ரியோ ஒலிம்பிக் 2016 போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ரெபிசாஜ் சுற்றில், சாக்ஷி மாலிக் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் உடன் நடந்த இப்போட்டியில் 12-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி மாலிக் , வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.
கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற சாக்ஷி மாலிக் , வெண்கலப் பதக்கம் பெற்றார்.
மல்யுத்த வீரங்கனை சாக்ஷி மாலிக் அரியான மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வெண்கலம் வென்றதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது.
Awards and recognition[edit]
- For the bronze medal at the 2016 Rio Olympics
- ₹2 crore (US$300,000) from the Government of Haryana, in addition to a state land grant.
- ₹50 lakh (US$74,000) from the Indian Railways, as its employee.
- ₹20 lakh (US$30,000) from the Indian Olympic Association.
- ₹15 lakh (US$22,000) from the JSW Group
- ₹1.01 lakh (US$1,500) from Salman Khan[12]
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீராங்கனை சாக்ஷிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், இந்தியாவை பெருமைகொள்ள வைத்துள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவின் மகள் சாக்ஷி என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.
பெண் ஒருவரால் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். இதேபோல், சக மல்யுத்த வீரர் சுஷில் குமார், குத்துச்சண்டை வீரர் மேரி கோம், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோரும் சாக்ஷி மாலிக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவ்விதமாக சாதனை மங்கைக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சட்டீஸ்கர்: ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்துள்ளார். இந்த வெற்றியை அவரது குடும்பத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சாக்ஷியின் வீட்டிற்கு உறவினர்கள் படையெடுத்து வருவதால் அவர்களின் வீடு திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
No comments:
Post a Comment