Thursday, 19 October 2017

DEEPAVALI , WHOLE OF INDIA CELEBRATED



DEEPAVALI , WHOLE OF INDIA CELEBRATED 



தீபாவளி (சமக்கிருதம்: दीपावली) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப் பெறுகின்ற ஓர் இந்துப் பண்டிகையாகும்.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலானஆண்டுகளில் தீபாவளி ஐப்பசி அமாவாசை தினத்தன்றே வரும்.கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ம்தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.[1]
இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
பெயர்க் காரணம்[மூலத்தைத் தொகு]

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.
தோற்ற மரபு[மூலத்தைத் தொகு]
தீபாவளி[மூலத்தைத் தொகு]
தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறான்.[2]

கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.

நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம் கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும் இருக்கிறது.
நரகாசுரன் கதை[மூலத்தைத் தொகு]

இரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வெனறார்.அப்போ து பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.

பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.
நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.

நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.
தீபாவளி அமாவாசை அன்று வருவதால் தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.
சீக்கியர்களின் தீபாவளி[மூலத்தைத் தொகு]

1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.
சமணர்களின் தீபாவளி[மூலத்தைத் தொகு]
மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.
கொண்டாடும் முறை[மூலத்தைத் தொகு]
தீபாவளி பட்டாசு
படிமம்:ராக்கெட்.ogv
சீறிப் பாயும் ராக்கெட் வெடி
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.
தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவைகளின் நலன் கருதி வேடந்தாங்கல் உள்ளிட்ட சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்கள் அவ்வழக்கத்தை தடை செய்து பட்டாசு இல்லா திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
பிற நாடுகளில் தீபாவளி[மூலத்தைத் தொகு]
மேற்குநாடுகளில் தீபாவளி[மூலத்தைத் தொகு]
மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.
AKBAR

தீபாவளி மாதமான ஐப்பசி மாதத்திற்கு துலா மாதம் என்றொரு பெயர் உண்டு. துலாம் என்றால் தராசு என்று பொருள். தராசின் இரு தட்டுக்களும் சம நிலையில் இருப்பது போல ஐப்பசி மாதத்தில் மட்டும் இரவும் பகலும் சமமாக இருக்கும். தீபாவளிக்கு காரணமான நரகாசூரனின் உண்மையான பெயர் பவுமன். பவுமன் என்றால் பூமியின் பிள்ளை என்று அர்த்தம்.
மொகலாய மன்னர்களில் அக்பர்தான் தீபாவளியை மிக விமரிசையாக கொண்டாடியவர் அக்பரின் அவைப் புலவராக இருந்த அபுல்வாசல் எழுதிய அயனி அக்பரி என்னும் புத்தகத்தில் தீபாவளி பற்றி விரிவாக எழுதியுள்ளார். அந்நாளில் இந்து ஏழைக் குடும்பங்களுக்கு அக்பர் பொன் பொருள் புத்தாடை மற்றும் இனிப்புக்கள் கொடுத்து உதவுவாராம். அவர் இதற்காக தனி அறக்கட்டளையே அமைத்திருந்தாராம்.

மொகலாயர் காலத்தில் தீபாவளிக்கு அவர்கள் வைத்த பெயர் ஜெஷன்-இ-சிகராசன். அலங்கார அகல் விளக்குகளின் அணி வரிசையைக் கண்டு பிரமித்து அவர்கள் இந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். மொகலாய மன்னர்களில் அக்பர்தான் முதன் முதலில் பெரிய அளவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார்கள். அவரது மனைவி ஜோதாபாய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் தீபாவளியை அவர் கொண்டாடுகிறார் என்று சொல்வதுண்டு. ஆனால், அக்பர் தீபாவளி அன்று பல துறைகளைச் சேர்ந்த மேதைகளை அழைத்து கவுரவித்து பரிசுகளை அள்ளித் தந்திருக்கிறார். அக்பர் காலத்தில் இருந்த பிரபல வரலாற்று ஆசிரியர் அபுல் பசல், தனது அயின்-இ-அக்பரி என்ற புத்தகத்தில் அக்பர் கால தீபாவளி பற்றி விரிவாக எழுதியுள்ளார். ஆக்ரா மட்டுமின்றி, நாடு முழுவதும் தீபாவளியைக் கொண்டாட அக்பர் உத்தரவிட்டாராம். வீடுகளில் பெரிது பெரிதாக இந்துக் கடவுள் சிலைகள் செய்து கையில் விளகு வைத்துதிருப்பது போல வடிவமைத்தாராம். வண்ண விளக்குகள் வைத்து பட்டாசு வெடிக்கவும் அவர் அனுமதித்ததாராம். முஸ்லிம் அல்லாத பண்டிகைக்கு அவர் தந்த முன்னுரிமை பலரையும் வியக்க வைத்தது என்று எழுதியுள்ளார். டெல்லி முழுவதும் வாண வேடிக்கைகள் விளக்கு அலங்காரங்களால் மினனிக் கொண்டிருப்பதை குதுப்பினாரில் இருந்து அக்பர் ரசிப்பாராம். பலரும் இந்த கோபுரத்தின் மீது ஏறி டில்லி மின்னுவதைப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். தீபாவளி தினத்தன்று பல இந்து ஏழைக் குடும்பங்களுக்கு அக்பர் உதவுவார்













VARAHA AVATHAAR  AND CONNECTION WITH DEEPAVALI 

வராஹ அவதாரம்.


உ லகில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட திருமால் எடுத்த அவதாரங்கள் 22 என்று புராணங்கள் கூறும். அவற்றுள் பத்து - தசாவதாரங்கள் எனப்படுகின்றன. அந்த தசாவதாரத்தில் மூன்றாவது- வராஹ அவதாரம்.

பிரளயத்துக்குப் பிந்தைய இந்த கல்ப ஆரம்பத்தில் பூமி, வெள்ளத்தில் அமிழ்ந்து கிடந்ததாம். திருமால் வெண்ணிறப் பன்றியாக அவதரித்து பூமியை வெள்ளத்தில் இருந்து மீட்டார். எனவே, அவர் பெயராலேயே இந்த கல்பம், ‘சுவேத வராஹம்’ எனப்படுகிறது.

ஒரு முறை அசுரன் இரணியாட்சன், பூமியைப் பாய் போல் சுருட்டி, கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். அப்போது திருமால் வராஹ அவதாரம் எடுத்து, இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டார். இதனால் அவர் பூவராஹர் என்று போற்றப்படுகிறார்.

அப்படிப்பட்ட, வராஹ மூர்த்தியாக திருமால் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுள் ஒன்று மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தை. இங்கு இவர் சுவேத வராஹர் என்ற திருநாமத்துடன் திகழ்கிறார்.

சுவேத வராஹ மூர்த்தியின் உடலில் எண்ணற்ற தேவதைகள் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இதற்கு எடுத்துக்காட்டாக, கஜுராகோ எனும் இடத்தில் அமைந்துள்ள பெரிய வராஹரின் உடல் மீது 274 தேவர்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் கூறலாம்.


சாபம் பெற்ற ஜய விஜயர்கள், அந்த சாபத்தின்படி, முதல் பிறவியில், கச்யப மஹரிஷிக்கும், திதி தேவிக்கும் புத்திரர்களாகப் பிறந்ததையும், அதன் பின் நடந்த நிகழ்வுகளையும் இப்போது பார்க்கலாம்..

அசுர குணத்தோடு, ஜய விஜயர்கள் பிறந்த நிகழ்வை, 'சந்தியா காலத்தில் உண்டு பண்ணப்பட்ட கெடுதி' என்றே வர்ணிக்கிறார் பட்டத்திரி... கச்யப மஹரிஷியும், திதி தேவியும், அகால நேரமாகிய சந்தியா காலத்தில்  இணைந்ததால் பிறந்த இவர்கள், யமனைக் காட்டிலும், வேறான,  இரண்டு யமன்களைப் போல், துன்பங்களை விளைவிப்பவர்களாக இருந்தார்கள்..

இருவரில்  மூத்தவன், ஹிரண்யாக்ஷன் என்றும் மற்றவன்  ஹிரண்யகசிபு என்றும் பெயர் பெற்றார்கள்...இருவரும், தங்கள் அசுர குணத்தால் அறிவை இழந்து, எம்பெருமானை நாதனாக உடைய அனைத்து உலகங்களையும் கோபங்கொண்டு அழிக்கத் தொடங்கினார்கள்.

ஹிரண்யாக்ஷன், தனக்குச் சமமாகப் போர் புரியக் கூடிய எதிரியைத் தேடி, ஒருவரையும் காணாமையால், பூதேவிப் பிராட்டியை கவர்ந்து சென்று, நீரில் மூழ்க வைத்து விட்டு, தன் கதையுடன், மிகுந்த கர்வம் கொண்டு, கர்ஜனை செய்தவாறு சுற்றி வந்தான்.

அவன் வருணனுடன் சண்டையிடச் சென்ற போது, வருணன் மூலமாக‌, எம்பெருமானே  தன்னுடன் சண்டையிட சமமானவர் என்பதை அறிந்து கொண்டான். அவரைத் தேடிக் கொண்டு சுற்றியலைந்தான்... இந்த நிகழ்வை பட்டத்திரியின் திருவாக்கின் மூலமாகவே கேட்போம்!..






ததோ ஜலேஸா²த்ஸத்³ருʼஸ²ம்ʼ ப⁴வந்தம்ʼ
 நிஸ²ம்ய ப³ப்⁴ராம க³வேஷயம்ʼஸ்த்வாம் | 
ப⁴க்தைகத்³ருʼஸ்²ய​: ஸ க்ருʼபாநிதே⁴ த்வம்ʼ
 நிருந்தி⁴ ரோகா³ன் மருதா³லயேஸ² ||

"ஸ்ரீ அப்பனே!.. கருணயென்னும் பெருநிதியே!..(ஹிரண்யாக்ஷன்), வருணன் மூலம், நீர் தான் அவனுடைய பலத்திற்குச் சமமானவர் என்று அறிந்து கொண்டு, உம்மைத் தேடி அலைந்தான். பக்தன் ஒருவனாலேயே காணக்கூடிய நீர், எம்முடைய நோய்களைப் போக்கி அருள வேண்டும்!"

வராஹ அவதாரம்:

ஹிரண்யாக்ஷன், பகவானைத் தேடிக் கொண்டு, சுற்றியலைந்த தருணத்தில்,  பிரஜைகளைச் சிருஷ்டிக்கும் செயலில் ஈடுபட்டிருந்த ஸ்வாயம்புவ மனுவானவர், பூமி மூழ்கி விட்டதைக் கண்டு வருந்தி, முனிவர்களுடன், சத்ய லோகம் சென்று, பகவானின் திருவடித் தியானத்தில் மூழ்கியிருந்த பிரம்மதேவரைக் கண்டு பணிந்தார்.

மிகுந்த வருத்தத்துடன் அவர், 'பிரம்ம தேவரே!.. இதென்ன கஷ்டம்!.. நான் பிரஜைகளைச் சிருஷ்டி செய்யும் வேளையில், பூமி நீரில் மூழ்கியதே!.. ஆகையால், மக்கள் வாழத் தகுந்த இடம் ஒன்றை உண்டாக்கித் தருமாறு வேண்டுகிறேன்!' என்று பிரம்ம தேவனைத் துதித்தார்.

இதைக் கேட்ட பிரம்ம தேவர், பகவானின் திருவடித் தியானத்திலேயே ஆழ்ந்தார்.

எப்போதும், எதற்கும் இறைவனது கருணையையே சார்ந்திருக்கும் பிரம்ம தேவர், இப்போதும், இறைவனையே சரணடைந்தார். 'எங்கும் நிறைந்துள்ளவனே (விபோ)!..நான் பிரளய காலத்தில் அதிகமாகவே நீரைக் குடித்தேன். ஆயினும், இப்போது, பூமி நீரில் மூழ்கி விட்டதே!.. கஷ்டம்.. கஷ்டம்..நான் என்ன செய்வேன்?!' என்று இறைவனது திருவடிகளில் சரண்புகுந்த பிரம்ம தேவரின் நாசித் துவாரத்திலிருந்து, பகவான் வெள்ளைப் பன்றிக் குட்டியின் ரூபத்தில் உதித்தருளினார்...

ஹா ஹா விபோ⁴ ஜலமஹம்ʼ ந்யபிப³ம்ʼ புரஸ்தாத்³
அத்³யாபி மஜ்ஜதி மஹீ கிமஹம்ʼ கரோமி | 
இத்த²ம்ʼ த்வத³ங்க்⁴ரியுக³ளம்ʼ ஸ²ரணங்க‌தோ(அ)ஸ்ய
நாஸாபுடாத்ஸம்ப⁴வ​: சிசுகோலரூபீ ||  (ஸ்ரீமந் நாராயணீயம், வராஹ அவதாரம்).

பிரான்உன் பெருமை பிறரா ரறிவார்?,
உராஅ யுலகளந்த ஞான்று, - வராகத்
தெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை
அடிக்களவு போந்த படி? (பொய்கை ஆழ்வார்).

பகவானுடைய அவதாரம், இந்த கல்பத்தில் வெள்ளைப் பன்றி உருவில் தோன்றியதால், இந்த கல்பத்திற்கு, 'ஸ்வேத வராஹ கல்பம்' என்ற பெயர் ஏற்பட்டது..

​**


கண்ணனை நினை மனமே!.. பகுதி:24..வராஹ அவதாரம் (தொடர்ச்சி).

ஸ்ரீமத் பாகவதத்தில், மைத்ரேயர் மற்றும் விதுரரிடையே நடைபெறும் உரையாடலில், வராஹ அவதாரம் குறித்துச் சொல்லப்படுகின்றது.. ஸ்வேத வராஹ கல்பத்தில், ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் பிரம்மாவின் நாசியிலிருந்து தோன்றி, பூமியைக் காத்தார் பகவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது போல், ஆறாவதான, சாக்ஷூஷ மன்வந்திரத்தில், திடீரென ஏற்பட்ட பிரளய வெள்ளத்திலிருந்து, கரு நிறமுடைய பன்றி வடிவத்தில் தோன்றி, பூமியைக் காத்து, ஹிரண்யாக்ஷனை வதம் செய்தார் என்று கூறப்பட்டிருக்கின்றது. இந்த இரு நிகழ்வுகளையும் சேர்த்தே, மைத்ரேயர் விதுரரிடம் கூறினார் என்பது பெரியோர்களின் கருத்தாக இருக்கின்றது.


பிரம்மாவின் நாசி துவாரத்திலிருந்து, வெள்ளைப் பன்றியின் உருவில் தோன்றிய எம்பெருமான், முதலில், கட்டை விரலளவாக இருந்தார். அதன் பின் ஒரு யானையின் அளவாக வளர்ந்தார். அப்படியே மேலும் மேலும் மேகமண்டலம் வரை வளர்ந்த அவரை, தம் தலையை உயர்த்திப் பார்த்த பிரம்ம தேவர், தம் புத்திரர்களுடன் கூடி, வியப்படைந்தவரானார்.

'என்னுடைய நாசியிலிருந்து தோன்றிய, சிந்திக்க முடியாத அளவு மகிமை பொருந்திய இந்த பன்றி வடிவம் என்னவாக இருக்கக் கூடும்?!.. ஒரு வேளை, யாராலும் வெல்ல முடியாத விஷ்ணுவின்  லீலையாக இருக்கக் கூடுமோ?!என்று பிரம்ம தேவர் சிந்தித்துக் கொண்டிருக்கையில், பன்றி வடிவில் இருந்த பகவான், ஒரு பெரியதொரு மலை போல் வளர்ந்து ,மிகப் பயங்கரமாக கர்ஜனை செய்தார்!..

பகவானுடைய அந்த கர்ஜனையைக் கேட்டு, ஜனலோக, தபோலோக, சத்யலோகங்களில் வசிக்கும்    ரிஷிகள் எம்பெருமானைத் துதித்து அகமகிழ்ந்தார்கள்.. அந்த துதியால் உவகை கொண்ட எம்பெருமான், தன் உருவை மேலும் பெரிதாக்கிக் கொண்டு, கர்ஜித்துக் கொண்டே, சமுத்திரத்தில் இறங்கினார் (இவ்வாறு நீ இறங்கினாய் அல்லவா?! என்று பட்டத்திரி வினவ, ஸ்ரீஅப்பன், 'ஆம்' என்று தலையசைத்தானாம்!!!!). 

தம் திருமேனியில் புகை வண்ணம் கொண்ட உரோமங்கள் மேல் நோக்கிச் சிலிர்த்துச் சுழல, தம் வாலை உயரத் தூக்கிக் கொண்டு, கீழ் நோக்கிய மூக்குடன், மேகங்களைப் பிளந்து கொண்டு, தம்மைத் துதிக்கின்ற முனிவர்களை, தன் திருவிழி நோக்கால் குளிரச் செய்தவாறு, சமுத்திர‌ நீருள் இறங்கினார் எம்பெருமான் (இம்மாதிரியான  தன் திருவுருவை, பட்டத்திரியின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீஅப்பன் அவருக்கு நேரிலேயே காட்டியருளினானாம்!). .

எம்பெருமான், சமுத்திரத்துள் இறங்கிய போது, அதனுள்ளிருந்த திமிங்கிலக் கூட்டங்கள் சுழன்றோடின.. முதலைக் கூட்டங்கள் பயந்து ஓடின. பகவானின் கர்ஜனை சத்தத்தால், ரஸாதல வாசிகள் நடுங்கினர். இப்படியெல்லாம் செய்து கொண்டு, எம்பெருமான், பூமிப்பிராட்டியைத் தேடிச் சென்றார்.

கொடிய சுபாவமுடைய அரக்கனால், ரஸாதலத்தில் வைக்கப்பட்டிருந்த பூமி தேவியைக் கண்டடைந்து, எதிர்த்து வந்த அசுரர்களைப் பொருட்படுத்தாது,  விளையாடுவது போன்று  தம் கோரைப்பற்களின் நுனியில், பூமி தேவியை  எடுத்து ஏந்திக் கொண்டார் பகவான்.

​(வராஹ மூர்த்தி, பூமிப் பிராட்டியை காத்தருளிய லீலையை, ஆழ்வார் பெருமக்கள், பல பாசுரங்களில் போற்றியிருக்கின்றனர். அவர்கள் எம்பெருமானின் பிரபாவத்தை, அனுபவித்துக் கூறியிருப்பதை விவரிக்க வேண்டுமெனில், ஒரு பிறவி போதாது!..சில பாசுரங்கள் மட்டும் இங்கு தருகின்றேன்).​

பாரார் அளவும் முதுமுந்நீர் பரந்த காலம், வளைமருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த ஆற்ற லம்மானை,
கூரார் ஆரல் இரைகருதிக் குருகு பாயக் கயலிரியும்,
காரார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. (திருமங்கையாழ்வார்).(ஏனம்=வராஹம்)

பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,
மாவடிவின் நீயளந்த மண்? (பொய்கையாழ்வார்).

நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே. (திருமழிசைஆழ்வார்).

வண்டுகளோ! வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ,
உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம், ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும், மலருள வோநும் வியலிடத்தே? (நம்மாழ்வார்)​.

​சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவா காரம்
குலுங்க, நிலமடந்தை தனையிடந்து புல்கிக் கோட்டிடைவைத் தருளியவெங் கோமான் கண்டீர்,
இலங்கியநான் மறையனைத்து மங்க மாறும் ஏழிசையும் கேள்விகளு மெண்டிக் கெங்கும்,
சிலம்பியநற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே. (திருமங்கையாழ்வார்).

பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்குபண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே (ஸ்ரீஆண்டாள் நாச்சியார்).


​இப்பேர்ப்பட்ட மகிமையுடைய குருவாயூரப்பன், தன்னை பிணிகளிலிருந்து காத்து ரட்சிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றார் பட்டத்திரி!..


அப்₄யுத்₃த₄ரந்நத₂ த₄ராஂ த₃ஶநாக்₃ரலக்₃ந  
முஸ்தாங்குராங்கித இவாதி₄கபீவராத்மா |
உத்₃தூத கோ₄ரஸலிலாஜ்ஜலதே₄ருத₃ஞ்சந்
க்ரீடா₃வராஹவபுரீஶ்வர: பாஹி ரோகா₃த் || 

"உம் விருப்பத்தினால் (விளையாட்டைப் போல்) பன்றி உருவெடுத்தவனே!.. ஈச்வரனே!... கோரைப் பற்களின் நுனியில், கிழங்கு போன்று பூமியைக் கொண்டவனும், மிகப் பெருத்த திருமேனியை உடையவனும்,  பெரும் அலைகள் வீசும், கொந்தளிப்புடன் கூடிய பயங்கரமான சமுத்திரத்திலிருந்து வெளி வந்தவனும் ஆகிய நீர், என் பிணிகளிலிருந்து என்னைக் காப்பாற்றி அருளும்!..."​
**

கண்ணனை நினை மனமே.. பகுதி 25...(ஹிரண்யாக்ஷ வதம்).​

சென்ற தசகத்தில், எம்பெருமான், பூமி தேவியை, தன் கோரைப் பற்களில் ஏந்தி, பிரளய நீரிலிருந்து வெளிவந்த லீலையைத் தியானித்தோம்!..

கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே.

என்று நம்மாழ்வாரும், 

அரவாகிச் சுமத்தியால் அயில்எயிற்றின் ஏந்துதியால்
ஒருவாயின் விழுங்குதியால் ஓரடியால் ஔித்தியால்
திருவான நிலமகளை இஃதறிந்தாற் சீறாளோ!
மருவாருந் துழாயலங்கன் மணிமார்பின் வைகுவாள்"

என்று கம்பநாட்டாழ்வாரும், எம்பெருமான் பூமி தேவியின் பால் கொண்டுள்ள அன்பினைப் போற்றுகின்றனர்.

​வராஹ‌  மூர்த்தி, பூமிதேவியுடன் வெளிப்பட்டதை அறியாது, அவரைத் தேடி, பிரளய நீரில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான் ஹிரண்யாக்ஷன். அவனுக்கு இந்தச் செய்தியைத் தெரிவிக்க வேண்டி, நாரத முனிவர், ஒரு உபாயம் செய்தார். பகவானை போலியாக இகழ்ந்து கொண்டும், ஹிரண்யாக்ஷனை போற்றிக் கொண்டும் அவனை நெருங்கினார். 'பிரபுவே, மாயாவியான விஷ்ணு, நீ மறைத்து வைத்த பூமியை கவர்ந்து கொண்டு போகிறான்.. இது என்ன கஷ்டம்!' என்று அவனிடம் கூறியதும், அவன் சினம் மேலிட, நாரத முனிவர் வழிகாட்டியபடிக்குச் சென்று, பகவானை அடைந்தான்.

எம்பெருமானை, 'ஒரு காட்டு மிருகம்' என்று கூறி,  மேலும் பல கடுஞ்சொற்களால் ஏசினான் ஹிரண்யாக்ஷன். பூமி தேவி, இதையெல்லாம் கண்டு நடுக்கமுற்றாள். அவளை, தன் யோகசக்தியால் சமுத்திரத்தில் நிலைநிறுத்திய வராஹ‌ மூர்த்தி, ஹிரண்யாக்ஷனுடன் போரிடத் துவங்கினார். 

ஹிரண்யாக்ஷனின் கையில் கதாயுதம் இருந்ததால், தம்முடைய திருக்கரத்திலும் கதாயுதமேந்தி போரிட்டார். இருவருடைய கதாயுதங்களும் மோதுவதால், 'கட கட' என்ற சப்தம் வானில் எழுந்தது. இந்தப் போரைக் காண விரும்பி, தேவர்கள் வந்து கூடினர்.  பிரம்மதேவர், 'சந்தியா காலத்திற்கு முன்பே அசுரனைக் கொல்ல வேண்டும்' என்று வராஹ‌ மூர்த்தியைப் பிரார்த்தித்தார். ஏனெனில், சந்தியா காலத்திற்குப் பின்னர், அசுரர்களின் பலம் அதிகரிக்கும். ஆகவே அவ்விதம் கூறினார்.


போரில், எம்பெருமானுடைய கதாயுதம் கீழே விழுந்தது. இதுவும் அவருடைய லீலையே.. தம்மிடம் பணிபுரிந்தவனே அசுரனாக அவதரித்திருக்கிறான் என்பதால், அவனை ஒரு முறையேனும் வெற்றி பெற வைக்கும் பொருட்டே இவ்விதம் செய்தாராம் பகவான்.  பின்னர் , அவர் தம் சுதர்சன சக்கரத்தை, தம் திருக்கரத்தில் தாங்கிப்  பிரகாசித்தார்.

ஹிரண்யாக்ஷன், சினம் மிகக் கொண்டு, சூலத்தை ஏவினான். அது சக்ராயுதத்தின் தாக்குதலால் முறிந்து விழுந்தது. மாயைகளைக் கடந்த எம்பெருமானை நோக்கி, அவன் உலகை மயக்கும் மாயைகளை ஏவினான். சக்ராயுதத்தின் தீப்பொறி பட்டதும்,  அந்த மாயக் கூட்டங்களெல்லாம் அழிந்தன. கடுங்கோபம் கொண்டு, அவன் தன் கை முஷ்டிகளால் வராஹ‌  மூர்த்தியைத் தாக்கலானான்.  அவன் கோபத்தை அதிகரிக்கும் பொருட்டு, தம் கரத்தின் நுனியால், அவன் காதடியில் சுண்டி, அவனை எம்பெருமான் வதைக்கலானார். 


பெருத்த சரீரமுடைய அசுரன், தாமரை மலரையொத்த எம்பெருமானது திருக்கரத்தால் அடிக்கப்பட்டு, வாயிலிருந்து உதிரம் பெருகக் கீழே சாய்ந்து மாண்டான். அப்போது ஹிரண்யாக்ஷன், முனிவர்களால் கொண்டாடப்பட்டான். எம்பெருமானது திருக்கரங்களால் மரணம் நேர்ந்தமையாலேயே, அவனுக்கு இவ்விதமான சிறப்பு நேரிட்டது.  ரிஷிகள் , யக்ஞவராஹ மூர்த்தியை, பற்பல துதிகளால் துதித்துக் கொண்டாடினர்.


யக்ஞவராஹ மூர்த்தி:

வேள்விகளின் ரூபமாக விளங்குபவன், வேள்வியின் நாயகனாய் இருப்பவன் எம்பெருமான்.

வராஹ‌ மூர்த்தியை, யக்ஞ வராஹ மூர்த்தியாக,  ரிஷிகள் துதித்ததை, பட்டத்திரியின் திருவாக்கின் மூலமே கேட்கலாம்!.

த்வசி ச்ச²ந்தோ³ ரோமஸ்வபி குஸ²க³ணஸ்²சக்ஷுஷி க்⁴ருʼதம்ʼ
சதுர்ஹோதாரோ(அ)ங்க்⁴ரௌ ஸ்ருக³பி வத³னே சோத³ர இடா³ | 
க்³ரஹா ஜிஹ்வாயாம்ʼ தே பரபுருஷ கர்ணே ச சமஸா
விபோ⁴ ஸோமோ வீர்யம்ʼ வரத³ க³ல‌தே³ஸே²(அ)ப்யுபஸத³​: ||

("பரம புருஷனே!.. குருவாயூரப்பனே!. , உமது தோலில் காயத்ரீ போன்ற‌ சந்தங்கள், உரோமங்களில் தர்ப்பைகள், திருவிழிகளில் நெய், கால்களில் நான்கு ரித்விக்குகள் (பிரம்மா, ஹோதா, அத்வர்யு, உத்காதா ஆகிய நால்வர்). திருமுகத்தில் 'ஸ்ருக்' என்ற ஹோமபாத்திரம்,  திருவயிற்றில் 'இடா' என்ற பாத்திரம், நாவில், சோமரஸ‌த்தை எடுத்து வைப்பதற்கான 'க்ரஹ'மென்கின்ற பாத்திரங்கள், திருச்செவியில் சோமபானம் செய்வதற்குரிய சமஸம். உமது வீரியமே சோமரஸம். வரதா!.. உமது திருக்கழுத்தில் 'உபஸதங்கள்' என்ற இஷ்டிகள்").

ஆதியாதி யாதிநீயொ ரண்டமாதி யாதலால்
சோதியாத சோதிநீஅ துண்மையில்வி ளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே. 

என்ற திருமழிசை ஆழ்வார் திருவாக்கினை இங்கு பொருத்திப் பார்க்கலாம்.

இத்தகைய துதிகளால் மகிழ்ந்த மனமுடையவராக, பெருத்த சரீரத்துடனும், குறையில்லாத புகழுடனும் விளங்கி, வைகுண்டலோகத்தில், ஆத்மானந்த நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅப்பன், தம் நோய்களை எல்லாம் போக்கியருள வேண்டிப் பிரார்த்திக்கிறார் பட்டத்திரி.



ஸ்ரீமத் பாகவதத்தில், 'இந்த ஹிரண்யாக்ஷ லீலையைக் கேட்போரும், பாடுவோரும், ஆமோதிப்போரும், பிரம்மஹத்தி முதலான பாவங்களில் இருந்து விடுபடுவர். அவர்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இதைக் கேட்போருக்கு, முடிவில் ஸ்ரீமந் நாராயணனே கதியாகிறான்' என்று கூறப்பட்டுள்ளது. அத்தகைய மகிமை பொருந்திய சரிதம் இது!.


**




1. தீபாவளியின் பெருமையைச் சொல்லும் புராணம்...
பிரம்ம வைவர்த்த புராணம்
2. நரகாசுரனின் பெற்றோர்.... வராஹமூர்த்தி, பூமிதேவி
3. நரகாசுரனின் இயற்பெயர்....பவுமன்(பூமியின் பிள்ளை)
4. கிருஷ்ணரோடு யுத்தம் செய்ய நரகாசுரன்... வாகனத்தில் வந்தான்
யானை
5. நரகாசுரனின் மகன் பெயர்.....பகதத்தன்
6. தீபாவளியை ..... நாளில் கொண்டாடி மகிழ்கிறோம்
ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி
7. தீபாவளி ஸ்நானத்தை ..... என்றும் அழைப்பதுண்டு
நரகசதுர்த்தசி ஸ்நானம்
8. கங்காதேவி தீபாவளியன்று எதில் வசிப்பதாகக் கூறுவர்?


வெந்நீர்

1. தீபாவளியின் பெருமையைச் சொல்லும் புராணம்...
பிரம்ம வைவர்த்த புராணம்
2. நரகாசுரனின் பெற்றோர்.... வராஹமூர்த்தி, பூமிதேவி
3. நரகாசுரனின் இயற்பெயர்....பவுமன்(பூமியின் பிள்ளை)
4. கிருஷ்ணரோடு யுத்தம் செய்ய நரகாசுரன்... வாகனத்தில் வந்தான்
யானை
5. நரகாசுரனின் மகன் பெயர்.....பகதத்தன்
6. தீபாவளியை ..... நாளில் கொண்டாடி மகிழ்கிறோம்
ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி
7. தீபாவளி ஸ்நானத்தை ..... என்றும் அழைப்பதுண்டு
நரகசதுர்த்தசி ஸ்நானம்
8. கங்காதேவி தீபாவளியன்று எதில் வசிப்பதாகக் கூறுவர்?
வெந்நீர்


No comments:

Post a Comment