Sunday, 29 December 2019

MUSLIMS MUST HAVE SEPARATE STATE -POET IQBAL FIRST SPEECH 1930 DECEMBER 29


MUSLIMS MUST HAVE SEPARATE STATE -POET IQBAL FIRST SPEECH 1930 DECEMBER 29



1930 –DECEMBER 29 அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.

சர் முகமது இக்பால் (Muhammad Iqbal, உருது: محمد اقبال; நவம்பர் 9, 1877 – ஏப்ரல் 21, 1938) என்பவர் பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், அரசியல்வாதியும் ஆவார். உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெரும் இலக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன[1]. பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களுக்கெனத் தனிநாடு கோரிய இவரது தூரநோக்கு பாகிஸ்தான் என்ற நாட்டைப் பின்னர் உருவாக்குவதற்கு ஊக்கமூட்டியது.

வாழ்க்கைக் குறிப்பு
விலை மதிக்க முடியாத படைப்புகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய அல்லாமா இக்பால் 1873 பிப்ரவரி 22 இல் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவராக விளங்கியவர்.

மௌலானா அபுல் அலா மௌதுதியின் சந்திப்பு அல்லாமா இக்பாலின் சிந்தனையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவரது கவிதைப் பயணம் ஆன்மிக வெளிச்சம் மிகுந்த பாதையில் அமைந்தது. மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப் பணியினைத் தொடர்ந்தார்.

இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் தனது படிப்பை முடித்துக் கொண்ட இக்பால் சட்டத்துறையில் தொழிலை ஆரம்பித்தார். ஆனாலும் அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், மற்றும் சமயம் ஆகிய துறைகளிலேயே அவர் நிறைய எழுதினார்.

இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.

Friday, 27 December 2019

SALMAN KHAN ,BOLLYWOOD LEGEND OF controversial BORN DECEMBER 27,1965



SALMAN KHAN ,BOLLYWOOD LEGEND OF controversial  BORN DECEMBER 27,1965



சல்மான் கான் (Salman Khan, இந்தி: सलमान ख़ान, பிறப்பு: டிசம்பர் 27, 1965) ஒரு பிரபல இந்திய திரைப்பட நடிகரும், பாலிவுட் நடிகருமாவார்.

பீவி ஹோ தோ ஐசி (1988) என்ற திரைப்படத்தில் அறிமுகமான கான், மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற மைனே பியார் கியா (1989) மூலம் இந்தி திரைப்படத்துறையில் களமிறங்கினார். அத்திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் வென்றார். சாஜன் (1991), ஹம் ஆப்கே ஹே கோன் (1994), பீவி நம்பர் 1 (1999) போன்ற பாலிவுட்டின் மிகப் பெரிய வெற்றி படங்களும் அவரை இந்திய திரைப்படத்துறையில் நிலைநிறுத்தி உள்ளன.

1999ல், குச் குச் ஹோதா ஹே (1998) திரைப்படத்தில் தம் சிறப்பான நடிப்பிற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதினை பெற்ற கான், அப்போதிருந்து ஹம் தில் தே சுக்கே சனம் (1999), தேரே நாம் (2003), நோ என்ட்ரி (2005) மற்றும் பார்ட்னர் (2007) உள்பட பல சிறந்த மற்றும் வர்த்தகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றிகள் சல்மான் கானை இந்தி சினிமாவின் மிக புகழ்வாய்ந்த முன்னனி நடிகர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது.[1][2

வாழ்க்கை வரலாறு
தொழில்வாழ்க்கை
சல்மான் கான், 1988ல் பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் அவர் ஒரு துணை நடிகர் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். சூரஜ் ஆர். பர்ஜத்யாவின் திரைப்படமான மைனே பியார் கியா (1989) திரைப்படத்தில் தான் அவர் முதன்முறையாக முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அப்படம் வர்த்தரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அப்படம் அவருக்கு பெற்று தந்தது.

ஜோத்பூர்:


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சல்மான்கான், ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற இந்திப்படத்தில் நடிப்பதற்காக கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்தார். அக்டோபர் 1-ந்தேதி இரவு இவர் வாகனம் ஒன்றில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.அவருடன் நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரும் வாகனத்தில் இருந்தனர். அவர்கள் கங்காணி கிராமப்பகுதியில் சென்ற போது ‘பிளாக்பக்’ எனப்படும் அரிய வகை மான்கூட்டம் தென்பட்டது. அதில் 2 மான்களை சல்மான்கான் வேட்டையாடியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியவகை மான்களை வேட்டையாடியதாக சல்மான்கான் உள்பட 5 பேர் மீதும் ஜோத்பூர் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் கடந்த மாதம் 28-ந்தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்தார். பின்னர் இந்த வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அரிய வகை மான்களை வேட்டையாடிய இந்த வழக்கில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். எனினும் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.  குற்றவாளியான சல்மான்கானுக்கு   5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து சல்மான்கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  சல்மான் கான் தனக்கு ஜாமீன் வழங்கி தாக்கல் செய்த மனு இன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

இதற்கிடையே, சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதியை ராஜஸ்தான் திடீரென இடமாற்றம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மொத்தம்  87 நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 30 தேதி வரையில் ராஜஸ்தானில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதும் வழக்கம். ஆனால், இம்முறை முன்கூட்டியே இடமாற்றம் நடந்துள்ளது. #tamilnews



1990ல், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான நக்மாவுடன் அவர் இணைந்து நடித்த பாக்ஹி|பாக்ஹி என்ற ஒரேயொரு திரைப்படம் மட்டுமே வெளியானது. இந்த படமும் அவருக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, 1991-ஆம் ஆண்டில், பத்தர் கே பூல் , சனம் பேவஃபா மற்றும் சாஜன் ஆகிய மூன்று வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார்.[3] இந்த மாபெரும் ஆரம்ப பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகள் இருந்த போதினும், அவரின் 1992-1993-ல் வெளியான அனைத்து திரைப்படங்களும் தோல்வி அடைந்தன.[3]

1994ல், மாதுரி தீட்சித்துடன் அவர் இணைந்து நடித்த ஹம் ஆப்கே ஹே கோன் திரைப்படத்தில் (சூரஜ் பர்ஜத்யாவுடனான அவரின் இரண்டாவது கூட்டணியில்) மீண்டும் வெற்றி நாயனாக மாறினார். அந்த படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. அத்துடன் அதுவரை பாலிவுட்டின் மிகப் பெரிய வசூல் சாதனை அளித்த திரைப்படங்களில் ஒன்றாகவும் அது மாறியது. அதுவரையிலான காலத்தில், மிக அதிக வசூல் அளித்த திரைப்படங்களில் இந்த படம் நான்காவது இடத்தைப் பிடித்தது.[4] ஒரு வர்த்தகரீதியான வெற்றிப்படமாக மட்டுமில்லாமல், சல்மான்கான் அவரின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டார். இது சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பரிந்துரையிலும் அவரை இரண்டாவது முறையாக கொண்டு சேர்த்தது. கான் நடித்த மூன்று திரைப்படங்கள் அந்த ஆண்டிலேயே வெளியாயின. ஆனால் அவரின் முந்தைய படங்களைப் போன்று அவற்றில் ஒன்று கூட பாக்ஸ் ஆபீசில் வெற்றியைக் காட்டவில்லை. எவ்வாறிருப்பினும், அமீர்கானுடன் அவர் இணைந்து நடித்த அண்தாஜ் அப்னா அப்னா திரைப்படத்தில் அவர் நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றார். 1995ல், அவர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, ராகேஷ் ரோஷனின் கரண் அர்ஜூன் வெற்றிப்படத்தில் மீண்டும் தம்மை நிலைநிறுத்தி கொண்டார்.[3] அந்த திரைப்படம் அவ்வாண்டின் இரண்டாவது மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கரண் என்ற அவரின் கதாபாத்திரம் அவரை மீண்டும் ஒருமுறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கு கொண்டு சென்றது. ஆனால் தவிர்க்க முடியாமல் கரண் அர்ஜீனில் அவருடன் இணைந்து நடித்த ஷாருக்கான் அம்முறை விருதை வென்றார்.

1996-ஆம் ஆண்டு சல்மான் கானின் இரண்டு படங்கள் வெளியாயின. ஒன்று, அறிமுக இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியால் இயக்கப்பட்டு மனிஷா கொய்ராலா, நானா பாட்டேக்கர் மற்றும் சீமா பிஸ்வாஸ் ஆகியோருடன் இவர் இணைந்து நடித்த காமோஷி: தி மியூசிக்கல் என்ற படமாகும். பாக்ஸ் ஆபீஸ் அளவில் இது தோல்விப்படமாக இருந்த போதினும், இந்த படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டது. அடுத்ததாக அவரும், சன்னி தியோல் மற்றும் கரிஷ்மா கபூரும் இணைந்து நடித்த ராஜ் கன்வரின் அதிரடி படமான ஜீத்" வெளியாகி இருந்தது.

1997ல், ஜூடுவா மற்றும் அவ்ஜார் ஆகிய இரண்டு படங்கள் வெளியாயின. முந்தையது கரிஷ்மா கபூருடன் இணைந்து, டேவிட் தாவனினால் இயக்கப்பட்ட நகைச்சுவை படம். இதில் அவர் பிறந்த போதே பிரிக்கப்பட்ட இரட்டையர்களின் கதாபாத்திரத்தை ஏற்று இரட்டை வேடத்தில் நடித்தார். அப்படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது. இரண்டாவது படம் பெயரளவிற்கே பிரபலப்பட்டது.

1998-ஆம் ஆண்டு சல்மான் கான் நடித்த ஐந்து வித்தியாசமான திரைப்படங்கள் வெளியாயின. கஜோலுடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை படமான பியார் கியா தோ டர்னா கியா திரைப்படம் அவருக்கு அவ்வாண்டின் முதல் படமாக அமைந்தது. அது அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இதை தொடர்ந்து வெளியான ஜப் பியார் கிசிசே ஹோதா ஹே]] திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.[3] இந்த படத்தில் கானின் நடிப்பு அவருக்கு பல நல்ல பாராட்டுக்களைப் பெற்று தந்தது என்பதுடன் விமர்சகர்களிடம் இருந்தும் ஆதரவான விமர்சனங்களை அளித்தது. அவர் அதே ஆண்டில் அறிமுக இயக்குனரான கரண் ஜோகரின் குச் குச் ஹோதா ஹே திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஷாருக்கான் மற்றும் கஜோலுடன் இணைந்து நடத்த இப்படத்தில், அவர் அமன் என்ற ஒரு கதாபாத்திரத்தில் பின்பகுதியில் சிறிய காட்சியில் மட்டுமே தோன்றி இருந்தார். எவ்வாறிருப்பினும், அதுவும் அவருக்கு பாராட்டைப் பெற்று தந்தது.

1999ல், கான் மூன்று வெற்றிப்படங்களில் நடித்தார்: ஹம் சாத் சாத் ஹே: வீ ஸ்டேண்ட் யுனெடட் என்ற படம் சூரஜ் பர்ஜத்யாவுடன் அவரை மூன்றாவது முறையாக அணி சேர்த்தது; பீவி நம்பர் 1, இது அந்த ஆண்டில் அதிக வசூலீட்டிய திரைப்படமாக அமைந்தது; ஹம் தில் தே சுக்கே சனம், இது ஒரு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன், அவரை மற்றொரு முறை மீண்டும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கான பரிந்துரையிலும் கொண்டு வந்து சேர்த்தது.

2000-ஆம் ஆண்டு, கான் ஆறு படங்களில் நடித்திருந்தார். இவற்றில் சுமாரான வெற்றியைப் பெற்ற ஹர் தில் ஜோ பியார் கரேன்கா மற்றும் சோரி சோரி சுப்கே சுப்கே ஆகிய இரண்டு படங்களைத் தவிர பெரும்பாலானவை படுமோசமாகவும், வர்த்தகரீதியாகவும் தோல்வி அடைந்தன. அந்த இரண்டு படங்களிலும் முறையே ராணி முகர்ஜி மற்றும் ப்ரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். 2001 வரை தாமதமாகி வெளியான சோரி சோரி சுப்கே சுப்கே திரைப்படத்தில் அவரின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் கான் ஒரு பெரிய பணக்கார தொழிலதிபர் கதாபாத்திரத்தைக் கையாண்டிருந்தார்.[5][6]

2002-ஆம் ஆண்டு வெளியான ஹம் தும்ஹாரே ஹே சனம் படத்திலும் இவர் நடித்திருந்தார். இது பாக்ஸ் ஆபிஸில் ஓரளவிற்கு வெற்றி பெற்றது.

2003-ஆம் ஆண்டு வெளியான தேரே நாம் படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்யும் வரை கானின் தொடர்ச்சியான படங்கள் பாக்ஸ் ஆபீசில் தோல்வி அடைந்தன. இந்த படம் நல்ல வசூலை எட்டியது. அத்துடன் அவரின் நடிப்பும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. "சல்மான் கான் அந்த T கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக பொருந்துகிறார். சிரமமான காட்சிகளிலும் அவர் அற்புதமாக நடிக்கிறார்." என்று திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் குறிப்பிட்டார்.[7] அவர் தொடர்ந்து முஜ்சே ஷாதி கரோகி (2004) மற்றும் நோ என்ட்ரி (2005) ஆகிய நகைச்சுவை படங்களுடன் பாக்ஸ் ஆபீசில் தமது வெற்றியைத் தொடர்ந்தார்.[3] ஜானே மன் மற்றும் பாபுல் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிசில் சரியாக வெற்றியடையாததால் 2006ஆம் ஆண்டு அவருக்கு ஒரு தோல்விகரமான ஆண்டாக அமைந்தது.

2007ஆம் ஆண்டை, சல்மான் கான் சலாம் ஈ இஸ்க் படத்துடன் தொடங்கினார். அதுவும் பாக்ஸ் ஆபிசில் வெற்றியைக் காட்டவில்லை. அவரின் அடுத்த படமான பார்ட்னர் பாக்ஸ் ஆபீசில் பெரும் வெற்றி பெற்றது,[8] அடுத்ததாக அவர் தம் முதல் ஹாலிவுட் திரைப்படமான மேரிகோல்டு: அட்வன்சர் இன் இந்தியா என்ற படத்தில் அமெரிக்க நடிகை அலி லார்டெருடன் நடித்தார். ஓர் இந்திய ஆணுக்கும், ஓர் அமெரிக்க பெண்ணுக்கும் இடையிலான காதலைச் சொல்லும் இப்படம் வர்த்தகரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.

2008 முழுவதும் கான் மூன்று படங்களில் நடித்தார், அவை அனைத்துமே தோல்வி அடைந்தன. ஜிம் கேரியின் ஹாலிவுட் வெற்றிப்படமான புரூஸ் ஆல்மைட்டி என்பதை தழுவி காட் துஸ்சே கிரேட் ஹோ என்ற படம் என்பது உருவாக்கப்பட்டது. இந்த படம் படுமோசமான தோல்வியைத் தழுவியது.[9] அந்த ஆண்டின் இரண்டாவது படமான ஹீரோஸ், விமர்சகர்களிடம் இருந்து பாராட்டைப் பெற்றது. ஆனால் வசூல்ரீதியாக வெற்றியடையவில்லை என்று கூறப்பட்டது.[10]

தனிப்பட்ட வாழ்க்கை
கான், புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளரான சலீம் கான் மற்றும் அவர் முதல் மனைவி சல்மா கானுக்கு (மணமாவதற்கு முன்னிருந்த பெயர் சுசீலா சரக்) பிறந்த மூத்த மகனாவார். சல்மான் கானுக்கு, அர்பாஜ் கான் மற்றும் சோஹேல் கான் என்ற இரண்டு சகோதரர்களும், அல்விரா மற்றும் அர்பிதா எனும் இரண்டு சகோதரிகளும் உண்டு.

தீவிர உடற்பயிற்சி செய்வதில் சல்மான் கான் மிகவும் ஆர்வம் கொண்டவர். 2004ல், உலகின் அழகான ஆண்களில் 7வது இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அமெரிக்காவின் பீப்பிள் இதழாலும் இந்தியாவில் அழகான ஆண்மகன் என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] சல்மான் கான் பல்வேறு சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.[12]

ஐஸ்வர்யா ராய், சோமி அலி மற்றும் சங்கீதா பிஜ்லானி போன்ற நடிகைகளுடன் சல்மான் கான் தொடர்புபடுத்தப்பட்டார். 2003-ஆம் ஆண்டு டேட்டிங் மாடல் மற்றும் நடிகையான கேத்ரீனா கெய்ப் உடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டார்.[13]

2007, அக்டோபர் 11ல், இலண்டனில் உள்ள மேடம் துஷ்சாட்ஸ் மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தில் அவரின் மெழுகு பொம்மையை வைக்க சல்மான் கான் சம்மதம் தெரிவித்தார். அந்த அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட நான்காவது இந்திய திரைப்பட கலைஞரின் மெழுகு பொம்மை என்ற பெருமையுடன், 2008, ஜனவரி 15ல், இறுதியாக அவரின் ஆள் உயர மெழுகு பொம்மை அங்கு நிறுவப்பட்டது.[14][15]

வழக்கு
2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியதால் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.[16]

சர்ச்சைகள்
சட்டரீதியான பிரச்சனைகள்
2002, செப்டம்பர் 28ல், வேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதற்காக சல்மான் கைது செய்யப்பட்டார். அவர் கார் மும்பையில் உள்ள ஒரு பேக்கரியின் மீது மோதியது; பேக்கரியின் வெளியில் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த ஒருவர் அதில் இறந்தார் என்பதுடன் அந்த சம்பவத்தில் மேலும் மூன்று நபர்கள் காயப்பட்டார்கள்.[17] அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் பின்னர் அவை கைவிடப்பட்டன. எவ்வாறிருப்பினும், அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்களுக்காக அவர் தொடர்ந்து வழக்குகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.[18]

2006, பிப்ரவரி 17ல், அழிந்து வரும் உயிரினமான சின்காராவை வேட்டையாடியதற்காக கான் ஓர் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனை மேல்முறையீடின் போது உயர் நீதி மன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.[19] 2006, ஏப்ரல் 10ல், அழிந்து வரும் சின்காராவை வேட்டை ஆடியதற்காக சல்மானுக்கு ஐந்தாண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பிணையம் வழங்கப்படும் வரை அவர் அங்கு ஏப்ரல் 13 வரை சிறையில் இருந்தார்.[20] 2007, ஆகஸ்டு 24ல், சின்காரா வேட்டையாடிய வழக்கில், அவரின் மேல்முறையீட்டின் 2006 தீர்ப்பிற்கு எதிராக, ஜோத்பூர் வரைவு நீதிமன்றம் அவரை ஐந்து ஆண்டு கால சிறையில் அடைக்க மீண்டும் உத்தரவிட்டது. அப்போது, அவர் வேறெங்கோ படப்பிடிப்பில் இருந்தார் என்பதால் அவர் சகோதரி அந்த வழக்குகளில் நேரில் ஆஜரானார்.[21] அதற்கடுத்த நாள், வேட்டையாடியதற்காக அவருக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவர் ஜோத்பூரில் போலீஸ் காவலின் கீழ் வைக்கப்பட்டார். 2007, ஆகஸ்ட் 31ல், ஆறு நாட்கள் சிறையில் கழித்த பின்னர், ஜோத்பூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து கான் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புகளுடனான பிரச்சனைகள்
ஐஸ்வர்யா ராயுடனான அவரின் நெருங்கிய உறவு இந்திய ஊடகத்தில் அதிகமாக வெளியான ஒரு விஷயமாகும். மேலும் அது தொடர்ந்து வதந்திகளை எழுப்பி வந்தது.[22] 2002 மார்ச்சில் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுக்கு பின்னர், தம்மை அவர் தொந்தரவு செய்வதாக ராய் குற்றஞ்சாட்டினார். தங்களின் உறவு முறிவு குறித்த விஷயத்தில் சல்மான் கான் உடன்படாமல், தன்னை தொடர்ந்து துரத்திக் கொண்டிருப்பதாக ராய் அறிவித்தார்; ராயின் பெற்றோர்கள் கானுக்கு எதிராக குற்றச்சாட்டைப் பதிவு செய்தார்கள்.[23]

2001-ஆம் ஆண்டு, மும்பை போலீஸால் இரகசியமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் அழைப்பு என்று கூறப்பட்டதை 2005ல் செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. மும்பை சட்டவிரோத பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்படும் சமூக நிகழ்வுகளில் தோன்ற ராயைக் கட்டாயப்படுத்தும் ஒரு முயற்சியில், அவர் ஐஸ்வர்யா ராயை அச்சுறுத்த செய்யப்பட்ட அழைப்பாக அது தோன்றியது. இந்த அழைப்பு, பிற நடிகர்களின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் தீய கருத்துக்களுடனான தொடர்புகளையும் எடுத்துக்காட்டியது. எவ்வாறிருப்பினும், சண்டிகர்|சண்டிகரில் உள்ள இந்திய அரசின் தடயவியல் ஆய்வகத்தில் அந்த சந்தேகத்திற்கிடமான ஒலிநாடா பரிசோதிக்கப்பட்டது. பின்னர் அது போலியானது என்று தீர்மானிக்கப்பட்டது.[24][25]

சல்மானுக்கு எதிரான ஃபாத்வா
2007, செப்டம்பரில், ஒரு விநாயகர் பூஜையில் கலந்து கொண்டதற்காக கானுக்கு எதிராக ஒரு முஸ்லீம் அமைப்ப பாத்வாவை வெளியிட்டது. உருவ வழிபாடு இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, கான் கல்மாஸ் (சத்தியம் பிரகடனம்) படித்தால் ஒழிய, அவர் மீண்டும் ஒரு முஸ்லீமாக சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார் என்று அந்த அமைப்பு அறிவித்தது. ஆனால், பாந்த்ராவில் கான் அவர் குடும்பத்துடன் விநாயகர் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த விழாவில் நடனம் ஆடியவர்களில் கானும் ஒருவராக இருந்தார். அவர் தந்தை, சல்மான் எதுவும் தவறாக செய்துவிடவில்லை என்றும் அறிக்கை வெளியிட்டார்.[26]

கான் தமது உருவ மெழுகு பொம்மையை உருவாக்க இலண்டனின் மேடம் துஷ்சாஷ்ட்ஸிற்கு அனுமதி அளித்ததற்காக, இந்தியாவின் ஒரு முஸ்லீம் பிரிவான முப்தி சலீம் அஹ்மத் காஸ்மியால் மற்றொரு பாத்வா அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த பொம்மை சட்டவிரோதமானது என்று முப்தி குறிப்பிட்டது. அதே அருங்காட்சியகத்தில் ஷாருக்கானின் மெழுகு பொம்மை வைக்கப்பட்டிருக்கும் போது, உடன் முஸ்லீமான அவருக்கு எதிராக எவ்வித பாத்வாவும் வெளியிடாத நிலையில், இது பத்திரிக்கைகளில் பல்வேறு ஊகங்களை எதிரொலித்தது. "இந்த பாத்வாக்கள் ஒரு நகைச்சுவை விஷயமாகி வருகின்றன" என்று சல்மான் கான் கூறினார்.[27]

விநாயக சதுர்த்தி கான் தம் வீட்டில் அவர்தம் குடும்பத்துடன் கொண்டாடியதற்காக, செப்டம்பர் 2008ல் மீண்டும் சல்மான் கான் மீது பாத்வா எழுப்பப்பட்டது. புது டெல்லியில் உள்ள ஆலோசனை குழு உறுப்பினரால் அந்த பாத்வா எழுப்பப்பட்டது. அந்த விழாவில், அவர் தந்தை சலீம் மீண்டும் பாத்வா மீது கேள்வி எழுப்பினார், அத்துடன் அதை எழுப்பியவர்களையும் விமர்சித்தார்.[28][29]

விருதுகளும் தேர்ந்தெடுப்புகளும்
பிலிம்பேர் விருதுகள்
வெற்றியாளர்
1990: மைனே பியார் கியா படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது
1999: குச் குச் ஹோதா ஹே படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரைக்கப்பட்டவை
1990: மைனே பியார் கியா படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது
1995: ஹம் ஆப்கே ஹே கோன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
1996: கரண் அர்ஜூன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
1997: ஜீத் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
1999: பியார் கியா தோ டர்னா கியா திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
2000: ஹம் தில் தே சுக்கே சனம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது
2000: பீவி நம்பர் 1 படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது
2004: தேரே நாம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
2004: பக்ஹ்பன் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
2006: நோ என்ட்ரி படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது
ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டவை
2004: தேரே நாம் படத்திற்கு சிறந்த நடிகருக்கான ஸ்டார் ஸ்க்ரீன் விருது
2005: கர்வ்: பிரைட் அண்டு ஹானர் என்ற படத்திற்கு சிறந்த நடிகருக்கான ஸ்டார் ஸ்க்ரீன் விருது
ஜி சினி விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டவை
2004: தேரே நாம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஜீ சினி விருது
2005: முஜ்சே ஷாதி கரோகி படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஜீ சினி விருது
2006: நோ என்ட்ரி படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஜீ சினி விருது
பாலிவுட் திரைப்பட விருதுகள்
வெற்றியாளர்
2002: பாலிவுட் திரைப்பட விருது - சிறந்த உணர்வுப்பூர்வமான நடிகர், சோரி சோரி சுப்கே சுப்கே
தேசிய விருதுகள்
2007: பொழுதுபோக்கில் அவரின் நிகரற்ற சாதனைக்காக ராஜீவ் காந்தி விருது [30]
இந்திய தொலைக்காட்சி விருதுகள்
2008: சிறந்த நிகழ்ச்சியாளர் , தஸ் கா தம்

பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடை விதிக்கக் கூடாது: சல்மான் கான் By Siva | Published: Wednesday, November 4, 2015, 12:37 [IST] மும்பை: கலை மற்றும் பொழுதுபோக்கிற்கு எல்லை இல்லை. அதனால் பாகிஸ்தான் நடிகர், நடிகைகளை பாலிவுட்டில் நடிப்பதை தடுத்து நிறுத்த முடியாது என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகளை பாலிவுட் படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்ற விவாதம் கிளம்பியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை மும்பையில் நடத்த சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பாலிவுட் படங்களில் நடித்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பவாத் கான் மற்றும் மாஹிரா கான் ஆகியோரையும் சிவசேனா குறி வைத்துள்ளது

இது குறித்து சிவசேனாவின் திரைப்பட பிரிவு பொதுச் செயலாளர் சித்ராபத் சேனா கூறுகையில், நம் ராணுவ வீரர்களை கொலை செய்யும் அவர்கள் நாட்டு கலைஞர்கள் இங்கு வந்து நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும். எதிரிகளுடன் கலாச்சார தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றார். இந்நிலையில் இது குறித்து சல்மான் கான் கூறுகையில், கலையையும், அரசியலையும் கலக்கக் கூடாது. ஒரு கதாபாத்திரத்தை பாகிஸ்தான் நடிகர் சிறப்பாக செய்வார் என்று நினைத்தால் அவரை நடிக்க வைக்க யாரும் தடை போடக் கூடாது. பாகிஸ்தானில் உள்ளவர்களில் பலர் பாலிவுட் ரசிகர்கள். தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்தியர்கள் பாகிஸ்தானிய நிகழ்ச்சிகள் உள்பட பல நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். அதனால் கலைக்கும், பொழுதுபோக்கிற்கும் எல்லை இல்லை என்றார்.

LOUIS PADTEUR ,SCIENTIST FOUND MEDICINE FOR RABBIES


LOUIS PADTEUR ,SCIENTIST  
FOUND MEDICINE FOR RABBIES


லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur, டிசம்பர் 27, 1822 – செப்டம்பர் 28, 1895) நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். வேதி நிகழ்வுகளில் ஒன்றான நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளைப் பற்றி இவர் அறிந்துகொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று கண்டறிந்தார்.[2][3][4]

தடுப்பு மருந்து, நுண்ணுயிர் நொதித்தல் மற்றும் பாஸ்ச்சர் முறை ஆகிய கொள்கைகளைப் பல கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படுத்திப் புகழ் பெற்றவர். நோய்க்கான காரணங்கள் மற்றும் அவற்றின் தடுப்புமுறைகள் குறித்த அவரது ஆராய்ச்சி ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருந்தது. அவரது கண்டுபிடிப்பு அன்றிலிருந்து பல உயிர்களைக் காத்து வருகிறது. பிரசவத்திற்குப் பிந்தைய தொற்றுகளினால் ஏற்படும் இறப்பு வீதத்தைக் குறைத்ததுடன், வெறிநாய்க்கடி நோய் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தார். அவரது மருத்துவக் கண்டுபிடிப்புகள் நோய்க் கிருமிக் கோட்பாட்டை (germ theory) நேரடியாக ஆதரிப்பதுடன், இந்தக் கோட்பாட்டின் மருத்துவத் துறைப் பயன்பாட்டுக்கும் உதவின. பால் மற்றும் வைன் ஆகியவற்றில் பாக்டீரியா கலப்படத்தைத் தவிர்ப்பதற்கான இவரது கண்டுபிடிப்பு பாஸ்ச்சர் முறை (pasteurization) என்று தற்போது அழைக்கப்படுகிறது. இவர் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை

லூயிசு பாஸ்ச்சர் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு ஏழை தோல்பதனிடும் தொழில் செய்யும் ஒருவருக்கு, பிரான்சில், டோல், ஜூரா என்னுமிடத்தில் டிசம்பர் 27, 1822 இல் பிறந்தார்[2]. ஜீன்-சோசப் பாசுச்சரும் மற்றும் ஜீன்-எடியன்னிடி ரெளகியினதும் மூன்றாவது குழந்தையாக இருந்தார். இவரது குடும்பம் 1826 ஆம் ஆண்டில் மார்ன்சு க்கும் 1827 ஆம் ஆண்டில் அர்பாய்சு க்கும் இடம்பெயர்ந்தது[5][6]. பாஸ்டியர் 1831 இல் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தார்[7].

ஆரம்ப பள்ளி காலங்களில் பாசுச்சரின் ஆர்வம் மீன் பிடித்தல், வரைதல் போன்றவற்றில் இருந்ததுடன், அவர் ஒரு சராசரி மாணவராக இருந்தார்[2]. அவர் பல வண்ணங்களில் தனது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் உருவப்படங்களை வரைந்திருந்தார்[8]. டி அர்பாய்சு கல்லூரியில் தனது மேனிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார்[9]. 1838 ஆம் ஆண்டு அக்டோபரில், பென்சியன் போர்பட்டுவில் இணைவதற்காக பாரிசை விட்டு சென்றார். ஆனால் வீட்டை பிரிந்த துயரத்தினால் மீண்டும் நவம்பரில் திரும்பினார்[10].

1839 ஆம் ஆண்டில், அவர் மெய்யியல் படிப்பதற்காக ராயல் டி பெசன்கான் கல்லூரிக்குச் சென்றார். அத்துடன் தனது இளநிலை பட்டத்தினையும் (Bachelor of Letters degree) 1840 ல் பெற்றார்[11]. சிறப்புப் பாடமாகக் கணிதவியலைக் கொண்ட அறிவியல் பட்டத்திற்கான கல்வியைத் தொடர்ந்த வேளையில் அவர் பெசன்கான் கல்லூரியில் ஒரு ஆசிரியராகவும் கடமையாற்றினார்[12]. 1841 இல் தனது முதல் தேர்வில் தோல்வியடைந்த அவர், பின்னர் 1842 ல் டிசோனில் baccalauréat scientifique (பொது அறிவியல்) பட்டத்தில் தேர்ச்சி பெற்றார். ஆனால் வேதியியலில் சாதாரண தகுதியையே பெற்றார்[13].

பின்னர் 1842 இல், பாஸ்டியர் Ecole Normale Supérieure நுழைவுத் தேர்வு எடுத்தார்[14]. அவர் முதலாவது சோதனைகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவரது தரவரிசை குறைவாக இருந்ததனால், பாஸ்டியர் தொடர்ந்து அடுத்த ஆண்டு மீண்டும் முயற்சி செய்வதில்லை என முடிவெடுத்தார்[15]. அவர் சோதனைக்காகத் தயார் செய்வதற்காக மீண்டும் பென்சியன் பார்பெட் சென்றார். அவர் லைசி செயிண்ட்-லூயிஸ் இல் வகுப்புகளுக்கு சென்றதுடன், சோபோர்னில் உள்ள ஜீன்-பாப்டிஸ்ட் டுமாஸ் இல் விரிவுரைகளுக்கும் சென்றார்[15]. 1843 ஆம் ஆண்டு அவர் உயர் தரவரிசையில் தேர்ச்சியடைந்து Ecole Normale Supérieure இடம்பெற்றனர்[16]. 1845 ஆம் ஆண்டில் அவர் licencié ES அறிவியல் பட்டம் (அறிவியலில் முதுகலைப் பட்டம்) பெற்றார்[17]. 1846 இல் அவர் Ardèche யிலுள்ள, கல்லூரி டி டோர்னனில் (தற்போது அக்கல்லூரி Lycée Gabriel-Faure (fr) என்றழைக்கப்படுகிறது) இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால் வேதியியலாளர் அண்டோனே ஜெரோம் பாலார்ட், பாய்ச்சர் மீண்டும் Ecole Normale Supérieure க்கு ஒரு பட்டதாரி ஆய்வக உதவியாளராக வரவேண்டும் என்று விரும்பினார்[18]. அவர் Balard உடன் இணைந்துகொண்ட அதே வேளையில், படிகவியல் தொடர்பான தனது ஆய்வுகளையும் தொடங்கி, பின்னர் 1847 இல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இரு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்[17][19]


டிஜோன் உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக சேவை முடிந்த பின், 1848 ல், ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகக் கடமையாற்றினார்[20]. அங்கு பல்கலைக்கழகத்தின் இயக்குநரின் மகளான மேரி லாரண்ட் ஐச் சந்தித்து திருமண ஒப்பன்ந்தம் செய்து கொண்டார். அவர்களிருவரும் 1849 மே 29 அன்று திருமணம் செய்துகொண்டனர்[21]. அவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில், மூவர் குடற்காய்ச்சலினால் இறந்துவிட, இருவர் மட்டுமே வளர்ந்து பெரியவர்களானார்கள்[22].

வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசி
இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.[23]

பாச்சர்முறை நுண்ணுயிர் நீக்கம்
பாலும், வைனும் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் பாக்டீரியாக்களின் வளர்ச்சியினால் கெட்டுப்போகின்றன. அப்படிக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காக லூயி பாஸ்ச்சர் முன்வைத்த முறை இன்று பாச்சர்முறை என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளின் பெரும்பகுதியைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது.[24]

பாலில் அதிக அளவு உள்ள நோய் உண்டாக்கும் பாக்டிரியாக்களை அழித்து, அவற்றின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதனால், பாலில் உள்ள சத்துக்கள் குறையாமல் காக்கப்படுகின்றன. கிருமியழித்தலில் போன்று, இங்கு அனைத்து நோய்க்காரணிகளும் அழிக்கப்படுவதில்லை. பதிலாக, அவற்றின் எண்ணிக்கை ஒரு கட்டுப்பாடான அளவிற்குக் கொண்டு வரப்படுவதனால், குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பாலைக் கெடாமல் பாதுகாக்கலாம். இம்முறையில் பாலானது 60 and 100 °C வெப்பநிலை வரைக் காய்ச்சி அதே வெப்பநிலையில் அரை மணி நேரம் வைத்த பின்பு வேகமாக குளிரச்செய்யப்படுகிறது[25].

நுண்ணுயிரியல்
நுண்ணுயிரியலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் பெர்டினாண்ட் கோன், ராபர்ட் கோக் ஆவர். தன்னிச்சை உருவாக்கக் கோட்பாடு (spontaneous generation) மறுக்கப்பட்டதற்கு இவர் காரணமாக இருந்தார். கலப்படமில்லாமல் நுண்ணுயிரிகள் உருவாக முடியாது என்பதை இவரது சோதனைகள் உணர்த்தின. "பிரெஞ்சு அறிவியல் அகாடெமி"யின் துணைகொண்டு இவர், நுண்ணுயிரி ஒழிக்கப்பட்ட (sterilized) மற்றும் உறையிடப்பட்ட (sealed) குடுவைகளில் எதுவும் உருவாக இல்லை எனவும், நுண்ணுயிரி ஒழிக்கப்பட்ட ஆனால் திறந்த குடுவைகளில் நுண்ணுயிரி வளர முடியும் என நிரூபித்தார். கிருமிக் கோட்பாட்டை (germ theory) இவர் முன்மொழியா விட்டாலும், அவரது சோதனைகள் அதன் உண்மைத்தன்மையைக் குறிப்பிட்டு, பெரும்பாலான ஐரோப்பாவுக்கு அது உண்மை என உணர்த்தின. இன்று அவரும் "கிருமிக் கோட்பாட்டின்" தந்தை என வழங்கப்படுகிறார்.

வேதியியல்
பாஸ்ச்சர் வேதியியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளார். அவற்றில் மூலக்கூறு அடிப்படையில் சில படிகங்களின் (crystal) ஒத்தமைவின்மையைக் (assymmetry) குறித்த இவரது ஆய்வு குறிப்பிடத்தக்கது. இவரது ஆரம்பகால வாழ்க்கையில் டார்டாரிக் அமிலத்தில் இவரது ஆய்வு முதன்முதலில் ஒளியியற் சமபகுதியம் (optical isomer) என்ற தீர்மானத்துக்கு வழிவகுத்தது. கரிமச் சேர்மங்களின் (organic compounds) அமைப்பைப் புரிந்து கொள்வதில், தற்போதுள்ள அடிப்படைக் கொள்கைக்கு இவரது ஆய்வு வழிவகுத்தது.

முரண்பாடுகள்
நொதித்தல்
பாஸ்ச்சருக்கு முன்னரே வேறு விஞ்ஞானிகள் நொதித்தல் பற்றி ஆய்ந்து அறிந்திருந்தனர். 1830 ஆம் ஆண்டில், சார்லசு காக்னியர்டு-லாட்டூர் (Charles Cagniard de la Tour), பிரெடெரிக் டிராகாட் குட்சிங் (Friedrich Traugott Kützing), தியோடர் சுவான் (Theodor Schwann) ஆகியோர் நுண்ணோக்கி மூலம் மதுவத்தை (yeast) ஆராய்ந்து, அவை வாழும் உயிரினங்கள் என்று கூறியுள்ளனர். 1839 இல், ஜசுடசு வான் லீபிக் (Justus von Liebig), பிரெடெரிக் வோக்லர் (Friedrich Wöhler) மற்றும் சோன்ஸ் சேக்கப் பெர்சிலியசு (Jöns Jacob Berzelius) ஆகியோர் மதுவம் ஒரு உயிரினம் இல்லை என்றும் அவை தாவர சாறுகள் காற்றுடன் செயல்படும் போது உருவாகின்றன என்றும் அறிக்கைவிட்டனர்.[26]

1855 இல் மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஆண்டனி பிசாம்ப் (Antoine Béchamp), சுக்ரோசு கரைசலில் பரிசோதனைகளை மேற்கொண்டு நீர், நொதித்தலுக்குப் காரணியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்[27]. ஆனால் பின்னர் 1858 இல், அவர் தனது முடிவை மாற்றி, நொதித்தலுக்குக் காரணம் Mould என்னும் ஒரு வகை பூஞ்சையே என்றும், அவற்றின் வளர்ச்சிக்கு காற்று தேவைப்படுகிறது என்றும் கூறினார். நொதித்தலில் நுண்ணுயிர்களின் பங்கினை முதலாவதாக எடுத்து காண்பித்தவர் தானே என்று இவர் கூறினார்[28][29].

பாஸ்ச்சர் 1857 இல் தன்னுடைய பரிசோதனைகளைத் தொடங்கி, 1858 Comptes Rendus Chimie இதழில், ஏப்ரல் பதிப்பில் வெளியிட்டார். ஆனால் பிசாம்ப் இனுடைய ஆய்வறிக்கை ஜனவரியிலேயே வெளியிடப்பட்டுவிட்டது. இருந்தாலும், பாஸ்சரின் 1857 ஆம் ஆண்டு ஆரம்ப ஆய்வுகளைப்பற்றி பிசாம்ப் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரினதும் முரண்பாடுகள் அவர்களது வாழ்வுக்காலம் முழுமைக்கும் நீண்டது.[2




தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள்- 10 -லூயி பாஸ்ச்சர் - நித்யா ராமதாஸ்

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள்- 10 -லூயி பாஸ்ச்சர் -  நித்யா ராமதாஸ்
சர்வதேச பியர் தினம் ஆகஸ்ட் நான்காம் தேதி உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இரு நண்பர்கள் முதன் முதலில் சந்தித்துக்கொண்டாலும், சண்டைக்கு பின் இருவர் மனம் விட்டு பேசுவது இவையெல்லாம் ஒரு கிளாஸ் பியர் முன்னிலையில் தான் மேற்கு நாடுகளில் நடக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் இந்த குறிப்பிட்ட தினத்தை ஒட்டி பல நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் நடந்தாலும், பியர் என்ற பானத்தை எந்தவொரு கிருமிகள் இன்றி, பதப்படுத்தி உலகிற்கு தந்த பெருமை லூயி பாஸ்ச்சருக்கு தான் சேரும். பால் சுத்திகரிப்பு முறையான பாசச்சுரைசேஷன் (Pasteurisation) மூலம் இவர் பெயர் இன்று உலகளவில் தெரியப்பட்டாலும், முதலில் இவர் இந்த சுத்திகரிப்பு முறையை கையாண்டது பியர் மற்றும் வைன் எனப்படும் பானங்களில் தான் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். பல கண்டுபிடிப்புகளும், எதிர்ப்புகளும் கொண்ட இவரது வாழ்க்கை பக்கத்தை இங்கு நாம் திருப்பி பார்க்கலாம்.
லூயி என்னும் ஓவியன்
டிசம்பர் 27ம் தேதி 1822ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் டோல் என்ற இடத்தில் லூயி பாஸ்ச்சர் பிறந்தார். பள்ளி பருவத்தில் பாஸ்ச்சர் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வமாக இருந்ததுண்டு. வித்தியாசமான நிறத்தில் தான் வசிக்கும் கிராமம் மற்றும் சுற்றுப்புறங்களை வண்ணமயமாக வரைந்து அவ்வப்போது தனது பெற்றோர்களிடம் காண்பிப்பது லூயியுடைய வழக்கமாக இருந்தது. ஆசிரியர்கள் இவரது திறனை மேலும் வளர்க்க ஊக்கம் அளித்தாலும், பிரான்ஸ் படை வீரரான லூயியின் தந்தை ஓவியத்தை ஒரு வேண்டாத வஸ்துவாகவே பார்த்தார். படிப்பதில் கவனத்தை செலுத்த இடையூறாக ஓவியம் இருக்கும் என்று கருதி, படிப்பில் மட்டுமே முழு சிரத்தையும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி அறிவுரை கூறி, ஓவியப்பாதையிலிருந்து மெதுவாக லூயியை திசை திருப்பினார் என்று சொல்லலாம். படிப்பில் நாட்டமில்லாத லூயி, தந்தையின் கட்டுப்பாட்டினால் படிப்பதில் அதிக நேரத்தை செலவழிக்க துவங்கினார். ''பிரான்ஸ் நாட்டின் பெருமை, மற்றும் புகழில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்ட எனது தந்தை, என்னை படிக்க செய்த, அந்த பெருமைகளை தெரிந்துக்கொள்ள வழி வகுத்தார்.'' என்று ஒரு சந்தர்ப்பத்தில் லூயி தனது தந்தை பற்றி பகிர்ந்துக்கொண்டதாக சில கட்டுரைகள் மூலம் தெரிகிறது.
இவ்வாறாக, அரை மனதுடனும் அதிக கவனம் செலுத்தாமலும் லூயி தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின், ஃபிளாஸபி துறையில் முதல் இளநிலை பட்டப்படிப்பை பேசான்காண் ராயல் கல்லூரியில் முடித்தார். அதே கல்லூரியில் பயிற்சியாளராக பணியாற்றிய லூயி, அறிவியல் மற்றும் கணித படிப்பை தொடர்ந்தார். ஆரம்பத்தில் சில தேர்வுகளில் தோல்வியை சந்தித்தாலும், இறுதியில் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் நல்ல மதிப்பெண்களை பெற்று அந்த படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார். லூயி எடுத்துக்கொண்ட இந்த இரண்டாவது படிப்பின் வழியாக, அறிவியல் உலகிற்கு வந்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு பின்னாளில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கண்டுபிடிப்பு
இளநிலை பட்டப்படிப்பை முடித்த பின், ஈகால் நார்மெல் என்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படிப்பதில் கவனம் செலுத்தியது மட்டுமின்றி, அதற்கான நுழைவுத் தேர்வுகளையும் எழுதினார். முதல் முயற்சியில் தோல்வியுற்றாலும், அடுத்த ஆண்டு எழுதியதில் நல்ல மதிப்பெண்களும், தரவரிசை பட்டியலில் இடத்தை பிடித்தும் ஈகால் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பை படித்தார். பட்டப்படிப்பை முடித்த பின் ஆண்டோய்ன் ஜெரோம் பாலார்ட் என்பவருடன் இணைந்து கிறிஸ்டெலோகிராபி துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். முதல் முறையாக இவர் எடுத்துக்கொண்ட இந்த ஆய்வுகள், பல உண்மைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வந்ததற்கு பாலமாக அமைந்தது என்றே சொல்லலாம். இயற்பியல் மற்றும் வேதியியல் துறையில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய லூயி, அடுத்தகட்டமாக ஸ்ட்றாஸ்பார்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பொறுப்பேற்றார்.
1848ம் ஆண்டில் பொறுப்பேற்ற லூயி, உயிரினங்களில் கொண்ட வேதியியல் கட்டுமானத்தை பற்றி முதலில் கண்டறிந்தார். ஒரே மாதிரியாக இருக்கும் மாளிக்யூல்ஸ் (Molecules) எனப்படும் அடிப்படையான பொருள், வலப்புறமாகவும், இடப்புறமாகவும் அமைக்கப்பட்டுள்ளதாக லூயி கண்டறிந்தார். இந்த மாளிக்யூல்களின் கூட்டமைப்பே எந்தவொரு பொருளுக்கும் வடிவத்தையும், சக்தியையும் தருகிறது. உயிருள்ள பொருட்களின் மாளிக்யூல் அமைப்பானது இடதுபுறமாகவே இருக்கின்றது என்ற தகவலை முதலில் உலகிற்கு இவர் உரைத்தார். லூயி தனது 25வது வயதில் கண்டறிந்த இந்த விஷயம், பின்னாளில் பல ஆய்வுகளில் எடுக்கப்பட்டு, DNA என்ற மனித செல்களின் அடிப்படை கூறு பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, பல மருந்துகள் கண்டுபிடிப்பிற்கும் இது அடிப்படையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில், அறிவியல் துறையில் இருந்த பல கேள்விகளுக்கு முதல் குறிப்பாக லூயி அவர்களின் கண்டுபிடிப்பு விளங்கியது.
பியர் மூலம் கண்டறிந்த சுத்திகரிப்பு முறை
ஸ்டராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் பணிபுரிந்த பின், தான் படித்த ஈகால் பல்கலைக்கழகத்தில் மீண்டும் நுழைந்தார். இம்முறை அறிவியல் துறையின் இயக்குனராக பொறுப்பேற்று பேராசிரியராக பல மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்தார். அப்போது மாணவன் ஒருவர் லூயிடம், அவர் தயாரிக்கும் பியர் பானம் தானாக கெட்டு போகும் மாயத்திற்கு விடை கோரினார். ஒரு வித புளிப்பு சுவையுடன், அந்த பானம் அடிக்கடி கெட்டுப்போவதற்கான காரணத்தை கண்டறிய, லூயி தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டார். அவர் கண்டுபிடித்ததில், அந்த பானமானது, அதனோடு கலந்திருக்கும் பல நுண் கிருமிகளால் புளிப்பாக மாறுவதாக மைக்ரோஸ்கோப் கொண்டு கண்டறிந்தார். ஒரு பொருள் கெட்டுப்போனதால், தேவையில்லாத கிருமிகள் அதில் காணப்படுகிறது என்ற கூற்றை மாற்றி, கிருமிகளின் நுழைவால் தான் கெட்டுப்போகும் செயல் நடைபெறுகிறது என்பதை நிரூபித்து காட்டினார். இன்று இந்த கண்டுபிடிப்பை கொண்டு பல மாற்றங்களை நாம் மருத்துவ உலகில் நிகழ்த்தியிருந்தாலும், 1860ம் ஆண்டில், முதல் முறையாக இந்த நிகழ்வை விளக்கிய போது, பல அறிஞர்களும், மக்களும் இவருடைய கண்டுபிடிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ''உங்களுடைய இந்த ஆய்வுகள், உங்களுக்கு எதிராகவே மாறும். நீங்கள் சொல்லும் எதுவும் நிகழ் உலகத்தில் சாத்தியமில்லை.'' என்று அப்போது மறுத்தனர். இருப்பினும், லூயி தன்னுடைய கண்டுபிடிப்பில் அதிகப்படியான நம்பிக்கையை வைத்து, தொடர் ஆய்வில் வேறு வகையான பானங்களைக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டு வந்தார்.
1863ம் ஆண்டில் நெப்போலியன் அரசர், பிரான்ஸின் எல்லா இடங்களிலும் வைன் உற்பத்தியிடங்களில் கெட்டுப்போவதால், ஏற்படும் நஷடம் குறித்து லூயி அவர்களிடம் விளக்கம் கேட்டார். தன்னுடைய தனிப்பட்ட ஆய்வுகளுக்கு இந்த சந்தர்ப்பம் சரியான பதிலை தரும் என்று லூயி எண்ணி, பிரான்ஸின் எல்லா உற்பத்தி இடங்களையும் நேரில் சென்று பார்த்தார். அங்கிருந்து எடுத்து வரப்பட்ட வைனை ஆய்வில் உட்படுத்திய போது, பியர் பானத்தில் கண்ட அதே வகையான நுண்கிருமிகளை இதிலும் கண்டார். மீண்டும் ஒரு முறை நுண்கிருமிகளால் பானங்கள் கெட்டுப்போகின்றன என்பதை ஊர்ஜிதப்படுத்தி, அவற்றை பதப்படுத்தும் முறையை வடிவமைக்கலானார். ஒரு குறிப்பிட்ட சூட்டில் பானங்களை கொதிக்க வைத்து, அதை கெட்டியாக மூடக்கூடிய குடுவைகளில் அடைத்து பதப்படுத்தும் முறையை அப்போது கண்டுபிடித்தார். அந்த முறையை வைன் துறையினர் பின்பற்றி, தரமான பானங்களை உருவாக்கியது மட்டுமின்றி, உற்பத்தி செய்து லாபத்தை பன்மடங்காக மாற்றினார்கள். பாஸ்ச்சுரைசேஷன் என்றழைக்கப்படும் இந்த முறையில்தான் தற்போது, வைன், பியர் மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களான பால், தயிர் மற்றும் இதர உண்ணும் பொருட்களை அதிகநாள் வரை பதப்படுத்தி வைப்பதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது.
லூயி பாஸ்ச்சர்- சில ஷார்ட் தகவல்கள்
•பாஸ்ச்சுரைசேஷன் முறை இவரது பிரபலமான கண்டுபிடிப்பாக இருந்தாலும், லூயி முதலில் உலகிற்கு சொன்னது ஜெம் தியரி (Germ Theory). உயிரினங்கள் தானாக வாழ துவங்கி, இறந்த பின், புழு மற்றும் பூச்சிகள் சதைகளிலிருந்து வெளிவரும் என்று மக்கள் முன்பு நம்பினர். இந்த கருத்து தவறு என்றும், நாம் சுவாசிக்கும் காற்றில் சில கிருமிகள் இருப்பதாகவும், அதன் மூலம் நமக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு நாளடைவில் இறந்துபோவதாகவும் தெரிவித்தார். இந்த கருத்தே, ஜெம் தியரியின் அடிப்படை கருத்தாகும். மக்கள் உண்மையென நம்பிய விஷயத்தை மாற்றி கூறியதால், லூயியை எதிர்த்த அறிஞர்கள் பலர்.
•வைன் துறையில் அதிக லாபத்தை ஈட்டி தந்த பின், பட்டு தொழில் துறையில் ஏற்பட்ட சரிவை லூயி தீர்த்து வைத்தார். பட்டு நூலின் தரம் குறைந்ததற்கு காரணம் கண்டறிய, லூயி தனது மனைவியுடன் சேர்ந்து, வீட்டில் சில பட்டு பூச்சிகளை வளர்த்து கவனித்து வந்தார். இதன் மூலம், பாரசைட் எனப்படும் தொற்று கிருமிகளால் பூச்சிகள் நோயுற்று தரமான பட்டு நூல் உற்பத்தி செய்வதில்லை என்பதை கண்டறிந்தார். நோயுற்ற பூச்சிகளை கவனித்து, தனியாக வைப்பது மட்டுமே தீர்வு என்று அறிந்து பட்டு துறையினருக்கு பரிந்துரைத்தார்.
•அதன் பின், மனிதர்களுக்கு ஏற்படும் கிருமி நோய்கள் மற்றும் அதற்கான குணங்களை பற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சிக்கன் காலரா, ரேபிஸ் போன்ற பல நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்த பெருமை லூயிக்கு உண்டு. இந்த அனைத்து கண்டுபிடிப்புகளுமே அவரது சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாக பார்க்கலாம். அவருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் மூன்று குழந்தைகள் சிறு வயதிலேயே காலரா, டைபாய்டு போன்ற கொடிய நோய்களுக்கு இரையானது. பிள்ளைகளை பறிகொடுத்த பாதிப்பே, இவரை கிருமிகள் மற்றும் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ற விசாலமான ஆய்வில் அவரை செலுத்தியது. இன்று ஏற்பட்டிருக்கும் பல மருத்துவ வளர்ச்சிக்கு இவருடைய கண்டுபிடிப்புகள் பெரிதும் உறுதுணையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
•தனது 45வது வயதில் ஏற்பட்ட பக்கவாதத்தினால், உடலின் இடது பக்கம் செயலிழந்து பாதிக்கப்பட்டார். இருப்பினும், அவருக்காக ஒரு நடமாடும் ஆய்வகத்தை அமைத்து அதன் மூலம் அவரது ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் நண்பர்கள் உதவினர். ரேபிஸ் எனப்படும் நாய்கள் மூலம் மனிதர்களுக்கு தொற்றும் வியாதிக்கான தடுப்பு மருந்தை இந்த நடமாடும் ஆய்வகம் கொண்டு கண்டுபிடித்தார் என்பது கூடுதல் தகவல்.
•லூயி ஆரம்பித்த தொற்று நோய்களுக்கான ஆய்வின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பாரீஸ் நகரில் லூயி இன்ஸ்டிட்யூட் இவரால் நிறுவப்பட்டது. இன்று கிட்டத்தட்ட 133 மையங்கள் உலகெங்கிலும் நிறுவப்பட்டு பல ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன.
உலகமே நம்முடைய முயற்சியை எதிர்த்தாலும், தன்னம்பிக்கை மற்றும் தொடர் உழைப்பை மட்டும் விதைத்து, பல்லாண்டுகள் மறையாத வெற்றியை அடைய முடியும் என்ற வாழ்க்கைப்பாடத்தை சில அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் லூயி பாஸ்ச்சர் நமக்கு தந்துள்ளார்.
கட்டுரையாளர் குறிப்பு:
நித்யா ராமதாஸ், அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். லைஃப் ஸ்டைல், ஃபேஷன், கலை மற்றும் மியூசிக் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் தேர்ந்தவர். தற்பொழுது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

Tuesday, 24 December 2019

BANKS ...ROBBERS OF INDIA




BANKS ...ROBBERS OF INDIA



Vijay Mallya கடனை வசூலித்த வங்கிகள்..? மத்திய அரசு பாராட்டு, மக்கள் கொந்தளிப்பு..?

நம் வங்கிக் கடன் புகழ் Vijay Mallya ஒரு 10,000 கோடி ரூபாய் மற்றும் நீரவ் மோடி ஒரு 14,000 கோடி ரூபாயை வங்கிகளில் இருந்து கடனாகப் பெற்று அல்வா கொடுத்துவிட்டு வெளிநாட்டில் சொகுரு வாழ்கை வாழ்ந்து வருகிறார்கள்.

ஆர்பிஐ அழுத்தம் இதற்கு முன் இருந்த ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் இருவரும் வங்கிகளின் வாராக் கடனை மிக சீரியஸாக எடுத்து கையாண்டார்கள். அதனால் வாராக் கடன்களை வசூலித்தே ஆக வேண்டும் என நெருக்கினார்கள். விளைவு வேறு விதமான வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

யாரிடம் வசூலிக்க வேண்டும் ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் இருவரும் கடனை வசூலிக்க வேண்டும் எனச் சொன்னார்களே ஒழிய, மல்லையா மற்றும் நீரவ் மோடி என தெளிவாகச் சொல்லவில்லை போல. இப்போது ஆண்டுக்கு 2500 கோடி ரூபாயை மக்களிடம் இருந்தே வசூலித்துவிட்டார்கள். வங்கிகள். ஆக மொத்தம் கடந்த 2015 - 16 தொடங்கி 2018 - 19 வரை 10,391 கோடி ரூபாயை மக்களிடம் இருந்து வெறும் கட்டணங்கள், அபராதங்களாக மட்டும் வசூலித்துவிட்டார்கள்.

காரணங்கள் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காதது, ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான முறை பணம் எடுத்தல் ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டும் கடந்த 3 ஆண்டு மற்ரும் 6 மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரத்து 391 கோடியை 21 அரசு வங்கிகள் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

2018 - 19 அதிலும் நடப்பு நிதியாண்டான (2018-19) ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1,861 கோடி ரூபாய் சூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ரூ.871 கோடி ரூபாய் ஏடிஎம்களை அதிகமாக பயன்படுத்தியதற்காக மட்டும் அபராதம் விதித்து சம்பாதித்திருக்கிறது வங்கிகள்.

இதிலும் எஸ்பிஐ தான் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக அபராதத் தொகையை வசூலித்த பெருமை விஜய் மல்லையாவுக்கு அள்ளிக் கொடுத்த எஸ்பிஐ வங்கியையே சேரும். வசுலித்த அபராதத் தொகை 2,894 + 1554 = 4,448 கோடி ரூபாய். இதில் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காதவர்களிடம் இருந்து 1554 கோடி ரூபாயும், ஏடிஎம்மை அதிகம் பயன்படுத்தியதற்கு 2894 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறார்கள்.

அதற்கடுத்து வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காதவர்களிடம் அதிகம் வசூலித்த வங்கிகள் பட்டியலில் பஞ்சாப் நேஷனல் பேங்க் 493 கோடி ரூபாய், கனரா வங்கி 352 கோடி ரூபாய், செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 348 கோடி ரூபாய், பேங்க் ஆஃப் பரோடா 328 கோடி ரூபாய் என போட்டி போட்டு வசூலித்திருக்கிறார்கள்.

ஏடிஎம் ஏடிஎம்மை அதிகம் பயன்படுத்தியதற்கு அபராதம் வசூலித்தவர்களில் பேங்க் ஆஃப் இந்தியா 464 கோடி ரூபாய், பஞ்சாப் நேஷனல் பேங்க் 323 கோடி ரூபாய், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 241 கோடி ரூபாய், பேங்க் ஆஃப் பரோடா 183 கோடி ரூபாய் என இதிலும் சலைக்காமல் போட்டி போட்டிருக்கிறார்கள்.


விலக்கு ஆனால், ஜன்தன் வங்கிக்கணக்குக்கு மட்டும் அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு இன்னும் இருக்கிறது. ஆக ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கை தொடங்கியவர்கள் தப்பித்தார்கள்.

பிரேக் விட்ட எஸ்பிஐ கடந்த 2012 முதல் 2016-ம் ஆண்டு வரை எஸ்பிஐ வங்கி அபராதம் வசூலிப்பதை நிறுத்தி இருந்தது. இப்போது வருமானப் பற்றாக்குறையை சமாளிக்க மீண்டும் அபராதத்தை வசூலிக்கத் தொடங்கி இருக்கிறது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் அபராதம் விதிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்திய எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களின் எதிர்ப்பால் அபராதத்தொகையை அதே ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி குறைத்ததே ஒழிய முற்றிலும் நீக்கவில்லை. முதலில் ரூ.5 ஆயிரம் குறைந்த இருப்பு என்றும் எதிர்ப்புக்குப் பின் ரூ.3 ஆயிரமாகவும் குறைத்தது.

ஏடிஎம்-க்கும் போடு இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்தும், ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட முறைகளுக்கு மேல் பணம் எடுத்த காரணங்களுக்காகவும் விதிக்கப்பட்ட அபராதத் தொகை குறித்து நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது

நாடாளுமன்றத்தில் பதில் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் அளித்த தகவலின்படி கடந்த 2015-16-ம் ஆண்டில் இருந்து 2019-19-ம் ஆண்டுவரை வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.6,246 கோடியை அரசு வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளன. கணக்கு வைத்துள்ள வங்கி தவிர்த்து வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தல் மற்றும் குறிப்பிப்ப எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் போன்ற விஷயங்களுக்கு அபராதம் மூலம் ரூ.4,145 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

தனியார் இல்லை அரசு வங்கிகள் வசூலித்த அபராதங்களின் மதிப்புகள், விவரங்கள் மட்டுமே அளிக்கப்பட்டன, தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்துவசூலித்த அபராத விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இப்படி மக்களிடம் பணம் வசூலித்து மல்லையா கடனை சரிகட்டிக் கொண்டிருப்பதை வங்கிகள் தரப்பு நிம்மதியாகப் பார்க்கிறது. நிதி அமைச்சகம் கூட பரவாயில்லை, எப்படியோ பணத்தை தேற்றி விட்டோம் என பெருமூச்சு விடுகிறது. ஆனால் மக்களோ வழக்கம் போல ஏமாளிகளாக நொந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் வருத்தத்தையும், வெறுப்பையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



Monday, 23 December 2019

CHINA MASS WEDDING ,BRIDES DISAPPEARED AFTER MARRIAGE MAIL ORDER WIFES



CHINA MASS WEDDING ,BRIDES DISAPPEARED AFTER MARRIAGE MAIL ORDER WIFES




சீனாவில் , பீஜிங் -ஹூபே பிராந்தியத்தில் திருமணம் செய்துவிட்டு ஓடிப்போன 100 மெயில் ஆர்டர் மனைவிகள் - தரகர்களின் ஏமாற்று வேலை -போலீசுக்கு தலைவலி
-காரணம் மனைவியின் பெயரே தெரியவில்லை கணவருக்கு

JILTED singletons have made a desperate plea to police after 100 mail-order brides did a runner after a ‘party’.

Due to the huge gender imbalance in China, bachelors have to go to extreme measures to find themselves a wife.

Mail-order brides have become a popular phenomenon and the frantic men can cough up £120,000 to secure a match.

It’s no surprise that matchmaking has become a lucrative business, but not all cupids have good intentions.

Police are hunting Wu Meiyu who is accused of committing mass fraud after helping brides escape from their new husbands. It’s believed that the matchmaker pocketed the grooms’ cash before allowing around 100 wives from the Hebei province, near Beijing, to make their escapes.

Officials are finding it extremely difficult to trace the brides, as many of the men don’t even know their names.

Li Guichen told the Financial Times that he “didn’t even get to know (his new bride) before she left”.


P.V.NARASIMMARAO , BORN ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004


P.V.NARASIMMARAO  , BORN 
ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004



நேரு மற்றும் காந்தி வம்சாவழியில் வராமல், முழு ஐந்து ஆண்டுகள் பதவியில் சிறப்பாக சேவை செய்த இந்தியாவின் முதல் பிரதம மந்திரி நினைவுக் கூறப்பட்டவர் பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள். இவர் தென்னிந்தியாவில் இருந்து வந்து, ஒரு முழு கால ஆட்சி செய்து, நாட்டை ஆண்ட முதல் அரசியல்வாதி ஆவார். 5 லட்சம் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வென்று, அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனைப் படைத்தார், நரசிம்ம ராவ் அவர்கள். பெரிய அளவில் பொருளாதார மாற்றம் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு பாதிக்கும் பல சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது ஆட்சியின் போது நாட்டின் நலனுக்காக பல்வேறு சேவைகள் செய்து சாதனைகள் நிகழ்த்தினார். அவரை “இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை” என்றும் தொழில், பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்டத்தில் அவரது சிறப்பான மற்றும் தனிதத்துவமான பங்களிப்பைக் கண்ட சில மக்கள் அவரை “சாணக்யர்” என்றும் அழைத்தனர். எனினும், ‘ஒவ்வொரு நாணயத்திலும் இரண்டு பக்கங்கள் உண்டு’ என்பதைக் குறிக்கும் விதமாக நரசிம்ம ராவ் அவர்கள், பிரதம மந்திரியாக இருந்த போது, அயோத்தியில் பாபர் மசூதி தகர்ப்பு கண்ட நிகழ்வு, இந்திய தேசிய வரலாற்றில் ஒரு பரபரப்பூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது. இது தவிர, அவரது ஆட்சிக் காலத்தில், அவர் பல ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டிருந்தார் என்று பல பேச்சுகளும் இருந்தது. அரசியலில் சாணக்யர் என்று போற்றப்பட்ட பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: ஜூன் 28, 1921

பிறந்த இடம்: வங்கரா, ஆந்திர பிரதேசம்

இறப்பு: டிசம்பர் 23, 2004

தொழில்: அரசியல் தலைவர், வழக்கறிஞர், செயல்வீரர், கவிஞர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் பமுலபர்த்தி வெங்கட நரசிம்மராவாக ஒரு கெளரவமான விவசாய நியோகி பிராமண குடும்பத்தில், கங்கா ராவ் மற்றும் ருக்மிணிஅம்மா தம்பதியருக்கு மகனாக ஜூன் 28, 1921ஆம் ஆண்டு பிறந்தார். அவர் ஆந்திர பிரதேசத்தில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

பி.வி. நரசிம்ம ராவ் அவர்களுக்கு 3 வயது இருக்கும் போது, அவரது குடும்பம், கரீம்நகர் மாவட்டத்தில் இருக்கும் வங்காரா கிராமத்திற்குக் குடிபெயர்ந்தனர். அவர் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலைப் பட்டமும், மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ஃபெர்குசன் கல்லூரியிலிருந்து சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அவரது தாய்மொழித் தெலுங்காக இருந்தாலும், நரசிம்ம ராவ் அவர்களால் மிகவும் சரளமாக மராத்தியும் பேச முடியும். எட்டு இந்திய மொழிகள் அவருக்கு தெரிந்திருந்தாலும், அவர் ஆங்கிலம், பிரஞ்சு, அரபு, ஸ்பானிஷ், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன், மற்றும் பாரசீக மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கினார். 1940களில், அவர் தனது தூரத்து உறவினர்களான பமுலபர்த்தி சதாசிவ ராவ், ராஜா நரேந்திரா மற்றும் தேவுலபள்ளி தாமோதர் ராவ் ஆகியோருடன் இணைந்து “ககாதியா பத்ரிகா”, என்ற தலைப்பில் வெளியான தெலுங்கு வார இதழைத் திருத்தத் தொடங்கினார். நரசிம்ம ராவ் மற்றும் சதாசிவ ராவ் “ஜெயா-விஜயா” என்ற தலைப்பின் கீழ் கட்டுரை எழுதினர்.

அரசியல் பிரவேசம்

நரசிம்ம ராவ் அவர்கள், இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, ஒரு சுதந்திர போராட்ட வீரராகத் தீவிரமாகப் பணியாற்றினார். மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், உடனடியாக அரசியலில் தன்னை முழுநேர ஊழியராக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி, ஹைதெராபாத் மாநில முதலமைச்சராக இருந்த பர்குலா ராமகிருஷ்ணா ராவைப் பின்பற்றி, அவர் வழியில் பணியாற்றினார். 1951ல், அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) உறுப்பினரானார். அதன் பின்னர், 1957ல் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினரானார். அவர் சட்டம் மற்றும் தகவல் அமைச்சராக 1962 முதல் 1964 வரையிலும், சட்டம் மற்றும் அறக்கட்டளை அமைச்சராக 1964 முதல் 1967 வரையிலும், உடல்நலம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சராக 1967லும், மற்றும் ஆந்திர பிரதேச அரசு கீழ் கல்வி அமைச்சராக 1968 முதல் 1971 வரையிலும், பல முக்கிய அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார். ஆந்திர பிரதேச அரசின் கீழ் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்த பிறகு, 1971 ஆம் ஆண்டு நரசிம்மராவ் அவர்கள், ஆந்திர பிரதேச முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பிராமணர் தேர்தலில் வென்று, முதலமைச்சர் பதவியேற்றதைக் கண்டு பலரும் வியந்தனர். 1969ல் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுற்ற போது, நரசிம்மராவ் அவர்கள், இந்திரா காந்திக்கு ஆதரவு தெரிவித்து, அவரது மரணம் வரை அவருக்கு விசுவாசமாக இருந்தார். நரசிம்ம ராவ் அவர்கள், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அவர்களின் அமைச்சரவைகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியதால், 1985ல் இந்தியா முழுவதும் பெரும் புகழ் பெற்றார். அவர் 1980 முதல் 1984 வரை, வெளியுறவு அமைச்சராகவும், 1984ல் உள்துறை அமைச்சராகவும், 1984 முதல் 1985 வரை பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அதன் பிறகு, அவர் 1985 ஆம் ஆண்டில், மனித வள மேம்பாட்டு அமைச்சராகவும் பதவியேற்றார்.

தேசிய பாதுகாப்பில் அவரது சாதனைகள்

தேசிய அணு பாதுகாப்பு மற்றும் ஏவுகணைகள் திட்டத்தில் நரசிம்ம ராவ் அவர்கள், எடுத்த முயற்சியே 1998ல், இந்தியா வெற்றிகரமாக பொக்ரான் அணு சோதனைகள் மேற்கொள்ள காரணமாக அமைந்தது. இந்த சோதனைகள் அனைத்தும் ராவின் பதவிக்காலத்தின் போது துவங்கப்பட்டாலும், அமெரிக்க உளவுத்துறை இதனை அறிந்ததும், அமெரிக்காவின் நெருக்கடியின் காரணமாக தவிர்க்கப்பட்டது. மேலும், அந்த நேரத்தில் வெப்பாற்றல் சாதனத்தை உருவாக்கவும், சோதிக்கவும் அதிக நேரம் தேவைப்படும் என்ற தகவலை நரசிம்ம ராவ் அவர்களே வெளியில் சொன்னார் என்றும் பல ஊடகங்கள் அவரைக் குற்றஞ்சாட்டியது. அவர் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளை எதிர்க்கும் விதமாக, இராணுவப் பயிற்சி மற்றும் அதற்காக வழங்கப்படும் கல்வித் தொகையை அதிகரித்தார். அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை இயக்கியதோடு மட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹஸ்ரத்பல் புனித ஸ்தலத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றியதற்கு, இந்தியாவின் சார்பிலிருந்து பதிலடியும் கொடுத்தார். ராவ், மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளோடு இந்தியாவை பல ஒப்பந்தங்கள் மூலமாக இணைத்தார். 1992 வரை, இஸ்ரேலுடனான இரகசிய உறவைக் கூட அவர் பகிரங்கப்படுத்தினார். இதன் விளைவாக, இஸ்ரேல் புது தில்லியில் ஒரு தூதரகம் திறக்க அனுமதியும் வழங்கினார். மார்ச் 12, 1993 மும்பை குண்டுவெடிப்புக்குப் பின்னர், நாட்டில் நிலவிய மேலாண்மையின் நெருக்கடியை சமாளிக்க, அவர் எடுத்த அற்புத நடவடிக்கைகளுக்காக அவர் பெரிதும் பாராட்டப்பெற்றார். அவர் தனிப்பட்ட முறையில் பம்பாய் சென்று, குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தானின் உண்மைகளையும், தலையீட்டையும் கண்டுபிடிக்கும் நோக்கமாக அமெரிக்க, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய மேற்கு நாடுகளிலிருந்து அவர்களது உளவுத்துறை அதிகாரிகளை இந்தியா அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

ஊழல் முறைகேடுகள்

நரசிம்ம ராவ் அவர்கள், இந்தியாவின் பிரதமராக ஆட்சியில் இருந்த போதும், பதவியிலிருந்து விலகிய பின்பும், அவருக்குப் பல ஊழல் குற்றச்சாட்டுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பிருந்தது அறியப்பட்டது. 1993 தேர்தலில், அவரது அரசாங்கத்திற்கு பெரும்பான்மையான வெற்றிக் கிடைக்க வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. எனினும், ராவின் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (எம்) மற்றும் ஜனதா தளம் உறுப்பினர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பணம் லஞ்சமாகக் கொடுத்தார் என்று நம்பப்படுகிறது. 1996ல் அவரது பதவிக்காலம் முடிவடைந்தப் பின்னர், அவர் மீதான விசாரணை வழக்குத் தொடங்கியது. 2000ல், நரசிம்ம ராவ் மற்றும் அவரது சக நண்பரான பூட்டா சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், நரசிம்ம ராவ் அவர்கள், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையிட்டதால், பிணையில் வெளியேறினார். ராவும், பூட்டா சிங்கும் 2002 ஆம் ஆண்டு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மற்றொரு வழக்காக, தவறான ஆவணங்களை உருவாக்கி, செயின்ட் கீட்ஸில் உள்ள ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் கார்ப்பரேஷன் வங்கியில் அஜேயா சிங்கின் பேரில் ஒரு வங்கி கணக்கை திறந்து, அதில் $ 21 மில்லியன் டெபாசிட் செய்து அவரது தந்தை வி.பி. சிங்கின் கௌரவத்திற்கு பங்கம் விளைவித்தார் என்று நரசிம்ம ராவ், கே.கே.திவாரி, சந்திராசுவாமி, மற்றும் கே.என்.அகர்வால் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த சம்பவம் 1989ல் நடந்திருந்தாலும், 1996ல் அவரது பிரதம மந்திரியாக பதவிக்காலம் முடிந்த பிறகு தான், மீண்டும் மத்திய புலனாய்வு துறையினரால் குற்றம் சாட்டப்பட்டார். இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர் அவருடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்டோருடன் சேர்ந்து வெளியானார். மூன்றாவது வழக்காக, இங்கிலாந்தில் ஒரு இந்திய தொழிலதிபரான லக்குபாய் பதக்கை $ 100,000 ரூபாய் மோசடி செய்தனர் என்று நரசிம்ம ராவ், சந்திராசுவாமி, மற்றும் கே. அகர்வால் அவர்களும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்தத் தொகை, இந்தியாவில் காகித கூழ் வழங்கும் பரிவர்த்தனைக்காக வழங்கப்பட்ட தொகையாகும். ஆனால், பதக் சந்திராசுவாமியையும், அவரது செயலாளரையும் சந்தோஷப்படுதுவதற்காக கூடுதலாக $ 30,000 ரூபாய் செலவு செய்ததாக வலியுறுத்திக் கூறினார். எனினும், 2003 ஆம் ஆண்டில், தக்க ஆதாரம் இல்லாததால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளே நரசிம்ம ராவ் அவர்களின் நிர்வாகத்தின் மீது ஒரு பெரும் கரும்புள்ளியாக எஞ்சிய ஆண்டுகளுக்கும், அவரது மரணத்திற்கு பின்பும் கூட தொடர்ந்தது.

பிந்தைய வாழ்க்கை

1996ல், நரசிம்ம ராவ் அவர்கள், இந்திய பிரதமராக ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்த பின்னர், பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமாக தோற்கடிக்கப்பட்டது. செப்டம்பர் 1996 வரை அவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றினார், பின்னர் அவருக்கு பதிலாக சீதாராம் கேசரி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவரது கட்சித் தலைமையின் கீழ், ஒரு சர்வாதிகார நிலைப்பாட்டையும், உறுப்பினர்களையும் செம்மையாக வழிநடத்தினார். இதுவே பல்வேறு முக்கிய மற்றும் மிகவும் பிரபலமான காங்கிரஸ் தலைவர்களான, நாராயண் தத் திவாரி, அர்ஜூன் சிங், மாதவராவ் சிந்தியா, மமதா பானர்ஜி, ஜி.கே.மூப்பனார், மற்றும் ப.சிதம்பரம் போன்றோரை வெளிக்கொண்டு வந்தது. அரசியலில் ஒரு பிரபலமானவராக இருந்தாலும், நிதி நெருக்கடியில் இருந்த போது, அவர் மகனின் கல்விக்காக, அவரது ஒரு மருமகன் தான் உதவி செய்தார். தனது மகள் மருத்துவம் பயில செய்வதற்கும், அவர் கடினமான நிதிப் பிரச்சனைகளில் இருந்தார் என்று கண்டறியப்பட்டது. நரசிம்ம ராவின் ஊடக ஆலோசகராகவும், ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவும் இருந்த பிவிஆர்கே. பிரசாத்தின் அறிவுரைப்படி, அவருக்கு சொந்தமான பஞ்சாரா ஹில்ஸ் சொத்தை விற்று, பரிந்துரைப்பவர்களின் கட்டணத்தை செலுத்தினார்.

இறப்பு

நரசிம்ம ராவ் அவர்கள், டிசம்பர் 9, 2004 ஆம் ஆண்டு மாரடைப்பால் அவதிப்பட்டதால், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். பதினான்கு நாட்கள் மருத்துவமனையில் போராடிய அவர், டிசம்பர் 23 ஆம் தேதி அன்று தனது கடைசி மூச்சை விட்டார். அவரது உடலை புது தில்லியில் தகனம் செய்ய அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தாலும், காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் நுழைய மறுக்கப்பட்டதால், அவரது உடல் ஹைதெராபாத் எடுத்து செல்லப்பட்டு, அங்கு ஜூப்ளி மண்டபத்தில் இறுதிச்சடங்குக்கு முன் பார்வைக்கு வைக்கப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவே கவுடா, பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.கே. அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சர், பி சிதம்பரம் போன்ற பல பிரபலங்களும், பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அப்போதைய ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஒய்எஸ். ராஜசேகர் ரெட்டி தலைமையில், அவரது உடல் முழு மரியாதையோடு தகனம் செய்யப்பட்டது.

காலவரிசை

1921: வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார்.

1940: ‘ககாதியா பத்ரிகா’ என்னும் வார இதழைத் திருத்தத் தொடங்கினார்.

IRWIN ,THE LORD - FIRST STEP TOWARDS INDIAN INDEPENDENCE

IRWIN ,THE LORD - FIRST STEP 
TOWARDS INDIAN INDEPENDENCE



இர்வின் பிரபு (The Lord Irwin) (ஏப்ரல் 16, 1881 – திசம்பர் 23, 1959) என்று பரவலாகவும் 1925 முதல் 1934 வரையும் பின்னர் 1934 முதல் 1944 வரை ஆலிபாக்சு வைகௌன்ட்டு (The Viscount Halifax) எனவும் அழைக்கப்பட்ட எட்வர்டு பிரெடிரிக் லின்ட்லெ வுட், ஆலிபாக்சின் முதலாம் பிரபு (Edward Frederick Lindley Wood, 1st Earl of Halifax) 1930களில் பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இர்வின் பல முக்கியப் அமைச்சகங்களில் பணியாற்றியிருந்தார்; அவற்றில் வெளிநாட்டுச் செயலராக அவர் 1938 முதல் 1940 வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக ஐரோப்பிய நாடுகள் கடைபிடித்த விட்டுக் கொடுத்தல் கொள்கையை வடிவமைத்தவராக இர்வின் கருதப் படுகிறார். இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியத் தூதராக வாசிங்டனில் பணிபுரிந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

ஆலிபாக்சு, யார்க் ஷயர் வம்சத்தின், இரண்டாம் ஆலிபாக்சு வைகௌன்ட்டு சார்லஸ் வூட்டிற்கு நான்காவது மகனாகப் பிறந்தார். அவரது மூத்த சகோதரர் மூவரும் இளம் வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தனர். இதனால் இவர் குடும்பத்தின் ஒற்றை வாரிசாகி பிரபுக்கள் அவையில் இடம் பிடித்தார்.

இந்தியாவின் வைசிராய்
இர்வின் பிரபு 1926 முதல் 1931 வரை இந்தியாவின் வைசிராயாக பணியாற்றினார். இவரது பாட்டனார் முன்பு இந்தியாவிற்கான அமைச்சராக இருந்ததை கருத்தில்கொண்டு மன்னர் ஜார்ஜ் V பரிந்துரையின்படி நியமிக்கப்பட்டு ஏப்ரல் 1, 1926ஆம் ஆண்டு மும்பை வந்திறங்கினார்.

அவரது பதவிக்காலத்தில் பெருத்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியா தன்னாட்சிக்குத் தயாரானநிலையில் உள்ளதா என ஆராய அமைக்கப்பட்ட சைமன் குழுவில் இந்தியர் எவரும் இடம் பெறாததை கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள் நடந்தன. இவற்றைக் கட்டுப்படுத்த இர்வின் வழங்கிய சலுகைகளை அரைமனதானதொன்றாக இந்தியர்கள் கருத இலண்டனில் கூடுதலானவையாக கருதப்பட்டன. இக்காலத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்: சைமன் குழு அறிக்கைக்கு எதிரான போராட்டங்கள்; நேரு அறிக்கை; அனைத்துக் கட்சி மாநாடு; முசுலிம் லீக்கின் தலைவர் முகமது அலி ஜின்னா பதினான்கு அம்சக் கோரிக்கை; மகாத்மா காந்தியின் தலைமையில் இந்திய தேசிய காங்கிரசு நடத்திய குடிகளின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் இந்திய வட்டமேசை மாநாடுகள் ஆகும்.

இர்வின் அனைத்து காங்கிரசுத் தலைவர்களையும் சிறையில் அடைத்து காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலண்டனிலிருந்து விடுதலை வழங்குவது குறித்த எந்தவொரு ஆதரவான நிலையும் கிடைக்காதநிலையில் இர்வினின் முயற்சிகள் தோல்வியடைந்தன. நாட்டில் பிரித்தானிய குடிமைப்படுத்தலுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. தன்னால் எந்தவொரு வாக்குறுதியும் வழங்கவியலா நிலையில் இர்வின் அடக்குமுறையால் இந்தப் போராட்டங்களை எதிர்கொண்டார். காந்தியை கைது செய்து, பொதுக்கூட்டங்களை தடை செய்து கட்டுப்பாடுகளை விதித்தார். இந்தப் போராட்டங்களின்போது காவல்துறையின் தடியடியால் தலைவர் லாலா லஜபத் ராய் உயிரிழக்க நிலைமை மோசமானது. இதனை நேரில் கண்ட பகத் சிங் லாலாவின் மறைவிற்கு பழிவாங்கவே தனது தாக்குதலை நிகழ்த்தியதாகத் தெரிவித்தார். காந்தியின் கைது மேலும் போராட்டத்தை வலுவடையச் செய்ய சனவரி 1931இல் தில்லி உடன்பாடு|தில்லி உடன்பாட்டிற்கு வழி வகுத்தார்; இதன்படி அனைத்துத் தரப்பினரும் பங்குகொள்ளும் வட்டமேசை மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய ஒப்புக்கொண்டதை அடுத்து ஒத்துழையாமை இயக்கமும் வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இரு வாரங்கள் நடந்த இந்த மாநாட்டின் முடிவில் காந்தி-இர்வின் உடன்பாடு ஏற்பட்டது.

மார்ச் 5,1931 அன்று கையெழுத்தான இந்த உடன்பாட்டின்படி

காங்கிரசு தனது ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொண்டது.
வட்ட மேசை மாநாடுகளில் பங்கேற்க காங்கிரசு உடன்பட்டது.
காங்கிரசின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த அரசு வெளியிட்ட அனைத்து அவசரச் சட்டங்களையும் திரும்பப் பெறும்.
வன்முறை தவிர்த்த அனைத்து வழக்குகளையும் அரசு விலக்கிக் கொள்ளும்.
ஒத்துழையாமை இயக்கத்திற்காக கைதாகி தண்டனை பெற்ற அனைத்து காங்கிரசுத் தொண்டர்களையும் விடுவிக்க அரசு உடன்பட்டது.
மேலும் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரசின் ஒரே சார்பாளராக காந்தி கலந்து கொள்ளவும் உடன்பாடு ஏற்பட்டது.

மார்ச்சு 20, 1931 அன்று இர்வின் பிரபு ஆட்சியிலிருந்த இளவரசிக்காக கொடுக்கப்பட்ட ஓர் விருந்தில் காந்தியின் நேர்மை, தூய்மை மற்றும் நாடுப்பற்றை பாராட்டிப் பேசினார். இதற்கு பின்னர் ஒரு மாத காலத்தில் பணி ஓய்வு பெற்று நாடு திரும்பினார். இர்வின் திரும்பிய பின்னர் அமைதி நிலவினாலும் ஓராண்டுக்குள்ளேயே மாநாடு தோல்வியடைந்து காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இர்வினின் வைசிராய் பதவிக்காலம் இருதரப்பினருக்கும் நடுநிலையில் இருந்தது; கண்டிப்புடனும் தனித்தன்மையுடனும் செயல்பட்டார். எனவே நாடு திரும்பிய பின்னர் மிகுந்த மதிப்புடன் அரசியலில் மீண்டும் ஈடுபட முடிந்தது

காந்தி-இர்வின் ஒப்பந்தம் (Gandhi–Irwin Pact) என்பது 1931ல் மகாத்மா காந்திக்கும் இந்திய வைசுராய் இர்வின் பிரபுவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்ததைக் குறிக்கிறது. இது டெல்லி ஒப்பந்தம் / தில்லி ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. 1930 சட்டமறுப்பு இயக்கத்துக்குப் பின்னர் காலனிய ஆட்சியாளர்கள் மற்றும் விடுதலை இயக்கத்தினர் இடையே நடைபெற்ற முதல் அதிகாரப் பூர்வ சமரசப்பேச்சு வார்த்தை இது. இரு தரப்பினரும் தங்கள் முந்தைய நிலைகளைத் தளர்த்தி பல மாற்றங்களுக்கு ஒப்புக் கொண்டனர்.

இந்திய தேசிய காங்கிரசு ஒப்புக் கொண்டவை:

சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிடல்
இந்திய வட்டமேசை மாநாடுகளில் பங்கேற்றல்
காலனிய அரசு ஒப்புக் கொண்டவை:

சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொண்டு கைதான அரசியல் கைதிகளை விடுவித்தல்
இந்திய தேசிய காங்கிரசின் செய்ல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அவசர காலச் சட்டங்களையும் விலக்கிக் கொள்ளுதல்
உப்பு மீதான வரியை இரத்து செய்து, இந்தியர்களுக்கு உப்பு உற்பத்தி செய்ய அனுமதி அளித்தல்
கள்ளுக்கடைகள் மற்றும் வெளிநாட்டுத் துணிக் கடைகளை மறியல் செய்ய காங்கிரசாரை அனுமதித்தல்
பறிமுதல் செய்யப்பட்ட சத்தியாகிரகிகளின் சொத்துக்களை திருப்பி ஒப்படைத்தல்
மூன்று வாரகால பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தின் விளைவாக காங்கிரசு இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டது.