம் ஜோடிகள் ஒருவருக்கொருவர் பெப்பரோ குக்கிகளை தருவார்கள். '11/11' என்ற நாள் நீண்ட வடிவமுள்ள குக்கியை நினைவுபடுத்துவதற்கென்றே வைக்கப்பட்டுள்ளது. கொரியாவில் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி காதல் சம்பந்தப்பட்ட நாளாகவே குறிப்பிடப்படுகிறது, இருப்பினும் பெரும்பாலானவை மறைந்துபோயுள்ளன.
ஜனவரி முதல் டிசம்பர் வரை: மெழுகுவர்த்தி தினம், வெள்ளை தினம், கருப்பு தினம், ரோஜா தினம், முத்த தினம், வெள்ளி தினம், பச்சை தினம், இசை தினம், வைன் தினம், திரைப்பட தினம், மற்றும் கட்டிப்பிடி தினம்.[42]
சீனாவில், ஒருவர் தான் காதலிக்கும் பெண்ணுக்கு சாக்லேட்டுகள், பூக்கள் அல்லது இரண்டையும் தருவது ஒரு பொதுவான சூழ்நிலையாகும். சீனாவில் வாலண்டைன் தினம் என்று அழைக்கப்படுவதுSimplified Chinese: 情人节; Traditional Chinese: 情人節; pinyin: qíng rén jié.
பிலிப்பைன்ஸில் வாலண்டைன் தினம் "Araw ng mga Puso" அல்லது "இதயங்கள் தினம்" என்று அழைக்கப்படுகிறது. இது வழக்கமாக மட்டுமீறிய அளவில் பூக்களின் விலைகள் அதிகரி்ககும் தினமாக குறிப்பிடப்படுகிறது.
இதேபோன்ற ஆசிய பாரம்பரியங்கள்[மூலத்தைத் தொகு]
சீனக் கலாச்சாரத்தில், காதலர்கள் சார்ந்த பழம் மரபு அனுசரிக்கப்படுகிறது, அது "ஏழுகளின் இரவு" என்று அழைக்கப்படுகிறது (சீனம்: 七夕; பின்யின்: Qi Xi). இந்த மரபுப்படி, கவர்டு ஸ்டார் மற்றும் வீவர் மெய்ட் ஸ்டார் ஆகியவை வழக்கமாகபால்வீதியால் பிரித்து வைக்கப்படும் (வெள்ளி ஆறு) ஆனால் அதை சீன நாட்காட்டியின் ஏழாவது மாதம் ஏழாவது நாளில் கடந்துசெல்வதற்கு அனுமதிக்கப்படும்.
இதே நாளில் கொரியாவில் கடைபிடிக்கப்படுவது சில்சியோக் எனப்படுகிறது, ஆனால் ரொமாண்ஸ் உடன் உள்ள இதன் உறவு நீண்டகாலமாக மங்கிப்போய்விட்டது.[மேற்கோள் தேவை]
ஜப்பானில் 七夕 (தனபதா எனப்படுவது 棚機 என்ற நெசவுக் கடவுளைக் குறிக்கும்) கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஜூலை 7 அன்று கொண்டாடப்படும். இதன் பின்னணியில் உள்ள புராணம் சீனத்தில் உள்ள ஒன்றுதான். [மேற்கோள் தேவை]இருப்பினும், இந்தக் கொண்டாட்டம் வாலண்டைன் தினத்துடனோ அல்லது ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்துக்கொள்வதுடனோ கொஞ்சம்கூட தொடர்புபடுத்திக் குறிப்பிடப்படுவதில்லை.
மத அடிப்படைவாதிகளுடனான மோதல்கள்[மூலத்தைத் தொகு]
இந்தியா[மூலத்தைத் தொகு]
இந்தியாவில் வாலண்டைன் தினம் வெளிப்படையாகவே இந்து அடிப்படைவாதிகளால் எதிர்க்கப்படுகிறது.[43] 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வாலண்டைன் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கும், இதை "மேற்கிலிருந்து வந்த கலாச்சார சீர்கேடு" என்று எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனாவின் தீவிரப் போக்குள்ளவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.[43][44] குறிப்பாக, மும்பையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பால்தாக்கரேவும் மற்ற சிலரும் இந்த நாளுக்கு முன்பாக, வாலண்டைன் தினத்தன்று எதுவும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.[45] இதில் வன்முறை நிகழ்த்துபவர்கள், பூங்காக்கள் போன்ற பொதுவிடங்களில் களியாட்டங்களில் ஈடுபடும் இளம் ஜோடிகளையும், காதலர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுபவர்களையும் விரட்டிப் பிடித்து குறுந்தடிகளை வைத்திருக்கும் கொள்ளையர்களால் மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பூங்காக்களிலும் மற்ற பொது இடங்களிலும் காணப்படும் ஜோடிகள் உடனடியாக அந்த இடத்திலேயே திருமணம் செய்துகொள்ளும்படி சிவசேனா மற்றும் இதேபோன்ற போராட்டக்காரர்களால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

மத்திய கிழக்கு[மூலத்தைத் தொகு]
இளம் ஈரானியர்கள் இந்த நாளில் வெளியில் சென்று பரிசுகளை வாங்கிக் கொண்டாடுவதை காணமுடிகிறது.[46][நம்பகமற்றது – உரையாடுக]

சவுதி அரேபியாவில், 2001 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில், கலாச்சார காவலர்கள் வாலண்டைன் தின பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடைசெய்து, இந்த நாள் இஸ்லாம் அல்லாத கொண்டாட்ட நாள் என்று கருதப்படுவதால் கடை ஊழியர்களிடம் சிவப்பாக உள்ள எந்த அம்சத்தையும் நீக்கிவிடும்படி கூறினர்.[44][47] 2008 ஆம் ஆண்டில் இந்தத் தடை கருப்புச் சந்தையில் [47] பூக்கள் மற்றும் அலங்காரக் காகிதம் விற்கப்படுவதற்கு வழிவகுத்தது.[47]









வாலன்டைன்’ஸ் டே அல்லது காதலர் தினம் – கற்பனையில் உருவாக்கப்பட்டவன் தியாகியாகி, திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் ஆகி, காதலர் தினநாயகனாக மாறியது!
வாலன்டைன்’ஸ் டே அல்லது காதலர் தினம் – கற்பனையில் உருவாக்கப்பட்டவன் தியாகியாகி, திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் ஆகி, காதலர் தினநாயகனாக மாறியது!

கர்டில் சாவி, இதய சாவி

கர்டில் சாவி, இதய சாவி

இடைக்காலத்தில் 12-13 நூற்றாண்டுகளில் உருவாக்கப் பட்ட வாலன்டைன் கட்டுக்கதை: வேலன்டைன் என்று சொல்லப்படுகின்ற கிருத்துவப் பாத்திரம் [imaginery charcher created based on hagiography] ஒரு கற்பனையில் இடைக்காலத்தில் உருவாக்கப்பட்டது[1]. அத்தகைய கற்பனை கதைகள் [legends] புனையப்பட்டபோது, வழக்கம் போல ஒருவனுக்கு மேல் இருவர் இருந்தனர் என்றெல்லாம் சொல்லப்பட்டது[2]. பிறகு கத்தோலிகிகக் கிருத்துவத்தின் இறையியல் சித்தாந்தத்தின் படி, “தியாகத்துவம்” [martyrdom] சேர்க்கப்படும் போது, மேலும் தியாகத்துவவியல் [martyriology] ரீதியில் கட்டுக்கதைகள் [martyrdom stories] கண்டுபிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டன. ரோம் நாட்டில் வழங்கி வந்த ஒரு கற்பனைக் கதையின்படி, இவன் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று தடை விதிக்கப் பட்ட வீரர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தார் என்கின்றது. இன்னொரு கதையோ, ரோமானிய அரசால் தண்டிக்கப்பட்ட கிருத்துவர்களுக்கு சாதகமாக இருந்ததால் கைது செய்யப்பட்டார் என்றிருக்கிறது. இன்னொரு கதை சிறையில் இருக்கும் போது, சிறையாளியின் மகளை நோயிலிருந்து தனது அதிசயத்தினால் காப்பாற்றினான் என்று நீட்டுகிறது. இன்னுமொரு கதையோ, தான் கொல்லப்படுவதற்கு முன்பு, அவளுக்கு காதல் கடிதம் எழுதியதாக சேர்த்துச் சொல்கிறது. உண்மையில் கிளாடியஸ் என்கின்ற அந்த அரசன் அத்தகைய ஆணை எதையும் போடவில்லையாம்![3] கட்டுக்கதைக்கு என்ன ஆதாரமா வேண்டிக்கிடக்கிறது? ரோமில் மட்டும் அப்பெயரைக் கொண்டவர்கள் ஏழு பேர் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

This illustration from 1250 shows Saint Valentine curing an epileptic.

This illustration from 1250 shows Saint Valentine curing an epileptic.

பாலியல் வியாதி கடவுள், காதலர் தின துறவியானது: கிளாடியஸ் – II [Claudius II] கோத்துகள் [Goths] என்பவர்களை வெற்றிக் கொண்ட பிறகு, அவர்களது பெண்களில் இரண்டு அல்லது மூன்று பேர்களுக்கு மேலாக திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஆணையிட்டானாம்[4]. அக்கதையுடன் சேர்த்துதான், கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று தடை விதிக்கப் பட்ட வீரர்களுக்கு ரகசியமாக கல்யாணம் செய்து வைத்தார் என்ற புதிய கதையை கிருத்துவர்கள் இடைக்காலத்தில் தயாரித்தார்கள்[5]. போர்களில் வென்றவர்கள், வெற்றிக் கொண்டவர்களின் பெண்களைத் தூக்கிக் / கடத்திக் கொண்டு போவது, கற்பழிப்பது சகஜமாகவே இருந்து வந்துள்ளன. பெண்கள் அவர்களுக்கு எப்பழுதுமே காமத்தை அடக்கும் பொருளாகவே இருந்து வந்துள்ளனர். அதனால், இடைக்காலத்தில் ஆண்களுக்கு சிபிலிஸ் / மேகவியாதி அதிகமாக வந்தது. அதனைக் குணப்படுத்த பலவாறு முயன்றனர். அப்பொழுது, ஒவ்வொரு வியாதியை உண்டாக்குவதும் ஒரு கடவுள் / தேவதை, அதனைப் போகுவதும் ஒரு கடவுள் / தேவதை என்று நம்பி வந்தனர். ஆகவே, பெண்களுடன் சம்பந்தப்பட்ட இந்த வியாதி, வேலன்டைனுடன் சேர்க்கப் பட்டது. பெண்களுடன் சேருவது, புனைவது என்பதனை காதல் என்று உருவகமாக்கினர். வேலன்டைன்ஸ் டே [Valentine’s Day] மற்றும் வெனிரல் டிஸ்ஸீஸ் [Vinereal Disease] இரண்டயுமே செல்லமாக “VD” என்றே அழைத்து வந்தனர். சுமார் 1500 CE வாக்கில் தான் ஐரோப்பா இந்நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அறிந்துகொண்டார்கள். இருப்பினும், அதனை உண்டாக்கும் கிருமியான “ட்ரெபோனெமோ பல்லிடம்” 1905ல் தான் கண்டறியப்பட்டது. பால் ஹெர்லிச் என்பவர் அர்சனிக் கலவையிலான மருந்து மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கும் மூறையினை கண்டுபிடித்தார்.

விடியும், வேலன்டைன் தினமும்

விடியும், வேலன்டைன் தினமும்

பல வாலன்டைன்கள், பல கொண்டாடும் தினங்கள்: கிருத்துவம் இடைக்காலத்தில் ஒரு ஏற்படுத்தப் பட்ட மதமாக உருவாகியபோது, பற்பல சித்தாந்தங்களுடன் அதற்கேற்ற ஆதாரங்களை தயாரிக்க ஆரம்பித்தார்கள்[6]. அதில் வாலன்டைன் சிக்கியபோது, ஐரோப்பா, அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், கலாச்சாரங்களில் இருந்த கதைகளுடன், இவர்களது கதைகளையும் சேர்த்துக் கொண்டார்கள்[7]. இடத்திற்கேற்ற முறையில் மாற்றியும் கொண்டார்கள். இத்தகையக் குழப்பங்களினால், பிறகு இது சர்ச்சுகளின் மீது திணிக்கப்பட்டபோது, கொண்டாடும் தினங்களும் மாறின. கிழக்கத்தைய ஆசார சர்ச் பிரிவுகள் இப்பண்டிகையை ஜூலை 6 மற்றும் ஜூலை 30 தேதிகளில் கொண்டாடுகின்றன. பிரேசிலில் “டயா டி சாவோ வேலன்டிம்” [Dia de São Valentim] என்று ஜூன்.12ம் தேதியில் கொண்டாடுகிறது.  1969 ஆம் ஆண்டு வரை கத்தோலிக்கக் கிருத்துவம் மட்டும் பதினோரு வாலண்டைன் தினங்களை அங்கீகரித்திருந்தது.பிப்ரவரி 12 பிறகு ஏற்படுத்தப் படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் 18ம் நூற்றாண்டில் தான், காதலர்கள் தங்களது காதலை வேலிப்படுத்திக் கொண்டு ஒருவருக்கொருவர் பூக்கள், பரிசுகள், அழைப்பிதழ்கள் பரிமாற்றுக் கொள்வது ஆரம்பித்தது. வேலன்டைனின் எலும்புகூடுகளும் அதிகமாகவே இருக்கின்றன; மண்டையோடுகள்-எலும்புகள் முதலியன அதைவிட அதிகமாவே இருக்கின்றன. வனுடைய சாமாதிகள் ரோம் (ரோமில் பல இடங்கள்); டப்லின், அயர்லாந்து; ஆப்பிரிக்கா; என்று பல நாடுகளில் உள்ளன. எனவே பல வாலன்டைன்கள், பல கொண்டாடும் தினங்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விசயமே இல்லை.

விடி - சரித்திரம்

விடி – சரித்திரம்

வேலன்டைன் வியாதியும், காக்காய் வலிப்பும், தொழு நோயும்: வேலன்டைன் வியாதி என்று ஒரு வியாதியே உள்ளதாக கதைகள் கூறுகின்றன, அதாவது, காக்காய் வலிப்பு நோயுக்கு அந்த பெயர் கொடுக்கப் பட்டது. ஏனெனில், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பல பெண்களைப் புனைந்து பாலியல் நோய் கொண்டவர்கள், வேலன்டைன் போலவே பாதிக்கப்படுவார்கள் என்று பாரம்பரியமாக சொல்லப்பட்ட கதைகள் இருந்தன. சிபிலிஸ் / மேகவியாதியும் வரும் என்று அதையும் “கடவுள் நோய் / கடவுள் கொடுத்த நோய்” என்று சொல்லப்பட்டது. இதெல்லாம் இடைக்காலத்தில் கிருத்துவ நம்பிக்கைகளாக இருந்தன. இவ்வியாதிகளை போக வேண்டுமானால், மந்திரிக்கப்படவேண்டும், இறந்தவர்களின் சமாதிகளுக்குச் சென்று, அங்குள்ள எலும்புகளைத் தொடவேண்டும், மண்டையோட்டில் எதாவது ஒரு திரவியத்தை ஊற்றிக் குடிக்க வேண்டும், மண்ணை பூசிக்கொள்ள வேண்டும், அப்படி செய்தால், நோய் நீங்கி விடும் என்பது அவர்களுக்கு நம்பிக்கையாகின. அதனால் தான், இப்பொழுது, வேலன்டைன் நினைவாக, சிறுவர்-சிறுமிகளுக்கு தாயத்துக் கட்டுதல், போன்று செய்தால் வலிப்பு நோய் வராமல் இருக்கும் நம்பப்படுகிறது[8]. இது ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இன்றும் வழக்கமாக இருக்கின்றது. அங்கு அந்த வியாதி வரக்கூடாது என்றால், சிறுவர்-சிறுமிகளின் கைகளில் தங்கசாவியைக் கொடுத்து பூஜை செய்கிறார்கள். அப்படி செய்தால், அவர்களுக்கு அத்தகைய நோய்கள் வராது என்பது நம்பிக்கையாக இருக்கிறது[9].

ஜாக்கிரதை விடி- பெண்கள்

ஜாக்கிரதை விடி- பெண்கள்

பூட்டும்–சாவியும் – வாலன்டைன் சாவிகளும்: “பூட்டு-சாவி” உருவகம் கிருத்துவத்தில் ஆண்-பெண் உறுப்புகள் இணைப்புடன் சம்பந்தப்படுத்தி வைத்தார்கள். அக்காலத்தில் பெண்களின் கற்ப்பைக் காப்பதற்கு, இடுப்பில் “கர்டில்” கட்டி, பூட்டு போட்டு வைப்பார்கள். அதுமட்டுமல்லாது, தனது பெண்களை அடுத்தவர்கள் புனையாமல் இருப்பதற்கும் அம்முறை கையாளப்பட்டது. வாலன்டைன் பெண்களை பலதார முறையில் ஈடுபடுத்தியதால், பாலியல் நோய்கள் உண்டாகின. இதனால், பெண்களுகு பூட்டுப் போட ஆரம்பித்தனர். சாவியை பத்திரமாகவைத்துக் கொள்வார்கள். இதனால், காதலர்களின் இதயங்கள் உடைந்தன, அதற்கு காரணம் வாலன்டைன் என்று கதைகளை உருவாக்கினர். இதயங்களைப் பிளப்பார் என்று கதைகட்டினர். இதை விளக்கும் பல கதை புத்தகங்கள், ஜோக்குகள் அதிகமாகவே இருக்கின்றன. பிறகு வியாதி-உருவகத்திலிருந்து, வாலன்டைனை உயர்த்தி எடுத்துச் செல்லும் முயற்சிகளில், காதலர்களுடன் 18-19ம் நூற்றாண்டுகளில் இணைத்தனர். அப்பொழுது, வாலன்டைன் காதலர்களது இதயங்களைத் திறப்பார் என்று கதையினை மாற்றினர். அதற்கும் சாவிகள் தேவைப்பட்டன. . இதயத்தைத் திறக்கும் சாவி வேலன்டைனிடம் இருந்தது என்று நம்பினார்கள்!

வேலன்டைன் வியாதி என்பது சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்

வேலன்டைன் வியாதி என்பது சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்

வாலன்டைன் சிறுவர்–சிறுமிகளுடன் தொடர்பு ஏற்படுத்தப் பட்டது:  சிறுவர்-சிறுமிகளுடன் வாலன்டைனை இணைக்க முற்பட்டனர், இதற்கு ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் இருந்த பழக்கம் உதவியது. மேலே குறிப்பிடப் பட்டபடி, காக்காய் வலிப்பு வருபவர்களுக்கு இரும்பினால் செய்யப் பட்ட பொருட்கள், பொதுவாக சாவிகள் கொடுத்தால், அதனைப் பிடித்துக் கொண்டதும் வலிப்பு நிற்பதைப் பார்த்திருக்கின்றனர். ஆனால், காதல் நோய், காமநோய் என்ற போது, இரும்புச்சாவியை தங்கச்சாவியாக மாற்றினர். சிறுவர்-சிறுமிகளின் கைகளில் தங்கசாவியைக் கொடுத்து பூஜை பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள். அப்படி செய்தால், அவர்களுக்கு அத்தகைய நோய்கள் வராது என்பது நம்பிக்கையாக இருக்கிறது[10]. இப்பண்டிகை பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

© வேதபிரகாஷ்

14-02-2015

[1] Ansgar, 1986, p. 59. It originated in the 1797 edition ofKemmish’s Annual, according to Frank Staff, The Valentine and Its Origins (London, 1969), p. 122.

[2] செயின் பேட் அல்லது பேடே, தாமஸ் போன்ற கட்டுக்கதைகளுடன் ஒத்துப்போவதும், சில ஆசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

[3] Another embellishment is that Saint Valentine would have performed clandestine Christian weddings for soldiers who were forbidden to marry. However, this supposed marriage ban was never issued, and in fact Claudius II told his soldiers to take two or three women for themselves after his victory over the Goths.

David James Harkness, Legends and Lore: Southerns Indians Flowers Holidays, vol. XL, No. 2, April 1961, University of Tennessee Newsletter (bimonthly), p. 15.
[5] Max L. Christensen, Heroes and Saints: More Stories of People Who Made a Difference, 1997, Westminster John Knox Press. Chapter “The First Valentine”, p. 25 ISBN 066425702X.

[6][6] கிருஸ்து இருந்தற்கான ஆதாரங்களில் பெரும்பாலும், இக்காலத்தில் உருவாக்கபட்டவைதான், அதனால் தான் இப்பொழுது, அவற்றின் தேதிகளை விஞ்ஞானமுறையில் சோதனைக்கூடங்களில் ஆராயும் போது 13-14 நூற்றாண்டுகள் என்று தேதிகள் வருகின்றன. இதில் பிரபலமான “டூரின் சௌர்ட்”ம் அடங்கும்.

[7] உள்ளூர் கதைகளைச் சேர்த்துக் கொண்டு, பிறகு தங்களது கதைகளிலிருந்து தான், அவை உண்டாகின என்று பிறகு மாற்றிக் கூறும், எழுதும் முறையை, கிருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வழக்கனாகக் கொண்டுள்ளனர்.

[8] In ancient Rome, epilepsy was known as the Morbus Comitialis (‘disease of the assembly hall’) and was seen as a curse from the gods. In northern Italy, epilepsy was once traditionally known as Saint Valentine’s malady. Saint Valentine is invoked for healing as well as love. He protects against fainting and is requested to heal epilepsy and other seizure disorders. In northern Italy, epilepsy was once traditionally known as Saint Valentine’s Malady.

[9] While Saint Valentine’s keys are traditionally gifted as a romantic symbol and an invitation to unlock the giver’s heart, Saint Valentine is also a patron saint of epilepsy. The belief that he could perform miraculous cures and heal the condition – also known as ‘Saint Valentine’s illness’ or ‘Saint Valentine’s affliction’ – was once common in southern Germany, eastern Switzerland, Austria, and northern Italy. To this day, a special ceremony where children are given small golden keys to ward off epilepsy is held at the Oratorio di San Giorgio, a small chapel in Monselice, Padua, on 14 February each year.


[10] While Saint Valentine’s keys are traditionally gifted as a romantic symbol and an invitation to unlock the giver’s heart, Saint Valentine is also a patron saint of epilepsy. The belief that he could perform miraculous cures and heal the condition – also known as ‘Saint Valentine’s illness’ or ‘Saint Valentine’s affliction’ – was once common in southern Germany, eastern Switzerland, Austria, and northern Italy. To this day, a special ceremony where children are given small golden keys to ward off epilepsy is held at the Oratorio di San Giorgio, a small chapel in Monselice, Padua, on 14 February each year.


No comments:

Post a Comment