SHRUTI HAASAN ,SINGER,MUSIC DIRECTOR,ACTRESS BORN 1986 JANUARY 28
சுருதிஹாசன் (Shruti Haasan, பிறப்பு: சனவரி 28, 1986) பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.[
இளமைப்பருவம்[மூலத்தைத் தொகு]
சுருதிஹாசன் 1986, சனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார்.[2] இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார்.[3] பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.[4]
கலைத்துறை[மூலத்தைத் தொகு]
பாடகர்[மூலத்தைத் தொகு]
சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும்[5], ஹேராம் (தமிழ் மற்றும் இந்தி), என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
நடிப்பு[மூலத்தைத் தொகு]
இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்ப்பார்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது.[6] 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.
இசையமைப்பு[மூலத்தைத் தொகு]
2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்
'பெஹன் ஹோகி டேரி'... ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லேட்டஸ்ட் பாலிவுட் படம். தன் அப்பா கமல்ஹாசன் அந்தப் படத்தை பார்ப்பதற்காக ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ருதி ஹாசன். அதற்காக மும்பையிலிருந்து பறந்து வந்த ஸ்ருதியுடன் பேசுவதற்கு நேரம் கிடைத்தது.
அப்படி என்ன ஸ்பெஷல் இந்தப் படத்தில்?
“அப்பாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. என் கேரியர்ல அப்பா எப்போதும் எனக்குப் பெரிய சப்போர்ட்டா இருந்திருக்கார். இந்தப் படத்தை அப்பாகூட சேர்ந்து பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அந்தச் சாக்குல அவர்கூட ரெண்டு, மூணு நாள் இருக்கலாம்ங்கிறதுதான் பிளான். அடுத்து என்னோட மியூசிகல் கொலாபரஷேன் வொர்க்குக்காக லண்டன் போறேன். உக்கார நேரமில்லை, லைஃப் செம ஸ்பீடா ஓடிக்கிட்டே இருக்கு....” உற்சாகம் குறையாமல் பேசுகிறார் ஷ்ருதி.
மும்பையிலயே செட்டிலாயிட்டீங்க போல? சென்னை பிடிக்கலையா?
''சேச்சே அப்படி இல்லை. மும்பையிலயும் சென்னையிலயும் எனக்கு வீடு இருக்கு. ரெண்டு இடங்கள்லயும் மாறி மாறி இருக்கேன். ஹிந்திப் படங்கள் பண்றதால மும்பையிலயே செட்டிலாயிட்டீங்களானு கேட்கறாங்க. ஆக்சுவலி, நான் தமிழ், தெலுங்குப் படங்கள்தான் அதிகம் பண்றேன். இந்த மூணு ஊர்களோடவும் எனக்கு ஸ்பெஷல் கனெக்ட் இருக்கு.''
பாடகியா, இசையமைப்பாளரா இன்டஸ்ட்ரிக்கு அறிமுகமானீங்க... அப்புறம் நடிகை அவதாரம். ஸ்ருதிக்குள்ள இருந்த இசைக்கலைஞர் எங்கே?
‘‘எங்கேயும் போகலை. இங்கேயேதான் இருக்காங்க. சமீப காலத்துல மியூசிக்ல ரொம்ப கான்சன்ட்ரேட் பண்ணலை. இதுவரைக்கும் நான் என்னோட படங்களுக்கும் மத்த சில படங்களுக்கும் பின்னணி இசை நிறைய பண்ணிட்டிருந்தேன். கடந்த சில வருஷங்கள்ல ஒரு வருஷத்துலயே நாலஞ்சு படங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். அதுக்கு நடுவுல மியூசிக்கைப் பார்க்கறது கஷ்டமா இருந்தது. ப்ளேபேக்குங்கிறது டைம் டேபிள் போட்டு வொர்க் பண்ற வேலையில்லை. கூப்பிட்டா அடுத்த நாள் ரெடியா இருக்கணும். ஷூட்டிங், டிராவல்னு பிசியா இருந்ததால என்னால பண்ண முடியலை. இப்போ இந்தியாவைத் தாண்டியும் வேலை பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். ஏ.ஆர். ரஹ்மான் சார் கூட சேர்ந்து பாடற வாய்ப்பு கிடைச்சது. அது மறக்க முடியாத அனுபவமா அமைஞ்சது. மியூசிகல் கொலாபரேஷன்ஸ் நிறைய பண்ற ஐடியா இருக்கு... சீக்கிரமே பழைய ஸ்ருதியை நீங்க பார்க்கலாம்....''
பாடகி, இசையமைப்பாளர், நடிகை... இதை எல்லாம் தாண்டி ஸ்ருதிக்கு வேறு முகங்கள் உண்டா?
“இருக்கு... எனக்கு எழுதப் பிடிக்கும். டைம் கிடைக்கும்போது எழுதுவேன்.'
ஸ்ருதி நடிகையாகணும்னு என்கிற முடிவை யார் எடுத்தது?
“என் வாழ்க்கையில எல்லா முடிவுகளையும் நான்தான் எடுப்பேன். எஸ். எப்பவும் என் வாழ்க்கை என் கைலதான்! நடிப்பும் அப்படித்தான். பெரிய பிளானெல்லாம் பண்ணலை. தப்பித் தவறி நடிகையானேன்னுதான் சொல்லணும். லைஃப்ல நிறைய விஷயங்கள் அப்படித்தான் பிளான் பண்ணாமலேயே நடக்கும். சினிமாங்கிறது எங்க குடும்பத்துல எப்பவுமே இருந்திருக்கு. முதல் பட வாய்ப்பு வந்தபோது நான் எதைப் பத்தியும் யோசிக்கலை. அது ரொம்ப சிம்பிள் டெசிஷன். எப்போதுமே அப்பா அதிகமா அட்வைஸ் பண்ணமாட்டார். நடிப்பு விஷயத்துலயும் அப்படித்தான். 'ஹார்ட் வொர்க் பண்ணு... உன்னால முடியும்'னு சொன்னாங்க அம்மா. அவ்வளவுதான்.''
ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சியை ரசிப்பவர்களே, இன்னொரு பக்கம் ‘கமல்ஹாசனின் மகள் இவ்வளவு கிளாமரா நடிக்கலாமா?’ என்று விமர்சனமும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட விமர்சனங்களை எப்படிப் பார்க்கறீங்க?
''எங்கப்பா என்னை இன்டிபென்டென்ட் அண்ட் ஸ்ட்ராங் உமனா வளர்த்திருக்கார். நான் யாருங்கிறதுல எனக்குப் பெருமை உண்டு.''
மிக கடினமான அந்தக் கேள்வியை ஜஸ்ட் லைக் தட் என கடந்து போகிறார ஸ்ருதி.
அவர்கிட்ட திட்டு வாங்கியிருக்கீங்களா?
''நல்லவேளையா அப்படி எதுவும் நடக்கலை. நான் அவருடைய பொண்ணுங்கிறதால திட்டாமவிட்டுட்டதா நினைக்காதீங்க. அவருக்கு சினிமாதான் எல்லாம். கூட நடிக்கிறது மகளோ, வேறு யாரோ நடிகையோ... அவருக்கு சினிமா மட்டுத்தான் கண்ணுக்குத் தெரியும்.''
கமல்ஹாசனுடைய மகளா உங்களுக்கு அதிகபட்ச பெருமையைக் கொடுத்த ஒரு தருணம்.... அதிக வேதனையைத் தந்த ஒரு தருணம்?
“அப்பாவோட பெயரால் எனக்குக் கிடைச்சிருக்கிற ஆசிர்வாதமும் மக்களோட மனசுல கிடைச்ச இடமும் ரொம்பப் பெரிய விஷயங்கள். அப்பாவோட ஆளுமை, அவரோட திறமை, அவரோட வேலைனு எல்லாமே எனக்குப் பெருமையைக் கொடுக்கிற விஷயங்கள்தான். இவை எல்லாத்தையும் தாண்டி அவர் எனக்கும் அக்ஷராவுக்கும் ரொம்ப நல்ல அப்பாவா இருந்திருக்கார். வெளிப்படையான மனசு, பாசம்னு எல்லாம் கலந்த அற்புதமான அப்பா அவர் என்பதில் எனக்குக் கர்வமும் உண்டு. வேதனைனு சொல்றதுக்கு எதுவும் இருந்ததில்லை. எல்லார் வாழ்க்கையிலயும் கஷ்டமான நேரம் வரும். ஆனா எனக்குத் தெரிஞ்சு அவை எல்லாத்தையும் இவ்வளவு தைரியமா தாண்டிக் கடந்து வந்தவர்னா என் அப்பா மட்டும்தான்.''
ஸ்ருதிஅடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார் கமல். அப்போதெல்லாம் ஒரு மகளாக உங்களின் மனநிலை எப்படியிருக்கும்?
“அப்பாவைப் பத்தி எனக்குத் தெரியும். அடுத்தவங்க தேவையில்லாம கிளப்பி விடற சர்ச்சைகளுக்கெல்லாம் அவரே கவலைப்பட மாட்டார். எல்லாத்துலேருந்தும் மீண்டு எழுந்து வந்துடற தைரியம் அவருக்கு உண்டு. ஒரு மகளா அந்த தைரியத்தை ரசிப்பேனே தவிர கவலைப்பட மாட்டேன்.''
கமல், உங்கள் தங்கை அக்ஷரா, நீங்க.... மூணு பேரும் சேர்ந்திருக்கிற தருணங்கள் எப்படியிருக்கும்?
''எல்லாரும் பயங்கர பிஸி. ஃபேமிலியா சேரும்போது நல்ல அனுபவமா இருக்கும். மூணு பேரும் அடிக்கடி சந்திச்சுக்க சந்தர்ப்பங்கள் அமையாது. நானும் அக்ஷராவும் மீட் பண்ணுவோம். இல்லைனா அப்பாவும் நானும் மீட் பண்ணுவோம். மீட்டிங்தான் முக்கியம். எப்பவாவது மூணு பேரும் மீட் பண்ற சான்ஸ் கிடைக்கும். அது ரொம்பவே ஸ்பெஷல்.''
அக்ஷரா ஒரு பக்கம் நடிகை. இன்னொரு பக்கம், இயக்குநராகும் எண்ணத்தில் ஏடியாகவும் வேலை பார்க்கிறாங்க... ஓர் அக்காவா அக்ஷராவைப் பத்தின உங்க விருப்பங்கள் என்ன?
''எனக்கு அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவங்க ஹார்ட்வொர்க் பண்றாங்க. எல்லைகளைத் தாண்டி இன்னும் நிறைய உயரம் தொடணும்ங்கிறது மட்டும்தான் ஆசை.''
சோஷியல் மீடியாவுல ஆக்டிவா இருக்கீங்க. ஆனால், சமூகம், மொழி, இனம் சார்ந்த விஷயங்களுக்கு எல்லாம் குரல் கொடுப்பதில்லையே. சோஷியல் மீடியா வேறு எதற்கான கருவி?
''எல்லா விஷயங்களுக்கும் குரல் கொடுக்கிறதில்லைதான். நான் சொல்றதால அந்த விஷயம் நிறைய பேரைப் போய்ச் சேரும்னு நினைக்கிற விஷயங்களைப் பத்திப் பேசிட்டுதான் இருக்கேன். இப்போ இந்தப் பேட்டியில உங்க பாயின்ட் ஆஃப் வியூவுல சில கேள்விகளைக் கேட்பீங்க. அதைத் தாண்டி எனக்கு என் ரசிகர்களுக்குச் சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கும். அதை நான் ரீட்வீட் பண்ணுவேன். என் ரசிகர்கள்கூட நேரடியா தொடர்புல இருக்க சோஷியல் மீடியா ஹெல்ப் பண்ணுது.”
ஸ்ருதிஹாசன் பற்றி ஏன் இவ்வளவு கிசுகிசுக்கள்?
“அதையெல்லாம் நான் சீரியஸாவே எடுத்துக்க மாட்டேன். எனக்கு எந்த வகையிலேயும் உதவாத அந்த விஷயங்களைப் பத்தி நான் கேர் பண்றதில்லை.”
செலிப்ரிட்டி வாழ்க்கையில எதையாவது மிஸ் பண்றீங்களா?
“அப்படியெதுவுமே இல்லை. ஷூட்டிங் இல்லாத டைம்ல நானே கடைக்குப் போய் காய்கறி வாங்குவேன். மளிகைச் சாமான் வாங்குவேன். மேக்கப் இல்லாம என்னை பலருக்கும் அடையாளம் தெரியாது. அதையும் மீறிக் கண்டுபிடிச்சிட்டாங்கன்னா பக்கத்துல வந்து சிரிப்பாங்க.... பேசுவாங்க. ஃபோட்டோ கேட்பாங்க. மனசிருந்தா கொடுப்பேன். பிசியா இருந்தா வேண்டாம்னு சொல்லிடுவேன். அது நல்லதுனு நினைக்கிறேன். என் வாழ்க்கை அவ்வளவு ஒண்ணும் அசாதாரணமாகவெல்லாம் இல்லை.”
காதலும் காற்றும் ஒன்று போலத்தான். காலம்தோறும் வீசிக்கொண்டிருந்தாலும் அந்த நேரத்து சுவாசத்துக்கு உதவும் காற்றின் தேவை போல காதலும் அவரவர் தேவைக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது. ‘எது காதல்’ என்பதில்தான் சந்தேகம் வருகிறதே தவிர, ‘காதல்’ என்கிற உணர்வில் எவருக்கும் எந்த சந்தேகமும் வருவதில்லை. ‘‘நேற்றின் காதலைவிட இன்றின் காதலில் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறதா..?’’ என்ற கேள்விக்கு பதிலாக, தன் காதல் பற்றிய தெளிவையும், தன் படங்கள் பற்றியும் இங்கே முன்வைக்கிறார் இன்றைய இளம் தலைமுறையின் பிரதி நிதியாக நிற்கும் ஸ்ருதி ஹாசன்.
‘‘முதல்ல காதல்னா என்னங்கிறதைப் புரிஞ்சிக்கலாம். காதல்னா உடனே ஆணுக்கும், பெண்ணுக்குமான ரொமான்ஸ்னு நினைச்சுடக் கூடாது. நாம் செய்யற வேலை, நம் இருப்பிடம், நம்ம பெற்றோர்னு எது மேல வேணா காதல் வைக்கமுடியும்.
வேலன்டைன்ஸ் டேல கூட, செய்யற வேலைலேர்ந்து நாம விரும்பற எதையும் காதலிக்க முடியும். ஆனா நீங்க கேக்கறது ரொமான்டிக் லவ்வா இருக்கிறதால, அதைப் பேசலாம். காதலை நேற்றைய காதல், இன்றைய காதல்னு பிரிக்கிறதில எனக்கு உடன்பாடு இல்லை. நம்பகத்தன்மையும், அது இல்லாத தன்மையும் எல்லாக் காலத்திலும் இருந்துக்கிட்டிருக்கு.
வீட்டைவிட்டு வெளியேறி காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கள்ல ஜெயிச்சவங்களும் இருக்காங்க; வீட்ல பார்த்து முறையா கல்யாணம் பண்ணித் தோத்தவங்களும் இருக்காங்க. இதில பத்துன்னா, அதிலும் பத்து. என்னைப் பொறுத்தவரை காதல்ங்கிறது ஒரு கமிட்மென்ட். பரஸ்பரம் உணர்வுகளை மதிக்கத் தெரிஞ்ச, மதிக்கவேண்டிய கமிட்மென்ட். புரிந்துகொள்ளுதல் எப்படி காதல்ல முக்கியமோ அதே அளவு ஒருத்தரை ஒருத்தர் மதிக்க வேண்டியதும் ரொம்ப முக்கியம். ஏன்னா ரெண்டு பேரோட லைஃப்ஸ்டைலும் வெவ்வேறா இருக்கலாம். வெறும் உறவு முறைக்காக வர்ற காதலோ, கல்யாணமோ ‘வேஸ்ட் ஆஃப் டைம்’னுதான் சொல்வேன். அதில ஒரு நேர்மறையான ஈர்ப்பு இருக்கணும்.
போன தலைமுறைக் காதல்லயோ கல்யாணத்திலோ பொதுவா ஒரு பொசஸிவ்னெஸ் இருந்ததுன்னு சொல்லலாம். ‘இதுதான் வாழ்க்கை; எனக்காக நீ இதை மாத்திக்கணும்’ங்கிற கட்டாயம் அதில இருந்தது. இந்த தலைமுறைல அது இல்லை. ‘ஒத்து வந்தா வாழலாம்’ங்கிற அளவில எல்லா பிரச்னைகளையும் முன் வச்சு முடிவெடுக்க முடியுது. காதலுக்கும் ஒரு உறுதி வேணும். அதுதான் திருமணம். திருமணத்தை ஆதரிக்கிற விஷயத்தில என்னை ‘பழமைவாதி’ன்னே சொன்னாலும் பரவாயில்லை..!’’
‘‘உங்களுக்கும் சித்தார்த்துக்கும் காதல்னு வந்த செய்தி பற்றி..?’’
‘‘அதுல உண்மை இல்லை. எனக்கு தெலுங்கு தெரியாது. நான் முதல்முதல்ல தெலுங்கில நடிக்கும்போது அவர் எனக்கு அந்த மொழியைத் தெரிஞ்சுக்க உதவி செஞ்சார். இதேபோலத்தான் நான் இந்தில நடிக்கும்போது மிதுன் எனக்கு இந்தியைப் புரிஞ்சு நடிக்க உதவினார். நான் இன்னும் கத்துக்கிற நிலையில்தான் இருக்கேன். எப்பவும் கப்பல்ல நீந்திக்கிட்டோ, விமானத்தில பறந்துக்கிட்டோ, சாலைகள்ல விரைஞ்சுக்கிட்டோ நான் நடிப்பு, இசைன்னு ஓடிக்கிட்டே இருக்கேன். காதலிக்கிற மனநிலையோ, சூழ்நிலையோ எனக்கு ஏற்படவேயில்லை. என் கமிட்மென்ட்களை நான் காதலிக்கிறேன். மற்றபடி எந்த வேலன்டைன்ஸ் டேக்கும் எனக்கு பூ வந்ததில்லை. நானும் யாருக்கும் கொடுத்ததுமில்லை. என் காதலை ஒளிச்சு வைக்க மாட்டேன்!’’
‘‘‘ஏழாம் அறிவு’ எப்படிப் போய்க்கிட்டிருக்கு..?’’
‘‘என் சினிமா கரியரை நான் வெற்றி, தோல்வின்னு பிரிச்சுக்க விரும்பலை. அந்த அளவில இந்தியிலும், தெலுங்கிலும் ரிலீசான படங்கள்ல என் நடிப்புக்கு நல்ல வரவேற்பும், நல்லவிதமான விமர்சனங்களும் இருக்கு. அந்த வகையில என் முதல் தமிழ்ப்படமான ‘ஏழாம் அறிவு’ ஷூட்டிங் ஏ.ஆர்.முருகதாஸோட அற்புதமான டைரக்ஷன்ல அருமையா போய்க்கிட்டிருக்கு. சூர்யாவும் என் நடிப்பை மேம்படுத்திக்க உதவியா இருக்கார். நிச்சயமா இந்தப்படம் பெரிய அளவில வெற்றியடையும். இந்தப்பட அனுபவங்கள் மறக்கமுடியாதவை..!’’
வேணுஜி
சுருதிஹாசன் (Shruti Haasan, பிறப்பு: சனவரி 28, 1986) பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.[1]
இளமைப்பருவம்
சுருதிஹாசன் 1986, சனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார்.[2] இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார்.[3] பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.[4]
கலைத்துறை
பாடகர்
சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும்[5], ஹேராம் (தமிழ் மற்றும் இந்தி), என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
Shruti Haasan TeachAIDS Recording Session.jpg
நடிப்பு
இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது.[6] 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.
இசையமைப்பு
2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.[
நடிகையும் கமல்ஹாசன் மகளுமான சுருதிஹாசனும் லண்டன் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்கிறார்கள்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலேவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுருதிஹாசன், ‘’என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது’’ என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளியாக தொடங்கின. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றினை மட்டுமே தொகுத்து வருகிறார் சுருதிஹாசன்.
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் பாடல் என அனைத்து திறமையும் கொண்டவர்.
மேலும் இவர் உலகநாயகன் கமலஹாசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் 3, உன்னை போல் ஒருவன், ஏழாம் அறிவு, புலி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த இவர் இடையில் சில காலம் தனது காதலருடன் டைம் ஸ்பென்ட் பன்னி ஊர்சுத்தி கொண்டிருந்தார் பின் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் அவர்களுடைய காதல் இடையிலேயே பிரிந்தது.
அதனைதொடர்ந்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கின்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் நடிகை ஸ்ருதிஹாசனும் ஒருவர். அந்த வகையில் தற்போது இவரின் பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் கொடிகட்டிப் பறக்கும் நடிகை சுருதிஹாசன், தனது வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.நடிகர் கமலஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான சுருதிஹாசன் தற்போது தமிழில் அஜீத்துடன் தல 56, விஜயுடன் புலி, தெலுங்கில் மகேஷ்பாபு வுடன் ஸ்ரீமந்துடு, இந்தியில் அணில் கபூருடன் வெல்கம் பேக், யாரா, ராக்கி ஹேண்ட்சம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.மூன்று மொழிகளிலும் இவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க தற்போது சுருதியின் காட்டில் தான் அடைமழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், வாழ்க்கையில் திருமணம்செய்து கொள்ளும் எண்ணமே இல்லை அதிரடியாக மனந்திறந்து கூறியிருக்கிறார்.சுருதியின் பதிலில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை, ஏனெனில் அவரின் பெற்றோர்கள் பிரிவை சிறுவயதில் பார்த்ததால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். பணம், புகழ் எல்லாம் இருந்தும் கூட பெற்றோர்கள் பிரிந்ததுதான் சுருதி திருமண வாழ்வில் இந்த முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது போலும்.
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:–
பதிவு: ஆகஸ்ட் 26, 2018 04:15 AM
‘‘நான் சினிமாவில் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்தவை. இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவே இருந்தது. இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கேரக்டர்களிலும், கதைகளிலும் மட்டுமே நடிப்பேன்.
மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் ‘ஸ்ப்ரிச்சுவல்’ சக்தி ஒன்று இருப்பதாக நம்புகிறேன். ஆனால் அது கோவில், தேவாலயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு என்னிடம் நேரடியான பதில் இல்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன்.
சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு திரைத்துறையில் கிடைக்கவேண்டிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கிறது. நான் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள்தான். தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் இந்தி படத்தில் நடித்து வருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’வின் பணிகள் விரைவில் தொடங்கும்.
நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டதையும், அதில் தேசப்பற்று பாடலை பாடியதையும் எண்ணி பெருமை அடைகிறேன்’’
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
No comments:
Post a Comment