SUSHMITA SEN ,MISS WORLD 1994 ,
ACTRESS BORN 1975 NOVEMBER 19
சுஷ்மிதா சென் (ஹிந்தியில்: सुष्मिता सेन ; 19 நவம்பர் 1975 அன்று இந்தியாவின், ஐதராபாத்) நகரில் பிறந்தார். நடிகையான இவர், பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்துள்ளார். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர், பிரபஞ்ச அழகி 1994 பட்டம் வென்றவர். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையையும் பெற்றவர்
வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு]
சுயசரிதம்[மூலத்தைத் தொகு]
சென், பெங்காலி இந்துக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஷுபீர் சென் ஒரு முன்னாள் இந்திய விமானப் படை விங் கமாண்டர். தாயார் சுப்ரா சென் ஒரு ஃபேஷன் கலைஞராகவும் நகை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார். சென்னுக்கு ராஜீவ் சென் என்ற சகோதரரும், நீலம் சென் என்ற சகோதரியும் உள்ளனர். சென், ஐதராபாத்தில் உள்ள புனித தெரசா மருத்துவமனையில் பிறந்து, புதுடில்லியில் வளர்ந்தார். விமானப்படை பொன்விழா கல்வி மையத்தில் கல்வி பயின்றார். புதுடில்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில் பட்டம் பெற்றார். 2000ம் ஆண்டில், ரெனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். அதன் பின் ஜனவரி 13, 2010 அன்று அலிசா என்ற மூன்று மாத பெண் குழந்தையை தத்தெடுத்தார்.
பிரபஞ்ச அழகி[மூலத்தைத் தொகு]
1994ம் ஆண்டு, தனது பதினெட்டாவது வயதில், பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை சுஷ்மிதா வென்றார், இப்போட்டியில் ஐஸ்வர்யா ராய் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 1994ம் ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகி காட்சிப் போட்டி பிலிப்பீன்சின் மணிலா நகரில் நடந்தபோது, அதில் பங்குகொண்டு வெற்றிபெற்றார்.
பிரபஞ்ச அழகி போட்டியின் போது, தகுதிச் சுற்றுகள் அனைத்திலும் சுஷ்மிதா மூன்றாவது இடத்தைப் பிடித்தார், தகுதிச் சுற்றுகளில் முதலிடத்தை கொலம்பியாவின் கரோலினா கோமெஸ் பிடித்தார், இரண்டாம் இடத்தை மிஸ் கிரீஸ் அழகி ரீ டோடோன்ஸீ பிடித்ததுடன், நீச்சலுடை மற்றும் மாலை நேர உடைப் போட்டிகளில் வென்றார். நீச்சலுடை, நேர்காணல் மற்றும் மாலை நேர உடை அரையிறுதிப் போட்டிக்களில் முறையே இரண்டாவது, ஐந்தாவது மற்றும் மூன்றாவது இடங்களை சுஷ்மிதா பிடித்தார்,
இப்போட்டிகளில் மிஸ் கொலம்பியா மற்றும் மிஸ் வெனிசுலா அழகி மினோகா மெர்காடோவுக்கு அடுத்த இடத்தில் சுஷ்மிதா இருந்தார். இந்த மூன்று போட்டியாளர்களும் இறுதி மூன்று போட்டியாளர்களாக தேர்வாகினர். முடிவில், நடுவர்கள் தங்கள் வாக்குகளை சுஷ்மிதாவுக்கு அளித்து, இந்தியாவிலிருந்து பிரபஞ்ச அழகி பட்டத்தை வெல்லும் முதல் பெண் என்ற பெருமையை அளித்தனர்.
திரைப்பட வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
பாண்டலூன் பெமினா மிஸ் இந்தியா 2009 போட்டியின் நடுவராக சுஷ்மிதா பங்குவகித்தார்.
பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும், சுஷ்மிதா நடிகையாக மாறினார். இவரது முதல் படமான தஸ்தக் , 1996ம் ஆண்டு வெளியானது, அப்படத்தில் நன்றாக நடித்திருந்தும், படம் சரியாக ஓடவில்லை. அதே நேரத்தில் இவர் நடித்த தமிழ்ப் படமான ரட்சகன் , மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.[சான்று தேவை]
ஆயினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ரூபாலி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த, டேவிட் தவான்இயக்கத்தில் உருவான பிவி நம்பர் 1 திரைப்படம் நல்ல பெயரைத் தந்ததுடன், ஃபிலிம்பேர் சிறந்த குணச்சித்திர நடிகை விருதை 1999ம் ஆண்டு பெற்றுத் தந்தது. பிவி நம்பர் 1, 1999ம் ஆண்டு அதிக வசூலை அளித்த திரைப்படம்[1]. அதே ஆண்டு, சிர்ஃப் தும் திரைப்படத்தில் நடித்ததற்காக, அதே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, விருதை வென்றார். இவர் நடித்த ஆங்கேன் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தின் மூலம் விமர்சனங்களையும் சந்தித்தார்.
இதுவரை இவர் நடித்த படங்களில், 2004ம் ஆண்டு வெளியான மைன் ஹூன் நா திரைப்படம் தான் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது, இப்படத்தில் நடிகர் ஷாருக் கானுடன் காதல் வயப்படுவது போல நடித்தார். இத்திரைப்படம் ரூ. 34,00,00,000 கோடி வசூல் செய்தது. அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் இது.[2] பின்னர், மைன் ஐசா ஹி ஹூன் திரைப்படத்தில் வழக்கறிஞராக, நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்தார். 2005ம் ஆண்டு, கேக்டஸ் பிளவர் திரைப்படத்தின் மறு உருவாக்கமான மைனே பியார் கியூன் கியா திரைப்படத்தில் நடித்தார்.
இத்திரைப்படத்தில் சல்மான் கான் மற்றும் கேத்ரினா கைஃப் ஆகியோருடன் இணைந்து நடித்தார். சமீபத்தில் கர்மா, கன்ஃபெஷன்ஸ் அண்டு ஹோலி (2006) படத்தில் நவோமி கேம்பல் உடன் இணைந்து நடித்தார், அதன் பின் ராம்கோபால் வர்மா கி ஆக் (2007) ஆகிய படங்களில் நடித்தார். இப்போது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட துல்ஹா மில்கயா (2010) திரைப்படத்தில் ஷாருக் கானுடன் இணைந்து நடிக்கிறார்.
மறைந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பெனாசீர் பூட்டோ கதாபாத்திரத்தை ஏற்று ஒரு திரைப்படத்தில் சுஷ்மிதா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தை ஜாகித் அஜீஸ் மற்றும் ஜென்னா ராய் ஆகியோர் இணைந்து, முறையே கராச்சி தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ் விஷன் மற்றும் லீசெஸ்டரைச் சேர்ந்த சன் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக இணைந்து தயாரிக்கின்றனர். உறுதியாக கூறப்படாத வகையில், "பெனாசீர் பூட்டோ: தி மூவி" என்று தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படம், பூட்டோ மாணவியாகவும், நாடு கடத்தப்பட்ட நிலையில் ஓர் அரசியல் தலைவராகவும் பல ஆண்டுகள் செலவிட்டிருந்த பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் துபாயின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட இருந்தது. இந்த பெரிய பாத்திரத்தில் நடிக்கவிருப்பது குறித்து சுஷ்மிதா சென்னிடம் கேட்கப்பட்ட போது, "ஆம், நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்." என்று உற்சாகமாக தெரிவித்தார்.[213][3]
சமீபத்தில் இவர் டூ நாட் டிஸ்டர்ப் என்ற திரைப்படத்தில், பல திரைப்படங்களில் இவருடன் இணைந்த கோவிந்தா உடன் இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படம் தோல்வியைத் தழுவியது.[4]
ஷிம்மர் என்ற வெற்றிகரமான மாடல் நங்கையாக 'துல்ஹா மில்கயா' திரைப்படத்தில் நடித்தார்[5]
No comments:
Post a Comment