Sunday, 24 September 2017

PAMMAL SAMBANTHA MUDALIYAR LIFE STORY 1873 FEBRUARY 21 - SEPTEMBER 24



PAMMAL SAMBANTHA MUDALIYAR  LIFE STORY
1873 FEBRUARY 21 - SEPTEMBER 24



 பம்மல் சம்பந்த முதலியார்
வாழ்க்கைக் குறிப்பு




சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 1873 மாசி முதல் நாளன்று பிறந்தார். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் உபாத்தியாயராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ் என்ற அரசு உத்தியோகத்திலும் இருந்தவர். அவர் தானே தமிழ்ப் புத்தகங்கள் பல வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.
நாடக எழுத்துப்பணி

சிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், தமிழ் நாடகப் போக்கில் இழிந்த நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார். 1891 இல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின. அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார் தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார். சீரழிந்த நிலையில் அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக உலகிற்குள் புகுத்தியது. நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில், 1891 ஜூலை 1 ஆம் நாள், "சுகுண விலாச சபை" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.

நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.



நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்.

தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத்தை மேனாட்டு நாடகங்களுக்கு நிகராக மாற்றியவர். தமிழ் நாடக நடிகர்களுக்குச் சமுதாயத்தில் நல்ல நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர். நாடகம் பார்ப்பது நல்ல குடும்பத்தார்க்கு அழகன்று என்ற பிற்போக்கான ஒரு நிலையை அறவே மாற்றினார். 1897இல் இவரால் ஏற்படுத்தப்பட்ட சுகுண விலாச சபையே தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடக சபையாகும். பம்மல் சம்பந்த முதலியார் 94 நாடகங்களை எழுதியுள்ளார். இவருடைய மனோகரா, சபாபதி, சந்திரஹரி, சிறுத்தொண்டர் நாடகம், உத்தமபத்தினி போன்றவை குறிப்பிடத்தக்கன. நாடகத் தமிழ், நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள் என்பன இவர் நாடகம் தொடர்பாக எழுதிய நூல்களாகும். இந்திய நாடக மேடை என்ற இதழையும் இவர் வெளியிட்டார்.


பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகப் போக்குகள்

சுவாமிகள் புராண நாடகச் செல்வாக்கை மீறி, புதுமுறை நாடகங்களைக் கண்டவர்.

உரையாடல்களுக்கு முதன்மை கொடுத்தார்.

நடைமுறை உலகியலோடு நிகழ்ச்சியினை அமைத்துப் பேசும் மொழி நடையைக் கையாண்டார்.



இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை மூன்று மணி அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

பம்மல் சம்பந்த முதலியார் அகமுடையார் இனத்தில் “முதலியார் ” பட்டம் கொண்டவர்.தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பன்முகத் திறமை கொண்டவர்.
அதுவரை நாடக நடிகர்கள்  என்பவர்கள் கேலிக்குரியவர்கள் ,நாகரீகமற்றவர்கள் என்னும் எண்ணத்தை மாற்றும் வகையில் தனது நாடகங்களில் பெரும் தனவான்களையும்,முக்கிய பிரமூகர்களையும் நடிக்க வைத்து ,பெரும் மனிதர்களும் திரண்டு பார்க்கும் வகையில் உருவாக்கினார்.



புகழ்பெற்ற சபாபதி,மனோகரா போன்ற திரைப்படங்களை நாடக வடிவில் உருவாக்கியவர் இவரே.இது போன்ற இவரது பல நாடகங்கள் திரைவடிவம் பெற்று பெரும் வெற்றி அடைந்தன.


இவர் எழுதிய நாடகங்களில் சில


இந்தியனும்-ஹிட்லரும்
இல்லறமும் துறவறமும்
என் சுயசரிதை
என் தந்தை தாயர்
ஒன்பது குட்டி நாடகங்கள்
ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்
கலையோ-காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல்
கள்வர் தலைவன்
காதலர் கண்கள்
காலக் குறிப்புகள்
சபாபதி
சபாபதி முதலியாரும்-பேசும் படமும்
நான் குற்றவாளி
சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)
தீபாவளி வரிசை
தீயின் சிறு திவலை
நாடகத் தமிழ்
நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
பலவகை பூங்கொத்து
மனை ஆட்சி
மனோகரா
மூன்று நகைச்சுவை நாடகங்கள்
யயாதி
வாணீபுர வணிகன்
விடுதிப் புஷ்பங்கள்

பல ஆங்கில நாடகங்களும் எழுதி இருக்கிறார்.

நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்.

மொத்தம் 80 நாடகங்கள் எழுதினார்.
1959 இல் சங்கீத நாடக அகாதமி விருது[1]
1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார்.
1963 இல் பத்மபூஷண் என்ற பட்டத்தையும் பெற்றார்.
தன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்.

No comments:

Post a Comment