Friday, 26 August 2016

TAMIL PRODUCER S.S.VASAN , A LEGEND OF TAMIL CINEMA PASSED ON 1969 AUGUST 26

TAMIL PRODUCER S.S.VASAN ,
A LEGEND OF TAMIL CINEMA 
PASSED ON 1969 AUGUST 26






Subramaniam Srinivasan (4 January 1904 – 26 August 1969), popularly known by his screen name S. S. Vasan, was an Indian journalist, writer, advertiser, film producer, director and business tycoon. He is the founder of the Tamil-language magazine Ananda Vikatan and the film production company Gemini Studios, Gemini Film Laboratories and Gemini Picture Circuit. He was a member of parliament (Rajya Sabha) from 1964 and served his term till his death.



Vasan was born in Thiruthuraipoondi in the then Tanjore district but was forced to migrate to Madras following the death of his father at an early age. Vasan discontinued his studies before graduation and set up a flourishing mail order and advertising business. In 1928, Vasan purchased a struggling Tamil magazine Ananda Bodhini and renamed and re-launched it as Ananda Vikatan. Ananda Vikatan, consequently, emerged as the leading Tamil magazine in the then Madras Presidency and continues to be the oldest and most respected Tamil magazines today after 86 years.

Vasan entered the Tamil film industry in 1936 
when his novel Sathi Leelavathi was made into a film. 


In 1940, he purchased the Motion Picture Producers Combine, a film studio and renamed it Gemini Studios. 
Gemini Studios made a number of successful Tamil, Telugu and Hindi movies from 1940 to 1969, notable ones being 
Mangamma Sapatham, 
"Aboorva Sagotharargal, 
"Nandanaar", 
"Bala Nagamma", 
Miss Malini,
 Chandralekha,
 Vanjikkottai Valiban, 
"Nishaan", 
"Mangala", 
"Insaaniyat", 
"Grahasti", "
Gharana", 
"Zindagi", 
"Vazhkai Padagu",
 "Motor Sundaram Pillai", 
"Olivilakku", 
"Chakradhari",
 "Aurat", 
"Avvaiyar",
"Paigham" and
 Irumbu Thirai. Vasan also directed some of his later movies, the first being Chandralekha, which is considered by critics and film historians to be a milestone in Indian cinema. Vasan died in Madras on 26 August 1969, at the age of 65.

Vasan was an accomplished writer and translator and a hugely successful journalist. As a director, Vasan was known for his grandiose sets and innovative techniques that he introduced. Film historian Randor Guy hailed Vasan as the "Cecil B. De Mille of India".

He was the first film and media personality to be invited to be a member of parliament in India's Rajya Sabha where he advocated the granting of industry status to the film trade (a battle still being fought). He was one of the founders of Film Federation India, Producer's Guild of India and the South Indian Film Chamber of Commerce. He was awarded the Padma Bhushan in 1969, the year of his death, by the government of India for his extraordinary contribution to Indian media.[1] The Government of India and the Postal department released postage stamps bearing his likeness on 26 August 2004, the year of his centenary.[2]


Early life[edit]


Vasan was born in the town of Thiruthuraipoondi in the Tanjore district into a poor family. While his official date of birth is listed as 10 March 1903, according to his family, he was born on 4 January 1904. Film historian Randor Guy suggested that Vasan's date of birth may have been deliberately fabricated to help in his school admission


.[3] Vasan's father died when he was two years old and his mother Balambal went to live with her father in Thiruthiraipoondi from the village of Narimanam where her husband's family lived and raised her son as well as her own siblings.

 She was a scholar of Sanskrit and would tutor children and people in the village in addition to making special confectionaries for festive occasions – this was how she supported her ailing widowed father, toddler son and her siblings closer to her son's age. 

She inspired ambition and strength in her son and to fulfill her desire, he came to Madras in 1917 to study in Pachaiyappa's College. While in College, he would hawk watches and goods on the railway platforms to send back money to his family in the village. 

He also simultaneously started writing articles for local magazines, translating foreign novels into Tamil and publishing them as well as started one of the first mail order businesses in India.

 An example of an advertisement of that time would read "Send Rs 1 and receive 32 imported articles" – these would consist of various trinkets and things from England like even bobby pins, but was wildly successful across the state.

 This made him successful enough to bring his family from the village and at which time he got married to the dynamic Pattamal Vasan who was a huge support and reason for his continued path of success. Due to pressure from his mother and the fact he was now married, he applied for a clerk's job with the Madras and South Mahratta Railway but could not save enough money for the safety deposit required due to extraneous circumstances. 

It was a blessing in disguise because if this had happened, it could have cut short the success of this media baron in later years. It was at this time that his success in advertising drew attention from other local businesses and prompted him to begin an Ad agency, one of the first in India run by an Indian.

Ananda Vikatan[edit]

By the late 1920s, Vasan had begun to make considerable profits and one of the magazines he advertised in (almost dominated) was a local Tamil humour magazine with a circulation of about 2000. In 1928, he purchased this struggling Tamil humour magazine named Ananda Bodhini for Rs. 200.[4] During this period, Vasan wrote a number of short stories for the Tamil magazines he brought advertisements for, with mixed success. He also translated popular English fiction and ran a successful mail order business.[4]


Vasan renamed Ananda Bodhini as Ananda Vikatan and took over as Chief Editor.[4] He completely revamped it by introducing serial stories and crossword puzzles. Vasan followed a rigorous marketing strategy which eventually saw the emergence of Ananda Vikatan as the best selling Tamil magazine of the time.[4] with a readership touching 30,000 within a few months and growing to hundreds of thousands of readers in the following decades.






 In 1933, he started a humour magazine in English called The Merry Magazine and in 1934, a Tamil weekly called Naradhar devoted to arts, politics, literature and social issues, both of which were successful.[4] In 1934, Ananda Vikatan became the first Tamil magazine to advertise in the British periodicals Advertiser's Review and Advertiser's Weekly.[4]




 A key to Vasan's success was his ability to find and nurture talent and one of the biggest breaks came in the early 1930s when Vasan found a new writer Kalki Krishnamurthy in whose writing he saw great potential. Kalki was living at the time with his family in Mayiladuthurai and Vasan without having met him in person unhesitatingly sent him money and tickets to move to Madras with his family and take up the role of the editor of his new magazine. 

Kalki and Vasan created history in the decade or so where they were professionally aligned and remained close friends for life. Another part of this successful team was Kalki Sadasivam who was a dynamic ad-man and was able to follow through Vasan's vision for marketing strategy. 

Sadasivam was also the legendary M.S. Subbulakshmi's husband. MS and Mrs Vasan were extremely close friends till the end of their days. Ananda Vikatan remained the foremost Tamil magazine without serious competition until 1941, when the editor Kalki Krishnamurthy and the dynamic marketing manager Kalki Sadasivam left the Ananda Vikatan to participate in the freedom struggle and hence got imprisoned. They then started the Kalki.[4]



















Ananda Vikatan, a part of the Vikatan group today continues to be one of the leading names in Tamil households and celebrates 87 years of publishing being the oldest vernacular magazine in the country. 


It now encompasses 9 magazines under its umbrella and has been the starting point of many major writers, artists and media personalities in South India.










Movies[edit]

In 1936, Vasan's Tamil novel Sathi Leelavathi was made into a movie. 


Two years later, he became a film distributor when he obtained the distribution rights for films made by the Madras United Artists' Association. 









He was the financier-distributor of the film Thyagabhoomi in 1939


 that set new trends in various arenas. Thyagabhoomi was a serial novel written by Kalki in Ananda Vikatan while simultaneously being made as a film by noted film producer K Subrahmanyam who was also a close friend. 





Causing ripples and becoming a huge success, it was subsequently banned by the then British government for its strong theme of the Indian freedom movement in addition to other social issues. The film was a milestone in the annals of Tamil film history in many fronts.

When a fire broke out in 1940 in the premises of the Motion Picture Producers Combine, a prominent film studio owned by K Subrahmanyam, damaging it completely, Vasan purchased the studio, rebuilt and renamed it as the Gemini Studios. 













It is purported that the name was chosen because Vasan was an extremely successful punter, involved in horse racing at that time and owned a successful race horse named Gemini Star.[5] However, his family cite the reason to choose "Gemini" as it was the natal moon sign of Vasan's wife Pattamal, who was not only his strongest supporter but who brought his family great luck. 

An interesting point of note was that the "model" for the Gemini twins logo was inspired on the day the name was coined when Vasan was visiting his friend K Subrahmanyam and his toddler son Balakrishnan ran out in his underwear and stood holding a bugle.

That very year, the Gemini Studios produced their first movie, Madanakamarajan, 

which was a box-office success. 













Vasan followed it with Mangamma Sapatham 


VASUNDARA ,THE MOTHER OF VYJEYANTHIMALA





and Miss Malini both of which were successful.

 Miss Malini, based on the story Mr. Sampath by R. K. Narayan, 

launched the career of Gemini Ganesan, who later became a leading actor in the Tamil film industry. 
GEMINI MET HIS WIFE PUSHPAVALLI REKHA`S MOTHER IN MALINI 


The Hindi version of this film was Mr Sampath in Hindi and, these films are the only adaptation of his novels that the famous writer R. K. Narayan was involved in the scripting of the screenplay. 

Mangamma Sabatham launched Vasundhara Devi, the mother of actor-politician Vyjayanthimala Bali as the lead and created a craze making her a huge star in just one film. 


The picture was directed by Acharya, one of the early brilliants of Tamil cinema. In 1942, Gemini also made Bala Nagamma, a silver jubilee hit in Telugu based on a popular folk tale which captured the imaginations of the audience and was hugely successful. It was the last film to star Kanchanamala and was an important film in the career of Pushpavalli. 




Bala Nagamma was later adapted into Hindi 


with Madhubala playin the lead and Savitri making her Hindi debut as Bahut Din Hue with the addition of the climax borrowed from another Gemini Film, Avvaiyar which used elephants to the rescue. This was especially hugely successful in Maharashtra with their devotion to Lord Ganesha. Other successes during the period leading to independence included comedy capers like Kannama En Kadhali, Daasi Aparanji 

– a period social satire and Apoorva Sagotharargal, an adaptation of the story of the Corsican Brothers – a tale of co-joined twins separated at birth. It was one of the first films in India and one of the first few in the world that had a double role for the lead M.K.Radha who played both brothers and for which masking technology was used. It also set the trend for innumerable successful films in India that had siblings, especially look-alike ones that were separated at birth and grew up in two different circumstances a la Prince and the Pauper or Man in the Iron Mask only to be switched or join forces to exact revenge. 

The actor-politician, M. G. Ramachandran picked this film to remake as "Neerum Neruppum" as a tribute and homage to Vasan in 1971

















and earlier in 1968 had done his 100th film Oli Vilakku, particular that it be a Gemini production.




 Another successful film in this period, a devotional Nandanaar was a controversial story of a harijan man overcoming the shackles of the caste oppression to gain admittance into the Chidambaram Nataraja temple with divine sanction, hence becoming a Nayanmar shaivite saint. 

This starred the famous singer Dandapani Desikar with the film and soundtrack becoming a runaway superhit in Tamil Nadu. Technically, it was the first film in India that used playback singing in a portion where a divine song, a call to the saint in a heavenly voice rings out of the ether – this of course set a trend for playback singers and revolutionised the necessity to use singer-actors for films that had been the norm through the 1930s and early 1940s.


Vasan's involvement in films eventually led him to direct his first movie, Chandralekha. He was really preparing his big post-independence break. The 1948 Tamil Chennai film industry classic Chandralekha was rereleased in Hindi and Tamil.[6][7] While the film was original begun under the direction of Acharya who had earlier directed landmark Gemini films like Mangamma Sabatham, differences of opinion between Vasan and Acharya led to the director stepping down from the film. Vasan then donned the role of director in addition to being the producer of the epic movie. 


The film, a spectacle, is remembered for its drum dance and extensive sword fight sequence. 603 prints of Chandralekha were made and the film was even released in the United States as Chandra with English subtitles – the first Indian film to do so! Even now, a print exists in the Library of Congress as representative of classic Indian cinema. Vasan encouraged his dear friend Tarachand Barjatya to found Rajshri Pictures in 1947 and assigned him the distribution of Chandralekha in the North, the first project distributed by Rajshri and one of the biggest successes of its time thus spurring off the growth stories of one of the biggest distributors and producers of Indian cinema today.


Released in 1948, after five years in production, the film became a highly acclaimed film of the period. It had the first drum-dance and the longest sword-fight sequence captured on film in the world. It was the costliest Indian film made until then and was the first major Indian film to be dubbed into English and released internationally. Made for a budget of Rs 3.6 million in 1948, the budget adjusted for inflation (equaling approximately Rs 1.62 billion today) makes it one of the most expensive films ever made for half a century in India. The Hindi version of the film was one of the first South Indian productions that found all India success and can be hailed as one of the first pan-Indian major blockbuster. 


Following the success of Chandralekha, Gemini Studios made several films in Hindi that include Insaniyat, Aurat, Paigam, Gharana, Grahasti, Ghoongat, Zindagi, Mr Sampat, Sansar, Lakhon Mein Ek, Raj Tilak, Nishan, Mangala, Bahut Din Hue, Teen Bahuraniyan and Shatranj that all found Box office success. Interestingly Insaniyat was one of the only films to star both Dilip Kumar and Dev Anand and Gemini films first begun the practice of making popular ensemble cast films with multiple leading men. Interestingly, while films have been made by Gemini and Vasan with almost all the top leading heroes of the time including Raj Kumar, Rajendra Kumar, Manoj Kumar, Ashok Kumar, Dilip Kumar and Dev Anand, there was no picture that Gemini made with Raj Kapoor while there were two that had Prithviraj Kapoor making a comeback in strong supporting roles in Teen Bahuraniyan and Zindagi. 


Aurat had one of Rajesh Khanna's first major on-screen roles before he got his major break as a leading man. Similarly, Amitabh Bachchan got his opportunity to become introduced as the male lead man opposite Mala Sinha in a Gemini production (produced and directed by S.S. Balan, Vasan's son), Sanjog shortly after Saat Hindustani and just before his success with Zanjeer. Many technicians, writers, directors, producers and artistes across India were introduced into the media world by Gemini and even personally encouraged or mentored by Vasan and later by his son Balan. In the 1950s Gemini Pictures came out with films both in Tamil and Hindi in addition to Telugu and other regional languages. Popular Hindi films include Mr. Sampat (1952), Insaniyat (1955), Raj Tilak (1958) and Paigam (1959).


In 1958, he established Gemini Colour Laboratories and believed in establishing the Film Trade on professional lines. His vision saw establish one of the very first media conglomerates in the world that were vertically aligned that included the Gemini Picture Circuit – one of the largest film distributors in the country that saw a variety of prestigious Indian and foreign films release under its umbrella across the nation. He noted that success of a film depended on its distribution and found its validation with the success of the GPC. 


The Gemini Studios was also the location of choice for various film shootings across the country and also boasted of having the first air-condition floors in addition to the largest sound stages in Asia at the time. Some famous and milestone films shot at Gemini studios include Uday Shankar's Kalpana, a dance and visual extravaganza that was being made simultaneously with Chandralekha and in fact inspired the drum dance sequence. Meticulously organised, Gemini Studios ran like a factory churning out successful films in multiple languages for 30 years under his dynamic vision. The distribution network was spread across South Asia and even had trade links with Hollywood, London and Russia. Additionally, the ownership and popularity of the magazine Ananda Vikatan under his aegis completed the vertical alignment of the media empire. 

Major films in Tamil include "Avvaiyyar" (1952) on the life of the poet-saint that was directed and produced by Vasan at lavish cost and that found everlasting success starring K. B. Sundarambal who was persuaded to act in the film (as she had been widowed a few years earlier) for a whopping sum or Rs 100,000 rupees which was the highest ever fee for an actor in India at the time. Other extremely successful Tamil films produced and some directed by him include Mangamma Sabatham, Vazhkai Padagu, Nandanaar, Motor Sundaram Pillai, "Oli Vilakku", Chakradhari, Aboorva Sagotharargal, Vanji Kottai Valiban, Irumbu Thirai.


Vasan was the President of the Film Federation of India for two terms, helping found it and was even nominated to the Rajya Sabha (the first film producer to be an MP of the Rajya Sabha). He also helped found the South Indian Film Chamber. He pushed for extensive reforms of the film trade, gave up cash transactions in film financing as early as the 1950s and was one of the first pioneers to ask for industry status. He was the given the Padma Bhushan by the Govt. of India in 1969, the year of his death. His son S. S. Balan was mentored by him, and ran the flourishing Gemini Studios and Vasan Publications (Ananda Vikatan) till the concept of movie studios themselves were threatened in the 1970s. 

Balan had been a successful director promoting independent cinema and having written as well as directed successful movies prior to the 1970s. However, an expensive production in 4 languages (Tamil, Telugu, Hindi and Kannada) in the mid 1970s that failed to make its mark at the box office dealt a fatal blow to the studios that were then sold in the 1980s. 


The Gemini banner now continues to be owned by the L. V. Prasad family of Prasad Studios. Balan continued as editor and managing director of Ananda Vikatan and launched the first Tamil investigative journal, Junior Vikatan, which became very successful till 2006, and he is now Chairman of the Vikatan Group. At the time in the media and film world, especially since many had come from the mentorship of either Gemini or Vikatan, everyone used to address Mr Vasan, "Boss" (including his own son) and that is how he was universally referred to – indicating his power and the respect he inspired.

Gemini Pictures declined in the 1970s although it has remained successful as a studio and equipment rental business though no longer held by his family. Ananda Vikatan under Vasan Publications has branched off into being one of the largest media groups in Tamil Nadu and continues to be privately held within family.

Legacy[edit]

Vasan believed that films were meant to entertain and were meant to be catered to the ordinary man. Colossal production values, huge sets, mammoth dances, thousands of extras were his hallmark. It can be said that a direct development of the use of song, dance and pageantry in film became almost a hallmark of Indian/Bollywood cinema and gave rise to the Madras formula of success. In more recent decades, this unfortunately overshadowed all the other cinematic values to have become almost the blueprint for formula films of India. Gemini was also the first to pioneer innovative marketing and PR plans for the release of films including the first to use the concept of giant 'cut-outs' and billboards beginning with Chandralekha. A vast number of reigning film and media professionals came out from the mentorship or employment of Gemini Studios.


Lavishness in production, splashing money in promoting, packaging and publicising a picture, he was a pioneer in Indian Cinema and had no equals, then, and now. 'Be wise and advertise!' He had a character speak in his film "Miss. Malini" (1947), giving expression to one of his personal beliefs. And he showed what one could achieve with punch-plus publicity.








சிவகுமார் வாசனின் மறைவை கேட்டு ஓடினார் ...ஓடினார் ...

சவ ஊர் வலம் தன் பாதி வழியை கடந்து விட்டது 
எந்த ஆர்பாட்டமோ ,பரபரப்போ இல்லாமல் அமைதியாய் சடங்குகள் முடிந்தன 

வெற்றுடம்புக்கு வீண் மரியாதைகள் வேண்டாம் 
மூங்கில் பாதையும் ஓலைப்பாயும் போதும் 

ஏழ்மையில் பிறந்த எனக்கு எளிய சடங்குகள் போதும் 
இரங்கல் கூட்டம் ,இறுதி ஊர்வலம் புகைப்படம் எதுவும் வேண்டாம் 

மூச்சு நின்ற பின் தன் நிகழ்வுகள் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லி இருந்தார் வாசன் 


பூஜ்ஜியத்திலே ஆரம்பித்து பத்திரிகை மற்றும் திரை உலகில் பெரிய வட்டம் போட்டு அகில இந்திய அளவிலும் சாதனைகள் பல புரிந்த ஒரு மேதையின் சகாப்தம் முடிந்து விட்டது 








அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவே இல்லை 

-சிவகுமார் இரங்கல் செய்தி 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அபூர்வ சகோதரர்கள் -விகடனின் கார்ட்டூன் 





1949 தீபாவளி ரிலீசாகி வெளி வந்தது அபூர்வ சகோதரர்கள் என்ற ஜெமினியின் திரைப்படம் .1950 குடியரசு ஆகும் நேரத்தில் ஆந்திரா காரர்கள் 
சென்னையை தமிழ் நாட்டில் இருந்து பிரித்து தரும்படி கேட்டார்கள் 

இந்த திரைப்படத்தின் மைய கரு யாதெனில் ஒட்டி பிறந்த இரட்டையர் இருவரில் ஒருவர் உணர்ச்சி வசப்படும் போது இன்னொருவருக்கும் அதே உணர்வு ஏற்படும் .அண்ணன் காதலித்தால் தம்பி உணர்ச்சியால் துடிப்பான .இது கார்ஸிகான் பிரதர்ஸ் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது   

இதில் எம் கே ராதா இரட்டை வேடத்திலும் பானுமதி கதாநாயகியாகவும் நடித்தனர் .இதுவே நீரும் நெருப்பும் என்ற பெயரில் எஞ்சியார் ஜெயலலிதா நடிப்பில் வெளி வந்தது .அப்போது பரணீதரன் என்பவர் கார்டூனிஸ்ட்டாய்
இருந்தார் .
இந்த சினிமாவையும் ,ஆந்திரா சென்னை பிரட்சனை இரண்டும் சேர்த்து கார்ட்டூன் வரைந்து அப்போதைய ஆனந்தவிகடன் எடிட்டரும் 
நிர்வாகஸ்தருமான எஸ் எஸ் வாசன் அவர்களிடம் காட்டினார்   

இந்த அபூர்வசகோதரர்கள் ஐடியா அவருக்கு பிடித்து விட்டது 
இது எக்ஸலண்ட் ஐடியா தான் .ஆனால் நம்முடைய படத்திற்கு நாமே விளம்பரம் செய்வது போலாகி விடும் .எனவே தினமணியில் வந்தால் அதிகம் பார்ப்பார்கள் என்கிறார் 

அதற்கு பரணீதரன் இந்த கார்ட்டூன் வேறு எந்த பத்திரிக்கையிலும் வெளி வர்றத நான் விரும்பல .வந்தா விகடன்ல வரட்டும் இல்லேன்னா ...வெளிவராமல் போகட்டும் என்கிறார் 

மறுவாரம் அந்த கார்ட்டூன் வந்தது -பரணீதரன் விண்வெளியில் மிதந்தார்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



அகில இந்தியாவையும் தமிழகத்தை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்த மேதை எஸ்.எஸ்.வாசன். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். திறமை, புத்திக்கூர்மை, கடுமையான உழைப்பு மூலம் பத்திரிகைத் துறையிலும் சினிமா துறையிலும் உச்சத்தைத் தொட்டவர். 1904 JANUARY 4 -ல் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார் எஸ்.எஸ்.வாசன். தந்தை பெயர் சுப்ரமணியம், தாயார் வாலாம்பாள். வாசனின் முழுப் பெயர் சீனுவாசன். நான்கு வயதுக் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தார். தாயார் அரும்பாடுபட்டு வாசனைப் படிக்கவைத்தார். தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ந்தவரான வாசனின் தாயார், இரண்டு மொழிகளிலும் உள்ள இலக்கியங்களைக் கற்றறிந்தவர். தான் படித்த கதைகளையெல்லாம் வாசனுக்குச் சொல்வார்.



உயர்நிலைப் பள்ளி முடிந்ததும் தாயாருடன் சென்னைக்கு வந்தார். பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட் வரை படித்தார். அதற்கு மேல் படிக்க வசதியில்லை. அவர் பார்த்த முதல் வேலை பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்கிக் கொடுக்கும் வேலை. பெரியார் நடத்திய ‘குடியரசு’, ராய.சொக்கலிங்கம் நடத்திவந்த ‘ஊழியன்’ பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்கித் தந்திருக்கிறார். விளம்பரம் சேகரிக்கப் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

சைனா பஜாரில் சிறிதும் பெரிதுமாக நடந்துவந்த வியாபாரங்கள் வாசனின் மனதைக் கவர்ந்தன. அங்கு விற்கப்படும் பொருட்களைப் பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது, அதைக் கேட்டுக் கடிதம் எழுதுவோருக்கு வி.பி.பி.யில் பொருளை அனுப்பிப் பணம் பெறுவது என்ற ‘மெயில் ஆர்டர்’ முறையை முதல் முறையாகத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். அதே சமயத்தில், அவருக்கு எழுதும் ஆர்வமும் இருந்தது. அந்நாட்களில் பலரும் பேச அச்சப்படுகிற விஷயத்தைத் துணிச்சலாகப் புத்தகமாக எழுதினார்.

1927-ல் வெளிவந்த அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘இல்வாழ்க்கையின் ரகசியங்கள்’. ஆங்கிலத்தில் அதற்கு ‘மிஸ்டரீஸ் ஆஃப் மேரீட் லைஃப்’ (`MYSTERIES OF MARRIED LIFE’) - எஸ்.எஸ்.வாசன், ஃபிக்ஷனிஸ்ட் அண்ட் எத்னலாஜிஸ்ட்’ என்று கவர்ச்சிகரமாகத் தலைப்பும் கொடுத்தார். அதை அவரே அச்சிட்டு, விற்பனை செய்தார்.

ஆனந்த விகடன்

பூதூர் வைத்தியநாதய்யர் என்ற தமிழறிஞர் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை நடத்திவந்தார். தன்னுடைய பொருட்களுக்கு ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார் வாசன். ஆனால், அதற்குரிய பணம் செலுத்தியும் பத்திரிகையும் வரவில்லை, விளம்பரமும் வரவில்லை. அதை விசாரிக்கப் போனார் வாசன். நிதி நெருக்கடியால் பத்திரிகை வரவில்லை; அடுத்த மாதம் வரும் என்றார் வைத்தியநாதய்யர். அதே போல் வந்தது. ஆனால், 1927-க்குப் பிறகு, அவரால் தொடர்ந்து பத்திரிகை நடத்த முடியவில்லை. இப்போது வாசன் பத்திரிகையை விலைக்கு வாங்கிக்கொள்ளத் தயார் என்றார். ‘ஆனந்த விகடன்’ எட்டெழுத்து. ஒரு எழுத்துக்கு ரூ.25 என்று முடிவுசெய்து ரூ. 200-க்கு ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை விற்க முன்வந்தார். விகடன் வாசன் கைக்கு வந்தது. அப்போது வருடம் 1928.

ஆரம்ப நாட்களில் விகடன் மாதம் இருமுறை பத்திரிகை யாக வந்தது. பிறகு, ‘ஆனந்த விகடன்’ பொறுப்பாசிரியராக கல்கி வந்துசேர்ந்தார். அவர் எழுத்துக்களுக்கு இருந்த வரவேற்பால் ‘ஆனந்த விகடன்’ விற்பனை கிடுகிடுவென உயர்ந்தது. விகடனில் வாசன் நடத்திய குறுக்கெழுத்துப் போட்டிக்கும் பெரிய வரவேற்பு இருந்ததால், விற்பனை சிகரத்தைத் தொட்டது.

அப்போதுதான் ‘ஆனந்த விகட’னில் வாசன் ‘சதிலீலாவதி’ என்ற நாவலை எழுதினார். அதைத் திரைப்படமாகத் தயாரிக்க மருதாசலம் செட்டியார் என்ற பட அதிபர் முன்வந்தார். 1936-ல் வெளிவந்த ‘சதிலீலாவதி’ தமிழ்த் திரையுலகில் முக்கியத்துவம் பெற்ற படம். வாசன் எழுதிய முதல் திரைப்படக் கதை. இந்தப் படத்தில்தான் எம்ஜிஆரும் அறிமுகமானார்.

‘சதிலீலாவதி’ படம் திரைக்கு வந்து வெற்றிபெற்ற பிறகும்கூட, திரைப்படத் தொழில்மீது எஸ்.எஸ்.வாசனுக்கு ஆர்வம் ஏற்படவில்லை. ‘பத்திரிகைத் தொழிலே போதும்’ என்றிருந்தார்.

புரட்சி செய்த தியாகபூமி

தமிழ் சினிமாவின் பிதாமகன் கே.சுப்ரமணியம். (நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) இவர்தான் தியாகராஜ பாகவதரையே அறிமுகப்படுத்தினார். அப்போது கல்கி எழுதிய கதைதான் ‘தியாக பூமி’. அப்போது வாசனைச் சந்தித்தார் கே.சுப்ரமணியம். ‘தியாக பூமி’ கதையைத் திரைப்படமாக்க விரும்புவதாகத் தெரிவித்தார். படப்பிடிப்பு நடக்கும்போது எடுக்கப்படும் புகைப்படங்களோடு ‘தியாக பூமி’யை ‘ஆனந்த விகட’னில் தொடர்கதையாக வெளியிடுவது என்று வாசனும் சுப்ரமணியமும் முடிவுசெய்தனர். அதன்படி ‘தியாக பூமி’ படத்தின் கதை, ‘ஆனந்த விகட’னில் சினிமா ஸ்டில்களுடன் தொடராக வெளிவந்தது. இந்த உத்தி, அகில இந்தியாவிலும் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிபெற்றது. கதை வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அதனால், ‘ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்’ என்ற பட விநியோக நிறுவனத்தை வாசன் தொடங்கி ‘தியாக பூமி’யின் விநியோக உரிமையைப் பெற்றார்.

1939, மே 20-ல் சென்னையில் கெயிட்டி, ஸ்டார் ஆகிய இரு திரையரங்குகளில் ‘தியாக பூமி’ வெளியானது. படத்தைப் பெண்கள் விரும்பிப் பார்த்தனர். ‘தியாக பூமி’ புடவை, ‘தியாக பூமி’ வளையல் என்று சந்தைகளில் புடவைகளும் வளையல்களும் விற்க ஆரம்பித்தார்கள்.

படத்தில் இடம்பெற்றிருந்த தேச பக்திப் பாடல்கள், சுதந்திரப் போராட்டக் காட்சிகள் காரணமாக, இந்தப் படத்துக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. தடை உத்தரவு வரப்போகிறது என்பது முந்தின நாள் தெரிந்துவிட்டதால், படத்தை விடிய விடிய மக்களுக்கு இலவசமாகக் காட்டுவதற்கு சுப்ரமணியமும் எஸ்.எஸ்.வாசனும் ஏற்பாடு செய்தனர். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு தடை நீங்கி, ‘தியாக பூமி’ மீண்டும் திரையிடப்பட்டது. அப்போதும்கூட வாசனுக்கு சினிமாமீது ஆர்வம் ஏற்படவில்லை. ஆனால், காலம் அவரை சினிமாவுக்குள் இழுத்துவந்தது. அதுவும் கே.சுப்ரமணியம் மூலமாகவே.

சினிமா தயாரிப்பு



வாசன் ஸ்டுடியோ அதிபரான கதை சுவாரசியமானது.

அப்போதெல்லாம் படம் எடுக்க சென்னையில் அதிக வசதி கிடையாது. கல்கத்தாவில்தான் வசதிகள் இருந்தன. படம் எடுப்பதாக இருந்தால் 60, 70 பேர் கொண்ட கோஷ்டி யைச் சென்னையிலிருந்து கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று, அவர்களை அங்கே எல்லா வசதிகளோடும் சுமார் மூன்று மாதங்கள் தங்க வைத்து, படம் முடிந்த பிறகு, அவர்களைத் திரும்ப சென்னைக்குக் கொண்டுவந்து சேர்ப்பது என்பது மிகவும் சிரமமான வேலை மட்டும் அல்ல; மிகுந்த பொருட்செலவும், கால விரயமும் ஏற்படுத்துகிற காரியம். அவ்வளவு சிரமத்தையும் பொருட்செலவையும் ஏற்பதற்குக் காரணம், அங்குள்ள ஸ்டுடியோக்களில் இருந்த வசதியும், அங்கு தொழில்புரிந்த திறமை மிக்க ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் உள்ளிட்ட நிபுணர்கள்தான்.


இதனால் சென்னையிலேயே அவ்வளவு வசதிகளும் நிறைந்த ஒரு ஸ்டுடியோவைக் கட்டலாம் என்று சுப்ரமணியம் முடிவெடுத்தார். சில தயாரிப்பாளர்களையும் கூட்டு சேர்த்துக்கொண்டார். அண்ணா சாலையில் இப்போது ஜெமினி அழைக்கப்படும் இடத்தில் ‘ஸ்பிரிங் கார்டன்ஸ்’ என்ற பெயரில் ஒரு காடு இருந்தது. ‘மோஷன் பிக்சர் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்’ என்ற பெயரில் அங்கே ஒரு ஸ்டுடியோவை நிறுவினார் கே.சுப்ரமணியம். அங்கு பணிபுரிவதற்காக ‘கல்கத்தா ஈஸ்ட் இந்தியா கம்பெனி’ ஸ்டுடியோவில் வேலை பார்த்த நிபுணர்களைச் சென்னைக்கு வருமாறு செய்தார். அப்படி வந்தவர்கள்தான் அந்நாளில் பிரபலமான சைலன் போஸ், கமால் கோஷ் போன்ற சிறந்த ஒளிப்பதிவாளர்களும், திரன்தாஸ் குப்தா என்ற லெபாரட்டரி நிபுணரும், சின்ஹா என்ற ஒலிப்பதிவாளரும், ஒப்பனைக் கலைஞர் ஹரிபாபுவும்!

‘மூவிலேண்ட்- ஜெமினி ஸ்டுடியோ’

இந்த ஸ்டுடியோவில் பல படங்கள் எடுக்கப்பட்டன. அப்போது கே.சுப்ரமணியம் இயக்கத்தில் இதே ஸ்டுடியோவில் ‘இன்பசாகரன்’ என்ற படம் தயாராகி, வெளிவரும் நாளைக்கூட விளம்பரப்படுத்திவிட்டார்கள். அப்போதுதான் அந்த துயரச் சம்பவம் நடந்தது.

சுப்ரமணியம் பல கனவுகளோடு நிறுவிய அந்த ஸ்டுடியோ 1940, டிசம்பர் 21 அன்று முற்றிலுமாகத் தீப்பற்றி எரிந்தது. அந்த விபத்தில் ‘இன்பசாகரன்’ படத்தின் நெகடிவ்களும், ஃபிலிம் கருவிகளும் சேர்ந்து எரிந்துபோயின. அதற்கு முன்பு ‘தியாக பூமி’க்கு அரசு விதித்த தடையால் சுப்ரமணியத்துக்கு நஷ்டம், அவரின் இந்திப் படம் ஏற்படுத்திய நஷ்டம், இப்போது இந்தத் தீ விபத்து என்று எல்லாம் ஒன்றுசேர்ந்தன. ஸ்டுடியோவை ஏலத்துக்கு விடும் நிலை. தன் ஸ்டுடியோவை ஏலத்தில் எடுத்து, படத் தயாரிப்பிலும் ஈடுபடும்படி வாசனை சுப்ரமணியம் ஊக்கப்படுத்தினார். முதலில் தயங்கிய வாசன் பின்னர் சம்மதித்தார்.

ஏலத்தன்று ஐந்து உறைகள் இருந்தன. ரூ.70,000 ரூ. 82,000; ரூ. 75,000, ரூ. 80,000 என்று நான்கு உறைகளைப் பிரித்துப் பார்த்தாயிற்று. கடைசி உறையைப் பிரித்து, அதில் உள்ள தொகையைப் பார்த்ததும் அதிகாரிக்கே சிரிப்பு வந்துவிட்டது. காரணம், அதில் விநோதமாகக் குறித்திருந்த எண்பத்தாறாயிரத்து நானூற்று இருபத்தேழு ரூபாய், பதினோரு அணா, ஒன்பது பைசா என்ற தொகை.

அதிக விலை குறித்துக் கடைசியாக எடுக்கப்பட்ட உறையின் உரிமையாளர் வாசனுக்கே ஸ்டுடியோ கொடுக்கப்பட்டது. வாசன் அதற்கு, ‘மூவிலேண்ட்- ஜெமினி ஸ்டுடியோ’ என்று பெயர் சூட்டி , ராஜா சர் முத்தையா செட்டியாரைக் கொண்டு தொடக்க விழா நடத்தினார். வாசனிடம் ஸ்டுடியோ வந்தது 1941-ல், 1969-ல் இயற்கை எய்தும் வரை 28 வருடங்கள் ஓய்வில்லாமல் உழைத்தார் வாசன்.

‘நந்தனார்’, ‘ஒளவையார்’, ‘மங்கம்மா சபதம்’, ‘சந்திர லேகா’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘இரும்புத்திரை’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, எம்ஜிஆரின் நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ என்று பல வெற்றிப் படங்களைத் தயாரித்ததோடு மட்டுமல்லாமல், அகில இந்திய அளவி லும் புகழ்பெற்றார். தமிழில்: 28, தெலுங்கில்: 19, இந்தியில்: 24, பிறமொழிகளில்: 7 என்று மொத்தம் 36 வருடங்களில் ஜெமினி தயாரித்து வெளியிட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை 78.

பிரம்மாண்ட சந்திரலேகா

அந்தக் காலகட்டத்தில் ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிப்பதற்கு ஆகக்கூடிய செலவு ரூ.2 லட்சம்தான். ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ‘சந்திரலேகா’ படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். ரூ.30 லட்சத்துக்கு பட்ஜெட் போடப்பட்டது. அந்தப் படத்துக்காக காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரி வரை அலைந்து படத்தில் ஒரு சர்க்கஸ் குழுவை ஒப்பந்தம் செய்தார்கள். இந்த சர்க்கஸ் கம்பெனி பின்னாளில் ‘ஜெமினி சர்க்கஸ்’ ஆனது. முதலில் ஆச்சார்யா என்பவர்தான் படத்தை இயக்கினார். பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக  பிரிந்தார். பிறகு, வாசனே படத்தை இயக்கினார். படத்தில் வரும் ‘டிரம் டான்ஸ்’ இன்று வரையில் பிரபலம்.

இந்தப் படத் தயாரிப்பின்போது வாசன் பல சோதனைகளைச் சந்தித்தார். ஸ்டுடியோ, உட்பட தன் சொத்துக்களையெல்லாம் அடமானம் வைத்தார் வாசன். அடமானத்துக்கான வட்டித் தொகை கிடுகிடுவென ஏறிக்கொண்டிருந்தது. இதுபற்றி வாசனே பின்னாளில் இப்படிக் குறிப்பிட்டார். “சந்திரலேகா படத்தைத் தயாரிக்க நான் திட்டமிட்டதற்கு மேலாகப் பணம் செலவாகிக்கொண்டிருந்தது. கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவுசெய்த பின்னர், ஜெமினி உட்பட என் சொத்து அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டேன். அப்படியும் படம் முடிந்தபாடில்லை. கடனால் ஏற்பட்ட கவலையைவிட, அப்பெருந்தொகைக்குக் கட்டிய வட்டியை நினைக்கும்போது நான் சற்று தளர்ந்துவிட்டேன். ‘இத்துடன் வாசன் போய்விடுவார். இவ்வளவு பெரிய கடனிலிருந்து அவர் மீண்டு வரவே முடியாது’ என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்தச் செய்தியை ‘தி இந்து’ அதிபர் சீனுவாச அய்யங்கார் கேள்விப்பட்டு, திடீரென்று ஒரு நாள் என்னை அழைத்தார். ‘சந்திரலேகா’ படத்துக்காக, பெருந்தொகை கடன்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். உண்மைதானா?’ என்று கேட்டார்.

‘உண்மைதான்’ என்றேன்.

‘சந்திரலேகா மூலம் எவ்வ
ளவு வசூலாகும் என்று எதிர்பார்க்கிறாய்?’

‘தமிழ்நாட்டில் மட்டும் 60 லட்சம் ரூபாய் வசூலாகும். பிறகு, இந்தி மார்க்கெட் இருக்கிறது. கோடிக்கணக்கில் வரும் என்று நம்பிக்கை இருக்கிறது’ என்றார் வாசன்.

கூடவே, ‘கொடுக்கும் வட்டியை நினைத்து அச்சப்படு கிறேனே தவிர, கடனை நினைத்து அல்ல’ என்றார் வாசன்.

அடுத்த நிமிடமே வாசனின் பணப் பிரச்சினையைத் தீர்த்துவைத்தார் சீனுவாச அய்யங்கார். ‘நான் இப்போது உனக்குச் செய்யும் உபகாரத்துக்கு, நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்றார்.

‘என்ன?’ - இது வாசன்.

‘உன்னுடைய படிப்பு, அறிவு, ஆற்றல், துணிவு, உழைப்பு, பொய்-புரட்டு இல்லாத புனித வாழ்க்கை  இத்தனையையும் கேள்விப்பட்டுத்தான் உனக்கு இந்தப் பண உதவியைச் செய்கிறேன். உன்னைப் போல சகல சாமர்த்தியங்களும் ஒருவனுக்கு இருந்து, பணம் ஒன்று இல்லாத காரணத்தால் அவனுடைய அறிவும் ஆற்றலும் பயனற்றதாகிவிடும் என்று உனக்குத் தெரிந்தால், இப்போது நான் உனக்குச் செய்த உதவியைப் போல் நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

உதவிக்கரம்

‘இந்து சீனுவாச அய்யங்காருக்குக் கொடுத்த வாக்குறுதியை பின்னாளில் நிறைவேற்றினார். இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சிவாஜி, பத்மினியை வைத்துப் படமெடுத்துக்கொண்டிருந்தார். பணத் தட்டுப் பாடு ஏற்பட்டது. அறிமுகம் இல்லாத அவரை அழைத்து 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். அப்போதுதான் கே.எஸ்.ஜியிடம் சீனுவாச அய்யங்காருக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிச் சொன்னார் வாசன்.

1948, ஏப்ரல் 9 அன்று ‘சந்திரலேகா’ வெளியானது. அந்தக் காலத்தில் ஒரு புதிய படம் பத்து ஊர்களில்தான் திரையிடப்படும். அங்கு ஓடி முடிந்த பிறகு, அடுத்த ஊருக்குப் பெட்டி போகும்.

‘சந்திரலேகா’ ஒரே சமயம் 120 ஊர்களில் திரையிடப்பட்டது. 18,364 அடி நீளமுள்ள இந்தப் படம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. தமிழ் ‘சந்திரலேகா’ வசூலைக் குவித்தது. ஆனால், பட்ட நஷ்டத்தில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டது. இந்தி ‘சந்திரலேகா’ கோடி கோடியாகக் குவித்தது. வாசனைக் கண்டு அகில இந்தியாவே வியந்தது.

இப்படி, இறவாப் புகழும் சாதனையும் படைத்த உழைப்பு மேதைதான் எஸ்.எஸ்.வாசன்.

- சுதாங்கன், மூத்த பத்திரிகையாளர் | தொடர்புக்கு: sudhangan@gmail.com

No comments:

Post a Comment