PARSI SURRENDERED THEIR BODY
FOR BIRDS AND ANIMALS
கழுகுகளுக்கு உடலைத் தரும் பார்சி மக்கள்!
தமிழகத்தில் ராஜாராஜ சோழனின் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது அதாவது கி.பி. பத்தாம் நூற்றாண்டில்(சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு) இந்தியாவில் நிகழ்ந்த சிறுகுடியேற்றங்களில் ஒன்று பார்சி மக்களின் வரவு. அன்றைய பாரசீக தேசமான, இன்றைய ஈரான் நாட்டிலிருந்து இனமோதல் காரணமாக பார்சி இன மக்கள் அகதிகளாக தப்பித்து விபாபாரக் கப்பல்களில் ஏறி இந்தியாவுக்கு குடும்பம் குடும்பமாக வந்துசேர்ந்தனர். இப்படி வந்தவர்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் குடியேறினார்கள். இந்தியாவில் இன்று வாழும் பார்சி இனத்தவரின் மக்கள் தொகையானது 1 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே. பார்சி மக்களின் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக அதிக குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் முறையை குஜராத்தில் உள்ள பார்சி முன்னேற்றச் சங்கம் கடைபிடித்து வருகிறது. தங்கள் தாய் மண்ணை விட்டு வந்துவிட்டாலும் தங்களது கலாசார பழக்க வழக்கங்களை அவர்கள் கடைபிடிக்கத் தவறவில்லை. அதில் ஒன்று இறந்த பிறகு தங்கள் உடல்களை கழுகுகளுக்கு திண்ணக் கொடுக்கும் இறுதிச்சடங்கு முறை. தமிழர்களின் ஆதிமரபில் கழுவேற்றமும், கழுவேற்றிய உடலை மலைக்குன்றின் மீது எறிந்து பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தின்னக்கொடுக்கும் வழக்கத்தையும் இந்த இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
டவர் ஆஃப் சைலன்ஸ் பார்சி இனத்தில் ஒருவர் இறந்த பிறகு அந்த உடலில் இருந்து தலைமுடி, நகங்கள் ஆகியவை நீக்கப்பட்டு, உடலை பாலில் நீராட்டி, இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்று 'டவர் ஆப்ஃ சைலன்ஸ்' என்று அழைக்கப்படுகின்ற ஒரு வட்டவடிவ உயரமான கோபுரத்தில் உடலைக் கொண்டுபோய் கிடத்தி விடுவார்கள், அங்கே தயாராக இருக்கும் பிணந்தின்னிக் கழுகுகள் கன நேரத்தில் உடலை தின்றுவிடுகின்றன. இதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் நீர், நெருப்பு, பூமி இவைகள் புனிதமான மூலங்களாக கருதப்படுவதால் மரணத்தின் மூலமாக அவைகள் களங்கமுறக்கூடாது மும்பை மாநகரில் ஜி.எஸ்.டி அருகிலுள்ள உள்ள டவர் ஆப்ஃ சைலன்ஸ், மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, முதல் அடுக்கில் ஆண்களின் உடல்களுக்கும், அதற்கு அடுத்த அடுக்கில் பெண்களின் உடல்களுக்கும்,நடுவில் உள்ள அடுக்கில் சிறு குழந்தைகளின் உடல்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கழுகுகள் தின்றது போக மீதம் உள்ளவைகள் மழை காரணமாக சுத்தம் செய்யப்பட்டு, இறுதியாக கடலில் கலக்கப்படுகின்றது, இங்கு பார்சிகள் அல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. பார்சி இனமக்களின் மக்கள் தொகையைப் போலவே இன்று கழுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைந்துவிட்டது. இதனால் மும்மை மற்றும் குஜராத்தின் சூரத் நகரில் வசிக்கும் பார்சிக்கள், பிணம் தின்னிக் கழுகுளுக்காக இறந்த உடல்களை வைத்தபோது கடந்த இரண்டு வருடங்களாக கழுகுகள் அதிக எண்ணிக்கையில் வரவில்லை. இதனால் உடல்கள் அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கின.
பெரும் சுகாதாரப் பிரச்சினையாக இது உருவெடுத்தது. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைப் பாருங்கள். 2010ஆம் ஆண்டு சூரத் நகரை சேர்ந்த, அம்பிகா நிகேதன் பகுதியில் வசித்த பார்சி இனத்தவர் நரிமன் தபோவாலா (74) உடல்நலக்குறைவால் இறந்தார். இறுதி சடங்குகள் முடிந்து, மத வழக்கப்படி பரண் மீது அவரது உடலை வைத்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி கழுகுகள் வரவில்லை. உடல் அழுகத்துவங்கியது. இதனால் சங்கடப்பட்ட அவரது மனைவி குல், வழக்கத்திலிருந்து மாறுபட்டு கணவரது உடலை எரியூட்டுமாறு கூறிவிட, உம்ரா என்ற இடத்திலுள்ள எரிவாயு மேடைக்கு எடுத்துச் சென்று எரியூட்டப்பட்டுள்ளது. சூரத்தில் பார்சி இன குடும்பத்தினர் இறந்தவரின் உடலை எரியூட்டியது, இதுவே முதல் நிகழ்வு. அதன் பின்பும் ஓரிரு எரியூட்டு நிகழ்வுகள் நடந்தன என அறியமுடிகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டவர் ஆஃப் சைலன்ஸ் அன்று
டவர் ஆஃப் சைலன்ஸ் இன்று
No comments:
Post a Comment