Tuesday, 31 July 2018

MUMTAZ ,HINDI ACTRESS BORN 1947 JULY 31








MUMTAZ ,HINDI ACTRESS 
BORN 1947 JULY 31



Mumtaz Madhvani, formerly Mumtaz (born 31 July 1947[1]), is an Indian Hindi film actress.

Career[edit]

Mumtaz in 2010
Mumtaz appeared as a child actress in Sone Ki Chidiya (1958). As a teenager she acted as an extra in Vallah Kya Baat Hai, Stree and Sehra in the early 1960s. As an adult, her first role in A-grade films was that of the role of sister of the hero in O. P. Ralhan's Gehra Daag.[2] She got small roles in successful films such as Mujhe Jeene Do. Later, she got the role of the main lead heroine in 16 action films, including Faulad, Veer Bhimsen, Tarzan Comes to Delhi, Sikandar-E-Azam, Rustom-E-Hind, Raaka, and Daku Mangal Singh, with freestyle wrestler Dara Singh, and was labelled as a stunt-film heroine.[by whom?] In the films that the pair Dara Singh-Mumtaz did together, Dara's remuneration was INR 450,000 per film, and Mumtaz's salary was INR 250,000 per film.[3]


It took Raj Khosla's blockbuster Do Raaste (1969), starring Rajesh Khanna, to finally make Mumtaz a full-fledged star. Although Mumtaz had a minor role, director Khosla filmed four songs with her.[4] The film made her popular, and she acknowledged that even though she had a small role, it was still one of her favourite films.[2] In 1969, her films Do Raaste and Bandhan, with Rajesh Khanna, became top grossers of the year, earning around 65 million and 28 million respectively.[5] She played Rajendra Kumar's leading lady in Tangewala. Shashi Kapoor, who had earlier refused to work with her in Saccha Jootha because she was a "stunt-film heroine", now wanted her to be his heroine in Chor Machaye Shor (1973). She acted opposite Dharmendra as the lead heroine in films like Loafer and Jheel Ke Us Paar (1973).



She won the Filmfare Best Actress Award for one of her favourite films Khilona in 1970, and she was "very happy that the audience accepted her in an emotional role".[2] Mumtaz frequently acted with Feroz Khan in hits like Mela (1971), Apradh (1973) and Nagin (1976). Her pairing with Rajesh Khanna was the most successful in a total of 10 films.[6] She quit films after her film Aaina (1977) to concentrate on her family. She made a comeback 13 years later with her final film Aandhi

WILL AURANGAZEEB ,DEMOLISH KASI VISVANATHAR TEMPLE ?









WILL AURANGAZEEB ,DEMOLISH 
KASI VISVANATHAR TEMPLE ?



ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?

வெங்கட் நாகராஜ் தனது காசி பயண அனுபவத்தை பற்றி எழுதிய இடுகையை பார்த்தேன். மிக சாதுர்யமாக தனது பாசிச கருத்துக்களை மென்மையாக சொல்லி நஞ்சை எப்படி விதைக்கிறார் என்று பாருங்கள்.

//கி.பி. 490 ஆம் வருடம் காசி விஸ்வநாதர் ஆலயம் கட்டப்பட்டது. பதினோறாம் நூற்றாண்டில் மீண்டும் ஹரிச்சந்திர மஹாராஜா ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார். 1194 ஆம் அண்டு முகம்மது கோரி நடத்திய படையெடுப்பின் போது இந்தக் கோவிலையும், வாரணாசியில் இருந்த மற்ற கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடவே, இது மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது.

பிறகு வந்த குத்புதின் ஐபக்கால் மீண்டும் இடிக்கப்பட்டு, அவரது மறைவிற்குப் பின் பல அரசர்களால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 1351-ம் ஆண்டு ஃபீருஸ் ஷா துக்ளக் என்பவரால் மீண்டும் இடிக்கப்பட மறுபடியும் நிர்மாணிப்பதில் நீண்ட இடைவெளி. அக்பரின் ஆட்சியில் வருமானத் துறை மந்திரியாக இருந்த தோடர் மால், 1585-ம் வருடம் மீண்டும் ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார்.

1669-ஆம் வருடம் அரசாட்சி புரிந்த ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோவிலை முற்றிலும் இடிக்க ஆணையிடுகிறார். கோவில் தரைமட்டமாக்கப்பட்டு அவ்விடத்தில் கியான்வாபி மாஸ்க் என்ற மசூதி கட்டப்படுகிறது. கோவிலின் முக்கிய பூஜாரியாக இருந்தவர் சிவலிங்கத்தோடு கோவிலின் பின்பக்கம் இருந்த ஞானவாபி கிணற்றுக்குள் குதித்து விடுகிறார். இப்போதும் இந்தக் கிணறு காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கிறது. எப்போதும் சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதிரே அவரது வாகனமான ரிஷப வாகனம் இருக்கும். தற்போதைய மசூதியை நோக்கி அக்காலத்தில் இருந்த ரிஷப வாகனம் இருக்கிறது. //

எந்த அளவு அவதூறுகளை பரப்ப முடியுமோ அந்த அளவு திட்டம் போட்டு சிலர் பரப்பி வருகின்றனர். ஒரு இடத்தை சுற்றிப் பார்ப்பவர் அதன் அழகை சொல்லி விட்டு அல்லது அங்குள்ள மக்களை சொல்லி விட்டுதான் செல்வார்கள். அதை விடுத்து சர்ச்சைக்குரிய அதன் இடிப்பை வலிந்து திணித்து வெறுப்பை நாசூக்காக விதைக்கிறார். முதலில் கோவில் என்பது வழிபாட்டு தலம் மட்டும் அல்ல. அந்நாட்டின் பொன்னையும் விலையுயர்ந்த சொத்துக்களையும் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக இருந்தது. எனவே வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் முதலில் கண் வைப்பது நம் நாட்டு கோயில்களைத்தான். பல இந்து மன்னர்கள் கோவிலை கொள்ளையடித்துள்ளார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளே இதற்கு சாட்சி! ஆனால் அவற்றை எல்லாம் எழுத மாட்டார்கள்.

இந்த பதிவை எழுதியவர் முகலாயர்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் இடிப்பதும் பிறகு கட்டுவதுமாக விஸவநாதர் ஆலயத்தின் வரலாற்றை எழுதுகிறார். இடித்தது மொகலாயர் ஆட்சி. அதே ஆட்சியில் அந்த கோவில் எப்படி திரும்பவும் கட்டப்பட்டது? அதை எப்படி அரசு அனுமதிக்கும்? நம் காலத்தில் இடிக்கப்பட்ட பாபரி மசூதியை இன்று வரை கட்ட முடிகிறதா? அறிவியல் வளர்ந்த காலத்திலேயே நிலைமை இப்படி இருக்க 1000 வருடங்களுக்கு முந்தய நிலையை சொல்ல தேவையில்லை. இதுதான் யதார்த்தம்.

பொதுவாக அரசர்கள் பெரும்பான்மை மக்களை அனுசரித்து செல்லவே ஆசைப்படுவர். ஏனெனில் அவர்களுக்கு சிக்கலின்றி ஆட்சி செலுத்த வேண்டும். ராமர் கோவில் கட்டுவோம் என்று சூளுரைக்கும் பிஜேபி தான் ஆட்சியில் அமர்ந்தால் அதை திரும்பி கூட பார்க்காது. இவ்வளவுதான் இவர்களின் மதப்பற்று. ஏனெனில் அவர்களின் ஆட்சி அமைதியாக செல்ல வேண்டும். காசி விசுவநாதர் கோவிலைப் பற்றி பல்கலைக்கழக பேராசிரியர் எழுதிய ஒரு கட்டுரையை முன்பு சேமித்து வைத்திருந்தேன். அதனை தற்போது அப்படியே தருகிறேன். ஒளரங்கசீப்பின் ஆட்சியும் காசி விசுவநாதர் கோவிலின் இடிப்பின் வரலாற்றையும் சற்று நோக்குவோம்.

------------------------------------------------------------------------
--

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.

இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.


அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். 
உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் 
சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், 
சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், 
வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில.

தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.

ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார்.

ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும்.

அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப்.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்.

ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார்.

''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்கு ட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தா வின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது.


''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மை யையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதி யளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்ப ட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

அதிர்ச்சி அடைந்த இந்து மன்னர்கள் இக்குற்றச் செயலு க்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரினர். கற்பக்கிருகத்தின் நேர் கீழே இது நடந்ததால் கோவிலின் புனிதம் கெட்டு விட்டதா கவும் கருதப்பட்டது. அதனால் விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படவும், அந்தக் கோவில் இடிக்கப்படவும், குற்றவாளியான கோவில் பூசாரி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவும் ஔரங்கசீப் உத்தரவு பிறப்பித்தார்.

டாக்டர் பட்டாபி சீதாராமையா, டாக்டர் பி.எல்.குப்தா ஆகியோர் இச்சம்பவத்தை ஆதாரங்களுடன் தங்கள் புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில், கோவில் இடிக்கப்படக் காரணமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு, அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்த ஔரங்கசீப் குற்றவாளியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கி றார்.

இந்திய வரலாறு எந்த அளவிற்கு பாரபட்சமான முறையில் திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இச்சம்பவங்கள் மிகச்சிறிய உதாரணங்கள்.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

VIETNAM VEEDU SUNDARAM ,DIALOGUE,DIRECTOR BORN 1940 JULY 31





VIETNAM VEEDU SUNDARAM ,DIALOGUE,DIRECTOR
BORN 1940 JULY 31




Vietnam Veedu" Sundaram born 1940 ,july 31 was a popular Tamil scriptwriter and director.

He has written scripts for nearly all the actors and wrote for 8 films starring Sivaji Ganesan after 1970. His directorial ventures Gauravam, Gnana Paravai, Vijaya, Devi Sri Kumariamman and Payanam are considered cult classics. He was the writer for Tamil classics like Vietnam Veedu, Gnana Oli, Satyam, Grihapravesam, Justice Gopinath Annan Oru Koyil starring Sivaji Ganesan, Naan Yen Pirandhen, Naalai Namadhe starring M. G. Ramachandran. He has directed more than a dozen films and is well known for his family themes. His stories have been made into films in Telugu, Kannada and Hindi.[2] He has turned actor on the small screen and films after 1998 and has to his credit quite a few television serials.

Early life[edit]

Sundaram's mother brought him to Madras from Tiruchirapalli in 1945 to see Mahatma Gandhi at Island Grounds. Then he moved to Madras for good in 1955.

As he was not well educated he was made to work in a factory even at a very young age. In 1955-56 he joined Dunlop factory as a machine operator.

In the mean time he was also working as a service boy in United Amateur Artistes run by Y.G. Parthasarathy, his wife and Pattu. That kindled his interest in drama and cinema. He used to narrate real life incidents with imagination and make it an interesting story. This made him a good storyteller among his friends.Slowly he graduated himself in theatrics and play writing. Soon he became a good screenplay and dialogue writer.

Film career[edit]

He was the mastermind behind creating the highly successful play "Vietnam Veedu," hence the prefix for his name. Vietnam Veedu Sundaram played the hat-trick in films too with the same titles, all acted by the Nadigar Thilagam Sivaji Ganesan, the Thespian of Indian cinema.[3] He is known as the ‘founder’ of social mythology. The well known movies which he wrote include Vietnam Veedu, Gnana Oli, Naan En Piranden, Naalai Namadhe,Satyam, Gruhapravesam, Justice Gopinath, Anaan Oru Koyil, Oru Malarin Payanam, Navagraha Nayaki, Geethanjali, Aayiram Kannudayaal,Dharmam, Piranthn Valarthen, Nambinar Keduvathillai, Jallikattu, Raja Mariyadhai, Velundu Vinaiyillai, Soora Samhaaram. He also wrote story for Kannada film Anupama. He gained national fame for writing the story for 1978 Hindi film Devata starring Sanjev Kumar in the lead.
He cast the ever green K. R. Vijaya in the role of goddess in "Namma Veetu Deivam", the first time social mythology in Tamil, which was remade into Malayalam, Telugu and Kannada. That set the social mythology trend in films and televisions. He has directed more than dozen films and is well known for his family themes with one of them Gouravam being a cult classic.[4] His stories have been made into films in other languages also. He started acting in films since 1999.He turned actor on the small screen from 1998 and has to his credit quite a few television serials. He has worked as a writer for films with many popular stars including M. G. Ramachandran, Sivaji Ganesan, Rajinikanth, Kamal Hassan, K. R. Vijaya, Sathyaraj and Karthik Muthuraman.[5]

Death[edit]

Sundaram died on 6 August 2016 at the age of 73 due to age related ailments.[6] He is survived by his wife Chella and daughter Anu Parthasarathy who is a costume designer.[1][7]

Awards and nominations[edit]
"Vietnam Veedu" Sundaram won the Tamil Nadu State Film Award for Best Dialogue Writer for his magnum opus, Vietnam Veedu in 1970. He also won the Arignar Anna Award in the Tamil Nadu State Film Honorary Award in 1991.

SAARAL NAADAN,SRILANKA WRITER DIED 2014 JULY 31






SAARAL NAADAN,SRILANKA WRITER
DIED 2014 JULY 31






மலையக இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்யப்போகின்ற ஆய்வாளர்கள், விமர்சகர்கள் கால க்கணக்கெடுப்பு நடத்தும் பொழுது 1930 களின் பின்னர் நடேசய்யர் யுகம் என்றும், 1950களின் பின்னர் சி.வி. வேலுப்பிள்ளை யுகம் என்றும் 1980களின் பின்னர் சாரல் நாடன் யுகம் என்றும் கணிக்க வேண்டும் என்று மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் போத்திரெட்டி பல ஆண்டு களுக்கு முன் இலக்கிய உரையாடல் ஒன்றின்போது தெரிவித்திருந்தார். கடந்த முதலாம் திகதி எம்மை விட்டு பிரிந்த சாரல் நாடனின் எழுத்துக்கள் தென்றலாக வீசி, புயலாக மலையக இலக்கியத்திற்கு வலிமை சேர்ப்பதை மலையக இலக்கிய வராலாற்றில் அவருக்கு தனி அத்தியாயம் எழுதப்பட வேண்டும்.

அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி உருவாக்கிய சாரலின் திறமை கண்டு இரா.சிவலிங்கம் அவரை எஸ்.திருச்செந்தூரன் போன்ற ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர். 1960களில் எழுத்திலும், பேச்சிலும், கவிதைகளிலும் புதியதோர் ஆத்திகப் பரம்பரை மலைய கத்தில் உருவாகியது. சீற்றம் மிகுந்த அந்த இளந்தலைமுறையினரை பல்வேறு வகைகளிலும் சி.வி.வேலுப்பிள்ளை உற்சாகப்படுத்தினார். அப்பரம்பரையின் முன் னோடியான சாரல் நாடன் மலையகத்தின் மணிக்கொடி என்று அழைக்கப்பட்ட மலைமுரசு இதழில் எழுதினார். தினகரன் ஆசிரியராக பேராசிரியர் கைலாசபதி பொறுப்பேற்றவுடன் மண்வாசனை மிக்க படைப்புக்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையை எழுதத்தூண்டினார். அவரின் நடை சித்திரங்கள் தினகரனில் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து என்.எஸ்.எம். இராமையா, சாரல்நாடன் ஆகிய இருவரும் தமது ஆக்க இலக்கிய படைப்புக்களான சிறுகதைகளை எழுதினர்.

சாரல்நாடனின் 'எவளோ ஒருத்தியை'பிரசுரித்த பேராசிரியர், தம் கைப்பட கடிதம் எழுதி ஊக்கப்படுத்தினார். என்.எஸ்.எம்.இராமையாவும், சாரல்நாடனும் மலையக இலக்கியத்தின் நம்பிக்கைகள் என்று கைலாசபதி சி.வி.வேலுப்பிள்ளையிடம் கூறி மகிழ்ந்திருக்கின்றார். டாக்டர் நந்தி கனக செந்தில்நாதன் போன்றோரும் 'எவளோ ஒருத்தி' பற்றி பாராட்டினர்.

ஹைலன்ஸ் கல்லூரியின் முதல் பல்கலைக்கழக மாணவனாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்தும் அவரால் தொடர, முடியவில்லை. கண்டி அசோகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே கதை, கவிதை என்பதுடன் விமர்சனம், நாட்டார் இயல் என்று எழுதத் தொடங்கினார்.

அகில இலங்கையிலுமே தேயிலை ஆராய்ச்சி நிலையமும் பெருந்துறை நிர்வாகம் பற்றிய தேசிய நிர்வாகமும் நடத்திய தேர்வில் முதலாவதாக மதிப்பெண்கள் பெற்று தேயிலைத் தோட்டத்தொழிற்சாலையின் உயர் அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டார். எந்த தோட்ட மக்களைப்பற்றி எழுதினாரோ அந்த மக்களின் உழைப்பின் மகிமையை வெளிப்படுத்தும் தேயிலையை பதமாக உருவாக்கும் படைப்பாளியானார். இயந்திரங்களுக்கு மத்தியில் இயந்திரங்களைப் போன்று மனிதர்களுடன் தொழில் புரியும் தான், இயந்திரமயமாகி விடாமல் இருக்க இலக்கியத்திடம் தஞ்சம் புகுவதை நாளாந்தம் பழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றேன் என்று சாரல் குறிப்பிடுவார்.
கவிமணி சி.வி. யின் பன்முக ஆற்றலை இன்றைய தலைமுறையினர் அறியும் வண்ணம் 'சி.வி. சில சிந்தனைகள்' என்ற படைப்பைத் தந்தார். அவர் இறுதியாக எழுதிய நூலும் சி.வி. பற்றியதாக இருந்தது என்பது வியப்புக்குரியது. 'இலங்கை தமிழ் சுடர்மணிகள் 18' என்ற குமரன் புத்தக இல்லம் வெளியிட்ட, சி.வி வேலுப்பிள்ளை' என்ற சாரல்நாடன் எழுதிய நூல் வெளியீட்டு விழா கடந்த 12.07.2014இல் சங்கமம் கலை இலக்கிய ஒன்றியத்தால் அட்டனில் நடந்தது. இதுவே அமரரின் இறுதி இலக்கிய நிகழ்வாகும். வீரகேசரி 1962ஆம் ஆண்டு மலையக எழுத்தாளர்களுக்காக நடத்திய சிறுகதைப்போட்டியில் சாரல்நாடன் எழுதிய கால ஓட்டம் சிறுகதை இரண்டாம் இடத்தை பெற்றது. அதுமட்டுமன்றி, அநேக ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

சி.வி. சில சிந்தனைகள், தேசபக்தன் கோ. நடேசய்யர், மலையக தமிழர், மலையக வாய்மொழி இலக்கியம், மலைக்கொழுந்தி சிறுகதைகள், மலையகம் வளர்த்த தமிழ், பத்திரிகையாளர் நடேசய்யர், மலையகத்தமிழ் வரலாறு, பேரேட்டில் சில பக்கங்கள், பிணந்தின்னும் சாத்திரங் கள், மலையக இலக்கியமும் தோற்றமும் வளர்ச்சியும், இளைஞர் தளபதி இரா. சிவலிங்கம், சி.வி.வேலுப்பிள்ளை, இன்னொரு நூற்றாண்டுக்காய் ஆகிய நூல்களை சாரல் நாடன் எழுதியுள்ளார்.

அவரது படைப்புக்கள் அதிகமாக ஆய்வு இலக்கியங்களாகவே இருந்திருக்கின்றன.

மலையக எழுத்தாளர்கள் எவரும் அதி கம் ஆர்வம் காட்டாத ஆய்வுத்துறைக ளில் அக்கறை காட்டினார் சாரல். அடுத்தவர்களின் கட்டுரைகளின் குறிப்புக்களை சேகரித்து எழுதுவதில் இவருக்கு விருப்பம் இல்லை. தகவல்கள் சரியானவையா ஆதாரங்கள் உண்மையானவையா என்பதை நேரில் தேடிப்பிடித்து விளக்கம் பெற விரும்பினார். தேனீக்கள் பறந்து பறந்து பூக்களில் மகரந்தத்தை சேகரிப்பது போல நூல் நிலையங்களை தேடிப் போனார். கொழும்பு தேசிய சுவடிக்கூடம், நூதனசாலை நூலகம், கண்டி சத்தியோதய நூலகம் அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ நூலகம், நுவரெலியா நூலகம், போன்றவற்றில் அதிக நூல்களைத் தேடிப் படித்தார். தேசிய சுவடிக்கூடத்தில் பழம் பத்திரிகைகளையும் ஹன்சார்ட் போன்றவற்றையும் நுணுகி ஆராய்ந்தார். மாதக் கணக்கில் விடுமுறை எடுத்து ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் குறிப்புக்கள் சேகரித்தார். இதனால் தொழி லை விட நேர்ந்தது.

அவரது தேடலின் அற்புத அறுவடை தான் 'தேச பக்தன் கோ. நடேசய்யர்' என்ற மலையகத்தின் மாமனிதரைப் பற்றிய நூல். ஒரு காலத்தில் மலையகம் பற்றிய தகவல்களைப் பெற சி.வி.யிடம் தான் போவார்கள். அவர் இல்லாத கால கட்ட த்தை நிறைவு செய்தவர் சாரல். அவரது இடத்தை நிரப்ப கருத்துக்கெட்டிய வரை மலையகத்தில் எவரும் இல்லை என்பதே உண்மை நிலையாகும்.

நன்றி - வீரகேசரி

Monday, 30 July 2018

KUTHOOSI GURUSAMY, WRITER, BORN APRIL 26,1906 - 1965 OCTOBER 11




KUTHOOSI GURUSAMY, WRITER,
BORN APRIL 26,1906 - 1965 OCTOBER 11






குத்தூசி குருசாமி என அழைக்கப்படும் சா. குருசாமி (23 ஏப்பிரல் 1906 - 11அக்டோபர் 1965) விடுதலை இதழில் குத்தூசி என்ற புனைபெயரில் பல அறிவார்ந்த கூர்மையான கட்டுரைகளை எழுதி வந்தவர். 1927 முதல் 1965 வரை பெரியார் ஈ. வே. ராவின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணியில் இருந்து செயல்பட்டார்

இளமையும் கல்வியும்

தஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பையில் சைவக் குடும்பத்தில் சாமிநாதன், குப்பு அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1923 இல் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் இடைநிலைப்படிப்பில் சேர்ந்தார். தேசியக்கல்லூரி சூழ்நிலை குருசாமிக்கு அறிவுப் பசியைத் தூண்டியது. 1925 இல் காந்தி அடிகளைக் கல்லூரிக்கு அழைத்து பணமுடிப்பு அளித்து சிறப்புச் செய்தார். இளங்கலை வரை தேசியக் கல்லூரியில் பயின்றார். சைமன் குழு புறக்கணிப்புக்குத் தலைமைத் தாங்கி கல்லூரிமாணவர்களைத் திரட்டி ஊர்வலம் நடத்தினார்.

பொது வாழ்க்கை

பெரியார் ஈ.வெ.ரா தொடங்கிய சுயமரியாதை சங்கத்தின் பத்திரிகையான குடியரசு இதழைப் படித்து சமயம், சாதி முதலிய பாகுபாடுகளையும் மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்தார். 1927 இல் ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். குடியரசு ஏட்டில் கட்டுரைகளும் அவ்வப்போது தலையங்கங்களும் எழுதினார். பகுத்தறிவுப் பரப்புரையும் செய்தார். அவருடைய எழுத்திலும் பேச்சிலும் கிண்டல் கேலி இருக்கும். அவருடைய கருத்துகள் தெளிவாகவும் தக்கச் சான்றுகளுடன் விளங்கும். அவர் ஒரு பகுத்தறிவாளர் மட்டும் அல்லாமல் பொதுவுடைமைவாதியாகவும் இருந்தார்.

படைப்புகள், சாதனைகள்

"நான் ஏன் கிறித்தவன் அல்லன்" என்னும் பெர்ட்ரண்டு ரசல் எழுதிய நூலைத் தமிழில் எழுதினார். ஜீன் மெஸ்லியர் என்பவர் எழுதிய மரண சாசனம் என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எழுதினார். விடுதலை ஏட்டில் 'பல சரக்கு மூட்டை' என்னும் தலைப்பில் குத்தூசி என்னும் புனைபெயரில் 16 ஆண்டுகள் சுமார் 5000 கேலிக் கட்டுரைகள் எழுதினார்.

தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம் என்ற தன்மான இயக்கக் கருத்தினைக் கேட்டு திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றிவிட்டார்.[1]

1935 இல் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தினார். அறிஞர்கள் சாக்ரடீசு, காரல் மார்க்சு, காந்தியடிகள், டால்சுடாய், லெனின், அன்னி பெசண்டு, செல்லி பிராட்லா, ஸ்டாலின் ஆகியோரின் வரலாற்றை எழுதினார். குடியரசு, விடுதலை, புதுவை முரசு, ரிவோல்ட்டு, குத்தூசி , அறிவுப்பாதை (வார இதழ்), திராவிடன், பகுத்தறிவு ஆகிய இதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

புனை பெயர்கள்

குத்தூசி , சி.ஐ டி, காலி மணிபர்ஸ், தெப்பக்குளம், பாட்மிண்டன், குகு, சம்மட்டி, சிவப்பழம், தமிழ்மகன், தராசு, கிறுக்கன், மதுரைவீரன், குமி, பென்சில், விடாக்கண்டன், தொண்டைமண்டலம், ஸ்பெக்டேட்டர், பிளைன் ஸ்பீக்கர், எஸ் ஜி; ஆகியன குருசாமியின் புனை பெயர்கள் ஆகும்.

மரணக் குறிப்பு
மேதை பெட்ராண்ட் ரசலைப் பின்பற்றி குருசாமியும் தன்மரணக் குறிப்பை 1959இல் எழுதினார். ஆனால் அவர் 11-10-1965 அன்று இறந்தார்

KRISHNA DEVA RAYA , AUTOBIOGRAPHY




KRISHNA DEVA RAYA , AUTOBIOGRAPHY









சிறந்த ஒரு சரித்திர கதை. சரித்திர கதை விரும்பிகள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கதை.நான் கிருஷ்ண தேவராயன்

நான் கிருஷ்ண தேவராயன் இதை எல்லாம் உடைக்க முயற்சி செய்கின்றது. தன்மை ஒருமையில் எழுதப்பட்ட சிறுகதைகள் ஏராளம். குறுநாவலகளும் உள்ளன. ஒரு முழு நாவல் என்பது பெரிய முயற்சி. அவ்வகையில் எழுதும் போது மிக்க கவனமாக எழுத வேண்டும், சுலபமல்ல. கதைசொல்லி சம்பந்தப்படாத அனைத்து சம்பவங்களையும் வேறு யாரவது சொல்லிக்கொண்டே இருந்தால் எரிச்சல் வரும். மேடை நாடகம் மாதிரி மாறிவிடும்.

இதன் சிறப்புகள் என்று பட்டியலிட்டால்

கதை சொல்லும் முறை

ஒரு புகழ் பெற்ற மன்னன் தன் கதையை தானே சொல்வது. இது போன்று வேறு சரித்திரகதைகள் ஏதும் வந்ததாக எனக்கு தெரியவில்லை.

கதையின் தன்மை
யதார்த்தமான கதை. தேவையற்ற திடும் திருப்பங்கள், குழப்பங்கள் ஏதுமற்ற தெளிவான கதை

பாத்திரப் படைப்பு
கதாநாயகன் ஒரு சாதரண மனிதன் அரச பொறுப்பிலிருப்பவன் அவ்வளவுதான். அனைத்து கதாபாத்திரங்களும் அப்படித்தான். அமானுஷ்ய வீரம், சாணக்கியனை கரைத்து குடித்த மந்திரி என்று யாருமில்லை. மிகப்பெரிய மன்னன் என்பதால் தேவையற்றப் புனிதத்துவம் தரப்படவில்லை, கொடுங்கோலனாகவும் காட்டப்படவில்லை.

சம்பவங்களின் நம்பகத்தன்மை
கதாபாத்திரங்கள் சாதாரணமானவர்கள் என்பதால் சம்பவங்களும் நம்புவதற்கு தோதானவை. இப்படியும் நடந்திருக்க்லாம் என்றுதான் நினைக்க வைக்கின்றது.

கதாநாயகனே கதை சொல்லும் போது, கதை முழுவது அவன் பார்வையில் செல்ல வேண்டும். மற்ற கதாபாத்திரங்களும் கதாநாயகனின் பார்வையிலே சித்தரிக்கப்படும். பயங்கர திருப்பங்கள் வைக்க முடியாது, ஆதாரங்களை அடிக்குறிப்பாக தந்தாலோ, இல்லை கதையில் தர முயன்றாலோ சற்று அபத்தமாக போய்விடும். முக்கியமாக சில சமயம் சலிப்பை தந்துவிடும். ஒருவன் தன் மனதில் நினைப்பதையெல்லாம் எழுதிக்கொண்டே வந்தால், அது ஒரு குழப்பமான சித்திரத்தை தரும்.

ரா.கி.ரங்கராஜனின் அனுபவம் இவையனைத்தையும் வென்றுள்ளது. கதையில் நீள நீள வரிகள் இல்லை. கதை சொல்லி ஒரு வேற்று மொழிக்காரன் என்பதால் அலங்கார வாக்கியங்களை பயன்படுத்தாமல் சாதரண நடையில் கதையை சொல்லி செல்கின்றார்.

கதை கிருஷ்ணதேவராயர் இளவரசனாக இருந்த போது பாகவதகதாவில் நாட்டியமாடும் சின்னாதேவியை கண்டு காதல் கொள்கின்றார். கிருஷ்ணதேவராயர் தன் அண்ணன் மரணத்திற்கு பின் அப்பாஜி துணையுடன் அரச பதவியேற்கின்றார். அரசகுலத்தின் மீது தீராப் பகையுள்ள சின்னாதேவியின் அண்ணன் அவளுடன் எங்கோ சென்றுவிடுகின்றான். கிருஷ்ணதேவராயர் தனது அரச பதவியின் சுமைகளுடன் சின்னாதேவியை தேடி களைத்து போயிருக்கும் போது மீண்டும் அவளை காண்கின்றார். கதை அவளை மீண்டும் காணும் போது ஆரம்பிக்கின்றது. உபகதைகளை அவர் நமக்கு கூறுகின்றார்.

காயத்ரி என்னும் பணிப்பெண் அவருக்கு முதல் அத்தியாயத்திலேயே அறிமுகமாகி, அவள் மூலமாக பல உதவிகள் பெற்று சின்னாதேவியை எப்படி மணக்கின்றார் என்பதை கிருஷ்ணதேவராயர் நமக்கு கூறுகின்றார். இதற்கு நடுவில் அவரது அரசியல் வாழ்வில் நடைபெற்ற போர்கள், அரசியல் காரணத்திற்காக திருமலா தேவியை திருமணம் செய்தது என்று பல நிகழ்வுகள்.

அனைத்து பாத்திரங்களையும் முடிந்த வரை நடைமுறைக்கு சாத்தியப்படகூடிய வகையில் சித்தரித்துள்ளார். கதையில் தேவராயருக்கு இணையாக வரும் காயத்ரி, ஒரு கற்பனை பாத்திரம். இது இல்லாமலே கதையை அமைத்திருக்கலாம். ஆனால் இது தொடர்கதையாக வந்ததால், தொடரும் போடுவதற்கு முன்பு ஒரு சஸ்பென்ஸ் வைக்க வேண்டுமே என்று இக்கதாபாத்திரத்தை சிருஷ்டித்துள்ளார் போல.

மன்னன் என்றாலும் அவருக்கும் சாதரண மனிதர்களின் உணர்வு இருக்கும் அதையும் நினைவில் வைத்து எழுதுங்கள் என்று சுஜாதா கூறியதை நினைவில் வைத்துக் கொண்டு சராசரி உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகின்றார். மன்னரின் தாயார் பக்தி பாடலை கூறி விளக்கியதும் மனமுருகி ஆஹா என்று புல்லரிக்காமல் மனதுக்குள் அலுத்துக் கொள்ளும்; காதலியை நினைத்து நினைத்து புலம்பும்; துக்கத்தை அடக்க முடியாமல் தெருவில் இறங்கி ஓடும்; தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க முடியாமல் அகங்காரம் தடுக்கும்; ஒரு சராசரி மனிதனைத்தான் காட்டுகின்றார்.

இப்புத்தகம் கிருஷ்ணதேவராயரின் அரசியல் வாழ்க்கையை பற்றி அதிகம் பேசாமல், அவரது காதல் வாழ்க்கையைப் பேசுகின்றது. சின்னாதேவியை காதலிக்கும் தேவராயர் எப்படி அவளை அடைந்தார் என்பதை அவரது அரசியல் வாழ்க்கையோடு சேர்த்து கூறுகின்றார். கதை முழுவது கிருஷ்ணதேவராயரின் மனதில் சின்னாதேவி ஒரு அடிநாதமாக இருந்து கொண்டே இருக்கின்றாள்.

சின்னாதேவி - கிருஷ்ணதேவராயர் காதல் என்பது ஆசிரியரின் கற்பனை, ஆனால் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் ஆதாரப்பூர்வமானவை என்று கூறுகின்றார் ஆசிரியர். ஐ கிளாடியஸ் என்ற புத்தகத்தை படித்து அதை மொழிபெயர்க்க முதலில் முடிவு செய்திருக்கின்றார். ஆனால் அதை மொழி பெயர்க்க முதலில் அந்த சரித்திரத்தை முழுவதும் படித்து உள்வாங்க வேண்டும் எனவே, நம் மன்னர்களில் ஒருவரைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்து கிருஷ்ணதேவராயரை தேர்ந்தெடுத்துள்ளார். அதற்கு அவர் படித்த புத்தககங்கள் என சுமார் 50ஐ பட்டியலிட்டுள்ளார். தெலுங்கு சினிமாவைக்கூட பார்த்திருக்கின்றார். முன்று வருட உழைப்பு கதையில் தெரிகின்றது.

கிருஷ்ணதேவராயரின் கதையை ஏற்கனவே வேங்கடநாத விஜயம் என்ற நூலில் படித்திருக்கின்றேன். அது திருப்பதியின் வரலாறு எனப்படுகின்றது. அதன் சம்பவங்களும் இதுவும் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன். காலவரிசை கொஞ்சம் மாறுபடுகின்றது. கதை காதல் கதை என்றாலும், அதையே முழுவதும் சுற்றாமல் அக்கால சமூகத்தையும், பழக்க வழக்கங்களையும் பேசுகின்றது. உடன்கட்டை ஏறுதல், கணவனுடன் வடக்கிருத்தல், இடக்கையால் வெற்றிலையை எடுத்த பாபம் தீர கோவிலுக்கு செல்தல், தண்டனை முறைகள், தேவதாசி முறை, கட்டாரி கல்யாணம் என்று பலவற்றை பற்றியும் அரசனின் பார்வையில் எழுதுகின்றார்.

அரண்மனை வழக்கங்கள்; பெண்கள் தோளில் ஏறி சவாரி செல்வது, சாட்டையடி தண்டனை. கிருஷ்ணதேவராயர் மிகச்பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்டவர். அப்போதைய காலகட்டத்தில் வடக்கே முகலாயர்கள் சாம்ராஜ்ஜியம் ஆரம்பித்து காலூன்றிய காலம், தெற்கே அவர்களின் வளர்ச்சியை தடுத்ததில் அவரது பங்கு பெரியது. ஆனால் அவரது படையிலும் முகலாயர்கள் தனிப் பங்கு வகித்தனர் என்பது புதிய செய்தி. போர்ச்சுக்கல் படையினரும் அவரது துப்பாக்கிகளும் அவருக்கு உதவியிருக்கின்றன. பொதுவாக இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் பற்றி சில கருத்திருக்கும், இந்து மதத்தை அழிக்க நினைத்தவர்கள், நாட்டை சுரண்டியவர்கள் என்று. ஆனால் அவர்கள் தென்னிந்தியாவில் அவ்விதம் செய்தமாதிரி தெரியவில்லை. இந்துக்களுடன் கலந்தே இருந்திருக்கின்றனர், இந்து மத பெரியோர்களை கவுரவித்துள்ளனர்.

குறைகள் இல்லாமல் படைப்பு இருக்காது, குற்றம் கண்டுபிடிக்கும் அளவிற்கு எனக்கு வாசிப்பனுபவமும் கிடையாது. சில இடங்கள் சிறப்பாக இல்லை என்று நினைப்பதைக் கூறலாம். சிலவற்றை ரா.கி.ராவே கூறுகின்றார், சிலவற்றை கிருஷ்ணதேவராயர் கூறுகின்றார். காதலின் வேகத்தில் அவர் புலம்புவது, முக்கியமான போர்களின் நடுவிலும் அவர் காதலியை பற்றி யோசிப்பது எரிச்சலை உண்டாக்குகின்றது, "என்னடா இந்தாளுக்கு எப்பவும் இதே கவலைதானா" என்று. இதை கிருஷ்ணதேவராயரின் கூற்றாகவே ஒரு டிஸ்க்ளெய்மர் போட்டு விடுகின்றார்.

காயத்ரி சாண்டில்யன் ஹீரோக்களின் டவுன்கிரேடேட் வெர்ஷன். இப்பாத்திரம் இல்லையென்றால் கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இப்பாத்திரம் எல்லா வேலையும் செய்கின்றது. பணிப்பெண் மன்னருக்கு உதவுவது, போரில் யோசனை சொல்வது, அவரும் அவளை நம்புவது, அவளின் சொல்படி கேட்பது எல்லம் கொஞ்சம் மிகைப்படுத்தப் பட்டதாகவே உள்ளது. அதுவும் முடிவு உச்சகட்ட நாடகத்தனம். ஒரு வேளை விகடனில் வந்ததால் விகடன் குழுவின் வேலையாகவும் இருக்கலாம்.

ஒட்டுமொத்த அனுபவமாக பார்த்தால், சிறந்த ஒரு சரித்திர கதை. சரித்திர கதை விரும்பிகள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கதை.

PEOPLES CAME TO SEE MY ACTING ,NOT SET -M.R.RADHA







PEOPLES CAME TO SEE MY ACTING ,NOT SET
-M.R.RADHA




'மக்கள் என் நடிப்பை பாக்க தான் வர்றாங்களே தவிர, செட்டிங்கை இல்ல...' என்பார் ராதா.

அக்காலத்தில், 'மைக்' கிடையாது; கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனுக்கும் கேட்கும் வகையில், தொண்டை கிழிய கத்தி பேச வேண்டும். அதனால், ஒவ்வொரு நாள் இரவும் நாடகம் முடிந்த பின், ஒப்பனை அறையில் இவருக்காக ஒரு பெரிய குண்டானில் பழைய சோறும், சின்ன வெங்காயமும் இருக்கும்.
அதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார் ராதா. நள்ளிரவில் பழைய சோறும், சின்ன வெங்காயமும் சாப்பிட்டால், பலருக்கு ஜன்னி வந்து விடும். ஆனால், மேடையில் தன் சக்தியை எல்லாம் பிரயோகித்து நடிக்கும் ராதாவுக்கு, அந்த உணவு தேவையாக இருந்தது. அவரது குழுவிலிருந்த சிறுவர்களுக்கு, ராதாவுக்காக வெங்காயம் உரிப்பது தான் முக்கிய வேலை.

தன் குழுவில் இருந்த ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டினார் ராதா. குழுவில், 50 லிருந்து 60 பேர் வரை இருந்தனர். அதில், பெண்கள், 10 முதல் 15 பேர்.

'நாடக நடிகர்கள் யாரும் தூங்கக் கூடாது; தூங்கும் போது கூட காலாட்டிக்கிட்டே தான் தூங்கணும். இல்லேன்னா செத்துப் போயிட்டான்னு வேற யாரையாவது போட்டுருவாங்க...' என்பார் ராதா. தன்னுடைய எம்.ஆர்.ராதா நாடக மன்றத்திலிருந்து யாராவது விலகிச் செல்ல நினைத்தால், அவர்கள் நினைத்து பார்க்க முடியாத பெருந்தொகையை கொடுத்து, அவர்களை வாழ்த்தி வழியனுப்புவது ராதாவின் வழக்கம்.

என்றாவது ஒருநாள் விடுமுறை கிடைக்காதா என்று குழுவினர் ஏங்கித் தவிக்கும் அளவுக்கு, ஆண்டு முழுதும் நாடகங்கள் நடந்தன. அதனால், குழுவினர் யாரும் சோர்ந்து போகாதபடி உற்சாகப்படுத்தியவாறு இருப்பார் ராதா.

அதேபோன்று, தன் குழுவினருக்கு உணவளிக்கும் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வார். சமையல் சரியில்லை என்றால் சமையல்காரன் செத்தான். ராதாவின் வாயிலிருந்து கிளம்பும் கெட்ட வார்த்தைகள், அவனை சுட்டுப் பொசுக்கி விடும்.

வாரத்தில் மூன்று நாட்களாவது அசைவம் போட வேண்டுமென்பது ராதாவின் கட்டளை. மீன், ஆட்டுக்கறி பிரதானமாக இருக்கும். ராதாவுக்கு சமைப்பதில் ஆர்வம் உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மட்டன் சமைப்பதில் ஆர்வம் காட்டுவார். அவர் சமைக்கப் போகிறார் என்றாலே குழுவினருக்கு எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவு சமையலில், 'எம்டன்' ராதா.

சில சமயம், தன் குழுவினருக்கு தானே உணவு பரிமாறுவார். அவரது குழுவில் சைவம் உண்பவர்களும் இருந்தனர். அவர்களுக்கு தனி பந்தி நடைபெறும்.
ஒரு ஸ்டுடிபெக்கர் கார், இரண்டு வேன்கள், ராதாவின் கம்பெனிக்கு சொந்தமாக இருந்தன. காரில் நடிகைகளை ஏற்றிக் கொள்வார். வேனில் நடிகர்கள் வருவர். இன்னொரு வேனில் சாமான் செட்டுகள் வரும். கம்பெனியை நிர்வகிக்கும் சாம்பு அய்யரின் மேல், ராதாவிற்கு மிகுந்த மரியாதை. அவர் தன்னுடன் காரில் வரப்போகிறார் என்றால், பெண்களிடம் ரகசியமாக, 'அடியேய்... வேன்ல வாங்கடி, கார்ல ஏறாதீங்கடி...' என்று கடிந்து கொள்வார்.

ராதாவின் குழுவில், பெரிய பேபி, நீலா, ரமணி, பிரேமா, சுகுணா மற்றும் இன்னும் சிலரும் இருந்தாலும், சந்திரா கதாபாத்திரத்தில் நடித்த நீலா, பேரழகி என்றும், ராதா அவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார் என்றும் செய்திகள் உண்டு.

ரத்தக்கண்ணீரில் வேலைக்கார வேஷம் போட்டு வந்த சுந்தரம் என்பவர், திடீரென கம்பெனியிலிருந்து வெளியேறினார். அப்போதுதான் அறிவானந்தம் என்ற, 12 வயது சிறுவன் கம்பெனியில் சேர்ந்திருந்தான். அவனுக்கு அந்த வேடத்தைக் கொடுத்தார் ராதா. அவனோ நடுங்கியபடி நின்றான்.

'என்னடா பயமா இருக்கா?' எனக் கேட்டார் ராதா. அவனும், 'ஆமாம்...' என்று தலையசைத்தான்.
'நம்மளை பாக்க காசு கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கான்; அவங்கள விட, நாம மூணு அடி உயரத்துல இருக்கோம். முன்னால இருக்கறவனு களுக்கு எல்லாம் ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுட்டு நடிடா...' என, ராதா உற்சாகப்படுத்த, அறிவுக்கு கொஞ்சம் பயம் தெளிந்தது.

வசனங்களை ராதா உள்வாங்கிக் கொள்ளும் விதமே அலாதி. 'அறிவு... ஆரம்பிக்கலாமா?' என்று கேட்டு, நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக் கொள்வார். அறிவு வாசிக்க ஆரம்பிப்பான். ராதாவிடமிருந்து பதிலோ, அசைவோ இருக்காது. அவர் தூங்கி விட்டாரோ என்று நினைத்து நிறுத்துவான்.

'ம்...' என்று குரல் கொடுப்பார் ராதா. மீண்டும் வாசிக்க ஆரம்பிப்பான். தொடர்ந்து மூன்று நாட்கள் வாசித்தால் போதும், அதற்குபின், ராதாவுக்கு பாடம் தேவையில்லை. அவரது ஞாபக சக்தி அந்த அளவுக்கு அபாரமானது.

அக்காலத்தில், நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியின் நாடக செட்டுகளுக்காவே மக்கள் நாடகம் பார்க்க வருவர். பெரிய பாம்பு, பிளக்கும் கடல், சிருங்கார அரண்மனை, பிரமாண்ட தேவலோகம் என்று, மக்களை அசர வைத்தனர். ஆனால், ராதா அதற்கு நேர் எதிர்.
நீல நிறப்படுதா, அதில் காடு. காட்சி மாறும்... சிவப்பு நிற படுதா, அதில் வீடு. அடுத்து, பச்சை நிறப்படுதா, அதில் பொது இடம். எந்த செட்டிங்கும் கிடையாது. மக்கள் படுதாவை பார்த்து, காட்சி எங்கே நடக்கிறது என்று புரிந்து ரசிப்பர்.

'மக்கள் என் நடிப்பை பாக்க தான் வர்றாங்களே தவிர, செட்டிங்கை இல்ல...' என்பார் ராதா.

பல நேரங்களில் வெளியூர் செல்கையில், 'செட்' சாமான்கள் எதையும் எடுத்துச் செல்லாமல், வெறும் படுதாக்களை வைத்து, வெற்றிகரமாக நாடகம் நடத்தியிருக்கிறார் ராதா. அதிலும், குறிப்பாக ரத்தக்கண்ணீர் நாடகம், அப்படி பலமுறை அரங்கேறியிருக்கிறது.

தன் வாழ்நாளில், புதுப்புது காட்சிகளுடன், புதிய வசனங்களுடன் கிட்டத்தட்ட, 5,000 தடவைக்கு மேல், ரத்தக்கண்ணீர் நாடகத்தை மேடையேற்றியிருக்கிறார் ராதா.

மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற, 'ஸ்கிரிப்ட்!' அதை திரைப்படமாக்க எல்லாருக்கும் ஆசையிருந்தாலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்கிரிப்டை வைத்து வேறு யாரையாவது போட்டு படமெடுக்கலாம் என்றால், யார் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன் வருவர்? அப்படியே நடித்தாலும் ராதாவைப் போன்று நடிக்க முடியுமா? அத்துடன், முரட்டு மனிதர், கலகக்காரர் என்ற, 'இமேஜ்' ராதாவிற்கு இருந்ததால், தயாரிப்பாளர்கள் ராதாவை நெருங்க பயந்தனர்.

ராதாவுக்கு அப்போது சினிமாவில் விருப்பம் இல்லை. அதற்கு, பழைய அனுபவங்களே காரணம்.
அவ்வையார் படத்திற்காக கே.பி.சுந்தரம்பாள், ஜெமினி வாசனிடம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய செய்தி, பரபரப்பாக பேசப்பட்ட காலம் அது! நேஷனல் பிக்சர்ஸ், பி.ஏ.பெருமாள், ராதாவை தேடி வந்தார்.

முதலில் ரத்தக்கண்ணீர் படத்தில் கதாநாயகன் தேர்வு செய்யப்பட்டவர் சிவாஜி கணேசன் தான் . பராசக்தி அப்போது முடிவடையவில்லை . சினிமாவில் ராதா நடிக்க பிரியப்படா விட்டால் கதையாவது 

வாங்கலாம்னு ராதாவை அணுகினார் பெருமாள் 


'சினிமாக்காரங்க பழக்கத்தை விட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. இப்போ நீங்க விரும்பிக் கூப்பிடறீங்க; வரேன். ஆனா, என் வழி, தனி வழின்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்....' என்றார்.

'எல்லாத்தையும் தெரிஞ்சு தான் வந்திருக்கேன்; என்ன செய்யணும் சொல்லுங்க?' என்று கேட்டார் பெருமாள்.
'சினிமாவுக்காக நாடகத்தை விட மாட்டேன்; எனக்கு நாடகம் தான் பெரிசு. ஒற்றை வாடைத் தியேட்டர்ல என் நாடகம் தொடர்ந்து நடக்கும். அது, முடிஞ்ச ராத்திரியில தான் என்னால படப்பிடிப்புக்கு வர முடியும்; சம்மதமா...' என்றார் ராதா.

'அதுக்கென்ன; தாராளமா வைச்சுக்கலாம்...' என்றார் பெருமாள்.'நான் நாடக நடிகன். கேமராவின் இஷ்டத்துக்கு திரும்பத் திரும்ப நடிக்க மாட்டேன்; என் இஷ்டத்துக்கு தான் கேமரா என்னை படம் பிடிக்கணும். என்ன சொல்றீங்க...'

'சரி...'


'சமீபத்துல வாசன், கே.பி.சுந்தராம்பாளுக்கு ஒரு லட்ச ரூபா சம்பளம் கொடுத்திருக்காரு; எனக்கு நீங்க, 25 ஆயிரம் கூடுதலாப் போட்டு ஒண்ணே கால் லட்சமாக கொடுத்துடுங்க...' என்றார்.

'அதுக்கென்ன... தாராளமா செஞ்சுட்டாப் போச்சு...'
எல்லாவற்றுக்கும் சம்மதித்தார் பெருமாள்.
நேஷனல் பிக்சர்ஸ் அளிக்கும், ரத்தக்கண்ணீர் என்று, செய்தித்தாள்களில் விளம்பரம் வந்தது.

உடனே, 'இதுவரை படமாக்கப்பட்ட நாடகங்களில் பல, தோல்வியடைஞ்சுருக்கு; இது என்ன ஆகுதுன்னு பாக்கலாம்...'என்று, எதிர்மறை கருத்துகளும் வந்தன.
இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியில், 1952ல் பிரகாஷ் ஸ்டுடியோவில், பட துவக்க விழா நடைபெற்றது. நரசு ஸ்டுடியோவில் படப்பிடிப்பு ஆரம்பமானது. கதை, வசனம், திருவாரூர் தங்கராசு; இயக்கம், கிருஷ்ணன் - பஞ்சு. சந்திரா கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீரஞ்சனி ஒப்பந்தமாயினார். இந்நிலையில், காந்தா என்ற தாசி கதாபாத்திரத்தில் நடிக்க யாருமே கிடைக்க வில்லை. அப்போதைய முன்னணி நடிகைகள் இப்பாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டனர்.

ஆறு மாதத்தேடலுக்கு பின், காந்தா கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக நடிகையாக ஒப்பந்தமானார் ஒரு இளம் பெண். அவர் பெயர் எம் .என் .ராஜம்

PALE PANDIYA -M.R.RADHA







PALE PANDIYA -M.R.RADHA





பலே பாண்டியா – இந்தப் பாடல் உருவான பின்னணி குறித்து எம்.ஆர். ராதா குறித்த எனது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் இங்கே.

‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
மாமா… மாப்ளே…’

பாடலை முதன் முதலில் செட்டில் கேட்டார் ராதா. அவரது குரல் போலவே இருந்தது அது.

‘அட யாருப்பா இது? நான் பாடுன மாதிரியே இருக்குது?’ – ஆச்சரியமாகக் கேட்டார். விவரம் சொன்னார்கள். பாடலைப் பாடிய எம். ராஜூவை உடனே பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டார் ராதா. அவர் எம்.எஸ். விஸ்வநாதன் குழுவிலிருந்தவர். வரவழைக்கப்பட்டார்.

ஒல்லியாக, சிவப்பாக இருப்பார் அவர். ராதா முன் சென்று நின்றார். ‘என்னப்பா பாடகரை அழைச்சுட்டு வரலையா?’ கேட்டார் ராதா. இவர்தான் என்றார்கள்.

‘பாடுனது நீங்களா?’ – ராதாவுக்கு ஆச்சரியம்.

‘ஆமாண்ணே’ என்றார் ராஜூ. மென்மையான குரல்.

‘எனக்கு அதிசயமா இருக்கு. பேசறப்போ இவ்வளவு மெதுவா பேசறீங்க. என் குரல்லயே பாடியிருக்கீங்க. உங்களை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியலை. நான் உன்னை மறக்கவே மாட்டேன் தம்பி. யாருப்பா அங்க? தம்பிக்கு காப்பி கொடுங்க’ உபசரித்து அனுப்பினார் ராதா.

அந்தப் பாடலில் நடிப்பதற்காக சிவாஜி பலமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். பாடலில் கிட்டத்தட்ட இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு ஆலாபனை வருமே. அதற்காகத்தான் அவ்வளவு பயிற்சி.

‘அண்ணே, நீங்க மாட்டிக்கிட்டீங்க’ என்ற போகிற போக்கில் ராதாவையும் கலாட்டா செய்துவிட்டுப் போனார் சிவாஜி. உண்மையிலேயே அவ்வளவு பெரிய ஆலாபனைக்கு உதடசைப்பதெல்லாம் ராதாவுக்குக் கடினமான காரியமாகத்தான் தோன்றியது.

நேராக டைரக்டரிடம் வந்தார்.

‘இங்க பாரு பந்தலு. கணேசன் மாதிரில்லாம் நம்மளால முடியாது. கேமராவை வைச்சுக்கோ. நான் பாட்டுக்கு ஆக்ட் பண்ணுவேன். எங்க எனக்கு உதடசைக்கிறது கரெக்டா வருதுன்னு தெரியுதோ, அந்த இடத்துல கேமாராவுக்கு முகத்தைக் காட்டுவேன். மத்த இடத்துல குனிஞ்சுகிட்டுதான் இருப்பேன். வேற வழியில்லப்பா. நீ பாட்டுக்கு டைட் குளோஸ் அப்பெல்லாம் வைச்சிடாதே. அப்பப்ப கட் சொல்லிடாதே. சரியா?’

சொல்லிவிட்டு ராதா ஷாட்டுக்குச் சென்றார்.

பாடல் படப்பிடிப்பு ஆரம்பமானது. பாதி பாடல் வரை ஒழுங்காகப் போனது. ஆலாபனைக் காட்சிகள் வரும்போது, ராதா தன் உதடசைவுகளை அட்ஜெஸ்ட் செய்ய உட்கார்ந்திருக்கும் சோபாவிலிருந்து குதியோ குதியென்று குதிக்க ஆரம்பித்தார். ஏகப்பட்ட சேஷ்டைகள் செய்தார். செட்டில் டைரக்டர், கேமராமேன், லைட் பாய் உள்பட எல்லோராலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சில ரீடேக்குகள் ஆகத்தான் செய்தன.

ஒரு கட்டத்தில் ராதா திடீரென பெரிய பாடகர் போல காதருகே தன் இடது கையை வைத்து, வலது கையை நீட்டி பயங்கர ஆக்‌ஷன் கொடுப்பதை பாடலில் காணலாம். ஆனால் அது ஆக்‌ஷன் அல்ல. நடந்த விஷயமே வேறு.

ஏகத்துக்கும் குதித்ததில் ராதாவின் விக் லூஸாகி விட்டிருந்தது. அந்த ஷாட் முடியப் போகும் நேரம் அது. விக் கழண்டு விட்டால், இன்னொரு முறை நடிக்க வேண்டியது வருமே. அந்தச் சமயத்தில்தான் பெரிய பாடகர் போல ஆக்‌ஷன் செய்து, விக்கைக் காப்பாற்றிக் கொண்டார் ராதா.