Saturday, 30 June 2018

DADABHAI NAOROJI ,FREEDOM FIGHTER , THE GURU FOR GANDHI BORN 1825 SEPTEMBER 6- 1917 JUNE 30







DADABHAI NAOROJI ,FREEDOM FIGHTER , 
THE GURU FOR GANDHI BORN 
1825 SEPTEMBER 6- 1917 JUNE 30





தாதாபாய் நௌரோஜி 
சுதந்திர போராட்டத்தின் ஊற்றுக்கண் 
DIED ஜூன் 30, 1917

(செப்டம்பர் 6, 1825 – ஜூன் 30, 1917) இந்தியாவின் அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1886, 1893, 1906 ஆகிய காலக் கட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகச் செயல்பட்டார். 1892 முதல் 1895 வரை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும் (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் பிரித்தானிய அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.

தாதாபாய் நௌரோஜியின் "பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்" (Poverty and Un British Rule in India) என்ற நூல் விளக்கும் கருத்துக்கள்

தாதாபாய் நௌரோஜியை, பெருந்தலைவராகப் போற்றப்பட்ட பால கங்காதர திலகர், காந்தி உட்பட முன்னணித் தலைவர்கள் பலர் தங்களுக்கு வழிகாட்டியாக குறிப்பிட்டுள்ளனர். காரணம், தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும். இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும், வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார் தாதாபாய். 1870 ஆம் ஆண்டு இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20தான் என்று சுட்டினார். இந்தியாவிற்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இராணுவத்தினர், முதலாளிகள், வணிகர்கள் ஆகியோர் தங்களுடைய மூலதனம், ஊதிய வருமானம், வரி வருவாய், இலாபம், வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று செல்வத்தைக் குவிக்கிறார்கள் என்றும் கூறினார். இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருந்தலைவர் பால கங்காதர திலகர், தாதாபாய்தான் தனக்குத் தலைவர் என்றும் வழிகாட்டி என்றும் குறிப்பிட்டார். தாதாபாய் நௌரோஜி காலத்திலிருந்து நேரு காலம் வரை காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரவாத, மிதவாத மற்றும் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் ஈடுபட்டுப் பல்வேறு மாறுபட்ட கொள்கை, அணுகுமுறை வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு தியாகங்களைப் புரிந்தனர். நீண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அந்நிய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத ஒரு சுயசார்பான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உருவாயிற்று.

இளமைக் காலம்[தொகு]

தாதாபாய் நௌரோஜி 1825- ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் நாள் மும்பையில் பிறந்தவர். அவரது தந்தையார் நௌரோஜி பலஞ்சி டோர்ஜி ஆவார். அவர் ஜொராஸ்ற்றியன் மதத்தைச் சேர்ந்த பூஜாரி. அவர்கள் பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தாயார் மேனக் பாய். அவரது இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால் அவரை அவரது தாயார் வளர்த்தார். அவரது 11-ஆம் வயதில் அவருக்கு குல்பாய் என்ற சிறுமியுடன் திருமணம் செய்து வைத்தனர். அவர் மும்பை எல்பின்ஸ்டன் கல்வி நிலையத்தில் தனது படிப்பை முடித்தார்.

மும்பையில் பணி[தொகு]
அவர் தனது 25வயதில் 1850-ல் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1851-ல் அவர் ஜொராஸ்ற்றியன் மதத்தைப் புனிதப்படுத்த ஒரு சபையை ஏற்படுத்தினார். 1854-ல் Truth Teller என்ற மாதமிருமுறை இதழையும் ஆரம்பித்தார். மும்பையில் ஞானப்பிரச்சார சபை, அறிவியல் மற்றும் இலக்கிய சங்கம், பார்ஸி உடற்பயிற்சிப் பள்ளி, விதவையர் சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்.

லண்டனில் பணி[தொகு]

1855-ல் அவர் பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்ட முதல் இந்தியக் கம்பனியான காமா&கோவின் பங்குதாரராக லண்டன் சென்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அந்த கம்பெனியைவிட்டு விலகினார். பின்னர் நௌரோஜி&கோ என்ற சொந்தக் கம்பெனி துவக்கினார். லண்டன் பல்கலைக்கழகத்தில் குஜராத்தி பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

அரசியல் பணி[தொகு]
1866-ல் லண்டனில் கிழக்கு இந்திய சங்கம் தோற்றுவித்தார். அதில் இந்தியாவைச் சேர்ந்த உயர் உத்தியோகஸ்தர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இந்தியர்களின் துயரத்தை லண்டனில் வெளிப்படுத்தினார். 1873-ல் பரோடா அரசரின் திவானாகப் பொறுப்பேற்றார். பின்னர் அந்தப் பதவியில் இருந்து விலகி மீண்டும் லண்டன் சென்றார். கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் முன்னோடியான இந்திய தேசிய சங்கத்தை சுரேந்திர நாத் பானர்ஜியுடன் சேர்ந்துஉருவாக்கினார். இந்திய தேசிய காங்கிரஸ்: 1885-ல் A.O. ஹியூம், W.C. பானர்ஜி ஆகியோருடன் சேர்ந்து அவர் இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார். இந்திய தேசிய சங்கம், இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டிற்கும் ஒரே குறிக்கோள் என்பதால் இரண்டும் இணைந்தது. 1886, 1893, 1906 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட கூட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசிற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1885-ல் இருந்து 1888 வரை மும்பை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்: 1892-ல் பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் ஃபின்ஸ்புரியில் இருந்து லிபரல் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியர் இவரே. 1895 வரை உறுப்பினராக இருந்தார். அவர் கிறிஸ்தவராக இல்லாததால் பைபிள் மீது சத்தியப் பிரமாணம் செய்யவில்லை. ஜொராஸ்ற்றியன் மதத்தினரின் வேதமான 'அவெஸ்டா' என்ற நூலின் மீது சத்தியப் பிரமாணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். அவர் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்தியர்களின் துயரத்தை வெளிப்படுத்தினார். அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் பணியாற்றுவதற்கும் முகம்மது அலி ஜின்னா உதவினார். முகம்மது அலி ஜின்னா பின்னர் இந்தியப் பிரிவினைக்குக் காரணமாக இருந்தார். 1907-ல் காங்கிரஸ் மிதவாதிகள், அமிதவாதிகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிந்தபோது மிதவாதிகள் பக்கம் இருந்தார். அன்னிபெசண்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கத்தில் ஆர்வமுடையவராக இருந்தார்.

இறுதி அஞ்சலி[தொகு]

தாதாபாய் நௌரோஜி 1917- ஆம் ஆண்டு ஜூன் 30- ஆம் நாள் தனது 92-ஆவது வயதில் மும்பையில் இப்பூவுலக வாழ்வை நீத்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மும்பை, கராச்சி(பாகிஸ்தான்), ஃபின்ஸ்புரி(லண்டன்) ஆகிய இடங்களில் முக்கிய சாலைகளுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள ஒரு மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புப் பகுதிக்கு நௌரொஜி நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Céline Dion's Titanic - the GST remix











Céline Dion's Titanic - the GST remix

Every night in my dreams
I see tax, I FEEEEL tax
That is how I know you,

Tax was one he told you
One true time he TOOOOLD you
In real life the tax always go OOOON

GST was to touch us one time
But now last for a LIIIIFETIME
And will never go till we're GOOOONE

Near, far, wherever you are
I believe GST does go OOOON
Once more you open the door
And you see rate & your rate will say the tax does go ON

Far across the distance
And spaces betwn us
Modi has come to show GST, go OOOON

VINTHAN WRITER ,SCREEN DIALOGUE WRITER , BORN 1916 SEPTEMBER 22-1975 JUNE 30





VINTHAN WRITER ,SCREEN DIALOGUE WRITER , 
BORN 1916 SEPTEMBER 22-1975 JUNE 30





விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன்
DIED ஜூன் 30, 1975

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.

இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

அச்சகத்தில் பணி[தொகு]

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.

எழுத்தாளராக[தொகு]
1946 இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.

"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும் ‘பஜகோவிந்தம்’(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார் . இவ்விரு நூல்களையும் வெளியிட்டவர் பெண்ணாடம் ராமசாமி . [1]

திரைப்படவுலகில்[தொகு]

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும்,

"அன்பு" என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும்,

கூண்டுக்கிளி என்ற படத்துக்கு வசனமும் எழுதினார்.

குழந்தைகள் கண்ட குடியரசு, 
பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.

கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.

இறுதிக் காலம்[தொகு]
பிரபல எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

விந்தன் எழுதிய நூல்கள்[தொகு]
தமிழ்நாட்டரசு 2008 - 09 இல் விந்தன் எழுதிய நூல்கள் நாட்டுடமை ஆக்கியது. நாட்டுடமை ஆன நூல்களின் பட்டியல்.

அன்பு அலறுகிறது
இந்திய இலக்கியச் சிற்பிகள்
இலக்கியப்பீடம் 2005
எம்.கே.டி.பாகவதர் கதை
ஒரே உரிமை
ஓ, மனிதா
கண் திறக்குமா?
காதலும் கல்யாணமும்
சுயம்வரம்
திரையுலகில் விந்தன்
நடிகவேல் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
பசிகோவிந்தம்
பாலும் பாவையும்
பெரியார் அறிவுச் சுவடி
மனிதன் இதழ் தொகுப்பு
மனிதன் மாறவில்லை
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
விந்தன் இலக்கியத் தடம்
விந்தன் கட்டுரைகள்
விந்தன் கதைகள் - 1
விந்தன் கதைகள் -2
விந்தன் குட்டிக் கதைகள்
வேலை நிறுத்தம் ஏன்?


Friday, 29 June 2018

KERALA CINEMA GAINED POPULARITY DUE TO DIRECTION TECHNIQUE





KERALA CINEMA GAINED POPULARITY DUE TO 
DIRECTION TECHNIQUE





கேரளத் திரையுலகம், வேறு தளத்திற்கு நகர்வதை ஒரு தொடர் நிகழ்வாகவே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 80களில் மலையாளத் திரைப்படம் பார்ப்பவன் என்றால் கேவலமாகப் பார்த்த நிலை போய், இன்று நல்ல திரைப்படம் என்றால் அங்கிருந்துதான் சாத்தியம் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வந்த உஸ்தாத் ஹோட்டல், இந்தியன் ருபி, டயமண்ட் நெக்லேஸ், 22 ஃபீமேல் கோட்டயம் போன்றவை ஒரு வகை என்றால் தற்போது வந்திருக்கும் மகேஷிண்டே பிரதிகரம், கம்மாட்டி பாடம், ஒழிவு திவசத்தே கழி, அங்கமாலி டயரீஸ் எல்லாம் வேறு விதம்.

அதிலும் ஒழிவு திவசத்தே களி மாதிரி ஒரு படம் இந்தியத் திரையுலகில் சாத்தியமாவெனத் தெரியவில்லை. நண்பர்கள் சிலர் ஒரு தேர்தல் விடுமுறையன்று ஒரு பிக்னிக் போவதும் அங்கு நடைபெறும் சம்பவங்களே திரைப்படம். எவரும் தொழில் முறை நடிகர்கள் அல்ல. மிக மெதுவாக நகரும் திரைக்கதை உச்சம் பெற்று அதிர்ச்சிகுள்ளாக்குகிறது.


மகேஷிண்ட பிரதிகரம் ஒரு சாதாரண பழிவாங்கும் கதை. அதற்காக கதாநாயகன் பறந்து பறந்து தாக்குவதெல்லாம் இல்லை. அத்தகைய கதாநாயகத்தனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட எளிய மனிதன். ஒரு ரப்பர் செருப்பு அவன் வாழ்க்கையில் எந்த்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

கம்மாட்டி பாடம், கொச்சின் நகரில் வானுயர் அடுக்கு மாளிகைகள் கட்ட, புறநகரில் பல்லாண்டுகளாக வசித்துவந்த மக்களை இடம் பெயர்த்தலைப் பற்றிப் பேசுவது. துல்கர் போன்ற ஓரிருவரைத் தவிர பிறர் புதியவர்கள்.

அங்கமாலி டயரிஸில் திரைப்படம் ஒரு சிறுநகர மக்களின் வாழ்வைப் பிரதிபலிப்பது. அவர்களது உணவு, உறவு திருவிழாக் கொண்டாட்டங்கள்தான் முக்கிய அம்சங்கள். நடிகர்கள், கதை எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

“நல்ல கதை மட்டும் கிடைத்தால் எனக்கிருக்கும் திறமைக்கு தமிழ்த்திரையுலகையே தூக்கி நிறுத்திவிடுவேன்” என மார்தட்டும் இயக்குனர்களும், அவர்களது இணை, துணை இயக்குனர்களும், எதிர்காலத்தில் இம்மாதிரியே அறை(ரை)கூவல் விடப்போகும் மற்றவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டியவை இந்நான்கு திரைப்படங்கள்.


சரி தமிழில் சமீபத்தில் நல்ல திரைப்படமே வரவில்லையா? என்றால் வந்திருக்கிறது, ஆனால் முழுமையானவையாக இல்லை. 8 தோட்டாக்கள், அதே கண்கள், குற்றம் 23, குற்றமே தண்டனை, துருவங்கள் பதினாறு எல்லாம் நல்ல திரைப்படங்களாக வந்திருக்க வேண்டியவை. முழுமையடையாமல் போனதற்கு
1. தேவையற்ற இடங்களில் பாட்டு – 8 தோட்டாக்கள்
2. தேவையற்ற நகைச்சுவை – அதே கண்கள்
3. பாத்திர வார்ப்புகளில் கவனமின்மை – போலீஸ் ஆட்கள் அடர்த்லையுடன் வருவது.
4. கச்சிதமில்லாத படத்தொகுப்பு – படம் தொய்வடைவது
5. பொருத்தமில்லாத பின்னணி இசை – அதிக சத்தம்

கதை இறுதியானதும், திரைக்கதை எழுதி அதை நான்கைந்து பிரதிகள் எடுத்து, நண்பர்களல்லாத, கறாராக விமர்சிக்கக்கூடிய சிலரிடம் கொடுத்து, மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அதைக் காய்தல் உவத்தல் இன்றிச் செயல்படுத்தும் மனப்பக்குவம் கைகூடாதவரை தமிழ்த்திரையுலகில் நல்ல படம் சாத்தியமே இல்லை.


NADAKA KAVALAR R.S.MANOHAR FILM/STAGE ACTOR BORN 1925 JUNE 29 - 2006 JANUARY 10





NADAKA KAVALAR  
R.S.MANOHAR FILM/STAGE ACTOR
BORN 1925 JUNE 29 - 2006 JANUARY 10




இரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

இளமைக்காலம்[தொகு]
இராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதி தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும்.[2] இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.

ஆர்.எஸ்.மனோகர் - நாடக, திரைப்பட நடிகர்
பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* நாமக்கல்லில் (1925) பிறந்தவர். தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் பணியாற்றியவர். அவரது பணிமாற்றம் காரணமாக குடும்பம் கர்நாடகா வின் பெல் லாரிக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஷேக்ஸ்பி யர் நாடகங்கள் நடத்தி வந்த இயக்குநரும், நடிகருமான ராகவாச்சாரியின் நடிப்பும், வசன உச்சரிப்பும்தான் இவருக்கு உத்வேக சக்தியாக இருந்தது.

* சென்னை பச்சையப்பா கல்லூரியில் பி.ஏ. சமஸ்கிருதம் படித்தார். அப்போது, 'மிருச்சகடிகா' என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடித்து, அனைவரையும் கவர்ந்தார். நாடகக் களத்தில் அடியெடுத்து வைத்தவர், சுகுண விலாஸ் சபாவின் 'தோட்டக்காரன்' நாடகத்தில் நடித்தார். 'நாடகத் தந்தை' பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தைப் பார்த்து இவரைப் பாராட்டினார்.

* பட்டம் பெற்று, அஞ்சல் துறையில் சேர்ந்தார். 'கானல் நீர்' படத்தில் பட்டதாரி இளைஞனாக நடிக்க நிஜ பட்டதா ரியான இவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி நாடகத்தில் 'மனோகர்' கதாபாத்திரத்தில் நடித்ததால், அதையே தன் பெயராக மாற்றிக்கொண்டு, 'ராமசாமி சுப்பிரமணிய மனோகர்' ஆனார்.

* பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும், நாடகத்தின் மீதான காதலால் 'நேஷனல் தியேட்டர்ஸ்' நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார். 'இன்ப நாள்', 'உலகம் சிரிக்கிறது' ஆகிய சமூக நாடகங்களை அரங்கேற்றினார். பின்னர் பிரம்மாண்ட இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றினார்.

* ராவணன், சூரபத்மன் உள்ளிட்ட எதிர்மறைக் கதாபாத்திரங்களின் மறுபக்கமான ஆக்கபூர்வ அம்சங்களை அற்புதமாகப் படம் பிடித்துக்காட்டும் வகையில் நாடகங்களைப் படைத்தார். சிறப்பான மேடை அமைப்பும், தந்திரக் காட்சிகளும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.


* பிரம்மாண்டமாக தயாராகியிருந்த 'இலங்கேஸ்வரன்' நாடகம், மக்களிடம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நஷ்டமாகிவிடுமோ என்று பயந்த மனோகர், காஞ்சி பரமாச்சாரியாரை சந்தித்தார். அவர் ''கவலைப்படாதே'' என்று கூறி ஆசீர்வதித்து அனுப்பினார்.

* விரைவிலேயே, இலங்கையில் இந்த நாடகத்தை தொடர்ந்து 21 நாட்கள் நடத்தும் வாய்ப்பு தேடி வந்தது. நாடகத்தைப் பார்த்து வியந்த மக்கள், இவருக்கு 'இலங்கேஸ்வரன்' என்ற பட்டத்தைக் கொடுத்து கவுரவித்தனர். இவரது நாடகங்களிலேயே அதிக முறை (1,800-க்கு தடவைக்கு மேல்) மேடையேறியதும் இந்த நாடகம்தான்.

* 'சாணக்கிய சபதம்', 'சூரபத்மன்', 'சிசுபாலன்', 'இந்திரஜித்', 'நரகா சுரன்', 'சுக்ராச்சாரியார்' உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை. சொன்ன நேரத்துக்கு நாடகம் தொடங்கிவிட வேண்டும்; அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். ஒவ்வொரு நாடகத்துக்கும் 30 நாட்கள் ஒத்திகை பார்ப்பாராம்.

* சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமான பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வில்லன் கதாபா த்திரத்தில் முத்திரை பதித்தவர். 'வண்ணக்கிளி', 'கைதி கண்ணாயிரம்', 'வல்லவனுக்கு வல்லவன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'அடிமைப்பெண்', 'இதயக்கனி' உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

* இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 81-வது வயதில் (2006) மறைந்தார்.

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பல வில்லன் நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆர்.பாலசுப்பிரமணி யம், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா போன்றொர். இவர்களில் மறக்க முடியாத ஒரு நடிகர் ஆர்.எஸ்.மனோகர்.

இவர் நேரடியாகத் திரைக்கு வந்தவரல்ல. மத்திய அரசு இலாகா வொன்றில் பணியாற்றிக்கொண்டே, நாடகங்க ளை நடத்திக் கொண்டிருந்த இவர் திறமை இவரை திரையிலும் கொண்டு வந்து நிறுத்தியது. பிறகு முழு நேர நாடக நடிப்பை மேற்கொண்ட பிறகு மிக பிரம்மா ண்டமான அரங்க அமைப்பை நிர்மாணித்து மக்களை பிரமிப்படைய வைத்தவர். இவருடைய பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்த வரலாறு உண்டு.


'இலங்கேஸ்வரன்' எனும் நாடகத்தில் இராவணனாக நடித்துப் புகழ் பெற்றதா இவர் பெயருக்கு முன்பு இலங்கேஸ்வரன் ஒட்டிக்கொண்டு விட்டது. பழைய புராண, வரலாற்று நாடகங்கள்தான் பெரும்பாலும் இவர் மேடையேற்றி வந்தார்.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1950ஆம் வருடத்தில் சென்னையில் பிரபலமான வழக்குரை ஞராகவும், அமெச்சூர் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவருமான வி.சி.கோபாலரத்தினம் என்பவ ருடைய குழுவில் பங்கு பெற்று இவர் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தார். ஆர்.எஸ்.மனோகர் நாடக உலகுக்கு வருவதற்கு முன்பாக இங்கு பல ஜாம்ப வான்கள் நாடக மேடைகளில் வெற்றிக்கொடி நாட்டி வந்திருக்கின்றனர். குறிப்பாக நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், கந்தசாமி முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்ற பல பிரபல குழுக்கள் நாடக உலகில் இருந்தன.

திரையுலகில் நுழந்த போது மனோகர் கதாநாயகனா கவும் பின்னர் குறிப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் வில்லனாகவும் இவர் பரிமளித்திருக்கிறார். 1950 தொடங்கி சுமார் ஐம்பது ஆண்டுகள் இவர் திரை உலகையும் நாடக உலகையும் ஆக்கிரமித்து வந்திரு க்கிறார். இவர் நடித்து வெளியான படங்களின் எண்ணி க்கை சுமார் முன்னூறுக்கும் மேல் இருக்கலாம். இவருடைய நாடகங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு இவர் நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் வரிசையில் 1959இல் வெளியான "வண்ணக்கிளி", 1960இல் வெளிவந்த "கைதி கண்ணாயிரம்", 1962இல் "கொஞ்சும் சலங்கை", போன்ற படங்களைச் சொல்லலாம்.

1925ஆம் ஆண்டில் ஜுன் 29இல் பிறந்தவர் ஆர்.எஸ்.மனோகர். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூர். தந்தையார் சுப்பிரமணிய ஐயர். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றினார். மனோகரின் இயற்பெயர் ஆர்.எஸ்.லக்ஷ்மிநரசிம்ஹன் என்பது. இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆர்வமும் கொண்டிருந்தார். பட்டப்படிப்பை முடித்தவுடன் அஞ்சல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். வேலைக்குப் போய்க்கொண்டே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணி பக்கம் வேலைக்குப் போகும் இளைஞர்களும், படிக்கும் இளைஞர்களும் ஏராளமானோர் ஒன்றாக இடம் பிடித்து விடுதிகளில் சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வந்தனர். சில ஓட்டல் மொட்டை மாடிகளில் கீற்று வேய்ந்த கொட்டகை அமைத்து அதில் பத்து பன்னிரெண்டு பேர்வரை ஒன்றாகத் தங்கியிருப்பர். அப்படிப்பட்ட இளைஞர் குழுவோடு தங்கியிருந்த இவர் பல நாடகங்களில் பங்கு கொண்டு வந்தார். தோட்டக்கார விஸ்வநாதன் என்பவருடைய ஒரு நாடகக் குழு. அதில்தான் இவர் அதிகம் பங்கு பெறலானார்.


அந்த காலகட்டத்தில் ஏ.டி.கிருஷ்ணசாமி எனும் சினிமா இயக்குனர் "ராஜாம்பாள்" எனும் படத்தை எடுக்கத் தொடங்கினார். அப்போதெல்லாம் தமிழில் துப்பறியும் கதைகளை சிலர் எழுதிவந்தனர். அவர்களில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், ஆரணி குப்புசாமி முதலியார். ஜே.ஆர்.ரங்கராஜு போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்த ஜே.ஆர்.ரங்க ராஜு எழுதிய கதைதான் இந்த 'ராஜாம்பாள்'. இந்தப் படத்துக்குப் புது முகங்களைத் தேடி அலைந்த இதன் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரின் கண்களில் லக்ஷ்மிநரசிம்ஹன் அகப்பட்டார். மனோகர் எனும் நாமகரணமிட்டு இவர் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது ஒரு துப்பறியும் கதை. இதில் புகழ்பெற்ற வீணை பாலச்சந்தர்தான் வில்லன். பி.கே.சரஸ்வதி கதாநாயகி. மனோகர் கதாநாயகன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் ராம்நாத் தாய் உள்ளம் என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். இது 1952இல். இதில் நாகையா, எம்.வி.ராஜம்மா, மாதுரி தேவி, சந்திரபாபு போன்றவர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் ஒரு புதுமுகவும் அறிமுகமாகி பின்னர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தையும் ஒருவர் பிடித்தார். அவர்தான் ஜெமினி கணேசன்.

அந்தக் காலத்தில் அழகும் இளமையும் ஒருசேர அமைந்த ஒரு கதாநாயகனாக ஜெமினி திகழ்ந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்தார் என்பது நினைவு. தமிழ்த் திரையுலகில் சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். இவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இவர்கள் அத்தனை பேரோடும் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றார் மனோகர். ஒன்று எம்.என்.நம்பியார் வில்லனாக இருப்பார், இல்லாவிட்டால் ஆர்.எஸ்.மனோகர் இப்படித்தான் அன்றைய தமிழ்ப்படங்கள் இருந்தன.

சினிமாவில் புகழ் கிடைத்து வந்த போதும் உடன் பிறந்த நாடகத்தின் மீதான ஈர்ப்பு இவரை விடவில்லை. தொடர்ந்து நாடகங்களில் நடிக்க சொந்தமாக ஒரு நாடகக் குழுவை அமைத்தார். அதுதான் நேஷணல் தியேட்டர்ஸ் என்கிற குழு. தமிழ்நாட்டில் அப்போதெ ல்லாம் கோடை விடுமுறைக் காலங்களில் பெரிய ஊர்களில் எல்லாம் கண்காட்சி, பொருட்காட்சி என்ற பெயரில் திருவிழா நடக்கும். அதில் தினசரி நாடகங்கள் உண்டு. பெரிய நாடகக் கம்பெனிகள் வந்து நாடகங்களைப் போடுவார்கள்.

அப்படி சேலத்தில் நடந்த பொருட்காட்சியொன்றில் இவர் நடத்திய நாடகத்தை அப்போது சேலத்தில் இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமாக் கம்பெனி அதிபர் டி.ஆர்.சுந்தரம் பார்க்க நேர்ந்தது. அவருக்கு இவரது தோற்றம், பேச்சு, உச்சரிப்பு, நடிப்பு அத்தனையும் பிடித்துப் போய்விட்டது. விடுவாரா, இழுத்துத் தன் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் போட்டுக் கொண்டார். தொடர்ந்து இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் கம்பெனி நடிகர் போலவே கிட்டத்தட்ட 18 படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்து வந்த காலத்தில் ஆர்.எஸ்.மனோகரும் டி.ஆர்.சுந்தரம் அவர்களின் குடும்ப உறுப்பினரைப் போலவே கெளரவமாக நடத்தப்பட்டார். இதனால் டைரக்டர் சுந்தரம் அவர்களிடம் மனோகர் மிகவும் மரியாதையோடும், பணிவோடும் நடந்து கொண்டார்.


18க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோகர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1963இல் கொஞ்சும் குமரியில் நடித்துக் கொண்டிருக்கும் போது டி.ஆர்.சுந்தரம் காலமானார். திரைப்பட வாழ்க்கைதான் இப்படியென்றால் மனோகரின் நாடக வாழ்க்கை இன்னும் சுவாரசியமானது. இவருடைய அத்தனை நாடகங்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றவை. இவருடைய நாடகங்களின் ஸ்பெஷாலிடி என்னவெ ன்றால் பிரம்மாண்டமான செட். சினிமாவைப் போலவே திகைக்க வைக்கக்கூடிய செட்டுகளைத் தயாரித்து நடிக்கும் போது பார்ப்பவர்களுக்கு ஒரு சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி விடுவார். ஒரேயொரு நெருடலான விஷயம் என்னவென்றால் இவர் பொதுவாக மக்கள் வில்லனாகக் கருதும் கதாபாத்திரத்தை ஹீரோவாக ஆக்கி நாடகங்களைப் போடுவார்.

இவருடைய லங்கேஸ்வரன் போன்ற நாடகங்கள் அதற்கு சாட்சியம் கூறும். சாணக்கிய சபதமும் அப்படிப்பட்டதுதான். சிசுபாலன், காடகமுத்தரையன் போன்ற இன்னும் சில நாடகங்களையும் குறிப்பிடலாம். பொதுவாக நாடகத்தில் நடிப்பவர்கள் பட்டதாரிகளாக இருப்பதில்லை. அந்த வழக்கத்தை மாற்றியவர் ஆர்.எஸ்.மனோகர். நிறைய படித்துப் புதுப்புது நாடகங்களை மக்களுக்குக் கொடுத்து வந்தார். பல இடங்களில் நல்ல காரியங்களுக்கு நிதி வசூல் செய்வதற்காக தனது நாடகங்களை நடத்தி நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறார்.

சிக்கலான புராண நாடகங்களையும் தனது பாணியில் மிக எளிமையாக மக்கள் மனங்களில் பதியும்படி கதை, காட்சிகளை அமைத்து நாடகங்களை நடத்தி வெற்றி காண்பார். நடிகர்கள் குறித்தெல்லாம் அவ்வப்போது கிசுகிசுக்கள் என்றெல்லாம் அந்தக் காலத்தில் பேசப்பட்டாலும் எந்தவித பிரச்சினைகளிலும் அகப்படாமல், துல்லியமான தூய வாழ்க்கையை மேற்கொண்டவர் மனோகர்.

இவருடைய நாடகங்களில் லங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் திருநாவுக்கரசர் போன்ற பல புராண நாடகங்களைக் குறிப்பிடலாம். ஒரு முறை நாடக அரங்கு ஒன்றில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் ஊனம் ஏற்பட்டு கடைசி காலங்களில் சற்று கால் தாங்கியே நடந்து வந்தார். அந்த நிலையிலும் இவர் நாடகங்களில் நடிக்க விருப்பம் கொண்டிருந்தார். இதய நோயின் தாக்கத்தால் தனது 80ஆம் வதில் 2006 ஜனவரி மாதம் 10ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவர் நடித்து வெளியான படங்கள் 300 இருக்கும்.

குறிப்பிட்ட சில திரைப்படங்கள்[தொகு]

லட்சுமி (1953)
அதிசயப் பெண் (1959)
வண்ணக்கிளி (1959)
கைதி கண்ணாயிரம் (1960)
வல்லவனுக்கு வல்லவன் (1965)
ஆயிரத்தில் ஒருவன் (1965)
வல்லவன் ஒருவன் (1966)
இரு வல்லவர்கள் (1966)
காவல்காரன் (1967)
அடிமைப் பெண் (1969)
உலகம் சுற்றும் வாலிபன் (1973)
இதயக்கனி (1975)
பல்லாண்டு வாழ்க (1975)
நாடகங்கள்[தொகு]
மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
Image may contain: 1 person, smiling, closeup

Thursday, 28 June 2018

ANURADHA, RAMANAN , WRITER , BORN 1947 JUNE 29 - MAY 16,2010







ANURADHA RAMANAN , WRITER 
BORN 1947 JUNE 29 - MAY 16,2010





அனுராதா ரமணன் (Anuradha Ramanan) (ஜூன் 29, 1947 – மே 16, 2010)[1] சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
1947 இல் அனுராதா தமிழ் நாட்டிலிலுள்ள தஞ்சாவூரில் பிறந்தவர். நடிகரான அவரது தாத்தா ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் இவர் எழுத்தாளரானார்.[2] இவர் கணவர் பெயர் ரமணன்[3]. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு.

ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய அனுராதா தொடக்கத்தில் முக்கியமான இதழ்களில் வேலைதேடி முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.[2] பின் ’மங்கை’ இதழாசிரியர் அனுராதாவின் படைப்புகள் நன்றாக இருப்பதை அறிந்து அவரைப் பணியில் சேர்த்துக் கொண்டார். 1977 இல் மங்கை இதழ் மூலமாக தனது எழுத்துலகப் பணியைத் தொடங்கினார் அனுராதா.[2]

இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்[4] 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 புதினங்களும் 1,230 சிறுகதைகளும் எழுதியுள்ளார்.[2] அவரது கதைகள் பெரும்பாலும் குடும்பத்தையும் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டிருந்தன. ஆனந்த விகடனில் வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப் பதக்கம் வென்றது.[3] இச் சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.[3] கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்களும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.[2] அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது. [5] இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான ஒக்க பாரிய கதா என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.[6] மேலும் இவரது கதைகள் அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக்கண்டேன் தோழி போன்ற இவரது பல கதைகள் தொலைகாட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.[3] தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. ஆர் இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார்.[3]


ஆன்மீகவாதியாக திகழ்ந்த ஜெயேந்திரர் என்னிடம் மிகவும் ஆபாசமாக பேசினார், கையைப் பிடித்து இழுத்து மிகஅநாகரீகமாக நடந்து கொண்டார், தனது ஆசைக்குப் பணியுமாறு கேட்டுக் கொண்டார் என்று ஜெயேந்திரர்குறித்து பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்புப் புகார் கூறியுள்ளார். காவல்துறையிடம் ஒரு பெண் எழுத்தாளர் புகார் கூறியிருப்பது குறித்து தகவல்கள் கிடைத்தவுடன், அது அனுராதாரமணன் தான் என்றும் தெரியவந்தது. ஆனால், அவரது பெயரைக் கெடுக்க வேண்டாம் என்பதால் நிருபர்கள்அனைவருமே பெயரைச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்தனர். பல ஆண்டுகளுக்கு முன் அனுராதா ரமணனிடம் ஜெயேந்திரர் ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து கொண்டதாககடந்த ஆண்டு தான் அரசல் புரசலாக பேச்சு எழுந்தது.

ஜெயேந்திரரின் அந்தரங்க அசிங்க வாழ்க்கை குறித்து குமுதம் வார இதழில் அவர் தொடராக எழுத ஆரம்பித்தார்.இதில் தமிழகத்தைச் சேர்ந்த சில பிரபல பாஜக தலைவர்களின் இருண்ட முகங்கள் குறித்தும் அவர் எழுதினார்.ஆனால், பல்வேறு தரப்பு பிரஷர்களால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கு நேர்ந்தஅவமானத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் அனுராதா.

சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்க ளைஅவர் சந்தித்தார். பேச்சின்போது பலமுறை உடைந்த அழுதார். அவரது பேட்டி விவரம்: சில ஆண்டுகளுக்கு முன் சங்கர மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண்என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரி யார்களை தெய்வமாக நினைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள் நான். எனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னைஅனுப்பி வைத்தார். நானும் மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப் பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன்.

சங்கர மடம்சார்பில் தொடங்கப்படவுள்ள அம்மா என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றுவது தொடர்பாகஎன்னுடன் ஜெயேந்திரர் பேசினார். அவர் பேசியவற்றில் சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நான்நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர்.அவர்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

அதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத்தொடங்கினார். அறுவறுப்பான சிரிப்புடன் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும் அநாகரீகமா னவை. அந்தப் பெண்மணியைப் போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதிர்ந்து போன நான் சட்டென எழுந்து விட்டேன். சீ, நீயும் ஒரு மனுஷனா என்று வேகமாக கேட்டவாறே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர், முன் கூட்டியே இவளிடம் (என்னிடம்)எல்லாவற்றையும் கூறவில்லையா என்று அந்தப் பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார். அவர் இல்லை என்றவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார்

. பின்னர் அதே வேகத்தில் என்னிடம் திரும்பி, என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது. இங்கு நடந்தவற்றைவெளியில் கூற நினைத்தால், உனக்கும் 10 ஆண்களுக்கும் தொடர்பு உள்ளதாக கதை கட்டி உன் வாழ்க்கையையேசீரழித்து விடுவேன் என்று மிரட்டி னார். புருசனை இழந்த நீ என்ன விதவைக் கோலத்தி லேயே இருக்கே... பூவும் பொட்டுமாகத்தானே இருக்கே என்றுகூறியவாறே என் உடலை வர்ணிக்க ஆரம்பித்து விட்டார். அந்த அசிங்கத்தில் கூனிக் குறுகிப் போன நான் அங்கிருந்து எப்படியோ திரும்பி விட்டேன். மறுநாள் என்னைசங்கர மடத்துக்கு அழைத்துப் போன பெண் தன் கணவருடன் என் வீட்டுக்கு வந்தாள். இருவரும் குடித்திருந்தனர்.

இருவரும் சேர்ந்து மடாதிபதியை எதிர்த்துப் பேசுறியா என்று கேட்டபடி அடித்து உதைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் நான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் அதிர்ந்து போனேன். அடுத்து உடல் நலமும்பாதிக்க ப்பட்டது. இந்தத் தகவலை அப்போது உயர் பதவியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியை தனியே சந்தித்துக் கூறினேன்.அவர் உடனே புகார் கொடுங்க.. அவனை உள்ளே வைக்கிறேன் என்றார்.

ஆனால், சங்கர மடத்தின் பலம் அறிந்தவள் நான். இதனால் புகார் கொடுக்க நான் தயாராக இல்லை என்றேன்.அவரிடம் கதறி அழுதபடியே எழ முயன்றேன். அப்போது எனக்கு ஒரு கால் வரவில்லை, தொடர்ந்து ஒரு கையும் வரவில்லை. பக்கவாதம் தாக்கியிருந்தது. சரிந்துவிழுந்த என்னை அந்த அதிகாரி தான் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கு வைத்து என்னைக் கொலை செய்யவும் முயற்சிநடந்தது. சங்கர மடத்து ஆட்கள் இருவர் விஷ ஊசியுடன் அங்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாகநல்லவர்கள் சிலரின் துணையால் தப்பிவிட்டேன்.

ஒரு வழியாய் பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தேன். ஆனால், மடத்தில் எனக்கு நடந்த ஆபாசம் என் மனதைபுண்படுத்தியிருந்தது. இதனால் ஒரு வருடம் எழுதுவதையே கூட நிறுத்திவிட்டேன். அப்புறம் நடந்து சென்றபோது லாரி ஏற்றிக் கொல்லவும் அவர்கள் முயற்சித்தார்கள். அதிலிருந்தும் நான்மீண்டேன். ஆனால், இதை போலீசில் சொல்லவில்லை. என்னையும் என் இரு மகள்களையும் அவர்கள் அழிக்கும் சக்திபடைத்தவர்கள் என்பதை நான் உணர்ந்திருந்தேன். என் மகள்கள் மீது ஆசிட் வீசப் போவதாகவும் மிரட்டினார்கள். கணவர் இல்லாத நான் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வரை யிலாவது உயிரோடு இருக்க வேண்டுமேஎன்பதற்காக அனைத்தையும் எனக்குள்ளேயே புதைத்துக் கொண்டேன். என் மகள்களுக்கு மணமுடித்த பின்னர் என் ஒட்டுமொத்த மன பலத்தையும் திரட்டிக் கொண்டு வார இதழ் ஒன்றில்மடத்தில் நடந்த ஆபாச சம்பவத்தை தொடராக எழுத ஆரம்பித்தேன்.

இதையடுத்து எனக்கு மடத்திலிருந்து மிரட்டல்கள் வந்தன. அந்தப் பத்திரிக்கைக்கும் பல வகையில் மிரட்டல்கள்வந்தன. இதனால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது. பின்னர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னை கூப்பிட்டு அனுப்பியது மடம். இந்த முறை சிலரது துணையுடன்அங்கு போனேன். அப்போது நடந்த சம்பவத்தை அப்படியே மறைத்துவிட வேண்டும், என்னை மன்னிக்கவேண்டும், இதை யாரிடமும் சொல்லக் கூடாது. எவ்வளவு பணம் வேண்டும் என்று பேரம் தொடங்கினார்சங்கராச்சாரியார். ஆனால், உன்னை நானும் கடவுளும் மன்னிக்க வேண்டும் என்றால், உன் காவி உடையை உடனே நீகலைந்து விட்டு மடாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும்.

அது தான் நீ செய்துள்ள பாவங்களைப் போக்கஒரே வழி என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். லட்சக்கணக்கான குடும்பங்களில் கடவுளாக பூஜிக்கப்படும் ஒரு மனிதரின் மறு பக்கம் எனக்குத் தெரியவந்தபோது நான் மிகவும் அதிர்ந்து போனேன். அவர் தற்போது செய்திருக்கும் செயல்கள் கடவுளால் கூடமன்னிக்க முடியாதது. அந்த கருப்பு மனிதரின் முகத் திரையை கிழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு நேர்ந்த அவமானத்தை இப்போது வெளியிட்டுள்ளேன். மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. மேலும் என் பெயரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பல செய்தி ஊடகங்களும் எழுத ஆரம்பித்துவிட்ட நிலையில்,இனியும் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்பதால் வெளியில் சொல்கிறேன் என்றார். பேசும்போது பல முறை மூத்த எழுத்தாளரான அனுராதார ரமணன் உடைந்து போய் அழுததும், தனக்கு நேர்ந்த அவமானங்களை கண்ணீருடன் அவர் சொன்னதும் மனதை பெரிதும் வருத்தியது.

பேட்டியின்போது இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பைச் சேர்ந்த சுதா சேஷய்யன் உள்ளிட்ட மகளிர்அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர். அனுராதாவின் சார்பில் மடத்துக்கு எதிராக வழக்கை நடத்தவும்அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. அனுராதாவிடம் போலீஸ் விசாரணை: இந் நிலையில் அனுராதா ரமணன் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் சுமார் 4 மணி நேரம்விசாரணை நடந்துள்ளது. மடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியிடம் விளக்கினார். இதை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்துள்ளது.

இறப்பு[தொகு]
மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62 வது அகவையில் இவர் மரணமடைந்தார்.[3]

திரைப்படங்கள்[தொகு]
சிறை
கூட்டுப்புழுக்கள்
ஒரு மலரின் பயணம்
ஒரு வீடு இருவாசல்
தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]
பாசம்
புன்னகை
அர்ச்சனைப் பூக்கள்
பன்னீர் புஷ்பங்கள்
பதக்கம்[தொகு]
1978 ஆம் ஆண்டு எம். ஜி. ஆரிடம் இருந்து தங்கப்பதக்கம் பெற்றார்.

A.K.LOHIDASS ,MALAYALAM, CINEMA ,DIRECTOR, BORN MAY 5,1955- 2009 JUNE 28





A.K.LOHIDASS ,MALAYALAM CINEMA DIRECTOR 
BORN MAY 5,1955- 2009 JUNE 28






ஏ. கே. லோகிததாஸ்‎ மலையாளத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் 
BORN MAY 5,1955- JUNE 28,2009

அ. க. லோகிததாசு (அம்பலத்தில் கருணாகரன் லோகிததாஸ்) அல்லது ஏ. கே. லோகிததாஸ்‎ மலையாளத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 1985ஆம் ஆண்டு 'சிந்து சாந்தம் ஆகி ஒழுகுனு' என்ற நாடகத்தின் மூலம் மாநில அரசு விருதோடு தன் கலை உலக வாழ்க்கையைத் துவங்கியவர்[1]. "தனியாவர்த்தனம்" படம் மூலம் திரைக்கதையாசி‌ரியர் ஆனார். இப்படத்தில் ஒரு சாதாரண மனிதன் சமூகத்தால் எப்படி மனநிலை தவறியவனாக ஆக்கப்படுகிறான் என்பதை தனது துல்லியமான திரைக்கதையால் காட்சிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படம் மம்முட்டியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இவருடைய படைப்பில் வந்த சில படங்கள், எழுதாபுரங்கள், கிரீடம், முத்ரா, ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா, பரதம், கமலாதலம், தனம், தசரதம், செங்கோல், பூதக்கண்ணாடி, கண்மதம், காருண்யம், கஸ்தூரி மான், அரையன்னங்களுடவீடு, நைவேத்தியம் போன்றவையாகும்[2].

லோகிததாஸ் மற்றும் இயக்குநர் சிபிமலையில் இருவரும் இணைந்து பல மலையாளத் திரைப்படங்கள் படைத்துள்ளனர். சிபிமலையிலுடன் இவர் சேர்ந்து பணியாற்றிய 'கிரீடம்', 'பரதம்' என அனைத்துப் படங்களும் மிகவும் வெற்றி பெற்றவையாகும். இவர் இதுவரை தனது திரைக்கதைக்காக 14 முறையும், இயக்கத்திற்காக 4 முறையும் ஃபிலிம் கிரிட்டிக் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர் திலீப், மீரா ஜாஸ்மின், மஞ்சுவாரியர் என்று பல்வேறு திறமையாக கலைஞர்களை திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய ‘நைவேத்தியம்' திரைப்படம்கூட சிறந்த திரைப்படம், சிறந்த கதை ஆகிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. தமிழில் இவர் கஸ்தூ‌ரிமான் என்ற படத்தை இயக்கியுள்ளார்

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
லோகிததாஸ் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவர். எம்.டி.வாசுதேவன்நாயர் .பி.பத்மராஜன் ஆகியோருக்குப்பின் லோகிததாஸ் மலையாளத்தின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் எனப்படுகிறார். முழுபெயர் அம்பழத்தில் கருணாகரன் லோகிததாஸ் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள முரிங்ஙூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் லோகிததாஸ். எரணாகுளம் மகாராஜாஸ் காலேஜில் பட்டப்படிப்பு முடித்தபின் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வக உதவியாளர் படிப்பை முடித்தார். சிறிதுகாலம்டரசு மருத்துவமனை ஊழியராகப் பணியாற்றினார்.

ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்தார். மலையாள நாடக ஆசிரியரும் இடதுசாரி தலைவருமான தோப்பில் பாசி நடத்திவந்த கெ.பி.ஏ.சி (கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட் கிளப்) க்காக ஒரு நாடகத்தை 1986ல் லோகிததாஸ் எழுதினார். சிந்து அமைதியாக ஓடுகிறது (சிந்து சாய்தமாய் ஒழுகுந்நு) என்ற அந்நாடகம் பரவலாக கவனிப்பு பெற்றது. அதற்கு மாநில அரசின் சிறந்த நாடகத்துக்கான விருது கிடைத்தது. பிற்பாடு ‘ கடைசியில் வந்த விருந்தாளி (அவசானம் வந்த அதிதி) கனவு விதைத்தவர்கள் (ஸ்வப்னம் விதச்சவர்) போன்ற நாடகங்களையும் எழுதினார்.

நாடக நடிகராக இருந்து சினிமாவில் புகழ்பெற்றிருந்த திலகன் லோகித தாஸை சினிமாவுக்குக் கூட்டிவந்தார். சிபி மலையில் இயக்கிய தனியாவர்த்தனம் லோகிததாஸின் முதல் படம். ஒரு பாரம்பரிய நாயர் குடும்பத்தில் இருந்துவரும் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் பள்ளி ஆசிரியரைப்பற்றிய அந்தப்படம் மிகப்பரவலான கவனத்தைப்பெற்று லோகிததாஸை பிரபலப்படுத்தியது. 1997ல் பூதக்கண்ணாடி என்ற படத்தை லோகிததாஸ் இயக்கினார். இதுதான் இயக்குநராக அவரது முதல் முயற்சி. லோகிததாஸின் மனைவி பெயர் சிந்து, ஹரிகிருஷ்ணன் விஜயசங்கர் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள்.

படைப்புகள்[தொகு]
திரைக்கதை எழுதிய படங்கள்[தொகு]
1987 தனியாவர்த்தனம் 1987 எழுதாப்புறங்ஙள் 1988 குடும்பபுராணம் 1988 விசாரண 1988 முக்தி 1989 கிரீடம் 1989 ஜாதகம் 1989 தசரதம் 1989 முத்ர 1989 மஹாயானம் 1990 சஸ்னேகம் 1990 மாலயோகம் 1990 ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா 1990 குட்டேட்டன் 1991 தனம் 1991 பரதம் 1991 அமரம் 1991 கனல்காற்று 1992 வளையம் 1992 கமலதளம் 1992 ஆதாரம் 1992 கௌரவர் 1993 வெங்கலம் 1993 செங்கோல் 1993 வாத்ஸல்யம் 1994 சகோரம் 1994 சாகரம் சாட்சி 1995 ஸாதரம் 1996 சல்லாபம் 1996 தூவல்கொட்டாரம் 1997 பூதக்கண்ணாடி 1997 காருண்யம் 1998 ஓர்மசெப்பு 1998 கன்மதம் 1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள் 1999 அரயன்னங்ஙளுடே வீடு 2000 ஜோக்கர் 2001 சூத்ரதாரன் 2003 கஸ்தூரிமான் 2003 சக்ரம் 2006 சக்கரமுத்து 2007 நிவேத்யம்

இயக்கிய படங்கள்[தொகு]

1997 பூதக்கண்ணாடி 1997 காருண்யம் 1998 ஓர்மச்செப்பு 1998 கன்மதம் 2000 அரயன்னங்களுடே வீடு 2000 ஜோக்கர் 2001 சூத்ரதாரன் 2003 கஸ்தூரிமான் 2003 சக்ரம் 2005 கஸ்தூரிமான் [தமிழ்] 2006சக்கரமுத்து 2007 நைவேத்யம்

நடித்த படங்கள்[தொகு]
1992 ஆதாரம் 1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள் 2002 ஸ்டோப் வயலன்ஸ் 2005 தி காம்பஸ் 2005 உதயனாணு தாரம்

தயாரித்தபடம்[தொகு]
2005 கஸ்தூரிமான் [தமிழ்]

பாடல் எழுதிய படங்கள்[தொகு]
2000 ஜோக்கர். பாடல் ‘அழகே நீ பாடும்’ 2000 ஜோக்கர் ‘செம்மானம் பூத்தே’ 2003 கஸ்தூரிமான் ‘ராக்குயில்பாடி 2007 நிவேத்யம் ‘கோலக்குழல் விளி கேட்டுவோ

விருதுகள்[தொகு]
திரைக்கதைக்கான கேரள அரசு விருது தனியாவர்த்தனம் 1987 நல்ல திரைபப்டத்துக்கான கேரள அரசு விருது 1997 மிகச்சிறந்த அறிமுக இயக்குநர் படத்துக்கான தேசிய விருது பூதக்கண்ணாடி 1997

பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைக்கதை[தொகு]
தனியாவர்த்தனம் [1987] தசரதம் [1989] கிரீடம் [1990] பரதம் [1991] செங்கோல் [1993] சகோரம் [1994] சல்லாபம் [1994] தூவல்கொட்டாரம் [1996] பூதக்கண்ணாடி [1997] ஓர்மச்செப்பு [1998] ஜோக்கர்[ 1999] வீண்டும் சில வீட்டுகாரியங்ஙகள் [2000] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]

பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைப்படம்[தொகு]
பூதக்கண்ணாடி [1997] ஜோக்கர்[ 1999] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]

மறைவு[தொகு]

இவர் தன்னுடைய 55ஆம் வயதில் கொச்சியில் 2009 சூன் 29ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்[3]. இவருடைய மறைவிற்குப் பிறகு பல்வேறு திரைக்கலைஞர்கள் இவரைப் பற்றிக் கூறியவை:

சேரன்[தொகு]
"ஆட்டோகிராஃப் பார்த்துவிட்டு என்னிடம் நட்பாக நெருங்கினார் லோகி. வாழ்வின் அடித்தட்டு மக்களின் மேல் அவர் மிகவும் பரிவுகொண்டு இருந்தார். அவரது வெற்றி பெற்ற திரைக்கதைகளில் அந்தப் பரிவு பளிச்சென்று தெரியும். அவரோடு இணைந்து ஒரு படமாவது செய்ய வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. லோகிததாஸின் மரணம் மொழிகளைக் கடந்து படைப்பாளிகள் அத்தனை பேருக்குமான இழப்பு[1].

கமலகாசன்[தொகு]
இவர் முதல் படத்துக்குத் திரைக்கதை எழுதியதில் இருந்தே 'எனக்கொரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிக் கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். போன மாதம்கூட 'சந்திப்போமா?' என்று கேட்டு போன் செய்தேன். 'வருகிறேன்' என்றார். சந்திக்காமலேயே விடைபெற்றுவிட்டார். லோகி என்னுடைய நண்பர் எனச் சொல்வது சரியில்லை. அவர் என் நெருங்கிய உறவினர்[1]

விருதுகள்


திரைக்கதைக்கான கேரள அரசு விருது தனியாவர்த்தனம் 1987 நல்ல திரைபப்டத்துக்கான கேரள அரசு விருது 1997 மிகச்சிறந்த அறிமுக இயக்குநர் படத்துக்கான தேசிய விருது பூதக்கண்ணாடி 1997

பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைக்கதை

தனியாவர்த்தனம் [1987] தசரதம் [1989] கிரீடம் [1990] பரதம் [1991] செங்கோல் [1993] சகோரம் [1994] சல்லாபம் [1994] தூவல்கொட்டாரம் [1996] பூதக்கண்ணாடி [1997] ஓர்மச்செப்பு [1998] ஜோக்கர்[ 1999] வீண்டும் சில வீட்டுகாரியங்ஙகள் [2000] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]

பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைப்படம்

பூதக்கண்ணாடி [1997] ஜோக்கர்[ 1999] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]













BANKIM CHANDRA CHATTOPADHYAY , WRITER OF VANDHE MATHARAM BORN 1838 JUNE 27 -1894 APRIL 8






BANKIM CHANDRA CHATTOPADHYAY , 
WRITER OF VANDHE MATHARAM
BORN 1838 JUNE 27 -1894 APRIL 8




பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

வாழ்க்கை
பங்கிம் சந்திரர் 1838 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம்நாள் கொல்கத்தா அருகில் உள்ள கந்தலபாறை என்ற இடத்தில் பிராமணக் குடும்பத்தில் துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். ஜாதவ் சந்திரர் ஒரு துணை நீதிபதி. நற்பண்பு நிறைந்தவர். பங்கிமின் மூத்த சகோதரரான சஞ்சீவ் சந்திரா ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அவருடைய பாலமோ என்ற வங்க மொழியில் எழுதப்பட்ட பயண நூல் முக்கியமான பயண நூல்களில் ஒன்று. பங்கிம் சந்திரர் வங்காளத்திலும் இந்தியாவில் நன்கறியப்பட்ட, ஓர் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராக, மிகப்பரவலாக அறியப்பட்டவராவார். [3] இவருடைய நாவல்கள், கருத்துக்கட்டுரைகள் ஆகியவை இந்திய மரபுமுறையான கட்டுப்பாடான எழுத்துப்போக்கினை உடைத்தெறிந்தது. இந்தியாவிற்கு வெளியேயும் இவரது எழுத்துக்கள் பிற எழுத்தாளர்களுக்கு ஒரு உத்வேகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தின.[3]அக்கால வழக்கப்படி அவருக்கு பதினொன்றாம் வயதில் ஐந்து வயது சிறுமி ஒருத்தியுடன் திருமணம் நடை பெற்றது. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தார், 1859 இல் மனைவி இறந்தபிறகு பின்னர் அவர் ராஜலக்ஷ்மி தேவி என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.


பிபின் சந்திர பால் 1906 ஆகஸ்டு மாதம் ஒரு தேசிய இதழைத் தொடங்கிய போது அவ்விதழுக்கு வந்தே மாதரம் எனப்பெயரிட்டார். இது சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் தாக்கத்தால் வைத்த பெயராகும். லாலா லஜபதி ராய் தனது இதழுக்கும் இப்பெயரினையே சூட்டினார்.

கல்வி
மேதினிப்பூரில் 1856ஆம் ஆண்டு வரை ஒரு கான்வென்ட் பள்ளியில் கடுமையான பள்ளிப் படிப்பை முடித்த பங்கிம் கொல்கத்தா பிரெசிடென்சி கல்லூரியில் சட்டம் படிக்க சேர்ந்தார். 1857ஆம் வருடம் கொல்கத்தா பல்கலைகழகத்தின் சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றார். 1858ம் ஆண்டு பல்கலை கழகத்தில் இளங்கலைத் தேர்வை எழுதினர். ஆறு தாள்கள் கொண்ட மொழிப் பாடமான வங்காள மொழிப் பாடத்திற்கான தேர்வில் அவரால் ஒரே ஒரு தாளில் மட்டும் தேர்வு பெற முடியவில்லை. கருணை மதிப்பெண்கள் போடப்பட்டதால் பங்கிமும் அவர் நண்பர் ஜாது நாத் பாசு அவர்களும் தேர்ச்சி பெற்றனர். கொல்கத்தா பல்கலைகழகத்தின் முதல் பட்டதாரிகள் என்ற சிறப்பை பெற்றனர்.[4]

படிப்பை முடித்துக் கொண்டு 1858 முதல் 1891 இல் அவர் ஓய்வு பெறும் வரை பிரித்தானிய அரசில் துணை நீதிபதியாகவும் பின்னர் துணை ஆட்சியராகவும் பணி புரிந்தார். ஆங்கில அரசாங்கத்துடன் அவ்வப்பொழுது மோதல்கள் நிகழ்ந்தாலும் தன் பணியை அவர் சிறப்புறச் செய்து வந்தார்.[5]

எழுத்துப்பணி
தொடக்கக்காலத்தில் பங்கிமின் எழுத்துப் பணி ஈஸ்வர சந்திரா குப்தா என்பவர் வெளியிட்ட வாரந்தரியான சங்க்பத் பிரபாகர் என்ற இதழில்தான் தொடங்கியது.[6] இது அவர் சிறந்த எழுத்தாளர் ஆவதற்கு நல்ல முன்முயற்சியாக இருந்தது. பங்கிமின் முதல் நாவலான 'ராஜ்மோகனின் மனைவி' (1864) என்ற நாவல் முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியிடப்படாமலே இருந்தது பின்னர் அந்நூலை பங்கிம் வங்காளத்தில் எழுதி வெளியிட்டார். அவர் வங்காள மொழியில் எழுதிய முதல் நாவல் துர்கேஷ் நந்தனி 1865 ஆம் வருடம் வெளியானது. கபால குந்தளம்(1866), மிர்ணாளினி, தேவி சௌதாரிணி மற்றும் 'ஆனந்த மடம்' போன்றவை அவருடைய மிகச் சிறந்த நாவல்கள். அவர் எழுத்தாளராக வாழ்ந்த காலங்களில் ஏராளமான சிறந்த படைப்புகளை நாளிதழ்களுக்கும் தினசரித் தாள்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். அரசியல், பொருளாதாரம், சமுகம், மதம், தத்துவம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவை குறித்த பல நூல்களை எழுதியுள்ளார்.

மறைவு

உடல் நலக் கோளாறு காரணமாக அவர் தனது பணியிலிருந்து 1891 ஆம் வருடம் விருப்ப ஒய்வு பெற்றார்.அதன் பின்னர் ஆன்மிகத்தில் ஈடுபட்டார். 1894ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் நாள் தனது 56 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.