MGR ,THE HUMANITY
தாயில்லாமல் நானில்லை…’ பாடல் காட்சி, ஒகேனக்கல்லில் படமான போது, அதன் தயாரிப்பு நிர்வாகி பத்மனாபன்,
பணியாளரிடம், ‘யார் கேட்டாலும், கொடுக்கக் கூடாது…’
என்று சொல்லி, 10 இளநீர்களை கொடுத்துச் சென்றிருந்தார்.
பகல் வேளை, வெயிலில் நின்ற எம்.ஜி.ஆர்., பணியாளரிடம் இளநீர் கேட்டார்.
‘யாருக்கும் கொடுக்க வேணான்னு முதலாளி சொல்லியிருக்கார்…என்று கூறி, மறுத்து விட்டார் பணியாளர்.
பத்மனாபன் வந்ததும், ‘முதலாளி… உங்க ஆளு, எனக்கு ஒரு இளநீர் கொடுக்க மாட்டேங்குறார்… ஒண்ணு கொடுக்க சொல்லுங்க…’என்றார் எம்.ஜி.ஆர்.,
எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த பக்தி உள்ளவர், பத்மனாபன்;
அத்துடன் முன் கோபியும் கூட. பணியாளரை அடிக்கவே பாய்ந்து விட்டார்.
‘ஏய் இருப்பா… நீ சொன்னதை தானே செஞ்சார்; அதுக்கு ஏன் கோவிச்சுக்குறே…’ என்றார் எம்.ஜி.ஆர்.,
பின், இளநீர் வெட்டிக் கொடுக்கும் அந்த பணியாளருக்கு
கொடுக்கப்படும் படியில், 10 ரூபாய் அதிகமானது, எம்.ஜி.ஆரின் உத்தரவுப்படி!
No comments:
Post a Comment