Saturday, 26 November 2016

WORLD FEMALES ACHIVEMENTS உலக சாதனை பெண்கள் தொகுப்பு



WORLD FEMALES ACHIVEMENTS
உலக சாதனை பெண்கள் தொகுப்பு


தங்களின் உழைப்பு, விடாமுயற்சி, சாதனைகள் மற்றும் போராட்டங்களால் உலகெங்கும் உள்ள பலருக்கும் ஆதர்ச வழிகாட்டியாக திகழ்ந்த சில பெண்கள் அடங்கிய புகைப்பட தொகுப்பு இது.

இந்திரா காந்திAP

இந்தியாவின் இரும்புப் பெண்மணியாகக் கருதப்படும் இந்திரா காந்தி, நாட்டின் பிரதமராக இருந்த போதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் எண்ணற்ற முடிவுகளை துணிச்சலாக எடுத்தவர்

மாரி கியூரிAFP

உலகின் மிகப் பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றது, மாரி கியூரி தான். புற்று நோய்க்கு சிகிச்சைக்கு மாரியின் கண்டுபிடிப்புகள் தான் ஆரம்பம். தன் வாழ்வை அறிவியலுக்காகவே அர்ப்பணித்த மாரி கியூரி, வரலாறு காணாத விஞ்ஞானி என்று போற்றப்படுகிறார்.

ஜே. கே. ரவுலிங்

ஹாரி பாட்டர் நாவலையோ அல்லது அதனை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தையோ கேள்விப்படாதோர் இருக்க மாட்டார்கள். இதனை படைத்தவர் ஜே. கே. ரவுலிங். வறுமையின் சூழலில் சிக்கி தவித்து, எழுதுவதற்கு ஒழுங்கான இடம் கூட கிடைக்காமல் சிரமப்பட்ட ஜே. கே. ரவுலிங், எண்ணற்ற நிராகரிப்புகளை தாண்டியே வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார்.

ஸ்டெஃபி கிராஃப்REX FEAUTURES

'நன்றி ஸ்டெஃபி! - அழகான, அற்புதமான டென்னிஸ் நாட்களை வழங்கியதற்கு நன்றி' - இது தான் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் ஒய்வு பெற்ற போது, உலகெங்கும் உள்ள பல பத்திரிக்கைகளின் தலையங்கமும். 22 கிராண்ட் ஸ்லாம்கள், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம், பல கிராண்ட் பிரீ பட்டங்கள் என்று எண்ணற்ற சாதனைகளை படைத்த ஸ்டெஃபி, ஒய்வு பெற்ற பின் போர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.


ஹெலன் கெல்லர்TOPICAL PRESS AGENCY

கண்பார்வையற்ற மற்றும் கேட்கவும், பேசவும் இயலாத ஒரு மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லர், புகழ்பெற்ற எழுத்தாளராக, பேச்சாளராராக பின்னாட்களில் மாறியதன் காரணம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகிய பண்புகளை கொண்டிருந்தது தான். பெண்களுக்கு மட்டுமல்ல, இந்த உலகில் சாதிக்க விரும்பும் ஓவ்வொருவருக்கும் ஹெலனின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது புத்துணர்வைத் தரும்.

ஆங் சான் சூ சிBBC

மியான்மரின் நடைமுறைத் தலைவரான ஆங் சான் சூ சி, தனது பொது வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களுக்கு அளவே இல்லை. மிகவும் கடும்போக்குடன் செயல்பட்ட மியான்மர் ராணுவ அரசை எதிர்த்த ஆங் சான் சூ சி, எண்ணற்ற ஆண்டுகள் வீட்டுச்சிறையில் கழிக்க நேரிட்டது. இரும்புப் பெண்மணியான சூ சி, தனது கொள்கையால் சற்றும் பின்வாங்காமல் சாதித்து காட்டினார்.

அகதா கிறிஸ்டி

மர்ம நாவல் எழுத்தாளார்கள் பலர் இருந்தாலும், அகதா கிறிஸ்டிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. அகதாவின் மேடை நாடகமான 'தி மௌஸ் டிராப்' (The Mousetrap ) பல ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்டு சாதனை புரிந்து வருகிறது.


செரீனா வில்லியம்ஸ்EPA

ஸ்டெஃபி கிராஃபின் கிராண்ட் ஸ்லாம் உலக சாதனையை யாரும் எட்ட முடியாது என்ற எண்ணத்தை உடைத்து செரீனா வில்லியம்ஸ் சமன் செய்துள்ளார். 22 கிராண்ட் ஸ்லாம்கள் மற்றும் 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள செரீனா , ஆக்ரோஷத்தில் மகளிர் டென்னிஸ் ஆட்டம், ஆடவர் டென்னிஸ் போட்டிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல என்று நிரூபித்தவர்.

சிறிமாவோ பண்டாரநாயக்க

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்க



அன்னை தெரஸா

கருணையின் மறு உருவம் என்று பலராலும் அழைக்கப்படுபவர் அன்னை தெரஸா. அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா ஆகியவற்றை பெற்றவர். சமீபத்தில் ரோமன் கதோலிக்கத் திருச்சபையால் புனிதராக்கப்பட்டவர்.

மார்லின் மன்றோ

ஹாலிவுட் திரைப்பட நடிகைகளில் மறக்க முடியாதவர் மார்லின் மன்றோ. என்றும் ரசிகர்களின் கனவுக்கு கன்னியாக விளங்கும் மார்லின் மன்றோ தனது துயரங்களையும், ஏமாற்றங்களையும் புறந்தள்ளி ரசிகர்களை தனது நடிப்பு மற்றும் பாடல்களால் பரவசப்படுத்தினார். அவரது வாழ்க்கையை போலவே புதிராக அமைந்தது அவரது மரணமும்.


எம்.எஸ்.சுப்புலட்சுமி

ஐ.நா. மன்றத்தில் இசை கச்சேரி நடத்திய முதல் இந்தியரான எம்.எஸ்.சுப்புலட்சுமி, இன்றளவும் பலராலும் பெரிதும் விரும்பப்படும் சுப்ரபாதத்தை பாடியவர் ஆவார். எண்ணற்ற பக்தி பாடல்கள், திரைப் பாடல்களை பாடியுள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி, இசைத்துறையில் உலகப் புகழ் பெற்ற இந்தியர் ஆவார்.

ஃபிளாரன்ஸ் ஜாய்னர்



மூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள், இரண்டு உலக சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கங்கள் என பல பதக்கங்களை குவித்துள்ள ஃபிளாரன்ஸ் ஜாய்னர், 'தடகள ராணி' என்று புகழப்பட்டவர். தனக்கென்று தனி பாணி அமைத்துக் கொண்ட ஃபிளாரன்ஸ், 38 வயதிலேயே காலமாகி விளையாட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியவர்.


No comments:

Post a Comment