Sunday, 30 January 2022

M.R.RADHA EXTRAORDINARY IN ACTING

 

M.R.RADHA EXTRAORDINARY IN ACTING


திருச்சி -  கரகரப்பாய் ஒரு கலகக் குரல் - நடிகவேள் எம்.ஆர்.ராதா!

கவிஞர் நந்தலாலா & தே.தீட்ஷித்


பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்...” இது காட்சிக்கான பாட்டு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். நடிகவேள் ராதா காலமானபிறகு நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சிவாஜி சொன்னார், ”ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி செய்துவிடுவார்.” இது ஒரு மகா கலைஞனின் எடைக்கல் வார்த்தை.

எம்.ஆர்.ராதாஎம்.ஆர்.ராதா

'பாகப்பிரிவினை' படத்தை இந்தியில் எடுத்தபோது சுனில்தத் சொன்னாராம், "சிவாஜியின் பாத்திரத்தை திலீப்குமார் செய்கிறார். ஆனால் ராதாவின் 'சிங்கப்பூர் சிங்காரம்' பாத்திரத்தைச் செய்ய யாராலும் முடியாது" என்று. பாகப்பிரிவினையைத் தெலுங்கில் எடுத்தபோது இதையேதான் என்.டி.ஆரும் சொன்னார். ராதாபோல் செய்ய தெலுங்கில் ஆள் இல்லை என்று. அந்த ஏற்றமும் இறக்கமும் திடீரெனக் கீழே இறங்கிக் கெக்கலி கொட்டும் மாடுலேஷனும், அந்தக் குரலின் மாயவித்தைகளை முகத்திலும் காட்டத் தெரிந்த பாவனைகளும் யாரிடமும் கற்காத ராதாவின் சொந்தக் கண்டுபிடிப்புகள். ஒரே காட்சியில் மிகை நடிப்பு, யதார்த்த நடிப்பு, கீழ் நடிப்பு என்று எல்லா நடிப்பு வகைகளையும் காட்டிக்கொண்டே எல்லாவற்றையும் கலந்த ஒரு புதுவகை நடிப்பையும் மக்கள் ரசிக்கும்படி வெளிப்படுத்தியதால்தான் அவரை 'நடிகவேள்' என்றது தமிழ்நாடு. கவிதையை ஜனநாயகப்படுத்திய புதுக்கவிதை போல, ஓவியத்தில் பார்க்கும்போதெல்லாம் புதிய அனுபவம் தந்த நவீன ஓவியம்போல, நடிப்பில் பல மரபுகளை உடைத்த 'நவீன நடிப்பு' அவருடையது. அதனால்தான் எத்தனைமுறை பார்த்தாலும் ராதா நடிப்பு சலிப்பதேயில்லை. சினிமாவில் எல்லா நடிகர்களும் சுத்தத் தமிழ் பேசிய காலத்திலேயே ராதா மட்டும்தான் கொச்சைத் தமிழ் பேசுவார். அந்தக் கொச்சைத் தமிழ் மக்களைச் சுத்தமாக்கியதுதான் வரலாறு.

பிம்பங்களை உருவாக்கும் நாடகத்திலும் சினிமாவிலும் இருந்துகொண்டே எல்லா பிம்பங்களையும் உடைத்தவர் எம்.ஆர்.ராதா. அதில் முக்கியமாக தன்மேல் உருவான பிம்பத்தையும் அவரே உடைத்தார். அவர் வாழ்ந்த வீடு திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இருந்தது. ராதா காலனி என்று மக்கள் அழைத்தனர். நாங்கள் அதை ஆசையோடு பார்த்த நாள்கள் உண்டு. அதை இப்போது இடித்து பெரிய அப்பார்ட்மென்ட் கட்டிவிட்டார்கள். அந்த வீட்டின் சாக்கடையை அவரே தள்ளுவாராம். "என்னண்ணே, நீங்க பெரிய ஆக்டர், நீங்கபோய் சாக்கடை தள்ளிகிட்டு’ என்று யாராவது கேட்டால், ’உன் வீட்டுச் சாக்கடையைத் தள்ளலையே, என் வீட்டுதைத்தானே தள்றேன். வேலையில என்னய்யா ஒஸ்தி மட்டம், எல்லாம் ஒண்ணுதான் போய்யா" என்று தன்மீது கட்டமைக்கப்பட்ட நடிகர் என்ற பிம்பத்தையும் அவரே உடைத்ததுதான் அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையின் சாரமாகத் தோன்றுகிறது.

அவருக்கும் திருச்சிக்குமான உறவு ஆழமானது. அவர் வாழ்ந்ததும் மறைந்ததும் திருச்சியில்தான். “காந்தா” என்ற கரகரத்த குரலை முதன்முதலில் கேட்ட ஊர் திருச்சி. ராதாவைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற 'ரத்தக்கண்ணீர்' நாடகம் 1949-ம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் திருச்சியில்தான் அரங்கேறியது. 3000 முறை மேடை கண்ட அந்த நாடகத்தைத் திருவாரூர் கே.தங்கராசு எழுதினார். சாகித்ய அகாடமியின் செயலாளராக நேருவால் அமர்த்தப்பட்ட பிரபாகர் மாச்வே ஒரு மராத்தியர். அவர் ரத்தக்கண்ணீர் பார்த்துவிட்டு, சிறந்த உலக மேடை நாடகங்களில் ரத்தக்கண்ணீர் ஒன்று என்றும் எம்.ஆர்.ராதா இந்திய வரலாற்றில் உள்ள முக்கியப் பெயர்களில் ஒன்று என்றும் சொன்னார். ரத்தக்கண்ணீர் நாடகத்தை காங்கிரஸ்காரரான பி.ஏ.பெருமாள் முதலியார் சினிமாவாக எடுத்தார். ராதா முதலியாரிடம் சில நிபந்தனைகள் விதித்தார். சினிமாவுக்காக நாடகம் நடத்துவதை விட முடியாது. நாடகம் முடிந்துதான் ஷூட்டிங் வைக்கணும். நாடகத்தின் உச்சக் காட்சியான தன் மனைவியை நண்பன் பாலுவுக்கு மணமுடிப்பதை மாற்றக்கூடாது. அடுத்ததுதான் அவரின் தனித்துவம், கே.பி.சுந்தராம்பாள்தான் அந்தக் காலத்தில் நந்தனாராக நடிக்க ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர். அதைவிட அதிகமாக ரூ.25,000 தரவேண்டும் என்றார் ராதா. பெருமாள் முதலியார் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார்.

ரத்தக்கண்ணீர் படத்தில்...

1954 தீபாவளிக்கு வந்த 'ரத்தக்கண்ணீர்' படம் சூப்பர் டூப்பர் ஹிட். மூட நம்பிக்கைகளை நகையாடிய படமது. சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் மக்கள் ஏற்பார்கள் என்பதன் சிறந்த உதாரணம் ரத்தக்கண்ணீர். இன்று தொலைக்காட்சிகளில் போட்டால்கூட 68 ஆண்டுகள் கழிந்தும் மக்கள் ரசித்து, ராதாவின் வசனங்களைப் பேசுகிறார்கள். அதுபோலவே ராதாவின் பெயரோடு ஒட்டி உறவாடும் 'நடிகவேள்' பட்டம் தரப்பட்டதும் திருச்சியில்தான். 'போர்வாள்' நாடகம் திருச்சி தேவர் ஹாலில் நடந்தபோது பெரியார் முன்னிலையில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி 'நடிகவேள்' என்ற பட்டத்தை எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கினார்.

எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் பெரிய எதிர்ப்பைச் சந்தித்த நாடகம் 'ராமாயணம்.' அதில் ராதா ராமனாக நடித்தார். வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாடகமது. மேடையின் இரண்டு பக்கமும் தன் நாடக எழுத்துக்கு ஆதாரமான சமஸ்கிருத மொழிபெயர்ப்புப் புத்தகங்களை அடுக்கி வைத்தார். அரசு தடை விதித்தது. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று 15-9-1954-ல் பெரியார் தலைமையில் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் முதல் முறையாக மேடையேற்றினார். திருச்சி தேவர் ஹாலில் ராமாயணம் நடந்தபோது “உள்ளே வராதே” என்று அதிரடியாக போஸ்டரும் நோட்டீசும் வெளியிட்டார். “என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள் எவராயிருந்தாலும் அவர் எம்மதத்தினராய் இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாய் வரவேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம்” என்றார் துணிச்சலோடு. இவருக்காகவே கொண்டுவரப்பட்டதுதான் நாடகத் தடைச் சட்டம்.

ராமாயணம் நாடக போஸ்டர்

'இழந்த காதல்' நாடகம்தான் ராதாவை அடையாளப்படுத்திய நாடகம். “எம்.ஆர்.ராதாவின் சவுக்கடி சீனைக் காணத்தவறாதீர்கள்” என்று விளம்பரம் செய்யப்பட்ட நாடகமிது. இந்த நாடகம் சேலத்தில் நடந்தபோதுதான் ராதாவின் ஆற்றலைக் கண்டு வியந்த அண்ணா, பெரியாரையும் அழைத்துவந்து நாடகம் பார்க்கவைத்தார். மேலை நாட்டு நடிகர் பால்முனிக்கு ராதாவை அண்ணா ஒப்பிட்டார். ராதாவின் ஒரு நாடகம் தாங்கள் நடத்தும் 100 மாநாடுகளுக்குச் சமம் என்றார் அண்ணா. இந்த நட்பால்தான் ராதாவின் 'திராவிட மறுமலர்ச்சி நாடக சபா' உருவானது. ஆனாலும் அண்ணா பெரியாரை அரசியலில் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரம்' என்று புத்தகம் எழுதி அண்ணாவிடமே கொடுத்து, இதைப் படியுங்கள் என்றவர் ராதா.

'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' என்ற புது நாடகத்தில் பெண்கள் படும் வேதனைகளை ராதா வலிமையாகப் பேசினார். சமூக சீர்திருத்த நாடகம் என்று நாகப்பட்டினத்தில் விளம்பரம் செய்திருந்தார். ஊர் பெரியவர்கள் சிலர் நாடகம் நடத்தத் தடை கேட்டு நீதிமன்றம் சென்றனர். கணேசய்யர் நீதிபதியாக இருந்தார். இவர் சாஸ்திர அறிவு மிக்கவர். பார்க்காமல் தடை விதிக்க மறுத்த கணேசய்யர் ஒருநாள் நாடகம் பார்க்க வந்தார். ராதா தன் சக நடிகர்களிடம் எதையும் மாற்றாமல் அப்படியே நடியுங்கள், வருவது வரட்டும் என்றார். ஒரு காட்சிகூட விடாமல் எல்லாக் காட்சிகளையும் ரசித்த கணேசய்யர் மேடையில் சொன்னார், ”விதவைகள் படும் துன்பம் சாதாரணமானதல்ல. அவர்களுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்னும் இந்த நாடகம் நாட்டுக்குத் தேவையான ஒன்று. விதவைகள் பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாது என்பதெல்லாம் அவளை உடன்கட்டை ஏற்றுவதற்கு சமமல்லவா. நாடகம் எல்லா ஊரிலும் நடக்கட்டும். ராதா நீண்டநாள் வாழ்ந்து தொண்டு செய்யட்டும்” என்றார்.

படத்தில் எம்.ஆர்.ராதா

அநேகமாக நாடக மேடையில் சொல்லப்பட்ட தீர்ப்பாக இதுவே இருக்கும் என்று தொன்றுகிறது. எவர் வந்தாலும் உண்மையைச் சொல்வேன் என்ற நடிகவேள் ராதாவின் துணிச்சலும், விமர்சனத்தில் தன் சமூகத்தை உட்படுத்தினாலும் நியாயம் என்றால் ஏற்பேன் என்ற கணேசய்யரின் நீதிவழுவா நெறியும் இந்தக் காலத்திலும் தேவையாகவே படுகிறது.

'தூக்கு மேடை' நாடகம் கலைஞர் கருணாநிதி எழுதியது. 'கலைஞர்' என்ற அடைமொழிதான் அவரது பெயரான கருணாநிதி என்பதைவிட அதிகமான தமிழர்களால் உச்சரிக்கப்படுகிறது. இந்தக் கலைஞர் பட்டம் அவரை வந்தடைந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. புது நாடகம் ஒன்று போட எம்.ஆர்.ராதா விரும்பினார். திருவாரூரிலிருந்து வந்த இளைஞரான கருணாநிதி தஞ்சையிலேயே தங்கி 'தூக்கு மேடை' நாடகத்தை எழுதிக்கொடுத்தார். மகிழ்ந்துபோன ராதா, நாடகம் எழுதியவரை 'அறிஞர் கருணாநிதி' என்று போஸ்டர்களில் விளம்பரப்படுத்தினார். அண்ணாவுக்கான அடைமொழியைத் தனக்குப் பயன்படுத்தியதை கருணாநிதி ஏற்கவில்லை. “ஏன் உங்க கட்சியில ஒரு அறிஞர்தானா” என்று ஜாலியாகச் சிரித்த ராதா, நாடகத்தின் முதல் நாள் கருணாநிதியை ‘கலைஞர் கருணாநிதி’ என்று அழைத்தார். அன்றுமுதலே தான் கலைஞரானதாகவும் அதுவே தன்னோடு நிலைத்ததாகவும் கலைஞர் 13-9-1989 முரசொலியில் எழுதினார்.

நாடகத்தில் இல்லாத வசனங்களைப் பேசி அதிர்ச்சியூட்டுவது ராதாவின் வாடிக்கை. அதுவே பார்வையாளர்களை ஒரே நாடகத்தைப் பலமுறை பார்க்கவைத்தது. 'தூக்கு மேடை' நாடகத்தில் பாண்டியனாக நடித்த கலைஞரிடம் “உங்க அண்ணாவை தளபதி தளபதின்னு சொல்றீங்களே, அவரு எந்தப் போருக்குத் தளபதி” என்று திடீரெனக் கேட்டார் ராதா. கலைஞர் சுதாரித்துக்கொண்டு, “வீணை வாசிக்கப்படும்போது மட்டும் வீணையல்ல. உறையில் இருந்தாலும் வீணைதான். அதுபோலத்தான் போருக்கும் அவர்தான் தளபதி. அமைதிக்காலத்திலும் அவர்தான் தளபதி” என்று சொன்னதாக பின்னாள்களில் கலைஞர் எழுதினார்.

எதையும் எதிர்கொள்ளும் அச்சமே அறியாத மனம் ராதாவின் சொத்து. அந்த நாடகத்துக்குத் தலைமை பெரியார். பாதி நாடகம் முடிந்து இடைவேளை நேரத்தில் பெரியார் பேசுகிறார். பார்வையாளரில் ஒருவர் எழுந்து, "இவரு பேச்சைக் கேட்க நாங்க காசுகொடுக்கலை. நாடகத்தைப்போடு" எனக் கத்துகிறார். மேக்அப் ரூமிலிருந்த ராதாவுக்குச் செய்தி போகிறது. பாதி மேக்கப்போடு வந்த ராதா, கத்தியவரைப் பார்த்து, "நாடகம் முடிஞ்சிடுச்சு, நீங்கள் போகலாம். இனி இவர்தான் பேசுவார்" என்றாரே பார்க்கலாம், பெரியாரே அசந்துவிட்டார். இந்தமாதிரி பதிலை அவரே எதிர்பார்க்கவில்லை.

அவரின் கரகரத்த குரலும் அதிரடியான கருத்துகளும் அவருக்கு முரடர் போன்ற தோற்றத்தைக் கொடுத்ததென்னவோ உண்மை. ஆனால் அன்பும் மனிதமும் நிறைந்த மனிதராகவே அவர் வாழ்ந்தார். என்.எஸ்.கே, பாகவதர், ஏ.பி.நாகராஜன், இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், டி.ஆர். மகாலிங்கம், வசனகர்த்தா இளங்கோவன், பட்டுக்கோட்டை அழகிரி என்று பலருக்கு அவர்களின் கடைசிக்காலத்தில், அவர்களால் பயன்பட்டவர்களெல்லாம் ஒதுங்கிக்கொள்ள, சத்தமில்லாமல் உதவி செய்தவர் ராதா மட்டும்தான். நாதஸ்வர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை மறைந்தபோது அவரின் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்தியதோடு, அவரின் சமாதியில் 48 அடி உயரத்தில் நாதஸ்வரம் செய்துவைத்தார். அவரின் மகனுக்கு ஒரு மெக்கானிக் பட்டறையும் வைத்துக்கொடுத்தார்.

நாடக விவசாயி என்று புகழப்பட்டவர் திருச்சி உறையூரைச் சேர்ந்த டி.பி.பொன்னுசாமி பிள்ளை. 'யதார்த்தம் பொன்னுசாமி' என்றே இவரை நாடக உலகம் அழைத்தது. சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, டி.எஸ்.பாலையா, காகா ராதாகிருஷ்ணன் போன்ற மகா நடிகர்களை உருவாக்கியவர் இவர். நாடக உலகம் இவரை மறந்துவிட்ட சூழலில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் 40 ஆண்டுக்கால நாடகப் பணியைப் பாராட்டி 4-11-1956-ல் விழா எடுத்து நாடகம் நடத்தி நிதியளித்து நன்றி செலுத்தியவர் எம்.ஆர்.ராதாதான்.

ராதாவைத் தன் வீட்டுக்கு அழைத்த காமராசர் அவருக்காக தேர்தல் பிரசாரம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். "அய்யா பெரியார் உங்களை ஆதரிப்பதால் உங்களை ஆதரிப்பது என் வேலை" எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் ராதா. படத்தயாரிப்பாளர் வாசுவிடம் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையைத் தேர்தல் செலவுக்காக காமராசர் கொடுத்தனுப்பினார். "பணத்துக்காகவா நான் பிரசாரம் செய்கிறேன். நாம் மந்திரியாக இருந்தால்கூட இவ்வளவு காரியங்கள் செய்ய முடியாது என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார். அதற்காக அல்லவா ஒப்புக்கொண்டேன். காசோலையை காமராசரிடமே கொடுத்துவிடுங்கள்" என்று வாசுவை அனுப்பிவிட்டார் ராதா. "ராதாவைப்போன்ற ஒருவர் தொண்டராகக் கிடைக்க உண்மையில் பெரியார் கொடுத்துவைத்திருக்க வேண்டும்" என்றாராம் காமராசர்.

எம்.ஆர்.ராதாவின் நாடகப் பணியையும் கொள்கை உறுதியையும் நேசித்த காமராசர் தானே முன்னின்று ராதாவைப் பாராட்டி 'புனித ஆடை போர்த்தும் விழா' ஒன்றை 29-3-1964-ல் நடத்தினார். பொதுவாக அதிகம் பேசாத காமராசர் அன்று மனம்விட்டுப் பேசினார். “நேர்மையானவர்களை சேவை செய்பவர்களை மனசில் பட்டதை தைரியமாகச் சொல்பவர்களை வாயாரப் புகழவேண்டும். ராதா அவருக்கென்று சில கொள்கைகள் வைத்திருக்கிறார். அவற்றை யாருக்காகவும் கைவிடமாட்டார். பணத்துக்காகவும் கைத்தட்டலுக்காகவும் நடிக்கக்கூடியவரல்ல அவர். வசனங்களை எடுப்பாகப் பேசி நடிக்கக்கூடியவர் அவர். என்னை ராதா பலமுறை திட்டியிருக்கிறார். நான் வருத்தப்பட்டதில்லை. நியாயம் இருந்தால் எடுத்துக்கொள்வேன். அவரைப் பாராட்டி விழா நடத்த வேண்டும் என்று யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையிடம் சொன்னேன். இந்த விழா நானே ஏற்பாடு பண்ணியது. இப்போது அவருக்கு புனித ஆடை போர்த்துகிறேன்.” காமராசரின் இந்தப் பேச்சு நடிகவேளை காலத்தின் கலைஞனாக உயர்த்தியது. இந்த விழாவிலும் ராதா தன் வழக்கமான பாணியில் பேசினார். “புனித ஆடை என்றால் என்ன, என்ன புனிதம், ஆடையில் என்ன புனிதம் இருக்கிறது? ஆடையில் புனிதமெல்லாம் இல்லை என்கிறவன் நான். இருந்தாலும் இதைப் போர்த்துகின்றவர் புனிதர் என்பதால் இந்த ஆடையைப் புனித ஆடையாகக் கருதுகிறேன்” என்று காமராசரைப் புனிதர் என்றும் ஒரு புனிதர் போர்த்தியதால் இது புனித ஆடை என்றும் ராதா சொல்லியதை மக்கள் வெகுவாக ரசித்தார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று - காமராசர் ஆட்சியில் ராதா 52 முறை கைது செய்யப்பட்டார்.

காமராஜர், அண்ணா

குன்றக்குடி பெரிய அடிகளார் எம்.ஆர்.ராதாவுக்கு 'கலைத்தென்றல்' என்ற பட்டத்தைக் கொடுத்தபோது மலைக்கோட்டை மணி அடிக்க ராதாவின் மேல் மலர்மழை பொழிய ஒரே அமர்க்களம். அப்போது அடிகளார், “ராதா மதத்தையும் சமயத்தையும் வெளுத்தெடுப்பதாகச் சொல்கிறார்கள், தூய்மையாக்கவே அவர் வெளுக்கிறார். அதனால்தான் அவரை நான் தென்றல் என்கிறேன்” என்றார்.

சேலத்திலும் பொன்மலையிலும் கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது ராதாவால் தாங்கமுடியவில்லை. இதை ஏன் என்று கேட்க நாதியே இல்லையா என்று பெரியாரிடம் கொதித்தார். அந்தக்கால நாடக மரபை மீறி நாடக முன்திரையில் உழைப்பாளியின் படம் வரைந்து “உலகப் பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள்” என்று பதாகையைத் தொங்கவிட்டுப் புரட்சி செய்தவர் அவர். தோழர் ஜீவா தலைமறைவாக இருந்தபோது அவருக்கு மொட்டையடித்து சாமியார் வேடம்போட்டு அவரைத் தன் நாடகக் குழுவிலேயே வைத்துப் பாதுகாத்தார். கேட்பவரிடமெல்லாம் இவர்தான் நம்ம ரஷ்ய சாமியார், பேசமாட்டார் என்பாராம். ஜீவாவுக்கும் பத்மாவதிக்கும் காதல் இருந்த காலமது. ஏதோ புரட்சிக்கான வேலை என நினைத்து ஜீவா தந்த கடிதங்களைக் கொடுத்துவந்த ராதாவுக்கு அவை காதல்மடல் என்பதே பிறகுதான் தெரிந்ததாம். ஜீவாவின்மேல் அவருக்கு அவ்வளவு பிரியம். ஜீவா மறைந்த பிறகு பெரியார் தலைமையில் நடந்த சிலை திறப்பு விழாவில் ராதாவும் கலந்துகொண்டார். மக்கள் கலைஞன் என்றால் அது ராதா ஒருவர்தான் என்றார் பி.இராமமூர்த்தி.

ராதாவால் ஈர்க்கப்பட்டவர்களுள் ஒருவர் அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு. எங்கும் அதிகநேரம் உட்கார்ந்தே பழக்கப்படாத ஜி.டி.நாயுடு 3 மணி நேரம் உட்கார இடமில்லாதபோதும் நாடக இசைக்குழுக்கான இடத்திலிருந்து நாடகத்தை ரசித்தார். தனது தொழிற்பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்காக ராதாவின் நாடகத்தை நாயுடு நடத்தினார். அந்த நாடகத்திற்குத் தலைமை ஏற்ற நோபல் விஞ்ஞானி சர் சி.வி.இராமன் பேசும்போது, “மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதாவின் நாடகங்களும் வேண்டும்” என்றார். இன்றைய காலநிலையை விளக்கிக் காட்டும் ராதாவுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கடிகாரத்தைப் பரிசாகத் தருகிறேன் என்றார் நாயுடு. இதன்பிறகு ராதாவுக்கும் அவரது தொழிலுக்கும் நாயுடு ஏராளமான உதவிகள் செய்தார்.

பெரியார்

“நான் சினிமா உலகத்துக்கு மாறுபட்டவன்-எதிர்ப்பாளன் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நானே ராதா பெயரில் ஒரு மன்றம் நிறுவுகிறேன்” என்று சொல்லி, பெரியார் 'ராதா மன்ற'த்தை 17-9-1963-ல் திறந்து வைத்தார். அப்போது சொன்னார், "எல்லாக் கலைஞர்களும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த அவர்களின் பின்னால் செல்வார்கள். ஆனால் ராதாவோ ரசிகர்களின் திருப்தியைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைத் தன் பின்னால் வரவைப்பவர். அதனால்தான் அவருக்கு மன்றம் வைத்தேன்" என்ற பெரியார், ’ராதா வாழ்க’ என்று பேசி முடித்தார்.

இம்பாலா காரை அந்தஸ்தின் அடையாளமாகப் பலர் பார்த்தனர். ஆனால் ராதா தனது இம்பாலா காரில் கேளம்பாக்கத்தில் இருந்த தனது மாட்டுப்பண்ணைக்கு வைக்கோல் ஏற்றி அனுப்பினார். "என்ன இது, வைக்கோல் ஏத்த இம்பாலாவா" என்ற அந்தப் பெரிய நடிகரிடம் ராதா சொன்னார், "இதுவும் ஒரு சாயம் பூசிய தகரம்தான். நம் வேலையை சற்று வேகமாகச் செய்துகொள்ளப் பயன்படும் ஒரு சாதனம் அவ்வளவுதான். இதற்கு மேல் எந்த மதிப்பும் அதுக்கு இல்லை. பசிக்கும் என் மாட்டுக்கு உடனே அனுப்பத்தான் வைக்கோலை இம்பாலாவில் ஏத்தினேன்" என்றாரே பார்க்கலாம். அந்தப் பெரிய நடிகருக்கு முகத்தில் வழிந்த அசடை தன் நடிப்பால் துடைத்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் பிம்பம் உடைத்தல்!

1975ஆம் ஆண்டு வந்த அவசரநிலை சட்டத்தால் (மிசா) ராதா கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தால் கைதான இந்தியாவின் ஒரே நடிகர் அநேகமாக ராதா ஒருவர்தான். ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி "சார் நீங்கள் உடனே கிளம்பலாம்" என்றார். ’பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்’ என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா. இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவிக்கும் துறவு மனநிலையை ராதா பெற்றிருந்தார்.

சினிமா நாடகம் எதிலும் அவர் பேசிய பல வசனங்கள் உதட்டின் உற்பத்தியல்ல; வாழ்வின் செய்தி. ஒரு படத்தில் எஸ்.வி.சுப்பையாவைப் பார்த்துக் கேட்பார், “அது எப்படி ஜேம்ஸ், நீ நல்லவனா இருந்தும் பணக்காரனா இருக்கே.” இதை வெறும் வசனந்தானே என்று தள்ள முடியுமா? எழுத்தாளர் விந்தனோடு அவர் சிறையில் நிகழ்த்திய உரையாடல் முக்கியமானது. அதில் சொன்னார், “என்னுடைய பெருமை மட்டும் உலகத்துக்குத் தெரிஞ்சாப் போதாது. பலகீனமும் தெரியணும். இல்லைன்னா மக்களை ஏமாற்றுவதா ஆகிவிடும்.” இது சாதாரண நடிகனின் பேச்சா, ஒரு ஞானியின் ஒளிக்கீற்று அல்லவா?!

எம்.ஆர்.ராதா

வீதி நாடகத்தின் முன்னோடி வடிவமாகவே அவர் நாடகங்கள் இருந்தன. மிகக் குறைந்த செலவு. அதிக சீன் செட்டுகள் இல்லை. செலவு குறைந்தால்தான் சாதாரண மக்களாலும் நாடகம் போடமுடியும் என்பது அவரது கோட்பாடு. அதிக மூலதனம் கலையை அழிக்கும் என நம்பினார். நாடகங்கள் வழியாக நேரடியாக மக்களைச் சந்திப்பதையே விரும்பினார். அவர் சினிமா நடிப்பை 'ரிட்டயர்டு நடிப்பு' என்றார்.

1907ஆம் ஆண்டு சென்னை சூளையில் இராசகோபாலுக்கும் இராசம்மாளுக்கும் மகனாகப் பிறந்த இராதாகிருஷ்ணன் (ராதா) இளம் வயதிலேயே நாடக நடிகரானார். ஜெகந்நாத ஐயரின் நாடகக் கம்பெனிதான் ராதா முளைவிட்ட இடம். 72 ஆண்டுகள் மேடையிலேயே வாழ்ந்த கலைஞன் ராதா, பெரியாரின் 101-ம் பிறந்தநாளான 17-9-1979 அன்று திருச்சியில் காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தில் இரண்டு லட்சம் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ரத்தக்கண்ணீரைத் துடைக்கும் 'போர்வாள்' வரலாற்றில் எப்போதாவதுதான் பிறக்கும்.

Friday, 28 January 2022

BASHYAM IYENGAR HOISTED INDIAN FLAG 1932 JANUARY 26

 


BASHYAM IYENGAR  HOISTED 

INDIAN FLAG 1932 JANUARY 26



நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து
விட்டால்...
நமது சுதந்திரத்திற்கு எதிராக செயல் பட்டவர்க்கு தியாகி பட்டம் சூட்டப்பட்டு இன்று தியாகிகள் பட்டியலில் உள்ளனர். நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு ஒப்பற்றவரின் சாகஸ வரலாற்றினை தெரிந்துகொள்வோம் .
1932ஆம் ஆண்டு ஜனவரி 26 நள்ளிரவு வேளையில் இன்று சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ்க் கோட்டையில் யூனியன் ஜாக் கொடி பறந்து கொண்டிருந்தது.
சிப்பாயைப் போல் காக்கி உடையணிந்த ஒரு உருவம் ராணுவப் பாதுகாப்பு மிகுந்த புனித ஜார்ஜ்க் கோட்டையில் தந்திரமாக உள்ளே நுழைந்தது. இடுப்பில் தானே தயாரித்து வைத்திருந்த மூவர்ணக் கொடி, அதில் "இன்று முதல் பாரதம் சுதந்திரம் அடைந்து விட்டது" என்ற கொட்டை எழுத்துக்கள்.
சுமார் இருநூறு அடி உயரம் கொண்ட அந்த கொடிக்கம்பின் உச்சியினை அடைந்து யூனியன் ஜாக் கொடியினை வீசி எறிந்து தான் தயாரித்த மூவர்ணக் கொடியினை கட்டிப் பறக்க விட்டு, மெல்ல மெல்ல இறங்கி மறைந்து விட்டது அவ்வுருவம்.
மறுநாள் காலை சென்னை நகரமே அல்லோலகல் பட்டது. சூரிய ஒளியில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்க, அதனைக் கண்டு ஊர்க்கார்கள் உணர்ச்சி வசத்தில் சிலிர்க்க, அனைவரும் வந்தேமாதரம்! பாரத் மாதா கீ ஜெய்! என்று முழங்க,
இதனைக் கண்டு பிரிட்டீஷார் கோபத்தில் துடிக்க, அப்பப்பா! இறுதி வரை அதை செய்தவரை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்தான் கே. பாஷ்யம் ஐயங்கார்.
இன்றைய திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சேரன்குளத்தை சேர்ந்த ஆர்யா என்கிற பாஷ்யம் அய்யங்கார் தனது, 25 ஆவது வயதில் இதை செய்தார்.
நிஜமான, மாவீரச் செயலைப் புரிந்த ஒரு மாவீரன் நம்முடன், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தார் என்பது நமக்குப் பெருமை.
ஆனால் இவரையும் இவரைப் போன்ற பல உண்மையான
தியாகிகளின் தியாகங்களை மறைத்து விட்டு, இன்று யார் யாரை எல்லாமோ விடுதலை போராட்ட வீரர் என்று ஊர்தியில் ஊர்வலம் வர வைக்கின்றனர். நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து
விட்டால்.
இன்று நாம் பார்க்கும் பாரதமாதா உருவத்திற்கு முதன்முதலில் வடிவம் கொடுத்தவர் பாஷ்யம் அய்யங்கார்,இவர் நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தார் என்பது நமக்குப் பெருமை. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு உண்மையான தமிழர்..
இந்த மாமனிதரை முகநூல் மூலமாக இன்று நினைவு கூர்வதில் நான் பெருமை அடைகிறேன்..

Tuesday, 25 January 2022

C.R.PARTEBAN , PLAY AND FILM ACTOR BORN 1929 - JANUARY 25 ,2021

 

C.R.PARTEBAN , PLAY AND FILM ACTOR

 BORN 1929 - JANUARY 25 ,2021


சி. ஆர். பார்த்திபன் (C. R. Parthiban, 1929 – 25 சனவரி 2021) இந்தியத் தமிழ்த் திரைப்பட, மற்றும் நாடக நடிகர் ஆவார்.[1][2] இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்துப் புகழ் பெற்றார்.[3][4] தமிழ், தெலுங்கு, இந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]



வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வேலூரை சொந்த ஊராகக் கொண்ட பார்த்திபன், பள்ளிப் படிப்பின் பின், மேல்படிப்புக்காக 1946 இல் சென்னை வந்து[1] லயோலா கல்லூரியில் படித்து, பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] பள்ளியிலும், கல்லூரியிலும் நாடகங்களில் நடித்தார். பட்டம் பெற்ற பின்னர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். பின்னர் நாடகங்களில் பல வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்திலும் இவர் நடித்துள்ளார்.[2]

முதன் முதலில் ஜெமினி ஸ்டூடியோவில் 'இன்சனியாத்' என்ற இந்தித் திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு 'புதுமைப்பித்தன்' (1957) தமிழ்த் திரைப்படத்தில் டி. ஆர். ராஜகுமாரிக்கு அண்ணனாக, நாடகக் குழுத் தலைவனாக நடித்தார். இரும்புத்திரைவஞ்சிக்கோட்டை வாலிபன்மோட்டார் சுந்தரம் பிள்ளை என ஜெமினியின் பல படங்களில் நடித்தார்.[2]

கிட்டத்தட்ட 120 படங்களில் நடித்திருக்கிறார். 1982 இல் கோழி கூவுது படத்தில் அண்ணே அண்ணே பாடல் காட்சியில் சிறப்பாக நடித்துப் பாராட்டுப் பெற்றார்.[2]



மறைவு[தொகு]

சக்ரவர்த்தி ஆர். பார்த்திபன் 2021 சனவரி 25 இல் தனது 91-வது அகவையில் சென்னையில் காலமானார்.[2]

நடித்த சில திரைப்படங்கள்[தொகு]


பழம்பெரும் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர். அன்று கண்ட முகம், உங்க வீட்டுக் கல்யாணம், தேடி வந்த திருமகள், மல்லிகைப்பூ, கோழி கூவுது, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், மோட்டார் சுந்தரம் பிள்ளை, சுவரில்லாத சித்திரங்கள் போன்ற 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

’வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ’வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் கும்பினி அதிகாரி துரைக்குமிடையே ஏற்படும் சந்திப்பு மிக முக்கியமானது. ‘கிஸ்தி’, திரை, வரி, வட்டி, வானம் பொழிகிறது, பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி” என்று தொடங்கி மாமனா மச்சானா மானங்கெட்டவனே என்பது வரை நீளும் மிகப் பிரபலமான வசனம் இடம்பெறுவது இந்தக் காட்சியில் தான். வார்த்தை வெடிகளோடு நில்லாமல் கைகலப்பிலும் துப்பாக்கிச் சூட்டிலும் விறுவிறுப்பாகச் செல்லும் கட்டம். சிவாஜிகணேசனின் கம்பீரமும் வீராவேசமும் வெளிப்படும் இந்தக் காட்சியில் அவருடன் மோதும் ஜாக்‌ஷன் துரையாக நடித்தவர்தான் சி.ஆர்.பார்த்திபன்.

40 வருடங்கள் திரைத்துறையில் நீடித்தவர் நடித்த மொத்த படங்கள் 120 மட்டுமே.  

திரையுலகத்துடன் தொடர்புடைய 5 முதல்வர்கள் கோலோச்சிய புனித ஜார்ஜ் கோட்டையில், அத்தகைய புள்ளிகள் எட்டியும் பார்க்காத 1952-இல் பார்த்திபன் தற்காலிக குமாஸ்தாவாக பணியாற்றியுள்ளார். அவர் சுமார் ஆறடி உயரம். களையான முகம். வாலிப முறுக்கு. தேர்வாணையத் தேர்வெழுதி, அவர் நிரந்தர ஊழியராகவும் தேர்வு பெற்றார். ஆனால் அவ்வேலையை உதறித்தள்ளினார்.

ஜெமினியின் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் கதாநாயகன் ஜெமினிகணேசனை மெச்சி வரவேற்கும் ஒரு நாட்டுப்புறக் கூட்டத்தின் தலைவராக, பார்த்திபன் நடித்தார். ஜெமினி ஸ்டூடியோவில் பி.கண்ணாம்பாவின் கணவர் நாகபூஷணம் எடுத்த ‘நாக பஞ்சமி’ யில் பார்த்திபன் சிவன் வேடமேற்றார். இதுதான் அவர் நடித்து வெளிவந்த முதல் படம்.

பிறகு எம்.ஜி.ஆருடன் அறிமுகம் ஏற்பட்டது. 1957-இல் ‘புதுமைப் பித்தன்’ என்ற படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரியின் அண்ணன் நல்லண்ணனாக நடித்தார்.

கட்டபொம்மன் எடுத்த பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தில் சி.ஆர்.பார்த்திபனுக்கு யாரையும் தெரியாது. ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ கதாபாத்திரங்கள் குறித்தும், விவாதம் நடந்தபோது தன்னுடன் இல்லறமே நல்லறம் படத்தில் ஒரு வாட்டசாட்டமான வாலிபர் நடித்ததாகவும், அவரை ஜாக்‌ஷன் துரை வேடத்தில் போடலாமே என்றும் நடிகை எம்.வி.ராஜம்மா தெரிவித்திருக்கிறார்.

அவர் பெயர்தான் பார்த்திபன். என்னுடன் ‘அன்னையின் ஆணை’ படத்தில் நடித்தார். ஜாக்‌ஷன் துரை வேடத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று சிவாஜிகணேசனும் ஆமோதித்தார். ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெற்றியடைந்து பல நகரங்களில் விழாக்கள் நடந்தன. ஒவ்வொரு மேடையிலும் பார்த்திபனை தன் தம்பி என்றழைத்து, சிவாஜி பாராட்டினார்.

திலீப்குமார் நடித்த இன்சாட் என்ற   படத்தில் ஜெமினியில் மாதச்சம்பளத்தில் நடித்தார். தொடர்ந்து கண்ணாம்பா நடித்த நாகபஞ்சமி, அன்னையின் ஆணை [இப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக], ரி.எம்.சௌந்தரராஜன் கதாநாயகனாக நடித்த ‘அருணகிரி நாதர்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

சினிமா உலகம் தன்னைப் பயன்படுத்திக் கொண்டது போல் அதனுடனான தொடர்பைப் பயன்படுத்தி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வாயிலாகவும் கொஞ்சம் சம்பாதித்தார்.

இவருக்கு வனஜா என்ற மனைவியும் ராமானுஜன் என்ற மகனும் உள்ளனர்.

 தினமலர் பல்சுவை மலரிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

பணமா பாசமா [1968], தெய்வீக உறவு [1968], மனசாட்சி [1969], தங்கைக்காக [1972], சங்கே முழங்கு [1972], சுகமான ராகங்கள் [1985], தேடி வந்த திருமகள் [1966], நல்லவன் வாழ்வான் [1962], பந்தாட்டம் [1974], சக்கரம் [1968]

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் W.C.ஜாக்ஸன் என்ற வெள்ளைக்கார துரையாக பார்த்திபன்


KAVITHA KRISHNA MURTHY ,SINGER BORN 1958 JANUARY 25

 

KAVITHA KRISHNA MURTHY ,SINGER

 BORN 1958 JANUARY 25



கவிதா கிருஷ்ணமூர்த்தி ஒரு இந்திய பாடகியாவார். இவர் நான்கு முறை பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மசிறீ விருதினை’ வென்றவர்.

திரையிசையோடு, பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களைப் பாடுகிறார்.

பிறப்பு[மூலத்தைத் தொகு]

கவிதா கிருஷ்ணமூர்த்தி, புது தில்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘சாரதா கிருஷ்ணமூர்த்தி’. இவரது தந்தை, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்தார், இவரது தாயார் பாரம்பரிய இந்திய இசையின் மீதும் நடனத்தின் மீதும் பற்றுடைவராக இருந்தார்.

கல்வி[மூலத்தைத் தொகு]

கவிதா கிருஷ்ணமூர்த்தி, முதலில் இந்துஸ்தானி இசையைக் கற்றார். பின் தனது அத்தையிடமிருந்து ‘ரபீந்திர சங்கீத்’ இசைமுறையைப் பயின்றார். தனது பதினோராவது வயது வரை, டெல்லியில் இருந்த அவர், மும்பையில் உள்ள [[புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ ஹானர்ஸ்) பெற்றார்.

இசை உலகிற்கு வருகை[மூலத்தைத் தொகு]



பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஹேமந்த் குமாரின் இசையில் பெங்காலி பாடலை, லதா மங்கேஷ்கருடன் தனது ஒன்பது வயதில் பாடினார். தனது கல்லூரியில் நடந்த இசைப் போட்டிகளில் பங்கேற்ற ஒவர், ஹேமந்த் குமார் அவர்களின் மகளான ‘ரணு முகர்ஜி’ என்பவரை சந்தித்தார். அவர் மூலமாக ஹேமந்த் குமாரை மீண்டும் சந்தித்த இவர், மேடைக் கச்சேரிகளில் பாடகியாகப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். இவரது அத்தையின் தோழியும், நடிகையும், ஹேம மாலினி அவர்களின் அன்னையுமான ஜெயா சக்கரவர்த்தி, பிரபல இசையமைப்பாளர் லட்சுமிகாந்திடம் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

தொழில் வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

1980ல் ‘மாங் பரோ சஜ்னா’ என்ற படத்தில் முதல் பாடலைப் பாடினார். ஆனால் அந்தப் பாடல், அப்படத்தில் இடம் பெறவில்லை. மீண்டும், ஐந்து ஆண்டுகள் கழித்து, ‘ப்யார் ஜுக்தா நஹி’ என்ற படத்தில் ‘தும்சே மில்கர் நா ஜானே க்யூன்’ என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பெரும் வெற்றிப் பெற்றதால், அவருக்குத் தொடர்ந்து பாட வாய்ப்புகள் கிடைத்தன. ‘மிஸ்டர். இந்தியா’ (1987) படத்தில், அவர் பாடிய ‘ஹவா ஹவா’ மற்றும் ‘கர்தே ஹைன் ஹம் ப்யார் மிஸ்டர். இந்தியா சே’ பாடல்கள் அவரை மிகவும் பிரபலபடுத்தின. லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலாலுடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்த இவர், ‘1942: எ லவ் ஸ்டோரி’, ‘யாரானா’, ‘அக்னி சாக்ஷி’, ‘பைரவி’, மற்றும் ‘காமோஷி’ போன்ற படங்களில் பல பாடல்களைப் பாடி 90களில் முன்னணி பின்னணிப் பாடகியாக விளங்கினார். பப்பி லஹரி, ஆனந்த்-மிலிந்த், ஏ. ஆர். ரகுமான், இஸ்மாயில் தர்பார், நதீம்-ஷ்ரவன், ஜதின் லலித், விஜூ ஷா மற்றும் அனு மாலிக் எனக் கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.

இல்லற வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

கவிதா கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்து, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான வயலின் வித்வான் டாக்டர். எல். சுப்ரமணியம் என்பவரை நவம்பர் மாதம் 11 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் ஏதும் இல்லை.

விருதுகள்[மூலத்தைத் தொகு]

2000 – ‘பாலிவுட் விருது’

2005 – இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வென்றார்.

2008 – ‘யேசுதாஸ் விருது’

சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெற்ற அவர், 1995ல், ‘பியார் குவா சுப்கே சே’ என்ற பாடலுக்காகவும், 1996ல், ‘மேரா பியா கர் ஆயா’ என்ற பாடலுக்காகவும், 1997ல், ‘ஆஜ் மெய்ன் ஊபர்’  என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘டோலா ரெ டோலா’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.

ஸ்டார் ஸ்கிரீன் விருதுகளை 1997ல், ‘


Sunday, 23 January 2022

Patricia Dane born August 4, 1917 – June 5, 1995 , an American film actress of the 1940s.

 

Patricia Dane born August 4, 1917 – June 5, 1995

 an American film actress of the 1940s.


Patricia Dane (born Thelma Patricia Pippins, August 4, 1917 – June 5, 1995)[1] was an American film actress of the 1940s.



Early life

Dane was born Thelma Patricia Pippins to William Pippins and Emma F. Montford. Sources differ as to her birth year (1917 - 1919) and birthplace (Jacksonville, Florida or Blountstown, Florida).[2][3] She was later known as Thelma Patricia Burns and Thelma Patricia Byrnes after her mother's second husband, whose surname was Burns. She attended the University of Alabama for almost three years. In 1938 she moved to New York, where she worked as a model for a dress design firm.[4] During this period she met industrialist and film industry executive Howard Hughes, who encouraged her to move to Los Angeles and helped her find an apartment there.[5][6]


Career

Dane was signed to a Metro-Goldwyn-Mayer contract in 1941. As she gained attention in Hollywood, gossip columnists Louella Parsons and Jimmy Fidler both noted her strong resemblance to Hedy Lamarr, who was also under contract to MGM.[7] Dane's earliest appearances were two uncredited roles in Ziegfeld Girl and I'll Wait for You (both 1941). She played the part of "Jennitt Hicks" in Life Begins for Andy Hardy (1941) and her well-received performance earned her a long-term contract. Dane played "Garnet" in Johnny Eager (1942) directed by Mervyn LeRoy. The film starred Robert Taylor and Lana Turner. Dane received favorable press for her acting in Grand Central Murder (1942), in which she was billed second to Van Heflin.[8]






Patricia Dane in Yank, the Army Weekly


Dane married bandleader Tommy Dorsey in Las Vegas on April 8, 1943.[9] Dorsey did not want his wife to work, and she took a break from her film career.[10] Her MGM contract lapsed in 1945.


Dorsey's biographer described both parties to the marriage as temperamental.[11] Their union was said to be "tempestuous from the start."[12] They separated three times before Dane filed for divorce on July 3, 1947, citing "extreme mental cruelty" and Dorsey's constant travel with his touring orchestra. However, the divorce was essentially amicable, and they had various rendezvous in the years ahead.[13]


Following her divorce, Dane resumed her movie career at the low-budget Monogram Pictures studio[14] with Joe Palooka in Fighting Mad (1948). Her final film appearances were uncredited parts in Road to Bali (1952) and The Harder They Fall (1956).[15]





Later life

Tommy Dorsey died in 1956. He left Dane a $26,000 insurance policy after she informed him that she was unable to work due to injuries sustained in a 1956 boating accident.[16][17] In 1973 she returned to Blountstown, where she lived with her mother and worked as a librarian. She never remarried.[18][19]


Born August 4, 1919 in Blountstown, Florida, USA

Died June 5, 1995 in Blountstown, Florida, USA  (lung cancer)

Birth Name Thelma Patricia Ann Pippen

Mini Bio (1)

Resembling Hedy Lamarr with her brunet sultry looks, beautiful second-string actress Patricia Dane possessed a rough and rowdy exterior, which worked much better for her in front of the camera than off of it. Born Thelma Patricia Ann Pippen in Jacksonville, Florida, her father died shortly after her birth and the infant was placed in the care, for a time, of her grandparents. When her mother remarried a man named Byrnes, young Thelma went back to live with her and was raised with the new name of Thelma Byrnes.


Following graduation from Andrew Jackson High School in Jacksonville, Patricia entered the University of Alabama. She moved to New York in 1938 with the intentions of being a fashion designer, but her dark-eyed beauty instead led her to instant money with modeling jobs. This opened a few doors and she quickly got caught up in the New York whirlwind "high life," becoming known around town as a feisty party girl.


Cast in her first role as a well-endowed Ziegfeld Girl in MGM's splashy, musical aptly named Ziegfeld Girl (1941), the studio immediately signed her up. She made minor impressions in Life Begins for Andy Hardy (1941) and as gangster Robert Taylor's girl in Johnny Eager (1941), which led to co-star billing in the "B" films Grand Central Murder (1942), as a volatile, cold-hearted actress who meets a nasty end, _Northwest Rangers (1942) and _Manhattan Melodrama (1942)_.


Patricia was squired about town with a number of eligible bachelors but on April 8, 1943 she became Mrs. Tommy Dorsey. Following a role in the Red Skelton vehicle I Dood It (1943), she left films per the renowned bandleader's insistence. The marriage was stormy to say the least, with some grand knockout fights that made headlines as both were pretty wild tipplers (she would often refer themselves as "The New Battling Bogarts"). This marriage had little chance for survival and on August 26, 1947 it was finished. She never remarried.


Patricia could now return to films and did so with the minor entries Joe Palooka in Fighting Mad (1948) and Are You with It? (1948). Nothing came of it. She made more unattractive news in 1949 when she and MGM actor Robert Walker were arrested for driving erratically, public drunkenness and resisting arrest. After this, all she could find were unbilled parts in Road to Bali (1952) and A Life of Her Own (1950).


Moving to Blountsown, Florida, Patricia's life quieted down considerably becoming, of all things, a librarian in town. She died completely out of the limelight of lung cancer on June 5, 1995.

- IMDb Mini Biography By: Gary Brumburgh / gr-home@pacbell.net


Family (1)

Spouse Tommy Dorsey (8 April 1943 - 26 August 1947)  (divorced)

Julian Lang (1938 - 1939)  (divorced)

Trivia (3)

Signed to MGM in 1941. Admired by fellow actors after she brusquely told off an MGM studio executive. Changed name to Pat after this incident but only starred in minor roles and bit parts after 1945.

According to Laura Wagner, whose article on Patricia appeared in the magazine Films of the Golden Age, Issue #79, Winter 2014-2015, MGM wanted to change her name at one point to Sandra Sherwood. Louis B. Mayer tried but failed to groom her as a brunette Jean Harlow.

On August 5, 1944, at one of Patricia Dane and Tommy Dorsey's parties, a fight broke out between Tommy and actor Jon Hall over Patricia, who also got into the fight. More people got into the fight, including actor Edward Norris, and both Dorsey and Dane wound up being arrested for felonious assault. Hall lost a portion of his nose by a knife probably wielded by Dane. With suits and counter suits in full wing, all charges were dismissed.

Friday, 21 January 2022

LOUIS XVI AND FRENCH REVOLUTION

 


LOUIS XVI AND FRENCH REVOLUTION

பதினாறாம் லூயி (Louis XVI), (23 ஆகஸ்ட், 1754 – 21 ஜனவரி, 1793), பிரான்சின் மன்னனாக 1774 முதல் 1792 வரை ஆட்சி செய்தவர். இவரது இயற்பெயர் "லூயி-ஆகுஸ்டே" (Louis-Auguste) ஆகும்.


இவரது மனைவி மரீ அன்டெனெட் என்ற ஆஸ்த்ரிய இளவரசி. பதினாறாம் லூயியை முதலில் மக்கள் விரும்பியிருந்தாலும் அவரது ஆட்சித்திறமையின்மை மற்றும் நாட்டில் நிலவிய வறுமை, பட்டினி காரணமாக பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் போகப் போக அவர் மீதும் மரீ அன்டெனெட் மீதும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள். 1792 ஆகஸ்ட் 10 இல் இவர் பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற எழுச்சியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் அரசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு ஜனவரி 21, 1793 இவனுக்கு மக்கள் முன்னிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது. பதினாறாம் லூயி மன்னனின் மறைவு பிரான்சின் போர்பன் மரபு மன்னராட்சியின் முடிவுக்கு வழி வகுத்தது. இதுவே பின்னர் முதலாம் நெப்போலியன் ஆட்சியைப் பிடிக்க வழிகோலியது.


பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறாமாண்டை ஒட்டி (1789 – 1989) புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை. பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றையும் கவித்துவத்தையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது. அரசியல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

அந்த விடியலில் நாம் வாழ்ந்திருந்தோம் என்பதே பெருமகிழ்ச்சி. பிரெஞ்சுக் கொடுங்கோல் முடியரசின் அரணாக நின்ற பாஸ்டி சிறைக்கூடம் மக்களால் தகர்த்தெறியப் பட்டதைக் கேட்டவுடன் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த் குதுகலத்தில் துள்ளினான்.




பிரெஞ்சு புரட்சி

படைகளை அனுப்பாமலேயே ஐரோப்பாவை பிரான்ஸ் ஆக்கிரமித்து விட்டது. புரட்சியின் சிந்தனை ஐரோப்பாவென்ன உலகெங்கிலும் தீ போலப் பரவியது. பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களே அதைத் தங்கள் நாட்டின் உள் விவகாரமாகக் கருதவில்லை. புரட்சி மனித குலத்தின் தேவையெனக் கருதினார்கள்.


”உலகம் தன் தலையின் மீது நின்ற காலம் அது” என்றார் ஹெகல். மனிதனது மூளையும் (தலையும்) அதன் சிந்தனையால் வந்தடையப்பட்ட கோட்பாடுகளும் நாங்கள் தான் மனிதனின் எல்லா உறவுகளுக்கும் செயல்களுக்கும் அடிப்படை என்று அறைகூவின. மதம், விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – எதுவாக இருந்தாலும் சரி, அவை ஈவு இர்க்கமின்றி விமரிசிக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் அறிவின் சன்னதியில் தங்கள் யோக்கியதையை நிருபிக்க வேண்டும் இல்லையேல் ஒழிந்து போகவேண்டும். ஆம்! உலகம் உண்மையிலேயே தலை மேல் தான் நின்றது.


வாழ்வதற்குத் தகுதியிழந்த முடியாட்சியும், மத ஆதிக்கமும் அவற்றின் அதிகார பீடங்களிலிருந்து கேலிக் குரல்களின் நடுவே இழுத்து வீசியெறியப்பட்டன. சமுதாயம் தலைகீழாக மாற்றப்பட்டது. உலகம் உண்மையிலேயே தன் தலைமீது தான் நின்றது.


தயங்கித் தடுமாறிக் கொண்டிருந்த மனித சமுதாயத்தை பிரான்ஸ் உசுப்பிவிட்டது ”இதோ இதுதான் நிகழ்ச்சிநிரல் முன்னோக்கிச் செல்” என்று ஆணையிட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிரபுக்களையும் மன்னர்களையும் சக்ரவர்த்திகளையும் தன் முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்து தள்ளடிக் கொண்டிருந்த மனிதனை நிமிர்ந்து நில், நீ சுதந்திர மனிதன் என்ற பிரான்சின் அறைகூவல் நிமிர்த்தியது.


பொருட்களை அடமானம் வைத்து உணவை பெறுகின்றனர்.

பாரிஸை சேர்ந்தவர்கள் கடுமையான பசியானால் உணவை வாங்க பொருட்களை விற்கின்றனர்.


மாபெரும் பிரெஞ்சு ஜனநாயகப் புரட்சி, இரண்டு நூற்றாண்டுகள் கடந்தபின்னும் சுதந்திரத்தையும் விடுதலையையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் இதயத்தையும் தனது கம்பீரமான சிம்மாசனமாக்கிக் கொண்டது.


”மக்கள் இங்கே புல்லைத் தின்று உயிர் வாழ்கிறார்கள் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கும். பிச்சைக்காரர்களுக்கும் மன்னராயிருப்பவரை மாட்சிமை தாங்கிய சக்ரவர்த்தி என்று எப்படி அழைக்க முடியும்?” –


1725 இல் 15ம் லூயி மன்னனின் பிரான்சைப் பற்றி ஒரு கிறித்தவ மதகுரு கொடுத்த நற்சான்றிதழ் தான் இது. அவனது மகன் 16ம் லூயி மன்னனின் ஆட்சியைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்.


“இரு கழுதைகளை அவன் ஓட்டிச்

சென்றான்.

ஒரு கழுதையின் முதுகில் ஒட்ஸ் தானிய

மூட்டை.

இன்னொரு கழுதையின் முதுகிலோ

உப்பு வரி ரசீது கட்டுகள்.”


”Third Estate” மக்கள் மீது கடுமையான வரிச்சுமை செலுத்தப்பட்டது

நாடு தழுவிய பஞ்சத்தால் நொடித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது.


என்று விவசாயிகளின் அவலநிலையைப் பாடினான் ஒரு கவிஞன். பண்ணைகளும், குறுநில மன்னர்களும் கிறித்தவ மடாலயங்களும் நாட்டைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தன. விவசாயி ஒண்ட வந்தவனைப் போல துண்டு நிலத்தில் உயிரை விட்டுக் கொண்டிருந்தான் காடுகளும் புல்வெளிகளும் மேட்டுக்குடியினரின் பரம்பரைச் சொத்தாக இருந்தது. வன விலங்குகளோ மேட்டுக்குடி இளவல்களின் வேட்டை விளையாட்டுக்காக பாதுகாக்கப்பட்டன. ஆம் கண்ணைப் போல் போற்றி வளர்த்த தனது பயிரை குழி முயல்கள் நாசம் செய்தாலும் அவற்றைக் கொல்லும் விவசாயி குற்றவாளியானான்.


வேட்டையாடுவதற்கு குதிரை மீது பவனி வந்த மன்னர்குலக் கொழுந்துகள் விவசாயிகளின் வயல்களை நாசம் செய்தனர். வேட்டையாடிக் களித்தனர். விவசாயியின் வியர்வையையும் ரத்தத்தையும் குத்தகையாகப் பிழிந்து குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டனர். பூலோகத்தில் வாழ்வதற்கு லூயி வரி வசூலித்தான். பரலோகத்தில் இடம் போடுவதற்கு பாதிரிகள் வரிவசூல் செய்தனர். விவசாயிகள் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர். தங்கள் எதிரியைக் கொல்வதற்கோ நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தனர்.


நகரம் ரொட்டி கிடைக்காமல் செத்துக் கொண்டிருந்தது. வியாபாரிகள், வழக்கறிஞர்கள், பட்டறை முதலாளிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பட்டறைத் தொழிலாளிகள், உதிரி வேலை செய்வோர், கைவினைஞர்கள் விதிவிலக்கின்றி அனைவரின் வெறுப்பும், ஆத்திரமும் மன்னராட்சியின் மீதும் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடியினர் மீதும் ஒன்று குவிக்கப்பட்டிருந்தது.


மன்னனின் வரம்பில்லாத அதிகாரத்திற்கு எதிராகவும், மத நிறுவனத்திற்கு எதிராகவும் வால்டேர் எழுப்பிய போர்க்குரல் தனது படையணியில் ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டிக் கொண்டிருந்தது. தீத்ரோவின் நாத்திகப் பிரச்சாரமும் பொருள் முதல்வாதக் கருத்தும் அறிவுஜீவிகளையும் மதக் கொடுங்கோன்மைக்கு ஆளாகியிருந்த மக்களையும் தன்பால் வெகுவேகமாக ஈர்த்தது.


மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?"


மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?”

”வன்முறையைப் பயன்படுத்த முடியும் வரையில்தான் கொடுங்கோலன் எசமானனாக இருக்க முடியும். அவன் வெளியே துரத்தப்பட்டால் அவன் (தனக்கெதிராக) வன்முறை பயன்படுத்தப்பட்டது குறித்துப் புகார் செய்ய முடியாது…. வன்முறை மட்டுமே அவனை அதிகாரத்தில் வைத்திருந்தது. வன்முறை மட்டுமே அவனை வீழ்த்துகிறது” என்று ரூசோவின் விரல் செல்ல வேண்டிய பாதையைக் காட்டிக் கொண்டிருந்தது.


1789 – பிரெஞ்சுப் பொருளாதாரம் நிலைகுலைந்து கிடந்தது; தேசம் திவாலாகி விட்டது. உடனடியாக சிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னார்கள் மந்திரிகள்.


மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?” நாடு தழுவிய பஞ்சத்தால் நொடித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. மன்னனின் கேளிக்கைக்காகவும், மகாராணியின் பீதாம்பரத்திற்காகவும், இளவல்களின் மதுவிற்காகவும், பாதிரிகளின் விருந்துக்காகவும் மக்கள் மேலும் சில துளி ரத்தத்தைத் தியாகம் செய்யுமாறு கோரப்பட்டனர். மக்களும் ஒப்புக் கொண்டனர் தியாகம் செய்வதற்கு. தங்கள் உதிரத்தை அல்ல; மன்னராட்சியை!


மன்னர்களாலும், மத குருமார்களாலும் பன்னூறாண்டு காலமாக கறைப்படுத்தப் பட்ட தங்கள் இனிய தேசத்தை, அந்த மேட்டுக்குடிப் பன்றிகளின் ரத்தத்தைக் கொண்டே கழுவினார்கள் பிரெஞ்சு மக்கள்.


1789 முதல் 1794ஆம் ஆண்டுவரையிலான காலம் முழுவதும் துப்பாக்கி வேட்டுச் சத்தமே மக்களின் இசையாக இருந்தது.


பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி


பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி

ஆம்! புரட்சி வெடித்தது – திடீரென்று அல்ல; எதிர்பாராமல் அல்ல. வால்டேரும். தீத்ரோவும், ரூசோவும் தோற்றுவித்த அறிவொளி இயக்கம் திரியில் வைத்த தீயாகப் பிடித்துப் புகைந்து, எரிந்து பின்னர்தான் வெடித்தது. ’பாஸ்டி’ சிறை தகர்க்கப்பட்ட போதுதான் அந்த வெடிச்சத்தத்ததை உலகம் கேட்டது.


”சகோதரர்களே அணிதிரளுங்கள் சுதந்திரம் உங்களை அழைக்கிறது” என்று முழங்கினார்கள் புரட்சியாளர்கள். மன்னனின் வாளையும், மதகுருவின் சிலுவையையும் நெற்றியில் கட்டிக்கொண்டிருந்த தேசம் இப்போது சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற தங்களின் லட்சியம் பொறித்த பதாகையுடன் முன்னேறிச் சென்றது.


பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் மன்னனையும், மதத்தையும், சட்டத்தையும், அரசையும், பிரபுக்கள் சபையையும் குறித்து பெருமை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிரெஞ்சு மக்களோ தங்கள் அரசாங்கத்தை எதிர்த்தார்கள். பாதிரிகளை இகழ்ந்தார்கள். பிரபுக் குலத்தை வெறுத்தார்கள் சட்டங்களுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி, இலக்கண சுத்தமாக, துப்புரவாக நிலப்பிரபுத்துவத்தை துடைத்தெறிந்தது.


அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அனைத்துத் துறைகளிலும் அனைத்து விஷயங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளாய் விவசாயிகளின் பக்தி நிறைந்த உதடுகளால் முத்தமிடப்பட்ட சிலுவை. காலால் மிதிப்பதற்கும் தகுதியற்ற மலத்தைப் போல வெறுத்தொதுக்கப்பட்டதென்றால் மற்றவற்றைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?


”மக்களை மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்வானேன்? அவர்கள் அங்கிருந்து தங்கள் சாம்ராச்சியத்தைப் பார்ப்பார்கள். பிறகு அவர்களைக் கீழே இறக்கி அவர்களுக்கு உரிய இடத்தில் உட்கார வைக்க வேண்டும் உட்காருவார்களா?” என்று மன்னராட்சிக்கு வக்காலத்து வாங்கிய அறிஞன் ஒருவன் எச்சரித்தான்.


ஆனால், அது காலங்கடந்த எச்சரிக்கையாகிப் போனது.



பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர்.


18ம் நூற்றாண்டின் அறிஞர்களால் அறிவொளியூட்டப்பட்ட மக்கள்திரள் சிகரத்தின் உச்சியிலிருந்து தங்கள் சாம்ராச்சியத்தை பார்த்ததுடன் நிற்கவில்லை. தங்களைக் கீழே இறக்கிவிடுவதற்குள் அவர்கள் சிகரத்தின் உச்சியில் கோலோச்சிக் கொண்டிருந்த பதினாறாம் லூயியை – மன்னராட்சியை – கீழே தள்ளினர். சிவப்பு. வெள்ளை, நீல நிறத்தில் தங்கள் கொடியை அங்கே பறக்கவிட்டனர். எல்லா மனிதர்களும் சம உரிமையுடன் தான் பிறக்கிறார்கள் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கருத்துக்களைப் பேசவும், எழுதவும், அச்சிடவும் – அவை கேடாகப் பயன்படுத்தப் படாதவரை – உரிமை உண்டு என்று அறிவித்தனர்.


அடக்கி வைக்கப்பட்டிருந்த கருத்துச் சுதந்திரம் பீறிட்டுக் கிளம்பியது. முடியாட்சியை எதிர்த்த போராட்டத்தில் உழைப்பாளி மக்களுடன் தோளோடு தோள் நின்று போரிட்டு மக்களுக்காகவே தன் உயிரையும் கொடுத்தான் மாரட் என்ற இளம் பத்திரிகை யாளன். ”நான் ஒரு குடியரசுவாதி, மன்னர்களை எதிர்த்து எழுதுபவன். நான் ஒரு குடியரசுவாதி என் தாயின் கருப்பையிலிருக்கும்போதே நான் ஒரு குடியரசுவாதி” என்று முழங்கினான் லாவிகோம்டே என்ற பத்திரிக்கையாளன். மன்னன் அதிகாரத்திலிருந்து முற்றிலும் தூக்கியெறியப்படாத போதே தன் உயிரைத் தூசாக மதித்து ”மன்னர்களின் கிரிமினல் குற்றங்கள் – க்ளோவி முதல் பதினாறாம் லூயி வரை” என்று கட்டுரை எழுதினான். ”பத்திரிகையாளனை தண்டிப்பதற்கு எங்கே அரசுக்கு அதிகாரம் இருக்கிறதோ, அங்கே கொடும் குற்றமிழைத்த அதிகாரிகளைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை எழுத முடியாது” என்று முழங்கினான் ரோபஸ்பியே என்ற புரட்சியாளன். ஆனால் எதிரிகள் விஷயத்தில் புரட்சியாளர்கள் எச்சரிக்கையாகவே இருந்தனர். மன்னராட்சிக்கு ஆதரவான துதிபாடிகள் வாய் திறந்தால் தூக்கிலேற்றப்படுவர் என்று எச்சரித்தனர்.


அச்சத்திலும், அடிமைத்தனத்திலும் ஆழ்த்தப்பட்டிருந்த மக்களை நோக்கி அறைகூவினான் ஒரு எழுத்தாளன். ”மாபெரும் மனிதர்கள் எனப்படுவோர் அப்படித் தோன்றக் காரணம் என்ன தெரியுமா? நாம் மண்டியிட்டிருப்பதுதான். எழுந்து நில்லுங்கள்” என்று ஆணையிட்டான். விவசாயிகள் எழுந்து நின்றனர்.


இளவரசர்கள், பிரபுக்கள். மத குருமார்களின் மாளிகைகளில் ஆயுதம் தரித்த விவசாயிகள் புகுந்தனர். தங்களுடைய பாஸ்டி சிறைகளை அவர்கள் தகர்த்தெறிந்தனர். ”பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர். காடுகளையும். குளங்களையும் ஆறுகளையும் பண்ணைகளின் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் அனைத்து சட்டங்களையும் கொளுத்துங்கள். மனிதனையும் முயலையும் ஒன்றாகக் கருதும் அறிவுக்குப் புறம்பான மனித சமுதாயத்துக்கே இழுக்கான அனைத்து சட்டங்களையும் கொளுத்துங்கள்” என்ற குரல் எழுந்தது. ”பிரபுக்குலத்தோரின் பட்டாக்கள் அனைத்தும் மூன்றூ மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவை நகர கவுன்சில் மற்றும் மக்களின் முன்னிலையில் கொளுத்தப்பட வேண்டும்” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.


அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர். 

அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர்.


பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களுக்கு நட்டஈடு கிடையாது என்பது மட்டுமல்ல. மீண்டும் இவற்றை விலைகொடுத்து வாங்கும் உரிமையும் பிரபுக்களுக்கும் மதபீடங்களுக்கும் அடையாது என்று அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் புரட்சிக்கு இலக்கணம் படைக்கப்பட்டது.


சொத்துக்களை இழந்த கத்தோலிக்க மதபிடம் பொறுமிக் கொண்டிருந்தது. போப் புரட்சியைக் கண்டித்து அறிக்கை விட்டார். ஆனால் கண்டனக் குரல் எழுப்புவதற்காகப் பாதிரிகள் வாய் திறப்பதற்குள் அடுத்த அடி விழுந்தது.


பிராட்டஸ்டென்டுகள், யூதர்கள் மற்றும் கறுப்பின மக்கள் மீது கத்தோலிக்க மடாலயம் செலுத்திவந்த ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது. கிறித்தவர்களிடம் ஊட்டப்பட்டிருந்த யூத எதிர்ப்பு வெறியை எதிர்த்து கிரெகோ என்பவர் பேசினார்: “உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் விட்டுச்செல்லும் சொத்தில் யூத எதிர்ப்பு வெறியும் இடம்பெறப் போகிறதா? யூதர்களின் ஊழல்களையும், குற்றங்களையும் பற்றி பேசுபவர்களே கேளுங்கள்! அவர்களது ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் தோற்றுவாய் நீங்கள்தான் – கிறித்தவர்களாகிய நீங்கள் தான் உங்கள் பாவத்துக்கும், உங்கள் முப்பாட்டன்களின் பாவங்களுக்கும் கழுவாய் தேடுங்கள்! அவர்களை நல்லொழுக்க சீலர்களாக மாற்றுவதற்கும் நீங்களே முயல்வதன் மூலம் அதைச் செய்யுங்கள்”


உள்நாட்டின் சமூக நிலை பற்றி மட்டும் பேசுவதுடன் புரட்சிக்காரர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. மனித சமூகத்தின் சுதந்திரத்துக்கு எதிராக எவ்வித ஆக்கிரமிப்புப் போரிலும் ஈடுபடமாட்டோம் என்று அறிவித்தார்கள்.


ரொகெட் டி லிஸ்லி


ரொகெட் டி லிஸ்லி

”குடியரசின் கைக்கூலிகளிடம் இருந்து புரட்சியைப் பாதுகாக்க இளைஞர்கள் போர் முனைக்குச் செல்லுங்கள். மணமான ஆண்கள் ஆயுதங்களைத் தயார் செய்யுங்கள். சிப்பாய்களுக்கு உணவு கொண்டு செல்லுங்கள். பெண்கள் பாசறைகளை அமைக்கட்டும் மருத்துவமனைகளில் சேவை செய்யட்டும். சிறுவர்கள் காயங்களுக்குக் கட்டுப் போடும் துணிகளை சேகரிக்கட்டும். முதியவர்கள் வீதிமுனைகளில் நின்று சிப்பாய்களை உற்சாகப்படுத்துங்கள் சக்ரவர்த்திகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள். நாட்டின் ஒற்றுமைக்காகப் பிரச்சாரம் செய்யுங்கள்” என்று அறைகூவல் விட்டது புரட்சி அரசு.


விஞ்ஞானம், கலை, கல்வி என்று பண்பாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதுமலர்கள் பூத்தன. புரட்சிப் படையணியின் கீதமாக இறவாப் புகழ்பெற்ற ’மார்செயில்ஸ்’ கீதத்தை உருவாக்கியதன் மூலம் கோஸ்ஸெக் புரட்சியின் இசையமைப்பாளன் ஆனான். சுதந்திரத்திற்கு சமத்துவத்திற்கு, மனித சமூகத்திற்கு தாய் நாட்டிற்கு இயற்கைக்கு என்று அவனது இதயத்துடிப்பையே இசையாக மாற்றி அர்ப்பணித்தான். விஞ்ஞானமோ முன்னெப்போதும் கண்டிராத அளவு முன்னோக்கிப் பாய்ந்து சென்றது. பால்சாக், ஹியூகோ போன்ற மாபெரும் எழுத்தாளர்களை பிரான்ஸ் கருத்தரித்தது.


பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூட்டும் உரிமை, உயிர்வாழும் உரிமை, ஆயுதம் ஏந்தும் உரிமை அனைத்தையும் வென்றெடுத்த பிரான்ஸ் அன்றைய மனித நாகரிகத்தின் முன்வரிசையில் எக்காளமிட்டு சென்று கொண்டிருந்தது. நூற்றாண்டுகளை நொடிகளில் கடந்து சென்று கொண்டிருந்தது புரட்சி. அகன்ற விழிகளுடனும், நின்று போன இதயத் துடிப்புடனும் பிரான்சைப் பார்த்துக் கொண்டிருந்தது உலகம். ஆம்! பிரான்சில் தோன்றிய புரட்சிப் பூகம்பம் மனித சமூகத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கி ”வா… என்பின்னே” என்று ஆணையிட்டது.


பிரெஞ்சுப் புரட்சி மன்னராட்சியை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டியது என்பதும் அது முதலாளித்துவ ஜனநாயகம் மட்டுமே என்ற விஷயமும் நாம் அறிந்தது தான். ஆனால் தொழில்துறை முதலாளிகளாலேயே தலைமை தாங்கப்பட்டு நடத்தப்பட்ட புரட்சி என்றோ, புரட்சியின் தத்துவ ஆசிரியர்களான ருஸோ, தித்ரோ பாபெஃப் போன்றோர் முதலாளிவர்க்கத்தின் உணர்வு பூர்வமான சேவகர்கள் என்றோ புரிந்து கொள்வது தவறு.


1794 ல் ஆஸ்திரிய, டச்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஒன்று சேர்ந்து பிரெஞ்ச் புரட்சிகர படையினை தோற்கடித்தது.

1794 ல் ஆஸ்திரிய, டச்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஒன்று சேர்ந்து பிரெஞ்ச் புரட்சிகர படையினை தோற்கடித்தது.


மன்னராட்சியும், மத நிறுவனங்களும் காலத்தின் தேவையை நிறைவு செய்ய வில்லை; அவை அறிவுக்கு ஒவ்வாதவை; இனி இவையெல்லாம் ஒழிக்கப்பட்டு அவற்றினிடத்தில் நிரந்தரமான உண்மையும். இயற்கையின் அடிப்படையிலான சமத்துவமும் இழக்கவோ துறக்கவோ இயலாத மனித உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அவர்களது லட்சியமாக இருந்தது. அவர்கள் முதலாளி வர்க்கத்திற்காகப் புரட்சி செய்யவில்லை. மனிதகுலம் முழுமைக்குமாகச் செய்வதாகத்தான் அறிவித்தார்கள் அவ்வாறுதான் நம்பினார்கள். அவர்கள் மனிதகுலத்தின் விடுதலை என்று பேசினார்களே ஒழிய பாட்டாளிவர்க்கத்தின் சர்வாதிகாரம் பற்றிப் பேசவில்லை. காரணம் அவர்களால் பேச இயலாது வரலாறு அவர்களது சிந்தனைக்கு விதித்திருந்த வரம்பு அது. ஸ்பார்ட்டகஸ் சோசலிசத்திற்காகப் போராடியிருக்க முடியாது!


தீத்ரோவிடம் இயங்கியலின் துவக்க வடிவம் தென்பட்டதையும், பாபெஃப் இன் கற்பனா சோசலிசத்தையும், ரூசோ புரட்சியில் வன்முறையின் பங்கு குறித்துக் குறிப்பிட்டதையும் எங்கெல்ஸ் நினைவு கூறுகிறார். இவர்கள் மட்டுமல்ல பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களான போராளிகள் புரட்சியின் ஊடாக எழுப்பிய முழக்கங்கள் மனிதகுல விடுதலையைக் கோரும் அவர்களது தணிக்கவொண்ணாத தாகத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன. புரட்சியின் உக்கிரமானதொரு கட்டத்தில் அவர்கள் அறிவித்தார்கள். ”எல்லா அரசுகளுக்கும் நாங்கள் எதிரிகள், எல்லா மக்களுக்கும் நாங்கள் நண்பர்கள்” என்று. “முடியாட்சியின் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுங்கள் நாங்கள் உதவுகிறோம்” என்று பகிரங்கமாகப் பிற நாட்டு மக்களுக்குப் பிரகடனம் செய்தார்கள். 1793 இல் முடியரசுவாதிகளின் கலகத்தை ஈவிரக்கமின்றி ஒடுக்கினார்கள். அவர்களுக்கு ஜனநாயகம் கிடையாது என்பதை பகிரங்கமாக அறிவித்தார்கள். 1794க்குப் பின் எதிர்ப்புரட்சி சக்திகளின் கை மேலோங்கிய போது உவகையுடன் புரட்சியின் நலனுக்காக – மனிதகுலத்தின் நலனுக்காக தம் உயிரை ஈந்தார்கள்.


ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் (பாரிஸ் கம்யூனின் தொழிலாளி வாக்கப் போராளிகள்) தோன்ற வேண்டியிருந்தது.

ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் தோன்ற வேண்டியிருந்தது.


அறிவின் ஆட்சி குறித்த தனது கேட்பாடு மக்களுக்கெதிரான பயங்கர ஆட்சியாக மாறும் என்று ரூசோ கற்பனையும் செய்திருக்க முடியாது. ஆனால் நடந்தது அதுதான். தனது ஆற்றலில் நம்பிக்கை இழந்த முதலாளிவர்க்கம் நெப்போலியனின் எத்தேச்சாதிகாரத்திடம் சரணடைந்தது. சுதந்திரம், சிறு விவசாயிகளும் சிறு முதலாளிகளும் தங்கள் சொத்தை விற்பதற்கான சுதந்திரமாக மாறியது. எங்கெல்லின் சொற்களில் சொல்வதானால் வாளுக்குப் பதிலாகத் தங்கம் வந்துவிட்டது, முதலிரவு உரிமை நிலப்பிரபுக்களிடமிருந்து முதலாளித்துவப்பட்டறை அதிபர்களுக்கு மாற்றப்பட்டது.”


ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை  உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் (பாரிஸ் கம்யூனின் தொழிலாளி வாக்கப் போராளிகள்) தோன்ற வேண்டியிருந்தது. 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சைத் தனது அச்சாகக் கொண்டுதான் உலகம் சுழன்றது என்பதை யாரால் மறுக்க முடியும்?


எனில் 20ம் நூற்றாண்டு? சமீபத்தில் தமிழகத்திற்குச் சுற்றுப்பயணம் செய்யவந்த ஒரு பிரெஞ்சுப் பேராசியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பெருமைமிக்க புரட்சிகரப் பாரம்பரியத்தைப் பெற்ற பிரான்ஸில் ஒரு பாசிஸ்டு கட்சி சமீபத்திய தேர்தலில் ஒரு பிராந்தியத்தில் 14 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்று கவலையுடன் குறிப்பிட்டார். சிறிதுநேர சிந்தனைக்குப்பின் இல்லை. நாங்கள் ஜனநாயகப் பாரம்பரியமிக்கவர்கள் ஒருபோதும் அங்கே பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வரஇயலாது. அனுமதிக்கவும் மாட்டோம் என்று பதற்றத்துடன் கூறினார். ஆம் ரூசோவின் எழுத்துக்களும் ஜாகோயின் புரட்சிக்காரர்களின் முழக்கங்களும் காற்றில் கரைந்துவிடக் கூடியவையா என்ன?


அன்று புரட்சியின் போது ஒரு தத்துவார்த்த பாத்திரம் ஆற்றிய ரூசோ, இன்றைக்கு மற்ற நாடுகளின் சோசலிசப் புரட்சியில் ஒரு கிளர்ச்சிப் பாத்திரம் ஆற்றுகிறார் என்றூ எங்கெல்ஸ் குறிப்பிட்டார். பிரான்சின் புரட்சியாளர்கள் இந்தியப் புரட்சிக்கும் உத்வேகமூட்டுவார்கள். மார்செயில்ஸ் கீதம் இங்கேயும் ஒலிக்கும்.


– சூரியன், புதிய கலாச்சாரம் 1989


புரட்சியின் வரலாறு:

பிரஞ்சுப் புரட்சியின் கோரிக்கைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நிறைவேறி விட வில்லை முடியாட்சியும் சட்டெனத் துக்கியெறியப் பட்டு விடவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள், இழுபறி நிலைமைகள், துரோகம் ஆகியவற்றைக் கடந்துதான் புரட்சி வெற்றி பெற்றது. அந்நிகழ்ச்சிகளின் தொகுப்பைக் கீழே தருகிறோம்.

பாஸ்டில் தகர்ந்தது!

பாஸ்டில் சிறை தகர்ப்பு
பாஸ்டில் சிறை தகர்ப்பு

1789 மே 5ம் தேதி பிரான்சின் தேசிய அசெம்ளியைக் கட்டுகிறான் மன்னன் தேசிய அசம்பிளியில் மூன்று பிரிவினர் இருந்தனர். பிரபுக்கள், மத குருமார்கள், மக்கள். இதில் அதிக வரி செலுத்தியவர்கள் மக்கள்தான். ஆனால் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு ஒட்டு மட்டுமே இருந்ததால் மக்கள் தரப்பிலிருந்து சொல்லப்படும் கருத்து எப்போதுமே எடுபடுவதில்லை. எனவே ’அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர். சில பிரபுக்களும் மத குருமார்களும் கூட அவர்களுடன் சேர்ந்தனர்.

ஜூலை 14 பாரிஸ் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு சென்று பாஸ்டி (Bastile) சிறையைத் தகர்க்கின்றனர். செய்தி கேள்விப்பட்ட மன்னன் ”எதற்காக கலாட்டா செய்கிறார்கள்?” என்று அமைச்சர்களைக் கேட்டானாம். ”கலாட்ட அல்ல மன்னர் பெருமானே இது புரட்சி” என்று பதில் சொன்னாராம் அமைச்சர். சிறை தகர்ப்பைத் தொடர்ந்து நடுத்தரவாக்கத்தினர் அடங்கிய புரட்சிக் கமிட்டி பாரிஸ் நகரத்தின் நிர்வாகத்தைக் கையிலெடுத்தது. இதைப் பின்பற்றி நாடு முழுவதும் புரட்சி அரசாங்கங்கள் தோன்றின விவசாயிகள் பிரபுக்களின் மாளிகைகளைக் சூறையாடினர் கடன் பத்திரங்களுக்கும். பிரபுக்களின் நிலப் பட்டாக்களுக்கும் தீ வைத்தனர்.

பிரபுக்கள் ஒட்டம்! குடியரசு மலர்கிறது!

பெண்களின் அக்டோபர் அணிவகுப்பு
பெண்களின் அக்டோபர் அணிவகுப்பு

ஆகஸ்ட் 4: விவசாயிகளின் எழுச்சியில் பீதியுற்ற பல பிரபுக்கள் நாட்டைவிட்டே ஓடுகிறார்கள் அசெம்பிளி (மக்கள்) கூடுகிறது. நிலைமையைப் புரிந்துகொண்ட பிரபுக்களில் சிலர் தாங்களே முன்வந்து தங்கள் பரம்பரை சலுகைகளை தியாகம் செய்வதாக அறிவிக்கிறார்கள். பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. டென்னிஸ் அரங்கத்தில் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கத் தொடங்குகி அசெம்பிளி.

அக்டோபர் 5: கடும் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஆத்திரமுற்ற மக்கள் கூட்டம் (பெரும்பாலும் பெண்கள்) மன்னனின் வெர்சேய் அரண்மனையை முற்றுகையிடுகிறது. அரசனையும், அரசியையும் பிணையக் கைதிகளாகப் பிடித்து பாரிசுக்குக் கொண்டு வருகிறது.

கிறித்தவ மடங்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப் படுகின்றன. மன்னன் நாட்டைவிட்டுத் தப்பியோட முயன்று எல்லையில் பிடிபடுகிறான். இருந்தும் அவனை மன்னனாக அங்கீகரிக்கிறது அசெம்பிளி.

1791 அக் 1: முதல் குடியரசு அறிவிக்கப்படுகிறது. மனிதனின் அடிப்படை உரிமைகள் குறித்த பிரகடனம் வெளியிடப்படுகிறது. மன்னனை வைத்துக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு தேசிய சபைக்குத் தரப்படுகிறது. மன்னனை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கோஷ்டி உருவாகின்றது. பெரும் மக்கள் கூட்டம் மன்னனின் அரண்மனையில் புகுந்து அவனது காவலர்களைக் கொல்கிறது. மன்னன் சிறையிலிடப்படுகிறான். எல்லையில் போர் தொடங்குகிறது.

மன்னனுக்கு மரணதண்டனை!

பதினாறாம் லூயி கில்லட்டில் ஏற்றப்படுகிறார்
பதினாறாம் லூயி கில்லட்டில் ஏற்றப்படுகிறார்

1792 செப் 21: பெயரளவில் மன்னனை வைத்துக் கொள்வதும் இல்லையென அறிவிக்கப்படுகிறது. பாதிரிகள் அனைவரும் குடியரசின் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. போப் புரட்சிக்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிரான்சில் இருந்த வாட்டிகனின் (போப்பின்) சொத்துக்கள் பறிகுதல் செய்யப்படுகின்றன.

இதற்கிடையே குடியரசின் அமைச்சரவை கவிழ்கிறது. புரட்சிக் கமிட்டிகள் அதிகாரத்தை மேற்கொள்கின்றன. ஓடிப்போன பிரபுக்கள் அண்டை நாடுகளின் உதவியுடன் புரட்சியை ஒழிக்க முயல்கின்றனர். லூயி மன்னன் விசாரனைக்குட் படுத்தப்படுகிறான். அந்நியருடன் கூட்டு சேர்ந்து பிரஞ்சு மக்களுக்கு எதிராக சதி செய்ததற்காக அவனது தலை (கில்லட்டினில்) துண்டிக்கப்படுகிறது. அவனது மனைவியான அரசி மேரி அண்டாய்னேட்டுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு தலை துண்டிக்கப்படுகிறது. குடியரசுக்கு எதிராகவும், மன்னனுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட ஆயிரக்கணக்கான கைக்கூலிகள் கில்லெட்டினுக்குப் பலியாகின்றனர்.

ஜாகோபின் கழகம்
1789இல் துவக்கப்பட்ட புரட்சிக்குழு. இக்கழகத்தைச் சேர்தவர்கள் தீவிர ஜனநாயகவாதிகள். 1791இல் மன்னன் தப்பியோட முயன்றதிலிருந்து இவர்களின் அரசியல் செல்வாக்கு பெறத்தொடங்கியது. 1792இல் அமைச்சரவை கவிழ்ந்தவுடன் இவர்கள் தான் உறுதியாக நின்று முடியரசுவாதிகளின் கலகத்தையும், அயல் நாட்டு ஆக்கிரமிப்பையும் ஒருங்கே முறியடித்தார்கள். பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களான ரொபாஸ்பியே, மாரட், டாண்டன் ஆகியோர் இக்கழகத்தைச் சேர்ந்தவர்களே!

 

பிரஞ்சு புரட்சியின் முன்னோடிகள்:

பிரஞ்சு புரட்சியின் முன்னோடிகள்:

வால்டேர் (1694-1778): பிரெஞ்சு எழுத்தாளர் நாடகாசிரியர். முடியாட்சியை

எதிர்த்து எழுதியதற்காகச் சிறைசென்றவர்; நாடு கடத்தப்பட்டவர். மதம் நிறுவனமாக இருப்பதையும், கத்தோலிக்க மதக் கொடுங்கோன்மையையும் சாகும் வரை எதிர்த்தார். எனவே இவரது உடலைப் புதைக்கக்கூட இடுகாட்டில் இடம்தர முடியாதென்று கத்தோலிக்க மடாலயம் மறுத்துவிட்டது.

ரூசோ (1712-1778): பிரெஞ்சு தத்துவவியலாளர். அறிவொளி இயக்கவாதி. ”ஆரம்பத்தில் சமமாக இருந்த மக்கள் நாகரீகம் வளர்ந்தபின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆளாயினர். இந்த ஏற்றத்தாழ்வு விவேகமான அரசு ஒன்றின் மூலம் நீக்கப்பட வேண்டும்” என்பது இவரது தத்துவம்.

தீத்ரோ (1713 – 84): பிரெஞ்சு பொருள்முதல்வாத தத்துவவியலாளர், எழுத்தாளர்.

டான்டன் (Danton): 1787இல் இவர் மன்னரது ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினர். 1790 இல் மாரட் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜாகோயின் கழகத்தில் இணைந்தார். புரட்சியின் சிறந்த ராஜதந்திரி எனப் போற்றப்படுபவர்.

ரோபஸ்பியே (Robespierre): தனது 31 வயதிலேயே அசெம்பிளி உறுப்பினரான இவர் ரூஸோ’வின் தத்துவத்தைப் பின்பற்றுபவர். ஜாகோபின் கழக முன்னோடி.

மாரட் (Marat): மனிதனும் அடிமைச் சங்கிலியும் எனும் நூலை எழுதியவர். பாரிஸ் புரட்சிக் கமிட்டி உறுப்பினர். மன்னனின் தலையைச் சிவவேண்டும் என முதல் குரல் கொடுத்தவர். முடியாட்சியின் கைக்கூலிப் பெண் ஒருத்தியால் குளியலறையில் கொல்லப்பட்டார். மக்களுக்காக மடிந்த தியாகி என்பதால் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவர் பெயரைச் சூட்டினர். ஒவியம், நாடகம், கதை என்று பல வடிவங்களில் மாரட்டின் புகழ் பிரான்சில் நிலை பெற்றுவிட்டது.

__________________________________