Sunday, 28 August 2016

பிரிட்டிஷ் இந்தியா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்


பிரிட்டிஷ் இந்தியா பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 






ராபர்ட் கிளைவ் பற்றிய சில தகவல்கள்:-
















🌷 வங்காளத்தில் முதல் கவர்னர்

🌷 வங்காளத்தில் இரண்டு முறை கவர்னராக இருந்தவர் (1757-1760) மற்றும் (1765-1767)
🌷 'இந்தியாவை வென்றவர்' என்று அழைக்கப்பட்டார் 













🌷 ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்பட்டார் 















🌷 வங்காளத்தில் இரட்டை ஆட்சிமுறை (Dwal Government of Bengal System) கொண்டுவந்தவர்












🌷 கம்பனியில் எழுத்தராக இந்தியாவுக்கு வந்து ராணுவ பணியில் இணைந்து பின் கவர்னராக உயர்ந்தவர்

🌷 இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடித்தளமிட்டவர்.














🌷 1774 இங்கிலாந்து திரும்பிய பின் தற்கொலை செய்து கொண்டார்.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


 காரன் வாலிஸ் பிரபு (1786-1793) பற்றிய சில தகவல்கள்:-
அமெரிக்க சுதந்திர போரில் தோல்வி -
சரண்டர் -1781 அக்டோபர் 19 
















🌹 நிலையான நிலவரி திட்டம் (1793) கொண்டுவந்தவர்
🌹 நிலையான நிலவரி திட்டத்தின் வேறு பெயர் ஜமீன்தாரி முறை
🌹 ஜார்ஜ் பார்லோ என்பவர் உதவியுடன் ஒரு முழுமையான சட்டத் தொகுப்பு உருவாக்கினார்

🌹 ஜார்ஜ் பார்லோ சட்டத் தொகுப்பு  மாண்டெஸ் கியூ வின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது
🌹 மூன்றாம் மைசூர் போர் முடிவில் திப்பு சுல்தானோடு ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை செய்து கொண்டார்

🌹  மாவட்ட நீதிபதி பதவியை உருவாக்கினார்










🌹 தற்கால இந்திய ஆட்சி பணியின் தந்தை என போற்றப்பட்டார்

















🌹 காவல்துறை சீர்திருத்தம் ஒவ்வொரு மாவட்டமும் 'தாணா' என்ற காவல் சரகமாக பிரிக்கப்பட்டது

🌹 ஒவ்வொரு 'தாணா' வும் தரோகா எனப்பட்ட இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


 வெல்லெஸ்லி பிரபு (1798-1805) பற்றிய சில தகவல்கள்:-

🌸 இவரது முழு பெயர் ரிச்சர்ட் கோலி  வெல்லெஸ்லி
🌸 'வங்கப்புலி' என்று தன்னை அழைத்துக் கொண்டார்

🌸 இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு என்ற நிலையை பிரிட்டிஷ் இந்திய பேரரசு என மாற்றினார்
🌸 துணை படைத்திட்டத்தை (1798) முதன் முதலில் ஹைதராபாத்தில் அறிமுகபடுத்தினார்
🌸 இவர் காலத்தில் ஏற்பட்ட முக்கிய போர்கள் நான்காம் மைசூர் போர்(1799),  
இரண்டாம் மராட்டிய போர் (1803-1805)

🌸 இவரின் துணைப்படை திட்டத்தின் மகுடம் என கருதப்படுவது, பசீல் உடன்படிக்கை (1802)
🌸 பசீல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர் பேன்வா இரண்டாம் பாஜிராவ்

🌸 இவர் போன்ஸ்லேவுடன் செய்து கொண்ட துணைப்படை ஒப்பந்தம் தியோகன் உடன்படிக்கை
🌸 வெல்லெஸ்லி இந்தியாவுடன் செய்து கொண்ட துணைப்படை ஒப்பந்தம் சுர்ஜி. அர்ஜுன்கான் உடன்படிக்கை










🌸 'ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவின் அக்பர்' என அழைக்கப்பட்டார்.










🌸 ஆங்கில ஆட்சியை விரிவுபடுத்த கையாண்ட முறைகள் மூன்று அவை

1. துணைப்படை திட்டம்
2. போரின் மூலம் நாடுகளைக் கைப்பற்றுதல்
3. நாடுகளை இணைத்தல்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


 வங்காளத்தின் முதன் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772-1785) பற்றிய சில தகவல்கள்:-

🌷 வங்காளத்தின் முதன் தலைமை ஆளுநர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
🌷 ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வந்தவர் - 1773


🌷 கலெக்டர் பதவி உருவாக்கியவர் 
🌷 முர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு கருவூலம் மாற்றப்பட்டது








🌷 1772ல் கல்கத்தா வங்காளத்தின் தலைநகரமாகியது
🌷 உரிமையில் மேல் முறையீடு நீதிமன்றம் சதர் திவானி அதலத் எனப்பட்டது

🌷 குற்றவியல் மேல் முறையீடு நீதிமன்றம் சதர் நிசாமத் அதலத் எனப்பட்டது
🌷 இந்திய மற்றும் அயல் நாட்டுப் பொருட்கள் அனைத்திற்கும் 2.5 % ஒரே சீரான சுங்க வரி வசூலிக்கப்பட்டது








🌷 வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் 'இந்திய சட்டங்களின் தொகுப்பு' 'ஹால்ஹெட்' என்பவரால் உருவாக்கப்பட்டது

🌷 கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது
🌷 கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீ‌திப‌தி மூன்று துணை நீதிபதிகள் இருந்தனர்.
🌷 முதல் தலைமை நீ‌திப‌தி சர் எலிஜா இம்போ
🌷  வில்லியம் ஜோன்சுடன் இணைந்து 1784ல் வங்காள ஆசிய கழகத்தை (Asiatic Society of Bengal) தொற்றிவித்தார்
🌷 சார்லஸ் வில்கின்ஸ் என்பவர் முதல் முறையாக கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு முன்னுரை எழுதியவர் வாரன் ஹேஸ்டிங்ஸ்
🌷 1787 வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது தேச துரோக குற்றச்சாட்டு (impeachment) போடப்பட்டது.

🌷 தேச துரோக குற்றச்சாட்களில் முக்கியமானவை
1. நந்தகுமார் வழக்கு
2. ரோகில்லா போர்
3. செயித்சிங் பதவியிறக்கம்
4. அயோத்தி பேகம்கள் விவகாரம்
🌷  வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது போடப்பட்ட தேச துரோக குற்றங்கள் - 22
🌷 வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தியவர் - எட்மண்ட் பர்க் 
🌷 7 ஆண்களுக்கு விசாரணைக்கு பிறகு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்


 ரிப்பன் பிரபு (1880 - 1884) பற்றிய சில தகவல்கள்:-

🌵 இவர் ஆச்சியில் முக்கிய நிகழ்வுகள்
1. தலசுயாட்சி 1882
2. ஹன்டர் கல்விக்குழு 1882
3. முதல் தொழிற்சாலை சட்டம் 1881
4. முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881

5. இல்பர்ட் மசோதா
🌵 தலசுயாட்சி (பஞ்சாயத்து முறை) சட்டம் 1882ல் நிறைவேற்றப்பட்டது.
🌵 1882 ஹன்டர் கல்வி குழு அமைக்கப்பட்டது. இது தொடக்க கல்வி மேம்படுத்த அறிவுறுத்தியது.
🌵 1881 தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்டது. இதில் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொழிற்சாலையில் நியமிக்க தடை விதிக்கப்பட்டது.
🌵 1881 முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
🌵 ரிப்பன் பிரபு அறிவித்த வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் நீக்கப்பட்டது
🌵 ஐரோப்பிய குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் விசாரிக்க வகை செய்யப்பட்ட சட்டம் இல்பர்ட் மசோதா 1883, பின்னர் இம் மசோதா திரும்ப பெற பட்டது.

🌵 இல்பர்ட் மசோதா சர்ச்சை இந்திய தேசியம் வளர உதவியது.
🌵 இல்பர்ட் மசோதா நிகழ்வில் உடனடி நிகழ்வாக 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் தொற்றிவிக்கப்பட்டது.

[ லிட்டன் பிரபு (1876-1880) பற்றிய சில தகவல்கள்:-

🌾 தலைகீழ் எண்ணமுடைய வைசிராய் (Viceroy of Reverse Character) என்று அழைக்கப்படுவர்
🌾 இந்கிலாந்து ராணி விக்டோரியாவிற்கு கெய்சர்-இ-ஹிந்த் (Kaiser-i-Hind)  பட்டம் வழங்க 1877ல் டெல்லி தர்பாரை நடத்தியவர்.
🌾 1878 படைக்கல சட்டம் என்ற ஆயுதச் சட்டம் (Arms Act) நிறைவேற்றப்பட்டது.
🌾 1878 வட்டார மொழி பத்திரிகை சட்டம் (Vernacular Press Act) நிறைவேற்றப்பட்டது.
🌾 1876 -1878 இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.
🌾 1878 - 1880ல் பஞ்ச நிவாரணக்குழு சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி தலைமையில் அமைக்கப்பட்டது.
🌾 இரண்டாம் ஆப்கானியப் போர் (1878 - 80) இவர் காலத்தில் நடைபெற்றது.
🌾 இரண்டாம் ஆப்கானியப் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை காண்டமக் உடன்படிக்கை.
🌾 1880 லிட்டன் பிரபு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
🌾 லிட்டன் பிரபு பதவி நீக்கம் செய்ய காரணம் ஆப்கானியர்கள் படுகொலை.

 வில்லியம் பெண்டிங் பிரபு (1828-1835) பற்றிய சில தகவல்கள்:-
🌳 1803 ஆம் ஆண்டு சென்னை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
🌳 1806 ஆம் ஆண்டு வேலூ‌ர் கலகம் காரணமாக திருப்பியழைக்கப்பட்டார்.
🌳 1828 தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார்
🌳 இவர் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;

1. சதி ஒழிப்பு 1829
2. தக்கர் ஒழிப்பு 1830
3. பெண் சிசுக் கொலை தடுத்தல் 
4. 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
5. 1833 ஆம் ஆண்டு மகல்வாரி முறை அறிமுகம்
6. 1835 ஆங்கில கல்வி அறிமுகம்.
🌳 டிசம்பர் 4, 1829 'விதிமுறை 17' சட்டத்தின் படி சதி ஒழிக்கப்பட்டது. 
🌳 சதி ஒழிப்பிற்கு உறுதுணையாக இருந்தவர், ராஜாராம் மோகன்ராய்
🌳 சதி ஒழிப்பு 1830 சென்னை, பம்பாய் மகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது
🌳 தக்கர்களை ஒழிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர் 'சர் வில்லியம்' சீலிமேன்
🌳 முதல் சட்ட உறுப்பினர் டி.பி. மெக்காலே.
🌳 இந்திய தண்டனைச் சட்டம் மெக்காலேவால் எழுதப்பட்டது
🌳 மெக்காலே கல்வி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு பிப்ரவரி 22, 1833
🌳 1835 மார்ச் 7 முதல் ஆங்கிலம் இந்தியாவின் பயிற்சி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் ஆக்கப்பட்டது.

🌳 இந்தியாவின் முதல் மருத்துவக் கல்லூரி ஜனவரி 28, 1835 கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது.
🌳 இந்தியாவின் இரண்டாவது மருத்துவக் கல்லூரி பிப்ரவரி 2, 1835 சென்னையில் நிறுவப்பட்டது.
🌳 1833 மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
🌳 மகல் என்றால் கிராமம். கிராமமே அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் முறை மகல்(வாரி) முறை.
🌳 இராணுத்துறையில், இரட்டைப்படி பேட்டா முறையை ரத்து செய்தார்


 டல்ஹவுசி பிரபு (1848-1856) பற்றிய சில தகவல்கள்:-

🌱 டல்ஹவுசி முக்கிய நிகழ்வுகள் 
1. அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse)

2. இரண்டாம் சீக்கிய போர் 1849
3. இரண்டாம் பர்மியப் போர் 1852
4. ரயில் பாதை அறிமுகம் 1853

5. தபால், தந்தி அறிமுகம்

6. சார்லஸ் வுட் கல்வி அறிக்கை 1854
7. பொதுப்பணித்துறை
🌱 அவகாசியிலிக் கொள்கைப்படி வாரிசு இல்லாத அரசர்களின் நாடுகள் பிரிட்டிஷ் வசமாயின
🌱 அவகாசியிலிக் கொள்கைப்படி பிடிக்கப்பட்ட நாடுகள் சகாரா (1848), ஜான்சி, நாக்பூர் (1854)
🌱 அவகாசியிலிக் கொள்கைப்படி இறுதியில் பிடிக்கப்பட்ட நாடு அயோத்தி

🌱 1849 இரண்டாம் சீக்கியப்போர் முடிவில் பஞ்சாப் இணைக்கப்பட்டது.
🌱 பஞ்சாப் ஆணையராக நியமனம் செய்தவர் லாரன்ஸ்
🌱 1852 இரண்டாம் பர்மியப் போர் முடிவில், பர்மா இணைக்கப்பட்டது
🌱 பர்மா ஆணையராக நியமனம் செய்தவர் மேஜர் ஆர்தர் பைரே 
🌱 இந்தியாவின் முதல் இரும்பு பாதை 1853 பம்பாயிலிருந்து தாணு வரை (34 கி.மீ.) போடப்பட்டது
🌱 இந்தியாவின் இரண்டாவது இரும்பு பாதை 1854 ஹௌராவிலிருந்து ராணிக் கஞ்ச் வரை அமைக்கப்பட்டது
🌱 1856 சென்னை - அரக்கோணம் வரை அமைக்கப்பட்டது
🌱 1853 கல்கத்தா முதல் ஆக்ரா வரை தந்தி வசதி அமைக்கப்பட்டது.
🌱 1852 ஆம் ஆண்டு 'ஓ ஷாகன்னசே' என்பவர் தந்தி துறையின் முக்கிய கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டது.
🌱 1854 அரை அணா அஞ்சல் அட்டை அறிமுகம் செய்யப்பட்டது.
🌱 இந்தியாவின் முதல் அஞ்சல் தலை 1852ல் கராச்சியில் வெளியிடப்பட்டது.
🌱 1854 ஆம் ஆண்டு சார்லஸ் வுட் கல்வி அறிக்கை 'Woods Dispatch' வெளியிடப்பட்டது.
🌱 சிம்லா கோடைக்கால தலைநகரமாக்கப்பட்டது.
🌱 ரூர்க்கியில் 1847 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது.
🌱 1856ல் விதவை மறுமணம் சட்டம் (Widow Remarriage Act 1856) இயற்றப்பட்டது.
🌱 விதவை மறுமணம் சட்டம் இயற்ற உறுதுணையாக இருந்தவர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
🌱 பொதுப்பணித்துறை ஆரம்பிக்கப்பட்டது.
🌱 கராச்சி, பம்பாய், கல்கத்தா துறைமுகம் மேம்படுத்தப்பட்டன.
🌱 1853ல் ICS  தேர்வு துவக்கப்பட்டது.

கானிங் பிரபு (1856-1862)  பற்றிய சில தகவல்கள்:-


🌴 ஆங்கில இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்.
🌴 முதல் வைசிராய்
🌴 வைசிராய் என்பதன் பொருள் அரசப் பிரதிநிதி

🌴 1857 சிப்பாய் கலகம் இவர் காலத்தில் நடைபெற்றது.
🌴 1858 நவம்பர் 1ல் பிரிட்டிஷ் நேரடி ஆட்சிக்கு வந்தது.
🌴 அவகாசியிலிக் கொள்கை திரும்ப பெறப்பட்டது.

🌴  1857ல் சென்னை, மும்பை, கொல்கத்தாவில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
🌴 1861 இந்திய கவுன்சில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.





ஹேஸ்டிங்ஸ் பிரபு (1813-1823) பற்றிய சில தகவல்கள்:-

🍃 இவர் காலத்தில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள் 
1. நேபாளப் போர் (கூர்க்காவினருக்கு எதிரான போர் 1814-1816)  
2. மூன்றாம் மராட்டிய போர் (1817-1818)
3. பின்டாரிகளை ஒடுக்குதல்

🍃 நேபாளப் போர் மார்ச் 1816ல் சகௌலி உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
🍃 கூர்க்கா போரின் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ்-க்கு  மார்குயிஸ் பட்டம் வழங்கப்பட்டது.
🍃 மூன்றாம் மராட்டிய போர் 1818 மாண்டசோர் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.

🍃 பிண்டாரிகள் ஊதியமின்றி ராணுவத்தில் பணியாற்றுவர், அதற்கு ஈடாக கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
🍃 பிண்டாரிகள் முக்கிய தலைவர்கள் வாசில் முகம்மது, சிட்டு, சுரீம்கான்
🍃 1818 பிண்டாரிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்.
🍃 1816ல் சீராம்பூரில் மார்ஸ்மேன் என்பவரால், 'சமாச்சன் தர்பான்' இதழ் தோற்றிவகக்கப்பட்டது.
🍃 சமாச்சன் தர்பான் என்பது வார இதழ்

🍃 சமாச்சன் தர்பான் வங்காள மொழியில் தொடக்கப்பட்டது.
🍃 1817 கல்கத்தாவில் இந்து கல்லூரி தொடக்கப்பட்டது.

இரண்டாம் ஹார்டிஞ்ச் பிரபு (1910 - 1916) பற்றிய சில தகவல்கள்:-

🍄 வங்கப் பிரிவினை ரத்து செய்யப்பட்டது 1911
🍄 கல்கத்தா வில் இருந்து டெல்லி இந்திய தலைநகரம் ஆனது 1911
🍄 காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார் 1915 ஜனவரி, 9
🍄 அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule Movement) தொடங்கப் போவதாக அறிவித்தார்.
🍄 டிசம்பர் 23, 1912 ஹார்டிஞ்ச் பிரபு மீது வெடிகுண்டு வீசப்பட்டது.
[1/3, 10:09 AM] David: கர்ஸன் பிரபு (1899 - 1905) பற்றிய சில தகவல்கள்:-

🍀 இவர் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. இந்திய பல்கலைக்கழக சட்டம் 1904
2. காவல் துறை சீர்திருத்தம்
3. கல்கத்தா மாநகராட்சி சட்டம் 1899
4. தொல்பொருள் சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் 1904
5. வங்கப்பிரிவினை 1905
🍀 1902ல் தாமஸ் ராலே கல்விக்குழு பரிந்துரைப்படி 1904ல் இந்திய பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்டது.
🍀 சர் ஆண்ரூ பிரேசர் தலைமையில் போலீஸ் கமிட்டி அமைக்கப்பட்டது.
🍀 ராணுவத்தை சீரமைக்க 'கிச்னர் பிரபு' பொறுப்பில் விடப்பட்டது.
🍀 1899 கல்கத்தா மாநகராட்சி சட்டம் இயற்றப்பட்டது.
🍀 1904 புராதானச் சின்ன பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
🍀 1902ல் தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரலாக சர் ஜான் மார்ஷல் நியமிக்கப்பட்டார்.
🍀 1899 காகித நாணய சட்டம் (Indian Coinage and Paper Currency Act) இயற்றப்பட்டது.
🍀 வங்கப் பிரிவினை அக்டோபர் 16, 1905
🍀 வங்கப் பிரிவினை திட்டத்தை உருவாக்கியவர் வில்லியம் வார்.
🍀 கூட்டுறவு சங்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
🍀 இளைஞர்களுக்கு ராணுவப்பயிற்சி அளிக்க பேரரசு இளைஞர் படை (Imperial Cadet Carps) நிறுவப்பட்டது.
🍀 1901 சர் கோலின் ஸ்கார்ட் மானெரிஃப் தலைமையில் பாசன கமிஷன் அமைக்கப்பட்டது.
🍀  1904 பூசா விவசாய ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது.
🍀 இந்திய திட்ட நேரம் (IST) அறிமுகப்படுத்தப்பட்டது.
 மிண்டோ பிரபு (1905 - 1910) பற்றிய சில தகவல்கள்:-

🍂 1905 - வங்கப் பிரிவினை காரணமாக சுதேசி இயக்கம் ஏற்பட்டது.
🍂 அரசியலில் அமைதியற்ற நிலை நிலவியது.
🍂 1906 - முஸ்லிம் லீக் தோற்றம்.
🍂 1907 - சூரத் காங்கிரஸ் பிளவு.
🍂 புரட்சிகளை ஒடுக்க பல சட்டங்கள் இயற்றப்பட்டன.
🍂 லாலா லஜபதிராய் மற்றும் அஜித்சிங் (மே 1907), பாலகங்காதர திலகர் (1908) ஆகியோர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
🍂 1909 - மிண்டோ - மார்லி சீர்திருத்த சட்டம் இயற்றப்பட்டது.
🍂 மிண்டோ இந்திய அரசு பிரதிநிதி
🍂 மார்லி இந்திய அரசுக்கான ஆங்கில பிரதிநிதி.

 செம்ஸ்போர்டு பிரபு (1916 - 1921) பற்றிய சில தகவல்கள்:-

🍁 ஆகஸ்ட் பிரகடனம் 1917, இதன்படி இந்தியர்களுக்கு படிப்படியாக பொறுப்பாட்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
🍁 இந்திய அரசாங்கம் சட்டம் 1919, (மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம்) நிறைவேற்றப்பட்டது.
🍁 இந்திய பிரதிநிதி செம்ஸ்போர்டு
🍁 இங்கிலாந்தில் இந்திய அரசுக்கான பிரதிநிதி மாண்டேகு
🍁 ரௌலட் சட்டம் - 1919
🍁 ஜாலியன் வாலாபாக் படுகொலை ஏப்ரல் 13, 1919
🍁 1919 ஹன்டர் குழு  ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விசாரணை செய்ய அமைக்கப்பட்டது.

 இர்வின் பிரபு (1926 - 1931) பற்றிய சில தகவல்கள்:-

💃 1927 - சைமன் குழு நியமிக்கப்பட்டது.
💃 1928 - சைமன் குழு இந்தியா வருகை.
💃 1929 - லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுதந்திரமே குறிக்கோள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
💃 1930 - சட்ட மறுப்பு இயக்கம் (உப்பு சத்திய கிரக இயக்கம்)
💃 1930 முதல் வட்ட மேஜை மாநாடு
💃  காந்தி இர்வின் ஒப்பந்தம் மார்ச் 5, 1931.
💃 சிறையில் 64 நாட்கள் உண்ணாவிரதமிருந்து ஜடின்தாஸ் உயிர் நீத்தார் (1929)
💃 தண்டி யாத்திரை மார்ச் 12, 1930.


 வெலிங்டன் பிரபு (1931 - 1936) பற்றிய சில தகவல்கள்:-

🌼 1931 இரண்டாம் வட்ட மேஜை மாநாடு லண்டனில் நடைபெற்றது.
🌼 1932 மூன்றாம் வட்ட மேஜை மாநாடு லண்டனில் நடைபெற்றது.
🌼 மூன்று வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் பி. ஆர். அம்பேத்கர்
🌼  வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் ஆகஸ்ட் 16, 1932ல் அறிவிக்கப்பட்டது.
🌼 வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் அறிவித்தவர் ராம்சே மக்டொனால்ட்.
🌼  வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் எதிர்த்து காந்தி எரவாடா சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.
🌼 பூனா ஒப்பந்தம் 1932ல் கையெழுத்து ஆனது.
🌼 1935 இந்திய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
🌼 இந்திய அரசு சட்டம் படி மாகாணத்தில் இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டு சுயாட்சி வழங்கப்பட்டது.


 லின்லித்தோ பிரபு (1936 - 1944) பற்றிய சில தகவல்கள்:-

🌿 1935 வருட  இந்திய அரசாங்கச் சட்டம் மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
🌿 மொத்தமிருந்த 11 மாகாணங்களில் 8ல் காங்கிரஸ் மந்திரி சபை அமைத்தது.
🌿 1939ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து, காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன.
🌿  அந்த நாளை முஸ்லிம் லீக் விமோசன தினமாக (டிசம்பர் 22, 1939) Deliverance day கொண்டாடியது.
🌿  1940 ஆகஸ்ட் நன்கொடை (August Offer) அறிவிக்கப்பட்டது.
🌿 1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்திய வருகை.
🌿 வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகஸ்ட் 8, 1942ல் தொடங்கப்பட்டது.
🌿 மே, 1940ல் வின்சென்ட் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதமரானார்.

 ரீடிங் பிரபு (1921 - 1926) பற்றிய ஒரு சில தகவல்கள்:-

🌻 ரௌலட் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
🌻  ஒத்துழையாமை இயக்கம் ஒடுக்கப்பட்டது.
🌻 வேல்ஸ் இளவரசர் நவம்பர் 1921 இந்திய வந்தார்.
🌻 வேல்ஸ் இளவரசர் நவம்பர் 1922 தமிழகம் வந்தார்.
🌻 1921 மாப்ளா கலகம் கேரளாவில் நடைபெற்றது.
🌻 கக்கோரி ரயில் கொள்ளை ஆகஸ்ட் 9, 1925ல் நடைபெற்றது.

No comments:

Post a Comment